• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
270
Reaction score
234
Points
43
இதழ்- 20


ரிஷி தோட்டத்தில் போடப்பட்டுள்ள மர பெஞ்சில் அமர்ந்து தன் நண்பனின் திடீர் மாற்றத்தை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான். அவனும் அர்ஜூனை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான். சுற்று புறம் எதையும் கவனிக்காமல் மகியை கண்களால் கபளீகரம் செய்வதை.

அவன் இப்படிப்பட்டவன் எல்லாம் இல்லை. பணத்திற்காக அவனிடம் வரும் பெண்களை தவிர, வேறு எப்பேர்ப்பட்ட உலக அழகியே அவன் எதிரில் வந்து நின்றாலும் நிமிர்த்து பார்க்க மாட்டான். விருப்பம் இல்லை என்றால் கட்டாயம் செய்பவன் இல்லை.

எந்த பெண்ணுடனும் தன் தேவை முடியும் வரை மட்டுமே இருப்பான். தேவை முடிந்ததும் பணத்தை விட்டெரிந்து விட்டு அடுத்த நொடியே ஒன்று அவன் வெளியேறி விடுவான். இல்லை அந்த பெண்ணை வெளியேற்றி விடுவான்.
அப்படிப்பட்டவன் மகியை வைத்த கண் வாங்காமல் ரசனையாக பார்ப்பதும், அவளிடம் சில்மிஷம் செய்வதும் என இருக்க, ஒரு புறம் ரிஷிக்கு அவன் மாற்றம் நிம்மதியாக இருந்தாலும், இன்னொருபுறமோ எங்கே மகியை கைவிட்டு விடுவானோ என்ற பயமும் இருக்க தான் செய்தது.

ஏன் என்றால், அர்ஜூன் இங்கு வரும் போதே ரிஷியிடம் "மச்சி பொண்ணு நல்லா இருந்தா, அவளுக்கும் ஓகேன்னா, ஒரு நாள் அவளோட இருந்து வேலைய முடிச்சிட்டு போயிட்டே இருப்பேன்டா" அன்று சொன்னது ரிஷி காதில் கேட்டு கொண்டே இருக்க.

“ஒரு அப்பாவி பொண்ணை, அர்ஜூன் தலைல கட்டிவக்க முடிவெடுத்து தப்பு பண்றோமோ, இது சரிவருமா” என பலவாறு தன் உயிர் நண்பனாக இருந்தாலும், மகியின் வாழ்க்கையை பற்றி கவலையில் இருந்தான்.


அவன் இருக்கும் இடத்தில் சற்று தூரத்தில், ஒரு சுவற்றின் அருகில் யாரோ அழுவது போல் சத்தம் கேட்க, அதனுடன் கோவமாக பேசும் பேச்சி சத்தமும் கேட்கவே, சத்தம் வரும் திசையில் எழுந்து சென்றான் ரிஷி.

அங்கே அவன் மாடர்ன் ரதி முகத்தை மூடி கதறி அழுது கொண்டு இருக்க, ராதா அவளை உக்கிரமாக திட்டி கொண்டு இருந்தாள்.

ராதா சென்றதும் கார்த்தி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். அவன் தோளில் அழுத்தமாக ஒரு கரம் பதியவும் திரும்பிப் பார்க்க, குரு தான் நின்று கொண்டு இருந்தான்.

“மாமா நீயி இங்க எப்ப வந்த?” எங்கே அவன் தனக்கும் ராதாக்கும் நடந்த வாக்கு வாதத்தை கேட்டு விட்டானோ என்ற தயக்கத்தில், அவனை நேருக்கு நேர் பார்த்து கேட்க முடியாமல் எங்கோ பார்த்து கேட்டான்.

“ம்ம் நான் வந்தது இருக்கட்டும்டே உனக்கு ராதாக்கு என்ன பிரச்னைன்னு எல்லாம் நான் இங்க பஞ்சாயத்து பண்ண வரல. இருந்தாலும் ராதாக்கு நான் அண்ணன்ற முறைல ஒன்னு மட்டு சொல்றேன்.

அவள கஷ்டப்படுத்துற மாறி நீயி எது பண்ணாலும், ராதாக்கு அண்ணனா நான் பாத்துட்டு இருப்பேன்னு நினைக்காதலே. நீயி என் அத்தை மகனா இருந்தாலும் அதுக்கும் மேல உறவையும் தாண்டி நாம ஒரு நல்ல நண்பர்களாதே இதுவரைக்கும் பழகிட்டு இருக்கோம். ஆனா அதையும் தாண்டி நான் என் தங்கச்சிகளுக்கு அண்ணன்றதயும் மறந்துடாதலே" அவன் தோள் தட்டியவனாக "என் தங்கயை தாண்டி தான் நீயும்" என சொல்லாமல் சொல்லி,
“போயி எப்படியாவது அவள சமாதான படுத்துலே..” என்ற குரு அங்கிருந்து சென்றான்.

கார்த்தி தலை கோதி சிரித்துக்கொண்டான் குருவை நினைத்து. என்னதான் சிறு வயதிலிருந்தே குரு கதிர் கார்த்தி மூவரும், ஒரே தட்டில் உண்டு, ஒரே குளியல் அறையில் ஒரே சோப்பில் மூவரும் செல்ல சண்டை இட்டு குளித்தும், ஒருவர் சட்டை, செருப்பு, வாட்ச், பனியன், ஜட்டி முதற்கொண்டு ஒருவர் மாற்றி போட்டும், ஒரே படுக்கையில் மூவரும் ஒருவர் மேல் ஒருவர் என கால் கைகளை போட்டு கட்டிப்பிடித்து புரண்டு படுத்து வளந்து இருந்தாலும், குருவிற்கு முதலில் ரத்த சொந்தந்ததிற்கு பிறகு தான் மற்றது எல்லாம் என்று கார்த்திக்கு நன்றாகவே தெரியும்.

இப்போது ராதாவை எப்படி சமாதானம் செய்வதென தெரியாமல் தடுமாறி நின்றான். அவனாக போய் அவளிடம் பேசினால் நிச்சயம், அவளே அவளை காயப்படுத்திக் கொள்வாள்.
என்ன செய்யலாம் என யோசித்து நின்றவன் கண்ணில் ராதா வைத்து விட்டுச் சென்ற அவனுக்கு பிடித்த ஆட்டுக்கால் பாயா இருக்க, அதன் வாசனை வேறு அவன் நாசியை துலைக்க ‘மொத இத ஒரு புடி புடிச்சிட்டு தெம்பா போய் நம்ப கோவக்கார கிளிய சமாதானம் படுத்தலாம்” என்றெண்ணி அதை சாப்பிட துவங்கினான்.

இரவு வேலை காயு வீட்டில்,

“அம்மா இன்னைக்கு என்ன சமைக்கட்டும்” காயு அவளின் அம்மா வேனியிடம் கேட்க,

காயுவின் அப்பா ஐந்து வருடம் முன்பு வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்தவரின் காலில் விஷ தேள் கொட்டி விட, அதை கவனிக்க தவறியவர் இறந்த அதிர்ச்சி மற்றும் கவலையில் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் இருக்கிறார் வேனி.

“உனக்கு எது தோணுதோ செய்மா காயத்ரி...” என்றார் மென்மையாக.

“சரிம்மா, அப்ப இட்லி சுட்டு இட்லி சாம்பார், பூண்டு சட்னி பண்ணட்டுமா"

வேனி சரி என்றதும் மடமடவென வேலைகளை முடித்து, ஒரு தட்டில் இட்லியை போட்டு வேனிக்கு ஊட்டி விட்டு, அவருக்கு தேவையானதை செய்தவள், மாத்திரை போட வைத்து அவர் தூங்கியதும், அவள் அறைக்கு வந்தாள்.

கசகசவென்று இருக்கவே சரி குளித்து வந்து தூங்கலாம் என தாவணியை கழட்ட போன சமயம்,
கரிய இருளில், முகத்தை கருப்பு துணியால் சுத்திக் கொண்டு, கையில் கத்தியுடன், வாட்ட சாட்டமான ஒருவன் அவள் அறை ஜன்னல் வழியே பொத்தென குதித்தான்.

அந்த சத்தத்தில் திடுக்கிட்ட காயு திரும்பி அந்த உருவத்தைப் பார்க்க பயத்தில் உடல் உதறி, வாயில் கை வைத்து “ஆ திருடன் திருடன் யாராவது வாங்களேன்.. திருடன் என்னை கத்தி வச்சி குத்திக் கொல்ல பாக்குறான்" மூச்சு விடாமல் கீச் கீச் குரலில் கத்த,

உடனே அந்த உருவம் சுதாரித்து, காயு வாயை அவன் இரும்பு கரத்தால் அழுத்தி மூடவும். ம்ம்ம்ம்.. என்று திமிறி அவன் கை மேல் பட் பட் என்று அடித்து அவனிடமிருந்து விடுபட போராடியவளுக்கு, பயத்தில் அழுகையும் வந்து கடைசியாக அவன் புஜத்தில் நறுக்கென்று கிள்ளி விட்டாள்.


வலியில் கையை தளர்த்த அந்த இடைவெளியை பயன்படுத்தி காயு தப்ப நினைக்க, சட்டென ஒரு வலிய கரம் அவள் இடை புகுந்து இழுத்து அருகில் இருந்த மெத்தையில் தள்ளி அந்த உருவமும் அவள் மேல் படர போக, அதில் அந்தமும் நடுஙகியது.

பயத்தில் எச்சில் விழுங்கி ‘தயவு செஞ்சி என்ன விட்டுடு எனக்கு இன்னும் ஒரு வாரத்துல என் மாமா கூட கல்யாணம் நடக்க போது. உனக்கு நான் எவ்வளோ பணம் வேணுனாலும் என் மாமன்கிட்ட கேட்டு வாங்கி தரேன். யாருகிட்டயும் உன்னை பத்தி சொல்ல மாட்டேன்.. தயவு பண்ணி என்னை மட்டும் விட்டுடு" கண்ணை மூடி கதறி அழ,

தூக்க மாத்திரையின் உதவியில் உறங்கிய வேனியின் காதில் இவள் கத்துவது எதுவும் கேட்காமல் போக, இதற்கு மேலும் அவளை சோதிக்க விடாமல், முகத்தில் சுற்றி இருந்த துணியை விளக்கி, அவள் பக்கவாட்டில் படுத்து இடையோடு கை கொடுத்து அவனை நோக்கி இழுத்து, அவள் காதருகில் மூச்சு காற்று படும்படி

“ஏய் லட்டு பொண்ணே, இப்ப எதுக்கு இப்படி பயந்து அழுவுறவ. திருடன் இல்ல நான் உன் மாமந்தேன் வந்து இருக்கேன் டி. பயப்புடாம கண்ணத்தொர. என்னைய தாண்டி எவனுக்கு உன் அறைக்கு வந்து இப்படி உன்னை ஒட்டி படுக்க உரிமை இருக்கு" என்றான் கிசுகிசுப்பான குரலில்.

அவன் குரல் கேட்டதும் உடனே கண் திறந்த காயு, அவன் மார்பின் மேல் அடி அடி என அடித்து “ஏன் மாமா இப்படி என்ன பயம்புடுத்தின. நான் எம்புட்டு பயந்துட்டன் தெரியுமா? இப்படியா சன்னல் வழியா திருடன மாறி வருவ. அதுவும் கைல கத்தியோட...” அவனை அடித்து கொண்டே சொல்ல, அவள் ரெண்டு கைகளையும் ஆடவனின் ஒரு கையில் அடக்கியவன், அவள் முகத்துக்கு மிக அருகில் அவன் முகத்தால் நெருங்க, பெண்ணவளுக்கு இந்தனை நேரம் இருந்த பயம் நீங்கி, தன்னவனை இத்தனை அருகில் கண்டு அவள் முகம் செந்நிறமாக மாறி வெட்கம் குடிகொள்ள, அவனை பார்க்க முடியாமல் கண்கள் படபடத்தது.

“என்ன லட்டு, நான் இன்னு ஒண்ணுமே பண்ணல அதுக்குள்ள உன் கண்ணமெல்லா இப்படி செவந்து போச்சி. யாராவது அடிச்சிட்டாங்களா டி" கதிர் குறும்பு பேச்சில் இன்னும் குங்குமமாய் சிவந்தவள், கைகளை நெளித்து கொண்டே “யாரும்... அடி... அடிக்கல... மாமா... நீ நீ தள்ளி போ...” தொண்டை குழி தாண்டி வார்த்தைகள் வருவேனா என்றது காயுக்கு.

“ஓ! நான் தள்ளி போணுமா லட்டு...” கேட்டு கொண்டே மேலும் அவளிடம் நெருங்க,

“அச்சோ மாமா நான் உன்னை தள்ளி போன்னு சொன்னேன்...” காயு சிணுங்க,

“அப்படியா, நீ தள்ளி போன்னு சொன்ன. ஆனா என் காதுல சீக்கிரம் கிட்ட வா மாமான்னுல்ல விழுந்துச்சி" கண்ணடித்து சிரித்து அவள் வெட்கத்தை ரசித்தான்.

“விழும் விழும், வேணும்னா ரெண்டு அடி விழும். திருட்டு பையா. சரி சொல்லு இந்த நேரத்துல எதுக்கு இங்க வந்த" தன் வெட்கத்தை மறைக்க நினைத்து தோற்றவளாய் அவனை பாராது கேட்க,

“எதுக்கு வந்தியா? இதுவே லேட்டு. இந்நேரம் உன்னைய மாதிரி பொண்ணு என்னைய மாதிரி ஒரு அழகான பையனும் நமக்கு ரெண்டு புள்ளைங்களே பொறந்து இருக்கும். உன்னைய பாவம் பாத்து இத்தனை வருசமா விட்டு வச்சேன் பாத்தியா என்னை சொல்லனும்" கதிர் அலுத்துக்கொண்டான்.

“அதென்ன உன்னைய மாறி அழகான பையன். எனக்கு வெறும் பொண்ணுன்னு சொல்ற? அப்ப நான் அழகா இல்லையா" மூக்கை விடைத்தது அவளுக்கு.

அப்படி வாடி வழிக்கு என நினைத்தவன், "ம்ம்.. அதெல்லாம் பொறந்தாதே லட்டு தெரியும். அதுக்கு மொத நமக்கு அது நடக்கணும்" அவள் இதழில் கண் பதித்தபடி சொல்ல, முதலில் அவன் சொன்னது புரியாது விழித்தவள், பிறகு புரிந்ததும் “ஓஹோ! சாரு இதுக்குதே அடி போடறாரா" அவன் பார்வை போன போக்கில் மேலும் வெட்கத்தில் சிவந்தவள்,

“மாமா இன்னும் நீ என் கழுத்துல தாலி கட்டல நியாபகம் இல்லயா...” என்றாள் அவளும் குழைந்த படி மெல்லிய குரலில்.

“தாலி கட்டுனாதே நீ என் பொஞ்சாதியா லட்டு. நீ பொறந்த போதிலிருந்தே, எனக்கு விவரம் தெரிஞ்சி உன்கூட நான் மனசலவுல புருசன் பொஞ்சாதி எப்படியெல்லா இருப்பாய்ங்களோ அப்படி எல்லாம் உன்னை நினைச்சி வாழ்ந்துட்டுதே இருக்கேன் லட்டு" அவன் கண்களில் தாபம் வழியும் காதலுடன் சொல்ல, அதில் உடல் கூசி நெளிந்தாள் அவள்.

பின் ஏதோ நியாபகம் வந்தவளாக “மாமா நேரம் ஆச்சே நீ இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்ட, கொஞ்சம் தள்ளு நான் போயி உனக்கு இட்லி எடுத்துட்டு வரேன்" என்றவளை தடுத்து,

“எப்படி லட்டு நான் சாப்பிடலன்னு நீ கண்டு புடிச்ச?” ஆச்சிரியமாக கேட்க, "அதே என்னைய முழுசா முழுங்க பாக்குறியே" மனதில் நினைத்தவள்,

"போலீஸ்காரன் பொஞ்சாதி இதை கூட கண்டு புடிக்கிலைன்னா எப்படி மாமா..?" நக்கலாக சொல்லி, அவனுக்கு அழகு காட்டி ஓடி விட, அவள் ஓடிய திசையை பார்த்து சிரித்துக் கொண்டே “கேடி வர வர பயம் போயி, வாய் அதிகமாவுதுடியேய்...” பின்னிருந்து கத்த,

“ஆமா ஆமா உன்கிட்டலாம் வாய் இல்லனா நாய் தூக்கிட்டு போயிடும்னு எட்டு மணி செய்தில சொன்னாவ அதே...” என்று அவளும் குரல் கொடுக்க, அவள் கூற்றில் உதடு மடித்து சிரித்து கொண்டான் ஏசிபி கதிரவன்.

கார்த்தியிடம் பேசி விட்டு வந்த குரு வேகமாக அவன் அறைக்கு வந்து, மெத்தையில் பொத் என்று படுத்தான். அப்போது அவனுக்கு டீ எடுத்து வந்த பூஜா, அவன் முகம் சரி இல்லாததை கண்டவள், டீயை மேஜையில் வைத்து கணவன் அருகில் சென்று அமர்ந்து அவன் தலையை ஆதூரமாக கோதி விட “பூவு...” என தாவி அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

“என்னாச்சி மாமா? ஏன் உங்க முகம் வாடி போயி கெடக்கு...” எ என்றாள் கவலையாக.

“பூவு நான் கார்த்தி பயக்கிட்ட கொஞ்ச சத்தமா பேசிட்டு வந்துட்டன் பூவு...” வருத்தமாக குரு சொல்ல,

“என்னாச்சி மாமா, உங்களுக்குள்ள அடிக்கடி சத்தமா பேசிக்கிறதும் சமாதானமே பண்ணாம பேசிக்கிறதும் சகஜம் தானே. இதுக்கு ஏன் இப்படி இருக்கீய” என்றாள் குழப்பமாக.

"இது எப்பவும் பேசுற மாறி இல்ல பூவு" என்றவன் நடந்ததைச் சொல்ல, பூஜாக்கு கார்த்தி பண்ண வேலை முன்னமே தெரியுமாதலால் அமைதியாக இருந்தாள்.

“அது மட்டும் இல்ல பூவு இந்த ராதா என்ன பண்ணி வச்சிருக்கா தெரியுமா?” என்றவன் அமையாகிட,
அதில் பயந்த பூஜா “என்ன மாமா பண்ணினா...?” ராதாவின் குணம் நன்கு அறிந்தவள் என்ன கிறுக்குத்தனம் பண்ணினான்னு தெரியலையே என பதட்டமாக கேட்க,


“இந்த கார்த்தி பய ஒவ்வொரு முற பண்ற தப்புக்கெல்லாம், அவளோட வலப்பக்க நெஞ்சில பைத்தியக்காரி மாதிரி சூடு வச்சி தண்டனை குடுத்துக்குறா டி. அதை பாத்து தாங்க முடியாமதே அவன்கிட்ட கோவப்பட்டு வந்தேன்" என்று குரு சொல்ல, அதிர்ச்சியாகி அவனை பூஜா பார்த்தாள்.

தொடரும்.
 
Top