- Messages
- 270
- Reaction score
- 234
- Points
- 43
இதழ் - 8
மகி மூச்சு விடக் கூட மறந்து தன் கால்களை பின் எடுத்து வைத்து பின்னால் நகர, அர்ஜூனும் அவளை விடாது அவன் கால்களை ஒவ்வொரு அடியாக முன்னெடுத்து வைத்தான். ஒரு கட்டத்திற்க்கு மேல் பின்னால் செல்ல வழி இல்லாமல் மகி சுவற்றில் மோதி நிற்க, அவள் எங்கும் ஆசையாத படி கைகளால் அவன் அணை போட, அவள் இதயம் வேகமாக துடிப்பது அர்ஜூனுக்கும் கேட்டது.
“நான் என்ன பூதமா ஏஞ்சல்? என்ன பாத்து ஏன் இப்படி பயப்படுற. நான் என்ன உன்னை கடிச்சி திங்கவா போறேன்...” என கடுமையாக கொண்டே “உன் தங்கச்சி என்கிட்ட சண்டை போடுறா. அத பாத்து நீ சிரிக்கிற...” என கண்கள் உருட்டி அவளை உறுத்துப் பார்த்தான்.
“நான் ஏன் உங்கள பாத்து பயப்படணும். உங்கள பாத்து ஒன்னும் எனக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. அப்புறம் சிரிப்பு ஒன்னும் சொல்லிட்டு வராது. முதல்ல நீ... நீங்க தள்ளி போங்க...” என்று அவள் படபடக்க,
“ஓ! அப்ப என்னை பாத்து உனக்கு பயம் இல்ல அப்படித்தானே...”
“ம்ம்.. ஆமா.. முதல்ல இப்படி என்கிட்ட வந்து பேசுறத நிறுத்துங்க. எதுவா இருந்தாலும் தூர நின்னு பேசினாலே என் காது நல்லாவே கேக்கும்...” அவள் பொறிய, அவள் பேசுவதை கேட்க அவன் இந்த உலகில் இருந்தால் தானே.
அவள் கண்கள் படபடத்து, தேன் சுளை உதடு வளைத்து பேசும் அழகில் எந்த ஒரு குறையும் இல்லாத, சிர்ப்பம் போன்று அவன் முன்பு நிற்கும் உயிருள்ள இப்பெண்ணின் வடிவத்தை அங்குல அங்குலமாக கண்களால் அளந்தவன் பார்வை கடைசியாக அவள் சிற்றிடையில் வந்து நின்று “சோ பியூட்டிபுல் ஏஞ்சல்...” என்றான்.
என்ன சொல்கிறான் என்று சரியாக அவள் காதில் விழாமல் போகவே. காதை தீட்டி அவனிடம் “என்ன சொன்னீய?” என கேட்டு அவன் முகத்தை பார்த்து அவன் கண் போன திசையை கண்டவள், அவனை முறைத்து கொண்டே தாவணியை இடை தெரியாத வாரு இழுத்து விட்டாள்.
இடை தெரியாமல் போகவே, முகம் சுருங்கி நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க “இப்ப நீங்க தள்ள போறியலா இல்லயா? இல்ல கத்தி வீட்ல எல்லாரையும் கூப்பிடவா?” என்றாள் கோவமாக.
இன்னும் நன்றாக அவளிடம் நெருங்கி நின்று “முடியாதுன்னா என்ன பண்ணுவ ஏஞ்சல். கத்த போறியா கத்திக்கோ. எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை..” என்றான் திமிராக.
கையை பிசைந்து, கீழ் உதட்டை பற்கள் கொண்டு கடிதவள், அவனுக்கு முன்னாள் எட்டி பார்த்து “ஐயோ, அத்தை நான் இல்ல உங்க மயன்தான்...” என கத்த, சட்டென இவன் பின்னால் திரும்பி யாராக இருக்கும் என பார்க்க, அந்த நேரம் பார்த்து அவனிடமிருந்து விடுபட்டு ஓடினாள் மகி.
ஓடியவளை பார்த்து ஒரு நிமிடம் விழித்தவன் பின் “ஏய் ஏஞ்சல் பாதம் பிஸ்தா முந்திரி எல்லாம் போட்டு உன் அத்தானுக்கு சுடசுட பால் கொண்டுவா...” என அவள் பின்னால் கத்தி சொல்ல,
அவனை நின்று திரும்பி பார்த்தவள் “மொகரையப் பாரு என்னவோ கட்டுன பொண்டாட்டி கிட்ட கேக்குறாப்புல இவரு கேக்குறாரு...” என நினைத்து,
“ம்ம்ம்...” என சிலுப்பிக் கொண்டு முகத்தை வெட்டி சென்றுவிட்டாள்.
அர்ஜூன் சிரித்துக் கொண்டே, தன் தலையை அழுத்தமாக கோதி “சில்லி கேர்ள் சோ கியூட் ஏஞ்சல்...” என முனுமுனுத்தபடி அவன் அறைக்குச் சென்றான்.
பகலும் இரவும் ஒன்று சேர்ந்து, பகல் போல இல்லாமலும், இரவு போல அல்லாமலும் பகலிரவாக காட்சியலித்த அந்த அழகிய மாலை பொழுதில், குரு சோகமாக கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருக்க, அவன் முகத்தையே பார்த்து கொண்டு கதிர், கார்த்தி, ரதி, ராதா, ரிஷி, இவர்களும் சுற்றி அமர்ந்து இருந்தனர்.
அர்ஜூன் போனில் எதையோ பார்த்து கொண்டே இவர்களை கண்டு கொள்ளாமல் வந்து அமர்ந்து அவன் வேலையை செய்தான். பொறுத்து பொறுத்து பார்த்த கதிர், குருவை எட்டி ஒன்று விட,
“ஆ! அம்மா...” என கத்திக் கொண்டே கீழே விழ, கதிர் அவனை தீயாக முறைத்து பார்க்க. சுற்றி இருந்தவர்களும் அதே நிலையில் தான் பார்த்தனர்.
குரு கத்தியதில் அர்ஜூனும் பார்க்க, உதைத்த இடத்தை தேய்த்து கொண்டு “டேய் பன்னிப் பயலே, இப்படியாடே ஒரு மச்சான மரியாதை இல்லாம உதைப்ப...” என்று திட்ட,
“ஏலேய். இந்நேரத்துக்கு உன்னைய கொண்ணே போட்ருக்கணுமுடி. வேலையா இருந்தவயல எல்லாத்தையும், அவசரமா பேசணும் வாலேன்னு, கூப்புட்டு வச்சி அரைமணி நேரமா எங்க எல்லாத்தையும் சுத்தி உக்கார வச்சி என்னத்தமுல பேசுன. உன் மொகரைய இப்படி சூம்ல பாக்கவாலே எங்கள கூப்பிட்டு வந்த...” என கதிர் எகிற,
குரு பாவமாக பார்க்க “ஏன் மாமா பூஜா அக்கா உள்ள ரொம்ப பலமா தாக்கீடுச்சோ. அதே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம சோக கீதம் வாசிக்கிறீயலோ. இதுக்குதே நானும் சொல்றேன் என்னை கட்டிக்கோன்னு. நீ கேட்டியா? என்னை கட்டிருந்தா உனக்கு இந்த நிலைமை வந்துருக்குமா மாமா...” என ரதி வராத கண்ணீரை துடைத்து கொண்டே சொல்ல, ரிஷி அவளை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான்.
குரு “ஏதே ஒருத்திக்கிட்ட சிக்கிக்கிட்டு நான் படுத்துற போதும் தாயி. இதுல நீ வேறயா...” என்றான் வாழ்க்கையே வெறுத்து போன நிலையில்.
“ஏன் அண்ணே நீ இந்த அளவுக்கு வாழ்வே மாயம் கமல் மாதிரி, பீல் பண்ணி பேசுறீன்னா, ஏதோ பெரிசா பூஜா புள்ள உன்னை வச்சி சம்பவம் பண்ணிருப்பா போலயே...” என்றபடி உள்ளே வந்து அமர்ந்தாள் காயு.
“நானும் அதத்தே சொல்லலான்னு வந்த புள்ள. அதுக்குள்ள நீயே சொல்லிப்புட்ட...” என்று கார்த்தி சொல்லிட,
“ஐயோ, போதும் கொஞ்சம் எல்லாரும் நிறுத்துரியலா. அண்ணா இப்ப நீ சொல்ல போறியா இல்ல நான் அண்ணிக்கிட்டவே போய் கேட்டுகிடட்டுமா...” என அவனிடம் காய்ந்தால் ராதா.
குரு பாவமாக முகத்தை வைத்து கொண்டு “சொல்லி தொலையிறன்...” என நடந்ததைச் சொல்ல ஆரமித்தான்.
பூஜா அறையில் துணிகளை மடித்துக்கொண்டு இருக்க, அப்போது தான் குளித்து விட்டு, தலையை துவட்டி கொண்டே வந்த குரு, முடிகளை எடுத்து முன்னால் போட்டபடி, சேலை தலைப்பை இழுத்து இடையில் சொருகிக் கொண்டு அவளின் பறந்து விரிந்த முதுகை பின்னால் இருந்து கண்டவன் எண்ணங்கள் கணவனுக்கு உரியதாக திசை மாதிரி போனது.
அந்த எண்ணங்களுக்கேத்த மாதிரி ஒரு பாடல் டிவியில் ஓடியது.
"பூஜைக்கேத்தப் பூவிது..
நேத்து தானேப் பூத்தது..
பூத்தது யாரத பாத்தது..
மேல போட்ட தாவணி சேலை ஆகிப்போனது..
சேலைஇழுத்து விடுவதே வேலையாகிப் போனது..
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹேய்..." என பாடல் ஒலிக்க, மெதுவாக பூனை நடை இட்டு, பின்னால் இருந்து அவளை கட்டியணைத்து, அவள் கன்னத்தில் இச்.. இச்.. இச்.. என முத்த மழை பொழிந்தவன் “ஏய்! பூவு புள்ள, இன்னைக்கி நீ எம்புட்டு அழகா இருக்க தெரியுமா...” என அவள் காதில் கிசுகிசுக்க,
அவன் அணைப்பிலேயே, அடங்கி இருந்தவள் வெட்கம் கொண்டு “அப்படியா மாமா? அம்புட்டு அழகாவா இருக்கேன்...” என்றாள்.
“அட ஆமா புள்ள. என்னைக்காச்சும் உன் மாமன் உன்கிட்ட பொய் சொல்லி இருக்கேனா டி...” அவளிடம் குழய,
“ம்ம்! ஆமா மாமா. நீய என்கிட்ட பொய் சொல்ல மாட்டியதெ. நீங்க என்கிட்ட உண்மைய சொன்னதுக்கு. நான் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க போறேன்...” என்றவளை, கண்கள் மிளிர “என்ன பரிசு பூவு...?” என்று அவள் முத்தம் தான் தரப் போகிறாள் என நினைத்து ஆர்வமாக கேட்டான்.
“அது அது...” என இழுத்தவள்,
“நீங்க மார்க்கெட் போயி காய்கறி வாங்கிட்டு வாங்க. நான் சொல்றேன்...” என்றிட, அவனோ அவளை குழப்பமாக பார்க்க,
“அதுலத்தெ மாமா பரிசே இருக்கு. நான் உங்களுக்காக ஒரு ஸ்பெஷலானா புது டிஷ் ஒன்னு யோசிச்சி வச்சிருக்கேன். அதை செஞ்சி கொடுத்து உங்கள அசத்திப்புடுறேன் பாருங்க...” என்றிட,
“சரி அவ இம்புட்டு தூரம் நம்பிக்கையா சொல்றாளே, கண்டிப்பா ஏதோ சூப்பராதெ செஞ்சி அசத்த போரான்னு நினைச்சி, ஆரமிச்ச வேலைய கூட உட்டுப்புட்டு, நானும் போயி காய்கறி வாங்கியாந்து கொடுத்தே...”
அனைவரும் ஆர்வமாக கேட்டு, “என்ன பூஜா புள்ள சொன்ன மாதிரியே செஞ்சி அசத்திப்புடுச்சா..?” என்றிட,
“அந்த கொடுமைய ஏன்டா கேக்குறீங்க. ஒரு பெரிய கின்னத்துல நான் வாங்கிட்டு வந்த காய்கறி எல்லாத்தையும் வெட்டி போட்டு பாக்கவே நல்லா கண்ணனுக்கு குளிர்ச்சியா எடுத்துட்டு வந்து சாப்பிட்டு ருசி பாக்கச் சொல்லி கொடுத்தாளே. சரி பாக்கவே நல்லா இருக்கே சாப்பிட்டு பாப்போன்னு வாயில வச்சா. அருசுவைய தனி தனியே சாப்பிட்டு இருக்கேன்டா.
அவ குடுத்தாத சாப்பிட பிறகுத்தே என்ன சுவைல சேக்குறதுன்னே தெரியாத ஒரு சுவையை சாப்பிட்டு தவிச்சேன் தெரியுமா. சரி செஞ்சத மாத்தி ஏதாவது எடுத்துட்டு வந்துட்டா போலன்னு நினைச்சி, இது என்னம்மா நீ செஞ்சத மாத்தி எடுத்துட்டு வந்துட்ட போல பூவு. நீ என்ன பண்ற, இந்த சாக்கடைய கொண்டு போயி மாட்டுக்கு கூட ஊத்திடாத மாடு செத்துரும். குழி தோண்டி அதுல இத ஊத்திட்டு. போயி நீ செஞ்சத எடுத்துட்டு வான்னுதான் சொன்னேன்.
அதுக்கு அவ மொறச்சி, வேக வேகமா மூச்சு எடுத்து விட்டு, என் தலைல தபேலா வாசிச்சிட்டு. அவ கொண்டு வந்ததை புடுங்கிட்டு.
நான் கஷ்ட பட்டு உங்களுக்காக சமைச்சி பாயசம் கொண்டு வந்தா, குழி தோண்டியா ஊத்த சொல்றீங்க. இதுக்கு தண்டனையா உங்களுக்கு இன்னைக்கு முழுக்க சாப்பாடு கிடையாது. பட்டினியாவே இருங்க அப்பதே உங்களுக்கு என் சமயளோட அருமை புரியும் சொல்லிபுட்டு போய்ட்டா டா.
ஆனா சத்தியமா அவ சொல்லி தான் டா அவ கொண்டாந்தது பாயசம்னு எனக்கு தெரியும்...” என பாவமாக குரு சொல்ல, குருவையே ஒரு நிமிடம் உற்று பார்த்த அனைவரும் வயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டு,
“டேய் மச்சா, சூப்பருடா. உலகத்துலே உன் பொண்டாட்டி ஒருத்தி தான்டா மொத தவட காய்கறி போட்டு பாயசம் வச்சி கொடுத்தது...” என சொல்லி சொல்லி சிரிக்க,
“ஆமா ஆமா மாமா. இதுல ஹலைட் என்னன்னா நீ அக்காக்கிட்டயே அவ செஞ்ச காய்கறி பாயசத்தை குழி தோண்டி ஊத்த சொன்ன பாத்தியா அங்க நிக்கிற மாமா...” என ரதி சொல்ல, குரு முழித்து கொண்டு இருக்க, அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர்.
இதைக் கேட்ட அர்ஜூனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. அப்போது மகி சமையல் அறையில் இருந்து வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்து நிற்க, அனைவரும் சிரிப்பதை நிறுத்திவிட்டு அவளை கேள்வியாக பார்க்கவும் அர்ஜூன் நிமிர்ந்து அமர்ந்தான், ஏஞ்சலை பார்க்க.
அவள் பதட்டமாக “அண்ணா அண்ணா...” என குருவை அழைக்க,
“என்னாச்சி மகி...” என்றான் பதறி போய்.
“அண்ணா பூஜா ஏதாவது உன்கிட்ட சண்டை போட்டு உன்னை அடிச்சிட்டாளா...” மகி கத்தி கேட்க,
“ஏய்! அதுக்கு ஏன் மகி பாப்பா வெளிய கத்தி சொல்லி என் மானத்த வாங்குற...” குரு பல்லை கடித்தான்.
“ஐயோ, அண்ணே நான் உன் நல்லதுக்குத்தே கேக்குறேன். பதில் சொல்லு. உன்னை பூஜா ரூம்குள்ள வச்சி நல்லா அடிச்சி நவுத்தி எடுத்துட்டாளா...” என ஒவ்வொன்றாக தெளிவாக கத்தி கேட்க, அவள் கேட்ட விதத்தில் குருவை தவிர அனைவருக்கும் அவனை பார்த்து திரும்பவும் விட்ட சிரிப்பை தொடங்கினர்.
“என்ன மாமா உன் மானம் இப்படி, உன்னை கேக்காமலே ஏலம் விட்டு காத்துல பறக்குது...” என்று கார்த்தி கேட்டு சிரிக்க,
குரு முறைத்து “மகி அத இப்படி இவைங்க முன்னாடி கத்தி சொல்லி உன் அண்ணன அசிங்கப்படுத்துவியா...?” என்றான்.
“ஐயோ அண்ணா உனக்கு அசிங்கம் முக்கியமா? இல்ல உயிர் முக்கியமா?” என்றாள் அவசரமாக.
“என்ன மகி புதிரெல்லாம் போட்டு அண்ணன ஜர்க்காக்குற...” என்றான்.
“நான் என்ன உன்னை ஜர்க்காக்குறது? அங்க உன் பொண்டாட்டி. நீ பாவம் உன்னை போட்டு ரொம்ப அடிச்சிட்டாலாம். எட்டில்லாம் கூட மிதிச்சாளாமே. நீ வேற காலைலேந்து சாப்பிடாம இருக்கேன்னு. உனக்காக சப்பாத்தி செய்யிறா...” என்றிட,
“ஏண்ணே. நீ பூஜா உன்னை அடிச்சத மட்டும் தானே சொன்ன. எட்டி உட்டு மிதிச்சதெல்லாம் சொல்லவே இல்லையே...” என அதிமுக்கிய சந்தேகத்தை ரிஷி கேட்டதும், மேலும் அங்கு சிரிப்பு தான் பீரிட்டது.
“டேய் பாருடா நீ அவ சமைச்சத கிண்டல் பண்ணியும். அவ உனக்காக திரும்பவும் சப்பாத்தி சுடுறான்னா, என் தங்கச்சிக்கு எம்புட்டு பாசம் பாரு டா உன் மேல...” என கதிர் சொல்ல,
“ஐயோ, மாமா புரியாம பேசாத. அவ சப்பாத்தி மாவ குக்கர்ல போட்டுட்டு. சப்பாத்தி வேக எத்தனை விசில் வைக்கணும்னு என்கிட்ட கேக்குறா...” என அனைவர் தலையிலும் அலுங்காமல் குலுங்காமல் குண்டை தூக்கி போட்டாள்.
அவ்வளவு தான். குரு இடத்தையே காலி செய்து இருந்தான்.
தொடரும்.