• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
173
Reaction score
152
Points
43
அத்தியாயம் -39

பார்த்தசாரதியின் குரலைக் கேட்டதும் "சொல்லுங்கப்பா" என்றான் அமைதியாக.

"இவ்வளவு நாழியும் நீ அம்மாகிட்ட பேசிண்டு இருந்தத நானும் கேட்டுட்டு தான் இருந்தேன்.

உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு ரொம்ப நாளா என் மனசு அடிச்சிட்டுருந்தது வெங்கட்டா. அந்த சமையத்துல அது நமக்கு தேவை இல்லாத விஷயம்னு விட்டுட்டேன், இப்ப நீ அம்மாகிட்ட பேசும் போதுதான் திரும்ப அந்த விஷயம் நேக்கு நியாபகம் வந்துது.

நீ சொன்ன ஆளுக்கும் இதுக்கும் ஒத்துப்போகுமானு நேக்கு தெரியலை. இருந்தாலும் சொல்றேன்"

என்றதும் வெங்கட் யோசனையாக புருவத்தை உயர்த்தி தந்தை சொல்வதை உன்னிப்பாக கேட்கலானான்.

"நம்ம எதிர்த்த ஆத்து பையன் இருக்கான் இல்லையா, அவன் சாதாரணமான ஆள் இல்லை, கொலைகாரப் பாவி. புனித ஸ்தலம்னு கூட பாக்காம அத்தனை பேர் கூடி இருக்கச்ச, ரெண்டு கொலைகளை செஞ்சிட்டு அசராம நின்னது இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு, அதுல ஒருத்தன் போலீஸ்க்காரனும் கூட"

பார்த்தசாரதி அன்று பெருமாள் கோவிலில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிட, இதனைக் கேட்ட பரிமளத்திற்கு மிகுந்த அதிர்ச்சியில் இதயமே நின்று விட்டதை போல் பக்கென்று ஆனது.

"அதுமட்டும் இல்லை டா, ஒருமுறை நம்ம குழலி வெளிய போனபோது மழைல டூவீலர் பஞ்சர் ஆகி நடுரோட்ல நின்னபோது, அவன் தான் பத்திரமா கொண்டு வந்து ஆத்துல இறக்கி விட்டதா அம்மா சொன்னா.

சரி நம்ம குழந்தைக்கு உதவி செஞ்சதா உன் அம்மா சொன்னாளே, கூடவே அவனுக்கு கல்யாணம் கூடி வரலை ஜாதகத்துல தோஷம் கீஷம் இருக்க போகுதுனு, எப்பவும் நம்ம ஊர்ல உள்ள ஆட்களை என்கிட்ட கூட்டிட்டு வர மாதிரி, ஒருமுறை நம்ம ஆத்துக்கு அவனை ஜாதக விஷயமா அம்மா கூட்டிட்டு வந்தா.

அப்போ அவனை பத்தி எதுவும் தெரியாததால உள்ள விட்டபோதே நேக்கு அவம்மேல சரியான அபிப்ராயம் இல்லை. நம்ம குழலிய வேற அவன் ஒரு மாதிரி பார்த்தான். அப்பவே மனசு படபடப்பா இருந்துது.

சரி எங்கே உன் அம்மாகிட்ட எல்லாத்தையும் சொன்னா பயப்பட போறான்னு, இனிமே அவங்கிட்ட பேச்சி வார்த்தை வச்சிக்கக்கூடாதுன்னு மட்டும் கண்டிப்போட சொன்னேன்.

அதுக்காக அவன் நம்ம குழந்தைய பார்த்ததை மட்டும் வச்சி அவன் தான் அவளை கடத்தி இருப்பான்னு என்னால உறுதியா சொல்ல முடியல. அதேமாதிரி ஒரு போலீஸ்காரனையே அத்தனை பேர் முன்னாடி அவ்வளவு தைரியமா வெட்டினவனை பத்தி உங்கிட்ட சொல்லி, வீணா உன்னையும் பிரச்சனைல இழுத்து விட மனசு வரல வெங்கட்டா.

உனக்கு வேணும்னா உன் வேலை பெருசா இருக்கலாம் ஆனா எங்களுக்கு நீதான் பெருசு"

அவர் தவிப்பாக ஆரம்பம் முதல் நடந்தது அனைத்தையும் சொல்ல, இங்கு வெங்கட்டின் எண்ணங்கள் முற்றிலுமாக மாறி இருந்தது.

"சரிப்பா, இந்த பிரச்சனைய நான் என்னனு நிதானமா விசாரிச்சி டீல் பண்ணிக்கிறேன். நீங்க கவலை படாம உடம்பை பாத்துக்கோங்க. அம்மாவையும் ஏதாவது சொல்லி சமாளிங்க வைக்கிறேன்" என்ற வெங்கட் தற்காலிகமாக ருத்ரனை கைது செய்யும் திட்டத்தை தள்ளி வைத்தான்.

"ராஸ்கல் இவ்வளவு நாளும் என் வீட்டு எதிர்லே இருந்துட்டு எனக்கே விபூதி அடிச்சிருக்கியா.. என் தங்கச்சிய மட்டும் நீதான் கடத்தி இருக்கேன்ற உண்மை தெரியட்டும் மவனே கூண்டோட தூக்கி ஒருத்தன் விடாம என்கவுண்டர் பண்ணி உங்க சாம்ராஜ்யத்தையே அழிக்கிறேன்"

கடும்கோபத்துடன் சபதம் எடுத்துக்கொண்டு வந்தவன் தான், தற்போது பைக்கிள் அமர்ந்து ருத்ரனின் வீட்டின் அமைப்பை எல்லாம் கூர்ந்து அளந்து கொண்டிருந்தான் வெங்கட்.

மிகுந்த தலைவலியோடு வீட்டிற்கு வந்தவனுக்கு சூடாக டீயோ காப்பியோ அருந்தினால் நன்றாக இருக்கும் என தோன்ற யார் கொடுப்பது?
தாமாக சென்று ஸ்டவ்வை ஆன் செய்து டீ போட்டுக் குடிக்கும் அளவிற்கு தெம்பின்றி உடலில் அசதி வாட்டியது.

அதே அசதியோடு அறைக்கு வந்தவனுக்கு மேலும் தலைவலியை அதிகப்படுத்தும் விதமாக, வெறும்தரையில் தனது துணிமூட்டையை தலைக்கு முட்டுக்கொடுத்து, தாவணியை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருப்பவளைப் பார்த்து ஏகத்துக்கும் பிரஷர்க் கூடியது.

இங்கு வந்த நாளில் இதே கூத்துதான். அவன் பொருட்களை எதையும் உபயோகப்படுத்த மாட்டேன் என்று வீம்பாக இருக்கிறாள் காவேரி.

தற்போது இருக்கும் நிலையில், ஹைட்ராலிக் மெஷினில் தலையை விடுவது போல், தாமாக அவளிடம் பேசி வாங்கிக்கட்டிக்கொள்ள விரும்பாதவன், யூனிபார்மை கூட கழட்டாமல் கால்கள் தரைதொட்ட வன்னம் முதுகை மட்டும் மெத்தையில் சாய்த்து இரு கைகளாலும் முகத்தை மூடி அமைதியாக படுத்துக் கொண்டான் வெங்கட்.

வெங்கட் வந்தது, வந்ததும் சற்று நேரம் நின்று தன் முதுகையே வெறித்தது, பின் மெத்தையில் பொத்தென அமர்த்தது வரை உறங்காமல் கண்களை மட்டும் மூடிக்கொண்டு படுத்திருந்த காவேரிக்கு நன்கு தெரியும்.

ஆனாலும் எதுவும் அறியாதவள் அதுவரை படுத்து இருந்த காவேரி, லேசாக தலையை மட்டும் தூக்கி திரும்பிப் பார்க்க, அவளுக்கே சற்று பாவமாக தான் தோன்றியது.

இருந்தும் என்ன செய்ய, எப்போது தன்னை வார்த்தையால் நோகடிப்பான், தரைகுறைவாக பேசி மேலும் காயப்படுத்துவான் என்று ஒன்றும் விளங்காதவள் திரும்பிப் படுத்து அவனையே பார்த்திருந்தாள்.

கால்களை வெகுநேரம் தொங்க விட்டு தூங்கியதும் காலையில் இருந்து நிற்காமல் ஓடியது எல்லாம் சேர்த்து கால்கள் மரத்து விட்டதை போல் ஆனது போலும்.

ஸ்ஸ்.. காலை நகட்ட முடியாது உறக்கத்தில் முணுகள் ஒலி கேட்டு வெடுக்கென எழுந்து அமர்ந்த காவேரி மனது கேளாமல், அவன் உறக்கம் கலையாமல் மெல்ல கால்களை தூக்கி உயர வைத்த நேரம், சூறைக்காற்றாய் சுழண்டு இழுத்துக்கொண்ட ஆடவனின் இறுகிய அணைப்பிற்குள் திமிரிக்கொண்டிருந்தாள்.

"எனக்கு ஒன்னுன்னா உன்னால தான் தாங்க முடியலையே டி, அப்புறமும் எதுக்கு முடிஞ்சி போனதை நினைச்சி நீயும் வருத்தப்பட்டு என்னையும் வருத்தப்பட வச்சி, உன்ன நீயே தனிமை படுத்திக்கிற.

உன் மனசுல என்ன இருக்கோ எங்கிட்ட தெளிவா பேசு டி. இனிமே தெரியாம கூட உன்ன காயப்படுத்த நினைக்க மாட்டேன்"

அடங்காமல் திமிறிய கன்னுகுட்டியின் கன்னத்தில் நீண்ட நாட்கள் பிறகு ஆசைதீர முத்தம் வைக்க, அவன் முத்தத்தை ஏற்க முடியாமல் தவித்தாள் காவேரி.

"என்னைய விடுய்யா.. ஐயோ பாவம்னு ஒன்னைய எப்ப நெருங்கி வந்தாலும் என் நிலைமை தான் மோசமா மாறுது. என் வாழ்க்கைல ந்நா அனுபவிச்ச காயத்தைக் கூட இதுதான் விதியோன்னு என்னால கடந்து போய்ட முடியும்.

ஆனா நானே என் தலைல மண்ணை அள்ளி கொட்டிக்கிற விதமா, ஒன்னைய மனசுல நினைச்சி பெரிய பாவத்தைப் பண்ணிப்புட்ட"

என்றவளின் கனத்த உப்பு தண்ணீர் கன்னம் தாண்டி ஆண் நெஞ்சை கரிக்க வைத்தது.

"என்ன டி பாவம் அதுஇதுன்னு பேசுற. நான் என்ன வேணும்னா உன்ன தள்ளி வச்சி நோகடிச்சேன். உன்ன நோகடிசிட்டு நான் மட்டும் நிம்மதியா இருந்திருப்பேன்னு நினைக்கிறியா அம்மு.. உன் மனசை தொட்டு சொல்லு" ஏக்கமாக அவள் முகம் பார்த்தான்.

முன்பு அவன் என்ன பேசினாலும் கபடம் இல்லாமல் சிரித்துக்கொண்டே ரசிக்கும் காவேரி இல்லையே இவள்.

காதல் என்றாலே கல்லடியும் செருப்படியும் தாண்டிய கேவலமான ஏச்சிப்பேச்சிளும் அவமானமும் மட்டுமே மிஞ்சும், இதற்குமேலும் காதல் என்ற வார்த்தைக்கு நெஞ்சுருகி மேலும் மேலும் அவமானத்தில் கூனிக்குறுகக் கூடாது என்ற முடிவை எப்போதோ எடுத்து விட்டாள்.

"என் மனசை தொட்டு சொல்ற அளவுக்கு இங்க ஒன்னுமே இல்ல. இதுல ஒன்னைய மட்டுமே குறை சொல்லி என்னை ந்நா நியாயப்படுத்திக்கவும் விரும்பல. ஒருவிதத்துல பாத்தா முழுக்க முழுக்க எம்மேல மட்டும்தே தப்பு, உம்மேல எந்த தப்பும் இல்ல.

ஆரம்பத்துல இருந்தே நீயி என்னைய புடிக்கலைனு சொல்லி விலகிதே போன. ஆனா அது இந்த மரமண்டைக்கு புரியாம இம்புட்டு தூரம் வந்து தேவை இல்லாம உனக்கும் உன் குடும்பத்துக்கும் பிரச்சனைய உண்டாக்கிட்டேன்.

அந்த கோவத்துல தானே என்னைய நீயும் கண்டபடி பேசிட்டே. உன் எடத்துல நானே இருந்திருந்தாலும் பிடிக்காத ஒருத்தன் தொடர்ந்து தொல்லை செஞ்சிருந்தா நானும் வாய்க்கு வந்ததை பேசி ஒரேடியா அவனை என்கிட்டருந்து விளக்கித்தள்ளதே பாத்திருப்பேன். அதையேதே நீயும் செஞ்சிருக்க"

வலி நிறைந்த புன்னகைவுடன் சொன்னவளை கண்டு வேதனையாக விலகி எழுந்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் வெங்கட்.

"எனக்கு என் வேலை மட்டும் தான் பேஷன். படிக்கும் போதும் சரி, படிச்சி முடிச்சி வேலைக்கு சேர்ந்த பிறகும் சரி காதல் கீதல்னு எந்த பொண்ணுகிட்டயும் போய் நின்னது இல்ல.

காரணம் எனக்கு வேலை மட்டுமே பிடிச்சதால இல்லை. என் குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சதால அவா சொல்ற பொண்ணை தான் கல்யாணம் கட்டிக்கணும்னு தீர்க்கமான முடிவுல எந்த சலனமும் இல்லாம இருந்தேன்.

அப்டி இருந்த சமையத்துல தான் திடீர்னு ஒரு பொண்ணு வந்து என்னை காதலிக்கிறேன்னு சொல்லி ஆசையா பேசி நெருங்கி நெருங்கி வந்தா.

என்னை பார்த்ததும் அந்த பொண்ணுக்கு மட்டும் எம்மேல ஈர்ப்பு ஏறப்படல, எனக்கும் அவளை பார்த்ததும் இனம் புரியாத ஈர்ப்பு வந்தது. அவ ஒவ்வொரு முறையும் என்னை விழுங்குற பார்வை பாக்கும் போதும் ஏதோ சொல்ல முடியாத உணர்வு என் இதயத்தை தாக்கி என்னவோ செய்யும். கூடவே என் வேலை குடும்பம் நியாபகமும் வந்தது.

உனக்கு நான் தான்டா பொண்ணு பாத்து கட்டி வைப்பேன்னு எனக்கு விபரம் தெரிஞ்ச நாளுல இருந்து என் அம்மா என்கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பா.

போதா குறைக்கு இங்க குளம் கோத்ரம் நிறைய பாப்பாங்க, ஏன் வீணா காதல் அது இதுன்னு வீணா தலையை விட்டு பெத்தவா மனசை நோகாடிக்கணும்னு, என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணின பொண்ணுங்கள கூட நிராகரிச்சுட்டு வந்து இருக்கேன்.

ஆனா அவளை மட்டும் அப்டி ஈஸியா நிராகரிக்க முடியலே. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம வரற்து தான் காதல். அந்த காதல் அவகூட இருந்த அந்த மூணு மாசத்துல எம்மேல நிலையா வந்தாச்சு. உண்மைய சொல்லப்போனா, எந்நேரமும் மச்சான் மச்சான் ஆசையோட கூப்பிடற அந்த வார்த்தைக்காகவே பிளாட் ஆனேன் தெரியுமா!!"

என்றவனின் உதட்டில் காதல் புன்னகை.

பெத்து வளத்து இத்தனை வயசு வரைக்கும் என்னை ஒரு குழந்தை பையனை போல சீராட்டி வளர்த்த பெத்தவங்க ஆசை நம்பிக்கைய குலைக்கவும் மனசு வரல. கள்ளம் கபடம் இல்லாம என் பின்னாலே சுத்தி சுத்தி வந்த அந்த பொண்ணோட மனசுல தேவை இல்லாத நம்பிக்கைய விதைக்கவும் என் மனசு இடம் கொடுக்கல. என் வேலை முடிஞ்சதும் அவகிட்ட சொல்லாம கொள்ளாம அவசரமா அங்கிருந்து வந்துட்டேன்.

காரணம் கடைசியா ஒருமுறை அவ முகத்தை பாத்தாலும் எங்கே என்னையும் அறியாம என் காதலை அவகிட்ட வெளிப்படுத்திடுவோமோன்ற பயத்துல தான்.

அப்டி வந்தும் என்னால நிம்மதியா இருக்க முடிஞ்சிதா.. அவளை மறக்க முடிஞ்சிதா.. இல்லையே!!

அனுதினமும் அவ நியாபகம். கனவுல கூட மச்சான்னு ஆசையா வந்து வெக்கத்தோட எம்முன்னாடி நிக்கிற என் கட்டச்சி என்னை ஒவ்வொரு நாளும் உயிரோட சித்ரவதை செஞ்சா. மனசுக்குள்ளே அவளை நினைச்சி துடிச்சுகிட்டு இருந்தேன்.

பச்சையா ஒன்னு சொல்லட்டா.. இதுவரைக்கும் நான் அறிஞ்சி அவமேல என் நிழல் கூட தீண்டினது இல்ல. அவ்வளவு ஏன் அவளை விரசமா கூட பார்த்ததில்லை.
ஆனா ஒவ்வொரு ராத்திரியும் நான் கண்ணை மூடினா அவளோட ஊனும் உயிரும் ஒன்னா கலந்து ஒன்னா படுக்கையில உருண்டு, பன்னு போல கும்முனு இருக்கும் அவ கன்னம் கடிச்சி, உதட்டை கடிச்சி, கழுத்தைக் கடிச்சி, என்னை சுமக்குற அவ நெஞ்சில காதல் சரசம் செஞ்சி, அவ சம்மதத்தோட அவளை கசமுசா பண்றதுபோல ஏதேதோ கனவு வந்து, குப்புனு அவ நினைப்புல உடம்பு முழுக்க வியர்க்க வைக்கும்.

பதறிப் போய் எழுந்து பார்த்தா, அவசரமா பாத்ரூம் ஓடுற அவஸ்தை இருக்கே.. ஷபா.. ரொம்ப டார்ச்சர் தெரியுமா அவ"

மோகநிலையில் வேகமாக தலையை உளுக்கி ஒரு மார்க்கமாக உடலை முறுக்கிக் கொண்டவனை குருவி வாய் பிளந்து அதிர்ச்சியாக பார்த்திருந்த அழகு காவேரிப் பெண்ணைக் கண்டு நாள் முழுக்கத் திகட்டாமல் ரசிக்கலாம்.

"இப்டி கனவுல கூட அவ காதலை காட்டி என்னை விடாம துரத்துல என் கட்டச்சிய எப்டி நான் விட்டு கொடுக்க முடியும். அவ என்னை மனசுல சுமத்துகிட்டு அவ கிராமத்துல இருந்தது உண்மைனா!

நானும் அவளை மனசுல சுமந்துகிட்டு சரியான சந்தர்ப்பம் பாத்து என் அம்மா அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கி அவங்க விருப்பத்தோட அவ ஊருக்கு போய் பொண்ணு கேட்கணுன்னு காத்திருந்ததும் உண்மை தான்.

இதுல என்ன தப்புன்னா என் குடும்பத்தை பத்தி யோசிச்சி என் பக்கம் இருக்க பிரச்சனைகளை பத்தி மட்டும் யோசிச்சேனே தவிர, அவளுக்கு இருக்க பிரச்சனைகளை பத்தி எதையும் தெரிஞ்சிக்காம விட்டது தான்.

அவ துக்கத்துல துணையா இல்லாம விட்டுட்டேன். யாரு இல்லாம தனி ஒருத்தியா அவ்வளவு தூரத்துல இருந்து என்னை தேடி வந்த போதே அவளை ஆதரிக்காம தனியா தவிக்க விட்டு பெரும் பாவத்தை பண்ணிட்டேன்.

அவ என்ன நிலைமைல இருக்கான்னு புரிஞ்சிக்காம, தேவை இல்லாம என் கோவத்தை அவகிட்ட காட்டி, தப்பா பேசி, அவளை துடிக்கத் துடிக்க வச்சி வார்த்தையால நோகடிச்சிட்டேன்.

என்னை தேடி வந்த என் தேவதைய நான் குத்துக்கல்லு போல உயிரோட இருந்தும் என்னால அவளை பாதுகாக்க முடியல. தைரியமா இவ என் காதலின்னு என் குடும்பத்து ஆட்கள்கிட்ட சொல்ல முடியல.

அப்டி சொன்னா அம்மா அப்பா தாங்கிக்க மாட்டாளேன்ற பயம். அவங்க நம்பிக்கைய நான் உடைச்சிருந்தா இன்னைக்கு என் தோப்பனார்க்கு வந்த ஹார்ட் அட்டாக் அன்னைக்கே வந்திருக்க வாய்ப்பு இருக்கு.

ஆனா அதுக்காக நம்பி வந்த பொண்ண நிற்கதியா நிக்க வச்சது சரியும் இல்ல.

என் கட்டச்சி மேல யாரோ ஒருத்தனுக்கு இருந்த கரிசனை கூட எனக்கு இல்லாம போச்சேன்னு எம்மேலையே எனக்கு கோபம். அது நான் சாகுற வரைக்கும் தீராது.

என்றவனின் ஆதங்கம் அவனையும் மீறி ஒருத்துளி கண்ணீராக மாறி கண்ணை தாண்ட வந்ததை சட்டென புறங்கையால் துடைத்து தன்னை சமன் படுத்திக்கொண்டான்.

அதுவரைக்கும் தன்னவன் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த காவேரி கண்களிலும் கண்ணீர் மழை.

"இனிமே ஒரு நொடி கூட என் கட்டச்சிய காயப்படுத்த போறது இல்ல. அப்பா உடம்பு கொஞ்சம் நன்னா தேறி வந்ததும் அவளை பத்தி பேசி இவதான் என் ஆதியும் அந்தமும் தெளிவா சொல்லுவேன்.

கல்யாணம் பண்ணிப்பேன். அவளை சந்தோசமா பாத்துப்பேன். இதுவரைக்கும் யாரும் இல்லாம தன்னந்தனியா வளந்தவளுக்கு நானே அனைத்து உறவுகளுமா கடைசி வரைக்கும் துணை நிற்பேன்.

என் முதுகுல தாங்கி அப்பா பாசத்தை காட்டுவேன். என் மடில தாங்கி அம்மாவோட அன்பை கொடுப்பேன். தோல்ல தாங்கி தோழனா காப்பேன். என் நெஞ்சில தாங்கி காதலனா சில்மிஷம் செய்வேன். என் மனசுல தாங்கி ஒரு நல்ல கணவனா ஆயில் முழுக்க என் மனைவியோட சுக துக்கங்கள்ல உறுதுணையா இருப்பேன்.

இனிமே என் குடும்பம்னா அது நீ இல்லாம இல்லவே இல்ல காவேரி"

இறுதியாக அவள் புறம் திரும்பி நெற்றியில் அழுத்தமான முத்தத்தைப் பதித்தான் ஆத்மார்த்தமான காதலுடன்.

அதுவரை வெங்கட் சொல்ல சொல்ல ஒவ்வொரு வார்த்தைக்கும் மூச்சித் திணறலுடன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கேட்டிருந்தவள், கடைசியாக அவன் சொன்ன வார்த்தையும் தந்த முத்தமும், கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகையெல்லாம், காற்றாற்று வெள்ளமாய் கரைபுரண்டு தன்நெஞ்சை இறுகப்பற்றி சத்தம் போட்டு வெடித்து அழுது விட்டாள் காவேரி.

மூச்சிமுட்டும் காதலோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் வெங்கட்.

தொடரும்.
 
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 39
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
9
Reaction score
7
Points
3
I

Ipo pakam pakama vasanam pesitu iruka policekaar ....poi polappa paru man
 
Top