- Messages
- 239
- Reaction score
- 213
- Points
- 63
அத்தியாயம் - 39
மறுநாள் இரவு கண் விழித்த ஸ்வாதியின் கரம் பிடித்துக் கொண்டு அழுகையை அடக்க வெகுவாக சிரமப்பட்டு விட்டாள் கவி. மருத்துவர் தான் கராராக கூறி விட்டாரே, அவள் முன்பு எந்த ஒரு வருத்தமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடாது என்று. உதடு துடிக்க தோழியைப் பார்த்து, கடினப்பட்டு புன்னகையோடு கலங்கித் தவித்தாள்
நெஞ்சை கிழித்த இடம் வலி உயிர்ப் போக கவியைக் கண்டதும் அவளிடம் கொண்ட கோவங்கள் யாவும் மறந்தவளாக, செந்தில் தன்னிடம் நடந்துக் கொண்ட விடயங்கள் மட்டுமே அவள் நினைவை ஆட்கொண்டு அவமானத்தில் உடல் குன்றிப் போன ஸ்வாதி,
"எ.துக்கு என் உயிர காப்பாத்தினீங்க.. அப்டியே ஸ்.சாகட்டும்னு விட்டிருந்தா என்னோட சேத்து என் அ.அவமானங்களும் செத்து போய் இருக்குமே., இனிமே இதை எல்லாம் சகிச்சிக்கிட்டு நான் எப்டி உயிர் வாழ முடியும்.." பேச முடியாமல் ஒவ்வொரு வார்த்தையும் கோர்வையாக கடினப்பட்டு பேசியவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருக்க, அதிகமாக மூச்சி வாங்கியது.
அதில் பதறிய கவி, "ஸ்வாதி.. ஸ்வாதி.. ப்ளீஸ் காம் டவுன், இப்ப நீ எதையும் நினைச்சி பீல் செஞ்சி எமோஷனலாக கூடாது, அது உன் உடம்புக்கு நல்லது இல்ல.. நடந்து முடிஞ்சத ஒரு கெட்ட கனவா மறந்திடு, இப்ப அதை எதையும் பேச வேண்டாம்..
ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு பிழைச்சி வந்திருக்க ஸ்வாதி, நீ கண்மூடிக் கிடந்த இந்த ரெண்டு நாளும், என் உயிர் என்கிட்ட இல்ல.. உனக்காக இல்லைனாலும் எனக்காக அமைதியா இரு டி, உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஸ்வாதி.."
கண்ணீரோடு அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட, கவியின் சோர்வான அழுது வீங்கிய முகத்தை வைத்தே அவள் தனக்காக மிகவும் வேதனைப் பட்டிருக்கிறாள் என்று நன்றாக தெரிய, மருந்தின் வீரியத்தில் தானாக கண்மூடிக் கொண்டாள்.
அவள் மருத்துவமனையில் இருந்த நாள்வரை தினமும் ஆதி மித்ரா இருவரும் பார்த்து விட்டு சென்றனர். சத்தான உணவுகளை மித்ரா பணியாட்கள் மூலம் கொடுத்து அனுப்பி விடுவாள். கவியின் மனம் நோகக் கூடாது என்றே தன் வலி வேதனையை காட்ட மறுத்தாள் ஸ்வாதி.
ஆத்வி அன்று ஒருநாள் இருந்ததோடு சரி, அதன் பிறகு அந்த பக்கம் தலைகாட்டவில்லை அவன். ஒவ்வொரு நாளும் அவன் வருவானா என்றே எதிர்ப்பார்ப்புடன் ஏங்கிப் போனாள் கவி.
ஆத்வியோ அலுவலகம் விட்டு வீட்டுக்கு வருவதே இரவு தாமதமாக தான். அன்னைக்காக உணவுண்டு விட்டு அறைக்கு செல்பவன், தனிமையில் தோன்றும் போதெல்லாம் குடிக்கத் தொடங்கி விட்டான். கூடவே புண்பட்ட மனதை புகைவிட்டும் ஆற்ற முயல்கிறான். ஆனால் மேலும் மேலும் தானே ஆழமான புண்ணாக மாறியது, அவளை நினைக்கையில்.
பதிமூன்று நாட்கள் கடந்த நிலையில் ஸ்வாதியை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். கவி அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் விடுதிக்கு செல்ல. முந்தைய நாளே ஆதிக்கு டிஸ்சார்ஜ் விடயம் தெரிந்திருக்க மித்ராவை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.
"என்னமா திரும்ப ஹாஸ்டல்கேவா போக போறீங்க, அதுவும் இந்த நிலைல.." மித்ரா கவலையாக கேட்க,
"ஆமா ஆண்டி வேற எங்களுக்குனு போக ஒரு வீடு கிடையாதே, அப்புறம் என்ன பண்றது.. நான் கவனமா ஸ்வாதிய பத்துப்பேன் ஆண்டி.." என்றாள் தன் சோகம் மறைத்து.
"இல்லமா இந்த டைம்ல ஸ்வாதி பத்திய சாப்பாடு தான் சாப்பிடணும், ஹாஸ்டல்ல எப்டி அதெல்லாம் கிடைக்கும்.. பேசாம ஒன்னு பண்ணு, ரெண்டு பேரும் அங்க நம்ம வீட்டுக்கு வந்துடுங்க. நான் ஸ்வாதிக்கு தேவையான சப்பாட்டை பக்குவமா செஞ்சி கொடுக்குறேன், அதுலே அவ முழுசா குணமாகிடுவா.. கிளம்புங்க.." என்றதும் பதறிய கவி,
"அச்சோ இல்ல ஆண்டி, ஏற்கனவே எங்களுக்காக நீங்க நிறைய உதவி செஞ்சிடீங்க, திரும்ப திரும்ப உங்கள தொந்தரவு செஞ்சி பாரமா இருக்க விரும்பல ஆண்டி, நாங்க ஹாஸ்டல்க்கே போய்டுறோம்" என்றாள் அவசரமாக.
திரும்ப ஏதோ பேச போன மித்ராவை தடுத்த ஆதி, "கவி உன்ன வரியானு கேக்கல வான்னு சொன்னா, எங்க மேல உண்மையான மரியாதை இருந்தா பதிலுக்கு பதில் பேசாம உடனே கிளம்பு,." ஆதிக்கமான குரலில் ஆதி கட்டளையிட, அதற்கு மேல் பேச என்ன இருக்கப் போகிறது.
ஆனால் இதற்கு ஆத்வி என்ன சொல்வானோ என்ற அச்சம் கவி நெஞ்சில் பரவியது. ஏடாகூடமாக அவன் எதுவும் செய்து விடக் கூடாது என்று வேண்டும் போதே, அன்று அவன் வீட்டை விட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய நினைவு வந்து, திரும்ப எந்த முகத்தை வைத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு செல்வது என்ற குழப்பமே மனதை அறித்தது.
ஸ்வாதி கண் விழித்த நாளில் இருந்தே யாரிடமும் அதிகம் முகம் கொடுத்து பேசவில்லை. ரோபோ போல கேட்கும் கேள்விக்கு மெதுவான பதில் மட்டுமே வரும். அவளின் மனநிலை புரிந்து யாரும் அவளை அதிகம் தொல்லை செய்யவில்லை.
இவளின் நிலைமை இங்கு இப்படி இருக்க, அவளை பற்றி எதுவும் தெரியாத அவளின் காதல் மன்னவனோ, அவள் எண்ணுக்கும் கவி எண்ணுக்கும் மாறி மாறி அழைப்பு விடுத்து சோர்ந்துப் போனான்.
வேறு யாரிடமும் அவளை பற்றிய விபரம் கேட்கும் அளவிற்கு நேரமும் இல்லை, அந்த எண்ணமும் இல்லை. கவிக்கு போனை சார்ஜ் போட வேண்டும் என்ற எண்ணமே தோன்றாமல் போக, அது தோள்பை உள்ளேயே சத்தமின்றி உறங்கிக் கொண்டு இருந்தது.
கார் ஆதியின் வீட்டு வாயிலில் நிற்க, இரு பெண்களும் காரில் இருந்த படியே அந்த வீட்டைக் கண்டனர் ஒவ்வொரு மனநிலையில்.
"ஸ்வாதிக்கு தான் இந்த வீடு புதுசு உனக்கு என்ன கவி, அவளை அழைச்சிட்டு வா.." மித்ரா புன்னகையாக அழைக்க,
"ஹான் இதோ வரேன் ஆண்டி.." என அவசரமாக இறங்கி, ஸ்வாதியை மெதுவாக இறக்கி விட்டு வீட்டினுள் அழைத்து செல்லும் முன், ஆரத்தி சுற்றியப் பின்னே உள்ளே அனுப்பி வைத்தாள் மித்ரா.
இதெல்லாம் இருவரும் பார்த்தது கூட இல்லையே, அதனால் மித்ரா ஒவ்வொன்றும் அன்போடு பார்த்து பார்த்து செய்யும் போது, மிகவும் பிடித்திருந்தது அவர்களுக்கு.
சகல வசதியும் செய்து இருவருக்கும் ஒரு அறையைக் கொடுத்து ஓய்வெடுக்க சொன்ன மித்ரா, பணியாட்களோடு இரவு உணவை சமைக்க சென்று விட்டாள்.
"ஸ்வாதி நீ படுத்து தூங்கு, நான் போய் விக்ரம் அங்கிள் இப்ப எப்டி இருக்கார்ன்னு பாத்துட்டு வரேன்.." என்ற கவி, அவளை படுக்க வைக்க, சரி என தலையை மட்டும் லேசாக அசைத்து படுத்துக் கொண்டாள். அவள் பழையபடி பேசாமல் இருப்பது கவிக்கு வருத்தமாக இருந்தாலும், எதையும் கேட்டு நச்சரிக்கவில்லை.
விக்ரம் அறைக்கு வந்து அமைதியாக அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தவள் மனதில் பலவிதக் குழப்பங்கள். ஆத்வியின் முகம் அவளின் கனவுக்கண்ணனின் முகம் போலவே இருப்பது எப்படி சாத்தியம்.
அப்போ அத்வி தான் தன் மாமா என்றால் இவர்கள் குடும்பத்திற்கும் தனக்கும் என்ன சம்மந்தம். இவர்கள் யாரையுமே தனக்கு அந்நியமாக தோன்றவில்லையே! நன்றாக அவர்களோடு பழகி ஆடிப் பாடி மகிழ்ந்து விளையாடிய உணர்வுகள்.
யார் யாரோ தன்னை தூக்கி செல்லம் கொஞ்சி முத்தம் வைத்த நினைவுகளில் உடல் சிலிர்த்துக் கொண்டது. இறுக்கமாக கண்களை மூடி, தலையினை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் கவி.
"முருகா என்ன இப்பலாம் அடிக்கடி இப்டி தோணுது, எல்லாம் அவர் முகத்தை கூர்ந்து பார்த்ததால வந்த பிரச்சனை.. என் கனவுல வர்ற முகம் யாரோடது? இல்ல அதிகமா யோசனை பண்ணி, எனக்கா அப்படி இல்யூஷன் மாதிரி ஆகுதா.."
குழம்பிய மனநிலையோடு வெளியே வந்த கவி, சரியாக அவள் முரட்டு மன்னவன் மீதே இடித்து நிற்க, அவளை உக்கிரமாக முறைத்தவன் ஆத்வி.
"உன்ன யாரு திரும்ப என் வீட்டுக்கு வர சொன்னது.." கடுமையாக வந்த வார்த்தையில் கண்கலங்கிப் போனவள், பதில் சொல்லாமல் அமைதியாக தலைகுனிந்துக் கொள்ள, மீண்டும் ஏதோ பேச போனவன் கைபேசி அலறவும் எடுத்து காதில் வைத்த ஆத்வி, "ஹான் சொல்லு பேபி.." என்ற வார்த்தையில் தான் எத்தனை மென்மை.
சட்டென நிமிர்ந்த கவி அவனை பார்க்க, அந்த பக்கம் போனில் பேசியவளுக்கோ நெஞ்சி வெடிக்காதக் குறை. இத்தனை நாளும் அவளாக சென்று குழைந்து குழைந்து கொஞ்சிப் பேசியும் உருகாத அவன் குரல், இன்று போனில் உருகினால் என்ன செய்வாள்!
தன் எதிரே நின்று தன்னையே குறுகுறுப்பாக காணும் கவியைக் கண்டு கொள்ளாத ஆத்வி, "சொல்லு பேபி போன் பண்ணிட்டு பேசாம வெக்கப்பட்டா நான் என்ன பண்றது, உன் வெட்கத்தை பாக்க என் மனசு தவிக்காதா.." கிறங்கியவன் பேச்சில் இரு பெண்களுக்குமே அதிர்ச்சி, அதிலும் ஹரிதாவுக்கு சொல்லவே வேண்டாம்.
"ஹெலோ.. ஹெலோ.. ஆத்வி உண்மையாவே நீதான் பேசுறியா.." அந்த பக்கம் அவள் தன் சந்தேகத்தை கேட்க,
"யூ நாட்டி கேர்ள், சட்டுனு இப்டிலாம் கேட்டா நான் என்ன சொல்றது, மதியம் உன்ன பாத்தது திரும்ப பாக்கணும் போலவே இருக்கு பேபி, எப்பவும் உன் நினைப்பு தான்.."
'இது என்னடா கொடுமை நான் என்ன கேட்டேன் இவன் என்ன சம்மந்தம் இல்லாம பேசுறான்.. மதியம் ஆபிஸ் போனப்போ, என்ன அவன் நிமிந்து கூட பாக்கலையே, இப்ப எப்டி திரும்ப பாக்கணும்னு சொல்றான்.." தனக்குள் குழம்பி, "ஆத்வி ஆர் யூ ஓகே.." என்றாள் புரியாமல்.
"நோ ஐ அம் நாட் ஓகே, உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் பேபி நாளைக்கு சீக்கிரம் வந்திடு.." என இலவச இணைப்பாக அலைபேசிக்கு முத்தத்தை வேறு வழங்க, கவியின் கண்கள் அவளை மீறி கலங்கி கண்ணீர் வெளிவரத் துடித்தது என்றால், அந்த பக்கம் ஹரிதாக்கு பேரதிர்ச்சி.
"ஓகே பேபி நேரத்தோட போய் தூங்கு.." என்று அழைப்பை துண்டித்து விட்டு அங்கு ஒருவள் இருப்பதையே பார்க்காதவன் போல, அறைக்கு சென்று விட, கவி கீக் கொடுத்த பொம்மையாக தன்னறைக்கு வந்தாள்.
"நான் ஒன்னு பேச போன் போட்டா, அவன் என்னென்னவோ பேசி என்னையே குழப்பி விட்டானே.. என்னவோ ஆனா அவன் இப்டி பேசுறது கூட ரொம்ப நல்லா இருக்கு.." ஏலனமாக நகைத்த ஹரிதா, ஒரே இரவில் பலவிதமான கனவுக் கோட்டைகளை கட்டி விட்டாள்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 39
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.