Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
226
Reaction score
211
Points
63
அத்தியாயம் - 21

யாதவ் காரில் ஏறியதும் கார் சீறிப்பாயவும் பயந்து போன கவி, பிடித்தமானத்திற்கு இடம் தேடியபடி யாதவை பாவமாக பார்க்க, அவள் பயத்தை உணர்ந்து காரை ஓட்டும் ஆத்வியை எட்டிப் பார்த்தவனுக்கு, அவன் கனியா முகம் கண்டு 'எங்கே காரை ஸ்லோ செய்ய சொன்னால், வேண்டுமென்றே இன்னும் வேகமெடுத்து எதிலாவது விட்டு ஆளையே போட்டு தள்ளி விடுவானோ' என்ற எண்ணத்தில் கவியை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இதை மிர்ரர் வழியாக பார்த்து விட்ட ஆத்வியின் கோவம் கட்டுக்கடங்காமல் போக, பயத்தில் கண்மூடி அவன் தோளில் முகம் புதைத்து இருந்த கவியைக் கண்டு ஏகத்துக்கும் பிபி எகுறியது.

இருளில் அதிக வாகனங்கள் செல்லாத சாலையில் இவன் மகிழுந்து மட்டும் மின்னல் வேகத்தில் சென்று, சாலையின் நடுவே இருந்த பெரிய பொக்கையான பள்ளத்தில் ஏற்றி இறக்கவும், பின்னால் இருந்த கவியின் கபாலம் தனியே கழண்டு விழாத குறை தான்.

வானில் குடும்பம் நடத்தும் யாதவ்க்கு ஒன்றும் பெரிதாக பயம் இல்லை என்றாலும், கவியின் நிலை நினைத்து தான் சற்று கவலையாக இருந்தது. அப்போதே அவள் செல்கிறேன் என்றபோதே போக விட்டுருந்தால், அரக்கனின் வாகனத்தில் சிக்கி இருக்க மாட்டாளோ என்று கூட தோன்றி விட்டது.

"ஹேய்.. கவி ஆர் யூ ஓகே.." அவளின் நடுங்கிய உடல் உணர்ந்து மெதுவாக வினவ,

"சார் கொஞ்சம் ஸ்லோ பண்ண சொல்லுங்க பயமா இருக்கு, இல்லைனா கார் ஸ்டாப் பண்ண சொல்லுங்க, நான் இங்கேயே இறங்கி ஏதாவது வண்டி வந்தா லிப்ட் கேட்டு போயிடுறேன்.." என்றாள் அச்சத்துடன்.

"கவி கொஞ்சம் பொறுத்துக்கோ அவன்கிட்ட இப்ப எதுவும் பேச முடியாது, மீறி பேசினா கடிச்சித் துப்புவான்.. இன்னும் பைவ் மினிட்ஸ் தான் ஏர்போர்ட் வந்துடும், அங்க உனக்கு நான் வேற வெஹிக்கல் அரேஞ் பண்ணி அனுப்பி வைக்கிறேன், பயப்படாத" இவன் அவளுக்கு சமாதானம் செய்வது பாம்புகாதனுக்கு நன்றாக கேட்டது.

"ஓஹ்..மேடம் மேல அவ்ளோ கேரிங்கா.. எப்டி அவளை வேற வண்டில ஏத்தி அனுப்பி விடப் போறேன்னு நானும் பாக்குறேன் டா" மனதில் கருவிக் கொண்டு பார்க்கிங்கில் காரை நிறுத்தினான்.

அப்போது தான் போன உயிர் திரும்பப் பெற்றது உணர்ந்தாள் கவி. லக்கேஜை எடுத்துக் கொண்டு அவளிடம் வந்த யாதவ், "சாரி கவி இந்த நைட் டைம்ல உன்ன என்கூட கூப்ட்டு வந்து ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. அப்பவே உன்ன விட்ருக்கனும்" என்றான் வருத்தமாக.

"பரவால்ல சார் உங்கள சென்ட் ஆப் பண்ண வந்ததும் நல்லா தான் இருக்கு, அதோட நான் இப்ப தான் ஏர்போர்ட்டயே பாக்குறேன் ரொம்ப நல்லா இருக்கு" அவனோடு நடந்துக் கொண்டே சொல்லவும், மெலிதாக சிரித்த யாதவ்,

"சரி கவி, நெக்ஸ்ட் டைம் வரும் போது பிளைன்லே கூப்ட்டு போறேன்" என்றதும் அழகான சிரித்து, அவனோடு முன்னால் நடந்து சென்ற கவியை, வெறுப்பாக கண்டபடி பின்னால் சென்றான் ஆத்வி.

"ஓகே கவி. இனிமே நான் பிளைட் போய் எல்லாம் ரெடி பண்ணனும், அதுக்குள்ள நீ ஹாஸ்டல் ரிட்டன் போக ஒரு வண்டிய ரெடி பண்ணி தரேன்" அவன் உதவியாளுக்கு போனில் அழைக்கப் போக, நொடியில் மொபைல் பறிக்கப்பட்டது அவன் கையில் இருந்து.

யாதவ் புரியாமல் ஆத்வியை பார்க்க, "என்னை என்ன வேலைவெட்டி எதுவும் இல்லாம உன்கூட வந்தேன்னு நெனச்சியா இடியட்.. நான் இங்க இருக்கும் போது நீ எந்த ஸ்டுபிட்க்கு போன் பண்ற" எரிந்து விழுந்தவனை மூளை குழம்பும் நிலையில் பார்த்தான் யாதவ். ஏன் வந்தான் என்றும் தெரியவில்லை, எதற்கு இப்படி காய்ந்து தள்ளுகிறான் என்றும் புரியவில்லை.

"அது அண்ணே, உனக்கு ஏன் சிரமம்னு தான் கவிய வேற வண்டில அனுப்பி வைக்கலாம்னு பாத்தேன்.." வருடங்கள் கழிந்த பிறகு அண்ணனிடம் இத்தனை வார்த்தைகள் பேசுகிறான், பதிலுக்கு என்ன சொல்லி கடித்து வைக்கப் போகிறானோ என்ற பதட்டத்தோடு.

அவனை மூக்கு விடைக்க முறைத்த ஆத்வி, "பிளைட்க்கு வேற பைலெட் மாத்தி விட்டியா என்ன, இன்னும் இங்க நின்னு என்ன தேவை இல்லாத பேச்சி.." வார்த்தைகள் ஒவ்வொன்றும் தீ பொறியாக அனல் பறந்தது.

"இல்ல அண்ணே, இதோ போறேன்" அவசரமாக உரைத்தவனாக கவியை கவியை கண்டான்.

"உடல் மொழியிலும் முக பாவனையிலும் அத்தனை கம்பீரத்தை வைத்திருக்கும் யாதவ், ஆத்விக்கு இப்படி பம்பி பயந்து பேசுகிறானே" என்று வியப்பாக நின்றவளை உளுக்கி,

"கவி எனக்காக அட்ஜஸ்ட் பண்ணி அண்ணா கூட போறியா" கெஞ்சலாக அவன் கேட்கவும், ஆத்வியுடன் செல்ல மனம் லைக்கவில்லை என்றாலும், யாதவிடம் மறுப்பு கூற முடியாமல் அரைமனதாக தலையாட்டி வைத்தாள் சரி என்று.

ஹாப்பாடா என பெருமூச்சு விட்ட யாதவ், "கவி உன்கூட கொஞ்சம் தனியா பேசணும்" ரகசியமாக சொல்லவும், ஆத்வியின் எரிக்கும் பார்வை இருவர் மீதும்.

குழப்பமாக பார்த்தவளை சற்று தூரம் தள்ளி சென்றவனாக, "அவசரமாக தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கார்டும் சிறு பெட்டியும் அவள் கையில் கொடுத்த யாதவ், "ப்ளீஸ் கவி எனக்காக இதை வாங்கிக்கோ" என்று ரகசியக் குரலில் கெஞ்சலாக அவளிடம் என்ன சொன்னானோ!

முதலில் முடியாது என மறுப்புக் கூறிய கவி, பின் அவன் ஏதோ சொல்ல சொல்ல மகிழ்ச்சியில் கண்ணீர் ஊற்றெடுக்க அவனிடம் சம்மதம் என வார்த்தை வராமல் தலையசைத்து விட்டு, அவன் கொடுத்த பொருட்களை தன் தோள்பையில் வைத்துக் கொண்டவளாக, இருவரும் கை பேசி எண்ணை பரிமாற்றிக் கொண்டனர்.

இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்றெல்லாம் ஐந்தடி தூரத்தில் தள்ளி நிற்கும் ஆத்விக்கு ஒன்றும் கேட்கவில்லை என்றாலும், கடைசியாக இருவரும் மெலிதாக கட்டியனைத்து விடுவிப்பதை கண்டு ரத்தம் கொதித்தான் ஆடவன்.

"யாதவ்...." ஆத்வியின் கோபக்குரலில் இருவரும் அதிர்ந்து அவனை பார்க்க, "இன்னும் என்ன வெட்டி பேச்சி போற மாதிரி இல்லையா" அவன் அதட்டல் குரலில்,

"இதோ போறேண்ணா.." பதில் கொடுத்து கவியிடமும் கையசைத்துவிட்டு விடை பெற்றான் யாதவ். திரும்பி அவன் வரும் நாளில், அனைத்துமே தலைகீழாக மாறி இருக்கப் போவது அறியாமல்.

"ஏய்.. இன்னும் என்ன அங்க பார்வை வா.." அதட்டிய ஆத்வி முன்னால் செல்ல, யாதவ் அருகில் இருந்த வரை இல்லாத பயம் இப்போது ஒட்டிக்கொண்டது.

மான்ஸ்டரிடம் மாட்டிக் கொண்ட முயல்க் குட்டிப் போல, ஆத்விடம் தனியாக மாட்டிக் கொண்டு மிரண்டு விழித்தவளாக, கால்கள் நகர மறுக்க அங்கேயே அசையாமல் நின்றாள் பாவை.

சில அடிகள் எடுத்து வைத்து யோசனையாக பின்னால் திரும்பிப் பார்த்த ஆத்வி, பேந்த பேந்த விழித்து நிற்கும் கவியின் கரத்தை, அவள் இன்னதென உணரும்முன் பரபரவென இழுத்துக் கொண்டு நடந்தான் ஆத்வி.

"என்ன பண்ற, விடு என் கைய.." அவன் பின்னே அடம்பிடிக்கும் குழந்தையானாள் கவி.

"ஏய்ய்.. வாய மூடிட்டு அமைதியா வரல, மொத்தமா முடிச்சி தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.." அவன் கண்கள் க்ரூரமாக அவள் கழுத்தை பார்க்கவும், எங்கே திரும்ப கழுத்தை பிடித்து நெருக்கி விடுவானோ என்ற அச்சத்தில் வாய் மூடிக் கொண்டாள்.

அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாலும், பெரிய பதவியில் இருந்தும் தன் ஆளுமையிலும் கண்ணசைவிலும் பல பேரை கட்டிவைக்கும் வல்லமை பெற்ற யாதவ், ஏன் இப்படி ஒரு முறைகேடான முரடனிடம் அடங்கி செல்கிறான் என்ற எண்ணம் அவள் மூளையை அரித்துக் கொண்டு தான் இருந்தது.

அவள் கையை விடுத்து அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள, கவிக்கு அவனோடு செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.

கார் கண்ணாடியை கீழிறக்கிய ஆத்வி, "ஏய்ய்.. இப்ப கார்ல ஏறப் போறியா இல்லையா" தன் இடி முழங்கும் குரலில் உரும, உடல் தூக்கிவாரி போட, முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு அவனை பாராமல் ஏறிக் கொண்டாள்.

அவள் அமர்ந்த மாத்திரத்தில் மீண்டும் கார் சாலையில் சீறியது. முன்பாவது யாதவ் இருந்தான் தோள் கொடுக்க, இப்போது அரக்கன் அல்லவா இருக்கிறான் கொதரி எடுக்க.

"கொஞ்சம் காரை ஸ்லோவா தான் ஓட்டுங்களேன், எதுக்கு இவ்ளோ வேகமா போறீங்க.. அப்டி உங்களுக்கு அவசரமா போகனும்னா என்ன இறக்கி விட்ருங்க.." அவள் கத்துவது எல்லாம் காற்றில் தான் கலந்தது. இதில் ஏசியை வேறு அதிகப்படுத்தி வைத்து குளிரில் நடுங்க வைத்தான் முரடன்.

கார் வேகம் இன்னும் அதிகரித்து வலப்பக்கம் காரை புயல் வேகத்தில் வளைத்து திருப்ப, சர்ரென சறுக்கி சென்று தாமரை மலராய் அவன் மடியில் விழுந்து, புடைத்து நின்ற அவன் நீண்ட கழுத்தில் முகம் புதைத்திருந்தாள் வென்முயல் மேனியால்.

பாவையின் நெருக்கத்தில் மூளை கிறுக்காகி, சாலை கண்ணை மறைக்க சடன் பிரேக் போட்ட அடுத்த நொடி, கார் சாலையின் நடுவே கேட்பாரற்று தனித்து நின்றது.

பெண் தேகம் சில்லிட்டு நடுங்க, அவன் மீதிருந்த பாவையின் நறுமணம் ஆடவன் நாசியில் ஏறி மூளையை மழுங்கடித்தது. முதல் முதலில் ஒரு பெண்ணோடு இரவின் தனிமை தந்த அருகாமையில், உணர்வுகள் ஊற்றெடுத்து நிலைகுலைந்து போனான் ஆத்வி.

சில நிமிடங்கள் கண்மூடி மூச்சிவிட மறந்தவனின் கார் ஸ்டியரிங்கில் இருந்த கரங்கள், தானாக அவள் இடையிலும் முதுகிலும் ஊர்ந்து இடம் பெயர்ந்திருக்க, தன்னோடு இறுக்கிக் கொண்டவனாக குனிந்து அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தான்.

ட்ரிம் செய்த அவன் மீசை தாடிகள் குத்திக் குறுகுறுத்ததில் சட்டென கண் விழித்து, தான் இருக்கும் நிலை கண்டு அதிர்ந்து போன கவி, ஆத்வியின் தவம் கலைத்து அவனை தள்ளி விட்டவளாக, இருக்கையில் அமர்ந்தவளுக்கு பதட்டத்தில் மூச்சி வாங்கியது.

கவியின் திடிர் செயலில் கண்கள் மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் தலை குனிந்து அமர்ந்திருந்தவளை, அழுத்தமான பார்வை பார்த்து விட்டு காரை இயக்கினான் மிதமான வேகத்தில். பதட்டமாக இருந்த கவி கார் எந்த வேகத்தில் செல்கிறது என்றெல்லாம் கவனிக்க தவறி இருந்தாள்.

சரியாக அவளது ஹாஸ்டல் முன் காரை நிறுத்தவும், அப்போது கூட சிந்தை விட்டு வெளிவரவில்லை கவி. கை விரலை முன்னும் பின்னும் பின்னி விளையாடிக் கொண்டு யோசனையில் இருந்தவளின் கழுத்தில் அவன் முகம் புதைக்க, எத்தனை அதிர்ச்சிதான் இன்னும் கொடுக்க போகிறானோ பேதைக்கு.

அவனை கதள்ளியவளின் இதழ்கள் ஏதோ முணுமுணுப்பதை கூர்ந்து கவனித்த ஆத்வி, "ஆமா டி உன்கிட்ட மட்டும் பொறுக்கியாகிட்டேன்" என்றான் கிறக்கமாக.

இதற்கு மேல் இவனிடம் வாய் கொடுத்து வம்பு வளர்க்க நினைக்காத கவி, கார் கதவை திறக்க முனையும் முன் அவள் மென்பஞ்சி மலை முகட்டில் முகம் புதைத்து அங்கேயே அழுத்தமாக, ஆழமாக முகத்தை புரட்டி அவன் எடுக்க, மூச்சே இல்லை கவிக்கு.

கண்ணீர் துளிகள் கன்னத்தில் கோலம் வரைய, ஆணவன் முகமோ அவள் நெஞ்சத்தில் புதைந்து எச்சிலால் கோலம் வரைந்தது. அவன் தலை முடியை கொத்தாக பற்றி தன்னிடமிருந்து அவனை பிரித்து இழுத்து கோவமும் ஆத்திரமும் ஒருசேர, ஆத்வி கன்னத்தில் ஓங்கி அறைந்த கவி,

"பொருக்கி ராஸ்கல் உன்னையெல்லாம் அன்னைக்கே போலீஸ்ல புடிச்சி கொடுத்து இருக்கனும்.. அன்னைக்கு எல்லாரும் அத்தனை தூரம் எடுத்து சொல்லியும் கேக்காம நான் தான் முட்டாள் மாதிரி உன்ன அப்டியே விட்டு வந்துட்டேன்..

இன்னொரு முறை உன்னோட கீழ்த்தரமான புத்திய என்கிட்ட காட்ட நினைக்காத, அப்புறம் அசிங்கப்பட்டு போய்டுவ.." கோவத்தில் கொதித்து போனவளை கண்டு ஏலனமாக சிரித்த ஆத்வி,

"தெரியாம தொட்டதுக்கு கொடுக்குற தண்டனைய விட, தெரிஞ்சி தொட்டு கிடைக்கும் போது சுகமா தான் இருக்கு.. நீ கொடுத்த அடியும் சரி, உன்.." கிறக்க பேச்சை நிறுத்தி, அவள் கழுத்துக்கு கீழ் பார்வை பதிக்க,

கூனிக்குறுகிய கவி, ச்சீ.. என முகம் சுளித்து காரை விட்டு இறங்கப் போக, அவனது தடித்த விரல் எழுப்பிய சொடக்கிடும் சத்தத்தில் வெறுப்பாக திரும்பவும், அவளின் சிவந்த மூக்கு நுனியை ஆழமாக பார்த்த ஆத்வி,

"அன்னைக்கு நீ போலீஸ்ல பிடிச்சி கொடுத்தே இருந்தாலும் என்னால ஈஸியா வெளிய வந்துருக்க முடியும், ஏன்னா என்மேல எந்த தப்பும் இல்ல.. அதை நான் உனக்கு ப்ரூப் பண்ண வேண்டிய அவசியமும் இல்ல..

ஆனா அன்னைக்கு நான் தெரியாம பண்ண தப்பு இனி உன்கிட்ட தெரிஞ்சே செய்வேன், உன்னால முடிஞ்சா என்ன தடுத்து நிறுத்து டி பாக்கலாம்" திமிராக சவால் விட்டவனை, என்ன பிறவி இவன் என்ற கேவலப் பார்வையை வீசி திட்ட வாயெடுப்பதற்குள்,

"அப்புறம் இப்ப அடிச்ச அடியும் சேத்து கூடிய சீக்கிரம் திருப்பி கொடுப்பேன், வாங்கிக்க உடம்ப நல்லா சாப்ட்டு பலமா தேத்தி வை பேபி.." அவள் கன்னம் தட்டி கேலியாக மொழிந்தவனாக, "இப்போ என் காரை விட்டு கீழ இருங்கு டி" என்றான் நெஞ்சை உளுக்கும் சத்தத்தில்.

அவனை மூக்கு சிவக்க முறைத்து விட்டு மீண்டும் கீழிறங்கப் போன நேரம், அவள் இடை வளைத்து திருப்பி கவியின் பட்டு இதழில், பச்சக் என்று அவன் முரட்டு அதரத்தால் தடம் பதித்து சுவைத்து விடுத்தவன்,

"நேத்து டேஸ்ட் அப்டியே இருக்கான்னு செக் பண்ணி பாத்தேன், நேத்த விட இன்னும் டேஸ்ட் கூடி போச்சே எப்டி..?"

அப்பாவியாய் தன்னிடமே கேட்டவனை என்ன செய்தால் தகும் என்ற எண்ணத்தோடு, அவன் அடுத்தடுத்து கொடுத்து கொண்டே போகும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராதவளாக, கண்ணீரை துடைத்துக் கொண்ட கவி, சுட்டெரிக்கும் பார்வையால் ஆத்வியை பொசுக்கி தள்ளினாள்.

"உன் லிப்ஸ விட இந்த மூக்கு ரொம்ப பிங்க்கிஷா கடிக்கனும் போல இருக்கு டி, கடிக்கட்டுமா.." கேலி பார்வையால் மேலும் தன்னை நெருங்கியவனை அச்சதோடு கண்டு, அவன் அசந்த நேரம் காரை விட்டு இறங்கி ஓடி இருந்தாள் கவி. வட போச்சே என்ற கவலையில் ஆத்வி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 21
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top