- Messages
- 310
- Reaction score
- 217
- Points
- 63
அத்தியாயம் - 9
ஆஆஆஆ.. என்று வெறிப்பிடித்தவள் போல் கத்திக் கொண்டே மனஅழுத்தம் தாளாமல் நடுரோட்டில் ஓடியவளின் பின்னே, "இதழ் நில்லு.." என கத்தி கொண்டே ஓடிய திலீப், ஒருக் கட்டத்திற்கு மேல் கண்ணை கட்டி விட்ட நிலையாக கண்ணை விட்டு மறைந்து போன யமுனாவை தேடி அலைந்து ஓய்ந்து போனான்.
நடுவில் ஒரு லாரி கிராஸ் ஆக போய் அந்த ஓரிரு நொடிகளில் யமுனா எங்கே சென்றாளோ! அக்கம் பக்கம் போவோர் வருவோர் அனைவரிடமும் விசாரித்தும் எங்கு தேடியும் அவள் கிடைக்காமல் போக, கையில் கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்த உணர்வோடு மனம் சோர்ந்த நிலையில் வீடு வந்து சேர்ந்தவனை சுற்றி நின்று பிடித்துக் கொண்டனர் அவன் குடும்பத்தினர்.
"வாடா.. சொல்ல சொல்ல கேக்காம அந்த ஓடுகாலி கழுதை பின்னாடியே ஓடினியே, பக்குவமா பேசி புரியவச்சி பத்திரமா பஸ் ஏத்தி விட்டு வந்துட்டியா"
ஈஸ்வரியின் நக்கலான கேள்வியில் கோவமாக முறைத்தவன் பதில் சொல்லாமல் தன் அறைக்கு செல்லப் போக, "இங்க பாரு திலீப் நாங்க ஒவ்வொன்றும் பாத்து பாத்து பண்றது முழுக்க உன் நல்லதுக்காக தான் அதை எப்பவும் மனசுல வச்சி நடந்துக்கோ"
"ஆரம்பத்துல அந்த பொண்ண நீ காதலிச்சது எனக்கு மனசுக்கு சரின்னு பட்டது உண்மைதான், ஆனா காலம் மாற மாற அது நம்ம எதிர்கால வாழ்க்கைக்கும் நம்ம அந்தஸ்துக்கும் சரிப்பட்டு வராதுனு தெரிஞ்ச பிறகுதா நாங்க நல்லா யோசிச்சி கோடிஸ்வர வீட்டு பொண்ணு சஷ்டிய உனக்கு கட்டிவைக்க முடிவு பண்ணோம்." என்ற ஈஸ்வரியை தொடர்ந்து,
"சனியன் எந்த நேரத்துல நம்ம வீட்டுக்குள்ள கால வச்சிதோ உடனே நம்ம அம்மாக்கு ஆப்ரேசன் பண்ற நிலைமை வந்து போச்சி.
அவ ஒரு தரித்திரம் புடிச்சவன்னு தெரியாம தம்பியும் அவளை கூட்டிட்டு வந்து வீட்ல வச்சிருந்தா, மகாராணி நோகாம நோம்பு கும்பிட்டு சொகுசா வீட்ல உக்காந்து நம்ம உழைப்பை எல்லாம் சுரண்டி தின்ன பாத்தாங்க, அத கண்டுபிடிச்சி தானே நம்ம எல்லாரும் அவளை வீட்டை விட்டு விரட்டியடிக்க முடிவு பண்ணது"
வெறுப்பாக சொன்ன கமலிக்கு, தன்னை விட மிகவும் அழகாக இருந்த யமுனாவின் மீது அத்தனை பொறாமை உண்டு.
அதெப்படி தாய் தந்தையின் அன்பும் அக்கறையும் போஷாக்குமின்றி தங்கம் போல் அவள் ஜொலிக்கலாம், தனக்கு தாய் தந்தையின் பாசத்தில் இருந்து அனைத்தும் கிடைத்தும் அவள் முன்பு நிற்கையில் தான் தாழ்த்து விட்டதாக ஈகோ. அதுவே நயவஞ்சக திட்டத்தை உருவாக்கி தாய் தந்தையின் காதில் யமுனாக்கு எதிராக தூபம் போட வசதியாக இருந்தது.
"அக்கா போதும் நிறுத்திக்கோ, இங்க நடக்குற பிரச்சனைக்கு எல்லாமே நீ தான் முக்கிய காரணம்னு எனக்கு தெரியாம இல்ல. தெரிஞ்சும் அமைதியா போறேன்னா அது அம்மாவுக்காக தான்.
உங்க எல்லார் விருப்பப்படி ஏதேதோ சொல்லி என்ன ப்ரைன்வாஷ் செஞ்சி இதழிய விட்டுட சொன்னீங்க விட்டுட்டேன்.
இதுக்கு மேல இதழிய பத்தி யாரும் இந்த வீட்ல ஒரு வார்த்தை தப்பா பேசக் கூடாது"
கோபம் கொப்பளிக்க அனைவரையும் தீப்பார்வை பார்த்த திலீப் விருவிருவென தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தவனின் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தன.
இங்கோ பைத்தியக்காரியை போல் ஓடி வந்த யமுனா, ஒரு கட்டத்திற்கு மேல் வாகனங்கள் செல்லும் நடு வீதியில் குத்துக்காலிட்டு அமர்ந்து சுற்றம் உணராது கதறி அழுவதை கண்டு கூட்டம் கூடி விட்டது.
காதலின் துரோகம், ஏமாற்றம், வேதனை, திலீப்பின் அவப்பேச்சு அவன் வீட்டில் நடந்த அவமானம் அது போதாதென எதிர்பாராமல் அவள் வயிற்றில் ஜெனித்த இந்த குழந்தை. ஒரு நாளுக்குள் எத்தனை எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கும் அந்த பட்டுமனம். இதோ சாலையில் அமர்ந்து அவமானங்கள் தாங்காமல் பைத்தியம் போல் கதறி அழுவோம் என்று நினைத்து பார்த்திருப்பாளா எப்போதாவது.
ஒரு பெண் தேவதையாவதும் தேவை இல்லாதவள் ஆவதும் அந்த பெண்ணின் வாழ்வில் வரும் ஒவ்வொரு ஆணின் கையில் தான் உள்ளது.
கலைந்த தலை, கசங்கிய உடை, அழுது வீங்கிய முகம், கையில் தோளில் மாட்டும் ட்ராவல் பேக் என்று அவளை பார்க்கவே வேறுமாதிரியான தவறான எண்ணங்கள் மனதில் தோன்ற வைக்க, பலரும் வாய்க்கு வந்ததை பேசி செல்ல, "ஏம்மா நீ என்ன பைத்தியமா வண்டி போற ரோட்ல உக்காந்து இழவு விழுந்த மாறி அழுதுட்டு இருக்க. எழுந்து ஓரம் போமா.." பல ட்ரைவர்கள் தங்கள் அவசரத்திற்கு திட்டி செல்லவும் தான், தான் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் மீண்டும் கால் போன போக்கில் நடந்தாள்.
வண்ண ஓவியமாக வாழ வேண்டும் என்ற பலநூறு ஆசைகளை மனதில் சுமந்தவள், இன்று கலைந்த ஓவியமாக வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டு போகும் பரிதாப நிலையானது.
தான் வேலை பார்த்த ரெசார்ட் உள்ள மூணாருக்கு எப்படியோ வந்து சேர்ந்த யமுனா, ஒரு ரூம் எடுத்து தற்காலிகமாக அங்கு தங்கிக் கொண்டவளுக்கு சரித்ராவின் எண்ணம் தான் வந்தது.
ஏற்கனவே பிளைட் மோடில் போட்டு வைத்த போனை எடுத்து சரித்ராக்கு அழைத்தவள் உடனே கட் செய்து விட்டு நகத்தை கடித்தபடி எங்கோ பார்த்திருக்க, அடுத்த நொடியே அவளிடமிருந்து வந்த அழைப்பை தயக்கமாக அட்டன் செய்தாள்.
"ஏய்.. எரும இதழ்.. சொல்லாம கொள்ளாம எங்க டி போய் தொலைஞ்ச. போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது உன்னையும் காணோம் என்னனு நினைக்கிறது. கடைசில மேனேஜ்மென்ட்ல கேட்டா ரெண்டு நாள் லீவ் வாங்கி இருக்கேன்னு சொல்றாங்க. ஒரு வார்த்தை என்கிட்ட கூட சொல்லாம லீவ் போட்டு போற அளவுக்கு என்ன டி அவசியம் வந்துச்சி"
அவளை காணாது அதிகம் தேடி கவலைப்பட்டது எல்லாம் சரித்ரா தான். அந்த கோபத்தில் உரிமையாக கடிந்து கொண்டவளின் பாசத்தை எண்ணி கண்ணீர் திரையிட புன்னகைத்துக் கொண்டவளுக்கு, சரித்ராவுடனான கிடைத்த நட்பை அகமகிழ்ந்து போனவள், நடந்ததை அனைத்தும் கண்ணீருடன் சுருக்கமாக சொல்லி முடிக்க, அந்த பக்கம் பேரமைதி.
"நீ ஒவ்வொரு முறையும் சொல்லும் போதெல்லாம் நான் தான் முட்டாள்த்தனமா அவங்க எல்லாரையும் கண்ண மூடிட்டு நம்பிட்டு இருந்திருக்கேன் சரித். ஆனா அவங்க யாருமே என்ன ஒரு பொண்ணா கூட மதிக்கல. வெறும் பணம் காய்க்கிற மரமா மட்டுமே பாத்திருக்காங்க."
வெம்பலோடு அவள் சொல்ல, சரித்ராக்கோ திலீப் மீது கட்டுக்கடங்காத கோவம் ஏறியது.
"சரி விடு இதழ் இப்பயாவது அந்த ராஸ்கலோட உண்மையான சுயரூபம் தெரிஞ்சிதே அதுவரைக்கும் நிம்மதி. நிச்சயமா சொல்றேன் உன்னோட உழைப்பை திருடி முன்னுக்கு வர பாத்தாங்கல்ல அவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்க. அவங்க குடும்பத்து பேச்சை கேட்டு உன்னை ஏமாத்தினான் பாரு முக்கியமா அவன் நல்லாவே இருக்க மாட்டான்" ஆவேசம் பொங்க போனில் கத்திக் கொண்டிருக்க,
"வேண்டாம் சரித் அவசரப்பட்டு எதுவும் சொல்லாத அவங்க எப்படியோ சந்தோஷமா இருக்கட்டும்." பரிதாபமாக சொன்னதை கேட்டு எரிச்சலானவள், "நீ சரியான பழைய காலத்து ஹீரோயின் மெட்டரியல் டி உன்னையெல்லாம் திருத்தவே முடியாது" என்ற புலம்பலோடு,
"சரி நீ இப்ப எங்க இருக்க எதுக்காக ரெசார்ட்க்கு இன்னும் வரல" என்றாள் மணியை பார்த்துக் கொண்டே.
நேரம் நள்ளிரவு ஒன்றை தாண்டி இருந்தது. சரித்ராக்கும் நைட் டியூட்டி என்பதால், யமுனா போன் செய்ததும் உடனே பார்த்து மீண்டும் அழைத்து பேச வசதியாகி போனது.
"நான் மூணார்ல தான் இருக்கேன் சரித், எனக்கு தனிமையா இருக்கணும்னு தோணுச்சு அதான் இங்க ஒரு ரெசார்ட்ல தங்கி இருக்கேன். அப்புறம் உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்.." தயக்கமாக இழுக்க "அடுத்து என்ன டி வெடிகுண்ட வச்சிருக்க" கலக்கமானாள் சரித்ரா.
"என் வயித்துல குழந்தை இருக்கு டி" எனும் போதே வயிற்றை தடவிய கரமும் குரலும் நடுங்கி விட்டது.
"இதழ் ஆர் யூ சீரியஸ்.. உண்மைய தான் சொல்றியா" நம்பமுடியாமல் தலையை பிடித்துக் கொண்டாள்.
"ம்ம்.. உண்மைதா சரித், நாலு மாசம் தொடங்கி இருக்காம் ஒன்னும் பண்ண முடியாதுனு டாக்டர் சொல்லிட்டாங்க"
அவள் கர்ப்பம் அறிந்ததில் இருந்து முழுதாக சொல்ல, "அப்பகூட அவன் உம்மேல தான் தப்பு சொன்னானே தவிர உன்ப்பக்கம் இருக்க நியாயத்தை பத்தி அவன் கொஞ்சம் கூட கவலை படல பாரு. அவன் எல்லாம் என்ன மனுஷன் டி"
திலீப்பை பற்றி நினைத்தாலே பற்றிக் கொண்டு போக, தோழியின் நிலையை எண்ணி கவலையானாள்.
நாட்கள் செல்ல செல்ல வயிறு மேடிட்டு தாய்மையின் உணர்வுகளை உணர்வுபூர்வமாக அனுபவிக்க தொடங்கிய பிறகு, இனி அந்த குழந்தை தான் தனக்கான அனைத்தும் என நினைத்து மனப்பூர்வமாக வயிற்றிலும் மனதிலும் சுமக்கத் தொடங்கிய யமுனா, தான் வேலை பார்த்த ரெசார்டில் இருந்து வயிறு நன்றாக வெளி தெரியும் முன்னே வேறு ரெசார்டிற்கு வேலை மாற்றம் செய்து கொண்டாள், யாரும் தவறாக பேசக் கூடாது என்பதற்காக. கூடவே சரித்ராவும் வந்து விட அவளை பார்த்துக்கொள்ள வசதியாக இருந்தது.
மாதங்கள் செல்ல செல்ல பிரசவ பயம் ஒருபக்கம், ஒருவேளை தன்னை கெடுத்தவன் மீண்டும் வந்து விடுவானோ பிள்ளையை தன்னிடமிருந்து பறித்து சென்று விடுவானோ என்று இம்மாதிரி கற்பனைகளை எல்லாம் செய்துகொண்டு பயத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்தாள்.
அந்நேரம் பார்த்து சரித்ரா விடுமுறைக்கு அவள் ஊரான பெங்களூருக்கு சென்ற போது, காற்றோட்டமாக வெளியே நடக்க வந்தவளுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு விட, கையில் போனையும் கொண்டு வராமல் விட்டதன் விளைவு சரித்ராக்கோ தன்னுடன் தங்கி இருந்த மற்ற பெண்களிடமோ யாருக்கும் சொல்ல முடியாமல் போனது.
பெரிதாக இருந்த வயிற்றை பிடித்துக் கொண்டு வலிதாங்க முடியாமல் சிறிது தூரம் நடந்தவள், கண்ணில் பட்ட மருத்துவமனை அரசு மருத்துவமனையா தனியார் மருத்துவமனையா இப்படி எதையும் பாராமல் வெளியே நின்று கத்தியவளை தூக்கி வந்த மருத்துவர்கள், சுகபிரசவம் பார்க்க முயன்று யமுனாவின் உடல்நிலை ஒத்துழைக்காமல் இதோ அறுவைசிகிச்சை செய்து, மொழுக் மொழுக் குட்டி வெள்ளை பணியாரத்தை பத்திரமாக எடுத்து அவள் கையில் ஒப்படைத்து விட்டார்களே!
அவை எல்லாம் நினைத்தபடி தன் அருகில் படுத்திருந்த தாமரைமகனின் குட்டி நீலக் கண்களை உற்று நோக்கி ரசித்துக் கொண்டிருந்தாள்.
இனிமேல் தன் வாழ்க்கை மொத்தமும் தன் மகனுக்குதான் என இவள் பட்டா போட்டு கொடுத்து விட்டாள் போதுமா, அதற்கு உரியவனின் சம்மதம் இல்லாமல். இதோ ஒரு வருடம் நிறைவுக்குப் பின் விமானம் விட்டிறங்கி மீண்டும் இந்திய மண்ணில் காலை வைத்தான் நீலக்கண்ணழகன் யுகன்ஷிவேஷ்.
இனிமேல் அவள் வாழ்க்கை முழுதும் சமாளிக்க முடியாத பிரச்சனையாய் நிரந்தரமாக அவளோடு ஒட்டிக்கொள்ள.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 9
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.