- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ் - 7
அழகான விடியலில், பாதி இருள் படிந்து இருந்த காலை வேளையில், உறக்கம் கலைந்த அர்ஜூன், இன்று வெளியே தோட்டத்தில் சென்று உடற்பயிற்சி செய்யலாம் என நினைத்தவன், ஒரு டிரக் பேண்ட் மற்றும் கையில்லாத பனியன் அணிந்து கொண்டு, தோட்டத்திற்கு சென்று அந்த அழகான காலை பொழுதின் தென்றல் காற்று முகத்தில் பட்டதும் மூச்சு காற்றை இழுத்து விட்டு தன் உடற்பயிற்சியை ஆரம்பித்தான்.
அப்போது "ஜல் ஜல்" என்று யாரோ நடந்து வருவதின் அடையாளமாய் கொலுசின் சலங்கை ஓசை கேட்க,
தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த அர்ஜூன் அந்த கொலுசொலியின் சத்ததின் சொந்தக்காரி யாராக இருக்கும் என யூகித்துக் கொண்டவன், அவள் தான் வருகிறாளா என ஒரு மறைவிடத்தில் மறைந்திருந்து பார்த்தான்.
அவன் நினைத்ததை போலவே அவள் தான், அவளே தான். அர்ஜூனின் "ஏஞ்சல்" பச்சை வண்ண பாவாடை ரவிக்கை அணிந்து, அதற்கு ஏற்றார் போல் நீல வண்ண தாவணி கட்டி, முந்தானையும் பாவாடையும் சேர்த்து அவளின் வாழை தண்டு முழங்கால் தெரியும் படி இடையில் தூக்கி சொருகி இருக்க, அதில் அவள் இடையில் அணிந்து இருந்த இடை சங்கிலியும் அவள் நடைக்கு ஏற்றார் போல் அந்த ரம்மியமான மஞ்சள் விளக்கொலியில் மேலும் கீழும் மின்னி மின்னி அழகாக நடனமாடிக்கொண்டு இருந்தது.
அர்ஜூனின் கண்களோ அவள் பளிங்கு மென் இடையில் சொக்கி நின்றது.
“ப்பா! என்ன அழகு டா...” அர்ஜூனின் வாய் தானாக முணுமுணுத்தது.
அவன் இதுவரை எத்தனையோ பெண்களிடம் உடலால் ஒன்றாய் இணைந்து இருந்தாலும். அதில் உடல் தேவை மட்டுமே இருக்கும். அவனிடம் வரும் பெண்களை உடல் மொழியை ரசித்து தான் சல்லாபத்தில் ஈடுபாடுவான் முத்தமிடுவான். தேவை முடிந்ததும் அந்த பெண்களின் ஒரு விரல் கூட அவன் மேல் பட்டால் கூட எட்டி நின்றுவிடுவான்.
இவனுடன் இருந்த பெண்களே மறுநாள் வேறொரு ஆடவனுடன் பார்த்தால் கூட இதழ் வளைத்து அந்த பெண்களை தரைக் குறைவாக பார்த்துச் செல்வான். ஆனால் எந்த ஒரு பெண் மீதும் உடல் ஈர்ப்பை தவிர, காதலோடும், அன்போடும், காதல் பேசும் பார்வையோடும், மென்மையான தீண்டல்களும், செல்ல முத்தங்களும், செல்லமான சிணுங்கல்களும், கூடல் முடிந்தும் ஆசையாய் இருவர் மார்பிலும் தலை சாய்த்து, தலை கோதி, கோதிய விரல்களை முத்தமிட்டு, காதல் பாஷைகள் சிணுங்களுடன் பேசி, கண்களில் மொத்த காதலையும் களவாடி, உடல் கூசி, வெட்கம் கொள்ள வைத்து, அவளின் ஒவ்வொரு செயல்களையும் ரசித்து, இருவர் மனங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து, காலம் முழுக்க இவள் ஒருத்தி மட்டுமே என் ஆதி, அந்தம், உலகம் என்ற ரீதியில் அவன் எந்த பெண்ணுடனும் இருந்ததில்லை.
இப்போதோ மகியை பார்த்ததிலிருந்து, அவனின் எண்ணங்கள் மொத்தமும் மகியையே சுற்றி கொண்டு இருக்கிறது. அவளின் ஒரு கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்கிறான்.
பெண்களை வெறும் உடல் தேவையாக பார்வையில் பார்த்த அவனால், மகியை அப்படி பார்க்க முடியவில்லை. அவளின் சின்ன சின்ன செயல்களும் கூட அவனுக்காக இருக்க வேண்டும் என்று மனது பொறாமை கொள்கிறது. அவனை தவிர்த்து மற்ற என்பதை விட கதிருடன் பேசினால் ஆத்திரம், கோவம் என்று போட்டி போட்டு வருகிறது.
ஆனால் அது காதலா என்று கேட்டால் அவனுக்கே அது தெரியாது. அவ்வளோ ஏன் இங்கு வரும்போது கூட, அவனுக்கு பார்த்த பெண்னிடம் பணத்தை அள்ளி வீசி “என்ன பிடிச்சி இருந்தா என்னோட ஒரு நைட் இருந்துட்டு போயிட்டே இரு. இல்லன்னா பணத்தை பொறுக்கிக்கிட்டு இந்த கல்யாணம் வேணாம்னு நீயே சொல்லிடு...” என பார்க்கும் பெண்ணிடம் காரராக பேசிவிடும் எண்ணத்தில் தான் வந்தான்.
ஆனால் மகி தான் தனக்கு பார்த்த பெண் என தெரியும் முன்னவே அவளிடம் பயபுள்ள தன்னைத் தானே பறிகொடுதானே. அவனின் ஏஞ்சல் தான் எண்ணங்கள் முழுக்க நிறைந்து இருக்கிறாள்.
எண்ணங்களை ஒதுக்கி விட்டு மகியை கவனித்தான். கையோடு கொண்டு வந்த வாலியுடன் மாட்டுத் தொழுவத்தில் நுழைத்தாள். வாலியை ஒரு ஓரமாக வைத்தவள், அனைத்தையும் கூட்டி சுத்தம் செய்ய ஆரமித்தாள்.
அவள் குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து வேலை செய்யும் அழகை பார்க்க அர்ஜூனுக்கு இரண்டு கண்கள் போதவில்லை. அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசனையாக பார்த்தான்.
அனைத்தையும் சுத்தம் செய்து முடித்தவள், மாடுகளை கட்டி வைத்து. கொண்டு வந்த வாலியை எடுத்து வள்ளி என அழைத்தாள். வள்ளி வராமல் போகவே திரும்பவும் “வள்ளி என்மேல நீ கோவமா இருப்பேன்னு எனக்கு தெரியும். நான் என்ன வேணும்னா பண்ணேன். உனக்கே தெரியாதா வள்ளி, நான் வாரவாரம் வெள்ளிக்கிழமை உன்னை பாக்க வரமாட்டேன்னு.
அப்புறம் நீ இப்படி முறுக்கிட்டு இருந்தேன்னா நானும் கோவிச்சிக்கிட்டு போய்டுவேன் பாத்துக்கோ...” மகியின் பேச்சில்
அர்ஜூன் யோசனையாக ‘என்ன இவ மாட்டு கொட்டாய்ல மாடுங்க நடுவுல நின்னுட்டு யாருக்கிட்ட தனியா பேசுறா...’ தனக்குத்தானே பேசி கொண்டு பார்க்க,
‘சரி அப்ப நீ வர மாட்டல்ல. அப்ப நானும் கோச்சிக்கிட்டு போறேன்...’ என்றபடி திரும்பி மெதுவாக நடக்க, மாடுகளின் நடுவில் இருந்து "மௌவ்வ்வ்வ் மௌவ்வ்வ்வ்" என கத்திக் கொண்டே வள்ளி என்ற பசு அவளின் முன்னால் வந்து நின்று வழி மரித்து மகி கையை தலையால் முட்டியது.
கலகலவென சிரித்த மகி “என்ன வள்ளி உன் கோவம் எல்லாம் அம்புட்டு தானா...” என கேட்டு, பசு மாட்டின் தலையை தடவிக் கொடுப்பதை அர்ஜூன் விழிவிரித்து பார்த்தான்.
மகியை அந்த பசு முட்ட தான் வரிகிறது என நினைத்து அதை தடுக்க அவன் கலத்தில் இறங்கும் சமயம், வள்ளியோ மகியிடம் குழந்தை போல கொஞ்சிக் கொண்டு இருப்பதை பார்த்தவனுக்கு ஆச்சிரியம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவளின் சுயநலம் இல்லாத அனைவரின் மேலும் பாரபட்சம் காட்டாத, அவள் காட்டும் அன்பு தனக்கு மட்டும் வேண்டும் என மனது சிறு குழந்தையாக மாதிரி அடம் பிடித்தது.
இப்படியே வள்ளியுடன் சிரித்து பேசி கொஞ்சி பால் கறந்து முடித்த மகி “வள்ளி நான் போயிட்டு பொழுத்துக்கா வரேன். அது வரைக்கும் சேட்டை பண்ணாம சமத்தா சாப்பிட்டு இருக்கனும்...” மாடுகள் சாப்பிட வைக்கோல் எடுத்து போட்டு வீட்டுக்குள் போக போன மகியை, ஒரு குரல் தடுத்தது.
யோசிக்காமல் சட்டென திரும்பி பார்த்தாள். நீங்க நினைச்ச மாதிரியே அது கண்டிப்பா அர்ஜூன் இல்ல. கதிர் தான் அழைத்தான்.
அதுவரை ரசனையில் பூத்து குலுங்கிய அர்ஜூன் மனது, இப்போது தீயில் வெந்ததை போல வெறுப்புடன் பார்த்தான்.
“என்ன மாமா அதுக்குள்ள தூங்கி எழும்பிட்டியா...” என்றாள் மகி.
அவள் கை பிடித்து இழுத்து அருகில் இருந்த கல் மேடையில் அமர வைத்து, கால்கள் குறுக்கி அவள் மடியில் படுத்து கண்களை மூடியவனின் நெற்றி யோசனையில் சுருங்கி இருப்பதை புரிந்து கொண்ட மகி எதுவும் பேசாமல் அவன் தலை கோதிவிட்டாள்.
இங்கு ஒருவனுக்கு பற்றி எரிந்தது. ஆத்திரம் கண்ணை மறைக்க கதிரை வெட்டி போடும் அளவு கோவம் வந்தது. இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு கைகளை மடக்கி தன் தொடையில் ஓங்கி குத்திக்கொண்டு அவர்களை பார்த்தான். சிறிது நேரம் கழித்து கதிரே பேசினான்.
“மகி பாப்பா...”
“ம்ம். சொல்லு மாமா...”
“இன்னும் ரெண்டு நாளுல நான் போயாகணும் மகி...” அவன் சொல்ல,
மகி அதிர்ச்சியாகி “மாமா என்ன மாமா சொல்ற. நீ எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறியா. இந்த விசயம் காயுக்கு தெரிஞ்சா அவ எம்புட்டு கஷ்டப்படுவான்னு உனக்கு நல்லா தெரிஞ்சும் ஏன் மாமா, இதுக்கு நீ ஒத்துக்கிட்ட. இத்தனை நாள் காயு தான் உன்னை நினைச்சி பயந்துட்டு இருந்தா. இப்ப எனக்கே பயமா இருக்கு மாமா..." மகி படபடவென பொறிய, ஆழ மூச்செடுத்தவன்
“மகி நீயும் என்ன புரிஞ்சிக்கலனா என் காயு எப்படி என்ன புரிஞ்சிக்குவா. நீ தானே மகி, என் நிலைமைய அவளுக்கு புரிய வச்சி சமாதானப்படுத்தனும்...” என்றவனை, ஆற்றாமையுடன் பார்த்த மகி,
“மாமா உன்னை நான் போக வேணான்னு சொல்லல ஆனா இந்த தடவை வேணாம்...” என கெஞ்சியவளை என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் விழித்தான்.
இவர்கள் பேசுவது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கேட்டு கொண்டு இருந்த அர்ஜூனுக்கு மகி, கதிரை வார்த்தைக்கு வார்த்தை மாமா மாமா என உருகி அழைப்பது எரிச்சலை ஏற்படுத்தியது. அது அவள் தன்னை ஒரு முறை கூட மாமா என்றோ இல்லை வேறு பெயர் கொண்டோ அழைக்கவில்லையே என்ற கோபமும் இருக்கத்தான் செய்தது.
இப்படியே இவர்கள் பேசி அவர்களுக்குள்ளே ஒரு முடிவை எடுத்து கொண்டு வீட்டினுள் சென்றனர். வரும்போது சோகத்தில் இருந்த கதிரின் முகம் இப்போது பிரகாசமாக செல்வதையும் பார்த்த அர்ஜூன் என்னவாக இருக்கும் என புருவ முடிச்சுடன் சென்று குளித்து முடித்து கிழே வந்து சோபாவில் அமர்ந்தான்.
ஒவ்வொருத்தருக்கும் டீ கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்து கொண்டிருந்த மகியை பார்த்தவன் “ஏஞ்சல்...” என்று அழைக்க, திரும்பி அவனை முறைத்து விட்டு அவனிடம் வந்து என்னவென கேட்க,
“எல்லாருக்கும் கொடுத்த எனக்கு எங்க..?” மொட்டையாக அர்ஜூன் கேட்க,
“ஹான்...” என புரியாமல் விழித்து,
“நான் யாருக்கு என்ன கொடுத்தேன்...” என்று கேட்டவளை, நமட்டு சிரிப்புடன் பார்த்த அர்ஜூன் பேச வாயெடுக்கும் முன்,
அப்போது தான் தூங்கி எழுந்து வந்த ராதா “அட என்னக்கா நீ, இப்ப தானே எல்லாருக்கும் டீ காப்பி போட்டு மனக்க மனக்க கொடுத்த. அததே மாமா சொல்லுறாக. அப்படித்தானே மாமா...” என கேட்டு கொண்டே வந்து அர்ஜூன் பக்கத்தில் அமர,
அர்ஜூன் சிரித்துக் கொண்டே “ஆமா ஆமா...” என தலையாட்ட,
மகி உதடு குவித்து "ஓ!” என ராகம் பாடி “நீங்க இதத்தே கேட்டியலா. சரி நான் போய் எடுத்துட்டு வரேன்...” என போகப்போனவளை,
“ஏஞ்சல்...” மீண்டும் அழைக்கவும்
“என்ன..?” என திரும்பினாள் மகி.
உடனே ராதா சண்டைக்கு போனாள் அர்ஜூனிடம். “மாமா அது என்ன மகி அக்காவை மட்டும் ஏஞ்சல்னு கூப்பிடுறிய. அப்ப நாங்கலாம் நல்லா இல்லையா. அவ மட்டும்தே உங்களுக்கு ஸ்பெஷலா போய்ட்டாளா. இனிமே என்னையும் நீங்க ஏஞ்சல்னுதே கூப்பிடனும்...” அவள் சண்டை இடவும்,
இது என்னடா புது கதையா இருக்கு எனும் ரீதியில் அர்ஜுன் முழித்து வைக்க, அவனை பார்த்த மகிக்கு சிரிப்பு வந்து விட்டது. மகியை பார்த்தவன் “இருடி இங்க நான் உன் தங்கச்சி லூசுக்கிட்ட மாட்டிக்கிட்டு அவதிப்படுறேன். நீ சிரிக்கிறியா என்கிட்ட சிக்குவல்ல அப்ப இருக்கு உனக்கு...” மனதில் நினைக்கும் போதே,
“ஏய்! அங்க என்ன டி சத்தம் இங்க வரைக்கும் கேக்குது. அங்க வந்தேன்னு வை சத்தமா பேசுற வாயில ஊசி நூல் வச்சி தச்சுப்புடுவேன். பாத்துக்கோ...” கார்த்தியின் குரல் மாடியில் இருந்து ஓங்கி ஒலித்ததும்,
உடனே ராதா “ஒன்னு இல்ல மாமா சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்...” என சொல்லிவிட்டு. அர்ஜூனை பார்த்து இளித்து வைத்து விட்டு இடத்தை காலி செய்தாள்.
அவள் சென்றதை உறுதி படுத்திக் கொண்டவன் வேகமாக எழுந்து மகியிடம் நெருங்கி இருக்க, அதுவரை சிரித்து கொண்டு இருந்தவளுக்கு இப்போது இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
“எ... எதுக்கு இம்புட்டு பக்கத்துல வந்து நிக்கிறீய. தள்ளி நின்னு எதுவா இருந்தாலும் சொல்லுங்க...” என திக்கியபடி சொல்ல,
அவளிடம் இன்னும் நெருங்கி நின்ற அர்ஜூன், அவள் காதோரம் ரகசியம் பேசுவதை போல குனிந்து, அவன் மூச்சு காற்று அவள் காதில் படும்படி நிற்க, இத்தனைக்கும் அவன் அவளை தீண்ட கூட இல்லை. உடல் சிலிர்த்து போனது மகிக்கு.
அது அவள் காது மடலில் உள்ள மயிர்கூர்கள் அவனுக்கு தெள்ள தெளிவாக காட்டி கொடுத்து விட்டது. அவனுக்குள்ளும் அது ஏதோ செய்தது. அதை ஓரம் கட்டியவன், அவளை இன்னும் சீண்ட எண்ணி “ஏஞ்சல்...” என அவள் காதுக்குள் கிசுகிசுப்பாக அழைக்க,
“ம்ம். சொல்லுங்க அத்தான்...” என மெல்லிய குரலில் அவளை மீறி அந்த வார்த்தை வந்துவிட்டது.
அவள் வாய்மொழியாக அந்த வார்த்தையை கேட்டவனின் காதுக்குள் தேன் வந்து பாய்வதை போல இருந்தது. அதும் அவனை மட்டும் தனியாக அத்தான் என்ற அழைப்பு.
இந்த வார்த்தையை அவன் கேட்டு பெற்றிருந்தால் கூட இத்தனை சுகமாய் இருந்து இருக்குமா என்றால் அவனிடம் பதிளில்லை.
மீண்டும் அதை திருப்பி கேட்க ஆசை பட்டு. மறுபடியும் ஏஞ்சல் என குழைவாக அழைக்க, அதே நேரத்தில் சமையல் அறையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்க, படாரென அவனை அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டு சுற்றி முற்றி பார்த்தவள், அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.
அவளின் இந்த திடீர் செயலில் கோவம் வந்தாலும், அவளின் அந்த அத்தான் என்ற அழைப்பு கோவத்தை விடுத்து, அவளைப் பார்க்க “இங்க பாருங்க இதெல்லாம் சரி இல்ல சொல்லிப்புட்டேன். இன்னொரு தடவை இதுமாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துகாதிய. எனக்கு இதெல்லாம் பிடிக்காது...” என படபடத்தவளை,
இமை வெட்டாமல் பார்த்தவன் “அப்படியா..?” என கேட்டு கொண்டே அவள் முன்னாள் அர்ஜூன் நடக்க,
“ஆ... ஆமா...” என சொல்லி அவன் கண்களை பார்த்து கொண்டே மகி கால்களை எடுத்து பின்னால் வைத்து நகர்ந்தாள்.
தொடரும்.