Member
- Messages
- 32
- Reaction score
- 4
- Points
- 8
இதழ் மழை💋🌧️29
இதழினி பயத்தை ரசித்தவன்.." யாருனு சொல்லு பார்ப்போம்?!"..
'நா ஆசையா எதாவது சொல்லுவேன்... நானெல்லாம் ஆச படவே தகுதி இல்லாதவங்கிற அளவுக்கு எதையாவது சொல்லி...என் மனசை நோகடிச்சி அழ வெச்சுப்புடுவீங்க...
மனசை கல்லாக்கிறேன் மூச்சை இழுத்து பிடித்தவள் ம்ம்ம்.... இப்போ சொல்லுங்க..
"உனக்காக தான்டி .... வந்தேன்.."
'உலகம் அழிய போகுதா என்ன?? என் ஆளு பதில் சொல்லுது..ஏன் மாமு இதையே நா சொல்லி இருந்தா அந்தர் பல்டி அடிச்சி நீ என்ன பெரிய உலக அழகியா அப்படி இப்படி சொல்லி அழ வெச்சி இருப்பீங்க இல்ல..
"அதான் நீ உஷாராகிட்டீயேடி அதானல உண்மைய ஒத்துக்கிட்டேன் அவன் சிரிக்க... எக்கி அவன் இதழில் இச்சென ஒரு முத்தம் வைத்தாள் "ரொம்பவே அழகு மாமு நீங்க!!...
அழகு இல்லாத அழுக்கு பொண்ணு நானு என்னை தேடி எதுக்கு வந்தீங்க நீங்க நினைச்சா யாரோட வேணும்னாலும் வாழலாமே?!...
கண்ணோடு கண்கலந்து காதலாய்..கேட்டாள்..இதழினி
"ம்... நிறைய பேரை கடந்து வந்திருக்கேன்... உன்னை போட்டோல பார்த்தது வேணா எதேர்ச்சியா இருக்கலாம் ஆனா மனசு விடலையே ஏதோ உன்கிட்ட இருக்கு அவகிட்ட போடான்னு மனசு துரத்திக்கிட்டே இருந்துச்சு...
இந்த அழுக்கு பொண்ணு மட்டும்.. இங்க அழுத்தாம பதிஞ்சிட்டா ஏன்னு? தெரியலையே!.. இதயத்தை தொட்டுக்காட்டினான்..
அப்படி என்னடி இருக்கு உன்கிட்டனு பார்க்க தான் வந்தேன் பக்கத்துல வெச்சுக்க தோணிச்சு கல்யாணம் பண்ணிட்டேன் எல்லா வலியையும் வேணும்னு தரலாடி... எனக்காக நீ துடிக்கும் போது.. நீ யாருடி எனக்குனு கோவம் வருது..வார்த்தையா விட்றேன்
அதே நீ விலகி நிக்கும் போதும் இங்க வலிக்குது என்னமோ பண்ணுது சொல்ல தெரியாலடி... இந்த ரெண்டு வாரம் பைத்தியம் பிடிக்காத குறைதான் ஏகப்பட்ட பிசினஸ் லாஸ்...
என் பலவீனம் நீதானு என் மனசு உறுதியா சொல்லிச்சு அதை அழிச்சி தானே எனக்கு பழக்கம் உன்னை கொல்ல தான் வந்தேன் உன்ன பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டேன்... உனக்காகவே ஸ்பெஷலா டிசைன் பண்ணி வாங்கிட்டு வந்ததுடி...ஒரு கோடி நெக்லாஸ்டி அது...
நானே என் கையாள போட்டு விட ஆசைப்பட்டேன்...அதுக்குள்ள கோவத்துல..
'அந்த பேய் ஞாபகம் வந்திடுச்சா?!...
"ம்." என்றான்...
பெருமூச்சு விட்டவள்..."என்னை பிடிக்குமா உனக்கு??
"ஏன்டி இந்த கேள்வியை மட்டும் சலிக்காம கேக்குற விட மாட்டியாடி.
அவள் கண்களில் அலைபாயும் ஏக்கமும் காதல் தானே!!.. ஒரு முறையேனு வாய்மொழியாய் காதலை சொல்லேன்...என துடிக்கும் இதழ்கள் தவம் கிடக்கிறது...
உன்னை நேசித்ததின்னாலே தானே இதுவரை யாரும் அறிந்திடாத..எனக்குள் மக்கி கிடந்த கடந்தகால கசடுகளை மனம் திறந்து வெளிப்படுத்தினே இப்போது கூட புரியவில்லை அரக்கன் விழிகள் அவளை தான் வெறித்தது..
"என்ன லூக்கு... உங்களை புரிஞ்சிக்காம எல்லாம் ஒன்னுகேக்கல.. எனக்காக வந்திங்கனு சொல்லும் போதே இதழினி ஹாப்பியாகிட்டா... ஆனாலும் "உன்னை ரொம்ப புடிக்கும்டினு" உங்க வாயால கேக்கும் போது அதுல வர பீல் எப்படி இருக்கும்னு ரசிச்சி பீல் பண்ணனு போல இருக்கு...
இதழினி சிலாகித்து சொல்ல...
"முடியாது.. போடி எனக்கு தூக்கம் வருது
விலகிய போர்வையை இழுக்க..
என்னை அடிச்சிட்டு நீ மட்டும் தூங்குறீயா.. கூடாதே எழும்பு.. எலி பல்லில் நறுக்குன்னு மார்பு சதையை கடித்து இழுக்க..
ஸ்ஆஆஆஆ இதழ்...
யா மீ.. இஇஇ.. இவள் பல் இளிக்க...
ஹேய் என்னடி இது...கடிக்கிற
சார் என்னை எப்படியெல்லாம் கொடுமை பண்ணிங்க அதுக்கெல்லாம் சேர்த்து பழி வாங்குவேன்... அக்கவுண்ட்ல வச்சுக்கோங்க..
அவன் தேடிய.. இதழினி இதோ குறும்பு பொங்கும் கண்களோடு கண்ணடிக்க..
தலை தூக்கி சிரித்துக்கொண்டு இருந்தவள் தலையை இழுத்து விளையாடாம தூங்குடி மணி மூணு.. காலையில எழுந்து பழி வாங்கு.. முடியை ஒதுக்கி விட்டு உச்சந்தலையில் முத்தம் வைத்து முதுகை வருடினான்...
"நானும் உன்னை விட்டு போயிடுவானோனு தானே வாய் திறந்து காதலை சொல்ல மாட்டுற புரியுது மாமு....வசதி எதுவும் இல்லாம அப்பாஅம்மாவோட நான் சந்தோசமா வளர்ந்தேன்...
ஆனா எல்லாம் வசதியும் இருந்தும் இவ்ளோ வேதனைப்பட்டு வளர்ந்திருக்கியே...இனி உன்னைவிட்டு போக மாட்டேன் வருண் மாமு...இதழ்கள் வலியெடுக்கும் வரை ஓயாமல் அவன் நெஞ்சில் முத்தம் வைத்து உறங்கி போனாள்..
விரைவில் அவனை விட்டு போக போவதை அறியாது.. விடியல் தாண்டியும் சுகமாய் மன்னவன் நெஞ்சில் துயில் கொண்டு இருக்க..
பிரித்த டேரிமில்க் சாக்லேட் போல கவிழ்ந்து படுத்திருந்தவளின் வெற்று முதுகில் ஐஸ் கட்டி உருகி காயத்தை சிலிர்ப்பூட்ட... ம்ம்ம்.. என்ற முணங்களோடு விழிகளை திறந்தவள் படுக்கையில் கைகள் அலைய.."எழுந்துட்டாரா"?!!.. ப்ச் ரொம்ப நேரம் தூங்கிட்டோம் போல...
எழ முயன்றவளை அழுத்தி பிடித்தது ஒரு வலியக்கரம் தலைமட்டும் திருப்பி பார்த்தாள்...
குளித்துவிட்டு வந்திருப்பான் போல ம்ம்ம்.. இந்த சோப்பு வாசம் ரொம்ப இம்சை பண்ணுதேஏஏ..தண்ணீர் சொட்டும் ஈரதலை துவட்டாமல் அவள் முதுகு காயத்தின் மீது ஐஸ்கட்டி ஒத்துடம் கொடுத்துக்கொண்டு இருந்தவன் இடையில் டவல் மட்டும்தான் கட்டி இருந்தான்..
இந்தா காலையிலே மார்னிங் ஷோ காட்ட கிளாமர் கிங்கு கிக்கா வந்து நிக்கிறானே.. ஐஸ்கிரீம் பார்த்த குழந்தையாக அவள் எச்சில் கூட்டி விழுங்க படபடக்கும் இமைகளை வேறு பக்கம் திருப்ப முயன்றாள் இமை குடைகள் கூட வருணபகவானுக்கு விசிறி ஆகிவிட்டாதோ... மச் எழுந்துடு இதழு அப்புறம் மயங்கிட்டியா மயக்கிட்டியனு நம்மளை வச்சி பேயோட்டுவான்..
ஸ்ஆஆ..யம்மாஆஆ
"ப்ச் என்னடி அவசரம்.. இவ்ளோ வேகமா எழுப்புர..சிடுசிடுத்தான் அரக்கன்..
"நேத்து அடிச்சி தோலை உறிஞ்சது யாராம்..
'சரி சரி ஆரம்பிக்காத மெதுவா எழும்பு வா...
யம்மா ஆஆஆ யப்பாஆஆ...அவள் ராகமாக வலியில் நெளிய..
'இந்த பாட்டு நல்லா இருக்கே!!...
'யோவ் வலியில கத்துறேன் யா...
"'ஓஓ... சரிவா குளிக்க போகலாம்..
'நீங்க எங்க வரீங்க அதான் குளிச்சிட்டீங்களே நீங்க இங்கன இருங்க நா போய் குளிச்சிட்டு வரேன்..
'ஓய் நான்தானே அடிச்சி காயம் கொடுத்தேன்.. அப்போ நான் தானே...
"ம்..சொல்லுங்க ஏன் நிறுத்திட்டீங்க.. நான் தான் மருந்துப் போடுவேன் நான் தான் காயத்தை கொடுப்பேன் அதான..ரெண்டு மாசமா நீங்கதான் குளிக்க வைக்கிறீங்க.. வா..வா வந்து தூக்கிட்டு போ... மருந்து போடுவேன் காயம் தருவேனு சொல்றானே தவிர அடிக்க மாட்டேன் திட்ட மாட்டேன்னு சொல்றீங்களா பாரு...
அவளை தூக்கி துண்டாக தோளில் போட்டுக்கொண்டு நடந்தவன் பிங்க் இதழ்கள் விரிந்தது..
வழக்கம் போல வளவளக்கும் உதடுகள் கப்சிப்பாகி அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து தான் வெளியே வந்தாள்..
"இன்னொரு முறை குளிப்போமா இதழு?!"..
'ம்ஹும்... அவசரமாக வாயை பொத்தி தலையை ஆட்ட..
இவன் சத்தமாக சிரித்தான்...
சாப்பாட்டை ஊட்டி விட்டு எழுந்தவன்..
"ரெஸ்ட் எடு இதழ் நிறையா வேலை இருக்கு ஈவினிங் சீக்கிரம் வரேன்..
ஹான் என வாய் பிளந்து.. என் புருஷனா இது... இதழினி முட்டையை முழிங்கியது போல் பார்த்து வைக்க...
"என்னடி அப்டி பாக்குற?...
அது ஒன்னுமில்ல இயல்பா பேசுறீங்களே அதான்..
'சரி அப்போ பேசாம போகவா.. நகர போனவன் கையை எட்டி பிடித்தாள்.. ஏன் மாமு கோச்சிக்கிற.. புதுசா பேசுறீங்க பிடிச்சிருக்கு ஆனா வலிச்சிடுமோனு பயமா இருக்கு...
"வலிக்காம பாத்துக்கிறேன் நெற்றி முட்டி முத்தமிட்டு..மருந்து போட்டு விட்டு அவன் டிரஸ் மாற்ற சென்றான்... பின்னோடு ஓடியவள்..
"ஏன்டி எதாவது வேணுமா?!..
'அந்த கடல் நீல கலர் சட்டை உங்களுக்கு நல்லா இருக்கும் மாமு போட்டுக்கோங்க..
"நீ சொன்னா நான் போடானுமா?..புருவம் உயர்த்தி அரக்கன் வாய்ஸ் ரைஸ் பண்ண..
"ஏன்டா இப்போ நல்லாதானே பேசுனா அதுக்குள்ள என்னடா ஆச்சி... "பே" என முழித்தவள் தலையை உலுக்கி..எதுனா போட்டுக்கோங்க எனக்கு என்ன?
ரூம்ல இருக்க போரடிக்குது நான் கீழே போறேன் தன் யூனிபார்ம் சேலையை தூக்கிக்கொண்டு.. ஓடிவிட்டாள்..
வழக்க போல சேலைக்கு மாறி மேலே சட்டையை போட்டவள்... தன்னவன் இதயத்தில் கொஞ்சொண்டு இடம் கிடைக்குமா என ஏங்கி கிடந்தவளுக்கு காதல் கொண்ட கள்வன் இதயமே தானாக இருப்பதில் மனசு ரெக்கை கட்டி பறக்க வலி கொஞ்சம் குறைந்தது போல தான் இருந்தது..
துள்ளாக மாடி படியில் இறங்கி வந்தாள் இதழினி..
இவளை கண்டதும் வேகமாக ஓடி வந்தான் நந்தன்...
"பாப்பா ஒனக்கு ஒன்னுமில்லையே?!"..
'எ.. எனக்கு என்ன அண்ணா நா நல்லா தான் இருக்கேன் ஏ என்னாச்சு.. நந்தன் பதட்டம் முதலில் புரியாமல் முழித்தவள்...
"அது... நேத்து நீ கத்துற சத்தம் கேட்டுச்சு அதான்...நந்தன் முகத்தில் உண்மையான பரிதவிப்பு தெரிந்தது..
"அவ்ளோ சத்தமாவா கத்துனேன்!!..இவள் சந்தேகமாக முணுமுணுக்க..
'ம்... பேலஸே இடியுறது போல கத்துனா தெரியுமா நைட் எல்லாம் உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு பயத்துல எனக்கு தூக்கமே வர்ல...
பாப்பா ஒனக்கு ஒன்னுமில்லையே சார் உன்னை...
"ஐயோ அண்ணா எனக்கு ஒன்னுமில்லை உன் முன்னாடி நா நல்லா நானே நிக்கிறேன் பாரு நா சந்தோசமா தான் இருக்கேன்...
பழைய குறுப்பு மின்னும் கண்ணோடு சந்தோசமாக தான் அவள் முகம் பளீச்சிட்டது அதையும் தாண்டி வலியும் தூங்காத தடமும் கண்ணில் சிவப்பை காட்டிக்கொடுக்க.. நம்ம மனசு கஷ்டப்படக்கூடாதுனு பாப்பா நடிக்கிறா போல...கைகளை முறுக்கி மூச்சை இழுத்தவன் நெஞ்சை நிமிர்த்தினான்..
"என்னாச்சு ண்ணே இப்போ எதுக்கு சக்திமான் மாதிரி நிக்கிற...
'நீ தள்ளி நில்லு நான் சார் கிட்ட பேசிக்கிறேன்..
"ஏதே எ.. என்ன பேச போறா...
அரக்கன் படியில் இறங்கி வர..
"சார் ஒரு நிமிஷம்"..
'ஐயோ அண்ணா வேணா வேணா.. டேய் அண்ணாஆ அமைதியா இரு..அவன் கையை பிடித்து இழுக்க இழுக்க .. கையை உதறிவிட்டு
'நீ சும்மா இரு நா சார் கிட்ட பேசிக்கிறேன்...
"அய்யய்யோ இறங்குன முனியை இந்த அண்ணா வம்படியா ஏத்திவிட்டுடும் போல...
என்ற ஆத்தா பஞ்சமுகி காந்தமுகி இந்த அண்ணனை என்ற வூட்டுக்கார் கிட்ட அடிவாங்காம காப்பாத்து...சுவர் பக்கம் போய் பதுங்கி இதழினி வேண்டுதல் வைக்க...
அரக்கன் திரும்பி ஒற்றை பார்வை பார்க்க..
இழுத்து வைத்த மூச்சு மொத்தமும் மூக்கு வழியாக புஸென்று காற்றுப்போன பலூன்டாக நின்ற நந்தன்.. அரக்கன் நெருங்கி வர நந்தன் முகத்தில் முத்து முத்தாக வேர்வை பூத்து முகத்தை நனைத்தது..
இதழ் மழையில் நனைந்திடுமா❣️...

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️29
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.