New member
- Messages
- 27
- Reaction score
- 1
- Points
- 3
அசுரன் 13
"என்ன மாமு இன்னிக்கு நீங்க நான் நினைச்ச அளவுக்கு செம்ம ஸ்பீடா போனீங்க ஓ மை காட் நான் எவ்ளோ ஜாலியா என்ஜாய் பண்ணேன் தெரியுமா?"
"ரியலி குட்டிமா! அது என்னவோ தெரில இன்னைக்கு நீ காலையில கொடுத்துட்டு போன ட்ரிங்க்ஸ் கூட காரணமா இருக்கலாம்" என்றார் அவர்.
"ஆ... நான் என்ன ட்ரிங்க் அப்படி கொடுத்தேன்" மேவாயில் கை வைத்து யாழினி கண்களை சிமிட்டி கேட்க, அந்நேரம் சரியாக கேட் கதவும் திறக்க, அந்த காருக்கு சொந்தக்காரான் வேறு நம் நாயகன் உக்ரானந்த்தை தவிர வேறு யார் இருக்க முடியும்.
யாழினியை வீட்டுக்கு அழைத்து கொண்டு போகலாமா? வேணாமா? என மன போராட்டத்தில் இருந்தவனுக்கு எப்படியோ ஒரு வழியாக சரி அழைத்து விட்டு தான் போவோமே எனும் எண்ணம் வர, அந்நேரம் ஸ்கூட்டியில் படு ஸ்டைலாக வந்தார் அவனது தந்தை கெய்யானந்த்.
"யாரா! இது" கண்களை அகல விரித்து பார்க்க, அங்கே அவரின் தந்தை இருப்பதை பார்த்த உக்ரனுக்கு,
"இது என்னடா புதுசா இருக்கு அவர் எதுக்கு இங்க வரணும்?" யோசிக்கும் நிமிடத்தில் சரென யாழினி பல்வரிசை அழகா தெரிய சிரித்தாள். அதை கண்ணாரா கண்டு இவன் கண்களும் மேலும் அகல விரிந்து கூடவே அவன் இதழ் ரசனையா விரிய அதை கூட முழுதாக அனுபவிக்க முடியாமல் சுடரிகா வண்டியில் ஏறிக்கொண்டு போய் விட, உக்ரன் அதை ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் பார்த்தவன், இன்னும் அந்த நிலை மாறாமல் இருவரும் போர்ட்டிக்கோவில் நின்று பேசிக் கொண்டிருக்க,
அவன் தங்களை பேருந்து நிறுத்தத்தில் பார்த்ததையோ இப்போது பர்ட்டிக்கோவில் இருவரும் பேசிக் கொள்வதையோ அவ்விருவரும் கண்டு கொள்ளாமல் தங்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போயினர்.
"ம்... ஓ காலையில நான் உங்களுக்கு பீட்ரூட் ஜூஸ் கொடுத்தேனே, அதை சொல்றிங்களா மாமு..." புண்ணையாகயா அவள் பேச,
"ஆமா டா குட்டிமா, எனக்கு அது புது எனர்ஜியா கொடுத்துருக்கு அதான்" என்றார் அவரும் பதிலுக்கு,
"அப்புறம் இன்னிக்கி டே எப்படி போச்சு?"
"ஹும்... அது ஏன் கேக்குறீங்க மாமு ஒரே டென்சனா போச்சு உங்க பையன் அது... ப்ச்... இங்க வேணாம் வாங்க நாம எப்பவும் பேசுவோமே அங்க போய் பேசலாம்" என்றாள் சுடரிகா.
"என்ன எப்பவும் போய் பேசுற இடமா அப்படி என்ன இடமா இருக்கும்" உக்ரன் நினைத்தப்படி வண்டியில் இருந்து இறங்கியவன் தன் உடைமைகளை கூட எடுக்காது அப்படியே அவர்களின் பின்னால் சென்றான்.
"மாமு... நான் ரெப்ரஷ் ஆகிட்டு வரேன் நீங்களும்,"
"ஆ... ஆ.. ஓகே டா குட்டி நான் டீ வித் உனக்கு பிடிச்ச சால்ட் பிஸ்கட்டோட வந்தறேன்" போன இளமை காலங்கள் மீண்டும் வந்தது போலவே இவர் துள்ளலுடன் பேச,
"ஐ ஜாலி... தேங்க்ஸ் மாமு..."
"டேய்... குட்டி..."
"அ... சாரி மாமு... தேங்க்ஸ் வாபஸ்.. ஓகே எடுத்து வைங்க நானும் உங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்தேன் அதை எடுத்துட்டு வரேன்" என்றாள்.
"என்ன வாங்கிட்டு வந்த சொல்லுடா குட்டி" ஆர்வம் மின்ன கேட்டார் கெய்யனந்த்.
"ஆஹா! உடனேவெல்லாம் சொல்ல முடியாது டீ டைம் சொல்றேன் பை" சொல்லி விட்டு, உக்ரன் தங்கும் அறைக்குள் நுழைய, இருவரின் பேச்சை மறைந்திருந்து கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தான் உக்ரன்.
"அடேங்கப்பா! இது என்னடா இப்படி பேசிக்கிறாங்க என்னமோ ரொம்ப நாள் பார்த்து பேசி பழகுன மாதிரி பேசிக்கிறாங்க. இவ இந்த வீட்டுக்கு வந்தே என்ன ஒரு ஒரு மாசம் இருக்குமா அதுக்குள்லேயும் இப்படியா?" அசந்துதான் போனான் உக்ரன்.
அவனும் அறைக்குள் நுழைந்தான். அதற்குள் சுடரிகா வேறொரு உடைக்கு மாறி இருந்தாள். அது அவனை பித்தனாக்கியது.
புல் ஸ்கட் மெடி அணிந்து அதற்கு ஏற்றார் போல ஒரு டீ ஷர்ட்டையும், அதன் மேல் ஷாலும் கழுத்தை சுற்றி போட்டு கொண்டு பார்க்கவே டால் போல காட்சி அளித்த பெண்ணவளை கண்டு திகைத்து போனான் அவன்.
"க்கும்..." அவள் குரலை செரும,
"என்ன" என்பது அவன் பார்க்க,
"கொஞ்சம் தள்ளிக்கிறிங்களா வெளிய போகணும் கதவை திறக்கணும்" என்றாள்.
"அ..."
"கதவு..."
"ஓ..." என்றவன் தள்ளி நின்று கொள்ள அவனை உரசாமல் கதவை திறந்து கொண்டு போக பார்க்க ஆனால் அது முடியனுமே அவன் நகர்ந்ததுவோ கொஞ்சம் இடைவெளி இருக்க அதில் எப்படி பெண்ணவள் போக முடியும்.
"இன்னும் கொஞ்சம் தள்ளுங்க"
"முடியாது இப்படியே போ" என்றான் மிடுக்காக.
"சார்... ப்ளீஸ் இந்த சின்ன கேப்ல எப்படி போறது ப்ளீஸ் தள்ளுங்க நான் போகணும் அங்க எனக்காக..." சொன்னவள் நாக்கை கடித்து கொண்டு,
"ப்ச்.. தள்ளுங்க" சிணுங்கி சொல்ல,
"அடடேயப்பா! வாய்ஸா இது தேன் போல அழகா பேசுறாளே..." அவளை இமை மூடாது ரசித்து பார்த்தான்.
"சார்..." மீண்டும் அவள் விழித்தத்தில் என்ன என்றான்.
"தள்ளுங்க" என்றாள் மீண்டும்.
"ப்ச்... தள்ள முடியாது நீ இப்படியே இந்த சின்ன கேப்புல போ நீ என்ன அவ்ளோ குண்டாவா இருக்க?" என்றான்.
"இன்னிக்கு என்ன ஆச்சு இவருக்கு லூசுத்தனமா பேசுறாரு."
"அடியேய்! இன்னைக்கு உங்க அவருக்கு உன் மேல கொள்ளை ஆசை வந்துருச்சுடி அதானோ என்னவோ?"
"சார்..." இழுத்தால் அவள்...
"ம்ம்ம்..."இழுத்தான் அவன்
கண்கள் கெஞ்சி பின் கொஞ்சி அவனை பார்த்த பார்வையிலே அவனையும் அறியாமல் அவளுக்கு வழி விட்டு நிற்க, அதை பயன்படுத்தி அவள் வெளியே செல்ல காலடி எடுத்து வைத்த நேரம், அவளது வலக் கையை அழுத்தமாக பிடித்து கொண்டான் உக்ரன்.
"சார் என்ன பண்றிங்க கை எடுங்க?" உள்ளுக்குள் கிலி பரவினாலும் அன்றைக்கு போல உக்ரனின் அம்மா மித்ரா தேவி அவளை இன்னது என இல்லாமல் கண்ட மேனிக்கு திட்டி விடுவாரோ எனும் வருத்தமே வந்தது பெண்ணவளுக்கு.
அன்றைக்கு ஒரு நாள் உக்ரன் அவசரமவசரமாக அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தான். ஹாலில் போனை பார்த்தப்படி இருந்த மித்ராவுக்கு காபி கொண்டுவந்து கொடுத்தார் வேலைக்கார பெண்மணி, அப்போது அவரும் வாங்க போக தவறுதலாக அது கீழே உடைந்து சிந்தியது.
"ஏய் கண்ண எங்க வச்சுட்டு வர இடியட்"
"அம்மா மன்னிச்சுடுங்க நான் நீங்க சோபாலதான் உட்கார்ந்து இருப்பிங்கன்னு நினைச்சேன். ஆனால் இங்க இருப்பிங்கன்னு தெரில அவசரத்துல நானும் கவனிக்காம கொடுத்துட்டேன் அது கீழ விழுந்து சிந்திருச்சு. மன்னிச்சுடுங்கம்மா என்றாள் அந்த பெண்மணியும்,
"ஆமா ஏதாவது நொண்டி சாக்கு சொல்லு. ஓ காட் பாரு என் சாரி முந்தி எல்லாம் காபி கொட்டி போய், இப்ப எப்படி நான் வெளிய போறது ஒரு வேலை செய்ய துப்பிளை ஆனால் காசு மட்டும் கரெக்ட்டா கேட்டு வாங்க தெரியுது" என்றார் கோபமாக,
அப்பெண்ணோ விட்டால் ஓடியே விடுவேன் எனும் ரீதியில் பயத்தோடு பார்க்க,
"என்ன என்னையவே பாக்குற போய் போய் தொலை என் கண்ணு முன்னாடி நிக்காத,"
அவரும் ம்ம் கொட்டி அழுத கண்களை துடைத்து விட்டு சோகமாக அங்கிருந்து செல்ல போக,
"ஏய் இதை யாரு கிளீன் பண்ணுவா? உங்க அம்மாவா வா வந்து துடை" என்றார்.
"இதோ மா" என்றுவள், அதை துடைக்க துணி எடுக்க போகவும் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பார்த்து கொண்டிருந்த சுடரிகாவுக்கு பகீரென்று இருந்தது.
"ச்சே என்ன இவங்க இப்படி இருக்காங்க ஹும்... பணக்காரவங்க இப்படித்தாதான் இருப்பாங்களோ?" மனதில் ஆயிரம் புலம்பளுடன் அவள் அங்கே சிந்தி இருந்த காபியை பார்க்காமல் கால் வைக்க, அது வழுக்கி கொண்டு அவளை விழ வைக்க போக அந்நேரம் அவளின் இடையோடு கை கொடுத்து பெண்ணவளை பிடித்துக் mகொண்டான் உக்ரன்.
வேகவேகமாக அலுவலகம் கிளம்பியவனுக்கு, கார் சாவியை மறந்து வைத்துவிட்டு வந்தது கடுப்படிக்க, 'அட ச்ச' தலையில் அடித்துக் கொண்டு எடுப்பதற்காக மீண்டும் வீட்டிற்குள் வர அவளை தாங்கி பிடிக்க அதை மித்ரா பார்த்து விட்டார்.
காபி புடவையில் சிந்தவும் அதை மாற்றி கொண்டு வந்தவர் கதவை திறந்து பார்க்க, அங்கே அவர் கண்ட காட்சிதனில் உள்ளம் கொதித்து கண்கள் கொவ்வாய் பழமாய் சிவந்து போனது. இவளை, பற்களை கடித்து கொண்டு அவர் பார்க்க நீண்டநேரம் அவ்விருவரும் மோன நிலையில் இருக்க,
"ஏய் சிந்தி போன காபியைதுடைக்க இவ்வளவு நேரமா?" பெரும் சத்தத்தில் இருவரும் தன்னிலைக்கு வந்தனர்.
உக்ரன் சென்றது தான் தாமதம் அவளை இழுத்து கொண்டு தன்னறைக்கு வந்தவர்,
"ஏய் உன்கிட்ட என்ன சொன்னேன் சொல்லுடி?"
"அ..."
"நடிக்காத? நீ என் மகன் கிட்ட இருந்து தள்ளி இருன்னு சொன்னேனா இல்லையா?" என்றார் கோபமாக,
"ஆமா மேம் ஆனா அவரு நான் கீழ விழ போக அவர் என்னை பிடிப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல, சொல்ல போனா நான் எந்த தப்பும் பண்ணல. அன்னைக்கு நீங்க சொன்ன எல்லாமே என் மனசுல இருக்கு மேம் என் லிமிட் என்னனு எனக்கு தெரியும்" என்றாள் சற்றே நிமிர்வுடண்.
"என்னடி ரொம்ப பேசுற நீ பேசுறதை கேக்க ஒன்னும் நான் இங்க இல்ல நான் பேசுறதை கேக்கத்தான் நீ இருக்க புரியுதா?" அதட்டல் போட,
"ம்ம்..." என்றாள்.
"அது அந்த பயம் இருக்கணும். என் பையன்மேல உன் நிழல் கூட பட கூடாது. ஆமா ரூம் ல ரெண்டு பெரும் தனி தனியாதான இருக்கீங்க?"
"ஆமா மேம்"
"ம்ம்... இன்னொரு விஷயம் இங்க இருக்குற பணம் செழிப்ப பார்த்து என் மகனை உன் கைக்குள்ள நீ வளைச்சு போடணும்னு நினைச்ச உன்னை எதுவும்பண்ண மாட்ட, உன் ஆருயிர் தோழி அவளை உருதெரியாம அழிச்சுருவேன். தொழில எத்தனை பேரை வீழ்த்தடிச்சு இந்த நம்பர் பொஷிஷனுக்கு வந்த எனக்கு உன்னை அழிக்க பத்து நிமிஷம் போதாது. என் மகனுடைய போராத காலம் இப்படி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தலையெழுத்து. போ இங்கிருந்து நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்குல்ல"
அவர் சொன்னதை கேட்டதும் உள்ளுக்குள் உதரல் எடுத்து பயந்து போனாள் சுடரிகா.
"ஏய் என்ன?"
"ஆ... ஆ.. புரிஞ்சுது மேம்" என்றால் அவளும்,
"ம்ம்.. போ போ" சொல்லி விட்டு அவர் சென்று விட, உக்ரன் அவளின் கையை பிடித்ததும் இது அனைத்தும் மனதில் வந்து போக பெண்ணவளோ பயந்து நடுங்கி போனாள்.
"சார் கையை விடுங்க வலிக்குது" அவனின் இரும்பு கரம் அவளின் கரத்தை வலி எடுக்கவே அவளையும். கண்களும் அவ்வலியை காட்டி கொடுக்க, அவனோ இன்னும் பெண்ணை நெருங்கினான்.
"க்கும்... என்ன நடக்குது இங்க?" என்றான். அவளை பிடித்திருந்த கையை இன்னமும் எடுக்காமல் கொஞ்சம் தளர்த்தி,
"அ... என்ன நடக்குது?"
"எங்க அப்பாவும், நீயும் ரொம்ப க்ளோசா பழகுறீங்க" அவள் பார்த்த, பார்வையில்,
"ஐ மீன் நீங்க ரெண்டு பெரும் பிரெண்ட்ஸ் போல பேசுறீங்க அதை சொன்னேன்."
"அது சார்..."
"குட்டிமா வாடா டீ ரெடி உன் சால்ட் பிஸ்கட்டும் ரெடி கூடவே என் கிஃப்ட் எடுத்துட்டு வா டா குட்டி" கீழேருந்து சத்தம் வர சுடரிகா அவனின் கையை வெடுக்கென்று எடுத்து விட்டு,
"இதோ மாமு வந்துட்டேன்" சத்தமாக சொல்லிவிட்டு இவளும் தன் லாங் ஸ்கட் மெடியை தூக்கி கொண்டு சென்றாள்.
போகும் அவளை இமை கொட்டாது பார்த்தவன் அப்படி என்ன இவர்கள். மேலும் பேச போகிறார்கள் எனும் ஆவலுடன் இவனும் அவர்களின் பின்னே போனான்.
தித்திக்கும்...

Author: shakthinadhi
Article Title: அசுரன் 13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.