- Messages
- 239
- Reaction score
- 213
- Points
- 63
அத்தியாயம் - 38
அனைவரும் குரல் வந்த திசையை அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க, அழுது வீங்கிய முகத்துடன் தேம்பல் விடாது இழுக்க, பார்வையில் இறைஞ்சலை காட்டி. "என் ஸ்வாதிக்கு நானே என் இதயத்தை கொடுக்குறேன் டாக்டர், ப்ளீஸ் நேரத்தை கடத்தாம அதுக்கான வேலைகளை செய்ங்க.." உறுதியாக கூறிய கவியை அதிர்ச்சி விலகாமல் கண்டனர்.
"கவி என்ன பேசிட்டு இருக்க.." என்று மித்ராவும்,
"புரிஞ்சி தான் பேசிறியாமா நீ.." என மருத்துவரும் பதட்டமாக கேட்க,
"நான் நல்லா புரிஞ்சி தான் பேசுறேன் டாக்டர், எனக்கும் அவளுக்கும் ஒரே ப்ளட் க்ரூப் தான்.. நான் வாழுறதே அவளுக்காக தான், அவ எனக்காக நிறைய செஞ்சிட்டா.. இனிமே அவ நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும், ப்ளீஸ் என் ஹார்ட்ட அவளுக்கு மாத்தி வைங்க டாக்டர்.."
கவி கைக்கூப்பி கெஞ்சி அழ, அங்கிருப்பவர்களின் மனம் கனத்துப் போனது என்றால், ஆத்விக்கு ஏதோ சொல்ல முடியாத ஒன்று தொண்டையை அடைத்தாலும், கவி மீது அளவுக்கு அதிகமாக கோவம் எகிறியது.
"இங்க பாருமா இது ஒன்னும் கிட்னி டிரான்ஸ்ஃபார்மேஷன் இல்ல, ரெண்டு கிட்னில ஒன்ன தூக்கி அசால்ட்டா கொடுக்க.. ஒருத்தர் உயிர் வாழ முக்கியமா இருக்க ஒன்னே இதயம் தான், அதை கொடுத்துட்டு நீ என்ன பண்ணுவ..
இத்தனைக்கும் நீ ஒரு நர்ஸ், இதை பத்தி எல்லாம் நான் உனக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்ல.. இதால நீ உன் உயிரையே தியாகம் பண்ணனும், அதுமட்டும் இல்லாம உயிரோட இருக்கவங்கள கொன்னு எல்லாம் எங்களால இன்னொரு உயிர காப்பாத்த முடியாது.." மருத்துவர் திட்டவட்டமாக மறுப்பு சொல்ல,
"ஐயோ.. ஏன் டாக்டர் புரிஞ்சிக்க மாட்றீங்க, ஸ்வாதி உயிர விட அப்டி ஒன்னும் என் உயிர் பெருசில்ல.. ப்ளீஸ் அவ உயிர் பிழைக்க என் உயிர எடுத்துக்கோங்க டாக்டர்.." கதறி அழுத கவி, யவரும் எதிர்பார்க்கும் முன்னே மருத்துவரின் காலில் விழுந்து விட்டாள்.
"என்னமா பண்ற.." அவர் பதறி பின்னே செல்ல,
"கவி எழுந்திரி மா.." என்ற மித்ராவும் கலங்கியவளாக அவளை தூக்க முனைய, கவி விடாபிடியாக தரையில் விழுந்து அழுகையில் கரைந்தாள். ஆத்வியின் பார்வை உக்கிரமாக அவள் மீது நிலைக்குத்தியது.
ஆதி அசோக் இருவரும் அடுத்து என்ன செய்வது என்று எண்ணத்தில், மனம் தளராமல் இதயத்தை பற்றி தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க, நேரங்கள் கடந்து சென்றது.
கவியின் மனதைரியம் மீண்டும் குறையத் தொடங்க, அழுகை அடங்காமல் ஒரு மூலையில் சுருண்டு விட்டாள். அவளை எரிக்கும் பார்வை பார்த்தபடி ஆத்வி ஓரமாக அமர்ந்திருந்தான்.
சுமார் அரைமணி நேரம் கடந்து விட்ட நிலையில் மீண்டும் அவசரமாக ஓடி வந்த மருத்துவர், "பேஷண்ட்க்கு ஹார்ட் கிடைச்சிடுச்சி.." என சொன்ன வார்த்தையில் மொத்த பேரும் நிம்மதி அடைய, கவிக்கு இப்போது தான் உயிரே வந்தது போல் இருந்தது.
"எப்டி டாக்டர் கொஞ்ச நேரம் முன்னாடி வரை இல்லைனு தானே சொன்னிங்க, திடீர்னு எப்டி?" ஆதி தான் கேட்டது.
"அது வந்து சார் இங்க ஒரு பத்து நாளுக்கு முன்னாடி ஒரு அம்மா ஆக்சிடென்ட் கேஸ்ல அட்மிட் ஆனாங்க, அவங்களுக்கு பெருசா பேமிலி எதுவும் இல்ல. ஒருத்தர் எப்போதாவது வந்து கடமைக்கேனு பாத்துட்டு போவார்..
அவங்க உடல் நல்லா முன்னேற்றம் அடஞ்சிட்டு வந்த இந்த சமையம், அந்த அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானா தற்கொலை செஞ்சி இறந்து போய்ட்டாங்க.. நாங்க அந்த ஆள்க்கு இன்ஃபார்ம் பண்ணா, நீங்களே பாடிய டிஸ்போஸ் பண்ணிடுங்கனு அலட்சியமா சொல்லிட்டார்..
அதான் அவங்க இதயத்தை எடுத்து ஸ்வாதிக்கு வைக்க முடிவு பண்ணிட்டோம்.." மருத்துவர் விளக்கம் கூறி சென்று விட, கடவுளே இறங்கி வந்து உதவி செய்ததை போல இருந்தது.
சற்று நேரத்தில் எல்லாம் துணி போட்டு மூடிய அந்த இறந்து போன பெண்மணியை ஸ்ட்ரக்சரில் வைத்து தள்ளி வந்தவர்கள், ஆப்ரேஷன் தியேட்டர் வாயிலில் நிறுத்தி கதவை திறந்து உள்ளே தள்ளி செல்லப் போன சமையம், ஓடி வந்த கவி இறந்தவரின் முகத்தை கண்டு நன்றி கூறும் விதமாக, அவர் முகத்திரையை விலக்கியவளுக்கு அதிர்ச்சி.
வாயில் கை வைத்து விரிந்த கண்கள் மூடாமல் அவள் அதிர்ச்சியில் இருப்பதை கண்டு, அனைவரும் குழப்பமாக கவியை பார்க்க,
"கவி என்னமா ஏன் அந்த அம்மா முகத்தை பாத்ததும் உன் முகம் இப்டி இருக்கு, அவங்கள உனக்கு முன்னமே தெரியுமா?.." மெதுவாக அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தபடி மித்ரா கேட்க,
"அவங்க தான் ஆண்டி ஸ்வாதிய பெத்தவங்க.." என்றவள் முகத்தில் தான் எத்தனை வேதனை.
"என்ன சொல்ற கவி அவங்க தான் ஸ்வாதியோட அம்மாவா.."
"ஆமா சின்ன வயசுல ஒரு முறை மட்டும் தான் இவங்களை பாத்திருக்கேன்.. ஸ்வாதி அவங்க கால பிடிச்சி கெஞ்சினா, அம்மா ப்ளீஸ் என்னையும் கூப்டு போ, தனியா விட்டு போகாதே பயமா இருக்குன்னு கத்தி அழுதா..
ஆனா அவங்க அவளை எட்டி தள்ளிட்டு கொஞ்சமும் அவ கதறல காதுல வாங்காம திரும்பிப் பாக்காம போனவங்க தான்.. அப்புறம் என்ன ஆனாங்கனு எங்களுக்கு தெரியாது, அதோட இப்ப தான் அவங்கள பாக்குறேன்.." தனக்கு தெரிந்ததை சொல்லி முடிக்க, மௌனமே அங்கு ஆட்சி செய்தது.
ஸ்வாதியை விட்டு சென்று வேறு திருமணம் செய்து கொண்டும் நிம்மதி இல்லை. கணவன் சரியில்லை. வேறு குழந்தைகள் பிறக்கவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனது. அப்போது கூட அவருக்கு அவர் பெற்ற பிள்ளையின் நினைவு வராமல், ஏனோ தானோவென தான் வாழ்க்கை ஓடியது.
பத்து நாட்கள் முன்பு சாலையில் ஓரம் சோர்வாக நடந்து வந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதி, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சற்று உடல் தேறி வந்தவரிடம், பாடியை வாங்க மறுத்த அவர் கணவர், "நீயாக வீடு வந்து சேறு, இல்லைனா செத்து ஒழி.. உன்னால ஒரு புண்ணியமும் இல்ல.." என்று கரித்துக் கொட்டி விட்டு சென்று விட்டார்.
சரி நாமே டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு வீடு செல்லலாம் என்று மருத்துவரை பார்க்க வரும் போது தான், ஸ்வாதியை ரத்தக்கிளறியாக பார்த்தவரின் தாய் பாசம் விழித்துக் கொண்டது போலும்.
கவி மருத்துவரிடம் எங்களுக்கென்று யாரும் இல்லை மார்த்தாண்டம் ஆசிரமத்தில் தங்கி இருந்ததை சொன்னது, ஸ்வாதிக்காக அவள் துடித்தது என்று அனைத்தையும் அடிவயிற்று கனத்தோடு பார்த்தவர், பெற்ற மகளுக்கு தெரிந்தே செய்த பாவத்திற்கு தண்டனையாக, அவரே அதற்கு பாவ விமோசனம் தேடிக் கொண்டார்.
இரவு 10.30 மணி,
அறுவை சிகிச்சை அறையில் இருந்து தளர்ந்த நடையோடு வந்த மருத்துவரை கண்டு, பயந்துப் போன கவி,
"டாக்டர் நல்லபடியா ஆப்ரேஷன் முடிஞ்சிதா, ஸ்வாதி நல்லா தானே இருக்கா.." என்றாள் படபடப்பாக.
மொத்த குடும்பத்தையும் பார்த்த மருத்துவர், அனைவரின் முகத்திலும் தீவிரம் குடிகொண்டிருப்பதை உணர்ந்து, "ஆப்ரேஷன் சக்சஸ்மா.." என புன்னகைக்க, கை கூப்பி கண்ணீர் விட்டு நன்றி உரைத்த கவி, மீண்டும் தன் தோழி தனக்கு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிப் போனாள்.
இரவு உணவை மித்ரா வற்புறுத்தி அவளை உண்ண வைக்க, உண்டு கொண்டு இருக்கும் போது தான் அறுவை சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் பணம் கட்ட சொன்னது நினைவில் வந்தது.
சிகிச்சை நன்முறையில் நடந்திருக்கிறது என்றால் நிச்சயம் பணம் கட்டியதால் தான் சாத்தியம் என்று உணர்ந்த கவி, "ஆண்டி ஸ்வாதி ஆப்ரேஷன்க்கு அங்கிள் தான் பணம் கட்டினாங்களா.." என்றாள் தயக்கமாக.
"இல்லாம என் பையன் ஆத்வி தான் பணம் கட்டினது, இப்படி ஒரு விஷயம் நடந்ததை கேள்வி பட்டதும், முதல்ல ஓடி வந்தவன் அவன்தான்.." என நடந்ததை சொல்ல, கவிக்கு குற்றவுணர்ச்சியில் மனம் அடித்துக் கொண்டது.
"அப்போ நல்ல எண்ணத்துல தான் என்ன அவர் அங்க கூட்டிட்டு போனாறா, நான் தான் அவர தப்பா புரிஞ்சிகிட்டு வாய்க்கு வந்தத பேசிட்டேனோ.. ஆனா நான் கண் திறக்கும் போது எதுக்காக என் பேண்ட் கழண்டு இருந்துது.." கவி தன்போக்கு சிந்தனையில் மூழ்கி இருக்கும் போதே,
" மாம்.." என்றவனின் இறுக்கமான குரலில், சட்டென நிமிர்ந்து பார்த்தாள் கவி.
"சொல்லு ஆத்வி.."
"வாங்க கிளம்பலாம், அதான் ஆப்ரேஷன் முடிஞ்சிடுச்சே இனிமே நமக்கு இங்க என்ன வேலை.." கவியை பாராமல் கடைமைக்கே அவன் சொல்ல, அவளுக்கு தான் என்னவோ போலானது.
"என்னப்பா சொல்ற, வயசு பொண்ண ஹாஸ்பிடல்ல தனியா விட்டுட்டு எப்டி போறது.. நீயும் அப்பாவும் வீட்டுக்கு போங்க நான் கவிக் கூட இருக்கேன்.." மித்ரா சொல்வதை கேட்காது,
"மாம்.. நான் போலாம்னு சொன்னேன், என்கூட வர போறீங்களா இல்லையா.." ஏக்கமாக பார்க்கும் அவள் பார்வையின் வீச்சு, தன் இதயத்தை வெகுவாக தாக்கியது போலும், முற்றிலுமாக அவளை தவிர்த்து அன்னையிடம் கடுகடுக்க,
"ஆண்டி நான் தனியா மேனேஜ் பண்ணிப்பேன், எனக்கு இதெல்லாம் பழக்கம் தான்.. நீங்க அவரோட கிளம்புங்க, நீங்களும் நைட் டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடுக்கனும்.." என்றாள் திடமாக.
"அதான் சம்மந்தப் பட்டவங்களே தெளிவா சொல்லியாச்சே அப்புறம் என்ன மாம், எழுந்து வாங்க.." மித்ராவின் பதிலை கூட கேட்காமல் அவள் கை பிடித்து இழுத்து செல்ல, நடப்பதை கூர்ந்து உள்வாங்கியபடி கவியின் கையில் சிறு தொகையை கொடுத்து, தைரியமாக இருக்கக் கூறி விட்டு அவர்கள் பின்னே சென்றான் ஆதி.
அசோக் எப்போதோ அலுவலக வேலையாக, அவசரமாக அனுப்பப்பட்டு இருந்தான்.
அவர்கள் எல்லாம் உடன் இருந்த போது வந்த தைரியம், இப்போது தனிமையில் இருக்கையில் மனம் சோர்ந்து போனது. எப்போது ஸ்வாதி கண் விழிப்பால் என அவளை பார்க்கும் ஆவலில் இருந்த கவி, தன்னையும் அறியாமல் இருக்கையில் அமர்ந்த வாங்கிலே உறங்கிப் போனாள்.
வீட்டிற்கு வந்த ஆத்விக்கு, கவி பேசிய வார்த்தைகள் மட்டும் தான் அவன் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தது.
மேலும் அவள் தோழிக்காக தன் உயிரையே தியாகம் செய்ய துணிந்த செயல், அவளின் எதிர்ப்பார்ப்பு இல்லாத நட்பின் ஆழத்தை புரிய வைத்தாலும், அவள் எப்படி உயிரைக் கொடுக்கும் அளவுக்கு துணிந்து போனாள் என்ற எண்ணமே, அவன் மனதை வதைத்தது. அதில் அளவுக்கு அதிகமான பொறாமையும் தலைத் தூக்காமல் இல்லை.
இப்போது தன்யா இல்லாமல் போனது அவனுக்கு வசதியாகிப் போக, எப்போதோ வாங்கி வைத்த மதுவை எடுத்து குடித்தவனுக்கு,
"நீயெல்லாம் நல்ல அப்பா அம்மாக்கு பிறந்தவன் தானா.. நீயெல்லாம் நல்ல அப்பா அம்மாக்கு பிறந்தவன் தானா.." அவள் கேட்ட வார்த்தைகளே, அந்த அறையை சுற்றியும் சத்தமாக ஒளித்துக் கொண்டே இருப்பது போன்ற ப்ரம்மையில்,
ஆஆஆ... என கத்தி தலை முடியை பிய்த்துக் கொண்டவன், "வேற நீ என்ன பேசி இருந்தாலும் சரி போனா போகுதுனு விட்டு தொலஞ்சி இருப்பேன் டி.. ஆனா என் பெத்தவங்கல இழுத்து வச்சி எப்போ என் பிறப்ப கேவலமா பேசினியோ, அவ்ளோ சீக்கிரம் உன்ன நான் சும்மா விட்ருவேன்னு நினைக்காத..
நீ விட்ட வார்த்தைய நெனச்சி காலத்துக்கும் நீ அழனும் டி.. அழ வைப்பேன்.." ஆத்திரம் தீராது கத்திய ஆத்வி, பால்கனி தரையில் விழுந்து புலம்பியபடியே உறங்கி இருக்க, நடு சாமத்தில் திடுக்கிட்டு விழித்த கவிக்கும், ஆத்வியின் நினைவு வந்து மேலும் வாட்டியது.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 38
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.