- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ் - 6
பூஜா குருவை சாடிக் கொண்டே உள்ளே வர, அவள் பின்னாலே, மகியும் கூடவே இன்னொரு பெண்ணும் வந்தாள்.
மகியை பார்த்த அர்ஜூன் அசந்து தான் போனான். நேற்று இரவு கதிருடன் இவள் தான் இருந்து இருக்க வேண்டும் என மகியின் முகத்தை பார்க்க முடியா விட்டாலும் அவளின் உடல் நெளிவுகளை வைத்தே கண்டு கொண்டவன். ஏனோ கதிருடன் அவள் இருப்பது அவனுக்கு பிடிக்காமல் போனாலும் அவளைத்தான் பார்த்தான்.
மாம்பழம் நிறம் பட்டு புடவையில் நேர்த்தியாக உடுத்தி, கை நிறைய வளையல் குலுங்க, காலில் நிறைய சலங்கை வைத்த கொலுசு அணிந்து, கழுத்தில் ஒரு ஹார்ட் வடிவம் போட்ட டாலர் வைத்த நெஞ்சுவரை தொங்கிய தங்க சங்கிலி அணிந்திருந்தாள்.
காதில் ஆடிய பெரிய ஜிமிக்கி, தலை நிறைய மல்லிகை பூ, கண்ணில் மை இட்டு, உதட்டு சாயம் இல்லாமலே இளஞ்சிவப்பு நிற கோவை பழ உதடு. உதட்டுக்கு கீழ் சிறிய மச்சம். நெற்றியில் கோபுர வடிவ சிவப்பு பொட்டு. சிறிது உப்பினார் போன்ற கன்னங்கள். சிறிதாக இருக்கும் குட்டி மூக்கில் குட்டி வைர மூக்குத்தி என்று இதையெல்லாம் விட அவள் மெல்லிடையில் அணிந்து இருந்த இடுப்பு சங்கிலி பளபளக்க மெழுகுசிலை போல இருந்த மகியை கண்டவனின் எண்ணம் தறி கெட்டு திரிந்தது.
ஒருவன் தன்னை அங்குல அங்குலமாக கண்களால் கபளீகரம் செய்வதை அறியாதவள் “பூஜு அவளைப்பத்தி உனக்கு தெரியாததா ...” என்றிட,
“இவள பத்தியா நல்லா தெரியுமே ஆளும் ட்ரெஸ்ஸயும் பாரு..” என்றாள்.
“ஏய் ரதி இது என்ன ட்ரெஸு? இப்படி தான் அங்க ஊர்லயும் போட்டு சுத்திட்டு இருந்தியா...” பூஜா உரிமையாக கண்டிக்க,
மகியும் அப்போது தான் ரதி அணிந்து இருந்த உடையை பார்த்தவள் “என்ன ரதி இதெல்லாம்...?” கோவமாக மகி கத்த வாயெடுக்கவும்,
“ஐயோ! பூஜாக்கா, நல்லா அண்ணிக்கிட்ட கோர்த்து விட்டுட்டியா. மகி அண்ணி நீயும் ஆராமிக்காத. இப்பதா அம்மா ஒரு போர்க்களமே நடந்துச்சி. நீ வேறயா..?” என்று ரதி சலித்துக் கொள்ள,
சுதாகரித்த ராதா எங்கே தன்னையும் இந்த குள்ள கத்திரிக்கா போட்டு மாட்டி விடுவாளோ என நினைத்து “மகிக்கா, அது ஒன்னும் அவளுக்கு முட்டில அடி பட்டுடுச்சா அதான் காத்தோட்டமா இத போட்டுட்டு வந்தா. மத்த படி ஒன்னும் இல்ல...” என்று வாய்க்கு வந்த பொய்யை சொல்லி ரதியை பார்த்து ஆமான்னு சொல்லு டி சைகையில் கண்ணடிக்க,
ராதாவை பார்த்த கார்த்தி நாக்கை மடக்கிக் கடித்து, விரலை ஆட்டி, மவளே தனியா மாட்டுவல்ல இருக்கு டி உனக்கு என்று மிரட்டல் விடுக்க, நாக்கை துருத்தி ஒழுங்கு காட்டி விட்டு தலை குனிந்து கொண்டாள் ராதா.
ராதாவின் சைகையை புரிந்து கொண்ட ரதி “ஆ... ஆமா அண்ணி முட்டில அடிபட்டுச்சு. அதான்...” என சொன்னவளை வாயில் கை வைத்து பார்த்த ரிஷி “மச்சி இதுங்க என்ன இப்படி பொய் சொல்லுதுங்க...” என கேட்க,
அர்ஜூனோ பதிலலிக்காது மகியின் ஒவ்வொரு அசைவுகலையும் துல்லியமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
கதிர் குருக்கு இவர்களின் சேட்டை புரிய, அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர். அடி பட்டுவிட்டது என்றதும் பதறிய மகியும் பூஜாவும் “ரதி என்னாச்சு உனக்கு எப்படி அடிப்பட்டுது. எங்க அடிபட்டுச்சு ரத்தம் வந்துச்சா. ரொம்ப வலிச்சிதா எங்க காட்டு நான் பாக்குறேன்...” என அவள் காலைத் தொட போக, ராதா ரதி இருவரும் ஒரே நேரத்தில் பதறி,
“ஐயோ அக்கா நீயி என்ன பண்ண போற...” என்றனர்.
“அடி பட்ட இடத்தை பாக்க போறேன் டி...”
“அ... அதெல்லாம் இல்ல. நீ... நீயி அதப் பாக்கக் கூடாது...”
“ஏன் டி நான் பாத்தா என்ன..?” என்றாள் குழப்பமாக.
“ம்ம். அங்க அடி பட்டு இருந்தா தானே பாக்க முடியும்...” என முணுமுணுக்க,
“என்ன ராதா சொன்ன? அப்ப அங்க அடி படலன்னா வேற எங்க அடிபட்டுச்சு..?” மேலும் குழப்பமாக மகி கேட்க,
“ஐயோ அக்கா நான் அப்படி சொல்லல...” என தலையை சொரிந்தவள்,
“அடியே ரதி ஏன் டி இப்படி இந்த ட்ரெஸ போட்டு வந்து என் உயிர எடுக்குற. என் குட்டு வெளிவர கூடாதுன்னு உனக்கு நான் என்னென்ன வேலை எல்லாம் பாக்க வேண்டி இருக்கு பாரு டி...” என மனதுக்குள் ரதியை வருத்தவள்,
“அக்கா அ... அது வெளிக்காயமா இருந்தா தானே வெளிய தெரியும். அது உள் காயம். பாத்தா தெரியாதுல அதான் சொன்னேன்...” என்றவள் “அக்கா நானும் ரதியும் வந்து ரொம்ப நேரமாச்சு. நாங்க போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா வரோம்...” என அவசர அவசரமாக ரதியை இழுத்து கொண்டு ஓடியவளை,
“ஏய் காயம் இருக்குன்னு சொல்லிட்டு எதுக்கு அவளை இழுக்குற பொறுமையா கூட்டிட்டு போ ராதா...” கை உயர்த்தி பதட்டமாக மகி சொல்ல,
“ஹான் ஹான். சரிக்கா...” என கத்திக்கொண்டே மேலும் பரபரவென ரதியை இழுத்துக் கொண்டு ஓடினாள்.
மகியின் தோளில் கை போட்ட பூஜா “எனக்கு தெரிஞ்சி இதுங்க ரெண்டும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை பாத்து இருக்குங்க. அதான் உன்கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு, விட்டா போதும்னு தல தெறிச்சி ஓடுதுங்கன்னு நினைக்கிறேன்...” என்று யோசனையாக சொல்ல,
மகி ஏதோ சொல்ல வரும் முன், கார்த்தி முந்திக்கொண்டு "பூஜா செத்த நாரோ அமைதியா இரு. மகி நீ கோவிலுக்கு போயிட்டு வந்தியே எல்லாருக்கும் பிரசாதம் குடுக்கணும்னு தோணுச்சா உனக்கு...” அவன் பேச்சை மாற்ற,
“அச்சோ, ஆமா மாமா மறந்தே போயிட்டேன் பாரேன்...” என்றவள் “நேராக கதிரிடம் சென்று மாமா...” என அன்பாக அழைக்க, கார்த்திக்கு அப்பாடா என மூச்சு வந்தது.
பூஜாவை மனதில் திட்டியவன் ராதாவையும் திட்டாமல் இல்லை. ரிஷிக்கு ராதா ரதி மாட்டிக்கொண்டு முழித்ததை பார்த்து சிரிப்பு தான் வந்தது. மகி மேல் கோவமாக இருந்த கதிர் பல்லைக் கடித்து “மகி உன்கிட்ட எத்தனை முறை சொல்லிருக்கேன் தனியா எங்கயும் வெளிய போகாதேன்னு. போனியே போனையாவது எடுத்துட்டு போனியா காலைல கோவிலுக்கு போனவ. பொழுது போய் வர...” அவ்ன் சிறிது கோவமாக எகிற,
அர்ஜூனுக்கு தான் காரணமே இல்லாமல் கதிர் மேல் கோவம் பொத்துக்கொண்டு வந்தது. அவள் மாமா என அழைத்தது வேறு கடுப்பாக இருக்க. எதையும் வெளியில் காட்டாமல் அமர்ந்து இருந்த அர்ஜூன் காதில்
“டேய் மச்சி, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்...” என்ற ரிஷியை முறைத்த அர்ஜூன்.
“டேய் உன்னை கொல்ல போறேன். திரும்ப லவ்வுக்கு ஹெல்ப் பண்ணு அது இதுன்னு சொன்ன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நானே செம காண்டுல இருக்கேன்...” என்றான் பொறிந்துக் கொண்டு.
“டேய் நான் சொல்றத கேட்டுட்டு நீ என்ன வேணும்னா பண்ணு. மொதல்ல என்ன சொல்ல விடு டா..” என ரிஷி சலித்துக் கொள்ள, சொல்லு என்பது போல தன் நண்பனை பார்த்து பின் மகியை பார்த்தான்.
“அதோ கதிர் எதிர்ல நிக்குதே அந்த பொண்ணு அவ எப்படி இருக்கா...” என கேட்டவனை ஒருமாதிரி பார்த்த அர்ஜூன் “என்னடா அதுகுள்ள உன் லவ் கூடு விட்டு கூடு பாஞ்சிடுச்சா...” என்றான் நக்கலாக.
அர்ஜூனை முறைத்த ரிஷி “தப்பா பேசுன நண்பன்னு கூட பாக்கமாட்டேன் உன்னை கொன்னுடுவேன் டா. நான் ஒன்னும் கூடு விட்டு கூடு பாயல. என் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ் என் மாடர்ன் ரதி தான். அது என்னைக்கும் மாறாது. இப்ப நான் உனக்கு காட்டின பொண்ணு தான் மகியாழினி. உனக்கு பாத்திருக்க பொண்ணு...” என்றிட, சற்று மனம் துள்ளி தான் குதித்தது அர்ஜூனுக்கு.
இது எந்த விதமான உணர்வு என்று தான் புரியவில்லை. ரிஷி கூறியத்திற்கு பதில் எதுவும் சொல்லாமல் திரும்பவும் தன் பார்வையை மகியிடமே பதிக்க, ரிஷி தன் நண்பனை வினோதமாக பார்த்து வைத்தான்.
“மன்னிச்சிக்கோ மாமா நேரமாச்சுன்னு தானே போனேன். அதுக்கு போய் கோச்சிக்கலாமா...” என அவளின் குழந்தை தனமான கொஞ்சல் மொழியில் கோவம் காணாமல் போனது கதிருக்கு.
ஆனால் அர்ஜூனக்கோ கதிரிடம் மகி கொஞ்சி பேசுவது அப்படி ஒரு ஆத்திரம் வந்தது. பின் தன் அர்ச்சனை கூடையில் இருந்து திருநீறு எடுத்து அவனை குனிய சொல்லி கதிரின் நெற்றியில் வைத்து ஊதி விட்டு அழகாக புன்னகைக்க, அதில் மதிமயங்கி போன அர்ஜூனுக்கு அந்த சிரிப்பு தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்றது போல தோன்றியதும் கதிரை நினைத்து கோமாக வந்தது.
பொறுத்து பார்த்த கார்த்தி கதிரின் கழுத்தில் கை போட்டு. “போதுண்ணே கொஞ்சம் நிறுத்திக்க. உங்க பாச மழைல நனைஞ்சு எங்களுக்கெல்லாம் சளி பிடிச்சது தான் மிச்சம்...” என மூக்கை சுருக்கி காட்ட,
இடுப்பில் கைவைத்து கார்த்தியை முறைத்த மகி “என்ன கார்த்தி மாமா எங்கள கிண்டல் பண்றியா? என்கிட்ட ஏதாவது உதவி கேட்டு வருவல்ல அப்ப இருக்கு உனக்கு...” என்றாள் விரைப்பாக .
“ஆமா போடி எனக்கு அப்படியே பெரிய உதவி பண்ணிட்டா. உன் தங்கச்சிய நான் விரும்புறேன்னு உன்கிட்ட முதல் முதல்ல சொன்னனே நீ என்ன பண்ண. நேரா அந்த கோனமூக்கி கிட்ட போயி ஒண்ணுக்கு ரெண்டா சொல்லி என்ன பெருசா வச்சி பங்கம் பண்ணவ தானே டி நீ. நீ பேசுறயா...” என்று அவன் கொந்தளிக்க,
அவனை முறைந்தவள் அவன் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்து “நீ என்கிட்ட எப்ப வந்து ராதாவ விருப்புறேன்னு சொன்ன...” என்றாள்.
கார்த்தி தலையை தேய்த்துக் கொண்டே திரு திருவென முழிக்க “ம்ம்ம். சொல்லு மாமா...” என மீண்டும் அவன் தலையில் கொட்ட போக,
“அடியேய் சொல்றேன். இரு சும்மா சும்மா கொட்டத டி முருங்கக்கா...” என மேலே பார்க்க,
மகியும் மேலே பார்த்து “என்ன பிளாஷ்பேக்கா...” என்றாள்.
“ம்ம்ம்...” என்று வெட்கம் கொண்டு அவன் தலையாட்ட,
“அடச்சீ. நீயி சொல்லவே வேணாம் போ. என்று நகர்ந்து விட்டாள். அதெல்லாம் அறியா வயதுக் காதல் கதை.
புதிதாக வந்த பெண் கதிரிடம் கோவமாக வந்து “ஹலோ மிஸ்டர், என்னயாவது யார்னு தெரியுதா. இல்ல அதும் மறந்து போயாச்சா...” என மூக்கு சிவந்து கோவமாக கேட்ட்டாள் ஒருத்தி.
அதுவரை மகி கார்த்தியின் சண்டையை சுவரிசியமாக பார்தவர்கள் “இது என்னடா புது கேரக்டர்...” அர்ஜுன் ரிஷி இருவரும் குருவிடம் கேட்டிட.
“அவதே காயத்ரி. நம்ம தங்கச்சி நம்ம ராஜேஷ் மாமாவோட ஒன்னு விட்டு தங்கச்சி மவதே. அவ பொறந்ததிலைருந்தே ஐயாக்கு அவ மேல லவ் இப்பதே கல்யாணம் வரைக்கும் வந்துருக்கு...” என்றதும்,
“பொறந்ததிலிருந்துன்னா புரியலையே...” என சந்தேகமாக கேட்டான்.,
“நம்ம மகி பொறக்குறதுக்கு ஒரு மாசம் முன்னாடிதே காயு பொறந்தா. அப்ப போயி அவளை பாக்கும் போதே, ஐயாக்கு நாலு வயசுலே லவ்வு பத்திக்கிச்சி. அவ பின்னாடி நாயா பேயா அளஞ்சி, இப்பதே ஒரு வழியா 15, 16 வருசமா லவ் பண்ணறேன்னு ஒத்துக்கிட்டா...” என்ற குருவை முறைத்த ரிஷி,
“எப்படி எப்படி, இப்பதா ஏதே 15, 16 வருஷமா லவ் பண்ண ஒத்துக்கிட்டாளா. ஏண்ணே இது உனக்கே அநியாயமா இல்லையா. 16 வருஷ லவ்வ என்னவோ நேத்துதான் அவங்க ரெண்டு பேரும் காதலிக்க ஆராமிச்ச மாதிரி பில்டப் பண்றியேண்ணே. அவங்க லவ்வு பண்றாங்களோ இல்லையோ. ஆனா நீ நல்லா பண்றண்ணே நீ நடத்து...” என வடிவேல் பாணியில் சொல்ல குருக்கும் அர்ஜூனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.
“ஐயோ காயு என் லட்டு பொண்ணே...” என அவள் கன்னம் கிள்ளி “உன்னைய போயி எப்படி டி இந்த மாமனால மறக்க முடியும்... என கொஞ்ச,
அவன் கையை தட்டி விட்ட காயத்ரி “போ மாமா இன்னும் நமக்கு இருபது நாளுல கல்யாணம். ஆனா நீ என்ன ஒரு முறை கூட வந்து பாக்கல. சரி அதைக் கூட விடு எத்தனை முறை நானா உனக்கு போன் பண்ணேன். அதையாவது எடுத்து ஒரு வார்த்தை பேசினியா. நீ கட்டாயப்படுத்தி அனுப்பினதால தானே மாமா உன்னைய விட்டு பிரிஞ்சி தனியா தவிச்சிட்டு இருக்கேன். ஆனா உனக்கு என்னைய பத்தின நினைப்பே இல்லல...” என மூக்கை உறிஞ்ச.
அவளை என்ன சொல்லி சமாதான படுத்துவது என தெரியாமல் கதிர் விழித்து நிற்க்க. இவர்களின் சம்பாஷனைகளை கேட்டு கொண்டு இருந்தவர்களுக்கும் வருத்தமாகி போனது.
‘இவனுக்கு தான் ஒருத்தி இருக்காளே அப்புறம் எனக்கு பாத்த பொண்ணுகிட்ட எதுக்கு வழிஞ்சிட்டு இருக்கான்...’ என்று அர்ஜூன் நினைத்து கொண்டு இருக்க, ரிஷிக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் விழித்தான்.
“என்ன புள்ள பண்ற, இதுக்கா உன்னை பாதி வழிலே வழி மறச்சி. கோவிலுக்கு கூட்டி போயி அவளோ தூரம் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி நானும் பூஜாவும், உனக்கு புத்தி சொல்லி கூட்டி வந்தோம். ஆனா நீயி நாங்க சொன்ன எதையுமே காதுல வாங்கிக்காம. வந்ததும் என் மாமன் கிட்ட கத்திட்டு இருக்க. மாமாவை பத்தி தெரிஞ்சும் ஏன் டி இப்படி பண்ற...” மகி கேட்க,
காயுவின் கண்களில் உடைபெடுக்க மகியை இயலாமையுடன் பார்த்தவள் “எனகிருக்க பயம் உனக்கும் புரியலைல டி...” என தவிப்புடன் காயு கேட்க துடித்து போன மகி,
“அதில்ல காயு...” என வாயெடுக்க,
“மகி எதுவும் பேசாத உடு...” என இறுக்கமான கதிரின் குரலில்,
“மாமா நான் அவக்கிட்ட சொல்லி...” என திரும்பவும் வாயெடுக்க,
“நான் பாத்துக்குறேன் மகி. நீ இரு...” என்றவன் காயுவின் கையை பிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.
போகும் அவர்களை கலகத்துடனே அவள் பார்க்க, கலங்கிய விழிகளால் போகும் கதிரையே பார்க்கும் மகியை பார்வையால் எரித்து கொண்டு இருந்தான் அர்ஜூன். அவனும் அவளை வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். மகி யாரையும் கண்டு கொள்ளாமல் கதிரிடம் பேசியது. கொஞ்சியது. கதிருக்காக அவள் வரிந்து கட்டிச் சென்றது முதல், காரணம் அறியாமல் பொறாமை கொண்டது மனம்.
வேகமாக குருவிடம் வந்த மகி “அண்ணா நீயாவது என்னன்னு போயி பாரேன். மாமா வேற ஒரு மாதிரி போகுது. கோவத்துல காயுவ ஏதாவது...” என தொடங்க
“மகி உன் மாமா காயுவ ஒன்னும் பண்ண மாட்டாரு. காயுக்கு பொறுமையா எடுத்து சொல்லி புரிய வச்சி தான் கூட்டிட்டு வருவாரு. நீ கொஞ்சம் அமைதியா இரு புள்ள. அண்ணே போயி காயு கிட்ட கோவத்தை காட்டுமா...” என்று பூஜா சமாதானம் சொல்ல, குருவும் அதையே தான் அமோதிப்பாய் சொன்னான்.
கொஞ்சம் தெளிந்தவள்ம ஏதோ நியாபகம் வந்ததை போல அர்ச்சனை கூடையை எடுத்து, கார்த்திக்கு திருநீர் வைத்து விட்டு “மாமா உனக்கு பிடிக்குமேன்னு ஆட்டு குழம்பு வச்சேனே சாப்பிட்டியா..?” என்றிட
“ஏம்மா பரதேவதை இவ்வளோ நேரம் நீயி எங்குட்டு இருந்த. கதிரண்ணே இருந்தா உனக்கு சுத்தி இருக்கவக எல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டோம்ல...” என நக்கலடிக்க,
அவன் தாடையை இடித்து “சும்மா என்ன கிண்டல் பண்ணாத மாமா...” என்றவள் அப்போது தான் இங்கு இத்தனை நேரமும் ஒருவன் புதிதாக இருப்பதை பார்த்தாள்.
“மகி இது அர்ஜூன்...” என தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கார்த்தி அறிமுகப்படுத்த,
“டேய் மாப்ள...” என்று கார்த்தி மேல் கை போட்ட குரு “அர்ஜூன்னு வெறும் பேர மட்டும் சொன்னா அவளுக்கு எப்படி புரியும்...” என்றவன்
“மகிமா, இது அர்ஜூன். நம்ம மீனாட்சி அத்தை இருக்காங்கள அவயளோட ஒரே மயன்...” என்றதும் குழம்பிய மகி,
“ஆனா அண்ணே இதுவரைக்கும் அத்தை என்கிட்ட அவயளுக்கு ஒரு மயன் இருக்குறாகன்னு சொல்லவே இல்லையே...” என்றிட,
“அதுக்காக அவங்க திரும்பவும் பெத்து வளத்தா காட்ட முடியம். இவனும் உனக்கு மாமா தாம்மா...” என்று கிண்டலடித்த ரிஷியை, நீ முதல்ல யாரு என்பது போல் பார்த்து வைத்தாள்.
அதுக்கும் அவனே “நான் அர்ஜூனோட நண்பன்...” என்றான் புன்னகையுடன்.
வாயை குவித்து “ஓ!” என தலையாட்டி மெலிதாக சிரித்தவள். அர்ஜூனை பார்க்க, அதுவரையிலுமே அவளின் ஒவ்வொரு முகபானங்களையும் கூர்ந்து பார்த்தவன், மகி தன்னை தான் பார்க்கிறாள் என தெரிந்தவுடன் வசீகர புன்னகை சிந்தி அவளிடம் கை நீட்டி
“ஹாய்! ஐ அம் அர்ஜூன் ஃப்ரம் பெங்களூரு...”என்று கையை நீட்ட, தயங்கி தன் அண்ணனை பார்க்க, அவன் கை குடு என்று கண்ணசைத்ததை அர்ஜூன் கண்டு கொண்டவன், கதிரிடம் மட்டும் உரிமையாக நடந்து கொண்டதையும் தன்னிடம் கைக்கொடுக்கவே தயங்குவதையும் கண்டவன் உள்ளுக்குள் புழுங்கி தள்ளினான்.
இருந்தும் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாக கையை நீட்டி கொண்டே இருக்க, மகி மெதுவாக தன் கையை அவன் கையில் பொறுத்தி, நான் மகியாழினி என்க, அர்ஜூனோ அவளின் பஞ்சு போல இருந்த மென்மையான கையில், தன் கை கொண்டு அதன் மென்மையை நன்கு அறிய, அழுத்தி கிள்ளி தடவி பிசைந்து என அவள் கரத்தை வதம் செய்து கொண்டு இருக்கிக் கொண்டான்.
அவன் செயலில் அசவுகரியமாக உணர்ந்தவள், அவனை முறைத்து கொண்டே கையை வலுக் கட்டாயமாக பிரித்து எடுத்து, அவனிடம் ஏதும் பேசாமல் “அண்ணா பொழுது போச்சு. நான் போய் எல்லாருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வரேன்...” என சொல்லி திரும்பியவளை,
சட்டென அவள் மணி கட்டை பிடித்த அர்ஜூன், நாக்கை ஒரு கண்ணக்கதுப்பில் அடக்கி முட்டையாக வைத்து ஒரு மார்க்கமாக சிரிக்க, குரு கார்த்தி இருவரும் தீவிரமாக பேசிக்கொண்ட எப்போதோ அங்கிருந்து சென்று விட, ரிஷி கலவரமாக நண்பனின் செயலை பார்த்தான்.
திடுக்கிட்டு என்னவென திரும்பி பார்த்த மகி அவன் செய்கையில் எரிச்சல் வர கோபவிழிகளுடன் “என்ன..?” என்றாள்.
“டீ போட போறியா ஏஞ்சல்..?” அவன் மென்மையாக கேட்க, அர்ஜூனின் இந்த மென்மையை கண்ட ரிஷிக்கு தான் தலை சுற்றியது.
அவன் ஏஞ்சல் என்றதும் கண்களை உருட்டி முழித்தவள் “ஹான்! என்ன..?” என்றிட,
“இல்ல டி, டீ போட போறியான்னு கேட்டேன்...” என்றான் உரிமையாக டி போட்டு அது புரியா மங்கையோ,
“ம்ம்ம். ஆமா. ஏன், உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா...?” என்று வெள்ளந்தியாக கேட்க,
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் “எது கேட்டாலும் கிடைக்குமா..?” என்றான் இரு பொருள் பட.
அதை புரிந்து கொள்ளாத மகி “என்ன வேணும்னு சொன்னா தானே கிடைக்குமா கிடைக்காதன்னு சொல்ல முடியும்...” என்றாள்.
“அது கண்டிப்பா கிடைக்கும். அது உன்கிட்ட தான் இருக்கு ஏஞ்சல்...” என்றான் பொடி வைத்து.
பொறுமை இழந்தவள் “அது என்னனு சொன்னா தானே எனக்கு தெரியும். ஏன் இப்படி படுத்துறீங்க. முதல்ல என் கைய விடுங்க எனக்கு வேலை இருக்கு...” அவள் பொரிய,
“சரி விடுறேன். ஆமா நீ ஏன் என்ன முறை சொல்லி கூப்பிடாம விடுங்க வாங்க போங்கன்ற. நான் உனக்கு முறை பையன் தானே. சோ, நீ என்ன எப்படி கூப்பிடணுமோ அப்படி கூப்பிடு விடுறேன்...” என்று அவன் தீவிரமாக சொல்ல, ஏனோ அவனை சட்டென முறை வைத்து கூப்பிட முடியவில்லை அவளால்.
“எனக்கு கூப்பிட தோணல.. என் கைய விடுங்க...” என திரும்ப திரும்ப அதேயே சொல்ல, அர்ஜூனுக்கு கோவம் வந்தாலும் அதை அடக்கியவன்,
நிதானமாக அவளை பார்த்து. இன்னும் கையில் அழுத்தம் கூட்டி “நீ கூப்பிட்டுத்தான் ஆகணும் ஏஞ்சல். அதுவும் என்னை டிப்பரென்ட்டா கூப்பிடனும்...” சிறிது கடுமையாக உரைக்க,
முகம் சுணங்கியவள் “என்னால அப்படில்லாம் கூப்பிட முடியாது. ஆமா அது என்ன ஏஞ்சல்? என் பேரு மகி. நீங்க என்ன அப்படியே கூப்பிடுங்க...” என்று காட்டமாக சொல்லி “என் கைய விடுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு...” என அவனிடம் மாட்டி இருந்த அவள் கையை நெளித்து கொண்டே பேச, சட்டென அவள் முன்னால் நெருங்கி நிற்க அதில் மகிக்கு தான் அவன் நெருக்கத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கண்கள் விரிய பார்த்தாள்.
கொஞ்சம் விட்டால் உடலும் உடலும் மோதிக்கொள்ளும் அளவு நெருங்கி நின்றவன், அவன் மூச்சு காற்று அவள் முகத்தில் படும்படி “நான் உன்னை அப்படி தான் கூப்பிடுவேன் ஏஞ்சல். எனக்கு உன்னை ஏஞ்சல்னு கூப்பிட தான் பிடிச்சிருக்கு. நீயா என்ன முறை சொல்லி கூப்பிடனும். கூப்பிட வைப்பேன். இப்ப நீ என்ன பண்ற சுட சுட தண்ணி ஊத்தாமா பால பக்குவமா காய்ச்சி, சுகர் கம்மியா போட்டு, பாதாம் பிஸ்தா முந்திரி எடுத்து பொடி பொடியா கட் பண்ணி சூடான பால் மேல அப்படியே தூவி சீக்கிரம் எடுத்துட்டு வா பாப்போம்...” என்று அவளை விட்டு நகர,
அப்போது தான் ஏதோ ப்ரம்மையில் இருந்து வெளி வந்ததை போல தெளிந்தவள், அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள். அதுவரை அவர்களையே வாயை பிளந்து கொண்டு பார்த்திருந்த ரிஷியின் முதுகில் அர்ஜூன் ஒரு அடி வைக்க, ஆ என தேய்த்துக் கொண்டே,
“டேய், மச்சி இங்க இவ்வளோ நேரம் என்னடா பண்ணிட்டு இருந்த. நீ பண்றது சரி இல்ல டா. இது கிராமம் உன் வேலை எல்லாம் இங்க காட்ட நினைக்காத. கட்டி வச்சி நுங்கு எடுத்துடுவானுங்க...” என்ற ரிஷியின் தோளில் கை போட்ட அர்ஜூன்
“எனக்கு பொண்டாட்டியா வர போறவக்கிட்ட நான் எப்படி வேணும்னா நடந்துப்பேன் டா. எவன் வந்து என்னை கேட்பான்...” என்று சாதாரணமாக சொன்ன நண்பனை ஆச்சிரியமாக அவன் பார்க்க,
“என்ன மச்சி கல்யாணமே வேணான்னு சொன்னவன். இப்ப இப்படி பேசுறானேன்னு பாக்கறியா..?” என்று சரியாக அர்ஜூன் கேட்க ரிஷி ஆம் என்றான் தலையை நாலாப் பாக்கமும் ஆட்ட,
“அது ஒன்னு இல்ல மச்சி, நானும் எத்தனையோ பொண்ணுங்களை பாத்திருக்கேன். பட் சொல்லத் தெரியல ஷி இஸ் ஸ்பெஷல் டூ மை ஹார்ட் டா. என்ன என்னமோ பண்றாடா மச்சி. இது என்ன பீல்னு தெரியல ஆனா நல்லா இருக்கு...” என்றவன் அவன் அறைக்கு சென்று விட்டான்.
ரிஷி தான் குழம்பிப் போய் நின்றான். நண்பனை பற்றி நன்கு அறிந்த அவன் மனமோ மகி மனதை மாற்றி அவளை ஏதாவது ஏடா கூடமாக செய்து தவரிழைத்து விட்டு, அர்ஜூன் அவளை விட்டு சென்றுவிடுவானோ என்ற பயம் வந்து படபடவென்று அடித்துக் கொள்ள. பிரம்மை பிடித்ததை போல அவன் அறைக்கு சென்றான்.
இங்கு கதிர் வேகமாக தோட்டத்திற்குக்கு காயுவை அழைத்து வந்தவன் அவள் அழுத கண்களைட் துடைத்து விட கை உயர்த்த, திரும்பிக் கொண்டாள் அவள். அவளை தன்னை பார்க்கும் படி திருப்பி நிற்க வைத்த கதிர் “லட்டு குட்டி, இத்தனை நாள் கழிச்சு உன் மாமன பாக்க வந்துருக்க. இப்படியா டா அழுவ. ஏன் காயு உனக்கு தான் என்னையப்பத்தி எல்லாமே தெரியுமேடா. தெரிஞ்சும் நீயி இப்படி கலங்கினா நான் எப்படி காயு நிம்மதியா என் வேலையை பாக்க சொல்லு...”என்று அவள் கன்னம் ஏந்த,
“மாமா...” என்று கண்ணீர் வழிய பார்த்தவள், அவன் பார்வை அவள் மேல் ரசனையாக படிவதை புரிந்தவளுக்கு, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெட்கம் கொண்டு விலகிப்போக நினைத்தவளின் இடை வளைத்து பிடித்து தன்னிடம் நெருங்கியவன்,
“எம்புட்டு நாளாச்சு டி உன்னை இப்படி கிட்டத்துல பாத்து. ஏன் லட்டு நீ சரியா சாப்பிடுறியா இல்லையா. முன்ன இருந்ததை விட உன் இடுப்பு ரெண்டு சுத்து குறைஞ்சிருக்கு. ஏன் லட்டு குட்டி இப்படி என்னை நினைச்சி கவலைப்பட்டு உன் உடம்ப போட்டு கெடுத்துக்குற..?” என்று ரசனையில் ஆரம்பித்து கவலையாக மொழிந்தான்.
அவன் கவலை தோய்ந்த முகம் அவளையும் வாட்டியது. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் “இனிமே நீ என்னைய கவனிச்சிக்க மாமா. தானா நான் பழைய படி மாறிடுவேன்...” என்றவளை இன்னும் இறுக்கிப் பிடித்து “இனிமே உன்னைய கவனிக்குறத விட எனக்கு வேற என்ன லட்டு வேலை இருக்கப் போது...” என அவள் கழுத்தில் முகம் புதைக்க,
“ஐயோ, அம்மா...” என காயு கத்த, பதறி பயந்து அவளிடமிருந்து விலகி கதிர் பின்னால் திரும்பி பார்க்க, யாரும் இல்லாமல் போகவே குழப்பமாக அவளை திரும்பி பார்த்தான்.
அங்கு அவன் லட்டு இருந்தால் தானே. பத்தடி தூரம் ஓடி நின்றவள், கலகலவென சிரித்து கொண்டே “ஐயோ மாமா நல்லா ஏமாந்துட்டியா. எங்கிட்ட தான் உன் அதட்டல் உருட்டல் எல்லாம் வேலைக்காகும் போல. என் அம்மாவை பாத்து இப்படி பயப்படுற. அவங்களால எப்படி மாமா நடக்க முடியும்...” என கிண்டலடிக்க,
“அடிங்க, என்னையே பொய் சொல்லி ஏமாத்திட்டு சிரிக்கிறியா. இரு டி உன்னைய...” என்று அவள் பின்னால் துரத்திக் கொண்டு ஓட, அவளும் சிரித்துக்கொண்டே, அவன் கையில் சிக்காமல் ஓடி விட்டாள்.
கார்த்தி வீட்டுக்கு வெளியே ஒரு மறைவான இடத்தில் நின்று, யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக கையில் சிகரெட்டை வைத்து புகைத்து கொண்டு இருக்க, அப்போது மாடுகளுக்கு தண்ணி வைக்க வந்த பூஜா கார்த்தி நிற்பதை பார்த்து “அண்ணே இங்க பண்ணுது தனியா நின்னு...” என்றபடி அவனிடம் செல்ல,
அவள் வருவது கூட தெரியாமல் ஏதோ ஒரு சிந்தனையில் புகைத்துக் கொண்டு இருந்தவன் அருகில் வந்தவளுக்கு, அவன் செய்யும் வேலை தெளிவாக தெரிய “அண்ணா நீ என்ன பண்ற இங்க..?” என மூக்கு விடைக்க கேட்க,
திடுக்கிட்டு திரும்பியவன் முன்னாள் கோவமாக இருந்த பூஜாவை கண்டவன், சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து, பூஜாவை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டான்.
“அண்ணா என்ன இதெல்லாம். உனக்கு என்ன ஆச்சு. நீ பண்ண வேலைய மட்டும் வீட்ல வேற யாராவது பாத்திருந்தா என்ன ஆயிருக்கும். முக்கியமா ராதா பாத்திருந்தா? உன்னை நினைச்சி கவலைப்பட மாட்டாளா. இது மட்டும் தானா இல்ல வேற ஏதாவதும் இருக்கா...” என்றாள் கோபமாக.
“ஐயோ பூஜா சும்மா தம்மு மட்டும்தே. அது ரொம்ப டென்சன்ல. நானே இத எப்படியாவது நிறுத்த முயற்சி செஞ்சிட்டுத் தான் இருக்கேன். நீ ஏதும் ராதா புள்ளக்கிட்ட சொல்லிப்புடாத பூஜா. அது ரொம்ப வருத்தப்படும்...”
“அண்ணே இதெல்லா கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன். உன்னை மட்டும் நம்பியே ஒருத்தி இருக்கா. அவ நம்பிக்கைய கெடுத்துப்புடாத...” என்றவள் சென்று விட்டாள்.
பொழுது சாய்ந்த நேரம், பெரியவர்கள் சிறியவர்கள் என குடும்பமாய் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அர்ஜூன் கிழே இறங்கி வரும் போதே மகியை கண்களால் ஸ்கேன் செய்தபடி ரிஷி அருகில் அமர்ந்தவன், மகி கதிருடன் அமர்ந்து யாரையும் கண்டுகொள்ளாமல், தீவிரமாக எதையோ அவர்களுக்கு மட்டும் கேட்கும் படி பேசி கொண்டு இருக்க, அதைப் பார்த்த அர்ஜூனுக்கு கண்கள் சிவப்பாகி, இருவரையும் கோவமாக முறைத்து கொண்டு இருந்தான்.
அப்போது எல்லா விளக்குகளும் நின்று போக, எல்லாரும் சலித்து கொண்டு “ச்ச. மச்...” என சப்தம் கிளப்ப,
அந்த நேரம் பார்த்து, ஒரு ஒளிப் பெறுகியில் சத்தமாக
“அன்னையின் மறு உருவமாக என் பாசமிகு அக்கா..
அன்னையின் அரவணைப்பு உன்னிடம் கண்டேன்..
அன்பிற்கு அடைமொழி கேட்டால் என் அக்கா என்பேன்.
உன் அன்புக்கு நான் அடிமை. உன் கண்டிப்பிற்கு நான் குழந்தை..
இந்த நான்கு வருட பிரிவு ஒன்றும் பெரிதாய் படவில்லை அக்கா..
உன் நினைவுகள் என்னை சுமக்க..” என்று இந்த கவிதை சொல்லி முடிந்தவுடன்,
“அக்கா இது உனக்காக...” என்று ஒரு பாடலை பாடிக்கொண்டே “அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை..
நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை..
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுற்றும்..
நொடி நேரம் நீ பிரிந்தால்..
அம்மாடி உயிரே போகும்..
நீ சொன்னால் எதையும் செய்வேன்..
தலைய ஆட்டும் பொம்மை ஆவேன்..
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா..
ஓ... ஹோ ஓ...
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்க்கை உனக்கல்லவா..
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா..”
அதுவரை மகி, அக்கா என்றத்திலேயே தன் தம்பியின் குரலை கண்டுகொண்டவளின் கண்கள் குலமாகி, சூர்யா என தானாக அவன் பெயரை முணுமுணுத்து அவனைப் பார்க்க ஏங்கித் தவிக்க, அணைந்த விளக்குகள் எரிய அவள் முன்னால் கையில் பெரிய பெரிய ரோஜா பூக்களுடன் ஸ்டைலாக பேண்ட் ஷர்ட் விகிதம் பாடிக்கொண்டே சூர்யா நடந்து வர,
சூர்யா என ஓடி சென்று தன் தம்பியை அணைத்து, கண்ணீருடன் அவன் நெற்றியில் முத்தம் வைத்து “எப்படி இருக்க சூர்யா..?” வார்த்தையிளும் அன்புக்கு பஞ்சமில்லாமல் மொழிய,
“எனக்கென்ன க்கா. நீ என்னை நினைச்சிட்டு இருக்கும் போது நான் சூப்பரா தானே இருப்பேன்..” என்றவனின் கண்ணீர் அவள் கைகளில் பட்டுத்தெறிப்பது தெரியாமல் அவளிடம் பூக்களை குடுக்க,
அதை வாங்கிக் கொண்டு அவன் கண்களை துடைத்து விட்ட மகி “அதுக்கு ஏன்டா அழற..?” என்றவள் அழுகையுடன் தலையாட்டி சிரித்தாள்.
இவர்களின் அன்பை கண்டவர்களுக்கும் கண்களில் கண்ணீர் பெருக்காமல் இல்லை. அவ்வளோ ஏன் இவ்வளவு நேரம் மகி மேல் கோவமாக இருந்த அர்ஜூனுக்கு கூட, இருவரின் அன்பை பார்த்து வியந்து போனான் இருந்தும் சிறு பொறாமை இருக்கத்தான் செய்தது.
பின் அனைவரும் அவனை நலம் விசாரித்து அவனை முத்தமிட்டு கன்னம் வழித்து விட, அர்ஜூனிடம் தானாக வந்து கை நீட்டி “ஹாய்! மாம்ஸ். எப்படி இருக்கீங்க...” என கேட்க,
“நைஸ்டா மச்சா...” என உரிமையோடு அவன் தோளில் கை போட்டு மகியை பார்த்தான்.
அவளும் அவனை முறைத்து, உதட்டை சுழித்துக் கொண்டு திரும்பி கொண்டாள். அவனும் சிறு சிரிப்புடன் அவளிடம் பார்வையை வைத்து கொண்டே மற்றவர்களிடம் வாய் அசைத்து கொண்டு இருந்தான்.
தொடரும்.