New member
- Messages
- 16
- Reaction score
- 1
- Points
- 3
அத்தியாயம் 6
மெல்லமாக பெய்து கொண்டிருந்த மழை சாரலில் சாலையில் வண்டிகள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு கொண்டு வேகமாக வீட்டுக்கு போய்விட வேண்டும் எப்போது மழை கொட்டோ கொட்டுனு கொட்ட போகுதோ தெரியவில்லை. அதற்குள் போய்விட வேண்டும் என மக்கள் முந்தி கொண்டு வண்டியை செலுத்தி கொண்டிருக்க... ஆ... அதான் போட்டான் பாரு... போட்டான் பாரு சிக்னல என சிக்னல் டேய் நின்னுட்டு போங்கடா... என்று சிகப்பி சொல்ல... ஐயோ இந்த பச்சைக்காரி எப்ப வருவா நாம எப்ப போறது என அனைவரும் காத்து கொண்டிருக்க... அதே இடத்தில் ஒரு சுடித்தார் அணிந்த சொர்க்கலோகத்து தேவதை ஹெல்மட் போட்ட ஆடவனின் இதயத்தை நொடியில் பறித்து சென்று விட்டாள். சாலையை கடக்க தன் தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாள் குழலி. வெள்ளை நிற சுடித்தாரில் தேவலோகத்து கண்ணிக்கை போல இருக்க ஹெல்மட் போட்ட ரிஷியின் மனதிலோ
எங்கேயோ பார்த்த மயக்கம்... எப்போதோ வாழ்ந்த நெருக்கம்... தேவதை இந்த சாலையோரம்....
வருவது என்ன மாயம் மாயம்...
கண் திறந்து இவள் பார்க்கும் போது கடவுள் என்றே நம்பும் மனது.
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது.
இவளை பார்த்த இன்பம் போதும்.
வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்...
யாரடி நீ மோகினி படத்தின் பாடல் அவனின் மனதில் ஓட... ஐயோ... இதுதான் பர்ஸ்ட் சைட் லவ்வா... ஐயோ எனக்கு என்னமோ பண்ணுதே... என பிதற்றினான். அவனை கடந்து செல்ல போகையில் அருகில் அவள் வர போகையில் அவன் இதயம்... இதயம் பட முரளி போல துடிக்க.... அதற்க்கேற்றார் போல் அவனுக்கு அங்கே தரமான சம்பவமும் நடந்தது. அவள் அவனை தாண்டி செல்கையில் அவள் போட்டிருந்த ஷால் அவனின் பிரேஸ்லைட்டில் நன்றாக மாட்டி கொண்டது.
ஐயோ சாரி சார் என அவள் அதை எடுக்க முயற்சிக்க.... அதை அவளால் எடுக்க முடியவில்லை. ரிஷி கையை காமித்து நான் பண்றேன் என சைகையால் சொல்லி விட்டு அவனும் எடுக்க முயற்சிக்க... அவனாலும் எடுக்க முடியாமல் போனது. கிறீன் சிக்னல் விழ அனைவரும் அவனை முன்னே போகுமாறு அவசரப்படுத்த... ஏமா உங்க லவ்சை கொஞ்சம் அந்த பக்கமா போய் வஞ்சுக்கோங்க என சொல்லவும்... அவளோ சொன்னவனை கோபமாக பார்த்தாள். கோபத்தில் ஷாளை அவனிடமே கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் ஓடி விட்டாள். அவளையே பார்த்து கொண்டிருத்தவன்... ஹெல்மட்டை கழட்ட மறந்து போனான். ச்சே நான் அவளை பார்த்தேன் என்னை அவள் பார்க்கவே இல்லையே... ஒரு முறை பார்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என சொல்லி கொண்டான்.
சில நாட்கள் கழித்து மால் ஒன்றில் பார்த்தான். அவளையே பின் தொடர்ந்து வந்தான். ஆனால் போய் பேச மட்டும் மாட்டான். தூரத்தில் இருந்தவளை ரசித்து கொண்டிருந்தான். அவளை பார்த்த முதல் நாளிருந்து டையிரியில் பக்கம் பக்கமாக கவிதை எழுத ஆரம்பித்திருந்தான். பின் அவளை பார்த்ததை வரி வரியாக எழுதினான். அவளை நினைக்காமல் அவனுக்கு அந்த நாள் போகாது. அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் தன் காதலை அவளுக்கு சொல்லி கல்யாணம் பண்ணிக்கணும் என உறுதியாக இருந்தான். அப்போதுதான் அவனது தலையில் பெறும் இடி ஒன்று விழுந்தது.
தியேட்டரில் படம் பார்ப்பதற்க்காக ரிஷி சென்றிருக்க அவனுக்கு பக்கத்தில் ஒரு ஆடவனும் அதற்க்கடுத்து ஒரு பெண்ணும் இருக்க... அந்த ஆடவனின் கை பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் உடலை தீண்டியபடியே இருந்தது. அதை பார்த்தவன் கருமம் இதெல்லாம் வேற எங்காவது வச்சுக்க வேண்டியதுதான இப்படியா பொது இடத்துல பண்ணுவாங்க என்று ரிஷி கேவலமாக திட்டிக் கொண்டிருந்தான். படம் முடிந்ததும் அவனுக்கு பக்கத்தில் இருந்த அவன் எழ பின் அவளும் துணியை சரிபடுத்தி கொண்டு எழ... லைட்டின் வெளிச்சத்தில் குழலியை பார்க்க... அவளோ அவனின் கைகளை இறுக்கமாக கட்டி கொடுத்து வெளியேறி இருந்தாள்.
சீ... இவ்ளோநேரம் நாம் திட்டி கொண்டிருந்தது இவளைத்தானா... சீ... இவளா இப்படி.... எவ்வளவு கனவு கண்டோம். இவளுடன் கனவிலே குடும்பம் நடத்தி குழந்தைகள் வரை போனோமே... நினைத்து பார்க்க இதயம் வெடித்து அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் பொது இடம் கருதி அவன் தங்கி இருக்கும் இடத்திக்கு வந்தான். ஆண் என்பதால் கதறி அழமுடியாமல் மூச்சு காற்று மட்டும் வேகமாக வீச... இதயம் படபடவென அடிக்க... தன்னை மறந்து அழுதான்.
டேய் ரிஷி... டேய் கதவை திறடா...
பதறி அடித்துக் கொண்டு எழ அவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க... குழலி நின்று கொண்டிருந்தாள்.
தூக்க கலக்கத்துடன் இருந்தவன் அவளை பார்த்ததும் முகம் பிரகாசமானது. ஆனால் வெளியே காட்டி கொள்ளாமல் இருந்தான் அவளை சற்று எரிச்சலுடனே பார்த்தான். என்ன?
சார் உங்களை கீழே கூப்பிடுறாங்க...
சரி நீ போ... நான் வரேன். என்று கதவை இழுத்து சாத்திவிட்டு பூட்டு போட்டு பூட்டியும் விட்டு சாவியை தன் பாக்கெட்டுக்குள் போட்டு கொண்டு குளியலறைக்கு சென்று குளித்து விட்டு உடை மாற்றி கொண்டு போகும் வரையும் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக இருத்தவன். கதவை திறந்து கொண்டு வெளியேறும் போது... குழலி... என்றான் மென்மையாக...
அவள் கண்களை மேல்நோக்கி பார்க்க...
இப்ப கொஞ்சம் பரவால்லயா? என்றான்.
ம்... என்றாள்.
உனக்கு இப்படித்தான் ரொம்ப ப்ளீடிங் போகுமா? என்றான் சாதாரணமாக...
ஐயோ எப்படி யுவனிடம் இதை சொல்வது கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஒரு பெண்ணிடம் இப்படியா கேட்பாங்க. அடியேய் உன் மொத்த உடலையும் இன்னும் ஒரு சில நாட்களில் கண்ணாறக்கண்டு ஆக்கிரமிக்க போறவனிடம் எதுக்குடி இந்த வெட்டி பந்தா என அவள் மனசாட்சி கேட்க... அவளோ அதை எங்கே காதில் கேட்டாள். இதை பத்தி நீங்க ஏன் கேக்குறீங்க? என்றாள் வெடுகென்று...
உனக்கும் எனக்கும் குழந்தை பிறக்கணும்ல... அப்போ இதை நான் தெரிஞ்சு வைக்கிறதுனால தப்பு இல்லை. உனக்கு ரொம்ப ரத்தபோக்கு இருந்தால் அதுக்கு ஏத்த மாதிரி மருந்து மாத்திரை சாப்பிட்டு நீ கொஞ்சம் தேறி வந்ததுக்கு அப்புறமா நான் என் வேலையை ஆரம்பிக்கலாம்ல... அதான் என கண் சிமிட்டி சொல்ல..
அவளோ முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள். அவளின் தாடையை இறுக்க பிடித்தவன் ஏய் இங்க பாருடி இந்த முகத்தை வெட்டுறது.... சுழிக்கிறது... அப்டியே கண்ணாலையே எரிகிறது இப்படியெல்லாம் பண்ண... அப்புறம் என்கிட்ட நீ ரொம்ப அனுபவிக்க வேண்டி வரும் கோபத்ததின் மறு உருவமாக பேச... அவனின் அதட்டளில் மிரண்டு போனால் குழலி.
ம்... இப்ப சொல்லு? ப்ளீடிங் ரொம்ப போகுமா?
இல்லை சார் நேத்து நான்... நீங்க... அது.... நீங்க...
நான் உன்கிட்ட ஹார்ஷா பிகேவ் பண்ணதுனால பயந்துட்ட அப்படித்தான... அதனாலத்தான் இப்படி ஆகிருச்சு அப்படித்தானே...
ம்ம்...
எல்லாலத்துக்கும் ம்ம்ம்... ன்னு மண்டைய மண்டைய ஆட்டு. நைட்டு நான் வர லேட் ஆகும். இந்த வீடுதான் உனக்கு இப்போதைக்கு ஊரு. இதை சுத்தி சுத்தி பாரு. எங்க வேணாலும் நீ போகலாம். ஆனா கரெக்ட் டைமுக்கு சாப்பிட பழகு. அப்பதான் குழந்தை உண்டானா நீயும் கரெக்ட் டைமுக்கு சாப்பிடுவ... ஓகே நான் கிளம்புறேன் சொன்னவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு போனான். அவன் ஒற்றை முத்தத்தில் அவள் அதிர்ச்சியுடன் பார்க்க...
சும்மா சும்மா ஏன் இந்த ரெண்டு கண்ணையும் வச்சு உருட்டுற... ரிலாக்சா இரு. நான் வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். போகும் அவனின் முதுகையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவள். போடா போ நான் என்ன பயப்படுறேன் என நினைத்தாயா நடிக்கிறேன் முழுவதுமாக நடிக்கிறேன். என் வாழக்கையின் கனவை சிதைத்த உன்னை நான் சும்மா விட மாட்டேன் அவள் சொல்ல அது அவன் காதுளுக்கு கேட்காமல் போய்விட்டது.
ரிஷியின் அறையிலேயே பல மணி நேரம் அங்கும் இங்குமாக உலாத்தி கொண்டிருந்தாள். பின் எவ்வளவு நேரம்தான் இப்படியே இருப்பது என அவளுக்கு தோன்ற.... ஜன்னலின் வழியே தோட்டத்தை பார்த்தாள். பார்க்க அழகாக இருந்ததால் வெளியேறினாள். தோட்டத்தையே சுத்தி சுத்தி வந்தாள். அங்கு இருக்கும் கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். ரிஷி நெற்றியில் கொடுத்த முத்தம் அவளுக்கானதா இல்லை அவன் குழந்தையை சுமக்க போகிறாள் என்னபதற்காகவா... நேற்று நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்து கொண்டிருந்தாள். அப்பப்பா என்ன ஒரு கோபம் என்ன ஒரு முரட்டுதனம்... இவனை பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா... இப்ப நினைச்சு பார்த்தா கூட பயமா இருக்கு. சரியான காமூகன். அவளாக பேசி கொண்டிருக்க... திடீரென நினைவு வந்தவளாக... வீட்டிற்குள் போனாள். ரிஷியின் அறைக்கு எதிரே இருக்கும் அறை பூட்டி இருந்தது. வேகமாக அங்கே போனவள் அறையின் கதவை திறக்க போகையில் யார் நீ என்னும் குரல் கேட்டு திறக்க போன கைகள் ஆட்டம் கண்டது.
யார்மா நீ? நீ இங்க என்ன பண்ற?
சார் நான் அவள் சொல்ல வருவதற்குள்...
ஓ நீதான் அந்த ரிஷி செலக்ட் பண்ண பொண்ணா... என்று கேட்க... அவரின் பேச்சிலும் பார்வையிலும் எந்த எளக்காரமும் இல்லை. நக்கலும் இல்லை. அவருக்கு தேவை அவர் குடும்பத்துக்கு ஒரு வாரிசு அது தன் மகனின் வாரிசாக இருக்க வேண்டும். அதை தரும் குணவதியை ஆராதிக்கவோ... அல்லது அன்பு செலுத்தவோ கூட அந்த வீட்டில் இருக்கும் மனிதர்களுக்கு தேவை இல்லை.
சொல்லும்மா நீதானே அவகிட்ட என்று மீண்டும் கேட்க..
ஆமாம் சார் என அவள் நடக்க ஆரம்பிக்க... ரிஷியின் தந்தை ராஜமனோகரனோ... ஒரு நிமிஷம் என்றார்.
அவள் என்ன என்பது போல் பார்க்க...
உன் பெயர் குழலிதானே என்றார்.
ஆமாம் சார்.
உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா என்றார்.
அவளும் சொல்லுங்க சார் என கூற...
ஏம்மா நீ என் மகனை கல்யாணம் பண்ணிக்கிறியா? என எடுத்தவுடனே அதிரடியான கேள்வியை கேட்டு விட்டார்.
சார்... என அதிர்ந்த படியே அவள் பார்க்க...
என்னடா இந்த பெரியவரு எடுத்த உடனே இப்படி கேட்கிறார் என நினைக்காதே... ரிஷிகிட்ட நான் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்து விட்டேன் கலயாணம் பண்ணிக்க சொல்லி.... ஆனால் அவனோ எதுக்கும் பிடிக்கொடுக்காமல் இப்படி ஒரு கேவலமான யோசனையை நாடி இருக்கிறான். இதுக்கு இப்ப இந்த காலத்துல சரகேட் மதர்ன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. ஒரு விஷயம் யோசிச்சு பாரும்மா நீ குழந்தை பெத்து கொடுத்துட்டு வெளியே போனதுக்கு அப்புறம் இந்த ஊர்க்காரவங்க உன்னை தப்பான கண்ணோட்டத்துல பார்ப்பாங்க... உன்னை கேவலமா பேசுவாங்க. சிட்டியா இருந்தால் பிரச்சனை இல்லை... இது கிராமம் கொஞ்சம் யோசிச்சு பாரு. பேசாம நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிறதுதான் சரி. நான் சொல்றதை கேளுமா. நீ எதுக்கும் பயப்படாத நடப்பவை நடக்கட்டும் நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன். ரிஷியிடம் பேசி எப்படியாவது உங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்றார்.
நேற்று கற்பகம் சொன்னதையும் இன்று அவர் சொல்வதையும் கேட்ட குழலிக்கு வினோதமாக இருந்தது. கணவர் ஒரு குணம் என்றால் மனைவி ஒரு குணம். என்ன சொல்வது இந்த பெரியவரிடம்... நான் இந்த குடும்பத்தில் அடி எடுத்து வைக்க முக்கிய காரணம் ஒன்று உள்ளது அது முடியும் வரை நான் எந்த முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க முடியாது என எப்படி சொல்வேன். சாக போற மகனுக்கு வாழக்கை வேண்டும் என கேட்கிறார். எப்படி வாக்குறுதி கொடுப்பது... பணக்காரர்களான இவர்களே வாக்கு மீறி நடக்கும் போது சாதாரண நடுத்தர குடும்பத்து பொண்ணு நான் பொய் வாக்கு கொடுப்பதில் என்ன பெரியதாக வந்து விட போகிறது என நினைத்தப்படியே
சரிங்க சார் நீங்க சொல்றப்படியே செய்யுங்க... எனக்கு சம்மதம். நான் இங்கே இருந்து வெளியே போனால் என்னைத்தான் அனைவரும் கேவலமாக பேசுவார்கள். நான் இதுக்கு கட்டுப்படுகிறேன் என அவரின் காலை பிடிக்காத குறையாக பேசினாள்.
ரொம்ப தேக்ஸ் மா.... சொன்னா என்னை திட்டுவியோ இல்லை கத்திருவியோன்னு பயமா இருந்தது
நல்ல வேலை நீயே ஒத்துக்கிட்ட...
ஒகேம்மா நீ ரெஸ்ட் எடுத்துக்கோ... நான் வரேன் மகிழ்ச்சியில் ஏதோ பத்து வருடம் பின்னாடி போய் இளமையானவர் போல டான்ஸ் ஆடிக்கொண்டே போனார்.
ம்... இந்த வீட்டில் இவர் கொஞ்சம் நல்லவர்தான் போல... நான் வந்த காரியம் சீக்கிரம் முடிய வேண்டும். அதற்குள் இந்த அறையில் இருப்பது விதுரவேந்தன்தானா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் அனைவரும் இரவில் உறங்கட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என அவளும் அங்கிருந்து நகர்ந்தாள்.
கள்வன் தொடர்வான்.

Author: shakthinadhi
Article Title: கள்வன் 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.