New member
- Messages
- 16
- Reaction score
- 1
- Points
- 3
அசுரன் 5
உத்ரானந்த்திடம் பர்மிஷன் கேட்டு குளியலறைக்கு சென்று த்து விடுத்து வெளியே வந்த சுடரிகா அவளது டிராவல் பேக் ஜிப்பை திறந்தால் அதில் மெல்லிய உடலை உருத்தாத வண்ண நீல நிறம் கொண்ட காட்டன் சுடிதார் அணிந்து புறப்பட்டு தயாராகி வெளியே வந்தவளை அங்கு இருப்பவர்கள் எல்லாரும் அவளுக்காக தான் காத்திருப்பார்கள் என்று நினைத்தால் நிச்சயமாக இல்லை. அப்படி ஒருத்தி அந்த வீட்டில் இருக்கிறாளா என்றுதான் அங்கு இருக்கும் அனைவருமே நடந்து கொண்டனர்.
அவள் சாப்பிடுவதற்காக தயங்கிய படியே வந்து டைனிங் டேபிள் முன்னே வந்து நின்றாள். அங்கு உக்ரன் எப்பொழுதோ சாப்பிட்டு சென்றிருப்பான் போல அவன் அரவம் துளியும் அங்கு இல்லை. சுற்றிலும் முற்றிலும் பார்க்க கெய்யானந்த் மட்டும் புறங்கையை கட்டிய படியே சுடரிகா அங்கு நின்றிருப்பதை அவரால் பார்க்க முடிந்தது.
அவரும் அவளிடம் எதுவுமே பேசாமல் அவளின் பக்கத்தில் வந்து நின்று அவளையே மேலிருந்து கீழாக பார்க்க நிச்சயமாக அந்த பார்வையில் எந்த விரசமும் இல்லை ஏதோ அன்போடு பார்த்தபடியே தான் அவளுக்கு தோன்றியது. அவருடைய கனிவான கண்கள் அப்படித்தான் அவளுக்கு எடுத்துரைத்தது.
ஒரு ஆணை பார்த்த மாத்திரத்தில் பெண்ணின் மனதானது ஆணின் பார்வையில் இருந்து எப்படிப்பட்ட பார்வை அது என்று கண்டுபிடித்துவிட முடியும். அப்படியாக தான் அவளுக்கு நன்றாக தெரியவும் செய்தது.
தெரியும் நிச்சயமாக இது தன் கணவனுடைய தகப்பன் என ஏற்கனவே நன்கு தெரிந்தபடியால் அவள் மெல்லியதாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள். அவரோ ஒரு அடி முன்னெடுத்து வைத்து,
"சாப்டியா மா?" என்றார்.
"சாப்டியா மா?" என்ற ஒற்றை வார்த்தையே அவளுக்கு பரிபூரணமாக சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்திவிட்டது. இந்த மாதிரியான வார்த்தைகள் தன்னை யாராவது கேட்க மாட்டார்களா தன் தோழியை தவிர என்று அவளுக்கு மனதிற்குள் ஆயிரம் ஏக்கங்கள் இருக்கும் இப்பொழுது அது ஏதோ கொஞ்சம் மேனும் நிறைவடைந்தது போலவே இருக்க, அவரை ஆசை பொங்க அன்புடன் பார்த்த பெண்ணவளின் மனம் சிறிது பிடிக்கத்தான் செய்தது.
நெடுநாட்கள் கழித்து இல்லை இல்லை, பிறந்ததிலிருந்து சாப்டியா என்று வார்த்தையை கேட்டதும் இல்லை. பழகியதும் இல்லை. கேட்ட மாத்திரத்தில் அவள் கண்கள் கரித்துக் கொண்டு வர அதை உள்ளீழுத்து கொண்டவளும் இல்ல சார் இனிமேதான் சாப்பிடணும் என்றாள்.
"உனக்கு ஆபீஸ்க்கு நேரமாகலையா வா சீக்கிரமா சாப்பிட்டு ஆஃபீஸ்க்கு போவியாம்" என அவளின் கரத்தை மென்மையாக தொட்டு உணவு மேஜையில் உட்கார வைத்து அவரே தட்டும் எடுத்து அவளுக்கு பரிமாறவும் செய்யவதறியாது திகைத்து போனவள் மேலும் அவள் கண்களில் இருக்கும் கண்ணீர் வருவேனா என்று தம்பட்டம் அடிக்குமா என்ன? நிச்சயமாக இல்லை கரித்துக் கொண்டு வந்துவிட்டது.
அவள் அழுகிறாள் என்று கெய்யானந்த்தும் யூகித்து விட்டு உடனடியாக அதற்கு பெரிதாக ரியாக்ஷன் கொடுக்காமல் பொறுமையாக அமைதியாக அவளுக்கு எதிரே போடப்பட்டு இருக்கும் இருக்கையில் அமர்ந்தவரோ,
"அழுகாதமா சாப்பிடு." என்றார்.
தட்டில் இருக்கும் உணவினை ஒன்று விடாமல் சாப்பிட்டு முடித்தவள் தட்டினை கொண்டு போய் சிங்கிள் வைத்து கழுவி வைத்து விட்டு வாயயை துடைத்து விட்டு வெளியே வரும் வேளையில் அவரும் அவளுக்காகவே காத்திருந்தார் போலும் கைகளை கட்டிக்கொண்டு அவளை கூர்மையாக பார்த்தார்.
"ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசலாமா?" என்றார் அவளோ,
"டைம் ஆயிடுச்சு ஆபீஸ்க்கு வேற போகணுமே இவர் சொல்வதை தவிர்க்கவும் முடியாது" என சிந்தனை அவள் மனதில் ஒரு பக்கம் ஓடினாலும்,
"இல்ல பெரியவர் ஒருவர் அவராகவே தாமாகவே முன்வந்து என்னிடம் பேசும்போது பேச மாட்டேன் எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆச்சுன்னு சொன்னா நல்லாவா இருக்கும் என்ன பழக்கம் இது? இதுதான் உனக்கு ஆசிரமத்தில் சொல்லிக் கொடுத்த பழக்கமா?" என அவளுக்கு அவளாகவே சமாதான பேச்சு வார்த்தை நடத்தி முடித்துவிட்டு நொடி பொழுதில் சரி என தலையாட்ட அவரும் அவளை தோட்டத்து பக்கம் அழைத்து சென்றார்.
"கண்ணம்மா!"
"என்ன கண்ணம்மாவா அடடா பெயரே அழகா இருக்கே என்னை யாரும் என்னை இந்த மாதிரி சொல்லி அழைத்ததே இல்லையே" பரவசமாகிவிட்டால் சுடரிகா.
தகப்பன் தன்னிடம் பேசினால் எப்படி இருக்கமோ அப்படி ஒரு புதுவிதமான உணர்வு. தாய் என்றால் என்ன தாய்மையான உணர்வு எப்படி இருக்கும் தகப்பன் உணர்வு எப்படி இருக்கும் என எதுவுமே தெரியாத பெண்ணவளுக்கு இப்படி ஒரு அழைப்பு. பேரை சொல்லிக் அழைக்காமல் எடுத்தவுடன் கண்ணம்மா என்று சொன்னதும் அவளுக்கு உள்ளுக்குள் தித்திப்பாய் இனித்தது.
"உன்னை அப்படி கூப்பிடலாம் தானே?" அவள் அகல கண்களை விழிக்கவும் ஏதோ சொல்லக்கூடாத பெயரை சொல்லி அழைத்து விட்டோமோ என்று கெய்யானந்த் ஒருவித பதட்டத்துக்கு உள்ளாகி பேச,
"அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார் என்னை இப்படியே சொல்லி கூப்பிடுங்க எனக்கு பிடிச்சிருக்கு" என்றாள் அவளும்.
"சரிடாமா நான் சுத்தி வலைச்சு பேச போறது இல்ல. நேரடியா விஷயத்துக்கு வந்துடுற என் மகனை பறத்தி உனக்கு தெரியுமா?"
"தெரியாம என்ன சார் நல்லாவே தெரியுமே. அவர் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் அவரு பிஸ்னஸ்ல பல விஷயங்களையும் சாதிச்சு காமிச்சுருக்காரு. இது எவ்வளவு பெரிய விஷயம் மேலும் அவரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னா அவருக்கு கோபங்கள் அதிகமா வரும் ஆனா அது சடுதியில போயிடும்." இவ்வளவுதான் அவளால் சொல்ல முடிந்தததே தவிர அதற்கு மேல் ஆழ்ந்து போய் எதுவுமே அவளால் சொல்ல முடியவில்லை.
கெய்யானந்த் மூச்சுவிட்டு இதழை வளைத்து சிரித்த சிரிப்பில் ஏதோ தவறாக சொல்லிவிட்டோமோ என நினைத்துக் கொண்டால் பெண்ணவள்.
"ம் ஆபீஸ்ல அவன் நடந்துக்கிற விதத்தை வச்சு அவனுடைய கேரக்டர் ஜட்ஜ்மெண்ட் பண்ணிட்ட ஓகே. பட் அவனுடைய உண்மையான குணம்" அடுத்து அவர் பேச வருவதற்குள்,
"சாரி இடையில பேச்சு நிறுத்துனதுக்கு இந்த ஒரு வருட வாழ்க்கையில அவர பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு எனக்கு பெருசா எதுவும் இல்லையே?" அவள் அவரைவிடவே நேரடியாக பேச்சுக்கு வந்துவிட கெய்யானந்த் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் அவளை பார்த்தார்.
"உண்மைதாமா அவனுடைய குணம் எப்படி அவன் எந்த மாதிரி செய்வான் இத பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு உனக்கு இப்ப உரிமை இல்லை தான் ஆனால் அவன் கட்டின தாலி இன்னும் உன் கழுத்துல இருக்கே. அந்த உரிமை ஒன்று போதுமே அவனை பத்தி நீ தெரிஞ்சுக்க" வார்த்தைகள் ஒவ்வொன்றும் மாயாஜால வித்தைகள் போல இருவருக்கும் மாறி மாறி கிளாஸ் அடித்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சுடரிகா நிதானமாக கண்களை மூடி,
"சார் சாரி நான் ஏதோ பேச போய் ஏதோ ஒரு விதத்தில் முடிந்துவிட்டது. சரி சொல்லுங்க அவர பத்தி முழுசா தெரிஞ்சுக்கிறேன்" அவளாகவே தானாக முன்வந்து கேட்க இதற்கு மேலும் பேசாமல் இருக்க முடியுமா?
"ரொம்ப கோபப்படுவான். தான் நினைச்ச விஷயம் நடக்கலைன்னா அது நடத்துறதுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவான்." ஒரு நிமிடம் சொல்லிவிட்டு அவர் நிறுத்த,
"இதையே தானே சார் நானும் சொன்னேன்" என்றாள் சுடரிகா.
"இருமா நான் இன்னும் பேசவே இல்ல" என்று அவர் ஆரம்பிக்க அவர் பேசட்டும் என மீண்டும் அமைதி காத்தாள் சுடரி.
"கோபப்படுவான், தான் நினைச்சதை அடையறதுக்கு எந்த எல்லைக்கு வேணாலும் போவான். நெக்ஸ்ட் இன்னொரு விஷயம் இருக்கு ஒரு பொருள் அவனுக்கு கிடைத்ததுன்னா அதை எந்த அளவுக்கு யூஸ் பண்ணனுமோ யூஸ் பண்ணுவான். அப்புறமா அந்த பொருள் ரொம்ப பழுதடைந்து போனாலும் சரி பழுதடையாம காலம் முழுக்க அவன் கூட இருக்கணும்னு நினைச்சாலும் சரி அது எப்பொழுதும் அவன் பேணி பாதுகாப்பான். அதை அவன் பயன்படுத்தவே இல்லைனாலும் பத்திரமா அவன்கிட்டையே வச்சுக்குவான். இது வரைக்கும் அவனுக்கு நாங்க சின்ன வயசுலருந்து வாங்கி கொடுத்த திங்ஸ்ல இருந்து இப்ப வரைக்கும் வாங்கி கொடுத்த ஒவ்வொன்னுமே பத்திரமா வச்சிருக்கான். அதை யாருக்கும் கொடுக்கவும் மாட்டான். அது தேவையே இல்லன்னாலும் குப்பையில தூக்கி போடவும் மாட்டான். சோ இதை அவனுக்கு இருக்கிற ஒரு நல்ல குணம்னு எடுத்துக்கலாம் இல்லனா கெட்ட குணம்ணு கூட எடுத்துக்கலாம் இது எதில் போய் முடியும்னு எனக்கே தெரியலமா. ஆனா சில நேரங்கள்ல இது பாதிப்பை ஏற்படுத்தும்னு மட்டும் என்னால புரிஞ்சுக்க முடியுது. அடுத்து அவனுக்கு குடிப்பழக்கமும் இருக்கு உனக்கு தெரியும் தானே?" பீடிகையோடு நிறுத்தியவர் அவர் போட்டிருந்த கண்ணாடியை கழட்டி அவருடைய சட்டையில் துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் மாட்டிக் கொண்டு அவளையே கூர்மையாக பார்க்க,
"குடிப்பாரா?" என்றாள்.
"ஆமா குடிப்பான். குடிச்சா ரொம்ப ரொம்ப நல்லவன் ஆயிடுவான் இவங்க அம்மா இவனுக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கம் எல்லாம் ரொம்ப அபூர்வமானது யாருக்கும் உதவி செய்யாத, யாரையும் மதிக்காத, உனக்கு கீழே இருக்கிறவர்களை துச்சமா நினை, உனக்கு மேல இருக்கிறவங்கள பாத்து நீ அதைவிட மேல வரணும்னு பாரு. உனக்கு சரிக்கு சமமா இருக்கிறவங்களை நட்பு வச்சுக்கோ? இப்படித்தான் அவன் அம்மா சொல்லிக் கொடுத்திருக்கா. பணம்... பணம்... பணம்... பணத்துக்கு பின்னாடி தான் உன்னுடைய எண்ணங்கள் போகணும்னு சொல்லி கொடுத்திருக்கா. அப்போ என் பையன் எப்படி இருப்பான் நீயே சொல்லுமா? ஆனா குடிச்சா மட்டும் என்னை மாதிரி ஆகிடுவான் போல தெரியுது. அவன் ரொம்ப நல்லவன் ஆயிடுவான் யாருக்கு வேணாலும் ஹெல்ப் பண்ணுவான். என்ன வேணாலும் செய்வான். அப்படி ஒரு நல்லவன் அவனிடம் இருக்கு. இதை உன்கிட்ட நான் சொன்னதுக்கான காரணம்" என அவர் சொல்லிவிட்டு நிறுத்த,
"புரியுது சார் அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இத நான் தெரிஞ்சு வச்சுக்கணும் கரெக்ட்டா? இந்த ஒரு வருட காலம் மட்டும். புரியுது சார் ஒரு வருட காலத்துல இதை நான் மேனேஜ் பண்ணிக்கணும். புரிஞ்சிருச்சு" மிகவும் அவள் அறிவு பூர்வமாக பேசிவிட்டு அந்த இடத்திலிருந்து எழும்போது,
"அப்போ அவன் கிட்ட இன்னும் நீ உன்னுடைய காதலை சொல்லவே இல்லையா? சொல்லி முடித்து அவர் நிறுத்த, அவளுக்கு பகீரென தூக்கி போட்டது.
"காதலா எப்படி இவருக்கு தெரியும்?" படபடவென இதயம் அடித்துக் கொள்ள திரும்பி பார்த்தவள் கண்கள் அகல விரிந்து அவரையே பார்த்திருக்க அவரும் மீண்டும் கொஞ்சம் சத்தமாக சிரித்துவிட்டு மருமகளின் பக்கத்தில் வந்து நின்றவர்,
"எனக்கு எல்லாம் தெரியும். உன் காதலை சொல்லவே கூடாதுன்னு முடிவு பண்ணி வச்சுருக்கணும் எனக்கு தெரியுமா. ஆனா ஒன்னு என் பையனுக்கு உன்னை விட வேற ஒரு பொண்ணு கிடைக்க மாட்டா. அப்படியே அவன் தவற விட்டான்னா அவன் துரதரஷ்டசாலி" அவளின் கைகளை எடுத்து தன் உள்ளங்கைகள் வைத்து அழுத்தியவர்,
"உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கும். இருக்கணும் " என அவர் தலையில் ஆசீர்வதித்து விட்டு உள்ளே போக அவளுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை.
"காதல் காதல் அது எப்படி இவருக்கு தெரியும்" மனம் குழம்பி போய் அவள் நெஞ்சம் படபடக்க அதே இடத்தில் சிலையாக நிற்க அவளுடைய மொபைல் போன் அடித்தது.
"ஹலோ?"
"ஏன் மகாராணி வரதுக்கு தனியா ஸ்பெஷலா கார் அனுப்பனுமோ? அப்பதான் ஆபீஸ் வந்து சேருவியா? மணி பத்தாச்சு இன்னும் ஆபீஸ் வந்து சேரல? உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்க? தாலி கட்டிட்டேங்கிறதுக்காக காரணத்துக்காக நீ என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைச்சுட்டியா காலையில தானே சொன்னேன் என்னய கல்யாணம் பண்ணிக்கிட்டதனால அட்வான்டேஜ் எதுவும் எடுத்துக்க கூடாதுன்னு, ஆனால் அதை இப்ப நீ ஒவ்வொரு முறையும் பயன்படுத்தலாம்னு முடிவு பண்ணி இருக்கியா? இடியட் இன்னும் பத்து நிமிஷத்துல நீ ஆபீஸ்ல இல்ல உன் சீட்ட கிழிச்சு கைல கொடுத்துடுவேன் முதல்ல ஆஃபீஸ்க்கு வந்து சேரு" கடுகடுவென கம்பீரமாக ஒலித்த அந்தக் குரலில் துணுக்குற்று போனவளோ அதற்கு மேலும் யோசனைகளுக்கு இடம் கொடுக்காமல் வேக வேகமாக அவளது கைப் பையை எடுத்துக் கொண்டு தெருவில் வந்த ஆட்டோவை பிடித்த அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
அசுரன் தொடர்வான்...

Author: shakthinadhi
Article Title: அசுரன் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.