Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
276
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 63

"அம்மாடி இந்தா இதை சாப்ட்டு தூங்கு.." வள்ளி உணவோடு வந்து எழுப்ப, உறக்கக் கலக்கத்தில் இருந்த கவிக்கு பசி எங்கே இருந்தது.

"இல்ல க்கா.. எனக்கு வேண்டா பசி இல்ல, தூக்கம் வருது" உண்ண மறுத்தவளை ஆத்வியின் பேரை சொல்லி, அதட்டி உருட்டி உண்ண வைத்ததும் வள்ளி சென்றிட, உறக்கம் தொலைந்து ஆத்வியின் நினைவில் வெறுமுனே கண் மூடி படுத்திருந்தாள் கவி.

நேரம் செல்ல செல்ல கோவித்துக்கொண்டு வெளியே சென்றக் கணவன், இன்னும் வீடு வராமல் இருப்பது வேறு பயத்தை உண்டு செய்தாலும், 'ஒருவேளை தான் உறங்கிய நேரத்தில் வீட்டிற்கு வந்து வேறு அறைக்கு சென்றிருப்பானோ' என்ற எண்ணத்தில் ஒவ்வொரு அறையாக திறந்துப் பார்க்க, காலியான அறையே அவளை வரவேற்றதில் ஏமாற்றமாக கூடத்திற்கு வந்த கவி, வாயிலையே வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் கண்ணில் பட்டாள் ஹரிதா.

"என்ன பொண்ணோ இவ, ஆத்வியோட குழந்தைய நான் என் வயித்துல சுமக்குறேன்னு தெரிஞ்சும், அவனை விட்டும் அவன் வாழ்க்கைய விட்டும் போகாம, என் வாழ்க்கைய கெடுத்து நாசம் பண்ணி ஆத்வியோட குடும்பம் நடத்திட்டு இருக்கா..

ஆத்வி ஆம்பள ஆயிரம் சொல்லுவான், எனக்கும் அவனுக்கு ஒரு சம்மதமும் இல்ல, என் வயித்துல உள்ள குழந்தை அவனோடது இல்ல அப்டி இப்டினு.. ஒரு பொண்ணு கூட பழகி கல்யாணம் வரை வந்து அவளை ஏமாத்தி இருக்கான்னா அவன் எப்பேர்ப்பட்ட பிராடா இருக்கனும்..

ஆனா இவளுக்கு தான் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையே, அவன் எப்படி இருந்தா என்னனு வசதியா வாழ ஆசைபட்டு, இன்னொருத்திய விரும்பி அவக்கூட கல்யாணத்துக்கு முன்னவே வாழ்ந்தவன வளைச்சி போட்டு இல்ல வாழுறா, அனாதை கழுத.." போனில் தந்தை லிங்கத்தோடு பேசிக் கொண்டிருந்த ஹரிதா, கவியைப் பார்த்ததும் அவள் மனதை கலைக்க ஒரு வழியாக அப்படியே பேச்சை மாற்றி இருந்தாள்.

இது அறியா கவியோ அவளையும் வாயிலையும் சோகமாக பார்த்திருக்க, அவள் முகம் நேரம் ஆக ஆக மாறுவதை கண்டு உள்ளுக்குள் குதூகலித்த ஹரிதாவோ, திருட்டுத்தனமாக கணவன் மனைவியின் ஊடலை ஒட்டுக்கேட்டதன் விளைவால், கவிக்கு ஆத்வியின் மீது நம்பிக்கை இல்லை என்பதை அவர்கள் பேசிக் கொண்ட விதமே வெளிச்சம் போட்டு காட்டிக் கொடுத்திட. அதையே தனக்கு சாதகமாக வைத்து, கவியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடலாம் என்ற எண்ணத்தில், அவளாகவே கதைதிரித்து காய் நகர்த்த திட்டமிட்டாள் போலும்.

"எந்த குறையும் இல்லாத என்னையே யூஸ் அண்ட் த்ரோவா அனுபவிச்சி தூக்கி எறிஞ்சவன், காது கேக்காத செவிட்டு கழுதைய வந்த வரைக்கும் லாபம்னு நல்லா அனுபவிச்சிட்டு, ஒருநாள் கசக்கி குப்பைல எறிய தான் போறான்.."

ஏலனம் மின்னும் விழிகளால் கவியை கண்டு, வன்மமாக வாய்க்கு வந்தவற்றை பேசும் போதே, டீப்பாயில் கழட்டி வைத்திருந்த ஹியரிங் மெஷினை எடுத்து கவி காதில் மாட்டியதை பார்த்த ஹரிதாக்கு கண்முழி பிதுங்கிப் போக, 'அப்போ இவ்ளோ நேரம் நான் பண்ண பெர்ஃபார்மென்ஸ் எல்லாம் வெஸ்ட்டா..' என்று நினைத்தவளுக்கு புஸ்சென்று ஆகி விட்டது.

கண்ணாடியை சரி செய்தபடியே எழுந்து ஹரிதா முன்பு வந்து நின்ற கவி, "என்ன என்னையே பாத்து ஏதோ முணுமுணுன்னு வாயசச்சிட்டு இருந்த, உன்ன தான் என் புருஷன் ரூம் விட்டு வெளிய வரக் கூடாதுனு சொல்லி இருக்காருள்ள.. அப்புறம் என்ன நைட் நேரத்துல பேய் மாறி சுத்திட்டு இருக்க..

அப்புறம் ஃபோன் கட்டானது கூடவா தெரியாம பைத்தியமாட்டம் தனியா பேசிட்டு இருப்ப, என்ன உனக்கும் காது பீஸ் போயிடுச்சா.." கைக்கட்டி நக்கலாக கேட்ட கவி, ஹரிதாவின் செவிமடல் பட்டு அழைப்பு துண்டித்து போனதை, வந்ததும் கவனித்து விட்டு தான், இவள் என்ன லூசா என்பது போல பார்த்தது. அது தெரியாத ஹரிதா பல்பு வாங்கி விட்டாள் கவியிடம்.

"ஹேய்.. என்ன என்னையே முறைச்சி பாத்துட்டு நிக்கிற, உள்ள போ.." கவி அதட்டல் விடுக்கவும், மேலும் முறைத்த ஹரிதா,

"எல்லாம் என் நேரம் டி, அதான் புள்ளபூச்சி எல்லாம் என்ன அதட்டி விளையாடுது.. பாக்குறேன் இந்த அதட்டல் உருட்டல் எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு.." மனதில் கருவியபடி அவள் சென்ற நேரம், தளர்ந்த நடையோடு மிகவும் சோர்வாக உள்ளே வந்தான் ஆத்விக்.

"மாமாஆ.. வந்துடீங்களா.." அவனை கண்டதும் உற்சாகமான கவி, ஓடி சென்று கட்டிக்கொண்டதும், கடுங்கோபத்தில் அவள் தோள் பிடித்து இழுத்து தள்ளிட, ஆஆ.. என்ற மெல்லிய முனகலோடு கீழே விழாமல் மேஜையை பிடித்து தள்ளாடி நின்றவளை கூட காணாது, வேகமாக படிகளில் ஏறி அறைக்கு சென்று விட்டான்.

ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்து வேதனையாக போகும் கணவனைக் கண்டவள், அவன் கோபத்தையும் தாண்டி ஏதோ ஒன்று நெஞ்சை பிசைய, இந்த கோபம் கூட விசித்திரமாக படவே எதையும் யோசிக்காமல் அவன் பின்னே ஓடிய கவி,

"மாமா.. ஏன் இவ்ளோ கோவமா இருக்கீங்க, என்கிட்ட கோச்சிக்கிட்டு போகும் போது கூட இவ்ளோ அதிகமான கோவம் இல்லையே, என்னாச்சி மாமா.." வேக மூச்சிகள் எடுத்து புஜங்களும் மார்பும் திமிறிப் புடைத்து நிற்கும் அவன் தோரணையே மிரள வைப்பதாய் இருக்க, ஆத்வி அருகில் செல்ல பயந்து ஐந்தடி இடைவேளையில் நின்றபடியே, ஆராயும் பார்வையால் அவனை துளைத்து எடுத்தாள் கவி.

பதிலேதும் சொல்லாமல், எங்கோ ஒரு மூலையை வெறித்தபடி வெறித்தனமாக நின்றவன், "தேவை இல்லாத கேள்வி கேக்குறத நிறுத்திட்டு, சீக்கிரம் உனக்கு தேவையான திங்ஸ எடுத்து வச்சிட்டு படு, காலைல ஊருக்கு போகணும்.." இயந்திரமாக கூறிவிட்டு குளியலறை நோக்கி செல்லப் போனவன் முன்பு, ஓடி வந்து நின்ற கவி,

"என்னாச்சி பாவா, ஏன் டெரிபுலா பிஹேவ் பண்றீங்க, நான் பண்ணது தப்புதான் உங்கள புரிஞ்சிக்காம முட்டாள்த்தனமா பேசி உங்க மனச காயப்படுத்திட்டேன்.. அதுக்கு என்கிட்ட சண்டை போட்டு ஒரு நாலு வார்த்தை பேசிடுங்க பாவா..

ப்ளீஸ் இப்டி யாரோ மாறி ட்ரீட் பண்ணாதீங்க, என்னால தாங்கிக்க முடியல.." கலங்கிய கவி மீண்டும் அவனை அட்டை போல் கட்டிக் கொள்ளவும், ஸ்ஸ்.. என்ற முனகலோடு கட்டிய வேகத்தில் மீண்டும் அவளை பிரித்து தள்ளிய ஆத்வி,

"ஏய்ய்.. உனக்கு ஒருமுறை சொன்னா புரியாது.. அதான் பேசப் புடிக்காம ஒதுங்கி போறேன்ல, திரும்பத் திரும்ப வந்து ஒட்டிக்க பாக்குற.. ஒழுங்கா உன் வேலைய பாத்துட்டு போடி, வந்துட்டா பெருசா அக்கறை உள்ள பொண்டாட்டியாட்டம்..

கல்யாணம் பண்ண நாளுல இருந்து ஒன்னு தூங்குற, இல்ல திங்குற, இது ரெண்டை தவிற வேற என்ன டி எனக்காக நீ செஞ்சிருக்க.. முதல்ல உன் வேலைய நீ சரியா செஞ்சிக்குறியா, சுத்த வேஸ்ட்டு டி நீ, ஒரு வேலைக்கு புண்ணியம் இல்ல..

போ அப்டி.." காட்டுக்கத்து கத்தி விட்டு குளியல் அறைக்குள் புகுந்து கதவை அறைந்து சாற்றவும், சிலையாக நின்றவள் கண்கள் குளம் கட்டி, கண்ணீர் கரை ப்ரண்டோடியது.

உள்ளே வந்த ஆத்வி, தலையில் பட்பட்டென அடித்துக்கொண்டவனாக, அதே கையை வாயில் வைத்து ஆஆ... என சத்தம் வராமல் பற்கள் பதிய அழுத்தமாக கடித்துக் கொண்டவனது நெஞ்சில், மனவலியோடு சேர்த்து கண்ணாடி சில்லுகள் கண்ட மேனிக்கு, ஆழமாக குத்திக் கிழித்திருந்த வலி, உயிர் போனது.

நெஞ்சை சுற்றிலும் புதிதாக போடப்பட்டிருந்த கட்டுடன் சட்டையை கழட்டி விட்டு நிலைக்கண்ணாடியினூடே பார்த்தவனுக்கு, சற்று முன்பு நடந்த நிகழ்வுகள் யாவும் கண்ணாடியில் படமாக ஓடியது.

வள்ளியிடம் பேசி விட்டு அழைப்பை துண்டித்து தெருவிளக்குகள் இல்லாத அந்த நெடுஞ்சாலையில் காரை திருப்பப் போனவன், ஏதோ ஒரு பெரிய உருவம் தன்னை நோக்கி வருவதை போலிருக்கவே கூர்ந்து கவனிக்க, கிட்டே வரவர தான் தெரிந்தது அது ஒரு ட்ரக் லாரி.

அனைத்து விளக்குகளையும் நிறுத்தி விட்டு இருட்டில் வருகிறது என உணர்ந்துக் கொண்ட நேரம், மின்னல் வேகத்தில் வந்த லாரி அவன் காரை மோதியதில், கார் கண்ணாடிகள் சலசலவென பலத்த சத்தத்துடன் சிதறி உடைந்ததும் இல்லாது, கார் சாலையில் தேய்த்தபடியே மரத்தில் மோதி முன்பக்கம் நொறுங்கி முட்டுவதற்கு முன்னவே, கார்கதவை திறந்துக் கொண்டு சாலையில் குதித்து விட்டவன் நெஞ்சி முழுக்க ரணமாகி, குருதியோடு மண்ணில் புரண்டு துடித்துப் போனான் ஆத்வி.

இடித்து சென்ற லாரிக்காரனோ தீபக்கின் உத்தரவுபடி, ஆத்வி இறந்து விட்டானா என உறுதி படுத்திக் கொள்வதற்காக சிறிது நேரம் கழித்து லாரியை விட்டு இறங்கி, நசுங்கிக் கிடந்த காரை யோசனையாக சுற்றி சுற்றி வந்து ஆத்வியை தேட, அவன் அதில் இருந்தால் தானே கண்ணில் படுவான்.

ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்தவன் கழுத்து மடக்.. என முறியும் சத்தம். "கூலிக்கு எச்ச பொறுக்குற நாயே.. அந்த தீபக் ராஸ்கல் அனுப்பினானா உன்ன.." பற்களை கடித்தவன் அவன் விலாவில் தொடர்ந்து குத்து விட,

உஃப்.. உஃப்.. என்ற சத்தத்துடன் ஆத்வியிடம் இருந்து திமிரிய லாரிக்காரன், அவன் உடும்பு பிடியில் இருந்து வெளிவந்தவனோ பார்க்கவே பைல்வான் போன்ற பயங்கரமான தோற்றத்தில் இருந்தான்.

புஜத்தை உதறி கழுத்தை முறித்துக் கொண்டவன், "வாங்குன காசுக்கு விசுவாசமா நடந்துக்குறது தான் என் வேலை, அதனால உன்ன கொல்லாம விட மாட்டேன் டா.."
யானை போல் புழுதி பறக்க ஓடி வந்து ஆத்வியை முட்ட வர, சுதாரித்து நகர்ந்து நின்றவன் குனிந்து பைல்வானின் காலை பிடித்து இழுக்க, குப்புற விழுந்த கும்கியாக மீண்டும் எழுந்தவன், ஆத்வியை சுருட்டிப் பிடித்துக் கொண்டு, தன் பின்னால் இருந்த கத்தியை உருவிக் குத்தப் போக,

அவன் இடையில் ஓங்கிக் குத்திவிட்டு ஆத்வி நகர்ந்துக் கொள்ளவும், அந்த கத்தி மண் தரையில் சொருகி நின்றது.

நொடியில் அதனை பிடுங்கிய ஆத்வி, ஆஆஆ.. என்ற கத்தலுடன் ஒரே துண்டாக பைல்வானின் தலையை வெட்டி, தூர எறிந்திருந்தான்.

குருதி தெறித்த முகம் விகாரமாக காட்சியளிக்க, தலை தனியாக முண்டம் தனியாக இருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, நடந்தே அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்ற ஆத்வி, வரும் வழியிலேயே தன் பிஏவிற்கு அழைத்து விபரங்கள் சொல்லி, பைல்வானை சுத்தம் செய்து விட்டு தனக்கும் மாற்றுடை எடுத்து வர கூறி இருந்தான்.

கண்கள் மூடி நடந்த காட்சிகளை கண்டவனுக்கு தீபக்கை கொல்ல சிறிது நேரம் கூட பிடித்திருக்காது, இருந்தும் அவன் தந்தை ரோஹித்தை விட கேவலமான கொடூர மிருகம் இல்லை அவன் என்ற ஒற்றை காரணத்தினால், அவனை விட்டு வைத்திருப்பவனுக்கு தெரியாதே, அவன் அன்னை தான் தன் குடும்பத்தையே கொன்று சிதைத்த மிருகம் என்று.

யாரை மனிதாபிமானம் அடிப்படையில் கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறானோ, அவனால் மிகப் பெரிய கொடிய ஆபத்து நேரவிருப்பத்தை அறியாத ஆத்வி, முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்தவன் கண்டதோ, கலங்கிய கண்களுடன் கையில் உணவு தட்டோடு தலை குனிந்து நின்றிருந்த மனைவியை தான்.

சற்று நேரத்திற்கு முன் அத்தனை கடினமாக அவன் திட்டி விட்டு சென்றது, மனதை மிகவும் காயப்படுத்தியது என்னவோ உண்மை தான். ஆனால் அதையும் தாண்டி அதில் உள்ள நிதர்சனமும் புரிந்துக் கொண்ட கவி, 'கணவனே வாய் திறந்து சொல்லும் அளவிற்கு, கேவலமாக செல்லம் கொஞ்சி நடந்துக் கொண்டுள்ளோம், உறங்கியும் தின்றுமே நேரத்தை கழித்துள்ளோமே..

ஒரு மனைவியாக இதுவரை உணவருந்தி விட்டாயா என்று கூட கேட்டதில்லை..' ஆனால் அவனோ ஒவ்வொரு இடத்திலும் தன் தேவை என்ன என்பதை நன்கு அறிந்து வைத்து, பிரஷில் பேஸ்ட் வைத்துக் கொடுப்பதில் இருந்து, முகம் கழுவி விட்டு சில நேரங்களில் குளிக்கவும் ஊற்றி, சிக்கல் முடியை அவனுக்கு தெரிந்ததை போல் வாரி, உணவூட்டி விட்டு, இரவு துயில் கொள்ளும் போதும் குழந்தை போல் நெஞ்சில் போட்டு தட்டி உறங்க வைப்பான்..

அவ்வப்போது கணவனுக்கே உரிதான உரிமையான குறும்புகளையும் பெண் தேகத்தில் நிலைநாட்டி, மென்மையில் தேன் உறுஞ்சி, கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து குழந்தையை விட மிக கவனமாக பார்த்துக் கொண்டான்..

ஒவ்வொரு தீண்டலிலும் மென்மை மென்மை மென்மை மட்டுமே.. உடலுறவின் போது கூட மற்ற அனைத்து பாகங்களிலும் சற்று வன்மையாக கையாலுபவன், கவியே ஆச்சிரியம் கொள்ளும் அளவிற்கு, அவள் பெண்மையை மட்டும் அத்துனை மிருதுவாக கையாலுவான்.

அவள் பெயர்களையோ தோணும் போதெல்லாம் கவிஇ.. நருஊ.. பேபிஇஇ.. என ஒவ்வொரு விதமான ராகம் இழுத்து, கண் சொக்கி பாவையின் நெஞ்சணையில் விழுந்து சேட்டைகள் செய்பவனை, வெட்கம் கொண்டு ரசித்து முத்தமிட்டு மார்போடு இறுக்கிக் கொள்வாள் பேதை.

அந்நினைவலையில் மூழ்கி கலங்கிய விழிகளோடு தரை நோக்கியபடி நிற்பவளை, வருத்தமாக கண்டவன் அமைதியாக அவ்விடம் விட்டு கடக்கப் போக,

"சாப்ட்டு படுங்க மாமா, அதுக்கு மேல நான் உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்.." அவன் கால் நகர்வை வைத்தே தொண்டை அடைக்க சொன்ன கவி, அவனிடம் தட்டை நீட்டவும், அவளின் பாராமுகம் இதயத்தை குடைந்து காயம் கொள்ள வைத்தாலும், நெஞ்சி முழுக்க ரத்தக்கிளரியாக இருக்கும் இந்த நேரத்தில், அவளிடம் இறங்கி செல்ல நினைக்காமல், மனைவி கொடுத்த உணவை வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டான்.

மெத்தையில் தனியாக படுத்துக் கால்களை சுருக்கிக் கொண்டவளுக்கு, மனம் முழுக்க கணவனின் அருகாமையில் ஏங்கி உருகியது. அவன் உடல் சூடு இல்லாமல் உறக்கம் வருவேனா என்று அலைக்கழைத்த நிலையில்,

இனி வரும் நாட்களில் அவன் சுட்டிக்காட்டிய தவறுகளை எல்லாம் திருத்திக் கொண்டு, கணவனின் எதிர்பார்ப்புகள் என்னவென அறிந்துக் கொண்டு, அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்துக் கொடுக்க வேண்டும் என மனமார நினைத்தவளுக்கு, சமையலைப் பற்றி சிந்திக்க தான் தலை சுற்றிக் கொண்டு வந்தது.

"ஒரே நாள்ல எப்டி சமைக்க கத்துகிட்டு என் புருஷன மயக்குறது" அவள் மூளை தீவிரமாக யோசிக்க,

'நீ சமைக்க போறேன்னு மட்டும் சொல்லு, தானா உன் புருஷன் மயங்கி விழுந்துடுவான்..' சரியான நேரத்தில் பங்கம் பண்ணியது அவள் மனச்சாட்சி.

"ஏய்.. ச்சீ.. போ.." என சிரித்துக் கொண்டிருந்த மனசாட்சியை துரத்தி விட்டவள்,
"அச்சோ கடவுளே என் மனசாட்சியே என்ன கிண்டல் பண்ணி காலவாரிட்டு போகுதே, நான் எப்டி சமைக்க கத்துக்கப் போறேனோ.. ஆமா நாளைக்கு என்ன சாப்பாடு மாமாக்கு செஞ்சி கொடுத்து அசத்தலாம்.." என்ற யோசனையில் படுத்திருந்தவளின் மென்வயிற்றில் அழுத்தமாக கரம் பதியவும், இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

"என்ன டி கோவமா இருக்கியா.." சூடான மூச்சிக்காற்று அவள் பின்னங்கழுத்தை உரசியதில் பிடரிமையிர் நட்டுக் கொண்டது கவிக்கு. அவன் புறம் திரும்பாமலே இல்லை என மெல்லமாக தலையசைத்தவளுக்கு ஏனோ கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

"அப்புறம் ஏன் அந்த பக்கம் திரும்பி படுத்திருக்க.." இத்தனை நேரம் அவளிடம் வீம்புக்கென கத்தி விட்டு சென்றவனுக்கு காயம் தந்த வலியை விட, அவளின் சிறிது நேர பிரிவை கூட தாங்கிக் கொள்ள முடியவில்லையே!

"இ.இல்ல சு.சும்மா தான், நீங்க தூங்கலையா.." என்றவள் அவன் பக்கம் திரும்பிடவில்லை.

"நீ இல்லாம தூக்கம் வரல பேபிஇ.." யோசனையின்றி சட்டென வந்தது பதில். தன்னவன் வார்த்தையில் மனம் முழுக்க குளிர்சாரல் பரவ, இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டாள் கவி.

"ஏதோ டென்ஷன்ல கோவமா பேசிட்டேன், அதுக்காக இப்டி சோகமா இருந்தா நல்லதா டி, உன் முகத்துல சிரிப்ப பாக்கலைனா எதையோ இழுந்த மாறி இருக்கு அம்மு.." என்றவன் அவள் முகம் திருப்பி நெற்றியில் முத்தம் வைக்க, கண்மூடி அவன் முத்தத்தை இன்பமாக பெற்றுக் கொண்டவளுக்கு அந்நேரம் பார்த்து புன்னகையே தோன்றவில்லை.

"அதான் மன்னிப்பு கேட்டுட்டேனே பேபிஇ.. இன்னும் ஏன் முகம் உம்முனு இருக்கு, சிரி டிஇ.." என்றான் வண்ணமுகத்தை ஆழ நோக்கி.

"திடீர்னு சிரினா எப்டி சிரிக்க, நான் சாதாரணமா தான் இருக்கேன், ஆனா நீங்க தான் என்னவோ போல இருக்கீங்க.. என்னென்னவோ பேசிட்டீங்க.. பேச புடிக்கலைனு சொன்னீங்களே, இப்ப மட்டும் மட்டும் பிடிக்குதாக்கு.." அவன் பக்கம் இருந்த முகத்தை மீண்டும் சிலுப்பி திருப்பிக் கொண்டாள்.

கணவன் மனைவியின் ஊடல் எல்லாம் கடலில் அடித்து செல்லும் குப்பைகள் போன்றது. தேவையானவற்றை மட்டுமே தரம் பார்த்து பிரித்து கடலுக்கடியில் புதைத்து, பொக்கிஷமாக வைத்துக் கொள்ளும். அதே கடல் அலைகள் தான் ஒன்னுதுக்கும் உதவாத தேவையற்ற குப்பைகளை கரையில் அடித்துக் கொண்டு தள்ளி விடும்.

காதல் கொட்டிக் கிடக்கும் மனங்களுக்கும் இப்படிதான். இருமனங்களும் ஒன்றோடு ஒன்றிணைந்த கணவன் மனைவி சண்டைகள் யாவும், காரணமின்றி வரும், ஏன் சண்டை வந்தது என்று யோசிக்கும் முன்பே வந்த சண்டை தடம் தெரியாமல் தானாகவே ஓடி ஒளிந்து விடும். இருவரின் புரிதலிளும், விட்டுக்கொடுக்கும் தன்மையிலும்.

"அதான் சொல்றேனே கவிஇ.. டென்ஷன்ல எனக்கே தெரியாம ஏதேதோ சொல்லிட்டேன், இதனால நீ எவ்ளோ ஃபீல் பண்ணுவேன்னு என்னால புரிஞ்சிக்க முடியிது டி.. அதுக்காக நீ வேணா ரெண்டு அடி கூட என்ன அடிச்சிக்கோயேன், அத விட்டு அழகு முகத்தை மந்தி மாறி வச்சிருக்காத டி பாக்க சகிக்கல.." வேண்டுமென்றே முகத்தை சுளிக்கவும், சூறாவளியாக அவன் பக்கம் திரும்பிய கவி,

"அப்போ என்ன குரங்குனு சொல்றீங்களா.." என்றவள் செல்ல முறைப்போடு அவன் மார்பின் மீது குத்தவும், ஆஆ.. என்று சத்தமாக அலறி விட்டான் ஆத்வி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 63
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top