• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
173
Reaction score
152
Points
43
அத்தியாயம் - 40

அன்றைய ஊடலுக்குப் பின் விடிந்ததும் எப்போதும் போல் இயல்பாக பேசிய கணவனை கண்டு கோபம் பொங்கினாலும், தானாக காளைகன்று கொஞ்சிக் குழையும் போது வீம்பாக எட்டி நிறுத்துவது சரியல்ல என அவள் மனம் உரைத்ததோ என்னவோ!! இரவில் அரைகுறையாக விட்ட குத்துச்சண்டை விளையாட்டு மதியம் வரை ஓயாமல் மங்கையின் சிணுங்கலுடன் நடைபெற்றது.

மனைவிக்கான கடைமையை அவளே வியப்புக்கொள்ளும் அளவிற்கு, அவனுக்கு தெரிந்த விதத்தில் ரசிக்க வைக்கும் அழகான தருணங்களை உருவாக்கி தப்பும் தவறுமாக சரியாக செய்தான் ருத்ரங்கன்.

வெளியே பல இடங்களுக்கு அழைத்து சென்றான். அவன் கை கோர்த்து நடந்து அங்கும் இங்கும் காட்டி சிரித்து ஏதோ பேசி தோள் உரச நடப்பாள் குழலி.

ரோட்டு கடையில் பிடித்ததை எல்லாம் கூச்சிமின்றி வாங்கி வாயில் போட்டு மென்றவளை சலிப்பாக பார்த்தாலும், கேட்டதை எல்லாம் மறுப்பின்றி வாங்கிக் கொடுத்து அவளின் சிரிப்பை ரசித்தான்.

கருப்பு நிற வேஷ்டியும் காவி நிற வேஷ்டியும் மட்டுமே அதிகமாக கட்டுபவனுக்கு ஜீன்ஸ் பேண்ட் டீ-ஷர்ட் போட்டு அழகு பார்க்க, சங்கடமாய் போனது அவனுக்கு.

"இப்ப எதுக்கு டி இதெல்லாம் பண்ணிட்டு இருக்க. நாக்கு இதுமாதிரி போட்டு பழக்கமில்ல"

டீஷர்ட் வழியே திமிறிப் புடைத்த பெரிய புஜங்களை கண்டு எச்சில் விழுங்கினாள் குழலி.

"எப்பவும் ஒரே வேஷ்டி சட்டை தான், இந்த ட்ரெஸ் காம்போவும் உங்களுக்கு ரொம்ப நன்னா இருக்கு ண்ணா.. எங்கூட வெளிய வரும் போது இனிமே இப்டி தான் டீசென்ட்டா ட்ரெஸ் பண்ணிட்டு வரணும்" செல்லக் கட்டளையோடு டீஷர்ட் பற்றி கசக்கிவளின் இடை அவனது முரட்டுக் கையில் கசங்கியது.

"நிஜமாவா குயிலுஊ.. நல்லா இருக்கா" மனைவியின் ரசனையில் கண்கள் மின்னியது.

"பின்ன சும்மா சொல்வேனா.. அப்டியே இந்த காட்டுமிராண்டி போல வளத்து வச்சிருக்க மீசை தாடி தலைமுடி எல்லாம் கட் பண்ணிட்டா, இன்னும் ஹான்சமா இருப்பேள் தெரியுமா"

அடங்காது கழுத்து வரை உள்ள வெள்ளிக்கம்பிகள் மின்னும் தலை முடியை வெட்ட சொல்லி எவ்வளவோ சொல்லி விட்டாள், ஏனோ அவள் சொல்லும் அனைத்திற்கும் கிளிப்பிள்ளை போல் தலையாட்டி செய்பவன், தொழிலையும் தலைமுடியையும் மட்டும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்றான்.

"என் தொழிலுக்கு இந்த ஹேர் ஸ்டைல் தான் டி சரி. சும்மா தலை முடியை பின்னுக்குத் தள்ளி அழுத்திவிட்டு ஆளை வெட்டும் போது ஒரு கெத்து வரும் பாரு, என் தம்பிங்களே சொல்லுவானுங்க, அண்ணையா உன்ன அப்டி பாக்க மெர்சலா இருக்கும்னு" சிலாக்கித்து அவன் பெருமையை கூற உதட்டை நெட்டி வளைத்தாள்.

"நேக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கலை" திரும்பவும் அதே இடத்தில் வந்து நிற்க,

"போடி.." என்ற ஒற்றை வார்த்தையில் அவள் நெற்றியில் உள்ளங்கை வைத்து தள்ளி விட்டு சென்றவனை வெறியாக முறைத்து வைத்தாள் தடுமாறி நின்று.

வெட்ட மாட்டேன் என்று அவன் சொன்ன தலை முடியில் எண்ணெய் வைத்து வாரி, இரட்டை சிண்டு போட்டு, முகத்தில் பவுடர் பூசி, மூக்கில் இருந்து கழுத்து வரை மறைத்து வளர்ந்திருந்த தாடி மீசையை அடிக்கடி வேகமாக இழுத்து வலிக்க வைத்து, ஆறடி ஆண்மகனை பொம்மை போல் உருட்டிப் பிரட்டி ஏதேதோ செய்து தன் கோபத்தை எல்லாம் அவன் முகத்தில் காட்டி, இறுதியாக பொட்டு வைத்து களுக்கென சிரித்தவளை பரிதாபமாக பார்த்தது அவன் கண்கள்.

"என்ன டி இதெல்லாம்" கண்ணாடியில் முகத்தை பார்த்து மிரண்டு போனான் ருத்ரன்.

"தொழில் பண்ணும் போது எப்டி வேணா கெத்தா இருங்கோ. ஆனா எங்கிட்ட உங்க கெத்தெல்லாம் செல்லாது. வெட்ட மாட்டேள்னு சொல்லிட்டேளோனோ இனிமே தோணும் போதெல்லாம் இதுதான் தண்டனை"

தாடியை வலிக்க வலிக்க இழுத்து வைத்து விரலில் சுருட்டி ஏதேதோ செய்து அடங்காமல் விளையாடிய மனைவிக்கு, கட்டில் பாடம் நடத்தியே இடுப்பெலும்பை முறித்து விட்டான்.

மன சோகங்களையும் தாண்டிய இன்பமான வாழ்க்கை தான், ஆனாலும் அவ்வப்போது வரும் தனது வீட்டின் நியாபகத்தில் முகம் சுருங்கிப் போகும்.

அன்று மாலையே வீடு திரும்பி விட்டான் ருத்ரன். எப்போதும் போல் தான் அவன் வந்த தோற்றம் பார்த்து பேசாமல் முறுக்கிச் சென்ற மனைவியை எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

"தினமும் இப்டியே போனா என்ன பண்றது ருத்ரா, பேசாம என்ன நடந்தாலும் பரவாயில்லைனு இவகிட்ட உண்மைய சொல்லிடலாமா!!"

மூளையைக் குடைந்து யோசித்துப் பார்த்தான்.

"இல்ல வேண்டா .. அப்டி சொன்னா அழுது சீன் போட்டு ஏதாவது செஞ்சி உன் பாதையை மொத்தமும் திசை திருப்பி விட்ருவா. இன்னைக்கு வந்தவளுக்காக யோசிச்சி உன்னோட இத்தனை வருஷத்துக் கொள்கையை விட்டுக்கொடுக்கப் போறியா..?

மனசாட்சி கேள்வி எழுப்பிட இல்லை என்ற தெளிவோடு தலையை உளுக்கிக் கொண்டான் ருத்ரன்.

பெண் ஆசையே இல்லாது வாழ்ந்தவனுக்கு திடீரென எங்கிருந்தோ வந்து இதயத்தில் ஆழப் புதைந்து ஆட்டிப் படைப்பாள் என்று கனவா கண்டான்.

அவனாக அவளை வம்பிழுத்து நெருங்கி செல்லும் போதெல்லாம் ஏற்படாத குற்றவுணர்ச்சி, அவளோடு கலவியலில் கலந்த பின்பு ஒவ்வொரு நாளும் நெஞ்சில் பாரம் ஏறி குற்றவுணர்ச்சி பெருகி வழிகிறது.

"அவசரப்பட்டு அவளை திருமணம் செய்து அவளின் உணர்வுகளில் விளையாடி விட்டோமோ..?" காலம் கடந்தபின் மூளையில் சுருக்கென உரைக்க, "இதற்கு மேற்பட்டு தன்னவளை எப்படி சமாளிக்கப் போகிறோம்" என்ற சிந்தனையோடே தலையைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தவன் நாசியில் சுவையான நறுமணம் வீசும் டீயின் வாசத்தில் கண்களை திறந்தான்.

"தலைவலியா.. வாயத் திறந்து சொன்னா என்ன? வந்ததுல இருந்து இப்டி அமைதியா படுத்திருந்தா நான் என்னனு நினைக்கிறது"

சிடுசிடுப்பாக கேட்டவளின் கையில் இருந்து டீயை வாங்கிய ருத்ரன், அதனைப் பருகியபடியே அவளையும் இழுத்து பக்கத்தில் அமர்த்திக்கொள்ள, அப்போதும் குழலி முறுக்கிக்கொண்டு தான் இருந்தாள்.

"நான் ஒன்னு கேட்டா உண்மைய சொல்லுவியா குயிலுஊ.." பூடகமாக கேள்வி எழுப்பி அவள் கண்களையே ஆழ்ந்துப் பார்த்தவனை புரியாமல் நோக்கினாள் குழலி.

"திடீர்னு நேனு இல்லாம போனா நீ என்ன செய்வ?" அவள் கண்களை ஆழ நோக்கி அழுத்தமாக கேட்ட கேள்வியில் இதயம் படபடப்பாகிப் போனது.

"ஏண்ணா.. திடீர்னு இந்த கேள்வி.." கலக்கமாக அவனை பார்த்தாள்.

"சும்மா ஒரு பேச்சிக்கு சொல்லேன்"

"சும்மா ஒரு பேச்சிக்கா.. என்ன பாத்தா உங்களுக்கு எப்டி தெரியிது, நீங்க கடைசிவரைக்கும் நேக்கு வேணும்னு மனசார நினைச்சு தான் உங்கள நம்பி நான் என்னையே உங்களுக்கு கொடுத்திருக்கேன். இனிமே என்கிட்ட இதுமாதிரி எல்லாம் கேக்குற வேலை வச்சிக்காதேள், நேக்கு நெஞ்சமெல்லாம் வலிக்கிறது"

ஊசிப் பட்டாசாய் பொறிந்து கடைசியில் கண்ணீரில் மூழ்கிய பேதை அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள, தன்னவளுக்காக ஈரம் சுரந்தது நெஞ்சினில்.

** ** **

"அண்ணையா திரும்பவும் ஒருமுறை நல்லா யோசிச்சி உன் முடிவை மாத்திக்கோயேன்..

முன்னாடியாவது நீ தனியா இருந்தே அதுனால உன்ன பத்தின யோசனை இல்லாம எங்களுக்காகவே வாழ்ந்துட்ட. ஆனா இப்போ உனக்கே உனக்காக வதினா இருக்கு, உனக்கு ஒன்னுன்னா அதால தாங்கிக்க முடியாது"

ருத்ரனின் காலருகில் அமர்ந்திருந்த மதன், கோப்பையில் மதுவை ஊற்றி அவனிடம் குடுத்தான்.

அதனை வாங்கி குடிக்காமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவனின் பதிலுக்காக காத்திருந்தான் மதன்.

"இந்த முடிவை அஞ்சி வருசத்துக்கு முன்னாடியே எடுத்தாச்சு மதனு. இப்போ அதுக்கான நாளும் நெருங்கியாச்சு. யாருக்காவும் என் முடிவை மாத்திக்க முடியாது.

நான் இல்லனா என்ன, அவளுக்காக அவ குடும்பம் இருக்கு. என்கிட்ட அவ இருக்குறதை விட, அவ அவளோட குடும்பத்தோட இருக்கும் போது தான் இன்னும் சந்தோஷமா இருப்பா"

உதடு விரியா புன்னகையோடு நிதானமாக பேசியவனை, பாவமாக பார்த்தான் மதன்.

"இருந்தாலும் அண்ணையா.. உனக்காக நாங்க இத்தனை பேர் இருக்கும் போது நீ எதுக்கு இதை பண்ணனும். நேனே அதை பண்ணிட்றேன் அண்ணையா.." என்ற மதன் சட்டென அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்ள, சற்று நேரம் கழித்து இதமாக அவன் தலை கோதி விட்டான் ருத்ரன்.

"டேய் மதனு.. நல்லா நியாபகம் வச்சிக்கோ, என் இடத்துல இருந்து அடுத்து நீதான் டா எல்லாரையும் தைரியமா வழி நடத்தணும். அதைவிட்டு இப்டி சோக கீதமெல்லாம் வாசிச்சி பொறுப்பை தட்டிக்கழிக்க பாக்காதே.

அவ எப்டியோ போறா அவளுக்கு என்ன செய்யனும்ன்னு எனக்கு தெரியும். இனிமே அவளை பத்தி யாருமே என்கிட்ட பேசக் கூடாது நீங்களும் நினைக்கக் கூடாது"

கட் அண்ட் ரைட்டாக அதட்டலாக சொன்ன பின்னும் வாய் திறப்பானா மதன். ஆனாலும் கேப்விட்டு கேப்விட்டு அவ்வப்போது ஏதாவது சொல்லி தன் மனநிலையை மாற்ற நினைப்பவனை, உயிர் பயம் காட்டி ரெண்டு தட்டு தட்டி அந்நேரம் அடக்கி வைக்கிறான் ருத்ரன்.

உயிருக்கு பயம் கொள்ளும் ஆளா மதன்? இருந்தும் தன் அண்ணையாவிடம் பயந்ததை போல் காட்டி செல்லமாக விளையாடுவதும் வாழ்க்கம் தான்.

ருத்ரனும் விளையாட்டாக பலமுறை துப்பாக்கி குண்டால் அவன் உடலை பஞ்சர் செய்வதும் வழக்கம் தான்.

என்னங்கடா பாசம் இது..?
உங்க பாசத்துல பாய்சன் வைக்க.

** ** **

"கட்டச்சி.. கட்டச்சி.. ப்ளீஸ் டி.. ஒரே ஒரு முறை மட்டும் போதும். அதுக்கு மேற்பட்டு சத்தியமா கேக்க மாட்டேன்"

விடிந்ததில் இருந்து அவள் பின்னே சுற்றி சுற்றி வருபவனை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்ளவில்லை காவேரி.

"ஏய்.. இப்ப எதுக்கு டி ஓவரா பண்ற. அதான் நைட்டே எல்லாம் பேசி உங்கிட்ட மன்னிப்பு கேட்டாச்சில்ல. பதிலுக்கு நீயும் என்ன கட்டிப் புடிச்சி அழுதேல்ல. அதோட நம்ம சண்டை எண்டுக்கு வந்தாச்சு.

ஆனா நீ என்ன எழுந்ததுல இருந்து திரும்ப முறுக்கிட்டு சுத்துற. ஒரே ஒரு டீ உன் கையாள போட்டு தர சொல்றேன், பெரிய இவ மாறி கண்டுக்காம நீ பாட்டுக்கு இருக்க.

இப்ப கடைசியா கேக்குறேன் டீ போட்டு தருவியா மாட்டியா.."

இரவில் இருந்து ஐஸ் வைத்து மனதில் இருப்பவை எல்லாம் ஒன்றுவிடாமல் கொட்டி சமாதானம் செய்தும். விடிந்ததும் முருங்கை மரம் ஏறிக்கொண்டவளை கண்டு பற்களைக் கடித்தான் வெங்கட்.

இரவு பேசிய பேச்சிற்கு அவன் அணைப்பினில் அடங்கி அழுகையை கொட்டியதெல்லாம் உண்மை தான். அதற்காக அவனை மன்னித்து விட்டாள் என்று அர்த்தமாகி விடுமா?

"என்னால ஒங்க வூட்டு சமையக்கட்டுக்கு போவ முடியாது"

"அதைத்தானே தேஞ்சி போன ரெக்கார்டர் மாதிரி ரொம்ப நாழியா சொல்லிட்ருக்க. இது உன் வீடுன்னு நைட்டெல்லாம் சொன்னது உன் மூளைக்கு ஏறலையா..?" அவள் ஒதுங்கி ஒதுங்கி போவது ஆத்திரம் மூண்டது.

"நீயி ஆயிரம் சொல்லு என்னால இந்த வீட்ல மனசு நிம்மதியோட எந்த வேலையும் பாக்க முடியல. பெரியவைங்க சம்மதம் இல்லாம திருட்டுத்தனமா வந்து தங்கி இருக்கேன். நாளைக்கே ஒங்க அப்பா அம்மா இங்கன வந்து பாத்தா என்னையப் பத்தி என்ன நினைப்பாவன்னு யோசிச்சாவே நெஞ்சி பதறுது.

இதுல நீயி வேற, உரிமையா போயி டீ போடு காப்பி போடுன்னு சொன்னா எப்டி தயக்கம் இல்லாம செய்ய முடியும். அதுவும் ஒங்க அம்மா சுத்தம் பாக்குறவங்க, அப்டி இருக்கும் போது அவங்க சமையக்கட்டுல நிக்கிற தகுதி எனக்கு இல்ல.

எப்பவும் போல நீயே போட்டு குடி. யார் மனசும் நோகாதபடி என்னைய அவைங்க மருமகளா ஏத்துக்கிட்டாவன்னா, அவைய சம்மதத்தோட ஒனக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் ந்நா செஞ்சி தரேன்"

காவேரி சங்கடமாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாயிலில் கேட்ட சத்தத்தில், இருவரும் ஒவ்வொரு மனநிலையோடு திரும்பிப் பார்க்க, அங்கு நின்றிருந்த வெங்கட்டின் பெற்றோரை கண்டதும் காவேரியின் உடல் மொத்தமும் வியர்வையில் குளித்து, கால்கள் இரண்டும் நிலத்தில் நிற்க முடியாமல் துவண்டு போனது அச்சத்தில்.

தொடரும்.
 
Last edited:

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 40
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
9
Reaction score
7
Points
3
Nalla anna nalla thambigada ...sethu sethu velaruenga pola..
Ne ena plan da 5yrs back potu vecha onu purilaye...sekro adha solunga da manda kaaiyuthu...
Acho policekar unga parents vanthuta ini ena elam nadakanpogutho ne epdi react pana pora ipavum kaveriya Kaya padutha poriya
 
Top