- Messages
- 262
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 2
கொட்டும் மழையில், அரவிந்த் பின்னால் பயத்தில் அந்த பெண் கட்டிக்கொள்ள, அதுவரை உடல் சிலிர்த்து சிலையாக நின்றிருந்த அரவிந்த், அடியாட்கள் அவனை தாக்க வரவும், அவன் வயிற்றில் இறுக்கிக்கட்டி இருந்த அப்பெண்ணின் மெல்லிய கரங்களை, ஆடவனின் வலிமை வாய்ந்த கரத்தலால் விடுவித்து, அவளை ஒரு பார்வை பார்க்க,
அப்பாவையின் பார்வையோ விழிநீருடன், காரில் அமர்ந்து வக்கிரமாக அவளை பார்த்து கொண்டிருந்த துருவன் மேல் தான் பயத்தில் படிந்து இருந்தது.
கூரிய விழிகளால் அதனை கண்டு கொண்ட அரவிந்த், முதலில் ஒவ்வொருவராக தாக்க வர்ற, அவர்களை அடித்து வீழ்த்த வீழ்த்த எங்கிருந்து தான் வருவார்களோ, சற்று நேரத்தில் நிறைய ரௌடிகள் கூடிட, அரவிந்த் ஒருவனால் அத்தனை பேரையும் சண்டை இட்டு சமாளிக்க சற்று சிரமப்பட்டு, அதில் கொஞ்சம் தடுமாறிய நொடி,
அரவிந்த் தலையில் ஒருவன் கட்டைல போறவன் கட்டையால் அடித்து இருக்க. ஆக்.. எனும் சத்தத்தோடு தலையை பிடித்துக் கொண்டு வெள்ளம் போல் ஓடும் மழை நீரில் விழுந்தான்.
அதை பார்த்த அந்த பெண்ணோ "ஐயோ சார்" என பதறி அவனிடம் ஓட,
காரில் இருந்த வன்னம், அரவிந்தை தாக்கியதை பார்த்த மனோன்மணி பாட்டியும் "கண்ணாஆ.." என அலறி இருந்தார்.
அரவிந்திடம் ஓடிய பெண்ணின் கையை வேகமாக வந்து பிடித்திழுத்த துருவன்,
"கொப்பன் மவளே, என்னடி அவனை அடிச்சதும் என்னமோ அவன் கட்டின பொண்டாட்டி மாதிரி அப்டி பதறிட்டு அவங்கிட்ட ஓடுற.. முன்னப் பின்ன அவனோட போய் கூத்தடிச்சிருக்கியா டி.." துருவன் மனசாட்சி இல்லாமல் அவளை துன்புறுத்தினான்.
அதனை கேட்டு அவமானமாக உணர்ந்த அந்த பெண், தன் நிலையை நினைத்து, அழுகையில் கரைந்தாளே தவிர, வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
அரவிந்த் தடுமாறிய சிறிது நேரத்திலே தன்னை சமாளித்து, அங்கிருக்கும் சூழ்நிலையை உணர்ந்தவன், அந்த பெண் துருவனிடம் அகப்பட்டு, அவனிடமிருந்து விடுபட முயன்று அழுகையுடன் போராடிக் கொண்டிருப்பதை பார்த்த அரவிந்த், மனிதாபிமான அடிப்படையில் அவளை காக்க எண்ணி, எழ போனவனின் முதுகில், திரும்பவும் ஒருவன் கட்டையால் தாக்கி இருந்தான்.
"ஆஆ.. என்ற அலறலோடு மீண்டும் விழுந்த அரவிந்த், கடினப்பட்டு வலி பொறுத்தவன், பற்களை கடித்துக்கொண்டு, கையை மழை நீரில் துழாவியதில், பெரிய கட்டை தென்படவே, அதனை எடுத்துகொண்டே எழுந்த அரவிந்த், மீண்டும் தன்னை தாக்க வந்த தடியர்களை, பாரபட்சம் இன்றி, அடி வெளுத்து வாங்கினான்.
"என்னடி உன் குடுமி என் கைல இருக்குன்னு தெரிஞ்சும் நீ இம்புட்டு தைரியமா, கோவில்லருந்து நான் தாலி கட்ற நேரம் பாத்து ஓடி வந்துருப்ப.. Ll கோவில்ல தாலி கட்டலைனா என்ன டி, இப்ப இந்த நிமிஷம் இங்கேயே உன் கழுத்துல தாலி கட்டி, உன்ன என் பொண்டாட்டியா ஆக்குறேன்"
பற்களை நரநரவென கடித்தவன் கையில் உள்ள தாலியை அந்த பெண்ணின் கழுத்தில் கட்டப் போக, எச்சிலை விழுங்கியவள், கை எடுத்து கும்பிட்டு,
"வேணாம் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க, நான் இனிமேல் உங்க கண்ணுல படாதமாதிரி வேற எங்கயாவது போய்டுறேன்" அழுகையுடன் கெஞ்சினாள்.
"என்ன செல்லம் இப்டி சொல்லிட்ட, நீ என் கண்ணு முன்னாடியே இருக்கணும்னு தானே, மாமன் உன் கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டியா ஆக்கிக்க போறேன், நீ என்னடான்னா என் கண்ணுலே படாம போயிறேன்னு சொல்ற" வக்கிரமாக சிரித்துக்கொண்டே அந்த பெண்ணிடம் நெருங்க, பின்னால் நகர்ந்து கொண்டே, மழை நீரில் நனைந்த வன்னம்
"வேணாம் ப்ளீஸ்.." கண்ணீருடன் தலையாட்டிவள் பரிதாபமாக கெஞ்சினாள்.
அரவிந்த் சண்டை இட்டபடியே, துருவன் செய்யும் அக்கிரமத்தை எல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தான்.
பாட்டிக்கு அந்த பெண்ணை ஏனோ பார்த்ததும் பிடித்து போக, சட்டென மூளையில் மின்னல் வெட்டியது.
"கண்ணா, பாட்டி என்ன சொன்னாலும் நீ என் வார்த்தைக்கு மதிப்பு குடுத்து கேப்ப தானே காரின் அருகில் சண்டை போட்டு கொண்டு இருந்த அரவிந்திடம் அவரசமாக கேட்டிருந்தார் பாட்டி.
தடியர்களை அடி வெளுத்துக் கொண்டே, "என்ன பாட்டி இப்டி கேக்குறீங்க, நீங்க சொல்லி நான் எதை கேக்கல" என்றான் சண்டையின் நடுவே.
"அப்ப என் மேல் சத்தியம் பண்ணு" என்றதும் ஒருவன் முகத்தை பஞ்சர் ஆக்கி விட்டு பாட்டியின் புறம் திரும்பிய அரவிந்த்,
"என்ன பாட்டி சத்தியம் அது இதுன்னு பேசுறீங்க.. என்னாச்சி உங்களுக்கு" அவசர சந்தேகத்துடன்.
"நீ முதல்ல சத்தியம் பண்ணுப்பா" என்றார் கெஞ்சலாக.
ஒன்றும் புரியாமல், மனதில் ஏதோ ஒரு நெருடலுடன் "ஆனா பாட்டி.." என இழுக்க,
"இப்ப நீ சத்தியம் பண்ணலைன்னு வச்சிக்கோ, நான் செத்தாலும் நீ என் முன்னாடி வரக்கூடாது" பாட்டியின் கொடுமையில்,
"பாட்டிஇஇ.. என அதிர்ந்தவன்,
"சரி சத்தியம் செய்யிறேன், பாட்டி.. என்ற அரவிந்த் அவர் மீது அவசர சத்தியம் செய்தான்.
"கண்ணா பாட்டி சொல்றேன், நீ போய் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு வா" என்றதும் மொத்தமாக அதிர்ந்தவன்.
"பாட்டிஇஇ.." என கத்தி இருந்தான்.
"புரியிது கண்ணா, தயவு பண்ணி நீ எனக்காக இது ஒன்னு மட்டும் செய்ப்பா, பாட்டி கண்ணீரோடு அவனிடம் கெஞ்சியும்,
"முடியாது பாட்டி, நீங்க இதைத்தவிர வேற எது சொன்னாலும் கேப்பேன், ஆனா இது மட்டும் என்னால இப்ப மட்டும் இல்ல நான் செத்தாலும் முடியாது பாட்டி" என்றான் கராராக.
"சரி கண்ணா, எம்மேல உனக்கு உள்ள பாசம் அவ்ளோதான்னு நான் நினைச்சிக்கிற. சாக போற வயசுல இவ மேல சத்தியம் பண்ணா என்ன பண்ணாட்டி என்னன்னு நெனச்சி தானே நீ சத்தியம் பண்ணிருப்ப.. சரி விடு ப்பா, நான் உன்ன வற்புறுத்தினது தப்புதான் என்னை மன்னிச்சுடு" என்றவர் மன்னிப்புடன் விழி நீர் சிந்த, தவித்து நின்றான் அரவிந்த்.
அவன் கண்முன் அவனின் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகள் வந்து போக. கண் மூடி திறந்தவன். பாட்டியை ஒரு முறை பார்த்து விட்டு, அந்த பெண்ணை நோக்கி சென்றான்.
"ப்ளீஸ் என்னை விட்டுடு.." என பயந்து கொண்டே அவள் பின்னால் செல்ல செல்ல,
"என்னடி சும்மா உன்ன விட்டுட சொல்லி சொன்னா உன்ன விட்டுடுவேனா.. உன்கிட்ட இருக்க இந்த அழகும் உடம்பும் எனக்கு கிடைக்க நான் என்ன வேணா பண்ணுவேன் டி"
துருவனின் கொச்சையான பேச்சிகளை எல்லாம் கேட்டபடி வந்த அரவிந்த், மழை நீர் கேசத்தில் இருந்து சொட்டிட, கண்கள் சிவந்து ரௌத்திரமாக அவனை கொல்லும் வெறியோடு துருவன் பின்னால் நின்றவன், அவன் தோள்மேல் அழுத்தமாக கரம் பதித்ததில்,
"எவண்டா அவன்" துருவன் எரிச்சலாக பின்னால் திரும்பிய அதே வேகத்தில், அவன் முகத்தில், கைகளை மடக்கி தொடர்ந்து நான்கு ஐந்து குத்து விட்டதில் வாயில் இருந்து ரத்தம் தெறித்து, ஆஆஆ.. என அலறிக்கொண்டே, வலியில் தன் கையில் வைத்திருந்த தாலி கயிற்றை தவற விட்டான் துருவன்.
அதனை சரியாக கீழே விழும் முன் கெட்டியாக பிடித்த அரவிந்த்,
துருவனை மிரண்ட விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தவளின் கழுத்தில், இடியின் சத்தம் மங்கள வாத்தியமாக இசைக்க, சலசலக்கும் வானில் இருந்து இறங்கி வந்த மழைத்துளிகள் அர்ச்சதை தூவ, மடமடவென மஞ்சள் கயிற்றால் மூன்று முடிச்சிட்டு இருந்தான் அரவிந்த் கண்ணா. எந்த ஒரு உணர்வும் இன்றி.
அதே நேரம் அரவிந்த் முதுகில் கூரிய கத்தி இறங்கி இருந்தது.
மழை..

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.