Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
18
Reaction score
1
Points
3
அத்தியாயம் 8

தாலி கட்டிய மன்னவன் மனதில் மங்கையவள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து பாடாய் படுத்தி கொண்டிருந்தாள் குழலி. ஒரு வேலையும் அவனுக்கு சரியாக ஓடவில்லை. எப்போது வீட்டுக்கு போவோம்.. எப்போது வேலைகள் முடியும் என்று ஆகி விட்டது. ஆனால் பாவம் அன்றைக்கு என்று பார்த்து அவனால் சீக்கிரமாக வேலைகளை முடிக்க இயலவில்லை. இழுத்து கொண்டே போனது. என்னதான் தோப்பு துறவு... அது போக கடையை பார்த்து கொள்வது என வேலைகள் இருந்தாலும் அதிலும் பல சிக்கலகள் இல்லாமல் இல்லை. இதற்க்கிடையில் நேற்றைய கூடலின் நினைவுகள் வேறு ஆணவனின் மனதில் அவ்வப்போது வந்து வந்து போக அய்யகோ என்றாகி போனது ரிஷிக்கு. பார்த்து பார்த்து காதல் செய்தான். நெஞ்சுக்குள்ளே காதலை பொத்தி பொத்தி வளர்த்தான்... அதை அவளிடம் சொல்லாமல் மறைத்து வைத்தான். சொல்லி இருக்கலாம். சொல்லாமல் போனது அவன் தவறல்ல.... கேட்காமல் போனதும் அவள் தவறல்ல.. அவன் பார்க்கும் போது இவளுக்கு தெரியாமல் போனது இவ்வளவு காதல் கொண்டவன் என்னவனாக வர கூடும் என்று... பார்க்கும் சூழ்நிலை உருவாகும் போது... மொத்தமாக அவன் கொடூர அரக்கனாக அவள் கண் முன் தெரிய... பெண்ணவள் உடைந்து போனாள். அழுதாள்... வெறித்து பார்த்தாள்... கோபம் கொண்டாள்... பிடிவாதம் பிடித்தாள்.... வெறி பிடித்தவள் போல் கத்தினாள்.... ஆனால் அனைத்தும் வெளியே காமிக்கும் நிலையில் அவள் இல்லை. அதையும் மீறி அவள் கைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலை ஒன்று இருக்க.. அதை முடித்து கொடுக்கும் கட்டாயத்திற்கு அவள் தள்ளப்பட்டாள். அவளும் அதையே தன் கருமமாக எண்ணினாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவளையும் மீறி அவனிடம் அவளை இழந்தாள்... மனதையும் இழந்தாள். இல்லை இழந்து கொண்டிருக்கிறாள். முரடன் மீது காதல் வருமா? வரலாம்... ஆனால் ஒரு கொலைகாரன் மீது காதல் வருமா என்ன? அப்படியென்றால்...

குழலி... குழலி... நினைவுகளில் திலைத்தவள்... யாரோ தன்னை அழைப்பதை கேட்டு திரும்பி பார்த்தாள். ரிஷிதான் அழைத்து இருந்தான்.

என்ன பண்ற என சொல்லியப்படியே வந்து சட்டையை கழட்டினான்.

அவள் இல்லை என்று தலையை ஆட்ட...

பேசமாட்டாளோ... பேசுனா வாயில இருக்குற முத்து உதுந்திருமோ... என எண்ணியவன்...

அவளை பின்னிருந்து கட்டி கொள்ள... அவனின் அணைப்பில் அவளும் மெய் மறந்து நின்றாள்.

லைட் ஆப் பண்ணலாமா என்றான்.

அவள் இல்லை என மறுப்பாக தலை அசைக்க...

ஏண்டி பேச மாட்டியா எப்ப பாரு சைகையிலே பதில் சொல்ற... என்றான்.

அது... என சொன்னவள் ஐயோ தள்ளுங்க என அவனை தள்ளி நகர்த்த.. அவன் என்னடி என்று கேட்க...

அங்கேயே இருங்க ஒரு அடி கூட நகர கூடாது.

என்ன பண்ணப்போறா என்று அவன் யோசிக்கும் முன்னே... கையில் துடைப்பத்துடன் வந்தாள். கீழே கிடைக்கும் கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தி அதை குப்பை தொட்டியில் போட்டவள்... அவனை பார்த்தாள்.

இங்க எப்படி கண்ணாடி துண்டு வந்தது என கேட்டவன் சுத்தியும் தேடி பார்க்க... அங்கே எங்கும் கண்ணாடிகளால் செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் இருப்பதாய் அவனுக்கு தெரியவில்லை. குழப்பம் அடைந்த அவன் என்ன என்று கேட்க...

அது வந்து... எப்படி சொல்வாள் அவள்தானே வேண்டும் என்றே அங்கு கண்ணாடிகளை போட்டு வைத்தாள். என்ன காரணம் சொல்லி சமாளிக்க போகிறாளோ. கண்ணாடி டம்பளர் இங்க இருந்ததும் அது தெரியாமல் கீழ விழுந்து உடைஞ்சு போச்சு... அதை நான் கவனிக்காம விட்டுட்டேன். இப்பத்தான் பார்த்தேன் நல்லவேளை உங்களுக்கு ஒன்னும் ஆகல... நான் பார்க்காமல் விட்டிருந்தா... அது இந்நேரம் உங்க காலை பதம் பார்த்திருக்கும்... என அவள் சொல்ல... தன் மேல் இவ்வளவு அக்கறையா என அவளையே கூர்ந்து பார்த்தவன் பின் எதுவும் சொல்லாமல் குளியலறைக்கு சென்று விட்டான்.

இந்த பார்வைக்கான அர்த்தம் என்ன என யோசனையுடன் அவள் கீழே இறங்கி போனாள். சாப்பிட்டாரோ இல்லையோ என அவனுக்கான உணவை சூடு செய்து எடுத்து வைத்து கொண்டிருந்தாள் குழலி.

என்ன பண்ற இங்க? ட்ராக்பாண்ட் ஷர்ட்டுடன் வந்தான் ரிஷி.

உங்களுக்கு சாப்பாடு... அதற்கு பிறகு அவளது வார்த்தைகள் நின்று விட... எனக்கு சாப்பாடு வேணாம் சொன்னவன் அவளை கையில் ஏந்தி கொண்டான். அவளின் பதட்டத்தில் கையில் வைத்திருந்த கரண்டியை கீழே போட அதன் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்தாள் வர்ஷினி... அவள் கண்ட காட்சியில் இருதயமே வெளியே வந்து விடுவது போல் ஆனது அவளுக்கு.... அட பாவி ரிஷி உனக்கு இப்படியெல்லாம் ரொமான்ஸ் பண்ண தெரியுமா என்னமா அவளை தூக்கிட்டு போறான். போகும் போது இப்படியா அவளை டீப்பா கிஸ் பண்ணிட்டே போவ... ஹும்... என் அத்தானை நாளே நாள்ள மயக்கி வச்சுட்டா.. இருடி உனக்கும் சேர்த்து வச்சுக்குறேன் என கருவி கொண்டே பெரும் மூச்சு இழுத்து விடப்படி பார்வையை அவர்கள் மீதே வைத்து கொண்டு போக எதிரே இருந்த தூணிலும் தலையில் இடித்து கொண்டாள். அயோ இதுகளும் சதி பண்ணுதே என சொல்லாத குறையாக எரிச்சலுடன் அவளது அறைக்கு சென்று படுத்து கொண்டாள்.

அறைக்குள் வந்தவன் அவளை கட்டிலில் கிடைத்தி வெறி கொண்ட மட்டும் அவளுடன் கூடலை நடத்தி முடித்திருந்தான். பெண்ணவளோ அவனின் செயலில் அரண்டு போனாள். அவளின் வெற்று மேனியை அவனுக்கு போர்வையாக மாற்றி படுத்து கொண்டிருந்தவனை மெல்ல ஒதுக்கி தள்ளிவிட்டு கீழே கிடைக்கும் சீலையை எடுத்து கட்டி கொண்டவள் மெல்லமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

விதுரவேந்தனின் அறை பக்கம் போனாள். கதவை திறக்க... அங்கு அவள் கண்ட காட்சியை கண்டு அதிர்ந்தே விட்டாள். விதுரா... என உள்ளுக்குள் கதறியே விட்டாள் பொங்கி வரும் அழுகையை துடைக்காமல் அவனை பார்க்க சென்றவள் அவனை கட்டி பிடித்து கொண்டாள். விதுரா.... விதுரா உன்னை இப்படி ஒரு நிலையிலா நான் பார்க்க வேண்டும் ஏண்டா என்னை விட்டுட்டு போன... அன்னைக்கு மட்டும் நான் சொல்றதை கொஞ்சம் கேட்டிருந்தா உனக்கு இந்த நிலை உருவாகி இருக்காதுள்ள ஏண்டா இப்படி பண்ண... உன் நிலைமைக்கு காரணமான உன் அண்ணனை நான் பழி வாங்கமல் விட மாட்டேன். அவன் சாவு என் கையிலதான். அவனை கொன்னுட்டு உன்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுவேன். அது வரைக்கும் கொஞ்சம் நான் பொறுமையாதான் இருக்கனும் வேற வலி இல்ல. விதுரா... விதுரா அவனின் பெயரை மீண்டு மீண்டும் சொல்லியப்படியே அவனின் கரங்களை பிடித்து அழுதாள். ஆனால் அவளின் அழுகை சத்தம் கூட அவனுக்கு கேட்கவில்லை. படுத்த படுக்கையாக இருந்தான். யாருக்கும் கேட்காமல் சத்தமே இல்லாமல் அழுதாள். அவனையே பார்த்து கொண்டிருந்தாள். மீண்டும் அழுதாள். கட்டியணைத்து கொண்டாள். ஏதோ ஏதோ பேச தோன்றி கடைசியில் அனைத்தையும் மனதிற்குள்ளேயே பேசியப்படி இருந்தாள். எத்தனை நேரம் அங்கே இருந்தாளோ சரி நாம் போகலாமா என நினைத்து அவ்விடம் விட்டு வெளியேற...

என்ன பண்ற? என்னும் குரல் கனீரென விழ... அதில் அதிர்ச்சியாகி உறைந்தே போய்விட்டாள்.

ரிஷிதான் அங்கு நின்று கொண்டிருந்தான். அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். அவன் உறங்கி விட்டான் என ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து பார்த்துவிட்டுதான் குழலி வெளியேறி இருந்தாள். அவனும் நன்றாக உறங்கி கொண்டுதான் இருந்தான். ஆனால் என்ன செய்ய அவனின் கைகளை வளைந்து மேனியை வருடியபடியே தூங்கி கொண்டிருந்ததால் அவள் இல்லை என ஒரு கட்டத்தில் தெரியவும் மீண்டும் ஒரு கூடலை நடத்தலாம் என நினைத்தவனுக்கு அவள் இல்லாமல் போகவும்... எங்கே போனாள் என தேடி தேடி பார்த்தான். ஆனால் அவள் எங்கு தேடியும் கிடைக்காமல் போக... கடைசியாக அவள் விதுரனின் அறையில் இருந்து வெளியே வருவதை பார்த்து அவனும் அங்கு வந்து சேர்ந்தான். நல்லவேளையாக அவன் வரும் போது.. அவள் பேசியதையோ அழுததையோ அவன் பார்க்கவில்லை. ஆனால் குழலிக்குத்தான் பயத்தில் உடம்பெல்லாம் வேர்த்து கொட்டியது.

தூக்கம் வரல அதான் என்று அவள் மலுப்ப...

அதுக்கு இங்கதான் வருவியா? இங்க எல்லாம் வர கூடாது என்று அவளின் கையை பிடித்து இழுத்து கூட்டி போக... ஏன் இங்க வர கூடாது என்றாள்.

வர கூடாதுன்னா வர கூடாது இங்க பாரு உனக்கு தாலி கட்டிட்டேன்கிறதுக்காக நீ ஒன்னும் என் பொண்டாட்டி கிடையாது. நான் உன் புருஷனும் கிடையாது. என்னை பொருத்தவரை நீ எனக்கு குழந்தை பெத்து கொடுக்க வந்தவ... அதுதான் உன் வேலை அதை மட்டும் பாரு.. வா என மீண்டும் இழுத்து கொண்டு அறைக்குள் போனான்.

நான் உங்க பொண்டாட்டி இல்லதான் ஒத்துக்குறேன். ஆனால் நீங்கதான என்னை இங்க எங்க வேணாலும் போ வான்னு சொன்னிங்க இப்ப ஏன் போக கூடாதுன்னு சொல்றிங்க... என விழிகளை படபடவென அடித்து பேச... அதில் மயங்கியவன் மீண்டும் பழைய கல்லாக உருமாறினான்.

சொன்னேன். பட் இனி நீ அந்த ரூமுக்கு போக கூடாது சொன்னவன் அவளின் அருகே வந்து அமர்ந்து கொண்டான். அவளின் சீலையை விளக்கினான். எம்பிய மார்பில் முகத்தை புதைத்து அவளை படுக்கையில் தள்ளியவன் பல முத்தங்களை வாரி இறைத்து கொண்டிருந்தான். குலழிக்கோ ச்ச... என்ன இவன் இப்படி இருக்கான். நான் என்ன பேசுகிறேன். இவன் வந்த காரியம் நடக்க வேண்டும் என்னும் ரீதியிலே இருக்கிறான் என கடுப்பானாள். அவனின் செய்கை ஒரு பக்கம் நடக்க... நான் இனி அந்த அறைக்கு போக மாட்டேன். ஆனால் அங்க ஒருத்தர் படுத்திருந்தாரே அவர் யாரு? என கேட்டாள்.

அவளின் கேள்வியில் உச்ச கட்ட உணர்ச்சியில் இருந்தவன் ப்ச்... என்னடி வேணும் உனக்கு?

இல்ல அவர் யாருன்னு...

அவன் என் தம்பி போதுமா ம்... கோமால இருக்கான் போதுமா... இவ்ளோதான் சொல்ல முடியும். ஏன் எதுக்குன்னு கேள்வியா கேக்காத... உன் லிமிட்ல இரு... என்றவன் மேற்கொண்ட செயலில் ஈடுபட... பெண்ணவள்தான் என்ன மாதிரியான மனிதனோ இவன் என்றானது போல் ஆனது.

அதிககாலை நேரத்திலேயே எழுந்து கொண்டான் ரிஷி. இன்றைக்கு முக்கியமான வேலையாக அவன் வெளியூருக்கு செல்ல இருப்பதால் நேரத்திலே எழுந்து குளித்து விட்டு கிளம்பி கொண்டிருந்தான். நேற்று அவன் செய்த லீலையில் பெண்ணவள் அயர்ந்து போய் உறங்கி கொண்டிருந்தவள் மெல்லமாக கண்களை திறந்து பார்க்க கண்ணாடி முன் நின்று சட்டையை சரி செய்து கொண்டிருக்க... உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் இருந்தவள் அவளது உடமைகள் எங்கே என பார்க்க அதுவோ அங்கும் இங்குமாக சிதறி கிடக்க... போர்வையை சுருட்டி கொண்டு கீழே இறங்கியவள் அய்யையோ என சொல்லாமல் சொல்லி விட்டது போல் போர்வை நழுவி கீழே விழுந்தது. ரிஷி அதில் வெடித்து சிரித்தான்.

ஒரே தாவலில் அவளை தன் பக்கம் இழுத்து கொண்டவன்... ஏய் உன்னை எப்பவோ முழுசா பார்த்தவன்டி நான் என்கிட்ட எதுக்குடி சீன் போடுற சொல்லியவன் அவளின் மெது மெதுப்பான மார்பில் மீசை உரச முகத்தை வைத்து தேத்தவன்... அயோ விடுங்க என்னை அவனிடமிருந்து திமிர... ஏய் உன் உடம்புல எங்க மச்சம் இருக்கு. எங்க தொட்டா நீ டெம்ண்ட் ஆவ... எல்லாம் எனக்கு தெரியும். உன்னையவே எனக்கு தந்துட்ட இதுக்கு மேல் இந்த தயக்கம் மட்டும் உன்னை விட்டு போகல... இங்க பாரு நீ... இந்த உடம்பு... எல்லாம் இப்போ என்னோடது... அதை மறைக்க முடியாது குழலி. கடுமையாக பேசியவன் அவளை அழுத்த ஒரு முறை கட்டி அணைத்துவிட்டு அவளை விடுவித்தான்.

குலழியோ நொறுங்கி போனாள். ச்ச என்ன மாதிரி பேசுறான். ஏன் இப்படியெல்லாம் என்னிடம் பேசுகிறான். கொலைகாரா... காமூகா... இருக்குடா உனக்கு. இன்னும் கொஞ்ச நாள்தான்... என நினைத்தவள்... குளியறைக்குள் சென்றாள்.

கள்வன் தொடர்வான்.
 

Author: shakthinadhi
Article Title: கள்வன் 8
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top