- Messages
- 276
- Reaction score
- 236
- Points
- 43
இதழ்- 26
அர்ஜூனை தொழிலில் இருந்து மொத்தமாக சரிக்கவே ரகு, அர்ஜூன் ஹோட்டலில் தங்கி இருந்த நடிகையை கொலை செய்து, அர்ஜூனை சர்ச்சையில் சிக்க வைத்து அவன் பெயரையும் அவனின் ஹோட்டலின் பெயரையும் கெடுக்க திட்டம் தீட்டி, இப்படி ஒரு செயலை செய்து, அவனே அவன் அழிவுக்கு வழி வகுத்துக் கொண்டான்.
அர்ஜூன் இது போன்று ஏதாவது தன் எதிரிகளால் நடக்கும் என யூகமாக தெரிந்தே, முன்கூட்டியே அங்கிருக்கும் முக்கிய அறைகளில் ஹாலில் மட்டும் சிறிய மைக்குகளை செட் செய்து வைத்திருந்தான். அப்படி செய்வது ஹோட்டலுக்கு நம்பி வரும் வடிக்கையாளருக்கும் சட்டத்திற்கும் புரம்பான செயல் என்றாலும் கூட, அர்ஜூன் இதுவரை மற்றவர்களின் அந்தரங்கத்தை ஒட்டு கேட்கும் கேடு கெட்ட எண்ணத்தில் எல்லாம் அப்படி செய்யவில்லை.
இப்படி ஏதாவது கொலைக் கொள்ளை நிகழ நேரிட்டால். அந்நேரத்தை குறிப்பிட்டு அப்போது கொலைக் கொள்ளைவாதிகளின் நோக்கத்தை கண்டு பிடிக்கவே இப்படி யாருக்கும் தெரியாமல், அவன் மட்டுமே கேட்கும் விதமாக இம்மாதிரி செய்து வைத்து இருக்கிறான்.
இது ஒருவகையில் சுயநலமாக, அவன் எதிலும் மாட்டிக் கொள்ளாமல், எதிரிகளின் சதித் திட்டத்தில் இருந்து எளிதாக தப்பிக்க நேர்ந்தாலும், கொலையாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்து, பாதிக்க பட்டவர்களுக்கு ஒரு நியாயம் வரும் வரை விடாமல் துணை நிற்பான்.
உடனடியாக அங்கு அந்த ஊழியன் குறிப்பிட்ட நேரத்தில் இருந்த ரெகார்ட்டை கேட்டவன், தன் போலீஸ் நண்பனுக்கு போன் செய்து அனைத்தும் கூறி, என் பெயரும் என் ரெசார்ட் பெயரும் வெளி வரக்கூடாது என கட்டளையிட்டு, அந்த ரெகார்ட்டை அனுப்பி வைத்தவன். அர்ஜூனை கவிழ்த்து விட்டோம் என்ற மிதப்பில், உல்லாசமாக குடி கேலிக்கையில் இருந்த ரகுக்கு பெரிய ஆப்பை அப்போதே வைத்தான்.
பணத்துக்கு வேலை செய்யும் அழகான பெண்ணை அவனிடம் அனுப்பிய அர்ஜூன், இன்னும் பல திட்டங்களை தீட்டி அமைதிகாத்தான்.
அந்த பெண்ணை பார்த்ததும் போதையில் இருந்தவன், அப்படியே அறைக்குள் கூட்டி சென்று தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி அவளுடன் ஒன்றாக இணைந்து உச்சம் பெற்ற அடுத்த நொடி, கதவை திறந்து கொண்டு போலீஸ் வர, அதை எதிர்பாராதவன், காச்மூச்சென கத்த ஆரம்பிக்கும் போதே, அந்த பெண் ஒரு மூளையில் தலையில் அடித்துக் கொண்டு 'என்னை இவன் கெடுத்துட்டான்' என கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, அதை கேட்டு ஒன்றும் புரியாமல் ரகு குழம்பி போயனான்.
அதே நேரம் அவன் ஹோட்டலில் வேலை பார்க்கும் சில பெண்களும் வந்தனர்.
“சார் இங்க இவனுக்கு கீழ வேலை பாக்குறோம்னு, ஏழை பொண்ணுங்க தானேன்னு இலக்காரமா நினைச்சி, பல தடவை எங்கக்கிட்டலாம் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்காரு.
இதோ நிக்கிறாளே.” என ஆறு மாதம் நிரம்பிய ஒரு அப்பாவிப் பெண்ணை முன்னால் நிறுத்தி, “இவள வலுக்கட்டாயமா கெடுத்து குழந்தையும் கொடுத்துட்டு இவள ஏமாத்திட்டாரு சார்" அனைத்து பெண்களும் கோரசாக அவன் உண்மை முகத்திரையை விளக்கி வெளிச்சம் போட்டு காட்டினார்.
அந்த பெண்ணும் அழுகையுடன் எல்லாம் சொல்ல, உடனடியாக கண்ணால் பார்த்த சாட்சியாக பணத்துக்கு வந்து அழுது நடிக்கும் பெண்ணும், மற்ற பெண்களின் வாக்கு மூலமும், முக்கிய சாட்சியாக அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் கரு என ரகுக்கு எதிராக பல சாட்சி மற்றும் அந்த கொலையாளியும் ரகுவும் உரையாடிய ஆடியோ ரெகார்ட் என அவனுக்கு எதிராகவே அனைத்து சாட்சிகளும் போலீசார் கையில் கிடைக்க, அவனுக்கு பேச வாய்ப்பே அளிக்காமல், அர்ரெஸ்ட் செய்து கூட்டி சென்று, கோர்ட்டில் நிறுத்தினர்.
பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லாத ஹோட்டலை நடத்தக்கூடாது என கோர்ட்டும் ஆர்டர் கொடுத்து மூட சொல்லியும், ரகுவால் பெண்களுக்கு செய்த கொடுமையும், கொலை குத்தமும் என பல வழக்குகள் போட்டு, சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.
நான்கு ஐந்து நாட்கள் சிறையில் இருந்தவன், அவன் பண பலத்தை காட்டி பல வேலைகளை பார்த்து வெளியே வந்து விட்டான், அர்ஜூனை பழி வாங்கும் வெறியோடு. ஆனால் அவனால் என்ன செய்தும் மூடிய ஹோட்டலை மறுபடியும் திறக்க முடியாமல் போனது.
ரகு எப்போது அர்ஜூன் வழியில் குறுக்கிட்டனோ, அப்போதே அவனை பற்றிய முழு தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தான். சரியான நேரம் பார்த்து அது இந்த நடிகையின் கொலை வழக்கில் உதவியாக இருந்தது. இறந்து போன அந்த நடிகையின் குடும்பத்துக்கு, அர்ஜூன் அவனால் முடிந்த உதவியை செய்து நேரில் சென்றும் ஆறுதல் கூறி வந்து விட்டான்.
இப்போது,
“அர்ஜூன் நீ ஜெயிச்சுட்டேன்னு ரொம்ப ஆடாத. உன்னை நான் சும்மா விட மாட்டேன்” என்று ரகு போனில் கத்த,
“ம்ச்..” என சலித்து, “திருந்த மாட்டியா டா நீ? உனக்கு தான் எந்த வேலையும் இல்லன்னு வீனா எனக்கு போன் போட்டு கத்துற. பட் நான் அப்படி இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு. உன்கிட்ட வெட்டியா பேச எனக்கு நேரம் இல்ல..” என்றவன் அலட்சியமாக அழைப்பை துண்டித்து விட்டான்.
அந்த பக்கமோ, அர்ஜூனை கொல்லும் வெறியில், இனி கிடைக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என உக்கிரமாக காத்திருக்கிறான் ரகுவேந்தன்.
வேலைகளை முடித்த அர்ஜூன், மீனாட்சியிடம் பேசி வெகுநாள் ஆவதை போல் உணரவும், ஏனோ இப்போதே தாயை காண வேண்டும் போல் தோன்றியது போலும்.
சரி அவர் அறைக்கு சென்று பார்க்கலாம் என நினைத்து, லேப்டாப்பை மூடி வைத்தவன், சோம்பல் முறித்துக்கொண்டே அவன் அறையில் இருந்து வெளியேறி மீனாட்சியின் அறைக்கு எப்போதும் போல் அனுமதி வாங்காமல் வந்து தாயை தேடினான்.
மகி கொடுத்த பாலை குடித்துவிட்டு, தம்பளரை கீழே வைக்க செல்லவும், அங்கே அவரின் கோஷ்டிகள் அமர்ந்து கதைத்து கொண்டு இருக்க, இவரையும் சேர்த்தே அமரவைத்து கொண்டனர். மீனாட்சியும் அதில் ஐக்கிமாகிவிட, மகி அவர் அறையில் இருப்பதை மறந்து போனார்.
அவர் அறையில் இல்லாததில், சரி பிறகு வந்து பாத்துக்கலாம் என நினைத்து வாசல் வரை வந்தவன் கால்கள், அப்போது கேட்ட சத்தத்தில் அப்படியே நின்றது.
“மீனு.. மீனு.. சீக்கிரம் இங்க வாயேன்..” என்ற மகியின் அலறல் சத்தம் தான் அது.
“இது ஏஞ்சல் குரல் மாறி இருக்கு. அதுவும் பாத்ரூம்ல இருந்து. என்னவா இருக்கும்..” அர்ஜூன் நினைத்துக் கொண்டு இருக்க,
“மீனு சீக்கிரம் வா..” மீண்டும் அவள் கத்துவதில், அர்ஜூன் பதறி, வேக எட்டுக்களில் தாழிடாத குளியல் அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்க, அதிர்ந்து போனான் ஆடவன்.
கதவு திறந்த ஓசையில், மீனாட்சி தான் வந்துள்ளார் என நினைத்த மகி “மீனு இங்க தானே இருந்த, எம்புட்டு நேரமா உன்னைய கூப்பிடுறேன். என்ன பண்ணிட்டு இருந்த..” என்றவள்,
“சரி சரி மொத என்னைய தூக்கி விடு..”
கண்களை மூடியபடி, ஒரு கையால் மூடிய கண்ணை கசக்கிக் கொண்டே, பாவமாக கை நீட்டியவளை இவ்வளவு கிட்டத்தில் பார்த்து மூர்ச்சையாகி நின்றான் அர்ஜுன்.
அதுவும், வெறும் உள் பாவாடையை மட்டும் நெஞ்சி வரை கட்டிக் கொண்டும், தலையில் இருந்து ஈரம் சொட்ட மொத்தமாக நனைந்து. கழுத்து, கை, என ஆங்காங்கே சோப்பு நுரை அவள் நிரத்துக்கு போட்டியாக ஓட்டி மொத்த அழகையும் காட்டியது.
அவளின் வழுவழுப்பான கெண்டை கால்களோ, பாவாடை சற்று மேலேரி மினுமினுவென மின்ன அதை எல்லாம் கண்ட ஆடவன் கண்களும் சேர்த்தே மின்னியது.
"ஐயோ.. மீனு இன்னும் என்னதே பண்ற தூக்கு மீனு. புரியிது நீயி என்ன நினைக்கிறேன்னு. நானா ஒன்னும் வேணும்னு விழல மீனு, முகத்துல சோப்பு போட்டுட்டே பாட்டு பாடிக்கிட்டு ஒரு சுத்து சுத்தினேன் பாரு. கீழ இருந்த நுரைல தெரியாம கால வச்சி வழிக்கி விட்டு விழுந்துட்டன்.
அப்படியே சோப்பு கண்ணுக்குள்ளவும் போயிடுச்சி, கண்ண வேற தொறக்க முடியல. விழுந்ததுல இடுப்பும் பிடிச்சிக்கிச்சி. எழவும் முடியல.." மகி பாவமாக சொல்லும் போதே
"ஐயோ அம்மா.." அவள் இடையில் கை வைத்துக் கொண்டு வலியில் கத்த, அதை கேட்ட அர்ஜூனுக்கு சிரிப்பு வந்தாலும், அவளின் சிறுசிறு செய்கையும் ரசித்தபடி இருந்தவன் அவளின் வலியை உணர்ந்து ஷவரை திறக்க, அதில் இருந்து மழையென வந்த ஜில்லென்ற தண்ணீர், நேராக மகி மீது கொட்டியது.
அதில் பயந்தவள் “மீனு என்ன பண்ற..?” என கத்தவும், மகி அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளை நிதானமாக பார்த்தபடி மெதுவாக அவன் கரம் கொண்டு அவள் பளிங்கு கழுத்தில் இருந்த நுரையை தொட்டுத் தடவி மேலிருந்து கொட்டும் நீரில் கழுவ, அவளின் மென்மையான சங்கு கழுத்தில் அவன் கரம் முழுதாக உரிமையாக ஊர்வளம் வந்தது.
அதில் ஆணவன் இதயம் தாருமாராக தடம் புரள “ஐயோ கொல்றாளே ராட்சசி..” அவஸ்தையாக நினைத்துக் கொண்டே அவன் வேலையை தொடர,
“மீனு நான் முன்னவே குளிச்சிட்டேன். நீ இன்னும் என்னைய சின்ன பொண்ணாவே நினைச்சி குளிக்க வைக்கிற பாரு..” இமைமூடி இருந்த மகி தன் முத்து பற்களை காட்டி சிரித்துக் கொண்டே சொன்ன அழகில் சொக்கி போனவன், எச்சில் விழுங்கி அவளை பார்த்தபடியே முதுகில் உள்ள நுரையை மெதுவாக தடவிக் கழுவினான்.
“நானும் வளந்துட்டேன் மீனு, இப்ப கல்யாணம் பண்ணி வச்சாக் கூட, பத்து புள்ளைய கூட அசராம பெத்து போடு வேனாக்கும்.." என்றபடி தானாக சிரித்துக்கொண்டவளைக் கண்டு எங்கெங்கோ வியர்த்துப் போனது அவனுக்கு.
‘அடிப்பாவி, மனுஷன் இருக்குற நில புரியாம இவ வேற, பிள்ளை வரைக்கும் போறாளே..’ மனதில் நொந்தவனாய்,
‘கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருடி. இல்லன்னா ஏடாகூடமா எதாவது பண்ணி அடுத்த பத்து மாசத்துல உண்மையாவே புள்ள வந்துட போது.." தனக்குள் பேசிக்கொண்டு, அவளின் பொன்கரத்தை தோளில் இருந்து கை வரை வழுக்கி விளையாடி தடவி விட்டு கழுவ, ஆணவன் மனமும் அதனுடன் சேர்ந்தே வழுக்கியது.
பின் முகத்தை இருக் கரத்தாலும் தொட்டு கழுவுகிறேன் என்ற பெயரில், அவளின் கன்னத்தை விரல் கொண்டு தடவி அதன் மென்மையை கண்டு அசந்தவன், பின் அவளின் குட்டி மூக்கை தொட்டு “பாம்.. பாம்..” என அழுத்தி பார்த்து விளையாடி மகிழ்ந்து,
அப்படியே கீழிறங்கி அவளின் பிளந்து இருந்த ரோஜா பூ போல் சிவந்து அழகாக வரிவரியாக இருந்த இதழில், விரலால் வருடி, கீழ் உதட்டை பிடித்து இரு விரல் கொண்டு இழுத்தவனின் மனம் மொத்தமாக தடுமாறி அவளின் குட்டி செவ்விதழின் பட்டு போன்ற மென்மையில் தன்னை மொத்தமாக தொலைத்தான்.
நிலை தடுமாறி போனவனின் முகம் எல்லாம் ஒரு வித பயத்தில் வியர்த்து ஊற்ற, கண்கள்முடி அவளின் இதழின் அருகில் குனிந்தவன் மனதில் சூழலுக்கு ஏற்ப பாடலும் இசைத்து போனது.
"'நான் இன்று தடுமாறினேன்..
நிழல் தொட வேர்த்து உயிர் கொண்ட சிலையாகுறேன்..
So baby don't break break my break break my heart..
இதுவரை பார்த்த பெண்ணில்..
உனை போல எனை யாருமே..
அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டு தர வில்லையே..""
அவளின் இதழ் அருகில் மெல்ல தலை சாய்த்து அவன் இதழை கொண்டு மென்மையிலும் மென்மையாக ஆடவனின் முரட்டு இதழால் உரசியதும், அவளின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. ஆடவனின் இதழ் தந்த ஸ்பரிசத்தில் கண்களை பட்டென திறந்து பார்த்த மகி, அவன் செய்து கொண்டு இருக்கும் வேலையில் அதிர்ச்சியாகி போனாள்.
அதுவரையிலும் மீனாட்சி தான் என நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு, அர்ஜூன் அவன் கரம் கொண்டு அவளின் கன்னம் தீண்டியதில், ஏதோ ஒன்று அவளுள் மாற்றம் நிகழ்ந்தாலும், குளியல் அறைக்கு யார் வரப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டவளின் மனம் மட்டும் ஏதோ சரி இல்லை என்று அடித்து கூறியது.
சரி எப்படியாவது கண்களை திறந்துவிடலாம் என களேபரமாக மனம். அடித்து முயற்சிக்கும் போதே, அதற்குள் அவன் அவளின் இதழையும் அவன் இதழால் தீண்டி விட்டிருந்தான்.
பட்டென அவனை தள்ளியவளின் கண்கள் எரிந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் கைகளை மார்புக்கு குறுக்காக மறைத்துக் கொண்டு திருப்பிய மகிக்கு, கோவம் வருவதற்கு பதில் அவள் முகம் நாணம் கொண்டு ரத்தசிவப்பாக சிவந்து போனது.
தொடரும்.