Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Messages
32
Reaction score
4
Points
8
இதழ் மழை💋🌧️30

"எஸ் டேல்"...

அதிசயத்தின் அதிசயமா அரக்கன் குரலில் கொஞ்சமே கொஞ்சம் மென்மை எட்டிப்பார்த்தது என்றாலும் பார்வை என்னவோ அதே வேங்கை சீறும் பார்வைதான்..

'என்னதான் அரக்கன் மேல் பயமிருந்தாலும் தங்கச்சிக்கு ஒன்னுயென்றால் அண்ணன் தட்டி கேட்பது கடமை அல்லவா.. நந்தன் பின்வாங்கவில்லை.. நிமிர்த்திய நெஞ்சை தான் இறக்கி இருந்தான்..

"சார் என் தங்கச்சி அடிக்காதீங்க அவ பாவம் சார்.. சொல்ற வேலைய பாப்பா சரியாதான் செய்றாங்க சாப்பாடுதான் சரியா சாப்பிடுறது இல்லை... இனி சரியா சாப்பிட வெச்சறேன்.. எதுவா இருந்தாலும் குணமா சொல்லுங்க குழந்தை புள்ள கை நீட்டிபுடாதீங்க சார்... உங்க மேல உசுரே வெச்சிருக்கு.. அந்த நேசத்துல எதையாவது பேசி இருக்கும்.. அடிச்சிபுடாதீங்க சார் உங்க வலுவை அது தாங்காது..

நந்தன் பேசி முடிக்கும் வரை அவன் எதையும் தூக்கி அடிக்காமல் இருந்ததே உலக மகா அதிசயம் தான்..

சுவறோடு சுவராக பதுங்கி இருந்த இதழினி.. தனக்காக நந்தன் பேசுவதை பார்த்து சந்தோசப்படுவதற்குள் எதையாவது தூக்கியடித்து மண்டையை உடைத்துவிட்டால் ஓடு ஓடு...என மனசாட்சி தூரத்த..

வேகமா அவன் முதுகு பின்னால் வந்து அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில் மாமு மாமு அண்ணன் என் மேல இருக்குற பாசத்துல சொல்லிடுச்சி அடிச்சிடாதீங்க ப்ளீஸ் மாமு முதுகு சட்டையை பிடித்து இதழினி கெஞ்சிட...

"பாஸ்.. டாக்டருக்கு கால் பண்ணவா.. எங்கிருந்து வந்தானோ மூச்சு வாங்க வந்து நின்றான் ஜாக்..

அரக்கன் எதுக்கு என்பது போல் புருவம் உயர்த்த..

'மேடமுக்கு தான் சார் நீங்க கோவத்துல...அது... மேடம் இப்போ எப்படி இருக்காங்க டாக்டரை கூப்பிடவா பாஸ்..

"நந்தன் அண்ணன் கிட்டயாவது பேசி பழக்கமுண்டு இந்த பனைமரம் என்கிட்ட வாயையே திறக்காது ஆனா இதுவும் பாசம் தான் மாமு அடிச்சிடாதீங்க அரக்கன் முதுகுக்கு பின்னால் தொங்கிய வேதாளம் கிசுகிசுத்தது...

வவ் வவ் வு வவ்வுஉஉ.....

எங்கிருந்து முளைத்து ஓடி வந்தானோ இந்த நாலு கால் பையன் அவன் பாஷையில் குளைத்துவிட்டு ஓற்றை காலால் இதழினியை சீண்டினான் வேடன்...

அரக்கன் இடுப்பில் கைவைத்து குனிந்து முறைத்தவன் கைக்குள் இதழினி தலையை விட்டு... பாத்திங்களா நம்ம பாசக்காரா புள்ளைங்களா.. இஇஇ என இதழினி சிரிக்க அந்த கையால் அவள் தலையை சிறைபிடித்து முன்னே இழுத்து திருப்பி அணைத்து நிறுத்தியவன்...

"என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு வந்துட்டீங்க"?!.. அவன் காட்டு குரலில் மற்றவர்கள் தலை குனிய..

நந்தன் தான் தைரியமாக பேசினான்...

"உங்களுக்கு நாங்க எப்படினு தெரியல ஆனா நீங்க எனக்கு கடவுள் மாதிரி சார் நீங்க சந்தோசமா இருக்கணும் அது தான் எங்க ஆச இவங்க உங்க மனைவி நீங்க ஏத்துக்கிட்டீங்களோ இல்லையோ?! எங்களுக்கு இவங்க உங்க மனைவிதான் சார் உங்களுக்கான மரியாதை கொஞ்சமும் குறையாம அவங்களுக்கு தர சொல்லும் போதே புரிச்சிடுச்சி..

இப்போ கூட அந்த மரியாதை பாசத்தால தான் சார் கேக்குறோம்.. பாப்பாக்கு எதையும் மனசுல வெச்சிக்க தெரியாது அக்கா தங்கச்சி எனக்கு இருந்தாலும் அவங்களோட அதிகமா பழகினாது இல்ல...அவங்களை கஷ்டப்படுத்தாம என் உழைப்புல சந்தோசமா தான் சார் இருக்க வெச்சியிருக்கேன் ..

இதழினி மேடமும் என் தங்கச்சி தான் சார்.. அண்ணன்னு வாயில் இருந்து கூப்பிடாம.. மனசுல இருந்து கூப்பிடும் போது என் மனசு நிறைஞ்சி போகும் சார் அப்படி பட்ட என் தங்கச்சிய என் கண்ணுமுன்ன கஷடப்பட கூடாதுனு தான் மனசு பதறுது...

"ஓகே முடிச்சாத.. ஐஸ் வெச்சது போதும் போய் லன்ச் ரெடி பண்ற வேலைய யாரு..ஓடு என்றதும் கால்கள் தானாக ஓடியது..

"நீ எதாவது டயலாக் பேசனுமா?!"

'எதையோ சொல்ல வந்த ஜாக் பதறி இல்லை இல்லை மீட்டிங் இருக்கு சார் கிளம்பலாம் அவன் காரை எடுக்க ஓடிவிட்டான் கீழே குனிந்து வேடனை பாத்தவன் இதழினி சேலை பிடித்து இழுத்துட்டு இருந்தவன் அரக்கன் பார்வையில் ஓரே ஓட்டமாக வெளியே ஓடிவிட்டான்..

நடு ஹாலில் அணைத்தபடி நின்றிருந்தனர் இருவரும்.. ஹேய் மாயக்காரி என்னடி சொக்குப் பொடி போட்டா அத்தனை பேரையும் உன்னோட பாசத்துக்கு அடிமையாக்கி வெச்சிருக்க...

"க்கும் அப்படியே நீங்க அடிமையாகிட்டாலும் ... போங்க மாமு நேத்து கத்துனாத கேட்டு பயந்துட்டாங்க அதான்..

அடிவயிற்றில் இடித்து நிக்க ..பேச்சில் தடுமாறி... மா..மு மீட்..டிங்..

"போகனுமா?"...

'ம்... போய்ட்டு வாங்க'..

அவனை விலகி கைபிடித்து வாசல் வந்தவளை விடாது கட்டி அணைத்தான்..

"ஆபீஸ் போரேன் டி"...

'ம்... போயிட்டு வாங்க'..

"ஆபீஸ் போரேன் டி"...

'சரி மாமு போயிட்டு வாங்க'..

"ஆபீஸ் போரேன் டி"..

இடுப்பில் கைவைத்து கீழ் கண்ணில் முறைத்தவள் அதையே அவன் மீண்டும் சொல்ல... அவன் அவள் உயரத்திற்கு குனிந்து நிற்க்கும் தோரணையில்..

"ஓஓஓஓ என் செல்லகுட்டி ஆபீஸ் போறீங்க இல்ல... என் பட்டுகுட்டி என் பொம்மு குட்டி இச் இச் சென்று இருகன்னத்திலும் முத்தம் வைத்து கன்னம் பற்றி எக்கி நெற்றி கண்கள் மூக்கு உதடுக்கு மட்டும் கடன் வைப்பாளா?! அங்கேயும் கடித்து முத்தம் வைக்க...

"ம் குட்... ஒரு இடம் மிஸ்ஸிங் டி"

'போய்ட்டு வாங்க அங்கேயும் தரேன்... இவள் வெட்கத்தில் சிவந்து அவனை நெஞ்சில் கைவைத்து திருப்பி வாசல் வரை வந்து விட்டாள் போ மா..

'நைட்டுக்கு"....

'ஓகே ஓகே போயிட்டு வாங்க...அவன் காலரை தூக்கி காட்ட..

இதழ் கண்கள் ஆத்திப்பூவாக விரிந்தது..அவள் விரும்பி அணிய சொன்ன கடல் நீல நிற சட்டையில் ஆணழகனை ஆண்மைக்கு இலக்கணமாக பேரழகாய் நின்றவனை..விட்டு விழியெடுக்க மறந்தாள் பாவை..

கண்ணடித்து இதழ் குவித்து காற்றில் முத்தம் தந்தவன் வந்து நின்ற காரில் ஏறினான்..

சாரல் மழை தூவி நணத்தில் பூத்த மங்கையின் வதனத்தை தழுவியது...

அரக்கனுக்கு டாட்டா காட்டி அனுப்பிவிட்டு துள்ளிக்கொண்டு உள்ளே வந்த கண்ணுக்குட்டிய பிடித்துக்கொண்டான் நந்தன்..

"இப்போ எதுக்கு இவ்ளோ பாசமா பாக்குற ண்ணே..

'உங்க பர்சனல்க்குள்ள மூனாவது மனுஷங்க வர கூடாது ஆனா ஒரு அண்ணா கேக்குறேன் சார் நேத்து உன்னை அடிச்சாரா...

"ஆமா அடிச்சாரு அண்ணா"...

போனை மறந்து வைத்துவிட்டு வந்ததில் அதை எடுக்க வந்த அரக்கன் வாசல் அருகே இதழினி பேசுவதை கேட்டு அப்படியே நின்றான்...


:அப்போ அப்போ சார் அடிச்சதுனால தான் கத்துனீயா?...

"இல்லையே"!!...

'அப்போ நைட் எதுக்காக அப்படி கத்துனீங்க'?!..

"அதுவா... நாங்க ரெண்டு பேரும் பேய் படம் பாத்துட்டு இருந்தோமா...

'ஹான்'...

"அப்போ திடீர்னு டிவியை உடைச்சிகிட்டு ரத்தம் வழியுற பேய் ஒன்னு வந்து..

'வந்துஊஊஊ...

'இப்படி கழுத்தை பிடிச்சிடுச்சு இவள் நந்தன் கழுத்தை தாவி பிடிக்க ஐயோஓஓ பேயிஇஇ...அவளை தள்ளி விட்டு அலறி அடித்து ஓடிவிட்டான்...


கலகலவென வெகு நாட்களுக்கு பின் சத்தமிட்டு சிரித்தாள் இதழினி...

அவளை ரசித்து பார்த்தவன் 'ஸ்வீட் ராட்சசி "இதழ் முணுமுணுக்க.. போனை மறந்து... திரும்பி சென்றான்..அரக்கன்

ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டான்.. மனசு முழுக்க சந்தோசத்தில் நிரம்பி வழிய பேசா போனா நந்தன் இவளை பார்த்ததும் அலறி ஓட.. சிரித்தபடியே வந்து கவுந்து படுத்தவள்.. தூக்கம் வருவேணா என்றது பக்கத்தில் அரக்கன் போன் அடிக்க.. தலை தூக்கி பார்த்தவள்..

அச்சோ மாமு போன் விட்டுடு போயிடுச்சி போல... இது வேற அடிச்சிக்கிட்டே இருக்கே இதை எப்படி எடுத்து பேச பாட்டன் போனா இருந்தா பச்சை பட்டன் தானே அழுத்துவோம்... இங்க ரெண்டு கலர்ல குதிக்குது...

பச்சையே அழுத்துவோம்...

"ஹாலோ... யார் பேசுறீங்க.. என் மாமு வேலைக்கு போயிடுச்சி போனை மறந்து விட்டுட்டு போயிட்டாருங்க நைட்டு தான் வருவாப்ல அப்புறம் போன் பண்ணி பேசுங்க வச்சிடுறேன்... அவளே பேசி அவளே போனை வைக்க போக..

'ஹேய் இதழ் உன் மாமு தான் பேசுறேன்... இவ்ளோ நேரம் அவள் பேசியதை கேட்டு சிரித்திருப்பான் போல்.. மென் சிரிப்போடு தான் வந்தது அவன் பேச்சி...

"ஐய்.. மாமு"...

'ம்... ரெஸ்ட் எடுத்தியா?!..

"இல்ல மாமு வேலை செஞ்சி பழக்கிட்டேனா அதான் தூக்கம் வர்ல ஏதாவது வேலை சொல்லு செய்றேன்னு போய் நின்னா இந்த அண்ணங்காரன் பேயா பார்த்தது போல பயந்து ஓடுறான்..

சும்மா தான் இருக்கேன்... நீங்க சாப்டிங்களா.. அச்சோ சொல்ல மறந்துட்டேன் நீங்க போன் விட்டுபுட்டு போயிட்டிங்க...

மூச்சு விடாமல் அவள் பேசுவது இவனுக்கு தான் மூச்சு முட்டியது...

"ஏங்க..மாமு இருக்கிங்களா?...

'ஹான் இருக்கேன் டி..

"ஏங்க பேச மாட்றீங்க?..

'நீ எங்கடி பேச விட்டா ...

சரி சரி பேசுங்க..ஆமா இங்க தான் போன் விட்டு போயிட்டீங்களே அப்போ இது?...

'புது போன் வாங்கிட்டேன்!!..

"அப்போ இந்த போனு?...

'அதை குப்பையில போட்டாலாம்...

"ஏன் மாமு ஒடம்பை வருத்தி இவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு குப்பையில போடுறீங்களே..அதுவும் எம்மா பெரிய போனா இருக்கு..

'ஏன் உனக்கு அந்த போன் வேணுமா?

"அய்ய இப்போ போன் அடிச்ச அப்போ கூட எப்படி ஆன் பண்ணி பேசனும்னு தெரியாம முழிச்சிக்கிட்டு ஒரு வழியா பச்சை கலரை தொட்டு பேசிட்டு இருக்கேன் ..

'ம்.. குட் ரெட் கலர் தொட்டு இருந்தா போன் கால் கட்டாகி இருக்கும்...

"ஓஓஓ அப்படியா!!.. பாருங்க இது கூட தெரியல இதுல போன் வாங்கி அதை நா என்ன பண்ண போறேன் அப்பாஅம்மா கிட்ட பேசலாம் ஆனா...

அந்த பக்கம் அவன் அமைதியாக இருக்க...

அய்யய்யோ... "நாக்கை கடித்தவள் அது அது வந்து மாமு...

'போனை வைடிஇஇ...

சரி..ங்க.. சொல்லி முடிக்கும் முன்னே போனை வைத்து விட்டான்..

"ப்ச் ஒளறு வாய் அந்த மனிஷனுக்குதான் அப்பாஅம்மா பத்தி பேசுனாலே புடிக்கலயே நீ ஏன்டி அதையே பேசுற... 'வேணும்னா பேசுறேன் அதுவா வருது ஆனாலும் இந்த வருண் பாப்பாக்கு ரொம்ப தான் கோவம் வருது...

போனை பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் பசியெடுக்கவே.. போனை துக்கிக்கொண்டு கீழே வந்தவள் மூக்கை துளைத்தது கிச்சனில் இருந்து வந்த பிரியாணி வாசம் ம்ம்ம்...

மதிய நேரம்.. செம பசி..ஆளை தூக்கும் பிரியாணி வாசம்.. நடந்து வந்தாலோ மிதந்து வந்தாலோ வாசத்தை இழுத்தே நுரையீரல் நிறைந்துப்போனது வாயில் லிட்டர் கணக்கில் எச்சில் ஊற...

'நந்தன் அண்ணா ஆஆஆ... பாசத்தில் குழைந்து உருகி இதழினி ராகம் இழுக்க.. திடீரென அருகில் பூதம் போல வந்து இவள் அழைத்ததில்..அம்மே பேயி என அலறி பயந்து விட்டான் நந்தன்

"என்ன அண்ணா பாசமா கூப்பிட்டா இப்படி பயப்படுறீயே சரி சரி எனக்குதானே இது...சுட சுட பிரியாணி போட்டுதா.. பசிக்குது..

'என்னை சார் சார்னு கூப்பிட்டு உங்க சண்டையில என்னையும் சேர்த்து கஷ்டப்படுத்தினிங்க இல்ல பிரியாணி கிடையாது போங்க...

"சமயம் பார்த்து பழி வாங்கிறீயா அமைச்சரே... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..இருடா ண்ணே என் புருஷன் கிட்டயே சொல்றேன்..

'பிரியாணி உங்களுக்கு தான் மேடம் ஆனா சார் கிட்ட சாரி கேக்கணுமாம் அப்போதான் பிரியாணி.. சார் போன் போட்டு சொல்லிட்டாரு..ஹாஹாஹா

"பயபுள்ள நாலு ரொமான்ஸ் சீனு போட்ட பிறகு கூட அடங்க மாட்டேங்குதே... மான ரோசமா? பிரியாணியா? இதழு..

சூடு சொரணைய தின்னு முடிச்சிட்டு பிறகு பொறுமையா யோசிப்போம்..

"டேய் அண்ணா"..

'இன்னா'..

"இந்த பிரியாணியா விட எனக்கு என் தன்மானம் தான் முக்கியம் இதுல உன் மோருக்கு போன் போட்டு குடு..நா அவர் கிட்ட பேசிக்கிறேன்.. வெளியே கெத்தாக சொன்னவள்..

'அதானா என் தங்கச்சி யாரு... இந்தா பேசு

போன் போட்டு கொடுக்க.. தூக்கிக்கொண்டு தூர வந்தவள்..

மாமுகுட்டி என் செல்லகுட்டி இச் இச்சென்று போன் கதறி அலறும் அளவுக்கு முத்தமழை பொழிய தங்கம் குட்டி வெல்லம் வைர லட்டு இன்னும் இன்னும் நிறுத்தாமல் கொஞ்சியவள்..

"இன்னும் சாரி வர்லயேடி...

'கல்நெஞ்சக்காரன்டா நீ ஒரு பிளேட் பிரியாணிக்கு எம்புட்டு கொஞ்ச வேண்டி இருக்கு... மாமு பசிக்குது பிரியாணி தர சொல்லுடா...

'முடியாது"...

'சரி சாரிப்பா...

"அது நீ முன்னாடியே சொல்லி இருக்கணும் பிரியாணிக்காக உருட்டுறீயாடி..

இஇஇ கண்டுபிடிச்சிட்டானே.. பசிக்குது மாமு என்னோட வீக்னஸ் தெரிஞ்சி அடிக்கிறீங்க மாமு டூ மச்..

'தர சொல்லு மாமு? கடைசியில் சரண்டராகி விட்டாள்..

"நைட்டு நீ தரனு சொல்லு பிரியாணி தர சொல்லுறேன்...

'நைட்டா? எத்தனை கேக்குது? இவள் புரியாமல் குழம்ப...

அவளுக்கு புரியும் வரை இவன் அமைதியாக தான் இருந்தான்..

"ச்சீ போ மாமு நீ ரொம்ப மோசம் பேட் பாய் பிரியாணி கொடுத்து கவுக்க பாக்கற..

ஹாஹாஹா... என் பொண்டாட்டிக்கு இப்போதான் புரிஞ்சாதாக்கும்..

'யோவ் நீ நிஜமாவே வில்லன் தான்யா...

'இருந்துட்டு போறேன்டி.. தருவியா?

"அ..து அவள் முதல் கூடல் நினைத்து உடல் நடுங்க...

"போய் சாப்பிடுடி...

இதழ் கடித்தவள்... வெளியே நேற்று புரட்டி போட்ட புயலில் சாய்ந்து கிடந்த இளசிவப்பு ரோஜா மெட்டு மெல்ல விரிந்து உள்ளிருந்த பன்னீர் துளிகளால் பூமியை நனைத்தது...

இதழ் மழையில் நனைந்திடுமா❣️...
 

Author: vinnarasi novels
Article Title: இதழ் மழை💋🌧️30
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top