- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ்- 25
"மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்..
எந்தன் பெண்மை பூப்பூக்குதே..
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்..
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானா..
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..
என் உள் நெஞ்சு சொல்கின்றது.. பூவோடு பேசாத காற்றென்ன காற்று.. ஒரு பூஞ்சோலை கேட்கின்றது.."
மகி, எதையோ நினைத்து நாணத்தில் முகம் சிவந்தபடி பாடலை பாடிக்கொண்டே சமைத்துக் கொண்டு இருக்க, மகியின் பாடல் ஒளி சத்தம் ஹாலிலும் கேட்டது.
அங்கு ஏற்கனவே, குரு, கதிர், கார்த்தி, ரிஷி சூர்யா என ஆண்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தவர்களும் அவளின் பாட்டை கேட்டு அர்த்தமாக தலையசைத்து புன்னகைத்துக் கொண்டனர்.
அந்நேரம் ராதா ரதி பூஜா என எதையோ பேசிக்கொண்டே வந்தவர்கள் காதிலும் கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, "என்னடி மகி இம்புட்டு சத்தமா பாடிட்டு இருக்கா என்னாச்சி அவளுக்கு..?" பூஜா சந்தேகமாக கேட்டாள்.
“தெரியலயே அண்ணி, வா போய் பாப்போம்" ராதா சொல்ல, அதுவும் சரிதே வாங்க என மூவரும் கிட்சன் வாயிலில் நின்று பார்க்க,
"மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது.. முரடா உனை ரசித்தேன்.." என்று அவள் பாட,
"யாரு புள்ள அந்த முரடன்...?" வெளியே இருந்து வந்த சத்தத்தில், சட்டென பாட்டை நிறுத்திய மகி திரும்பிப் பார்த்தாள்.
மகியை நோட்டம் விட்டபடி, அவளையே குருகுருவென பார்த்துக் கொண்டு மூவரும் நின்றிருக்க, அவர்களை பார்த்து நாக்கை கடித்து திரும்பிக்கொண்டு “பாட்டுல வரும்புள்ள, அதுக்கூடவா உனக்கு தெரியாது" என்றாள் மென்று முழுங்கி.
“அது எங்களுக்கும் தெரியும், அதுக்குன்னு பாட்டுல வர முரடன நினைச்சி பாடினதுக்கா உன் முகம் இப்படி ரோசா பூ கனக்கா செவந்து கெடக்கு" பூஜா புருவம் உயர்த்தி நக்கலாக வினவ,
"அதானே..." என ரதி ராதா இருவரும் கோரஸாக குரல் கொடுத்தனர்.
"என்ன அதானே? ஒரு மனுஷியா நிம்மதியா பாட்டு கூட விட மாட்டிகிறாங்கப்பா இந்த வீட்ல...” மகி பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டு இடத்தை விட்டு ஓடி விட்டாள்.
"என்னக்கா இன்னைக்கு மகி அண்ணி ரொம்ப வித்யாசமா நடந்துக்குற மாறி இல்ல” மகி சென்ற திசையை பார்த்து ரதி சொல்ல,
"எங்க போய்ட போறா புள்ள. கத்திரிக்கா முத்தினா, நேரா கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும், அப்ப மாட்டுவா. சரி வாங்க டி போலாம்" என இருவரையும் இழுத்துக் கொண்டு சென்றாள் பூஜா.
கதிர் அவன் அறையில் விளக்கை அமர்த்தி மெத்தையில் அமர்ந்து யாருடனோ கேஸ் விடயமாக போனில் கதைத்து கொண்டு இருக்க, அந்நேரம் லேசாக திறந்து இருந்த கதவை சத்தமே இல்லாமல் திறந்து கொண்டு, பூனை நடையிட்டு ஒரு உருவம் மெல்ல நடந்து வந்து கதிரை பின்னால் இருந்து கட்டிக்கொண்டது.
அதில் கதிர் திடுக்கிட்டாலும், அவன் போலீஸ் மூளையோ திருடன் அல்லது எதிரியாக இருக்குமோ என நினைத்து, அந்த உருவத்தின் கை அவன் வயிற்றில் இருக்க, அதை வேகமாக பிடித்திழுத்து மெத்தையில் தள்ளி, இருக்கரங்களையும் மேல் பிடித்து தூக்கி, அவனின் ஒரு கரத்தில் அடக்கி, அந்த உருவத்தின் முகத்தில் ஓங்கி குத்து விட போக,
"ஐயோ மாமா..." என்ற அலறலில் நெற்றி சுருக்கி ஓங்கிய கையை கீழே இறக்கிய கதிர், அருகில் உள்ள விளக்கை எட்டி எரிய விட, கண்களை திறந்து பார்த்தாள் பைரவி.
அவளை இங்கு எதிர்ப் பார்த்திடாதவன் சட்டென அவள் மேல் இருந்து நகர்ந்து எழுந்தவன் "பைரவி இங்க எதுக்கு வந்த..?" என்றவனின் குரல் சற்று கடுமையாகவே ஒலித்தது.
அதுவரை அவனின் சிறு ஸ்பரிசத் தீண்டலை ரசித்துக் கொண்டு இருந்தவள், கதிரின் கடுமையான குரலில் பயந்து "அது வந்து மாமா நான் இந்த பக்கமா வந்தேன், உங்க கதவு திறந்து இருந்துது. அதான் உன்னை பாக்க வரலாம்னு நினைச்சி வந்தேன், நீங்க அந்த பக்கம் திரும்பி இருந்ததால சும்மா விளையாட்டுக்கு கட்டி பிடிச்சேன்" அப்பாவி போல் கண்களை உருட்டி மொழிய, அவளை நம்பாத பார்வை வீசினான்.
"இங்க பாரு பைரவி, இன்னும் நீயி சின்ன புள்ள கிடையாது முன்னாடி மாறி இங்க வர போக. இனிமே இப்படி என் அறைக்குள்ள கதவ தட்டாம, என் அனுமதி இல்லாம வரக்கூடாது புரிஞ்சிதா...” அதட்டும் தொனியில் கேட்க,
"சரி மாமா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்" பம்பிய படி சொன்னதை கேட்டு தலை அசைத்தவன், சரி போ என்ற அவனின் பார்வையில் இதுவே கடைசி எனும் விதமா எச்சரிக்கை இருக்க, அதில் முகம் வாடியவள், ஒரு முடிவோடு இடத்தை விட்டு சென்றாள் பைரவி.
மல்லாக்க படுத்துக் கண்கள் மூடி, கார்த்தியின் நினைவலையில் உழன்று கொண்டு இருந்த ராதாவின் கழுத்தில் சூடான மூச்சிக் காற்று வீச, அதில் பயந்து போய் கண்கள் திறந்து பார்க்க, யாரை இத்தனை நேரம் நினைத்து கொண்டு இருந்தாளோ அதற்கு சொந்தக்காரன் தான் அவள் அருகில் படுத்து அவளையே மூச்சுக் காற்று உரச, கண்கள் அகல பார்த்துக் கொண்டு இருந்தது.
“மாமா...” என எழுந்தவள், முகத்தை திருப்பிக் கொண்டு “நான்தே என்கிட்ட உன்னைய பேசக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனே. அப்பறம் எதுக்கு வந்த...” கோபமாக அவள் பேசும் போதே கார்த்தி, அவள் கையில் ஒரு பேப்பரை திணிக்கவும், ராதா அதை என்னவென பார்த்தாள்.
"பேச கூடாதுன்னுதே நீயி சொல்லி இருந்த ராதுமா. ஆனா உன் அறைக்கு வரக்கூடாதுன்னும், உன்னை தொடக்கூடதுன்னும் சொல்லலயே ராதுமா. உன்கிட்ட பேசாம இருக்க முடியல டி..." என வருத்தமாக எழுதி இருப்பதை கண்டு அவனை முறைந்தவளின் கண்களும் கலங்கியது.
“இனிமே எந்த தப்பும் பண்ணகூடது சரியா..?" அழுகையோடு சொன்ன ராதாவும் அவனிடம் பேசாமல் தவித்துக் கொண்டு தானே இருக்கிறாள்.
இதுக்கு நான் வாய் தொறந்து பதில் சொல்லவா இல்ல ஏழுதி காட்டனுமா, கார்த்தி சைகையில் கேட்க “ஐய ரொம்ப நல்ல பையன மாறி நடிக்காத மாமா. உன்னைய பத்தி எனக்கு தெரியாதா. வாயத் தொறந்தே சொல்லு" என்றாள் எங்கோ பார்த்து.
“ஏய், நீயி சொன்னாலும் சொல்லலானாலும் நான் நல்ல பையந்தே. அதுவும் உனக்கு தெரியாதா மயிலு” என்ற கார்த்தி அவளிடம் நெருங்க,
“ஆமா ஆமா சொன்னாங்க. தள்ளு மாமா, மொதல்ல நா கேட்டதுக்கு பதில்...” கராராகச் சொல்லி, அவனை தள்ளி விட்டாள்.
“என் மயிலு இவ்வளோ தூரம் சொன்னதுக்கு அப்புறமும், உன்னை மீறி நா தப்பு பண்ணுவேனா? ஏதோ புத்தி கெட்டு போய் அத கைல தொட்டுட்டேன். தெரியாம செஞ்சேன்னு பொய் சொல்ல விரும்பல. தெரிஞ்சி தான் டி பண்ணேன். ப்ளீஸ் ராதுமா, அதுக்காக எனக்கு எம்புட்டு வேணா தண்டன குடு. ஆனா உன்னைய நீயே காயப் படுத்திக்காத டி. அது எனக்குதே ரொம்ப வலிக்குது" இதை கூறும் போதே கார்த்தியின் கண்களும் கலங்கி விட்டது.
கூடிய விரைவில் மீண்டும் ஒரு பெருந்தவறிழைத்து, தன்னவள் எடுக்கப்போகும் விபரீத முடிவில், அவன் காலத்துக்கும் கண்ணீர் வடிக்க இது தான் முதல் படியோ?
“மாமா...” அவனை தாவி அணைத்துக் கொண்ட ராதா,
“சரி மாமா இனிமே நான் இப்படி பண்ண மாட்டேன். நீ அழாத மாமா என்னால பாக்க முடியல...” அவளும் கண்ணீர் விட, அவளை தன்னுடன் இறுக்கிக்கொண்டவன்,
“ஏய் நான் அழல டி, சும்மா கண்ணுல தூசி பட்டுடுச்சி. உன்கிட்ட ஒரு நாள் பேசலைனாலும் என்னால நிம்மதியா இருக்க முடியாதுன்னு தெரிஞ்சி, என்னைய இப்பல்லாம் ரொம்பதே அலைய விடுற டி...” கார்த்தி அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டு சொல்ல,
“சரி மாமா அதான் இனிமே அப்படி பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேனே, நீ இப்ப போ மாமா" அவன் நெருக்கத்தில் நெளிந்தாள்.
“ம்ச். நெளியாத ராதுமா. மாமாக்கு அப்புறம் எசக்கு பிசக்கா மூடு மாறிடும் சொல்லிப்புட்டேன்" குறும்புடன் கூறி கண்ணடிக்க,
“சீ! போ மாமா ரொம்ப தப்பா பேசுற. ஆமா மாமா ஒன்னு கேக்கணும். இந்த மகி அக்கா, அந்த ராசதொர கடத்திப்புட்டு திரும்ப வந்ததுலிருந்தே ஒரு மார்க்கமாவே சுத்திட்டு இருக்கே. இதைப்பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?” தாடையில் கைவைத்து அவள் யோசனைகாக கேட்டிட,
பட்டென அவள் கழுத்தில் இருந்து முகத்தை எடுத்து எழுந்தவன் “ராதுமா மாமாக்கு அர்ஜென்ட்டா ஒரு போன் பேசணும்டா, இப்பதே நியாபகம் வந்துச்சி. அதனால பொறவு வந்து மாமா உன்கிட்ட பேசுறன்... “ என்றவன் திரும்பி பார்க்காமல் ராதா அறையை காலி செய்து இருந்தான்.
போகும் அவனை விசித்திரமாக பார்த்து வைத்தாள் ராதா.
"ஏய், மீனு தனியா இங்க உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்க..." என்றபடி மகி துள்ளலாக மீனாட்சியின் அறைக்கு வர,
புத்தகத்தை புரட்டிக் கொண்டு இருந்தவர், நிமிர்ந்து பார்த்து “மகி கண்ணு வா வா...” மீனாட்சி முகம் மலர அழைத்தார்.
'இந்தா மீனு பால்' என அவள் கையில் அவருக்காக கொண்டு வந்த பாலை கொடுக்க, அதை வாங்கியவர்,
“நீ குடிச்சியா மகி...” என்றார்.
“எல்லாம் ஆச்சி மீனு, ஆமா நீயி ஏன் கீழ வராம இங்கன உள்ளவே, தனியா உக்காந்து இருக்க"
“சும்மாதே மகிமா, கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாம்னு பார்த்தேன். ஆமா இதென்ன கைல துணி எல்லாம் கொண்டு வந்து இருக்க" மகி கையில் இருந்த அவளின் உடையை கண்டு மீனாட்சி கேட்டிட,
“ஓ! இதுவா மீனு, என் அறைல உள்ள பாத்ரூம்ல தண்ணி வரல மீனு. அம்மா அறைக்கு போய் பாத்தா அங்கேயும் வரல. சரி அங்கதே வரலயேன்னு ராதா ரதி அறைக்கு போனா கதவை தாழ் போட்டு ரெண்டு பேரும் நல்லா இழுத்து போதிட்டு தூங்குறாளுங்க போல. பூஜா அறைல அண்ணே இருக்கு, அங்க போனா நாகரீகமா இருக்காதுல, அதான் இனிமே வேற யாரு அறைக்கும் போய் பாத்து பல்பு வாங்குறத விட, நேரா உன் அறைக்கே வந்திடலாம்னு. அப்படியே உனக்கு கையோட பாலையும் எடுத்துட்டு வந்துட்டேன்" என்றாள் நீண்ட விளக்கமாக.
“சரி நீ குளிச்சிட்டு வா மகி" என்ற மீனாட்சி கீழே சென்றுவிட்டார்.
அர்ஜூன் அவன் அறையில், லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டு இருக்க, அவன் போனுக்கு ஒரு அழைப்பு வரவும் அந்த எண்ணை பார்க்காமல், வேலையில் கவனம் செலுத்தியபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
"என்ன அர்ஜூன், என்னை ஒரே நாளுல ஒன்னும் இல்லாம ஆக்கிட்டோன்ற நினைப்புல ரொம்ப ஆணவத்துல இருக்கியா" அந்த பக்கம் பல்லை கடித்து உறுமுவது, அர்ஜூனுக்கு தெளிவாகவே கேட்க, போனை காதில் இருந்து எடுத்து எண்ணை ஒரு முறை பார்த்த அர்ஜூன், நக்கலாக சிரித்தான்.
"அப்படியே வச்சிக்கோயேன் ரகுவேந்தன். நல்லா யோசிச்சு பாரு நானா உன்கிட்ட போட்டி போட்டு ஒன்னும் பண்ணலயே. நீயா தானா வந்து, சும்மா இருந்தவன சொறிஞ்சி விட்டு, என்கிட்ட தலையை கொடுத்த, அதான் தலைய மட்டும் எதுக்கு தூக்கணும் மொத்தமா உன் சாம்ராஜ்யத்தையே தூக்கிடலாம்னு ஒட்டு மொத்தமா தூக்கிட்டேன்" அர்ஜூன் கூலாக சொல்ல, அந்த பக்கம் பேசிய ரகுவேந்தனுக்கு அர்ஜூனை கொல்லும் வெறி ஆனது.
ரகுவேந்தன் என்பவன், அர்ஜூன் நடத்தி வரும் ஹோட்டல்களுக்கு போட்டியாக இருக்கும் "ப்ளசென்ட் ஆப் ஹோட்டல்..." என பெயர் போன ஹோட்டல்கனின் எம். டி ஆவான்.
தொழில் வட்டாரத்தில் அர்ஜூனின் அசுர வளர்ச்சி பிடிக்காத ரகுவேந்தன், அர்ஜூனை மொத்தமாக கவிழ்க்க நேரம் பார்த்து காத்திருந்தான். அர்ஜூன் பெங்களூரில் இருந்தவரை, ரகுவால் பல சதி வேலைகள் செய்தும் அர்ஜூனை சிறிதும் அசைத்துப் பார்க்க கூட முடியாமல், அவன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவ. மேலும் வெறியாகி நேரம் பார்த்து காத்திருந்தான்.
அர்ஜூனும், ரகு தனக்கெதிராக பல சதி வேலைகள் செய்வது தெரிந்தாலும் கண்டும் காணமல், ரகுவுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கி கொண்டு வந்தவன், சரியாக அவன் பெங்களூரில் இல்லை எனவும் குறிஞ்சிப்பட்டிக்கு வந்திருக்கும் விஷயம் ரகுக்கு சென்றடைய இது தான் சரியான நேரம் அர்ஜூனை வீழ்த்த என நினைத்து,
அர்ஜூன் நடத்தி வரும் "சக்கரவர்த்தி புளுமிங் பெட் அண்ட் பிரேக்பாஸ்ட்" ஹோட்டலில், அந்நேரம் வளந்து வரும் ஒரு சிறிய நடிகை சூட்டிங்க்காக அங்கு ரூம் எடுத்து தங்கி இருக்க, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரகு, நரியாக திட்டம் தீட்டி யாருக்கும் சந்தேகம் வராத வகையில், ஆள் செட்டப் எல்லாம் பலமாக தயார் செய்து, அந்த நடிகை இருக்கும் ரூமுக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்ய வைத்திருந்தான்.
இதை அந்த பக்கமாக, கூல்ட்ரிங்ஸ் எடுத்து வந்த அந்த ஹோட்டலின் ஊழியன் சத்தம் கேட்கவே கதவின் சந்து வழியாக அனைத்தையும் பார்த்து விட்டார்.
கொலை செய்தவனும் அங்கு யாரும் இல்லை என்ற மிதப்பில், ரகுவுக்கு அங்கேயே போன் செய்து டீல் பேசத் துவங்கினான். அப்போது அவன் "ரகுவேந்தன் சார்..." என குறிப்பிட்டதை உள்வாங்கிய அந்த ஊழியன் உடனே அர்ஜூனுக்கு அழைத்து அனைத்தையும் கூற, உடனடியாக என்ன செய்யலாம் என யோசித்தவனுக்கு சிக்கியது ஆதாரம்.
தொடரும்.