- Messages
- 226
- Reaction score
- 211
- Points
- 63
அத்தியாயம் -24
காலை உணவை முடித்துக் கொண்ட ஆத்வி அலுவலகம் செல்ல இன்னும் நேரம் இருக்கவே ஷோபாவில் அமர்ந்திருந்தான், அங்கு நடப்பதை மௌனமாக கவனித்துக் கொண்டு.
மித்ரா கவியை அழைத்து வந்து கட்டாயமாக உணவு பரிமாறிக் கொண்டிருக்க, "மேடம் இவ்ளோ சாப்பாடு வேண்டா கொஞ்சம் போதும்" சங்கடமாக சொன்ன கவி, போனை நோண்டுவது போல தன்னை ஓரக்கண்ணால் பார்க்கும் ஆத்வியை கண்டு, நிலை இல்லாமல் தவித்து போனாள்.
"அட என்ன பொண்ணு நீ.. இந்த வயசுல தான் நல்லா சாப்பிடனும், நீ என்னடான்னா ஒரு கரண்டி சாப்பாடு கூட சாப்பிட முடியாதுனு சொல்ற.. உன் வயசுல இருக்கும் போது நாலாம் எப்டி சாப்பிடுவேன் தெரியுமா.." சிலாக்கித்து கூறிக் கொண்டிருந்தவளின் வாய், ம்க்கும்.. என்ற ஆதியின் செருமல் சத்தம் கேட்டதும், தன்னால் மூடிக்கொண்டது.
"மேடம் என்ன கதை அளந்து விட்டுட்டு இருக்கீங்க" மனைவியின் முகத்தைப் பார்த்தபடி கவி அருகில் அமர,
"அது.. கவிய சாப்பிட சொல்லிட்டு இருந்தேன்" என்றாள் தடுமாற்றமாக.
"ஓஹோ.. ஆனா நீங்க ஏதோ நல்லா சாப்பிடுவீங்க அப்டி இப்டினு சொன்ன மாதிரி கேட்டுசே.." என்றதும்,
"ஆமா அங்கிள் மேடம் என் வயசு இருக்கும் போது நல்லா சாப்பிடுவாங்கலாம், அதை தான் சொல்லிட்டு இருந்தாங்க" கவி முந்திக் கொண்டு சொல்லவும், திருத்திருவென முழித்து வைத்தாள் மித்ரா.
"ஹ்ம்.. என் வைஃப் எது சொன்னாலும் நம்பலாம் கவி, இந்த சாப்பாடு விஷயத்த தவிர.. ஏன்னா மேடம் எல்லாரையும் விழுந்து விழுந்து உபசரிக்கிற அளவுக்கு அவளை அவ கவனிச்சிக்க மாட்டா.. இன்னுமும் நான் தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவேனா பாத்துக்கோ.."
நக்கலாக சொன்ன கணவனை முறைத்த மித்ரா, "சின்ன பிள்ளகிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க, அமைதியா இருங்க" சிணுங்கலாக அவன் தோளில் வலிக்காமல் அடித்தக் கரத்தை, ஆதி அழுத்தமாக பிடித்துக் கொண்டதும் சங்கடமாகிப் போனது மித்ராக்கு.
கையை உருவ முயன்று தோற்றவளாக கவிமுன் நெளிந்து நின்ற மனைவியை, காதல் குறையாமல் ரசனையாக பார்த்த ஆதியும், அவன் பார்வையில் வெட்கம் கொண்டு சிவந்து போகும் மித்ராவையும், வாயை பிளந்து ஆச்சிரியம் குறையாமல் பார்த்திருந்தாள் கவி.
அவள் வாய் பிளந்து பார்ப்பதை கண்ட ஆத்வியோ தலையில் அடித்துக் கொண்டவனாக, "மாம்" என அழுத்தமாக அழைக்கவும், தன்னை விட்டு பதறி விலகி மகனிடம் ஓடிய மனைவியை கண்டு ஆத்திரத்தில் பற்களைக் கடித்த ஆதி,
"எனக்கு மிகப்பெரிய வில்லனே நீ தான் டா" என மனதில் நினைத்துபடி, 'இப்ப எதுக்கு என் பொண்டாட்டிய கூப்டான்' என்ற எண்ணத்துடன் அம்மாவையும் மகனையும் மாறி மாறி பார்க்க, கவியின் பார்வையும் ஆதி பார்க்கும் திசையில் தான் இருந்தது.
"என்ன ஆத்வி எதுக்கு அம்மாவ கூப்ட்ட.."
"நான் ஆபிஸ் போற வரைக்கும் உங்க மடில படுக்க தான்" என்றவன் தாயின் கை பிடித்து அமர்த்தி, அவள் மடியில் படுத்துக் கொண்டு தந்தையை நக்கலாகப் பார்க்க, மகனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான் ஆதி.
"மித்து இப்ப எனக்கு சாப்பாடு போட போறியா, இல்ல எழுந்து போகவா.." ஆதி சத்தமிட, எப்போதும் நடக்கும் செல்ல சண்டை தான் அன்றும் தொடங்கியது. ஆனால் அது செல்ல சண்டை என்று கவிக்கு தெரியாதே!
தந்தை மகன் முறைப்பே ஏதோ ஜென்ம விரோதியை பார்த்துக் கொள்வதை போல இருக்கவும், பயந்து போன கவி, "அங்கிள் நான் வேணும்னா உங்களுக்கு பரிமாறட்டுமா.." சண்டையினூடே இடைபுகுந்து தயக்கமாக கேட்கவும், கவி புறம் பார்வையை செலுத்திய ஆதி என்ன நினைத்தானோ! சரி என்று தலையசைக்க, அடுத்த நொடி சிரித்த முகமாக கவியே ஆதிக்கு உணவை பரிமாறினாள்.
இதை பார்த்த ஆத்வி மித்ரா இருவருக்குமே, "இது என்னடா அதிசயமா இருக்கு" என்று தான் தோன்றியது.
மித்ராவின் கையால் உணவுண்டு மட்டுமே ஆதிக்கு பழக்கம், எப்போதாவது மகள் கையால் உண்பான். வெளியே எங்கும் அதிகம் உண்ணும் பழக்கம் இல்லை, மித்ரா அதற்க்கு பழக விட்டதும் இல்லை. ஆனால் இன்றோ யாரென்றே தெரியாத பெண் கவி, அவனுக்கு பரிமாற ரசித்து உண்ணுகிறான். அவளிடம் அன்பாக பேசி சிரிக்கிறான், பதிலுக்கு அவள் ஏதாவது பேசினாலும் பதில் கூறி சிரிக்கிறான் முரட்டு ஆதி.
இதை எல்லாம் தாயும் மகனும் வெவ்வேறு எண்ணத்தில் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
மித்ராவோ, ஆதியின் மழலை மாறா சிரிப்பை, இந்த வயதிலும் கண்டு ரசித்துக் கொண்டிருக்க,
ஆத்வியோ, தான் அழ வைக்க வேண்டும் என்று நினைத்தவள் தன் கண் முன்னாலே வெண்பற்கள் காட்டி காட்டி சிரித்து, மகிழ்ச்சியாக இருக்கிறாளே என்ற வெறுப்போடு பார்த்தான்.
"அங்கிள் இன்னும் கொஞ்சம் சாப்பாடு" என எழப் போனவளை தடுத்து,
"எனக்கு போதும் கவி நீ சாப்டு" என்றபடி தானே அவளுக்கு பரிமாற,
"டேய் ஆத்வி.. நிஜமாவே அவர் உங்க அப்பா தானா டா.." அப்பாவியாக முகத்தை வைத்து கேட்க்கும் அன்னையை கண்டு சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு.
"ஏன் மாம் திடீர்னு இந்த டவுட் உங்களுக்கு" சிரிப்பை அடக்கியபடி கேட்டிட,
"என்கிட்ட இப்டி வாய் நிறைய சிரிச்சி பேசினதே இல்ல டா, எப்பவும் முறைப்பு தான்.. கோவம் வந்தாலும் சரி, சந்தோசமா இருந்தாலும் சரி.. ஆனா அந்த முறைப்புல இருக்க ஆழமான அன்பும் காதலும் வித்யாசமானது, அதை அவரால மட்டும் தான் உணர்த்த முடியும்.. அவர் முரட்டுக் காதலை என்னால மட்டும் தான் உணர முடியும்.."
பாவமாக தொடங்கி காதலாக முடித்த மித்ராவின் பேச்சில், தாய் தந்தையின் உன்னதமான காதலை நன்றாகவே அவனால் உணர முடிந்தது. பின்னே அவன் பிறந்தது முதலே இருவரின் காதல் அலப்பறையும் கண்டு கொண்டு தானே இருக்கிறான்.
"அங்கிள் நீங்க இந்த ஏஜ்லயும் பாக்க அப்டியே ஹீரோ கணக்கா இருக்கீங்க தெரியுமா, நீங்க ஏன் சினிமால ஹீரோவா ஆக்ட் பண்ணக் கூடாது, அதுவும் கீர்த்தி ஷெட்டி கூட" என்றதும் உண்டு கொண்டிருந்த ஆதிக்கு புரையேறி விட்டது. கணவன் இருமுவதை கண்டு மடிமேல் இருந்த மகனை உதறி தள்ளி விட்டு, ஓடோடி வந்து விட்டாள் அவன் அன்பு மனைவி.
தலையை தட்டி விட்டு கணவனுக்கு நீர் புகுட்டக் கொடுக்க, மனைவியின் அருகாமையில் வாலிபனாக மாறி ஆதி சைட் அடிக்க என்றிருக்க, அநாமத்தாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டியில்,
"வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும், ஆனாலும் அன்பு மாறாதது..
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம், பிரிவென்னும் சொல்லே அறியாதது.. அழகான மனைவி அன்பான துணைவி, அமைந்தாலே பேரின்பமே..
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே..
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி.. நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி..
சந்தோஷ சாம்ராஜ்யமே.."
பாடல் ஒளிக்கும் அந்த ஏகாந்த அழகிய தருணத்தில், மித்ரா தள்ளி விட்டு சென்ற வேகத்தில் எழுந்து அமர்ந்த ஆத்வி, கோவமாக கவியை பார்த்த நேரம், அவளின் கண்ணாடிக்குள் ஒளிந்திருக்கும் படபடக்கும் கண்களில் என்ன கண்டானோ!
அதே நேரம் சங்கடமாக திரும்பிய கவியும் ஆத்வியை பார்க்க, இருவரின் கண்களும் ஈர்ப்பு விசை சக்தி கொண்ட காந்தம் போல, அந்நிசய்யாக மோதி பச்சக்கென ஒட்டிக் கொண்டது.
ஆடவனின் கட்டி இழுக்கும் காந்தப் பார்வையில், உடலில் உள்ள மயிர்கூர்கள் யாவும் குத்திட்டு நின்று, சிலிர்த்து தடுமாறிப் போன பாவையின் கரங்களோ, அடுத்த வாய் உணவை எடுத்து வைக்க முடியாதபடிக்கு அநியாயத்துக்கும் நடுங்கிக் கொண்டு இருந்தது.
எத்தனை நேரம் அவளை கண்டானோ! ஒரு கட்டத்தில் கார்டன் பக்கம் பார்வையை செலுத்தி, "எழுந்து வாடி.." என உரிமையுள்ள கணவன் போல் கண்ஜாடை செய்ய,
ஹான்.. மிரண்டு விழித்த கவி, ம்ஹ்ம்..என அவசரமாக சைகையாலே தலையாட்டி, பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
தந்தை மகன் இருவருக்குமே அலுவலகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை போலும். ரெண்டும் ரொமான்ஸ் மூடில் மாறி, பார்வையாலே இரு பெண்களையும் சிவக்க வைத்துக் கொண்டிருக்க,
"என்ன யாருக்கு ஆபிஸ் போற எண்ணம் இல்லயா.." அஜய் தான் சத்தமாக கேட்டது. அதில் ஜோடிகள் எல்லாம் தன்னிலை அடைந்து பார்வைகளை விலக்கிக் கொண்டனர்.
தன்யாவை தூக்கிக் கொண்டு ஆபிஸ் செல்ல தயாராகி வந்த அஜய், "என்னாச்சு ஏன் எல்லாரும் ஒருமாதிரி இருக்கீங்க" என்றபடி ஆதியின் எதிரில் அமர,
"ம்ம்.. எல்லாம் இந்த கவியால வந்துச்சி தம்பி.." மித்ரா விளக்கம் சொல்லாது மொட்டையாக கூறவும், அஜய் புரியாமல் விழிக்க, விளையாட்டாக பேசியது வினையாகி விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது கவிக்கு.
"கவி என்ன பண்ணா அத்தை.."
"உங்க மாமாவ ஹீரோவா நடிக்க சொல்றா தம்பி, அதுவும் அந்த பொண்ணோட.."
"எந்த பொண்ணோட மாமா ஹீரோவா நடிக்க போறாரு.." அஜய் கன்பார்மே செய்து விட்டான் போலும், அத்தனை ஆர்வமாக கேட்கவும், அவனை முறைத்த மித்ரா,
"நடிக்க போறாருன்னா சொன்னேன், நடிக்க சொல்றானு தானே தம்பி சொன்னேன், நீங்க வேற.." முகத்தை தூக்கி வைத்து அலுத்துக் கொள்ளவும்,
"கவி நீயாச்சு சொல்லு, எந்த ஹீரோயின் கூட மாமாவ ஜோடி சேக்கப்பாத்த.." இந்த வயதிலும் மித்ராவின் விட்டுக் கொடுக்காத காதலை கண்டு உள்ளுக்குள் பூரித்துப் போனவனாக, மாமியாரை சீண்ட வேண்டி கேட்க, தன்யாவும் கூட்டு சேர்ந்து கொண்டாள், "ஐ.. தாத்தா ஹீரோவா நடிக்க போறார்" என்று.
"அதுவா அஜய் அண்ணா, புல்லட் பாட்டு பிரபலம் கீர்த்தி ஷெட்டி.."வாய் சும்மா இல்லாமல் அவசரமாக சொல்ல, மித்ராவின் பிபி ஏகத்துக்கும் எகிறியது,
மனைவியின் முகம் போனப் போக்கை கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்ட ஆதி, "இங்க பாருமா கவி, நான் ஹீரோவா ஆக்ட் பண்ணா, என்கூட ஜோடிசேர என் மனசுக்கு புடிச்ச ஒரே ஹீரோயின் மட்டும் தான் நடிக்கனும், அதுக்கு ஓகேனா எனக்கும் ஓகே.." என்றதும் மித்ராக்கு கண்ணில் நீர் முட்டியது.
"ஓஹ்.. இப்டி வேற உங்களுக்கு ஆசை இருக்கா, அப்போ அந்த மனசுக்கு பிடிச்ச ஹீரோயின் கூடவே போயி குடும்பம் நடத்த வேண்டியது தானே.. எதுக்கு என்கூட இருக்கனும்" சத்தம் வெளி கேட்காது வசவு வந்தது ஆதிக்கு.
"ஏன் அங்கிள் அப்போ உங்களுக்கு அம்பிகா ராதா போல, 80's 90's ஹீரோயின்ஸ் தான் பிடிக்குமா.."
"ச்ச.. ச்ச.. எனக்கு பிடிச்ச ஹீரோயின் எல்லாம் என் மித்துபேபி மட்டும் தான்.." யாரும் அறியாதவாரு அவளுக்கு உதடு குவித்து முத்தத்தை பறக்க விட, வெட்கத்தில் படபடத்து போனவளின் கை பற்றிய ஆதி,
"ஏன் மித்து நீயும் நானும் சேர்ந்து நடிக்கலாமா" என்றான் ஹஸ்கியாக.
"வர வர உங்க அலம்பல் தாங்கல, அமைதியா எந்திரிச்சி ஆபீஸ் போங்க.." கணவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்ட மித்ரா, அடுகளைக்கு ஓடி விட்டாள்.
நடந்த வாதத்தில் எதிலும் கலந்துக் கொள்ளா ஆத்வி, தாய் தகப்பனை கண்டு மனம் விட்டு சிரித்துக் கொண்டிருந்த கவியை தான் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
≈≈≈ ≈≈≈ ≈≈≈
யாதவின் அலுவலகத்தில்,
அவன் இருந்து அட்டன் செய்ய வேண்டிய மீட்டிங்கை, முன்நின்று நடத்த போவது யார்? என்ற யோசனையோடே மீட்டிங் ஹாலில் அனைவரும் குழுமி இருக்க.
அதே ஆவலோடு அமர்ந்திருந்த ஸ்வாதியின் அருகில், நெருங்கி அமர்ந்தான் அவள் டீம் லீட் செந்தில்.
அதுவரை இருந்த ஆவல் குறைந்து எரிச்சல் படர்ந்தது அவள் முகத்தில். அதை அவனும் நன்றாகவே உணர தான் செய்தான். இருந்தும் தள்ளி அமராமல் இருக்கையை தூக்கி அவள் மடியில் வைத்து அமராத குறையாக, செந்தில் அமர்ந்திருக்க, ஸ்வாதிக்கு அங்கு அமர்ந்திருக்க முடியாத அசோகரிய நிலை உருவாகி, மீட்டிங் தொடங்கும் முன்பே எப்போது முடியும் என்று இருந்தது.
அனைவரின் எதிர்பார்ப்புக்கு சொந்தக்காரியோ, அழகான மரூன் நிற பிளைன் சாரியில் கம்பீரம் குறையாத நிமிர் நடையோடு, அழகு ராணியாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள் ஆரு.
பழைய ஆட்களுக்கு அவளை நன்றாகவே தெரியும். தன்யா பிறப்பதற்கு முன்பெல்லாம் ஆரு தான் யாதவ்க்கு வேலைகளை கற்றுக் கொடுத்து, கம்பனியும் நன்முறைக்கு நடத்தி வந்தாள். தன்யா பிறந்து மூன்று வருடம் கழித்து தந்தையின் மற்ற கிளைகளை கையில் எடுத்து திறன்பட நடத்தியும் வருகிறாள்.
அவ்வபோது யாதவ் இல்லை என்றால் மற்ற கிளையில் இருந்தபடியே அவன் வேலையும் சேர்த்து செய்து விடுவாள். இன்று முக்கியமான மீட்டிங் உள்ளதால் கிட்டதட்ட ஐந்து வருடம் கழித்து, இந்த கம்பனிக்கு வருகை தருகிறாள். இளைஞர்கள் வாயில் ஈ.. புகுந்து காது வழியாக வெளியே வந்தது, ஆருவின் மெய்சிலிர்க்க வைக்கும் அழகை கண்டு.
"குட் மார்னிங் எவ்ரி ஒன்.." என்ற குரலில் தான் எத்தனை கம்பீரம். சிங்கத்திற்கு பிறந்தது எலியாகுமா! தோற்றத்திலும் ஆதி, நிமிர்ந்து நின்று பேசும் ஆளுமையிலும் ஆதியே!

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 24
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.