Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
226
Reaction score
211
Points
63
அத்தியாயம் - 27

ஆத்வியின் வார்த்தைகள் கத்தியாய் அவள் மனதை குத்தி கிழிக்க, கண்களில் நினைந்த வேதனையோடு அவனை கண்ட கவி,

"நான் ஆதரவு இல்லாத அனாதை தான், ஆனா யார் மனசையும் உங்கள மாதிரி காயப்படுத்த தெரியாது.. முதல்ல கைய எடுங்க" என தன் தாடையை அழுத்தமாக பற்றி இருந்த அவன் கையை எடுக்க முயன்றாள் கடுப்பாக.

"ஏய்ய்.. நீ ரொம்ப ஓவரா போற, என்ன டீஸ் பண்ணி பாக்காத அப்புறம் ரொம்ப கஷ்டப் படுவ.." கண்கள் சிவக்க ஆத்வி கர்ஜிக்க,

"நான் ஒன்னும் ஓவரா போகல, நீங்க தான் என்கிட்ட ஓவரா போயிட்டு இருக்கீங்க.. இனிமே உங்க சங்காத்தமே எனக்கு வேணா, தயவுசெஞ்சி கார் டோர் லாக் எடுங்க, நான் போக வேண்டிய இடத்துக்கு நடந்தே போய்க்குறேன்.." கோவமாக சொன்னவளின் அலைபேசி மீண்டும் ஒளித்தது.

அவன் கையை தட்டி விட்டவளாக, போனை ஏற்று ஹெலோ என்றாள்.

"கவிமா என்னாச்சு ஏன் நீ வர லேட்டாகுது, ஏதாவது பிரச்சனையாமா.." அந்த பக்கம் விஷாலின் தாயார் தான் பரிவாக கேட்டது, அவள் வர தாமதமானதால்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆண்டி, நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் பயப்படாதீங்க" நிதானமாக சொல்ல,

"சரிமா பாத்து வா.." என அழைப்பு துண்டித்ததும், "கார் கதவை திறந்து விடுங்க நான் சீக்கிரம் போகணும்.." என்றாள் தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் ஆத்வியிடம்.

அவன் பதில் பேசாமல் இறுகி போய் அமர்ந்திருப்பதை கண்டு "ஐயோ.. என தலையில் கை வைத்துக் கொண்ட கவி, "தெரியாம வந்து ஒரு சைக்கோ கிட்ட மாட்டிகிட்டேன்.. இவன மாதிரி அதிசயப் பிறவி எல்லாம் இப்ப தான் என் வாழ்க்கைல பாக்குறேன்.." வாக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டது நல்லவேளையாக, அவன் செவிதனில் தெளிவாக விழவில்லை.

"ஏய்.. அங்க என்ன முணுமுணுப்பு.." இரும்புக் குரல் அவள் அடிவைற்றை அதிர செய்தது.

"நான் ஒன்னும் சொல்லல, ஆமா உங்களுக்கு எதுவும் வேலை இல்லையா என்ன, எதுக்கு இப்டி ரோட்ல காரை நிறுத்திட்டு என்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கீங்க.." மூக்கு சுருக்கி அவள் கேட்ட விதத்தில், புத்தி பேதலித்து போனது அவனுக்கு.

அவன் பார்வையின் மாற்றத்தை உணர்ந்து கொண்ட பேதையோ, "ஐயோ என்ன இப்டி பாக்குறான், எதை கடிச்சி வைப்பான்னு தெரியலயே.. கடவுளே இப்ப இவன் மூட எப்டி டைவர்ட் பண்றது.." கவி பீதியாக நினைக்கும் போதே, அவன் உதடு குவித்து அவளை நெருங்கி வந்தான் ஆத்வி.

கண்களை இறுக மூடிக்கொண்ட கவி, கார் கதவில் சாய்ந்து கை இரண்டையும் பாதுக்காப்பாக அவன் முன் நீட்டிவளாக, "ப்ளீஸ் தயவுபண்ணி என்கிட்ட வரம்பு மீறி நடந்துகத்தீங்க.. நான் ஒருத்தரை உயிருக்கு உயிரா விரும்புறேன்.. அவரை நெனச்சி மட்டும் தான், என் துயரமான தனிமைகளை இத்தனை வருஷமா கடந்து வந்தேன்..

என்னைக்கா இருந்தாலும் என் மாமா என்கிட்ட வருவாரு, அந்த நம்பிக்கைல அவருக்காக மட்டுமே காத்திருக்க என்ன கலங்க படுத்திடாதீங்க, உங்கள நான் கெஞ்சி கேக்குறேன்.." மூடிய கண்களில் இருந்து நீர் வழிய, நீட்டிய கரங்கள் தானாக கும்பிட்டு போட்டு கெஞ்ச. அவள் சொன்னதை கேட்டு முகம் இருண்டுப் போனான் ஆடவன்.

அதுவும் கவி ஒருவனை விரும்புகிறேன் என்று சொன்னதும் இதயத்தில் ஏதோ ஒன்று கனப்பதை போல் உணர்ந்த ஆத்வி, அந்த கனம் அவள் மனதையும் அழுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான் போலும்.

கோணலாக இதழ் வளைத்து கவியை கண்டவன், "ஆமா நீ சொல்றத பாத்தா நீ விரும்புறவன் உன் கூட இல்லாதத போல இருக்கே, நீ அவன விரும்புற சரி அவன் உன்ன விரும்புவானா.." கேலியாக உரைத்த குரலில், சட்டென கண் திறந்து தீர்க்கமாக அவனை கண்ட கவி,

"அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது.. என்ன என் மாமா விரும்புறாரோ இல்லையோ, என் உயிர் இருக்க கடைசி நொடி வரை நான் அவரை மட்டும் தான் விரும்புவேன்.." அவளின் குரலில் உள்ள தெளிவும் உறுதியும் ஆத்வியை அசைத்துப் பார்த்தது என்னவோ உண்மை தான்.

அவள் மீது என்னதென தெரியாத உணர்வில், கவி பேச பேச கடுங்கோபம் கொண்ட மனமோ, அவளை கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கவே மீண்டும் வாய் திறந்தான்.

"உன்ன மாதிரி ஒரு ஊனத்தை எவன் டி ஏத்துப்பான், காது டம்மி, கண்ணும் பவர் கம்மி, இதை எல்லாம் பாத்தா உன் மாமா வந்த வழியே துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓட போறான்.." கேலியாக இதழ் வளைத்து சொன்ன விதம், அவன் நினைத்ததை போலவே அவ்வார்த்தையினை கேட்டு, மனதளவில் ரத்தம் சிந்தினாள் பாவை.

ஆத்வி இவ்வார்த்தைகளை உதிர்க்கவில்லை என்றாலும், இவற்றையெல்லாம் இதுநாள் வரை கவி நினைக்காமலா இருந்திருப்பாள்!

தன்னை ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் பார்க்கையில், கண்ணில் சோடாபுட்டி கண்ணாடியும், காதில் செவிட்டு மெஷின் என்று அவளின் மொத்த அழகும் அதனுள் மறைந்து தோற்றமளிப்பதாக தோன்றும்.

"தாம் இப்படி இருக்க தன் முகம் தெரியாத மாமா, இந்த ஊனத்தை ஏற்றுக் கொள்வாரா! இல்லை தன்னை தான் அவருக்கு நினைவிருக்குமா..! எனக்கே அவரின் சிறு வயது மங்களான தோன்றம் மட்டும் தானே தெரியும்..

அதை வைத்து நானாக என் மனதில் மாமா என்று அழைத்து மகிழ்ந்து கொள்கிறேன்.. ஆனால் அவருக்கு தன்னை நியாபகத்தில் இருக்குமா? இந்நேரம் பெரிய ஆளாக வளந்து இருப்பாரே, காதல் திருமணம் இப்படி ஏதாவது நடந்தேறி இருக்குமா..

அப்படி அவருக்கு காதலியோ, அல்லது மனைவியோ இருந்தால் தன் நிலைமை என்ன?" இப்படி பல கற்பனை குதிரைகளை ஓட விட்டு பார்த்து தனிமையில் மனம் வாடிப் போவாள் பேதை.

ஆனால் அப்போதெல்லாம் பெரிதாக காயப்பட்டது இல்லை மனம். யாராவது தன் குறையை சுட்டிக்காட்டி சொல்லும் வரை எதுவும் தோன்றாது. அதுவே திரும்பப் திரும்ப அதையே அழுத்திக் கூறி கேலி பேசும் போது, அடையும் மனவேதனைக்கு அளவே இருக்காது. அப்படி தான் இப்போது கவியின் மனமும் வேதனை அடைந்தது.

அவள் படித்த பள்ளியாக இருக்கட்டும், கல்லூரியாக இருக்கட்டும், வேலை தேடி சென்ற இடமாக இருக்கட்டும், யாராவது ஒருவராவது அவள் குறையை வைத்து இளித்து பேசாமல் இருந்ததில்லை.

அவள் அழகை மட்டுமே கண்டு காதலை சொன்ன வாலிபர்கள், பின் உண்மை தெரிய வரவும், 'ஐயோ செவுடா நீ..' என்று பதறியடித்து ஓடிய கதையும் உண்டு. அப்போதெல்லாம் விரக்தியாக சிரித்துக் கொள்வாளே தவிர, பெரிதாக ஒன்றும் அதை எண்ணி கவலை கொண்டது இல்லை.

மனதில் ஒருவன் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்க, மற்ற குப்பைகளுக்கு ஏன் முக்கியதத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான். ஒருவகையில் அவள் குறை கூட அவளுக்கு நிறையாகவே இருந்திருக்கிறது, இந்த காதல் கன்றாவி விடயத்தில் எல்லாம்.

கஷ்டமோ கவலையோ எதையும் மன உறுதியோடு எளிதில் கடந்து வரவேண்டும் என்று அவளை பெறாத அன்னை, சொல்லி கொடுத்து தான் வளர்திருக்கிறாள். ஆனால் ஒருசில விடயங்களில் காயப்பட்டு போகும் மனதை, எந்த களிம்பு வைத்து பூசி மறைப்பது.

கேலியாக தன்னை பார்த்தவனை, முகத்தில் எந்த உணர்வும் வெளிக் காட்டாமல் கண்ட கவி, "என் ஊனம் என்ன உண்மையா நேசிக்கிறவங்களுக்கு ஒரு குறையவே தெரியாது சார்.. என் ஊனத்தை பத்தின கவலை உங்களுக்கு வேணாம்..

நானாவது, என் ஊனமாவது அது என்னோட பிரச்சனை, அதை நானே பாத்துக்குறேன், நீங்க கொஞ்சம் லாக் ஓபன் பண்றீங்களா.." வார்த்தைக்கு வார்த்தை அவள் ஊனம் என்றது, இப்போது இவனுக்கு வலித்தது போலும்.

அவளை வம்பிழுக்க வேண்டி சொன்னது, வில்லில் இருந்து வந்த அம்பாக மீண்டும் தன்மீதே பாயும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அவன்.

கவியின் உணர்வற்ற முகத்தில் என்ன படித்தானோ! அதற்கு மேலும் எதுவும் பேசாமல் அவன் காரை கிளப்ப, சாளரம் வழியே வெறித்தவளின் மனம், குழம்பியநிலையில் ரணித்தது.

கவி இறங்க வேண்டிய இடம் வந்ததும் காரை நிறுத்தி கதவையும் அன்லாக் செய்திருக்க, அதில் கீங்.. கீங்.. என்ற சத்தம் அவள் நினைவை கலைக்கவும், ஆத்வியை பாராமல் இறங்கி சென்று விட்டாள் கவி.

அவளின் பாராமுகம் இவனையும் வாட்டியதோ என்னவோ! அவள் பின்னோடு பத்தடி தூரத்தில் யாரோ போல் நடந்து செல்ல,

"ஹேய்.. கவிஇ.." என்று ஓடி வந்த விஷால் அவளை அணைத்துக் கொண்டவன், "எப்டி இருக்க கவி.." என்றான் உற்சாகமாக அணைத்தவாக்கிலே சுற்றி.

"டேய்.. டேய்.. விட்றா அவளை.. பாவம் பிள்ளையே களச்சி போய் வந்திருக்கு, நீ வேற.." என கடிந்துக் கொண்ட அவன் தாயோ, மகன் விட்டு பிரிந்ததும் மென்மையாக அவளை அணைத்து விடுத்தவராக,

"எப்டி இருக்க கவிமா.." அன்பொழுக அவர் கேட்கவும், அதுவரை அவள் மனம் அழுத்திக் கொண்டிருந்த பாரம் இலகி கண்ணீர் முட்டியது.
"ஆண்டிஇஇ.." என அவரை அணைத்துக் கொண்ட கவி, தாயை கண்ட சேயாக தேம்பி அழ, ஸ்வாதி விஷால் அவன் தாய் என அனைவரும் பதறி விட்டனர்.

"ஏன் கண்ணு அழற என்னாச்சி உனக்கு.." அவள் கண்ணீரை துடைத்து விட்டவர் ஒரு புறம்,

"ஏய்.. கவி என்னாச்சி டி.." ஸ்வாதி ஒரு புறம்,

"எனி ப்ராப்ளம் கவி.."விஷால் ஒரு புறம் என்று அவளை மூவரும் சுற்று போட்டு வளைத்துக் கொள்ளவே, தூரத்தில் ஒருவன் அவள் முகம் பார்க்க ஏங்கித் தவித்து, எட்டி எட்டி பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, கவியை பார்க்க முடியாமல். மேலும் விஷாலை வேறு எதிரி போல் பாவித்து, கை முஷ்டி இறுக முறைத்தபடி நின்றிருந்தான்.

தேம்பி தேம்பி அழுத கவியை கண்டு அவள் முதுகை தேய்த்து விட்டு, தண்ணீர் புகட்டக் கொடுத்து சற்று ஆசுவாசம் அடைய வைத்த பிறகு, அங்கிருந்த கல் பெஞ்சில் அமர வைத்ததும், தன் அருகில் அமர்ந்த விஷாலின் அன்னையின் மடியில், கால்களைக் குறுக்கிக் கொண்டு படுத்துக் கொண்டாள். அவளின் செய்கை மொத்தமும் வித்யாசமாக தென்பட்டது ஸ்வாதிக்கு.

'தன்னிடம் கூட சொல்ல முடியாதபடி இவளுக்கு அப்படி என்ன பிரச்சனை' சரியாக தோழியின் இயல்பை வைத்தே கணித்து விட்ட ஸ்வாதி, சற்று தெளிந்து வரட்டும் மெதுவாக கேட்டுக் கொள்ளாமல் என அந்த நேரம் அதை அமைதியாக விட்டுவிட்டாள்.

"ஸ்வாதி, கவிக்கு என்னாச்சி ஏன் திடீர்னு இப்டி பிஹேவ் பண்றா.." விஷால் தான் புரியாமல் கேட்டது.

"யாராவது அவள ஹர்ட் பண்ணி இருப்பாங்க டா, அதை தான் சொல்ல முடியாம இப்டி எல்லார் முன்னாடியும் அழுதுட்டு இருக்கா.." என்றவளுக்கு தானே தெரியும். ஒவ்வொரு முறையும் யாராவது அவளை மனரீதியாக துன்புறுத்தி விட்டால், இப்படி தானே தன் மடியிலும் படுத்து, அழுது அவள் துயரத்தை தீர்த்துக் கொள்வாள் என்று.

இப்போது விஷாலின் அன்னையை வேறு வெகு நாட்கள் கழித்து பார்த்ததும், அவரிடம் தாவி விட்டாள் அவ்வளவு தான்.

விஷாலும் அவன் அன்னையும் கவியையும் ஸ்வாதியையும் பார்த்து பேசி, அவர்களுக்கு தேவையானவற்றை எல்லா, வேண்டாம் வேண்டாம் என்றும் கேளாமல் வாங்கிக் கொடுத்து, நிறைய தைரியம் இரு பெண்களுக்கும் வழங்கி விட்டு, மனமே இல்லாமல் இரவு பேருந்தில் கிளம்பி சென்றனர்.

கவிக்கும் அவர்களோடு நேரம் செலவிட்டதில் மனம் சற்று தெளிவு பெற்றிருந்தது. பார்க்கில் இருக்கும் போதே ஆத்விக்கு அசோக் அழைத்து, அலுவலக விடயமாக பேச வேண்டும் என்று கூறி இருக்கவே, கடைசி வரை அவள் முகம் பார்க்க முடியாமலே அங்கிருந்து சென்றிருந்தான்.

மறுநாள் விடியலில் ஸ்வாதி கவியை எழுப்பிப் பார்க்க, அவளுக்கோ மாதவிலக்கின் காரணமாக வயிற்று வலியோடு சேர்த்து, உடல் நலமும் சரி இல்லாமல் போனது.

உடல் அனலாய் கொதிப்பதை கண்டு பயந்து போன ஸ்வாதி, உடனே தன் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொள்வதாக மெயில் அனுப்பி விட்டு, ஆதிக்கு அழைத்து விடயத்தை சொல்ல,

"சரிமா இருக்கட்டும் நீ கவிய பத்திரமா பாத்துக்கோ, ஏதாவது தேவைனா சொல்லு.." என்றிட,

"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்" என அழைப்பை துண்டித்தவளாக, மெதுவாக அவளை எழுப்பி உடை மாற்ற வைத்து, காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து படுக்க வைத்த ஸ்வாதி, உடனிருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.

இங்கோ கவியைக் காணாமல் யாரிடமும் கேட்கவும் முடியாமல் ஒருவன் தவித்துப் போயிருந்தான்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 27
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top