- Messages
- 226
- Reaction score
- 211
- Points
- 63
அத்தியாயம் -22
ஆத்வியின் செயலில் மனம் கனத்து பித்து பிடித்ததை போல நடந்து வந்த கவியை, பிடித்துக் கொண்டாள் ஸ்வாதி.
"மணி என்னாகுது நேரத்தோட வர தெரியாதா.. போன் போட்டு சொல்லிட்டா முடிஞ்சிதா, நீ வர வரைக்கும் எனக்கு சோறும் இறங்க தூக்கமும் வரல..
அவங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு கடைசியா உன்ன வந்து விட்டு போறதுக்கு, நீ ஆட்டோ இல்ல பஸ் புடிச்சி வந்துருந்தாலே, எப்போவோ வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து இருக்கலாமே கவி.." தன் பாட்டுக்கு புலம்பிய ஸ்வாதி, கவியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவே, அவள் முகத்தை உற்று நோக்கினாள்.
"கவி ஏன் இப்டி என்னவோ போல இருக்க, என்னாச்சு" ஸ்வாதி தன் அருகில் அமரவும் தான், தெளிவு பெற்ற கவி,
"ஹான் என்ன சொன்ன ஸ்வாதி" என்றாளே மூக்கு விடைக்க முறைத்த ஸ்வாதி,
"நானே செம்ம கடுப்புல இருக்கேன் நீ வேற ஏன் டி இப்டி படுத்துற" நொந்து கொண்ட ஸ்வாதிக்கு, அலுவலகத்தில் அவள் செய்து முடித்த பிராஜெக்ட்டை யார் மாற்றி அமைத்து வைத்தது என்ற எண்ணமே, பெரும் தலைவலியை கொடுத்தது.
மேலும், கொஞ்ச நாளாகவே தன்னிடம் நெருங்கி நெருங்கி வழிய வந்து பேசும், டீம் லீட் தொல்லை வேறு. போதா குறைக்கு காலையில் இருந்து யாதவ் திட்டி தீர்த்தது என அனைத்தையும் போட்டு குழப்பிக் கொண்டு இருந்தவளுக்கு, கவியின் முக வாட்டம் கண்டுவேறு பயத்தை கிளப்பியது.
ஒரு தாய் தான் ஈன்றெடுத்த பிள்ளையின் முகம் வாடினால் பரிதவித்துப் போவாள். இங்கோ தோழியாக வளர்த்த பிள்ளைமுகம் கண்டு வாடினாள், அவளை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் அன்னையவள்.
தானும் உனக்கு சலைத்தவள் அல்ல என்று நிரூபிக்கும் விதமாக, எப்போதும் என்ன கவலையாக இருந்தாலும் வெளியே காட்டாது தெளிந்த முகமாக இருக்கும் ஸ்வாதியின் முகம், இன்று சோர்ந்து இருப்பதை கண்டு கொண்ட கவி,
"என்ன விடு ஸ்வாதி நீ ஏன் இவ்ளோ டல்லா இருக்க, எப்பவும் இப்டி இருக்க மாட்டியே.. ஆமா ஆபிஸ் விட்டு வந்து இன்னும் என்ன ட்ரெஸ் கூட மாத்தாம இருக்க சொல்லு டி.." என்றிட, தேவை இல்லாதவற்றை இவளிடம் சொல்லி பயம்புறுத்த வேண்டாம் என நினைத்தாளோ! முகத்தை இயல்பாக்கிக் கொண்ட ஸ்வாதி,
"அதெல்லாம் ஒன்னும் இல்ல கவி சின்னதா ஆபிஸ் டென்ஷன், அதோட நீயும் வரலையா அதான்.. சரி நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்து சாப்ட்டு படு, இப்பவே லேட் ஆச்சி, காலைல உன்ன நான் எழுப்பி விடுறதுக்குள்ள ஒரு வழியாகிடுவேன்"
சமாளிப்பாக சொன்ன ஸ்வாதி தானிருந்த குழப்பத்தினால், கவியின் அழுது சிவந்து இருந்த கண்களையும், ரத்தம் கட்டிய செவ்விதழயும் கவனிக்க தவறி உணவை எடுத்து வைத்தாள்.
குளியலறை புகுந்த கவி, அங்கு மாட்டி இருந்த சிறு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கலங்கி நின்றாள். நினைக்க நினைக்க ஆத்திரம் மூண்டது ஆத்வியின் மீது.
"ராஸ்கல் சரியான பிராடு, இவனை எல்லாம் சும்மாவே விடக் கூடாது எவ்ளோ தைரியம், தெரிஞ்சே அப்படி ஒரு காரியத்தை பண்ணுவான்.. இதுல திமிரா சவால் வேற விடுறான் நாசமா போறவன்.."
வாய் விட்டே புலம்பி முகத்தில் நீரை அடித்து கழுவியவளின் நாசியில், ஆடவனின் மூச்சி காற்றின் சபரிச உணர்வு நீங்க மறுத்தது. நெஞ்சோடு அவன் வாசம் கலந்த உணர்வோடு, அவன் எச்சில் முத்த சுவை நாவிலே ஒட்டி இம்சை செய்ய, நீரை கொண்டு வாய் கொப்பலித்தும் நீங்கியபாடில்லை.
"ச்ச.. என்ன கன்றாவி உணர்விதுx என்ற சலிப்போடு ஆழ்ந்த மூச்செடுத்து கண் மூடியவளுக்கு, அவன் இதழ் முத்தத்தின் குழக்குழப்பு சுறந்து கொண்டே இருக்கும் உணர்வு.
"கடவுளே" என நொந்து கொண்டவளாக, உண்டு முடித்து அமைதியாக படுத்து விட்டாள்.
எப்போதும் அவளை தோண்டித் துருவும் ஸ்வாதி கூட இன்று என்னவோ அமைதியாக தான் இருந்தாள். மதியம் வரை தெரியாது யாதவ் வெளிநாடு செல்லப் போவது.
மதிய உணவு முடிந்த பின் தான் சக பணியாட்கள் பேசிக் கொண்டதை வைத்து அறிந்துக் கொண்டாள். அதை கேட்டதும் கணினியில் மும்புரமாக டிசைன் செய்து கொண்டிருந்த கரங்கள் ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்து பின் தொடர்ந்தது.
மாலையில் வேலை முடித்து விட்டு தோள்பையை மாட்டிக் கொண்டு எதோ யோசனையாக படிகளில் கீழிறங்கிய ஸ்வாதி, கவனிக்காமல் இரண்டு படிகள் தாண்டி காலை வைத்து, இடரி விழப்போனவளை தாங்கிப் பிடித்தது ஷாக்ஷாத் யாதவ் தான்.
யாதவின் சட்டை காலரை இறுகிப் பிடித்தபடி பயத்தில் கண்கள் மூடி, தன் கைவளைவில் கோழிக் குஞ்சாக அடைக்கலம் கொண்டு இருந்தவளின் முகத்தையே இமைவெட்டாமல் பார்த்தவன், "எப்பப்பாரு எங்கயாவது விழுந்து தொலையிறதே உனக்கு வேலையா போச்சா.."
நியாயப்படி பார்த்தால் இவ்வார்த்தைகள் கோவமாக தான் வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் உதிர்த்த வார்த்தைகள் யாவும், மையிலிறகால் இதமாக வருடுவதை போல் வந்ததை உணரவில்லையோ பாவை.
"ம்ம்.. உங்கள என்னைக்கு பாத்தேனோ அன்னைல இருந்து விழுந்து தான் வாருறேன்" கண்களை திறக்கவில்லை என்றாலும் தன்னை தாங்கி இருப்பது யாரென உணர்ந்து, தன்னை அறியாமல் அவள் பதில் கொடுக்கவும்,
மனதில் குலுங்காற்று வீச அவளது இமைமூடிய முகத்தை உற்று நோக்கிய யாதவ், பெண்ணின் முகத்தருகே தன் மூச்சிக்காற்று மோத நெருங்கியவனாக,
"இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இரு, ஏன்னா இனி நீ விழுந்தா பிடிக்க நான் இருக்க மாட்டேன்.. நான் திரும்ப வர வரைக்கும் எந்த ஒரு சேதாரமும் இல்லாம எனக்காக காத்திரு, புரிஞ்சிதா.." ஹஸ்கியாக சொன்னவனின் மயக்கும் குரலில் என்ன உணர்ந்தாளோ!
ம்ம்.. கொட்டிய ஸ்வாதி, சட்டென அதிர்ச்சியாக கண் திறந்து அவனை விட்டு விலகி நின்றவளுக்கு படபடப்பாக வந்தது. தான் பேசியதை விட, அவன் பேசிய விடயங்களை கிரகித்துக் கொள்ள முடியாமல் தவித்து, தலை குனிந்து நின்றாள் பாவை.
எப்போதும் தன்னிடம் எரிந்து விழுபவன், இப்போது கனிவாக பேசுவதை நன்றாகவே உணர முடிந்ததது அவளால்.
பதட்டத்தில் தோள்பையின் வாரை திருகிக் கொண்டிருந்தவளை நெருங்கி வரவும், இதயம் படபடக்க மேல் படி ஒன்றில் காலை எடுத்து வைத்தவளை பார்த்துக் கொண்டே தானும் நெருங்கி படியேறிய யாதவ்,
"காத்திருப்பியா மாட்டியா" என்றான் மோகனப் பார்வை வீசி.
தடுமாறிப் போன பேதையோ, "ந்.நான் ஹாஸ்டல் போகணும் சார்" என்றாள் பள்ளி மாணவியாக மிரண்டு.
"கண்டிப்பா போகணுமா.." என்றுமில்லா ஏக்கப் பேச்சி அவளை விடாது நெருங்கியபடி தொடர, ஸ்வாதிக்கோ தலை சுற்றியது யாதவின் புதுவித பரிமானத்தில்.
"ஸ்.சார்.. நீங்க என்ன பேசுறீங்கனு எனக்கு புரியல" என்றாள் மான்விழிகள் படபடக்க.
"உனக்கு எல்லாமே புரியும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஸ்வாதி, எனிவே நான் கெளம்புற நேரத்துல உன் மூளைய குழப்பி விட விரும்பல..
நான் இல்லைன்ற தைரியத்துல மார்னிங் ஆபிஸ்க்கு லேட்டா வர்றது, வேலை பாக்காம ஓப்பியடிக்கிற வேலையெல்லாம் இருக்கக் கூடாது, சரியா அந்தந்த நேரத்துக்கு எல்லா வேலையும் நடக்கணும்..
'காக்க வைக்காம சீக்கிரம் வர பாக்குறேன், வந்ததும் நீ என்ன காக்க விட்றாத சரியா.." என்ற வார்த்தையை மட்டும் அழுத்திக் கூறியவன் கடைசியாக, "டேக் கேர்" என உரைத்தவனாக, அவளை தாண்டி தலைகோதியபடி வேகமாக சென்று விட்டான்.
என்றுமில்லாத அவன் இறுக்கம் தளர்ந்த உணர்வுகுவியலான பேச்சில் சித்தம் கலங்கினாள் பாவை.
"திடிர்னு என்ன ஆச்சி அவருக்கு, ஏன் என்கிட்ட அப்டி பேசிட்டு போனாரு.. காக்க வைக்காம வரேன், நீ என்ன காக்க விட்றாதேன்னா என்ன அர்த்தம்.. அச்சோ என்ன நல்லா குழப்பி விட்டு போய்ட்டாரே.. இதுல நான் வேற லூசு மாறி உளறி வச்சிருக்கேன், இந்நேரம் பிளைட் ஏறி இருப்பாரா"
யாதவை எண்ணி தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தவளை பித்தாக்கி சென்றவன் நினைவிலும், அவள் மட்டும் தான் நிறைந்திருந்தாள்.
முழுக்கை வெள்ளை சட்டையில் கருநீல நிற டை அணிந்து, இருபக்க தோளிலும் தங்க நிறத்தில் மூன்று பட்டைகள் போட்டு கருப்பு நிற கூலிங் கிளாசில், ஆணழகனாக பைலெட் சீட்டில் அமர்ந்து, மைக்செட் பொருத்தி இருக்கும் விமானக் கருவியை எடுத்து காதில் மாட்டியதும், கேப்டனுக்கே உண்டான மிடுக்கு தானாக வந்து விட்டது.
உயரம், வான் வேகம், செங்குத்து வேகம், தலைப்பு மற்றும் விமானத்தில் உள்ள பல முக்கியமான தகவல்களை விமானிக்கு வழங்க உதவும் அந்த கருவி.
அனைத்து பயணிகளும் விமானத்தில் பாதுகாக்க ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்து விட்டதை உறுதி செய்த பின்னர் ஏர்லைன் டீம் அறிவிப்பு கொடுத்த பிறகு, அவன் பிளைட்டை டேக்-ஆஃப் செய்யும் அழகே தனி அழகு தான். மெல்ல மெல்ல விமானம் தரை தாண்டி வானில் பறக்க, அவன் மனமும் அவளிடம் சேர்ந்தே பறந்தது.
பாவம், அவன் திரும்பி வரும் வேளையில், காத்திருக்க சொல்லி விட்டு வந்தவள் காலை வாரி விடப் போவது அறியாமல் போனான்.
******
தன் அறையில் உறக்கம் தொலைத்து குப்புற விழுந்து படுத்துக் கிடந்தவன் நினைவில், அந்த சிவந்த மூக்கி தான் மூக்கு சிவக்க முறைத்தே, அவனை வதம் செய்துக் கொண்டிருந்தாள்.
"ஐயோ.. ஏய் பிசாசு.. தூங்க விடு டி.." வாய் விட்டே புலம்பியவன் மனசாட்சியோ,
"ஏன்டா ஆத்வி உன் வருங்கால பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண" என்று சீரியஸாக நக்கலடிக்கவும், கோவமாக எழுந்து அமர்ந்தவன்,
"நான் ஒன்னும் எவளுக்கும் துரோகம் பண்ணல, அவதான் மூக்கை காட்டியே என்ன என்னவோ செஞ்சி மயக்கிட்டா.. முதல்ல அந்த மூக்கை கடிச்சி துப்பிட்டா எல்லாம் சரியாகிடும், நாளைக்கு இருக்கு அவளுக்கு அவ மூக்குக்கும்.." கோவம் தீராமல் தலையணை தூக்கி தூர வீசியவனை கண்டு, எல்லளாக நகைத்தது மனசாட்சி.
"என்ன இளிப்பு, மரியாதையா ஓடி போய்டு இல்ல வர ஆத்திரத்துக்கு உன் மண்டையே அடிச்சி உடைச்சிடுவேன்.." தனியாக கத்திக் கொண்டு இருக்கவும், எப்போதும் போல் இவன் தூங்கி இருப்பான் என்ற எண்ணத்தில் தன்யா குட்டியை திருட்டுத் தனமாக தூக்கி வந்த அஜய், ஆத்வி விழித்திருப்பதை கண்டு திருட்டு முழி முழித்தான்.
அஜயையும் அவன் கையில் உறங்கிக் கொண்டு இருக்கும் குழந்தையும் கண்டு யோசனையாக புருவம் நெளித்தவன், "அப்போ நீங்க தான் இந்த குட்டி வாண்ட தினமும் இங்க படுக்க வச்சிட்டு போறதா" என்ற கனமான குரலில், ஆமா இல்ல என நாலா புறமும் தலையாட்டிய அஜய்,
"இல்ல அதுவந்து ஆத்வி, எங்க ரூம்ல ஏசி வேல செய்யல, அதான் தன்யாவ இங்க படுக்க வைக்கலாம்னு தூக்கிட்டு வந்தேன்" என்றவனை நம்பாமல் பார்க்கவும்,
"சரி நீ நான் சொல்றத நம்பளனு உன் பார்வைலே தெரியிது, பேசாம வேர்த்து ஊத்தினாலும் பரவால்ல குழந்தைய என் ரூம்லே படுக்க வச்சிக்கிறேன்.. நீ நிம்மதியா படுத்து தூங்கு" பாவமாக சொல்லி வெளியேறப் போனவனை,
"மாமா நில்லுங்க" என தடுத்து நிறுத்திய ஆத்வி,
"நீங்க சொல்றத இப்பவும் நான் நம்பள தான், நீங்க மட்டும் போய் வேர்வைல குளிங்க, தன்யாவ இங்கேயே படுக்க வச்சிட்டு" நமட்டு சிரிப்போடு சொன்ன அர்த்தம் பொதித்த பேச்சில், உதட்டை கடித்து அசடு வழிந்த அஜய், அவனருகில் வேகமாக குழந்தையை படுக்க வைத்து விட்டு தனறைக்கு ஓடி விட்டான், மனைவியோடு சேர்ந்து வியர்வையில் குளிக்க.
உறங்கும் குழந்தையின் முகத்தை தலையில் கை தாங்கி பார்த்துக் கொண்டிருந்த ஆத்வி, குழந்தையின் குட்டி குட்டியான சிவந்த கன்னங்கள் கண்டதும், தனது சிவந்த மூக்கியின் நினைவு மீண்டும் ஒட்டிக் கொண்டது.
"படுத்துறா ராட்சசி, நாளைக்கு இருக்கு டி உனக்கு" பற்களை கடித்த ஆத்வி, சிணுங்கும் குழந்தையை தட்டிக் கொடுத்து நெஞ்சில் போட்டு கண்ணயர்ந்தான்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 22
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.