• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
276
Reaction score
236
Points
43
இதழ்- 27

அர்ஜூனை தள்ளி விட்ட மகி, அர்ஜூன் மேல் கோவம் கொள்ள முடியாமல், ஆடவன் தந்த மெல்லிய இதழ் தீண்டலில் மேனி சிலிர்த்து, அவள் முகத்தில் படர்ந்த வெட்கத்தை மறைக்க முடியாமல் தவித்துப் போனாள்.

மகி தள்ளி விட்டதும் தான், அவன் இத்தனை நேரமும் என்ன செய்தான் என தெரியவர, தலை கோதிக் கொண்டவன் புன்னகைத்தவாறே அவளின் பின்னால் நெருங்கி நின்றான்.

ஆடவன் அவளிடம் நெருங்கி வருவது மகிக்கு முதுகுத்தண்டு சில்லிட்டு, மூச்சு முட்ட வைத்தது.

"நீ.. நீய இ..இங்க என்ன பண்றீய? நான் அ..அத்தைய தானே கூப்பிட்டேன். நீய மொத வெளிய போங்க.." கோவமாக பேச வேண்டியதை, தட்டுத் தடுமாறி குரலே வராமல் காற்றாக வெளிவந்தது வார்த்தைகள்.

"ஓ! நீ உங்க அத்தைய தான் கூப்பிடியா. நான் கூட அத்தான்னு என்னை கூப்பிட்டன்னு நினைச்சில்ல ஆசையா ஓடி வந்தேன்.." என்ற அர்ஜூன் வேண்டுமென்றே ஆச்சிரியம் கொள்வதை போல் அவளை சீண்ட,

"ஆமா ரொம்பத்தே ஆசை. மொத நீய வெளிய போங்க.." இம்முறை கொஞ்சம் கடுமையாக அவளிடம் இருந்து வார்த்தைகள் வந்தது.

"ஓ! அப்ப நான் போகணும் அப்படி தானே ஏஞ்சல்..” என்றவன் அவளின் முதுகின் பின்னால் அவன் உடல் உரசும்படி நெருங்கி நிற்க, அதில் வேக மூச்சிகளை வெளி விடுத்தவள், பதில் சொல்ல வார்த்தை வராமல் “ஆம்..” என மெல்ல தலையாட்டி வைத்தாள்.

"அப்ப சரி நான் போறேன்.." என்றவன் மகியை அப்படியே ஈறம் சொட்ட சொட்ட கையில் ஏந்தி இருந்தான்.

அதில் திடுக்கிட்டவள் "என்ன பண்றீய அத்தான். என்னைய இறக்கி விடுங்க. யாராச்சி பாத்தா என்ன ஆகும்.." என்றவளுக்கு, அவன் கையில் தான் இருக்கும் நிலையை எண்ணி உடல் கூசிப் போனது.

"பாத்தா என்ன ஆகும் ஏஞ்சல், சீக்கிரம் அவங்களே நமக்கு ஊரரிய கல்யாணம் பண்ணி வைப்பாங்க. சோ நமக்கும் வேலை ஈஸியா முடிஞ்சிடும்.." அர்ஜூன் கூலாக சொல்லவும், அதுவரை இருந்த கூச்சம் வெட்கம் எல்லாம் காணாமல் போனது அவளிடத்தில்.

"இங்க பாருங்க நான்தே முன்னவே தெளிவா சொல்லிட்டேனே. காதல் கல்யாணம் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு. பொறவு ஏன் நீய திரும்ப திருப்ப இதையே பேசிட்டு இருக்கீய. உங்களுக்கு ஏத்த மாறி ஒரு பொண்ண பாத்து கட்டிக்கிட்டு சந்தோசமா இருங்க. என்னை விட்ருங்க.." என்றாள் கோவம் கொப்பளிக்க .

அவள் பேசியதை கேட்டு, கையில் இருந்தவளை குனிந்து பார்த்து நக்கலாக சிரித்த அர்ஜூன் எதுவும் பேசாமல், மெத்தையில் கிடத்தி அவள் மார்புக்கு குருக்காக கட்டி இருந்த பாவாடையை கழட்டப் போக, அதில் பதறி பயந்து போனவள், நன்றாக கைகளை மார்புக்கு குருக்காக மறைத்துக் கொண்டு “எ.. என்ன ப... பண்றீய..” மிரண்டு போய் கேட்டவளை ரசனையாக பார்த்தான்

"உன் இடுப்பு புடிச்சிருக்கு ஏஞ்சல்...” ஆழ்ந்த குரலில் இரு அர்த்தங்களில் அர்ஜூன் சொல்ல,

“ஹாங்!” மகி திருதிருவென முழிப்பதை கண்டு உதட்டுக்குள் சிரித்தவன்,

"இல்ல, உன் இடுப்பு பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததுல புடிச்சி இருக்குன்னு சொன்னேன். நீ என்ன நினைச்ச..?" அவளின் ஒவ்வொரு அசைவையும் நுனுக்கமாக கூர்ந்து, தாடையை கையால் நீவியவாரு குறும்பாக பார்த்தான்.

அதில் உள்ளுக்குள் வெட்கம் பூத்தாலும் "ந்.நான் ஒன்னு நினைக்கலியே. நீயதே ஏதோ தப்பா சொல்லிட்டு இப்ப சமாளிக்கிறீய.." வார்த்தை தடுமாறி சொன்னவள்,

"சரி சரி, நீய வெளிய போங்க. இனிமே என்னைய நானே பாத்துக்குவேன்.." என்றவளுக்கு இவ்வளவு நேரம் இடுப்பு வலியை வெளிக்காட்டாது சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தாலும். அவ்வப்போது அவள் முகம் வலியில் சுனங்குவதை அர்ஜூன் கண்டு கொண்டு தான் இருந்தான்.

அவளிடம் நெருங்கிய அர்ஜூன், ஒரு போர்வையை எடுத்து அவள் கழுத்து வரை போர்த்தி விட, அவன் என்ன செய்ய போகிறான் என்று புரியாமல், இதயம் திக்.. திக்.. என அடித்துக்கொண்டு பார்த்த மகி மொத்தமாக அதிர்ந்து போனாள். அடுத்து அவன் செய்த செயலில்.
*******

உறக்கம் கலைந்த ரதி, எழுந்து சென்று தோட்டத்தில் எதையோ வெறித்தவாரு கண்கள் கலங்கி அமர்ந்து இருக்க, அவளுக்காகவே எதிர்ப்பார்த்து காத்திருந்தவன் போல், அவள் அருகில் வந்து நின்றான் ரிஷி.

அவன் திடீரென தன்முன்பு வந்து நின்றதும் ஒரு நிமிடம் பயந்த ரதி, பின் ரிஷி தான் என்றதும் நிம்மதி அடைந்தவள் கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டு, அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.

"இங்க தனியா உக்காந்து அப்படி என்ன பாத்துட்டு இருக்க ரதி.." கை கட்டி நின்று ரதியை ஆழ்ந்து நோக்கினான் ரிஷி.

“சும்மா பொழுது போல அதே இங்கன உக்காந்து இருக்கேன்..” ரதி அவன் முகம் பாராது எங்கோ பார்த்து சொல்ல,

“ஹ்ம்! இன்னும் எத்தனை நாள் இதே மாதிரி உனக்கு பொழுது போகாம இங்க வந்து தனியா உக்காந்து யாருக்கும் தெரியாம அழுவ?” என்று புருவம் உயர்த்தி ரிஷி கேட்டதல், விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள் ரதி

“நா.. நான் எ.. ஏன் தனியா உக்காந்து அழப்போறன்.." என்றாள் திணறலாக.

“ஹ்ம்! நீ இப்படிதான் சொல்லுவேன்னு தெரிஞ்சே உன்கிட்ட நான் கேட்டது, என் தப்புதான் இந்தா புடி..” என ஒரு போனை அவள் கையில் திணிக்கவும், புரியாமல் விழித்து,

“எதுக்கு எனக்கு போன் என்கிட்ட ஏற்கனவே இருக்கு. இதை நீங்களே வச்சிக்கோங்க..” என்றவளை முறைத்து வைத்தான் ரிஷி.

“ஹலோ மேடம், என்ன நக்கல் பண்றியா. மொதல்ல அதை ஓபன் பண்ணி கேளரிக்குள்ள போய் பாரு” ரிஷி முகத்தை திருப்பிக் கொண்டு சொல்ல, ஏற்கனவே மன வேதனையில் உள்ள ரதிக்கு, ரிஷியின் இந்த செயல் சற்று எரிச்சல் மூட்டியது.

அவன் கையிலே மீண்டும் அந்த போனை திணித்தவளாக,
"இத பாருங்க இது எங்க வீடு நான் எங்க வேணும்னா தனியா உக்காருவேன். இல்ல கூட்டமா உக்காருவேன். அத நீய ஒன்னும் என்னய கேக்கணும்னு எந்த அவசியமும், உரிமையும் இல்ல. சொல்லிக்கிற மாறி சொந்தமு இல்ல.

அதனால இனிமே இப்படி தனியா இருக்க என்கிட்ட வந்து பேசி, இந்த போன் அது இதுன்னு குடுக்குற சாக்குல தொட்டு பேசுற வேலையெல்லாம் வச்சிக்காதீய. அப்புறம் நல்லாயிருக்காது சொல்லிட்டன்..” அவனிடம் கோவமாக பேசி, ரிஷி எதற்காக அப்படி செய்தான் என சிறிதும் சிந்திக்க தோன்றாமல் அவனை திரும்பியும் பாராமல் சென்று விட்டாள்.

தன்னை இப்படி தரைக்குறைவாக பேசிவிட்டு போகும் ரதியை, உணர்ச்சி துடைத்த முகத்துடன் வேதனையாக பார்த்து கொண்டு இருந்தான் ரிஷி.

காயு அவள் அன்னைக்கு வேண்டியதை எல்லாம் செய்து முடித்து, அவள் அறையில் அமர்ந்து ஒரு வெள்ளை நோட்டில் ஸ்ரீராமஜெயம் ஆயிரத்தி எட்டு முறை வேண்டி அதில் எழுதிக்கொண்டு இருக்க, அந்நேரம் அன்று போல் இன்றும், கதிர் சாளரம் வழியாக திருடன் போல் எகிறி குதித்து வர, அதில் மீண்டும் ஒருமுறை பயந்து போன காயு “என்ன மாமா இது சும்மா சும்மா இப்படிதே சன்னல் வழியா வந்து பயம்புடுத்துவியா? வாச கதவு வழியாதே வந்தா என்னவாம்..” காயு முறைப்பாக கேட்க,

“ம்ச்.. போ லட்டு, உன்னைய பாக்க ஆசையா செரமப்பட்டு சுவரேறி குதிச்சி வந்தா, என்னையவே சாடுற பாத்தியா. போ, நான் வந்த வழிய பாத்துட்டு போறன்" கோவித்துக் கொண்டு திரும்பியவனை, பின்னால் இருந்து அணைத்து கொண்டாள்.

“போவாத மாமா. சும்மா ஒரு பேச்சிக்கு சொன்னா கோவிக்கிற பாத்தியா. எனக்கு மட்டும் உன்னைய பாக்க ஆச இல்லாமலா இருக்கு..”உள்ளடங்கிய குரலில் குளிர்ச்சி ஊட்டினாள் அவனை.

அவள் கை பிடித்து இழுத்து முன்னால் கொண்டு வந்தவன். அவள் கன்னங்களை இரு கைகளாலும் தாங்கி “என் லட்டு பொண்ண பத்தி எனக்கு தெரியாதாடி. ஆமா நா வரும் போது எதையோ எழுதிட்டு இருந்தியே, என்ன லட்டு எழுதின..?"
என்றவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்ட காயு "இந்த முறை நம்ம கல்யாணம், எந்த ஒரு தடங்களும் இல்லாம கண்டிப்பா நடக்கும்ல மாமா..”

கவலையாக கேட்டவளை தானும் அவளை அணைத்துக் கொண்டவன், “என்னாச்சு லட்டு இன்னும் மூணு நாளுல கல்யாணத்த வச்சிக்கிட்டு, இப்ப போய் ஏன் இப்படி கேக்குற. ஏன் டி உன் மாமன்மேல உனக்கு நம்பிக்க இல்லையா..?" என்றான் ஆழ்ந்த பார்வையோடு.

“என்ன மாமா நீயி உன்மேல போயி நா நம்பிக்க இல்லாம கேப்பனா. என்னன்னு தெரியில மாமா, இத்தன நாளு இல்லாம, நம்ம கல்யாண நாள் கிட்டக்க நெருங்க நெருங்க ஏதோ என் மனசுக்கு தப்பா படுற மாறி இருக்கு மாமா. அது என்னன்னு சரியா எனக்கு சொல்ல தெரியல..”

கலங்கியவாரு சொன்ன காயுவின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் “இத பாரு புள்ள, சும்மா இந்த குட்டி இதயத்துக்குள்ள கண்டதையும் போட்டு குழப்பிக்காம கல்யாணப் பொண்ணா லட்சணமா, மாமனப் பாக்கும் போது வெக்கப்பட்டு சிரிச்சிட்டு இருக்கனும் புரியிதா. என்ன நடந்தாலும் நீயி மட்டும்தே புள்ள என் பொஞ்சாதி. அதை என்னைக்கும் மறந்துடாத..” என்றவன்,

“ஆமா என்ன எழுதினேன்னு கேட்டா நீயி என்ன லட்டு பேச்சயே மாத்திப்புட்ட" கதிர் பேசியதை கேட்டு சற்று தெளிவு பெற்றவளாக,

“அது ஒன்னு இல்ல மாமா நம்ம கல்யாணம் நல்ல படியா நடக்கனுன்னு, ஆஞ்சநேயர்கு வேண்டிக்கிட்டு ஸ்ரீராமஜெயம் எழுதினேன்" என்றிட ,

“ஏன் டி, அவரே கல்யாணமும் வேணாம் ஒரு குட்டியும் வேணாம்னு கட்ட பிரம்மச்சாரியா போயிட்டாரு. நீயி என்னடான்னா அவர்கிட்டயே கல்யாணம் நடக்குனும்னு வேண்டிக்கிற பாத்தியா. உன்னை என்ன டி பண்றது..” கதிர் சிறு முறைப்பாக சொன்னதை கேட்டு அவன் வாய் பொத்திய காயு,

“மாமா சாமி விசயத்தில இதுமாதிரி அபசகுனமா பேசக்கூடாது. நீயி இப்படி உக்காரு, நா போயி உனக்கு சாப்பாடு கொண்டாரேன்.." என நகரப் போனவளை இடை வளைத்து இழுத்து கட்டிலில் சரித்து, அவள் மேல் மொத்தமாக படர்ந்து முகம் பார்க்க,
நெஞ்சுக்கூடு ஏறி இறங்க, அவனுக்கு அடியில் கோழி குஞ்சாக சிக்கிக் கொண்டு, மிரண்ட விழிகளால் அவனை கண்டாள்.

"லட்டு இன்னும் மூணு நாள் டி. அதுவரைக்கும் தாங்குற மாதிரி ஒன்னு கனமா வேணும்..” கதிர் அவளிடம் நெருங்கி குழைய,
“மாமா உன் பார்வையே சரி இல்ல. நீயி இப்ப போ..” வெட்கத்தில் நெளிந்தாள் காயு .

"லட்டு நெளியாத புள்ள. மாமனுக்கு கன்னா பின்னான்னு உடம்புல ஷாக்கடிச்சி, அப்படியே ஜிவ்வுன்னு ஏறுது டி.." ஒரு மார்க்கமாக சொன்ன விதத்தில் என்ன உணர்ந்தாளோ, நெஞ்சம் பதறி தலை தூக்கி பார்த்த காயுவின் முகம் மேலும் சிவந்து போனது.

தாய்க்கோழி முட்டையை அடைக் காப்பது போல், ஆடவனின் கட்டுமஸ்தத்தான அகன்று விரிந்த முரட்டு உடலால், பெண்ணவளின் மெல்லிய பஞ்சு போன்ற உடலை மொத்தமாக மூடி ஆக்கிரமித்து இருந்தான்.

*******

“அம்மா இப்ப என்னதான் பண்றது. எல்லாமே நம்ம கைய விட்டு போய்டும் போல. கதிர் மாமாவ என் பக்கம் இழுக்க என்னால முடிஞ்சத நான் பண்ணி பாத்துட்டேன். ஆனா மாமா என்னை சுத்தமா கண்டுக்காம, அந்த பயந்தாங்கோலி காயத்ரிகிட்ட அப்படி என்ன இருக்கோ அவக்கிட்ட மயங்கி போய் இருக்காரு..“

பைரவி கோவமாக கத்திக் கொண்டு இருக்க, அவள் கத்துவதை கஜாவும் பங்கஜம் பாட்டியும், மிக்ஸரை வாயில் திணித்துக் கொண்டு, ஒன்றும் பேசாமல் இருப்பதை கண்ட பைரவி, கோவமாக கையில் கிடைத்த பொருளை எடுத்து அவர்கள் மீது வீசி

“நான் இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திட்டு இருக்கேன். அங்க ரெண்டு பேரும் வாய் முழுக்க மிக்ஸர அமுக்கிட்டு, என்ன வெறுப்பா ஏத்துறீங்க..” மீண்டும் கத்தியதில் காதை குடைந்து கொண்டனர்.

“ஏய் செத்த நேரம் வாய மூடிட்டு நான் சொல்றத கேலு பைரவி.." என்ற பாட்டியை முறைத்து
“என்ன சொல்லப் போற..” என்றாள் கடுப்பாக.

“ஏய், அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கனாலதே, ஒன்னு இல்லன்னா இன்னொன்னு உன்னை தேடி அனுப்பி வச்சிருக்கான்..” பாட்டியின் குதற்கமாக பேச்சில் குழம்பிய பைரவி,

“என்ன பாட்டி சொல்ற? எதுவா இருந்தாலும் தெளிவா புரியிற மாதிரி தெளிவா சொல்லித்தொல.."

“ஏய் பையூ, இன்னுமாடி உனக்கு பாட்டி சொல்ல வர்றது என்னன்னு புரியல. அந்த கதிர் பய இல்லனா என்னடி? அதான் அவன விட வசதியா அந்த மீனாட்சியோட பையன் அர்ஜூன் இருக்கானே..” ரகசியக் குரலில் சொன்னாள் கஜா.

பைரவிக்கு, அர்ஜூன் பெயரை சொன்னதும் எங்கோ வானில் ரெக்கை இல்லாமல் பறப்பதை போல் உணர்ந்தவள் “அம்மா நா கதிர் மாமாவ தானே விரும்புறேன். ஆனா அந்த புதுசா வந்துருக்க அர்ஜூன் மாமாவும் பாக்கவே சும்மா செம்மையா தான் இருக்கான்.. இப்ப என்னதான் பண்றது” என்றாள் புரியாமல்.

“ம்ம். அங்கதே இருக்கு எங்க பிளானே..” என்ற பாட்டி தன் தீய எண்ணத்தை பற்றிய திட்டத்தை சொல்லத் துவங்கினார்.

தொடரும்.
 
New member
Messages
2
Reaction score
0
Points
1

Top