Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
61
Reaction score
8
Points
8
முரடனின் மகிழம் பூ அவள் 🌼

எபி 12


காலை சீக்கிரமே எழுந்த ராவணன் குளித்து முடித்து அவசரமாக கிளம்பி எங்கோ வெளியே சென்று விட்டான்.. அப்பத்தாவோ மதிய உணவுக்கு சமைத்து கொண்டு இருக்க... மகிழினியோ கொள்ளை புறத்தில் துவைத்த துணிகளை எல்லாம் காய வைத்து கொண்டு இருந்தாள்....

மகிழினி.... என்ற அப்பத்தாவின் குரலுக்கு வேகமாக வீட்டிற்குள் வந்த பெண் அவளோ " என்னாச்சு அப்பத்தா... " என்றாள்

அவரோ " சோறு பொங்கிட்டேன் தாயீ அத கொண்டு போய் உன் புருசனுக்கு கொடுக்கணும்.. அதோ அந்த பக்கம் மேற்கால போன ஒரு ஒத்தை அடி பாதை வரும் அப்படியே நடந்து போன உன் புருசனோட தோப்பு தான் முதல வரும்... அங்க தான் இன்னக்கி ராவணன் இருப்பான் சத்த அவனுக்கு இந்த சாப்பாட்டை மட்டும் கொடுத்துட்டு வா... " என்றார்

அவளோ தயக்கமாக " அப்பத்தா நான் எப்படி??... " என்றாள்

அவரோ " என்னால முடிஞ்சா உன்ன ஏன் தாயீ போக சொல்றேன்.. இன்னக்கி மட்டும் போய்ட்டு வாம்மா என்னால அவ்வளவு தூரம் நடந்து போக முடியல... " என்றார்

அவளும் " சரி அப்பத்தா.. நான் உங்களுக்கு தைலம் தேய்ச்சி விட்டுட்டு அப்பறமா சாப்பாடு கொண்டு போறேன்.. " என்றாள்

---

உச்சி வெயில் மண்டையை பிளக்க... இதமாக வீசிய தென்றல் காற்றை ரசித்த படி... கையில் சாப்பாடு கூடையோடு வயல் வரப்பின் மேல் நடந்து சென்று கொண்டு இருந்தாள் மகிழினியால்...

அப்பத்தா சொன்ன வழியில் சென்று கொண்டு இருந்தவள் கண்டது தூரத்தில் தேங்காய் உரித்து கொண்டு இருக்கும் ராவணனை தான்.. மனதில் எதோ இனம் புரியாத உற்சாகம் பெண் அவளை தோற்றி கொள்ள முகம் முழுதும் சிரிப்போடு உணவை அங்கு இருந்த தோப்பு வீட்டில் வைத்து விட்டு அவள் முரடனை நோக்கி வேகமாக நடந்து சென்றாள்..

மாமா... மாமா... என கத்திய படி ராவணனை அணைத்து கொள்ள அதில் தீ சுட்டத்தை போல அந்த பெண்ணை உதறி தள்ள... அதில் சேற்றில் விழுந்த அந்த பெண்ணோ " ஏன் மாமா இப்படி என்ன தள்ளி விட்டீங்க ஏன் நான் தொட கூடாத... " என குழைந்த குரலில் கேக்க

என் புருஷன தொட கூடாதுடி... என கூறிய படியே அங்கு வந்தாள் மகிழினி... அதில் மனைவியை கண்ட ராவணனோ நீ நடத்து என்பது போல கையில் இருந்த தேங்காயை உரிக்க... மகிழினியோ கீழே விழுந்து கிடந்த பெண்ணை கண்டு " ஏய்... இந்த மாமா கிமான்னு என் புருஷன் பின்னாடி உன்ன பார்த்தேன் மவளே உன் கால ஓடைச்சி விட்டுருவேன் ஜாக்கிரதை... எழுந்து போடி... " என உச்ச கட்ட கோபத்தில் கத்த

அந்த புதிய பெண்ணோ அசிங்க பட்டதில்லை... திரும்பி பார்க்காமல் ஓடி சென்று விட்டாள்... மகிழினியோ இப்போது தான் நெஞ்சில் கை வைத்து மூச்சை இழுத்து விட அதற்குள் அவள் அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்தாள்... அவளின் முரடன் தான் பெண் அவளை கையில் ஏந்தி கொண்டு அங்கே இருந்த கிணறு நோக்கி நடந்து கொண்டு இருந்தான்...

அதில் அதிர்ந்த அவளோ " உங்களுக்கு எப்ப பார்த்தாலும் என்ன பயப்பட வைக்குறது தான் வேலையா... " என கேக்க

அவனோ நீச்சல் தெரியுமா பொண்டாட்டி... என்றான்

எதுக்கு இப்ப சம்மந்தமே இல்லாம கேள்வி கேக்குறான் என்ற முக பாவனையோடு " இல்ல எனக்கு தெரியாது... " என்றாள்

அடுத்த நொடி பொத்!!.... என கிணற்றில் பெண் அவளை உள்ளே தூக்கி போட... அவளோ " ஆஆஆஆ... " என அலறிய படி நீரில் விழுந்து.. தத்தளித்து படி மூச்சு விட போராடி கொண்டு இருந்தாள்... மீண்டும் பொத்!! என சத்தம் கேக்க...

மகிழினியோ இடையில் ஊர்ந்த கரத்திற்கு சொந்தக்காரனின் கழுத்தை கட்டி கொண்டு " ஏன் இப்படி பண்ணீங்க... " என்றாள்

ஆடவனோ அவளை இடையோடு இருக்கி கொண்டு " அங்க எப்படி கத்தி கிட்டு இருந்த... இப்ப என்னடி இந்த தண்ணீய பார்த்து இப்படி பயப்படுற... " என்றான்

அவளோ " ப்ளீஸ் இனிமே கத்த மாட்டேன் என்ன மேல கூட்டிட்டு போங்க... ஒரு மாதிரி பயமா இருக்கு... " என்றாள் கண்ணை மூடி கொண்டு

அவனோ " ஏய்... பூனை குட்டி கண்ணா தொறந்து பாரு உன்ன நான் பிடிச்சிட்டு தானே இருக்கேன்... அதுவும் இந்த கிணத்துல ஆழம் கூட கம்மி தான்.. நீ வா நாம நீச்சல் அடிக்கலாம்... " என கூற

அவளும் அப்போது தான் கண்களை திறந்து சுற்றியும் பார்த்தாள்.. சின்ன கிணறு தான் மேலே செல்ல படிக்கட்டுகள் கூட இருந்தது.. அதற்கு மேல் அவள் முரடனோ அவள் இடையை இருக்கிய படி தேகத்தோடு தேகம் உரச அந்த தண்ணீரில் நீந்தி கொண்டு இருந்தான்..

அவளோ " மேல போலாமா... " என கேக்க

" ஏன்?? இப்ப என்னடி அவசரம் உனக்கு.. இரு போலாம், ஆமா என்ன இந்த நேரத்துல இங்க வந்து இருக்க... " என்றான் கேள்வியாக

அவளோ தயங்கிய படி " அ..து.. அப்பத்தா.. தான் உங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வர சொன்னாங்க... " என பயந்த படி கூற

அவனோ " சரி, பொறுமையா போலாம் வா... நான் உனக்கு நீச்சல் சொல்லி தரேன்.. " என கூறி பொறுமையாக அவளுக்கு கை காலை அசைத்து எப்படி நீந்த வேண்டும் என கற்று கொடுத்து கொண்டு இருந்தான்..

அவளோ முதலில் பயந்தவள் நேரம் செல்ல... செல்ல... குழந்தை போல குதுகலத்தோடு நீத்த ஆரம்பித்தாள்... முழுவதும் கற்று கொள்ள வில்லை என்றாலும் எதோ நீரில் முழுகாமல் மிதக்க கற்று கொண்டாள்... ராவணனோ தன்னவள் தொட வேண்டிய உடலை வேறு ஒருத்தி தீண்டி விட்டாளே என தண்ணீரில் முழுகி தூய்மை செய்து கொண்டான்..

தண்ணீரில் மிகுந்த நேரம் இருந்ததால் பெண் அவளுக்கு குளிர் எடுத்து உடல் நடுக்கம் கொள்ள அதை உணர்ந்த ராவணனோ " போதும் வாடி வீட்டுக்கு போலாம்... " என அவளை அழைத்து கொண்டு தோப்பு வீட்டிற்குள் சென்றான்..

தண்ணீரில் இருக்கும் போது தெரியாத குளிர் வெளியே நடந்து செல்லும் போது தெரிய ஈர உடை உடலை ஒட்டி கொண்டு அவளின் அங்க வனப்புகளை கண்ணாடி போல காட்ட.. ஒரு வித சங்கடமாக நிலையில் தலையை குனிந்த படியே வீட்டிற்குள் சென்றாள்.. ராவணனோ மனைவியின் நிலை கண்டு உடலில் உள்ள நரம்புகள் எல்லாம் முறுக்கி கொள்ள... தாபம் வழியும் கண்களோடு இரையை விழுங்கும் வேங்கை போல அந்த பெண் மானை பார்த்து கொண்டு இருந்தான்..

மகிழினியோ " இங்க மாத்திக்க புடவை இருக்கா??... " என ஆடவனை பார்த்து கேக்க

மனைவியின் கேள்வியில் சுயம் வந்தவனோ " என்ன கேட்ட... " என்றான் தாபத்தில் கண்கள் சிவக்க

அவளோ அப்போது தான் நிமிர்ந்து ஆடவன் பார்வை செல்லும் இடத்தை கண்டு கன்னகதுப்புகள் சிவக்க அவனுக்கு முதுகு காட்டி நின்ற படி " அ..து.. மா..த்தி..க்க.. து.. ணி... வே..ணும்.. " என வார்த்தைகள் தந்தி அடிக்க

அவளை பின் இருந்து அணைத்து கொண்ட ஆடவனோ சூடான மூச்சை அவள் கழுத்து வளைவில் வெளிய இட்டு குட்டி குட்டி முத்தம் வைத்து " வேணுமா... " என்றான் தாபத்தில் கிறக்கம் கொண்டு

அவளோ அதில் தொண்டையில் எச்சில் விழுங்கிய படி " நீ.. நீங்..க இன்னும் சாப்பிடல.. நான் வீட்டுக்கு போக..ணும்.. " என்றாள்

அவனோ " சாப்பிட தான் விடமாடிக்குறியே டி... " என கூற

அவளோ அவனுக்கு வயிற்றில் பசி எடுக்கிறது என எண்ணி கொண்டு " அப்ப வாங்க தலைய தொடைச்சிட்டு சாப்பிடலாம்... " என்றாள் அவசரமாக

அவனோ " எனக்கு அது வேணாம் இது தான் வேணும்... " என வெளிப்படையாக கேக்க... அதில் மருதாணி போல சிவந்தவளோ " ச்சீ!.. நீங்க ரொம்ப மோசம்... " என திரும்பி அவன் மார்பில் முகத்தை மறைத்து கொள்ள

அவனோ சிவந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டு " என்ன சாப்பிடவா... " என்றான் மோகத்தில் கூட அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை... கற்பாறை போலவே உணர்ச்சியில்லாத முகம் தான் இருந்தாலும் அவன் கண்களோ ஆயிரம் கதை பேசியது..

மெதுவாக அவள் பால் வதனத்தை கையில் ஏந்தி இதழோடு இதழ் சேர்த்து கொள்ள... அவளும் ஆடவனின் அடர்ந்த சிகையில் விரல் நுழைத்து இருக்கி கொண்டாள்... அவனோ கீழ் உதடு மேல் உதடு என பாரபட்சம் இன்றி சப்பு கொட்டி ருசித்து கொண்டு இருந்தான்... ஆடவனின் கரங்களோ இடையில் இசை மீட்டி கொண்டு இருக்க.. அவன் கொடுக்கும் சுக வேதனை தாங்காது ஆண் அவன் இதழை பல் தடம் பதிய கடித்து வைக்க... அவனோ மென்மையை விட்டு வன்மையாக சுவைக்க ஆரம்பித்தான்...

இருவரும் ஒரு வித மோன நிலையில் இருக்க... இதழ்கள் நான்கும் வலியில் கதறி கொண்டு இருந்தது... இவர்களின் நிலையை கெடுக்கவே கரடியாக ஆண் அவன் போன் அடிக்க... மனமே இல்லாமல் மனைவியை விட்டு பிரித்தான்.. அவளோ பலமாக மூச்சை இழுத்து விட.. ராவணனோ " இங்கயே இரு... " என வேகமாக உள்ளே இருந்த மற்றோரு அறைக்கு சென்றான்..

தொடரும்...
 

Author: Nithya
Article Title: முரடன் 🌼 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top