- Messages
- 278
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 10
கார்முகில்களில் இருந்து நீரானது துளிகளாக வந்து பின் திவலைகளாக மாறி அது வேகமெடுத்து மழையாக சிலென்று பூமியில் பொழிந்து கொண்டு இருக்கும் அதன் அழகை ரசிக்க மனமில்லாமல்..
மழைக்கு போட்டியாக முல்லையின் கண்களில் நிரம்பி வழியும் கண்ணீருடன் அதை வெறித்தபடி, "ஒரே ஒரு நாளில், அதுவும் இதே போன்ற 'ஒரு மழை நாளில்' தன் வாழ்க்கை மொத்தமாக தலைகீழாக மாறிவிட்டைதை எண்ணி, அந்தனை குளிரின் ஏகாந்தத்திலும் அவள் உள்ளம் மட்டும் உலைக் கனளாய் கொதித்து மௌனமாய் கதறி கொண்டு இருந்தது..
அரவிந்த் ஒருக்களித்து படுத்து, தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் அவன் மனகண்ணில் ஓட்டி பார்த்து வேதனை பட்டவன், இப்போது அவன் முல்லையின் கழுத்தில் தாலி கட்டியது, அவள் அவனுக்கு காரத்தை கொடுத்து பின் அவளே அவள் உதட்டின் மூலம் காரத்தை போக்கியது, இன்று அவள் அவன் வீட்டில் இருப்பது வரை நினைத்துப் பார்த்து இன்னும் என்னெல்லாம் என் வாழ்வில் நடக்க காத்திருக்கோ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்...
அப்போது டாதி.. டாதி.. கத்திக் கொண்டே அனுஸ்ரீ துள்ளி குதித்து குஜாலாமாக ஓடி வந்து, அரவிந்த் படுக்கை மேல் ஏறி குதித்து கத்த..
"ஹே..பாத்து ஸ்வீட்டி,, இன்னைக்கு என் ஸ்வீட்டிக்கு என்னாச்சி, இவ்ளோ ஜாலியா இருக்கீங்க",, என்று கேட்டுக் கொண்டே அரவிந்த் மெல்லிய புன்னகையுடன் மெதுவாக எழுந்து அமர்ந்தான்.
அவன் கேட்டது தான் தாமதம், உடனே தாவி அவன் கழுத்தை கட்டிக் கொண்ட அனு, "அது டாதி.. உங்கதுக்கு ஒன்னு தெதியுமா, எனக்கு புதுசா நீயு பிரண்ட் கிதச்சிட்டாங்க" கண்களை உருட்டி, மழலை மொழியில் அழகாக சொல்ல..
"ஓஹ்.. நீயு பிரண்ட்டா.. அது யாரு டாடிக்கு தெரியாத நீயு பிரண்ட்".. அரவிந்த் குழந்தையின் முதுகை தடவியவாரு மென்மையாக கேட்டான்.
"என்ன டாதி அதுகூதவா உங்கதுக்கு தெதியல.. நீங்க நம்ப வீத்துக்கு ஒருத்தவங்கள கூத்தித்து வந்திங்களே அவங்கதா.. அனு சொல்ல..
அனு யாரை சொல்கிறாள் என்று இப்போது தெளிவாக அவனுக்கு புரிந்து விட.. அவன் முகம் தானாக இறுகியது.
வரவழைக்கப் பட்ட புன்னகையுடன்
"ஓஹ்.. அவங்களா" என்றான் சுரத்தே இல்லாமல்.
"ஆமா டாதி, அவங்க எனக்கு பிடிச்ச ஸ்டோரி எல்லாம் சூப்பதா சொன்னாங்க, நறியா பாட்டு பாடி காத்துனாங்க, எனக்கு அவங்கள ரொம்ப பிதிச்சி போச்சி, அப்புதம் எனக்கு இங்க இங்க இங்க என இரு கன்னங்கள் மற்றும் நெற்றியை காட்டி முத்தாலாம் குடுத்தாங்க தெதியுமா டாதி", முகம் கொள்ளா புன்னகையுடன் மகிழ்ச்சியாக அனு சொன்னதை கேட்ட அரவிந்த் முகம் காத்து போன பலூனை போல சுருங்கி போனது...
அவனுக்கு இருக்கும் ஒரே ஒரு ரத்தபந்தம் அனு மட்டுமே, பிறந்தது முதல் அவன் மட்டுமே உலகம் என்று அவனை ஒரு நொடி பிரியாமல், டாதி டாதி என்று மழலையில் அவனிடம் கொஞ்சிவிளையாடி, சிரித்து பேசிக் கொண்டு இருந்தவள்..
இன்று வேறு ஒருத்தியை பற்றி, அதுவும் வந்த ஒரே நாளில், யாரென்று கூட தெரியாதவளை உரிமையாக புகழ்ந்து பேசி மகிழ்ச்சியாக இருப்பது ஏனோ அனு அவன் கையை விட்டு விலகுவதை போல உணர வைத்தது.
காரணமே இல்லாமல் அவன் மனதில் பயம் தொற்றிக் கொள்ள, அடுத்து அனு சொன்னதில் அரவிந்துக்கு எங்கிருந்து தான் அத்தனை கோவம் வந்ததோ!.
"ஷட் அப், அனுஉஉஉ..." என்று அந்த அறையே அதிரும் வகையில் கத்த... பாவம் சிறு குழந்தை அவன் கத்திய கத்தில் பயந்து அழ ஆரமித்து விட்டது... அது எதுவும் அவன் கருத்தில் பதியாமல் அவள் சொன்ன அந்த விடயமே அவன் மூளையை மழுங்க செய்து இருக்க.. "அனு இங்கருந்து மொத உன் ரூம் போ", ஆத்திரம் மேலோங்க மேலும் கத்தி விட்டான்.
குழந்தையின் அழுகையில் ஹாலில் இருந்த பாட்டி பதறி விட்டார். வேலையாட்கள் எல்லாம் அவன் கோவம் பழகிய ஒன்று தான் என்பது போல அங்கேயே இருந்து தவிப்புடன் அந்த அறையினை பார்த்துக் கொண்டு இருக்க.. ஆனால் பாட்டிக்கு மட்டும் அரவிந்தின் கோவம் எதற்கானது என்று தெரிந்து அமைதியாக, இருந்து விட்டார்..
அதுவரை, வெளியே நின்று மழையை வெறித்துக் கொண்டு இருந்த முல்லை, அரவிந்தின் கோவம் மொத்தமும் அவள் மேல் தான் என்று எதுவும் தெரியாமல்,, அனு அழுகையில் என்னவோ ஏதோ என்று பதறி அவன் அறைக்கு ஓடி வந்து பார்க்க.. முல்லையை அங்கு அனு பார்த்ததும், அரவிந்திடம் இருந்து "அம்மாஆஆ"..என்று அழைத்து அழுதுக் கொண்டே குடுகுடுவென ஓடி வந்து முல்லையின் கால்களின் நடுவில் முகத்தை புதைத்து கட்டிக்கொண்டது.
அனு, அம்மா என்று அழைத்த அதிர்ச்சியில் கால்கள் அசைய மருத்து, நிலை குத்திய பார்வையுடன் அழும் குழந்தையின் சத்தத்தை காதில் கேட்டுக் கொண்டு இருப்பவலுக்கு கண்ணில் அவளை மீறி கண்ணீர் வந்து விட, பாவம், அவள் எதிரில் நின்று கண்கள் சிவப்பேறிய நிலையில் அவளை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு இருக்கும் அரவிந்தை கவனிக்க தவறிப் போனாள்..
குழந்தையின் அழுகை அதிகரிக்க, சுற்றி இருக்கும் எதையும் கருத்தில் கொள்ளாமல்.. அவளையும் மீறிய ஒரு தாய் உணர்வில் அனுவை கையில் தூக்கி, கண்களை துடைத்து விட்டவளாக, அவள் நெற்றியில் முத்தம் வைத்து, "அழாத தங்கம், ஒண்ணுமில்ல அழக்கூடாது என்ன.." என்று கொஞ்சிக் கொண்டே திரும்பி செல்லப்போக..
"ஏய்ய்.. நில்லு டி".. என்ற கர்ஜனையில், உடல் தூக்கி வாரி போட்டு, முல்லை அப்படியே நிற்க்க.. அவள் கையில் இருந்த குழந்தையோ, பயந்து போய் அவளிடமிருந்து துள்ளி குதித்து இறங்கவும் முல்லையும் விட்டு விடவே, படிகளில் இறங்கி ஓடி சென்று பாட்டியிடம் தஞ்சம் புகுந்து கொண்டது..
முல்லையின் கையை அழுந்த பிடித்து வேகமாக அவன் புறம் திருப்பிய அரவிந்த்.. அவள் என்னதென யோசிக்கும் முன், இடி போன்ற ஒரு அறையை அவன் கன்னத்தில் இறக்கி இருந்தான்..
கன்னத்தில் கை வைத்து எதுவும் புரியாமல், அவன் தந்த அடியின் வீரியத்தில் கண்ணீர் தானாக வந்து எதிரே நிற்கும் அரவிந்தின் உருவம் மறைந்து போகும் அளவு அவள் கண்ணை மறைக்க பார்த்தால் முல்லை.
"யாரு டி நீ, ம்ம்.. யாரு நீ.. என் குழந்தைக்கு நீ அம்மாவா.. நீ மட்டுமில்ல டி, என் குழந்தைக்கு யாருமே அம்மாவாக முடியாது.. அந்த தகுதி யாருக்குமே இல்ல.. வந்த ஒரே நாளுல.. என் குழந்தைக்கு கண்டதையும் சொல்லி கொடுத்து என்கிட்டருந்து பிரிக்க பாக்குறியா".. கொஞ்சம் கூட கோவம் குறையாமல், என்ன நடந்தது என்று எதையும் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளாமல் அரவிந்த் அவன் பாட்டுக்கு வார்த்தையால் முல்லையின் மனதை குத்தி கிழித்தான்.
அவன் பேசுவது எதுவும் புரியாமல்.. முல்லை அவனிடம் ஏதோ சொல்ல வர.. அதை கை நீட்டி தடுத்தவன்..
"ஐயோ பாவம் பொண்ணாச்சேன்னு, உன்ன காப்பாத்தி, உன் பாதுகாப்புக்கு தங்க இடம் கொடுத்து, என் வீட்டுக்குள்ள விட்டேன் பாத்தியா என்ன சொல்லனும்".. என்று தலையை அழுந்த கோதிக் கொண்டவன்..
"இங்க பாரு, ஏதோ என் பாட்டி கேட்டுகிட்டாங்கன்னு சொல்லி தான் உன் கழுத்துல தாலி கட்டினது, இப்ப உன்ன என் வீட்டுகுள்ள விட்டது எல்லாம்.. இதையே அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு எனக்கும் என் குழந்தைக்கும் நடுவுல அம்மா நொம்மான்னு உறவு கொண்டாடிட்டு வந்த.. உன்ன காப்பாத்தின நானே கொண்ணு போட்டுடுவேன்.. உன் லிமிட் எதுவோ அதோட இருந்துட்டு உன் வேலை முடிஞ்சதும் கிளம்பி போயிட்டே இரு"
அவளிடம் கத்தி விட்டு டொம்.. என்ற சத்தத்துடன் அறைக்கதைவை அவள் முகத்தில் அறைந்ததை போல சாத்தி விட்டு சென்றான்..
மழை...

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 10
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.