Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
28
Reaction score
1
Points
3
அசுரன் 14

எவ்ளோ நேரம்டா குட்டி கண்ணை மூடி இருக்கிறது சீக்கிரம் டா" ஆர்வம் தாங்க முடியாமல் கெய்யானந்த் கத்தி பேச,

"ஷூ... ஷூ... எதுக்கு இப்போ இவளோ சத்தம் மெல்லமா பேசுங்க மாமு" என்றாள் சுடரிகா.

"ம்ம் இப்போ கண்ணை தொறங்க" என்றாள்.

மூன்றை அடி கொண்ட ஒரு பிரேம் ஒன்று அவளின் கைகளில் தங்க நிறத்தாலான பேப்பரால் அது சுற்ற பட்டிருக்க, அதன் மேலே சிகப்பு நிற ரிப்பன் முடிச்சு போட்டு இருந்தது.

"என்னடா இது?" என்றார் கெய்யானந்த்.

"அ .. பாரா அது எப்படி சொல்ல முடியும் நீங்களே பிரிச்சு பாருங்க மாமு" புன்னகை மாறாமல் அவள் பேச, அவளின் புன்னகை அவனுக்கும் ஒட்டிக் கொண்டதோ, அவ்வளவு சந்தோஷம் அவரின் முகத்திலும் பிரதிபலித்தது அவர்களுக்கு மறைவாக, இருந்து பார்த்து கொண்டிருந்த உக்ரனுக்கு,

"நம்ம அப்பாவா இது! இப்படியெல்லாம் கூட சிரிக்க தெரியுமா இவருக்கு?"

பின்ன இருக்காதா அவனுக்கு, அவனிடம் முகம் கொடுத்து பேசுவார்தான் இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால் சிரிப்பு ஒரு மில்லி மீட்டர் அல்லது ஒரு இரண்டு சென்ட் மீட்டர் அளவுக்கு மட்டுமே இருக்கும். மித்ரா தேவியிடம் கூட இந்த அளவுக்கு சிரித்தது இல்லையே அவர்? ஆனால் இப்பொழுது என்னவென்றால் அவளுடன் என்ன இத்தனை சந்தோஷமான சிரிப்பு.

பார்க்க ஒரு பக்கம் அவனுக்கு சந்தோஷமாக இருந்தாலும், மற்றொரு பக்கமோ,

"அவரு என் அப்பா அது எப்படி நேத்து வந்தவ நீ, என் கிட்ட இருந்து என் அப்பாவை தட்டி பார்க்கலாம்" என தோன்றியது உக்ரனுக்கு.,,

"ராசா உன் அப்பா முப்பத்தியோரு வருஷமா உன்கூடவே தான்யா இருந்தாரு அப்ப தெரியயாத அப்பா இன்னைக்கு உன் கண்ணுக்கு தெரியுறாரா?"

கண்கள் மின்ன அதை பிரித்தவருக்கு முகமெல்லாம் அவ்வளவு பூரிப்பும், ஆச்சர்யமாகவும் இருக்க, அவரோ உள்ளம் நெகிழ்ந்து போனார்.

"குட்டிமா இது... இது..." அதற்கு மேல் வார்த்தைகள் வாராமல் தந்தி அடிக்க,

"ம்ம்... உங்களுக்காக.."

"நீயே வரைஞ்சியா?" உள்ளம் உவகையுடன் அவர் சொல்ல, சுடரிகாவும் கண்களை அழுத்த மூடி ஆமா என்பது போல சொன்னவள், கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க , அவருக்கும் அதே நிலைதான், அப்படி இரண்டு பேரும் என்ன இப்படி அழுகிறாங்க இவ்வளவு நேரமும்!


"சிரிச்சு சிரிச்சு பேசினாங்க இப்போ எதுக்கு இப்படி அழுகிறாங்க என்னவா இருக்கும்?" உள்ளுக்குள் கேள்வி எழுந்தாலும் வெளிபடையாக போய் அங்கு நின்று கேட்க உக்ரனால் முடியவில்லை. அதோடு சுடரிகா என்ன கிபிட் கொடுத்தா என்பதையும் தெரிந்து கொள்ள இவனுக்கு பேராவல் வந்தது.

வேறொரு பக்கமாக வந்து நின்று எட்டிப் பார்த்தான் உக்ரன். அதில் கெய்யானந்தையும் அவருடன் சேர்த்து அவரது தோலில் கை போட்டு தலை சாய்த்து சுடரிகா இருப்பது போல இருக்கவே ஒரு நிமிடம் அவனும் ஸ்தம்பித்து போய் நின்றான்.

"ஹாபி பர்த்டே மாமு... இந்தாங்க இதையும் வச்சுக்கோங்க" என்றவள், அவரது கையில் ஒரு சிறு பெட்டியை கொடுக்க, அதை அவர் ஆனந்தத்துடன் பிரித்து பார்க்க, உள்ளே வெள்ளி மோதிரம் இருந்தது.

"மாமு உங்களுக்கு நான் தங்கத்துல வாங்கணும்னு தான் நினைச்சேன். உங்களுக்கே தெரியும் தங்கம் ரேட் அதிகமாகிடுச்சு. அதான் என்னால முடிஞ்சது வெள்ளில ஒரு மோதிரம் வாங்கினேன். எங்க போட்டு காமிங்க" என்றாள் ஆர்வத்துடன்.

"என்னடா குட்டி எதுக்கு இப்படி செலவு செய்ற நாளைக்கு உனக்கு தேவை படும்ல?"

"ஏன் நீங்க எனக்கு செய்ய மாட்டீங்களா ?"

"இது என்னடா கேள்வி நான் உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்" இதை கேட்டுக் கொண்டிருந்த உக்ரனுக்கு கோபம் கொப்பளிக்க வந்தது. விவரம் தெரிஞ்ச நாளருந்து எனக்கு ஏதும் வாங்கி தந்தாரா இந்த மனுஷன் ஆனா இவளுக்கு செய்வாராம சே முகத்தை சுழித்தான் உக்ரன்.

"மாமு போட்டு பாருங்க எப்படி இருக்குன்னு நான் பாக்கணும்." என்றாள் ஆசையாக அவள் அதை வாங்கி போட்டும் விட,

"சூப்பர் பர்பெக்ட் அழகா இருக்கு." சொல்லும் போதே அத்தனை புன்னகை அவளுக்கு,

"எல்லாம் சரி ஆமா இந்த பெயின்டிங் எப்படி நீயே செஞ்சியா?" என்றார்.

"ஆமா நான்தான் வரைந்தேன். ஏன் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?" சிறு முறைப்புடன் மூக்கை சுழித்து பேச, கெய்யானந்த் சிரித்தே விட்டார்.

"சரி சரி நல்லா வரைஞ்சுருக்க, ஒத்துக்குறேன். ஆமா உனக்கு எப்படி நேரம் கிடைச்சது? இதை வரைய?" என கேள்வி கேட்க,

"ஒரு நாலு நாள் நைட்டு தூங்கல அவ்ளோதான்" என்றாள்.

"ஏன்டா குட்டி எதுக்கு உன் தூக்கத்தை தியாகம் பண்ற?"

"மாமு என் உயிர்த் தோழிக்கு அடுத்ததா நான் உங்களைத்தான் என்னோட பெஸ்ட் பிரென்ட்டா பாக்குறேன். அப்படி இருக்கும் போது ஏன் நான் உங்களுக்காக ஒரு நாலு நாள் கண் முழுச்சா செத்தா போவேன்" என சொல்ல,

"ஏய் வாயில போடு என்ன நீ செத்துடுவேன் அது இதுன்னு பேசுற, அதெல்லாம் பேச கூடாது சரியா?" சுடரிகாவும் சரி என சொல்லிவிட்டு,

"வாங்க டீ குடிக்கலாம் ரொம்ப நேரம் ஆச்சு" என்றாள்.

கெய்யானந்த் ஒரு சிப் பருகி இருப்பார் மீண்டும் சந்தேகம் மூளையில் உதிக்க ,

"ஏன்டா குட்டி?"

"மறுபடியும் என்ன மாமு என்ன டவுட்?" என்றால் அவளும் டீயை குடித்தபடியே ,

"அது.. எப்படி என்னோட பர்த்டே உனக்கு தெரியும் சொல்லுடா?" வந்த சந்தேகத்தை தீர்த்தே ஆக வேண்டும் என அவர் , தீர்த்தே ஆக வேண்டுமா என இவள்,

"ஆமா உங்க பிறந்தாநாள் கண்டுபிடிக்க நான் என்ன ஐ ஏ எஸ் படிப்பா படிக்கணும். அன்னைக்கு உங்க ரூம்க்கு வந்து பார்த்த நீங்க இல்லையா கிளம்பலாம்னுதான் பார்த்தேன். அங்க உங்க ஐடி இருந்ததும் அதுல இருந்து உங்க பர்த்டே டேட் தெரிஞ்சுகிட்ட, சிம்பிள்" கண்ணடித்து அவள் சொல்ல அவரும் மெல்ல சிரித்தார்.

"சரி சரி சீக்கிரம் டீ குடி போகலாம் இல்லைன்னா உன் அத்தைக்காரி வந்துருவா" கொஞ்சம் பயத்துடன் அவர் சொல்ல,

"ஏன் வந்தா என்னஒஃப்வுக்கு இப்படி பயப்படுறீங்க?" குறும்பாக அவள் கேட்க,

"ஹும் ... அது பயம் இல்லடா குட்டி அவளை எனக்கு பாக்க பிடிக்கல, அவளோட பேச பிடிக்கல, சொல்ல போனா அவள் மேல் நான் வைத்த காதல் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு போயிட்டு இருக்கு. என்னைக்கு முழுசா அழியுதோ அன்னைக்கு அவளை விட்டு நான் போயிடுவேன்"

"மாமு மாமு..:ப்ச் மாமு வாட் ஹேப்பன் என்னாச்சு கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலை காணோம்."

"அ ... ஒண்ணுமிடா எனக்கு ஒரு மாதிரி டயர்டா இருக்கு ரூமுக்கு போலாமா?" மனதின் வலியை மறைத்து உடலின் வலியை தெரிவித்துக் கொண்டு அவர் அங்கிருந்து கிளம்ப பார்க்க, பெண்ணவளுக்கு தான் ச்சே நல்ல மூடை நாம ஸ்பாயில் பண்ணிட்டமோ எனும் நிலையில் இருந்தாள்.

"மாமு என்னாச்சு? இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்திங்க?" பதட்டத்துடன் அவள் வினவ ,

"ஆமாடா பட் இப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கு" முகத்தை சுளித்து கழுத்தை வளைத்து அவர் சொல்ல,

"சரி சரி வாங்க நான் உங்களை ரூம்ல கொண்டு போய் விடறேன் வாங்க போகலாம்" டீ கப்பை டீப்பாயில் வைத்து விட்டு எழுந்து கொள்ள,

"இல்ல வேணாம் குட்டிம்மா நானே போய்க்குவேன்." என்றவர் அவளின் உதவியை நாடாமல் அவரது அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொள்ள பெண்ணவளுக்குதான்,

"சீ தெரியாம மேடமை பத்தி பேசி நானே அவரோட நல்ல மூடை ஸ்பாயில் பண்ணிட்டேன்" தன்னை தானே நொந்து கொண்டவள், அங்கே இருந்த டீ கப் மற்றும் இதர பொருட்கள அனைத்தையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் வைத்து விட்டு அவள் கெய்யானந்துக்கு பரிசாக கொடுத்த வரைபடத்தை எடுக்க வந்தாள். ஆனால் அங்கு அது இல்லை. மாறாக உக்ரனின் கையில் இருந்தது.

"ஐயோ இவரா! இவர் கைக்கு எப்படி இது போச்சு?" பயத்துடன் அவனை பார்க்க அவனோ புருவங்கள் மேல் கீழே ஆட்ட, அ .. வென முழித்தாள்.

"சார் அது என்னோடது என்கிட்ட கொடுத்திருங்க" திக்கி திணறி பேசிவிட்டாள். ஆனால் அவன் என்ன இவள் சொன்னதுமே இந்தாம்மா வச்சுக்கோண்ணு சொல்லும் ரகமா என்ன? ஆனாலும் சுடரிகா அதை எப்படியாவது அவனிடமிருந்து வாங்கியே ஆக வேண்டுமென நினைத்து அவனிடம் மல்லுங்கட்ட ,

"கொடுங்க சார்"

"முடியாது ஹேய் யார்டி நீ வந்து ஒரு மாசம் கூட முடியல அதுக்குள்ள எங்க அப்பாவோட அவ்ளோ க்ளாஸ் ஆகிட்ட சொல்லு உனக்கு என்ன வேணும்? பணமா? இல்ல நகையா? இல்ல லேண்டா? என்ன வேணுமோ சொல்லு? எல்லாத்தையும் உன் காலடியில கொட்டுற. இனி எங்க அப்பாவோட நீ பேசுறதை பார்த்த, அவ்ளோதான் சொல்லிட்ட" அபாண்டமாக அவன் பேசுவதை பெண்ணவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

"வேணா இப்படியெல்லாம் பேசாதீங்க. அவரு எனக்கு அப்பா போல, நான் அவருக்கு மகள் போல, அந்த பந்தத்தை கொச்சை படுத்தாதீங்க." சொல்லும் போதே கண்களில் கண்ணீர் கரித்து கொண்டு வந்தது சுடரிகாவுக்கு.

"ஏய் இடியட் நான் ஒன்னும் அந்த அர்த்ததுல சொல்லல, முட்டாள் அப்படி பேசினா நான் எங்க அப்பாவையே தப்பா பேசுனதுக்கு சமம்." கொஞ்சம் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டவன், பெரும் நெடு மூச்சை இழுத்து விட்டு கொண்டவன், அழுத்தமாக கண்களை மூடி திறந்தவன், ஐ நௌ உனக்கும் என் அப்பாவுக்கும் இருக்கிற பாண்டிங் எப்படின்னு புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் வடிகட்டிய முட்டாள் இல்ல. ஹேய் லுக், உனக்கு இங்க கொடுக்க பட்ட வேலை என்னவோ அதை மட்டும் பாரு, அதை விட்டுட்டு தேவை இல்லாம இங்க இருக்குற ஆட்களோட பாக்குறது பேசுறது குறிப்பா என் அப்பாகிட்ட வச்சுக்கிட்ட உன்னை கொலை பண்ண கூட தயங்க மாட்டேன் பார்த்துக்க,"

"அப்போ என்னை தாண்டித்தான் அவளை கொலை பண்ண முடியும் உக்ரன்."

குரல் வந்த திசையை உக்ரன் பார்க்க, கருநீல கலர் கோட் அதற்கு மேட்ச்சாக வெள்ளை நிற சட்டையும், கேசத்தை அழகாக சீவி வைத்திருப்பார் போல, அந்த 54 வயதிலும் அழகாக தெரிந்தார் கெய்யானந்த். அவர் பார்க்க 40 வயது ஆள் போல இருக்க, தன் உடம்பை இன்னும் கனகச்சிதமாக வைத்து இருந்தார். இன்றைய இளவட்டங்கள் பார்த்தால் கூட கொத்தி கொண்டு போய் விடுவர் ஆணழகனாக தெரிந்த அவரை இமை கொட்டாமல் பார்த்தான் உக்ரன்.

"என்னடா சொன்ன அவளை கொலை பண்ணுவியா? எங்க பண்ணு பாப்போம்." கையில் இருக்கும் சிகரெட்டை வாயிற்கு கொண்டு வந்தவர் பற்ற வைக்க போகும் முன்பு,

"குட்டிம்மா மாமு சிகரெட் குடிக்கிறதுனால உனக்கு எதுவும்,"

"ஹும்..." அவள் இடம் வலமாக தலை ஆட்ட அவனோ அவளை பார்த்து மேலும் முறைக்க,

"உக்ரன் இனி அவகிட்ட இப்படியெல்லாம் நீ பேச கூடாது சரியா? இது முதல் முறைங்கிறதுனால விடறேன் நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி நடந்தது அப்புறம் நான் பேச மாட்டேன் இதோ இதுதான் பேசும்" அவரின் கையை காமிக்க அவனோ உள்ளுக்குள் கொதித்து போனான்.

"தனக்கு விவரம் தெரிந்த நாளிருந்து இப்படியெல்லாம் அவர் தன்னிடம் பேசியது கூட இல்லையே ஆனால் இன்றைக்கு என்னவென்றால் இப்படி பேசுறாறே எல்லாத்துக்கும் காரணம் இவள்தான் இவளை இருடி என் கையில மட்டாமலா போவ எப்படியும் ரூமுக்கு வந்துதான ஆகனும் அப்ப இருக்கு உனக்கு" உள்ளுக்குள் பற்களை கடித்துப் பேசி கொண்டவன் அவளை முறைக்க,

"குட்டிமா நாம போலாமா?" என்றார் படு ஸ்டைலாக, அவரை பார்த்துக் கொண்டே இருந்த சுடரிகாவுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை கெய்யானந்தையே விழியகலாமல் பார்த்தாள்.

"போலாமா?" மீண்டும் அவர் கேட்க,

"ம்ம்ம் போலாம் மாமு" சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொள்ள அவனோ அவளை தீயாக முறைக்க,

"வா போகலாம்" என சொன்னவர், கார் எடுத்துக் கொண்டு வந்தார். அவளும் அதில் ஏறிக் கொண்டு தன் கள்ள காதலனை, ஓர விழியால் பார்க்க, அவனோ உன்னை கொள்ள போறேன் பாருடி எனும் ரீதியில் தான் இருந்தான்.

வண்டி மெல்ல நகர்ந்து கேட்டை தாண்ட அதே நேரம் மித்ரா தேவி அவர்களுக்கு எதிர் புறமாக வர, கணவன் மனைவி இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, மித்ராவின் கண்கள கணவனை ஒரு நிமிடம் அசந்து போய் பார்த்தவள், கூடவே அதில் அவருக்கு பக்கத்தில் இருக்கும் சுடரிகாவை பார்த்தவர், புருவ முடிச்சுடன் கூடிய கோபம் எட்டி பார்க்க,

"என்ன லுக்கு போடி அங்குட்டு" எனும் விதமாய் கெய்யானந்த் அவளை ஏளன புன்னகை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றார்.

"உக்ரன் என்னடா இதெல்லாம்?" வீட்டுக்குள் வந்ததுதான் தாமதம் காட்டு காதலாக கத்தினார் மித்ரா தேவி.

தித்திக்கும்...
 

Author: shakthinadhi
Article Title: அசுரன் 14
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top