Member
- Messages
- 40
- Reaction score
- 4
- Points
- 8
இதழ்மழை💋🌧️38
"வருண்உஉ..மா..மு....
கத்திக்கொண்டு பாய்ந்தோடி வந்தவள்..
"வருணு..வருணு.. மாமு என்னை விட்டு போகாத ப்ளீஸ்....கண்ணை திற மாமு...அவன் கண்ணை மூடியே கிடக்க இவளுக்கு நடத்ததை ஏற்க முடியவில்லை கண்கள் இருட்டிக்கொண்டே வந்தது...
முயன்று பல்லைக்கடித்தவள் வருணை தூக்க போக அவள் கைபிடித்து இழுத்தாள் இன்பவள்ளி..
"இதோ பாரு இதழு... எங்களுக்காக தானே இம்புட்டு பாடுபட்டா... வா போவோம் அந்த தாலிய அத்துப்போட்டுட்டு வா செத்து தொலையட்டும் எத்தனை பேரு உயிரை காவு வாங்கிருப்பான்..
"போதும் நிறுத்துங்க"...
கானகம் அதிர கத்தினாள் இதழினி.."இன்னொரு வார்த்தை என் புருஷனை பேசுனீங்க... பத்திகாளியாக நின்று கண்ணை உருட்டி கத்தியவள்..
"இப்போ உயிரோட நின்னு நீங்க பேசுறது கூட அவர் போட்ட பிச்சைத்தான்.. எம்ப்பா இப்படி பண்ணிங்க என் குழந்தைப்பா அவரு..
அவனின் மென்மைப் பக்கங்கள் எத்தனை அழகானது என அவள் மட்டும் தானே அறிவாள்!!...ஒரு நொடி கூட அவன் இல்லாது சுவாசிக்க முடியவில்லை!... அழுகை வர வில்லை!...மழைதான் அவள் கன்னத்தில் அருவியாக வழிந்தோடி கண்ணீர் வடித்தது!..
ஒரு வார்த்தை சொன்னேன் என்பதற்காக எதிர்க்காமல் மரணத்தை கூட ஏற்க துணிந்து விட்டாரா??
அசைவில்லாது அவன் உடல் கிடக்க மழைநீர் அவனை தழுவி அணைத்துக்கொண்டது... அவன் குருதி நனைந்த கத்தியை இன்னும் தகப்பன் பிடித்திருக்க நொடி நிமிடத்தில்... அந்த கத்தியை பிடுங்கி... தன் கழுத்தை அறுத்துக்கொண்டு அவன் நெஞ்சிலே விழுந்தாள் இதழினி!...
மழைகாதல் அல்லவா... மரித்தாலும் மாறாது என் காதல்! என்று காட்டிவிட்டாள் இதழினி.. அவன் வைத்த மல்லி சரம் மழையில் அழுக.. நெற்றி வகுட்டு குங்குமம் அவன் நெஞ்சோடு கரைந்தோடியது..தனக்கு பிடிக்காத ஒன்றை அவளுக்கு பிடிக்குமென விட்டுக்கொடுத்து இறங்கி வந்ததும் காதல் தானே!...மஞ்ச தாலி ஈரம் மழை நீரோடு கலந்து நெஞ்சுரம் சேர்க்க..
"இதழுஇஇ.. என்ற தாய் தகப்பன் குரல் கானகம் அதிரவைக்க தூரத்தில் கேட்கும் இடிமின்னலாக அவள் நினைவுகள் மின்னி மறைந்து போனது...
உங்களை காக்கத்தான் இவனிடம் வந்தேன்... நீங்கள் நலமாக வாழுங்கள் நான் இவனுடனே போகிறேன்!.. என போய் விட்டாள் இதழினி!..
விழும் மழைநீர் இருவரையும் தழுவி அணைத்தது..
....
கண்ணில் மெல்ல ஓளி ஊடுருவ....
மெல்ல மெல்ல விழிகளை திறந்தாள்... செத்து சொர்க்கத்துக்கு வந்துட்டோமா! கண்ணை கூசியா வெள்ளை வெளிச்சத்தில்....
மூடி மூடி விழிகளை திறந்தவள்...
மீண்டும் மயக்கத்திற்கு போய் விட்டாள்..
மீண்டும் கண் திறக்க அவள் முன் நின்ற
பெற்றவர்களை கண்டு ஹாஸ்பிடல் அதிர கத்தி வைத்தாள் இதழினி...
"ஆத்தா இதழு சொல்றத்தை கேளு ஆத்தா..
ஆஆஆ... என்னை ஏன் காப்பாத்துனீங்க ஆஆ...பைத்தியமாக தொண்டை கிழிய கத்தி அலறி பக்கத்தில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசா...
"அய்யோ ஆத்தா... இதழு நாங்க சொல்றத்தை கொஞ்சம் கேளு தாயீ உனக்கு ஒன்னுமில்ல
வூடு போய் எல்லாம் பேசிக்கலாம் கத்தமா அமைதியா இரு ஆத்தா... அமுத வண்ணன் ஒரு பக்கம் கொஞ்ச இன்பவள்ளி மகளின் காலில் விழாத குறையாக அழ...
ஆஆஆ.. என் வருணு மாமு எங்க?...வர சொல்லு...இப்போவே என் புருஷன் என் கண்ணு முன்னாடி நிக்கணும் இல்லை காப்பாத்தினா உசுரை நானே எடுத்துடுவேன்.. குத்திக்கொண்டு சாக பொருட்கள் எதுவும் இல்லது தன்கையை தானே கழுத்தை நெறிக்க...
"அய்யோஓ ஆத்தா.. வேணாத்தா நாங்க பண்ணது தப்புதான்...மன்னிச்சிக்க தாயீ...தம்பி தான்...
"அய்யோ அய்யோ யாராவது ஓடியாங்களேன் டாக்டர் தம்பீஇஇ...
தலை விரித்த கோலமாய்... முழு பைத்தியமாக கழுத்தை நெறித்துக்கொள்ள.. அருகே போனால் ஆவேசமாக தாக்கினாள் இதழினி... வருண் முகம் தேடி கண்கள் பேயாக அலைந்தது...
தட்தட் என.. ஷூ சத்தமிட உள்ளே யாரோ வரும் சத்தம்..
"டாக்டர் தம்பீ... எங்களை காப்பாத்தி வுட்ட சாமி நீங்க என் மகளையும் காப்பாத்தி குடுத்துடு ராசா கை கூப்பி...
கண்ணீரோடு கதறியவர்களை ஓரங்கட்டி விட்டு கண்கள் ரத்தமாக சிவந்து சொருக...இறுக்கம் கூட்டிய அவள் கையை பற்றி இழுத்தான்...
அவன் இழுப்புக்கு கையோடு வந்து அவன் நெஞ்சில் விழுந்தாள் இதழினி..
அரை மயக்கத்தில் வருண் மாமு வருணு மாமு... என இதழ்கள் மந்திரம் போல விடாமல் உச்சரிக்க...
குனிந்து கண்களை சுருக்கினான் அவன்.. அதே நேரம் அவளும் நிமிர அரை விழிகளில்... குழந்தையின் மென்மை சர்மம் போல அத்தனை பளீச்சென மின்னியது அவன் முகம்... நீல விழிகள் ரெண்டும் கடல் கண்ணன் போல உருட்ட.. காயமில்லாத இடது புறம் முகம் துளி வடு இல்லாது...வலது புறம் போல அழகு வதனம்...ப்ளூ ஷர்ட் ப்ளூ பேன்ட் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்.. மீசையில்லா வழவழ சருமம்... மெல்லிதாக விரியும் ஜெல்லி மிட்டாய் இதழ்கள் அடங்காத கேசம்...
கண் முன் மெல்ல மெல்ல மறையும் நிலவை எட்டி தொட முயன்று கைகள் இலக்கை அடையாமலே வலுவின்றி விழ வருஉஉஉ.. இதழ்கள் முனுமுனுக்க முழு மயக்கத்திற்கு போய் விட்டாள்...
கை கிளவுஸ் போட்ட கையை நர்சிடம் நீட்ட.. கையில் கொடுத்த ஊசியை ஒருமுறை உற்றுப்பார்த்து விட்டுதான் மருந்தை ஏற்றி ஊசி போட்டான்...
"டாக்டர் தம்பி குழந்தை?"..
"ரெஸ்ட் எடுக்கட்டும் டிஸ்டப் பண்ணாதீங்க...
ஐந்து மணி நேரம் கழித்து கண்விழித்தாள்...கண்களை சுழல விட... ஜன்னம் வழியே பிசுபிசுவென தூறல் போடும் இருண்ட வானம் சுவர் கடிகாரம் மணி ஒன்று நள்ளிரவு அரைக்குள் யாருமில்லை கத்தி கலாட்டா செய்ய தெம்பில்லை உடலை காட்டிலும் மனம்தான் வலி உயிர் போனது...
பிள்ளையை கருதாங்கியவள் திடிரென்று வயிற்றில் சுமக்கும் பிள்ளை இல்லாத உணர்வு...தாங்க முடியாது பரிதவித்தாள்..
"வருணுமா ஏன்டா என்னை விட்டுடு போய்ட்டா.. நா வேண்டாமா!.. சத்தமில்லாத அவள் குமுறல்கள் தலையணை கண்ணீரில் நனைய... எனக்கு நீ இல்லாம மூச்சு முட்டுது மாமு.. நானு உன்கிட்ட வரவா?..
மெல்ல தடுமாறி எழுந்தவள் தடுப்பு கம்பி இல்லாத ஜன்னல் பக்கம் மெல்ல நடந்தாள் கண்ணாடி ஜன்னலை திறந்ததும் தான் தாமதம் குப்பேன்று முகத்தை தழுவி நனைத்தது...சாரல் மழை!..
"என் மாமுவை பார்க்க வெச்சதும் நீதான்!
என் காதலை உணர வச்சதும் நீதான்! மழையே!..
அவரை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்ததும் நீ தான்!...
உடலும் உயிருமாய் அவரோட வாழ்ந்த வாழ்க்கை தந்ததும் நீதானே.!... எங்களோட காதலில் நீயும் ஒரு அங்கமாக எங்களோட பிணைஞ்சிருக்க மழையே!..ஆனா எப்படி எங்களை பிரிக்க உனக்கு மனசு வந்தது!!...
அப்படி என்ன தப்பு செஞ்சோம் நாங்க?.. எனக்கு தெரியாது நா இப்போவே என் மாமுகிட்ட போகணும் நா இல்லைனா தூங்க மாட்டாரு சீக்கிரம் என்னை அவர்கிட்ட கூட்டிப்போ... கண்களை மூடியவள்.. தலையைவெளியே நீட்டி சாய்ந்து கால்களை தூக்க.. தூக்கி கவுந்து விழ போனவள்...
மழை அவள் தலையை நனைக்க....தலைகீழாக விழப்போனவளின் கொத்து முடியை பிடித்து யாரோ வலுக்கொண்டு இழுக்க...
"வருணு வருணுஆஆஆ... வலியிலும் அவன் பெயரைதான் கத்தினாள்...
"வருணு வலிக்குது.... யாரு யாரு நீ.. விடு"..
இழுத்து முகத்தை பார்க்க வைத்தான்..
"ஆர் யூ இடியட் அறிவு இருக்கா உனக்கு சாகறதா இருந்தா வேற எங்கேயாவது போய் சாக வேண்டியது தானா... என்னோட ஹாஸ்பிடல் தான் கிடைச்சா... இடியட்..
அவன் திட்டுவதை எல்லாம் கேட்க அவள் இந்த உலகத்துல இருக்கணுமே... அவன் முகம் பார்த்த நொடியே கோடி மின்னல் தாக்கியது போல் ப்ரிஸாகி நிக்க...
"ஹலோ உன்னத்தான்?"...
"மா... மாமு"!!...
"இல்ல..இல்ல இது என் மாமு இல்ல!..காயமில்லா பாரின் பேஸ் அன்னியமாக தெரிய... வருண பகவானை போலவே ஜெராக்ஸ் காபியாக எதிரே நின்ற உருவம்.. 6 இல்லை 600 வித்தியாசம் கூட பட்டென்று சொல்லிவிடுவாள் ..
சிங்கமாக சிலித்து பல்லைக்கடித்து கர்ஜிக்கும்.. அவன் கோவம் இவளுக்கு பயத்தை கிளப்பியது.. அவருக்கு மெடிக்கல் கெமிக்கல்னா அலர்ஜி இவர் அவரை போலவே இருக்காரு டாக்டர் உடையில் நிற்பவனை அதற்கு மேல் பார்க்காது தலை குனிய..
"ஏ மாமு இல்ல இவரு ... உதடு பிதுக்கிய..இதழினிக்கு உள்ளம் மருகியது தொலைந்த கூட்டை தேடி ஓடி இணைபறவை அணைப்பிற்குள் பதுக்கிக்கொள்ள மனம் பேயாய் அலைந்தது...
அவள் முடியை இன்னும் அவன் விடவில்லை... அப்படியே இழுத்து வந்து கட்டிலில் தள்ளினான்... ஆ..வருண்...
"படுத்து தூங்கு"...
"நான் என் மாமுகிட்ட போகணும்"..
"எந்த மம்முகிட்டயும் போக முடியாது படுத்து தூங்கு... டங்கென்று சேரை இழுத்துப் போட்டு அவள் முன் அமர..
"எதுக்கு இங்க இருக்கிங்க இங்க இருந்துப் போங்க"...
"எதுக்கு நான் போனதும்...ஜனனல் வழியா குதிச்சி சாகவா?..
"நா நா.. என் வருணை பார்க்க போகணும்..
"இப்போ எங்கயும் போக முடியாது காலையில் டிஸ்சார்ஜ் ஆனா பிறகு எங்க வேணாலும் போய் தொலை...அவன் எரிந்துவிழ...
"அதை சொல்ல நீங்க யாரு? நா போவேன்...
"அஸ் எ டாக்டர்... கண்டிப்பான குரலில் சட்டமாக சொன்னவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது புரிந்தது.. "சரி நீங்க போங்க நா நா தூங்குறேன்..
"ஏன் நான் போகணும் இது என்னோட ஹாஸ்பிடல்! இப்படியே என்னோட மல்லுக்கட்டி எனர்ஜி வெஸ்ட் பண்ண போறீயா?..
கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் உடலும் மனமும் கொஞ்சம் கண்ணை மூடிதான் தூங்கேன் என்றது...
ஒரு வேலை ரெண்டு பேரும் இரட்டையர்களா இருப்பாங்களோ?!... இருந்தா மாமு சொல்லி இருக்குமே!... யாரா இருந்தா நமக்கு என்ன.. வருணுமா இதழ் முணுமுணுக்க உடலை குறுக்கி நந்தையாக சுருண்டு.. கண்ணுக்குள் அவன் அழகு முகம் வர... இதழ்கள் புன்னகைக்க
"இதழ்மா"... என தாபம் அல்லாத தாய் தேடும் பிள்ளையாக முதுகில் ஈரம் படரா
"என் தங்கமே விட்டு போய்டுவேனு நினைச்சியா.. எங்கே போனாலும் உன் பொண்டாட்டி நானும் வருவேன்டா..இழுத்து நெஞ்சில் போட்டு அவன் முரட்டு கேசத்திற்குள் விரலை விட்டு அலைக்க...இன்னொரு கையில் அவன் முதுகை தட்டிக்கொடுத்தாள்...
அவள் சைகைகளை நீலவிழியன் விழிகளை உருட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தவன்...இதழினி கன்னத்தில் ஒட்டி நனைத்திருந்த மழை நீர்துளிகளை எட்டி துடைக்க கை நீண்டது ஏனோ?!...
இதழ் மழையில் நனைந்திடுமா❣️

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️38
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.