• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் 2

"ங்கொப்பவன் மவனே.. எம்புட்டு தகிரியம் இருந்தா, என் அப்பன் முன்னாடி ராங்கா பேசுவ.. பேசுன வாய கண்டமேனிக்கு ஒடச்சி துவம்சம் பண்றேன் டா.." ரகுவின் ஆக்ரோஷ கோபத்தில் அனைவரும் திகைத்து நிற்கும் சமையம், சப்.. என்ற சத்தம், பஞ்சாயத்தையே கதிகலங்க வைத்து விட்டது.

ரகுபதியின் கோரவிழிகள் சிவந்து, தாடி மறைத்த கன்னத்தில் கை வைத்து தடவியவன் கோவம், தன்னை கை நீட்டி அடித்தவள் மீது பன்மடங்கு கூடியது.

"எம்புட்டு தகிரியம் இருந்தா என்னையே கைய நீட்டி அடிச்சிபுட்டு, கொஞ்சங்கூட பயம் இல்லாம என் முன்னாடியே நிப்ப டிஇஇ.." ஸ்லீவ்லெஸ் சுடி டாப் பேண்ட், அதன் மீது பெயருக்கு பிரலும் காட்டன் துப்பட்டா என வெட்டிவிட்ட கற்றைக் கூந்தல் காற்றில் பறந்து முகத்தில் மோதிட, தன் முன்னே அஞ்சாமல் நின்றவளை கண்டு, அதீத கொலைவெறியில் பற்களை கடித்தான்.

"உன்னயெல்லாம் வெறும் அடியோட விடக்கூடாது டா.. கொன்னு போடணும். யார் மேல கை வைக்கிற ராஸ்கல்.. ஏற்கனவே எங்கிட்ட அத்துமீறி பொறுக்கித்தனம் பண்ணதும் இல்லாம, எனக்காக நியாயம் கேக்க வந்த என் அப்பாவையே அடிப்பியா நீ.."

பார்க்க சிறு கடுகு போல் தான் இருந்தாள். ஆனால் பேச்சி ஒவ்வொன்றும் காரமாக வெடித்து, ரகுபதிக்கு சரிசமமாக நின்று அவனை அர்ப்பமாக கண்டவளை, விட்டால் ஒரே அடியில் கொன்று போடும் ஆத்திரத்தில் கண்மூடி திறந்த ரகு, மிரண்டு வாய் பொத்தி நின்ற தாயையும், அப்பனையும் மகளையும் கூர் பார்வையால் துளைக்கும் தந்தையையும் ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் குனிந்து ஆழாக்கு சைசில் இருந்த கடுகை, ஒரே அறையில் மண்ணில் தள்ளி, உதட்டை கிழித்து இருந்தான் ரகு.

"யாருகிட்ட மவளே.. ஒரே அடில பரலோகம் கண்ணுக்கு தெரியிதா.. இன்னொரு தரம் புள்ளி மானா துள்ளிக்கிட்டு முன்னாடி வந்த, கழுத்தை திருகி கொண்டேபுடுவேன் நாயே.." ரவுத்திர விழிகள் தாண்டவம் ஆட, காப்பு ஆடிய நீண்ட கை விரலை ஆட்டி, முரட்டுக்குரலால் கர்ஜனை செய்தவன் கோபத்தை கண்டு, கலங்கிய மீன் விழிகள் அச்சத்தில் படபடத்தன.

வெளீரென வெளி தெரிந்த முகம் கை கழுத்து பகுதிகளில் எக்கச்சக்க நககீறல் பட்டு ரத்தம் கசிந்து, ஏற்கனவே அவன் வன்மையாக சிதைத்த உடல் முழுவதும் ரணம் கண்டிருக்க, இப்போது அடித்த ஒற்றை இரும்பு அடியில் கண்ணீர் ஊற்றெடுத்து உலகமே நின்று சுழண்டது.

"ஐய்யோ.. அம்மாடி.." பொறி கலங்கி மண்ணில் கிடந்த மகளை பதறித் தூக்கிய ராஜ்மோகன்,
"யோவ்வ்.. என்னையா இது அராஜகம்.. என் மகள இந்த நாயி நாசம் பண்ணிட்டு எவ்வளவு தைரியமா எங்கள அடிச்சி மிரட்டி ரவுடிஸம் பண்றான், ஒருத்தனும் தட்டி கேக்காம எல்லாருமா சேந்து வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க தூ.. வெக்கமா இல்ல"

மகளின் நிலை எண்ணி கலங்கி இருந்தவர், ரகுவின் அதிரடியில் திகைத்து அங்கிருந்த அனைவரையும் வெறுப்பாக கண்ட மனிதர், தன் முகத்தில் வடிந்த உதிரத்தை தோளில் துடைத்தவராக,

"இதையெல்லாம் ஒரு ஊருன்னு மதிச்சு, என் மகளுக்கான நியாயத்தை கேக்க வந்த என்னைய தான் செருப்பால அடிச்சிக்கனும். இப்பவே போறேன் கமிஷனர் ஆபிஸ்க்கு.

இந்த பொறுக்கி பைய பேர்ல கம்ப்ளைன்ட் கொடுத்து, காலத்துக்கும் கலி திங்க வைக்கிறேன் டா" உறுதியாக சொன்ன ராஜ்மோகன், மகளை பிடித்துக்கொண்டு கார் நோக்கி நடக்க, "யோவ்வ்.. பெருசு.." திமிராக சொடக்கிடும் சத்தத்தில் எரிச்சலாக அவர் திரும்ப, எரியும் தீவிழிகளோடு அவளும் திரும்பினாள்.

அவள் பார்வையை அசட்டை செய்த ரகு,

"இப்ப என்ன உன் மவள கெடுத்தது நான்தான்னு ஒதுக்கிடணும் அம்புட்டு தானே.. ஆமாய்யா உன் மவள கண்டபடி கண்டம் பண்ணது நானேதே.. உங்க பாணில சொல்லனும்னா இந்த பொறுக்கி பயல்தே உன் மவள கெடுத்தது.

இத்த நீ போலீஸ்க்கு போறேன்னு சொன்னதால பயந்து போயெல்லாம் சொல்லல. இந்த உலகத்துல எந்த மூலைக்கு போயி வேணாலும் எம்மேல நீ புகார் குடு, என் இத கூட எவனாலும் புடுங்க முடியாது. கூடவே என் வாக்குமூலத்த வச்சே கம்பளைண்ட் ரைஸ் பண்ணு அப்பதே கேஸ் நங்கூரம் மாறி சும்மா நச்சின்னு நிக்கும். சரியா பெருசு.." நக்கலாக சிரித்தவன்,

"உன் மக வாழ்க்கை நாசமா போனதை நினைச்சி நினைச்சே நீயும் உன் குடும்பமும் மண்டைய பிச்சிட்டு சாவுங்க. முக்கியமா இவ.." வன்மம் கக்கும் ரத்தவிழிகள் துடிக்க, பற்களை கடித்த ரகு, தந்தையின் கைக்குள் அடங்கி நின்றாலும், அவனை எரிக்கும் பார்வையால் பஸ்பம் செய்தவளை கண்டு கோணலாக உதடு வலைத்தான்.

"நீ பெரிய தைரியசாலினு ஆணவம் புடிச்சி ரொம்ப ஆடாத டா.. இன்னைக்கு வேணும்னா நீ அடாவடி பண்ணி எங்கள அடக்கி அனுப்பலாம். ஆனா நீ என் பொண்ணுக்கு பண்ண பாவம் காலத்துக்கும் உன் காலை சுத்தும் டா.

நீ சொன்ன இந்த ஒத்த வார்த்தைக்காகவே என் பொண்ணுக்கு வர்ற முகூர்த்தத்திலேயே கல்யாணம் கட்டி வைக்கிறேன். மாப்பிளை என் சொந்த தங்கச்சி பையன். மதுரைல எம் பி யா இருக்கான்.

அவங்கிட்ட சொல்லி உன் அகம்புடிச்ச திமிர்க்கு ஒரு வழி பண்றேனா இல்லையா பாரு"

"ஓ.. சரி சரி நீ ரெண்டு வழி கூட பண்ணு. ந்நா கூட எங்கே தூக்குல தொங்கியோ இல்ல எலி மருந்த சாப்பிடோ குடும்பத்தோட உசுர விட்டுடுவியோன்னு பாத்தேன். ஆனா நல்ல முடிவுதே, போயி உன் தங்கச்சி பெத்த சொம்பைக்கு இந்த அரைகிறுக்கிய கட்டி வைய்யா சோடாபுட்டி.." மோகனை எகத்தாளம் செய்த ரகு, கொஞ்சமும் கோபம் குறையாது தன்னை பார்வையால் பொசுக்கும் கடுகை எள்ளலாக கண்டான் அவன்.

"ஹ்ம்.. என் பொண்ணு தன்னம்பிக்கை உள்ளவ டா.. ஐய்யோ அம்மா கற்பு போச்சேன்னு மூலைல உக்காந்து கண்ணீர் விட்டு கதறி, நீ சொன்ன மாதிரி உசுர மாச்சிக்கிற அளவுக்கு கோழை இல்ல. நாங்களும் நீ பண்ண கேவலத்துக்காக சாக துணிஞ்ச ஆளில்லை" ராஜ்மோகன் குரலில் அத்தனை தைரியம்.

"ஹெலோ mr.. என் அப்பா சொன்னது கேட்டுதா.. தப்பு செஞ்ச நீயே உயிரோட இருக்கும் போது, நாங்க ஏன் சாகனும்.. ஒரு பொண்ண அவ சம்மந்தம் இல்லாம தொட்டதுக்கு நீ தான் உன் மொத்த குடும்பத்தோட தற்கொலை பண்ணி சாகனும்" அடங்காத கோபத்தில் படபடவென பொரிந்த கடுகை,

"ஏய்இஇஇ.." என பாய்ந்து அடிக்க போன ரகுவை, "வேணாம் ரகுஉஉஉ.." கலக்கமாக தன் கரத்தை பிடித்துக்கொண்ட தாயின் மென்மையில் கரைந்தாலும், உக்கிரம் குறையாது, தந்தையோடு செல்லும் வெண்கடுகை கண்டான்.

'பொண்ண கெடுத்துட்டான்னு பஞ்சாயத்த கூட்டினதோட சரி, மத்தபடி பெரிய மனுசங்களாச்சேன்னு பேருக்கு கூட பஞ்சாயத்து பண்ண விடல. வந்தா, அடிச்சா, அவனே பஞ்சாயத்து பண்ணான் போய்ட்டான்' பஞ்சாயத்தில் கூடிய ஊர் மக்களுக்கும் பெரிய தலைகளுக்கும், தலையும் புரியல வாலும் புரியல. தங்களுக்குள் புலம்பிக்கொண்டு போயாச்சு.

இங்கு தூணில் சாய்ந்து நின்று, முரட்டு முகம் பச்சை அப்பாவியாய் மாறி கை விரல்கள் ஐந்தையும் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்த ரகுபதியை, எத்தனை நேரம் தான் குடும்பமே சேர்ந்து குத்தவைத்து அமர்ந்து பார்த்திருப்பது.

"என்ன தம்பி கழுத்துல சுளுக்கா, இன்னும் எம்புட்டு நேரந்தா கேட்ட கேள்விக்கு வாய தொறக்காம, தரையை பாத்தும் விரலை பாத்தும் நேரத்த கடத்த போறே" மதுவின் உருகும் குரலில், தாடி மறைத்த இதழ் சுழித்து நிமிர்ந்தான் ரகு.

"அதே பஞ்சாயத்துலே சொல்லிப்புட்டேனே, நாந்தே அந்த ராங்கிபுடிச்சவள கெடுத்தேன்னு பொறவு என்ன ம்மா" பெரிதாக சலித்தான்.

"அதா ஏன்.. ராசா? அந்த புள்ளைய ஒனக்கு புடிச்சி இருந்துதா? ரெண்டு பேத்துமா விரும்பி அந்த புள்ள உன்னைய ஏமாத்திட்டு போய்ட்டாளா? அந்த கோவத்துலதா அவள கெடுத்துப்புட்டியா?"
அப்பாவியாக அடுக்கிக் கொண்டு போன தாயி கேள்வியில், திண்ணையில் அமர்ந்து விறகு வெட்டிக்கொண்டிருந்த தகப்பனின் கையில் இருந்த அறிவாளை வாங்கி, ஏடாகூடமாக விறகு வெட்டி தனது ஆத்திரத்தை அதில் காட்டத் தொடங்கி விட்டான்.

"ஏய்ய்.. மதூ.. இப்ப எதுக்கு டி புள்ளைய போட்டு நைய நையன்னு போட்டு நச்சரிக்கிற. பாரு டி புள்ளைக்கு வேர்குத்து, பஞ்சாயத்துல வேற தொண்ட தண்ணி வத்த கத்திபுட்டு வந்திருக்கான், கொழந்தைக்கு தொண்டை காஞ்சி போயிருக்கும் போ போயி ஜில்லுனு ஜூச போட்டு கொண்டா" தோளில் இருந்த துண்டால் மகன் வியர்வையை ஒற்றி எடுத்த வீர், மனைவியை மிரட்டி அனுப்ப, சமைக்கட்டுக்கு வந்து நின்றவளுக்கு குனுக்கென கண்ணீர் எட்டிப் பார்த்தது.

"ம்க்கும்.. ஒரு பொண்ண கெடுத்துப்புட்டே வந்தாச்சு இன்னும் குழந்தையாம். இன்னும் எம்புட்டு நாளைக்குதே இவன மடில வச்சி கொஞ்ச போறீயலோ மாமா" முருக்கிக் கொண்டு போனவளுக்கு வாய் திறந்து கணவனிடம் பேச என்னைக்கு தைரியம் வந்தது. தனக்கு தானே புலம்பிக் கொண்டு, நாட்டு சர்கார் தூக்களாக போட்டு மாதுள பழரசத்தை கெட்டியாக தயார் செய்தாள் கணவனுக்கும் சேர்த்து.

"போதும்யா, ஏற்கனவே வெட்டி வச்ச வெறக இன்னும் வெட்டி தூள் பண்ணிடாத. அம்மா உள்ளுக்க போய்ட்டா" என்றதும் உஸ்.. என ஆசுவாசம் அடைந்த ரகு, அறிவாளை தூக்கி போட்டு தகப்பனை ஏறிட்டான்.

"மச்..எப்படித்தாப்பா, இந்த அம்மாவ சமாளிக்கிற. ஒன்னைய பாத்தா பம்புது என்னைய பாத்தா மட்டும் கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ணுது. ஏன் என்னைய பாத்தா டெரர் மூஞ்சி மாதிரி அம்மாக்கு பீல் ஆவலையா" தாடையை தேய்த்தபடி யோசித்த மகனை, சிரிப்பாக கண்டான் வீர்.

"உன் அம்மா எம்மேல வச்சிருக்க நேசம் என் ஒத்த பார்வைக்கு பம்பி போவ வைக்கிது. நீ பாக்க டெரராவே இருந்தாலும் நீ அவ புள்ள டா எப்டி பம்புவா.. என்ன இருந்தாலும் ந்நா கட்டுனவன், நீ அவ பத்து மாசம் சுமந்து பெத்தவன் ரெண்டு பேத்துக்கும் வித்தியாசம் இருக்குதுல்ல கண்ணா.." மனைவியிடம் காட்டும் அதே கரடுமுரடு குரலால், கொஞ்சல் கண்டிப்பு கலந்து தான் மகனிடமும் பேசுவான். ஆனாலும் அவனையே அறியாது துளி மென்மை ஒட்டி வலிய கரம் இதமாக பிள்ளையின் தலை வருடி விடுமே!

"போ ப்பா.. எப்பப்பாரு அம்மா இருக்கும் போது அதை பயம்புறுத்தியே திட்டுறது, அப்டி போனதும் அம்மா புகழாரம் பாடுறதே ஒனக்கு வேலையா போச்சி.." ரகு பொய்யாக சலித்துக்கொண்டாலும், தாய் தந்தை மீது வைத்திருக்கும் அதீத நேசமும், அதை விட நூறு பங்கு தந்தை தாய் மீது வைத்திருக்கும் முரட்டு காதலையும் எண்ணி, வியக்காமல் இருக்க முடியாது அவனால்.

"ஹா.. ஹா.. எங்க கதைய ஏற்கனவே எல்லாரும் படிச்சி இருப்பாங்க. நீ உன் கதைக்கு வா. அந்த புள்ளைய இனி என்ன பண்ண போறே" தகப்பனின் தீவிர பேச்சில், ரகுவின் முகமும் கடுமை கொண்டது.

"அந்த குடும்பத்துல உள்ள யாரையும் நிம்மதியா வாழ விடமாட்டேன் ப்பா.. நம்ம வீட்ல எப்டி நிம்மதி இழந்து ஒவ்வொரு நாளும் தவிக்கிறோமோ, அதே போல அவங்களும் நிம்மதி இழந்து தூக்கம் தொலைச்சி பரிதவிச்சி துடிக்கணும். அதுக்கு ந்நா எந்த எல்லைக்கு வேணாலும் போவேன்" தாடை இறுகி துடித்து, கோபத்தில் திண்ணையில் குத்த, தரையில் பதித்து வைத்த பழுப்பு நிற டைல்ஸ் சல்லையாக நொறுங்கி போனது.

"அதுக்கு அந்த புள்ள என்னபா பண்ணுவா.." என்ன இருந்தாலும் பெண் பிள்ளைகளுக்கு தகப்பன் ஆயிற்றே, மகனின் வெறி கண்டு நெஞ்சம் பதறியது.

"அந்த குடும்பத்துல பொறந்த பாவத்துக்கு அவளும் சேர்த்து தண்டனைய அனுபவிக்கட்டும். சொல்ல போனா அவதே என் பகடைக்கு தேர்ந்தெடுத்த மையபுள்ளியே! அவள வச்சிதா ஒவ்வொருத்தனையும் கருவருக்க போறேன் ப்பா.." ரகுவின் பேச்சில் நெஞ்சை நீவிக் கொண்ட வீர், ஏதோ பேச வாயெடுக்கும் போதே மது ஜூசோடு வந்து விட்டாள்.

"அப்டி என்னத்தான் அப்பாவும் புள்ளையும் குசுகுசுப்பாங்களோ, என்னைய பாத்தா மட்டும் ஆளுக்கு ரெண்டு கோழி முட்டைய முழுங்கினதுல போல இறுக்கமா வாய மூடிக்கிறது" வாய்க்குள் முணுமுணுத்தபடி ரகுக்கு ஜூசை கொடுக்க,

"என்ன டி, உதடு மட்டும் தானா டைப் அடிக்குது, எங்கள திட்றியா" திரும்பி தன்னிடம் கொடுத்தவளை கூர் பார்வையால் அளந்தான் வீர்.

"மன்னிச்சிக்கோங்க மாமா லேசா திட்டிகிட்டேன். என்ன இருந்தாலும் சின்ன புள்ள. பாவம் அழுது அழுது அது கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு. ரகு வேற அடிச்சி ரத்தம் வந்து போச்சே மாமா.. அதை நினச்சாதா மனசு கேக்கல" வருத்தமாக சொன்ன மனைவியை முரட்டு பார்வை பார்த்தான்.

"அப்ப உன் புள்ள அந்த புள்ளைய தொட்டதுக்கு நீ கவலை படல, அடிச்சதுக்குதே இம்புட்டு கவலையா.." மகன் காதில் விழாதபடி மனைவியை தள்ளி சென்றான்.

"போங்க ம்மா.. என்னமோ எனக்கு தெரியாம ரெண்டு பேரும் மறைக்கிறீயன்னு எனக்கு நல்லா புரியிது. ரகு எங்கிட்ட எதையும் சொல்லைனாலும், உங்களுக்கு அவன் பண்ற எதுவும் தெரியாம இருக்காது மாமா. நிச்சயமா நீங்க அவனை தப்பான வழில விட மாட்டீங்க, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.

ஆனா அந்த சின்ன பொண்ணோட கண்ணீர் மனசை உறுத்துதே மாமா.." கணவனுக்கு மாட்டும் கேட்க சோகமாக சொன்ன மது,

"எது எப்டியோ, நம்ம பையன் அந்த பொண்ண தொட்டுட்டான், இனிமே அவதா நம்ம மருமக மாமா.. இந்த ஒரே ஒரு விசயத்தை மட்டும் உங்கள கேக்காம நான் தெளிவா முடிவு பண்ணிடேன். எப்படியாவது அவங்கிட்ட பேசி சம்மந்தம் சொல்ல வைங்க மாமா.. ந்நா சொன்னா காதுல வாங்க மாட்டான். எதையாவது செஞ்சி மழுப்புவான். பெரிய முடிவு பண்ணிபுட்டேன் தயவுசெஞ்சி மறுத்து பேசிடாதீய மாமா.. ராத்திரி வாங்க நீங்க எப்டிலாம் மன்னிப்பு கேக்க சொல்றீங்களோ அப்டிலாம் உங்ககிட்ட மன்னிப்பு கேக்குறேன் சரியா.."

கெஞ்சலாக கணவனிடம் ரகசிய தர்க்கம் பேசிய மது, வீரின் பார்வை வீரியம் தாங்காது ஓடி ஒளிந்துகொள்ள, அவன் தடித்த உதட்டில் மெல்லிய புன்னகை அரும்பியது.

"நம்ம புள்ளைக்கு பொண்ண முடிவு பண்ண ஒனக்கு இல்லாத உரிமையா டி என் மக்கு பொண்டாட்டி.. ஆனாலும் உன் மன்னிப்பு வேணுமே! ராத்திரி வந்து அம்புட்டும் வாங்கிக்கிறேன்" தலை கோதிகொண்ட வீர், மது கிசுகிசுத்த முதலில் இருந்தே தன்னை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த ரகுவை கண்டு, அவனிடம் வந்தான்.

"என்ன ப்பா உங்க லவ் சீன் முடிஞ்சிதா.."

"ஓ.. ஆனா உன் சீன் எப்ப தொடங்கும்"

"ரெண்டு எபிசொட்லே ஒட்டுக்கா எதிர்பாக்க கூடாது ப்பா.. அடுத்தடுத்த எபிசொட் வரட்டும், வர்றவளை பொறுத்து பாக்கலாம்" என்ற ரகு தகப்பனுக்கு இணையாக பேசி கலகலத்துக்கொண்டிருக்க,

இங்கோ ராஜ்மோகன் வீட்டில், திருமண ஏற்பாடு படு தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.

என்னதான் மனதளவில் தைரியமான பெண்ணாக இருந்தாலும், பரிப்போனது பெண்மையின் பொக்கிஷம் ஆயிற்றே! துக்கம் இல்லாமல் போகுமா! தந்தையின் வாக்குக்காக உடனே வேறொரு திருமணமும் செய்தாக வேண்டிய கட்டாய நிலையில், ரகுவை அடியோடு வெறுத்தவளாக, துடிக்கும் நயனங்களில் உவர் நீர் கசிய முட்டிக்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள் மிதுஷாஸ்ரீ.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top