Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
238
Reaction score
213
Points
63
அத்தியாயம் - 36

இந்த காலத்தில் நூறு இரநூறு ரூபாயே நம்பி கடனாக கொடுக்க யோசிப்பவர்களுக்கு மத்தியில், பத்து லட்ச ரூபாயை எப்படி பிறட்டுவது. எங்கு செல்வது யாரிடம் பணம் கேட்பது? என்று ஒன்றுமே புரியாத நிலையில் திக்பிரம்மை பிடித்ததை போல சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவளுக்கு, சட்டென விஷாலின் நியாபகம் வந்தது.

காவலாலி ஒருவர் ஸ்வாதியின் கைபையை கொடுத்திருக்க, அதிலிருந்து போனை எடுத்த கவி, விஷாலுக்கு அழைத்தாள் அவசரத்தில் கரம் நடுங்க.

"ஹெ.ஹெலோ வ்.விஷால் இங்க.. இங்க ஸ்வாதிக்கு.." அவள் சொல்லும் போதே,

"ஹெலோ யாருமா நீங்க உங்களுக்கு என்ன வேணும்.." அந்த பக்கத்தில் இருந்து பழக்கப்படாத பெண் குரல் பேசியது.

"இ.இது விஷால் நம்பர் தானே, நான் அவன்கிட்ட அவசரமா பேசணும் கொஞ்சம் போனைக் கொடுங்களேன்.." என்றாள் கெஞ்சும் குரலில்.

"ஓ.. நீ அந்த தம்பிய கேட்டு போனு போட்டு இருக்கியா, அவனும் அவன் அம்மாவும் பிசுனஸுல அதிக நஷ்டமா போச்சின்னு, வீடு போனு காரு பைக்கு போட்டிருந்த நகைனு, இப்டி எல்லாத்தையும் கெடச்ச காசுக்கு வித்துட்டு ஊர விட்டே போய்ட்டாங்க.. அப்டி வித்ததுல கெடச்ச போனு தான் இது.." என்றதும் கிடைத்த சிறு நம்பிக்கையும் விட்டுப் போக, அவர்களுக்கு என்னானது என்ற கவலையும் சேர்ந்தே ஒட்டிக் கொண்டது.

யாதவின் எண்ணமும் வராமலில்லை, கூடவே ஆத்வியின் நியாபகமும் வந்து விட்டது. ஏற்கனவே அவனை ஏமாற்றி அவன் பணத்தையும் சொத்தையும் பறிக்க வந்தவள் என்ற அபாண்டமான பழியை ஆத்வி சுமத்தி இருக்க, இப்போது உண்மையாகவே அவனிடம் பணம் கேட்டால், வேறு வினையே வேண்டாம்.

உண்மையாகவே திருடி பட்டம்க்கட்டி இப்போது இருக்கும் நிலைமைக் கூட புரிந்துக் கொள்ளாமல், தன்னை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்து விடுவான் என்ற பலவாறான சிந்தனைகளுடன் ரெண்டடி தூரம் கூட எழுந்து நடக்க முடியாத பலவீனமான நிலையில், எப்போது வேண்டுமானாலும் இதயம் வெடித்து இறந்து விடுவது போன்ற வேதனையில் முக்குளித்து, கண்ணீர் விட்டு அமர்ந்திருந்தாள் கவி.

********

"என்னங்க ஏன் கவி ரெண்டு நாளா வீட்டுக்கு வரல, நான் போன் போட்டா ஸ்விட்ச் ஆஃப்னு வருது, என்ன ஏதுனு உங்ககிட்ட எதுவும் சொன்னாளா.." என்றபடி மித்ரா கணவனுக்கு உணவை பரிமாறவும், ஆதியின் எதிரில் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டு இருந்தவன் கரம், அப்படியே உண்ணாமல் நின்று விட்டது.

"தெரியல மித்து, கவி போன் தான் ஸ்விட்ச் ஆஃபா இருக்கேனு நேத்து நைட் ஸ்வாதிக்கு ட்ரை பண்ணேன், அதுவும் நாட் ரீச்சபுள், அதான் காலைல பாத்துக்கலாம்னு விட்டேன்.. இரு இப்ப திரும்ப ட்ரை பண்ணி பாக்குறேன்.. என்ற ஆதி, உண்டு முடித்து ஸ்வாதி எண்ணுக்கு அழைக்க, அதுவும் நேற்றில் இருந்து சார்ஜ் போடாமல் அதன் உயிரை விட்டுவிட்டது போலும், ஸ்விட்ச் ஆஃப் என்றே பதில் வந்தது.

"என்னாச்சி இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கு போனை எடுக்காம என்ன பண்றாங்க.." ஆதி யோசனையாக அமர்ந்திருக்க,

"என்னாச்சு அந்த பொண்ணும் ஃபோன் எடுக்கலயா.." என்றாள் கவலையாக.

"என்னனு தெரியல, லீவ்னா முன்னாடியே எனக்கு ஃபோன் வந்துடும், ரெண்டு நாளா என்னாச்சினு தெரியலயே.." ஆதி குழப்பமாக நெற்றியை தேய்த்துக் கொள்ள, இங்கு ஆத்வியின் மனம் ஒருநிலையில் இல்லாமல் அடித்துக் கொண்டது.

அன்று ஏதோ கோவத்தில் அவசரப்பட்டு கவியை பேசக் கூடாத வார்த்தைகள் பேசி, காயப்படுத்தி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டது எத்தனை பெரிய தவறு என்று அவனுக்கு புரியாமல் இல்லை. இரவு முழுதும் தூக்கம் தொலைந்து போனது அவள் நினைவில்.

"முன்கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாம நான் தான் அறிவுக்கெட்டத்தனமாக அவகிட்ட நடந்துகிட்டேன்னா, அவளுக்கு எங்க போச்சி புத்தி, எப்போதும் போல அவபாட்டுக்கு சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வரவேண்டியது தானே.." கூறு கெட்ட மனம் நேற்று காலையில் இருந்தே அடித்துக் கொண்டு தான் இருக்கிறது.

கூடவே அவள் விடுதிக்கு சென்றாவது கவியை பார்த்து பேசி விட்டு வரலாம் என்றால், தலைக்கு மேல் வேலைகள் அவனை இழுத்துக் கொண்டது. சரி இன்றாவது அவள் வருவாள் என்று எதிர்ப்பார்திருக்க, பெற்றோர் இருவரும் பேசிக் கொண்டதை கேட்டதும் மனம் பிசைந்தது.

"என்னங்க சொல்றீங்க, உங்களுக்கே தெரியலயா.." பதட்டமாக மித்ரா கேட்கவும் சட்டென கோவம் வந்து அவளை முறைத்த ஆதி,

"எல்லாத்துக்கும் இப்டி டென்ஷன் ஆகி ஒரேடியா படுத்துக்கலாம்னு நெனப்புல இருக்கியா டி.. எத்தன தடவ சொல்றது எதுக்கெடுத்தாலும் டென்ஷன் ஆகாதேன்னு, இன்னும் இளமை ஊஞ்சல் ஆடுதுனு நினப்போ.." சினமாக எகுறவும், அதன் பிறகு மித்ரா வாய் திறக்கவில்லை என்றாலும், கவியை எண்ணி கவலையாக தான் இருந்தது.

இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த ஆத்விக்கு அதற்கு மேல் உணவு இறங்கவில்லை. பாதி உணவில் இருந்து எழுந்த மகனை பார்த்த மித்ரா,
"ஆத்வி ஏன் சாப்பிடாம எழுந்திரிக்கிற என்னாச்சி சாப்பாடு பிடிக்கலயா.." ஆதி திட்டி சிறிது நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் மகனிடம் பதறி ஓடிய மனைவியை என்ன செய்தால் தகும் என்ற எண்ணத்தில் பார்த்திருந்தான் ஆதி.

"இல்ல மாம்.. பசிக்கல நேரமாச்சு நான் ஆபிஸ் கிளம்புறேன்.." என்றபடி அவன் வெளியே செல்லப் போக, காவலர்கள் இருவர் அவன் வீட்டு வாசலில் தயக்கமாக நின்றிருந்தனர்.

அவர்களை யோசனையாக பார்த்த ஆத்வி, "என்ன இன்ஸ்பெக்டர் காலைலயே வீட்டுக்கு வந்துருக்கீங்க, ஏதாவது முக்கியமான விஷயமா.." என்றான் சரியாக.

"ஆமா சார் முக்கியமான விஷயம் தான், அதான் யாதவ் சாரை பாத்துட்டு போக வந்தோம்.." என்றார் அவர்.

"அவனையா.. அவன் இப்போ ஊர்ல இல்லையே, என்ன விஷயம் என்கிட்டே சொல்லுங்க.." என்றான் விரைப்பானக் குரலில்.

"அது வந்து சார், யாதவ் சார் கம்பனில வேலை பாக்குற ஒரு பொண்ண யாரோ கடத்திட்டு போய் ரேப் அட்டம்ட் பண்ணிருக்காங்க.. அதுல அந்த பொண்ணு அவன்கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி பண்ணி இருக்கும் போல, மாடில இருந்து தவறி விழுந்து இப்ப உயிருக்கு போராடிட்டு இருக்கு சார்.. இதை பத்தி சார்க்கு இன்ஃபார்ம் பண்ண தான் வந்தோம்" என்றனர் பம்பிக் கொண்டு.

"என்ன சொல்றீங்கழ் யாரு இப்டி ஒரு வேலைய பாத்ததுன்னு கண்டு பிடிசீங்களா..? சரியா எத்தனை மணிக்கு இந்த இன்சிடெண்ட் நடந்துச்சு..? பாதிக்கப்பட்ட பொண்ணு இப்ப எப்டி இருக்கு. அந்த பொண்ணோட வீட்ல இன்ஃபார்ம் பண்ணியாச்சா..? எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் செஞ்சி இருக்கீங்க..? அடுக்காக கேள்விகளை தொடுத்தான் ஆத்வி.

"இல்ல சார், அந்த ராஸ்கல் நாங்க போறதுக்கு முன்னாடியே எல்லா தடயத்தையும் அழிச்சிட்டு தப்பிச்சி போய்ட்டான்.. அவன் யாருனு இன்னும் கண்டு பிடிக்கல, அந்த பொண்ணுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல சார்..

இங்கிருந்து இருவது நிமிஷ டிஸ்டன்ஸ்ல இருக்க பெண்கள் விடுதில தான் அந்த பொண்ணு தங்கி இருக்கு.." காவலர் உரைக்க,

"இருபது நிமிஷ டிஸ்டன்ஸா.." தனக்குள் முணுமுணுத்த ஆத்வி,
"என்ன சொல்றீங்க, அந்த பொண்ணு பேரு.." என்றான் தான் நினைப்பது போல எதுவும் தவறாக நடந்திருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு.

"ஸ்வாதி சார்.." என்றதும் அதிர்ச்சியானது அவன் மட்டுமில்லை. அவன் பின்னே பேச்சி சத்தம் கேட்டு வெளி வந்த ஆதி மித்ரா இருவரும் தான்.

"ஐயோ.. என்ன சொல்றீங்க.. இப்ப அந்த பொண்ணு எப்டி இருக்கா, அவக்கூட இன்னொரு பொண்ணு இருந்தாளா, அவ இப்ப எப்டி இருக்கா.." பதட்டத்தில் மித்ரா கேட்க,

"ஆமா மேடம் கூட ஒரு பொண்ணிருக்கு, பாக்கவே ரொம்ப பாவமா இருக்கு.. அந்த பொண்ணோட பிரண்டு போல, கேக்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அழுதுட்டே அது பாட்டுக்கு தனியா புலம்பிட்டு இருக்கு.." என்றதும். அவர்கள் சந்தேகம் ஊர்ஜிகமாகிப் போக, கவியின் நிலையை நினைத்து மிகவும் கவலையாகிப் போனது.

ஆத்வியின் இதயமோ தாறுமாறாக துடித்து தவித்துப் போனது. "டாட், மாம பாத்துக்கோங்க இந்த டைம்ல இவங்க அங்க போறது சரிவராது, நான் போய் என்னனு பாக்குறேன்.." அவசரமாக உரைத்த ஆத்வி, அவர்களின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் மின்னல் வேகத்தில் கிளம்பி இருந்தான்.

******

மருத்துவர் கூறி சென்று ரெண்டு மணி நேரம் முழுதாக கடந்து விட்ட நிலையில், கவியின் தைரியம் மொத்தமும் மண்ணில் புதைந்த புதையலாக, அதல பாதாளத்தில் மறைந்து காணாமல் போனது.

'ஸ்வாதி பிழைத்து வந்தால் அவளுக்காக தானும் உயிருடன் இருப்பேன், இல்லையேல் அவள் உயிர் பிரியும் மறுநொடி, என் உயிரும் பிரிந்துவிடு...' என்ற முடிவை தெளிவாக எடுத்து விட்டாள் போலும்.

அத்தனை இருக்கைகள் போடப்பட்டு இருந்தாலும் அதையெல்லாம் தவிர்த்து விட்டு, டைல்ஸ் தரையில் ஓரமாக காலைக் குறுக்கியபடி வதங்கிய கொடியாக, கடைசியாக பார்த்த அதே உடையில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தோட, பார்க்கவே பரிதாபமான நிலையில் படுத்திருந்த கவியை கண்டு, இதயத்தில் ரத்தம் கசிந்தது ஆத்விக்கு.

அவள் இருக்கும் மனநிலையில் அவளை தொந்தரவு செய்ய விரும்பாதவன், நேராக மருத்துவரிடம் சென்று ஸ்வாதியை பற்றிய விபரங்கள் கேட்டறிந்தவனாக, உடனே அவளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சையினை செய்யக் கூறியதோடு, மொத்த பணத்தையும் கட்டிவிட்டு கவியிடம் வந்த நேரம், அவளிடம் எந்த மாற்றமுமின்றி திறந்திருந்த கண்களில் மட்டும் கருமணிகள் உருண்டோடப் படுத்திருந்தாள்.

மெதுவாக தன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவனை அடையாளம் கண்டு கொள்ளும் அளவு கூட, உணர்ச்சிகள் இல்லை அவளிடம்.

"கவிஇஇ.." அழுத்தமாக அவள் பெயரை உச்சரிக்க, காதில் விழுவது போலில்லை. சுற்றியும் பல விதமான சத்தங்கள் எழுப்பி அவளை பைத்தியம் பிடிப்பதை போல் ஆக்க, காதில் பொருத்தி இருந்த கருவியை பிடுங்கி, வெறியாக தூக்கி வீசி இருந்தாள்.

ஒரு மூலையில் அந்த மெஷின் இருப்பதை கண்டவன், ஓடி சென்று அதனை எடுத்து வந்து படுத்திருப்பவளின் காதருகே கொண்டு செல்ல, விழிகளை உயர்த்தி அவனை கண்டவளுக்கு அத்தனை வெறுப்பு. ஆனால் வாய் பேசவில்லை அவனிடம் பேசவும் தோன்றவில்லை. அவனை பார்க்கப் பிடிக்காமல் சோர்வாக கண்மூடிக் கொண்டாள் கவி.

கவியின் அந்த சிறு செயலே, அவளது மனநிலையை உணர்த்திட, இருந்தும் இவள் இப்படியே இருந்தால் என்னாவது என்ற எண்ணத்தில் "கவி எந்திரி.." என்றவனுக்கு தான் பாசமாக பேச தெரியவில்லையோ என்னவோ!

"கவி என்கூட எழுந்து வா சாப்ட்டு பிரெஷாகிட்டு வரலாம்.." அவளை தட்டி எழுப்ப, அவன் கையை தட்டி விட்டு மேலும் தன்னைக் குறுக்கிக் கொண்ட கவி,

"என்ன தொல்லை பண்ணாம, தயவு செய்து இங்கிருந்து போய்டுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.." கண்களை மூடியபடியே கத்த, ஆத்வி அதை கேட்க வேண்டுமே!

"உன்கிட்ட பொறுமையா கெஞ்சிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.." என நினைத்து அவளை அப்படியே கையில் ஏந்திக் கொள்ள, அவனிடம் மல்லுகட்டி கை கால்களை உதறிக் கீழிறங்க கூட தெம்பின்றி, அவளுடல் மொத்தமாக வலுவிழந்து போனது.

"கீழ இறக்கி விடு, எதுக்காக என்ன தேடி வந்து சித்ரவதை பண்ற.. அதான் உன்வீட்டுக்கு நான் வரலையே அப்புறம் ஏன் இப்டி பண்ற, என் ஸ்வாதிகிட்ட போகணும் என்ன விடு.." கோவத்தில் பேச வேண்டிய வார்த்தைகளும் அழுகையில் பாவமாக வெளிவந்தது.

"ஏய்.. கொஞ்சம் வாய மூடு, உன்ன ஒன்னும் நான் கடத்திட்டு போகல, அமைதியா வா.. நீ இருக்க நிலைல பேசி பேசியே செத்திட போற.." ஆத்வி.அதட்டலாக கத்த, அந்த சத்தத்தின் அதிர்வு தாங்காமல் மெல்ல மெல்ல மயக்கத்திற்கு சென்றாள் கவி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 36
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top