Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
242
Reaction score
214
Points
63
அத்தியாயம் - 8

"டேய் மதனு, பார்ட்டினா எங்கள விட நீதானே செம்ம மஜா பண்ணுவ, இன்னைக்கு ஏமிடா சத்தமே இல்லாம ஓரமா உக்காந்திருக்க.." ராணுவத் தோழன் சாஹிர் உரிமையாக அருகில் அமர,

"இந்நேரம் அவ தனியா இருப்பாள்ள டா.." கையில் இருந்த மது கிண்ணத்தை மேசையில் உருட்டியபடி சொன்னதும்,

"எவ டா தனியா இருப்பா.." புரியாமல் கேட்டான் சாஹிர்.

"அவ தான் டா கண்ண கண்ண உருட்டி பாப்பாளே, ஏன் சாகீரு இப்ப அவ தூங்கி இருப்பா தானே.." உள்ளே போன சரக்கு, சிறுக சிறுக வேலையை காட்ட துவங்கியது போலும். குரலும் குளறலாக வந்தது, ஆளும் பார்க்க ஒரு மார்க்கமாக தான் இருந்தான்.

"கண்ண உருட்டி தூங்கி இருப்பாளாவா.. ரெண்டு பாட்டில்க்கே போதை ஏறி போச்சா.." மதன் ஒரு பெண்ணை பற்றி போதையில் உளறுகிறான் என்றால், அது அதிசயம் அல்லவா!

அதனாலே சாஹிர் அவனை உளுக்கி எடுக்க, அசராமல் அடுத்த பாட்டிலை வாயில் சரித்தான் மதன்.

"கண்டிப்பா மோகினி பிசாசு தான் இவனை அடிச்சிருக்கும்.." சலிப்பாக எண்ணி, தானும் அவனோடு சேர்ந்து மதுவை சுவைக்கவும், கூட்டாளிகளுக்கிடையே சலசலப்பு உண்டானது.

"டேய் டேய் அண்ணய்யா வந்துட்டார், அவர் முன்னாடி அளவுக்கு அதிகமா குடிச்சி, தள்ளாடித் தொலஞ்சிடாதீங்க, அப்புறம் தெளியத் தெளிய விடாம டான்ஸ் ஆட வச்சிடுவார்.." அனுபவப்பட்டவன் அவசரமாக சொல்ல, மற்றவர்களும் அதனை கேட்டு நல்ல பிள்ளைகளாக நின்றிருக்க,

கம்பீர நடையிட்டு உள்ளே வந்த ருத்ரன், அமைதியின் உருவமாக குபீர் வாசனையோடு அம்மாஞ்சியாக நிற்கும் பரட்டை மண்டைகளை, மீசை மறைத்த நகைப்புடன் பார்த்தான்.

"ஏமி டா, என்ன பாத்ததும் பம்பிட்டு நிக்கிறீங்க.. அம்புட்டு நல்லவிங்களா நீங்க.." வரிசையாக நின்றவர்களை கூர்ந்து பார்த்தபடியே, தனக்கான இருக்கையில் அமர்ந்தான் ருத்ரங்கன்.

"எல்லாம், உம்மேல உள்ள மரியாத தான் அண்ணய்யா.." ஒருவன் அசட்டு சிரிப்புடன் மண்டையை சொரிய,

"ம்.. ம்ம்.. உருட்டினது போதும், அளவா ஆரமிங்க.. அளவு மீறுச்சி, அடுத்த ஒரு வாரத்துக்கு சோறு தண்ணி இல்லாம, தனி தனி ரூம்ல அடச்சி போட்டுடுவேன்.." கையசைத்து உத்தரவு கொடுத்ததும், மீண்டும் ஆட்டம் பாட்டம் குசாலமாக ஆரம்பமானது.

"டேய் மதன் எக்கட..?" கூட்டத்தில் அவனை மட்டும் காணாது கேட்டிட,

"அந்தா இருக்கான் அண்ணய்யா.. என்னன்னே தெர்ல, ஆளே பாக்க புதுசா இருக்கான்.. ஏதேதோ சொல்லி புலம்புறான் ஒன்னும் புரியல.." சாஹிர் தெளிவாக கோர்த்து விடவும், ருத்ரனின் கண்கள் இடுங்கின.

போதையில் தலை தொங்கப் போட்டு தனி மேசையில் அமர்ந்திருந்த மதனை நெருங்கிய ருத்ரன், அவன் எதிரே விரைப்பாக அமர, மதனின் கண்களுக்கு இரண்டு மூன்றாக தெரிந்தது அவன் உருவம்.

"டேய் சாகீரு, ஒரு எடத்துல உக்காந்து தொலைடா, அக்கட இக்கட ஏன் நகர்ற.." கண்ணை கசக்கிக்கொண்டு போதையில் குளற, புகையினை ஊதியபடி ஆழ்ந்து பார்த்த ருத்ரன்.

"எத்தனை பாட்டில் உள்ள போச்சி.." என்றான் சன்னமான குரலில்.

"1.. 2.. 3.. இந்தா 4.." மேசையில் வரிசையாக இருந்த பாட்டிலை எண்ணி, "எப்டி நாலாவது பாட்டில் உள்ள போயும், சும்மா ஸ்டெடியா இருக்கேன்ல..

ஸ்மெல்லு வருதா என்ன..? வீட்ல வேற முத்தம்மா தனியா இருப்பா, இப்டியே போனா பயந்திடுவளோ.." தனியே புலம்பி, தன்னை தானே நுகர்ந்து பார்த்த மதன்,

"அவளா பயப்படுவா, சரியான அழுத்தக்கார அம்மாயி.. கொலை பண்ணிடுவேன்னு மிரட்டியும், டஸ்சு புஸ்சுனு தலைவலிக்க கத்துறாளே ஒழிய, ஒரு கன்றாவியும் புரில"

முகம் சுணங்கி கடுப்பாக முனகியவன், கை மணிக்கட்டை தூக்கி, நேரத்தை பார்க்க முனைய, முழு உருவமாய் தன் எதிரே அமர்ந்திருக்கும் ருத்ரனையே கண்ணுக்கு தெரியாத போது, சிறு சிறு கைகடிகார முட்களா தெரிய போகிறது!

"ம்க்கும்.. இப்பதானா இந்த வாட்ச் வேற ரிப்பேர் ஆகனும்.." நல்லா ஓடிய வாட்ச்சை நாலு தட்டு தட்டி புலம்பிய மதனின் செய்கையெல்லாம் கண்டு, எதிரே இருப்பவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், நிதானமாக அமைதி காத்தான்.

"எப்படியாவது அவ பின்னணி கண்டுபுடிச்சி போட்டு தள்ளிடலாம்னு பாத்தா, என்னால இவள மட்டும் ஒன்னுமே பண்ண முடியலையே.. அப்பாவியா முழிக்கிற மூஞ்சிய பாத்தாலே பரிதாபமா இருக்கு..

இப்டியே போனா என்ன பண்றது.. பேசாம என்ன நடந்தாலும் பரவால்லைனு, அண்ணய்யாட்ட விசயத்த சொல்லிடலாமா.." மேசையில் தலை சரித்து படுத்து ஜொள் வடிய புலம்பத் தொடங்கவும், தூரத்தில் இருந்த சாஹிர்க்கு கண்ணை காட்டிய ருத்ரன்,

"ஓவரா போய்ட்டான், இவனை கொண்டு போயி வீட்ல விடு" அவனுக்கு கட்டளையிட்டவனாக தானும் ரெண்டு பெக் போட ஆரமித்தான்.

"ஏன் அண்ணய்யா, பார்ட்டி முடிஞ்சதும் இங்க தானே மட்டையாகுறது வழக்கம், இன்னைக்கு மட்டும் என்ன, இவனை அவன் வீட்ல விட சொல்ற.." ருத்ரன் வந்த பிறகு மதன் புலம்பிய எதுவும் கேட்டிடாத சாஹிர், குழப்பமாக கேட்டிட,

"இனிமே அப்டித்தான், இன்னைக்கு இவன் நாளைக்கு நீ.." புரியாத புதிராக ருத்ரன் சொல்ல, ஆல்ரெடி சற்று போதை விளிம்பில் இருப்பவனுக்கு எப்படி புரியும்! திருத்திரு முழியோடு ருத்ரனை பார்த்த சாஹிர், மதனை இழுத்து வந்து காரில் போட்டு, அவன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

"டேய் சாகீரு, டீ கடையில வண்டிய நிறுத்து, முத்தம்மாக்கு பால் வாங்கிட்டு போலாம்.. பாவம் குளிருல இருப்பா.." ஆரம்பம் முதலே சாஹிர் என நினைத்து புலம்பியவனுக்கு, நடுவில் நடந்த ஆள்மாறாட்டம் தற்போது தெரியாமலே போனது.

"ம்க்கும்.. இது வேறையா, ஆனாலும் உன் கற்பனைக்கு ஒரு எல்லை இல்ல டா.." தலையினை உளுக்கியவன், மதன் நச்சரிப்பு தாங்காது அந்த இரவு நேரத்து பனியில் முழுநேரமும் திறந்திருக்கும் டீ கடையில் காரை நிறுத்தி, சுட சுட பாலை பார்சல் வாங்கிக்கொண்டவனாக, மதன் வீட்டிற்கு வந்தடைந்தான்.

"டேய் இந்தா பால், உள்ள போவியா இல்ல துணைக்கு நானும் வரவா.." மதன் முகத்தில் தண்ணீர் தெளித்து, கன்னத்தை தட்ட, பாதி தெளிந்தும் தெளியாத போதையில் கண்ணை திறந்து சுற்றிலும் பார்த்த மதன்,

"ஒரு வீரனுக்கு இன்னொரு வீரன் துணையா, நோ நெவர்.. எவ்வளவு தண்ணி போட்டாலும் இந்த மன்மதன் ஸ்டெடியா இருப்பான்.. கொண்டா பார்சல.." அவன் கையில் இருந்த பார்சலை வாங்கிக்கொண்டு தள்ளாடி நடந்து போவதை, சந்தேகமாக பார்த்து சென்றான் சாஹிர்.

தட்டுதடுமாறி கதவை திறந்த உள்ளே வந்தவன் அரவம் கேட்டு, அப்போது தான் நித்திரையை தழுவப் போன முக்தா அடித்துப் பதறி எழுந்து அமரவும், உள்த்தாழிட்டு மதன் திரும்பவும் சரியாக இருந்தது.

"இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க.." அவளை விரைப்பாக நோக்கிய மதன், கால்கள் பின்னியபடி மெத்தையில் அமர, வந்த இத்தனை நாட்களில் இவ்வளவு போதையில் அவனை பார்த்திடாத முக்தா, அவன் இருக்கும் நிலை கண்டு சற்று படபடப்பாக தான் உணர்ந்தாள்.

பதில் பேசாது அவள் மூலையில் முடங்க, நள்ளிரவு நேரத்தில் வாங்கி வந்த பாலை அவளிடம் நீட்டவும், அவனையும் அந்த பால் பார்சலையும் மாறி மாறி பார்த்தவளின் பாவனையில் என்ன கண்டானோ!

"குளிருமேனு வாங்கிட்டு வந்தேன், அப்டியே அந்த வலிக்கும் சேர்த்து தான் குடி.." ஆணவனின் போதையேறிய அரைக்கண் பார்வை, தன் வயிற்றில் அழுத்தமாக பதிந்து மீண்டதில், பெண் தேகம் கூச்சத்தில் குறுகிய போதும், வியப்பில் விரிந்த விழிகளோடு கரம் நடுங்க அதனை வாங்கிக் கொண்ட பின்னும், மதனின் பார்வை அவளிடமே நிலைத்திருந்தது.

"இன்னும் எவ்ளோ நேரம் கண்ண கண்ண உருட்டி என்ன பாத்துட்ருக்க போற, ம்ம்.. குடி.." அவளை மிரட்டும் போது மட்டும் தெளிவாக இருந்தான் போலும். குரலெல்லாம் கனீர் கனீரென வந்தது.

பதற்றமாக கவருக்குள் இருந்த இரு கப்புகளை எடுத்த முக்தா, அதில் ஒன்றில் பாலை ஊற்றும் போதே என்ன தோன்றியதோ! மற்றொரு கப்பிளும் பாலை ஊற்றிவள், ஒன்றை எடுத்து தயக்கமாக அவனிடம் கொடுக்க,

"ம்ஹும்.. வயிறு ஃபுல்லு, இதுவும் உள்ள போனா, ஏற்கனவே போட்டதெல்லாம் வெளிய வந்திடும்.. நீயே குடிச்சிட்டு படு.." கண்ணை சொருகியவன் அப்படியே மட்டையாகி விட, முத்தப்பெண்ணின் மையல் பார்வை என்னவோ, அவனை விட்டு விலகுவேனா என்றிருந்தது.

** ** **

மதனை அனுப்பி வைத்த சிறிது நேரத்தில் எல்லாம் தானும் வீட்டிற்கு புறப்பட்ட ருத்ரன், சத்தமின்றி வீட்டிற்குள் வந்தவன் கால்கள் சட்டமாக நின்று விட்டது. சோஃபாவில் உடல் குறுகி உறங்கும் மனைவியை கண்டதும்.

"நினச்சேன்.." என்பதை போல தலை முடியை சிலுப்பிக்கொண்ட ருத்ரன், முயல் குட்டியாக கண்ணுறங்கும் மனைவியை நெருங்கி வந்து அலுங்காமல் கையில் ஏந்திக் கொண்டது தான் தாமதம், கண்ணாடி வளவி சலசலக்க ஆடவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டன குழலியின் வெண்கரங்கள்.

"தூங்காம முழிச்சிட்டு தான் இருந்தியா ஹ்ம்.." குனிந்து மனைவியின் முகம் கண்டான் ருத்ரன்.

"எந்நேரமானாலும் நீங்க வருவேள்னு தெரியும், அதான் முழிச்சிருந்தேன்.." கண்கள் சிமிட்டி மென்புன்னகையோடு தன் மீசையை திருகிவிட்ட அவள் விரலை, கவ்வுவதை போன்ற பாவனை செய்ய, வெடுக்கென விரலை இழுத்துக்கொண்டு பொய்யாக முறைத்தாள் குழலி.

"என்ன முறைப்பு, ஏற்கனவே பாஸ்டிங் அது இதுன்னு உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு, இதுல இத்தனை மணி வரைக்கும் முழிச்சிருந்தா, என்னத்துக்கு ஆகுறது.. சொல்ற பேச்ச கேக்கவே கூடாதுன்ற முடிவுல இருக்கியா டிஇஇ.."

கையில் அள்ளிய மலர்கொத்து, நாளுக்கு நாள் எடை குறைந்து போவதை கண்கூடாக உணர்ந்து கோபம் எட்டி பார்த்தது அவன் விழியில்.

மௌனமான பெண்ணவளின் ஆழ் பார்வையோ, சொல்லாமல் குற்றம்சாட்டியது, அனைத்திற்கும் காரணம் நீதானடா என்று. அவள் பார்வையின் அர்த்தம் புரிந்த ருத்ரனும், மெத்தையில் மெதுவாக அவளை கிடத்தி,

"அதான் வந்தாச்சில்ல, இப்பவாது கண்ண மூடி தூங்கு.." சிடுசிடுப்பாக உரைத்தாலும், அவள் நெற்றியில் ஆழ் முத்தமிட்டு பால்கனி பக்கம் செல்லப் போக, கொத்தாக அவன் சட்டையினை பற்றிக்கொண்டாள் குழலி.

"என்ன டி.."

"தனியா தூங்க முடிஞ்சிருந்தா, தூங்கி இருக்க மாட்டேனா.. எதுக்காக இந்த முரட்டு பையனுக்காக காத்திருக்க போறேனாம்.." முகத்தை தூக்கி வைத்து சொன்ன அழகில், ரசனை மின்னியது ஆணவன் கண்களில்.

"காத்திருந்து மட்டும் என்ன டி புண்ணியம், பெர்ஃபார்மன்ஸ் ஒன்னும் அந்த அளவுக்கு வர்த் இல்லையே.." வேண்டுமென்றே மனைவியை சீண்ட, செப்பிதழ் கோணி கோலிகுண்டு கண்ணை சுழட்டினாள்.

"நானும் விதவிதமா பிச்சி திங்குறேன், ஆனாலும் இந்த பளபளப்பு மட்டும் எப்டி குறையாம இருக்கு, நான் இல்லாதப்போ இதுக்கு என்ன டி பண்ற.." மின்னும் செவ்விதழை நசுக்கிப் பிடித்தவன், தன் அதரம் கொண்டு உரசவும் மேனி சிலிர்த்த குழலி,

"நோக்கு தெரியாம என்ன பண்ண போறேன், விடுங்கோ.. அதான் ஒன்னும் புண்ணியமில்லைனு சொல்லிட்டேளே.." ஆணவனின் நெருக்கம் பிடித்தாலும், மது வாடையில் தன்னால் முகம் சுணங்கியது.

"இதுக்கு தான் டி குளிக்க போனேன், விடாம புடிச்சி வச்சிக்கிட்டு மூஞ்சிய திருப்பினா என்ன பண்றது.." மனைவியின் சிறு சிறு அசைவும் அறிந்தவன், அவள் மேலிருந்து எழப் போக, அப்போதும் விடவில்லை அவனை.

"இது என்ன நம்ம ஊரா, கண்ட நேரத்துல ஸ்நானம் செஞ்சாலும் உடம்புக்கு ஒத்துக்க.. அதுவும் காஷ்மீர் பனில.. ஆள் தான் பாக்க பைல்வான் ஆனா சின்ன காய்ச்சல் கூட தாங்க முடியறது இல்ல..

பேசாம படுங்கோ அதுக்கு தான் பிடிச்சி வச்சது.." படபடப்பாக மொழிந்து திரும்பிப் படுத்துக்கொண்ட குழலி, தன் வயிற்றில் பதிந்த கரத்தை சிறு நடுக்கத்துடன் உணர்ந்தாள்.

ரொமான்ஸ் எல்லை மீறினாலும் இவன் பாதுகாப்பு கேடயத்துடன் தான் தன்னை நாடுவான் என்ற உண்மை அறிந்து, மனம் சோர்வை வெளிக்காட்டாது, கணவனுக்கு இசைந்து போக துணிந்தாளோ!

சேலை தலைப்பு விலகி, முதுகில் தீண்டும் ஈர இச்சில், இமைகள் மூடி போர்வையை இறுக்கிய கரத்தில், தன் கரத்தை நுழைத்து அவளை தன் புறம் திருப்ப, வேக மூச்சி வாங்கியது பெண்ணுக்கு.

"கண்ணத் தொற குயிலு.." மூடிய இமையில் இச் இச் வைக்க,

"ம்ஹும்.." என்றாள் மறுப்பாக தலையாட்டி..

"ஏன் டி பிடிக்கலையா.." முரட்டுக் கரம் அவள் பஞ்சான தேகத்தை உணர,

"எத்தனை முறை உங்ககிட்ட என்ன மறந்தாலும், நீங்க தொட்டதும் என்னையும் மீறி வ்.வெக்கமா வருதேண்ணா.." அத்து மீறும் கரத்தை பற்றி, கூச்சத்தில் திக்க, இவனுக்கு கண் சொக்கியது அவள் வெட்கம் கொள்ளும் பேரழகில்.

"இங்க தொட்டாலுமா.." இளம்பஞ்சி வயிற்றில் மீசை குத்தும் முத்தம் பதிக்க, கடலலை போல ஜிவ்க்கென உள்ளிழுத்துக்கொண்டாள் வயிற்றை.

"இங்க தொட்டாலுமா டி குயிலுஉஉஉ.." சூடான மூச்சினை பட்டு தேகத்தில் உரசியபடியே, அடி வயிற்றின் மேட்டில் இச் வைக்க, ஹக்.. உடல் சிலிர்த்து அவன் அடர்கேசம் பற்றி, தன் மென்பஞ்சி மேகத்தில் வசதியாக போட்டுக்கொள்ள, விலகவா போகிறான் கள்ளன்.

"ஏதோ பெர்ஃபார்மன்ஸ் சரியில்லைன்னு சொன்னேள்.. இதுக்கு மட்டும் சரியா இருக்கா நோக்கு.." கள்ளப்பூனை இல்லாத சில்மிஷங்கள் செய்வது தாங்காமல், வாகாக எக்கிக்கொண்டது பெண் நெஞ்சம்.

"உன் பெர்ஃபார்மன்ஸ விட, உன் உடம்புல உள்ள ஒவ்வொன்னும் அட்டகாசமா பெர்ஃபார்ம் பண்ணுது டி.. அதுவும் இது சொர்கம் டி.. எந்திரிக்கவே தோணாத போதை ஏறுது.."

போதையும் காமமும் ஒருசேர பெண்ணவளை பேச்சாலும் செயலாலும் திக்குமுக்காட வைத்ததில், சிறுக சிறுக கூச்சம் துறந்த அன்னமயில், பெண்மையில் போர் செய்ய சுகமாக வழிவகுத்தாள், தீராத ஏக்கத்தோடு.

தொடரும்.
 
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 8
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
8
Reaction score
7
Points
3

Interesting siss
 
Top