Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 11

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 11

விடியும் வரை வருணன் கொட்டித் தீர்த்த வான்மேகம் மெல்ல மெல்ல ஓய்வு பெற்று தனது தோஸ்தான செங்கதிரோனுக்கு பெரிய மனது செய்து கொஞ்சமே கொஞ்சமாக வழி விட்டதில் குளுமை கொஞ்சுவதில் சலிப்போடு லேசாக எட்டிப் பார்க்கலானான் கதிரவன்.

அழுகையோடு மயங்கியவளை இறுகிய மனதோடு கையில் ஏந்தி மெத்தையில் கிடத்தியவன் இரவோடு இரவாக ஆட்களை வரவழைத்து உடைந்த கதவுகள் யாவும் புதிதாக மாற்றப்பட்டு மூலைக்கு மூலை சிதறிக் கிடந்த பொருட்கள் அணைத்தும் அப்புறப் படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு வீட்டைக் கொண்டு வந்து விட்டான். இவையெல்லாம் இவளுக்காக ஏன் செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என்ற குழப்பங்கள் அவன் மனதில் ஆயிரம் அரித்துக் கொண்டு இருப்பினும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு அவள் ஒருத்திகாக அவளுக்காக மட்டுமே செய்கிறான் அவன் நோக்கம் மறந்தவனாக. வதங்கிய கொடியாக தெளியாத மயக்கத்திலும் தனக்கு நேர்ந்த அவமானங்களை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த மோகியை சலனமற்ற பார்வையை வீசிக் கொண்டிருந்தான் விஷ்வா.

இரவெல்லாம் பொட்டு தூக்கம் இல்லை அவன் கண்களில் ஆனாலும் உறக்கத்தின் சோர்வோ களைப்போ துளியும் அவன் முகத்தில் இல்லையே!! மனதில் கொஞ்சமாவது நிம்மதியும் சந்தோஷமும் இருந்தால் தானே உறக்கம் அவன் கண்ணை எட்டும். அதையெல்லாம் தொலைத்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. வஞ்சகமும் பழி வெறியும் மட்டுமே மனம் முழுக்க பரவிக் கிடக்க நிம்மதி இழந்து உறக்கம் தூர சென்று பல நாட்கள் கடந்திருந்தனவே.

சிறு தழும்பில்லாத அப்பழுகற்ற அழகு வதனம் மொத்தமும் வீங்கி கன்னம் இரண்டும் முட்டை பன் போல் ரத்தம் கட்டி கன்றி இருந்ததில் மெல்லமாக களிம்பை தடவி விட்டவன், வரிவரியாக பூத்து நின்ற சிவந்த பூஇதழில் நேற்று முழுக்க அவன் கிறக்கத்தோடு வருடி முத்தமிட்டு கவ்வி சுகமான காயத்தை அளித்து போனானே, இப்போதோ இதழே மறையும்படி பெரிதாக வீங்கி ரத்தம் காய்ந்த ரணமான இருந்த இதழை வெறிக்க வெறிக்க கண்டவன் குனிந்து பட்டும் படாமலும் இதழ் ஒற்றி எடுத்து லேசாக களிம்பை தடவி, தாமரை கன்னத்தை நனைத்து செவியில் தேங்கி குளம் கட்டிய கண்ணீரை பெருவிரல் கொண்டு துடைத்தெடுக்கும் போதே வீங்கிய இமைக்குடைகளை கடினப்பட்டு திறந்தவளுக்கு இரவு நடந்த அணைத்தும் கண்முன் தோன்றி திடுக்கிட்டளோடு எழுந்து கதறி அழுதவளை தன் இறுகிய அனைப்புக்குள் கொண்டு வந்திருந்தான் விஷ்வரூபன்.

மோகி.. டோன்ட் க்ரை பேபி. நத்திங் டா.. நான் உன்கூடவே தான் இருக்கேன் ஒன்னும் ஆகல அழாதே மோகிமா இங்க பாரு.. என்ன பாரு பாப்போம். அவன் முகம் பார்க்க முடியாமல் ஆடவனின் புடைத்த நெஞ்சினில் அழுந்த புதைத்திருந்த முகத்தோடு தலையை இடவலமாக ஆட்டி. நோ விஷ்வா.. என்னால முடியல. உன் முகத்தை நிமிர்ந்து பாக்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்ல விஷ்வா. தப்பு பண்ணிட்டேன் நைட் நீ என்கூட இருக்கேனு சொல்லும் போது உன்ன நான் அனுப்பி வச்சி பெரிய தப்பு பண்ணிட்டேனே. உடல் நடுங்க குலுங்கி அழுதவளின் சூடான கண்ணீர் துளிகள் அவன் நெஞ்சை ஊடுருவி அடிநெஞ்சினை பொசிக்கிக் கொண்டிருந்தது.

என்ன அடிச்சே கொன்னுருந்தா கூட இதுதான் விதியோனு நிம்மதியாவாது செத்து போயிருப்பேன். ஆனா கேவலமான அந்த ந்.நாலு ப்.பேரும் என்ன எ.ன் துணிய கிழிச்சி அசிங்கமா தொட்டு..ச்ச.. நெனச்சாலே அருவருப்புல உடம்பு முழுக்க பத்தி எரியிது. அதே கோலத்துல நீ என்ன பாத்த போது என் உயிரே போயிடுச்சி விஷ்வா. இதுக்காகவா என் உடம்பையும் மானத்தையும் இத்தனை வருசமா பொக்கிஷம் போல பாதுகாத்து வந்தேன். அவனது சட்டையை இறுகபற்றி கதறி அழுதவளை, மோகி அழாத பேபி. லுக் அட் மீ..கண்ணீர் பெருகி வழியும் அவள் கன்னம் பற்றி நிமிர்த்த இன்னும் இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டவளின் இமைகளில் இதமான இதழ் ஒற்றி எடுத்தவனுக்கு இப்பேற்பட்ட அழுகாச்சி செண்டிமெண்டில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லை.

அவன் பார்த்த முதல் பெண்ணான அவன் அன்னையில் இருந்து அவனது படுக்கையை பகிர்ந்துகொள்ள வரும் இன்பராணிகள் வரை முதலில் அந்நிய ஆண்களின் தொடுகையை எதிர்ப்பதை போல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து நடித்து விட்டு அதன்பிறகு அவர்களாகவே ஆண்சுகத்தை தேடி அலைவதை கண்ணெதிரே பார்த்து வளந்தவனின் வெளிமனம் இவள் மட்டும் என்ன உத்தமியா? இவளும் அதே கேட்டகிரியில் சேர்த்தவன் தான் என்று அடித்துக் கூறினாலும். ஆழ்மனமோ அது எதையும் நம்ப மறுத்ததில் அவளின் அழுது வீங்கிய பரிதாபமான குழந்தை முகத்தில் மென்முத்தம் பதித்து தன்னோடு இன்னும் இருக்கி ஆழப் புதைத்துக் கொண்டிருந்தான் விஷ்வரூபன்.

இதுல இருந்தே தெரியலயா டி உன்ன அந்த கோலத்துல பாக்க எனக்கு மட்டும் தான் உரிமை இருக்குனு. உனக்கு நான் என்ன சமாதானம் சொல்றதுனு சத்தியமா புரியல டி மோகி. நைட்ல இருந்து பைத்தியம் பிடிக்காத குறையா உக்காந்து இருக்கேன். எல்லாத்தையும் கெட்ட கனவா நெனச்சி மறந்துடு மோகி. இப்போதைக்கு என்னால இவ்ளோ தான் சொல்ல முடியும். நீயும் வருந்தி அழுது என்னையும் வதைக்காதே டி. என் இரும்பு மனசு ரொம்பவே வலிக்குது. உள்ளிருக்கும் வார்த்தைகள் அவன் வாய் வழியாக வேதனையாக வெளிவந்ததை எண்ணி அவனுக்குமே வியப்பு தான், எப்படி சாத்தியம் என்றதில்.

தன்னவனின் அக்கறை ஒழுகும் நேசமான அரவணைப்பில் கதறல் குறைந்து விம்மலாக இழுத்து வாங்கிய கண்ணீரை துடைத்து விட்டவன், ரொம்ப அழுதுட்ட மோகி இனிமே அழக் கூடாது டி. சொல்றேன்ல ஷூ.. சற்றே அதட்டலாக உரைத்தவனை பாவமாக கண்டாள்.

ஒரு பொண்ணு விருப்பம் இல்லைனு சொல்லிட்டா விட்டு விலகாம ஏன் இவனுங்க மாதிரி ஆண்கள் எல்லாம் அவ உயிரையும் மானத்தையும் பறிக்க வெறியோட சுத்திட்டு இருக்கானுங்க விஷ்வா. இதுனால பாதிக்கப்படற பெண்களுக்கு என்னென்ன இன்னல்கள் வரும்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்களா. இவனுங்கள மாறி ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவ மானத்தை பறிக்க நினைக்கிற ஒவ்வொருத்தணும் நிச்சயமா ஒரு நல்ல அம்மா அப்பாவுக்கு பிறந்திருக்கவே மாட்டாங்க. ஆத்திரமும் ஆற்றாமையுமாக குரல் நடுங்க உரைத்தவளால் என்ன முயன்றும் தனக்கு நடக்கவிருந்த கொடூரமான கோர சம்பவத்தை மறக்க முடியவில்லை.

மோகித்தாவின் ஒவ்வொரு வார்த்தைகளையும் உள்வாங்கிக் கொண்டவனுக்கு மனதின் ஓரத்தில் குறுகுறுத்த குற்றக்குறுகுறுப்போடு அவள் முகத்தையே கண்டவனை கலக்கமாக ஏறிட்டிவளை அவனும் கவனித்தான் ஓரளவு அவள் மனதில் உள்ளதை படித்தவனாக, 'இன்னும் கண்டதையே நினைச்சி பேசி நீயும் கவலை பட்டு என்னையும் டென்ஷன் பண்ணாத டி மோகி' கனீரென உரைத்தவன் சட்டென அவள் மீதிருந்த போர்வையை விலக்கி தூர வீசியதும் திடுகிட்டவள் கரங்களை மார்புக்குக் குறுக்கே கட்டி விஷ்வாஆஆ.. என பெருங்குரலோடு அலறியவளோ ஆடவனின் தீட்சண்ய பார்வையில் தொண்டைக் குழிக்குள் எச்சில் விழுங்கிக் கொண்டு கலங்கிய கண்களோடு இதழ் கடித்து தலை தாழ்த்திக் கொண்டாள்.

இரவு அந்த கயவர்கள் அவளை செய்து வைத்த கோலத்தோடே போர்வையை போற்றியபடியே மயங்கி இருந்தவள் கண் விழித்த போதும் அவள் உடலில் மேலாடை இல்லாத ஒன்றை உணரும் நிலையில் இல்லாமல் காதலனின் கைவளைவில் அடைக்கலமாகி இருந்தாளே.

வெகுநேரமாக அவனது குறுகுறுப்பான ஊடுருவும் பார்வையில் தேகம் கூசி இதயம் நடுக்கம் கொண்டவளாக அங்கிருந்து எழுந்து ஓடப்போனவளை நொடியில் இழுத்து மெத்தையில் புரட்டி அவள் நெஞ்சினில் தலை வைத்துப் படுத்து இறுக்கி அணைத்துக் கொண்டதில் உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்து ஜிவ்வென்று தாக்கிய உணர்வில் வி.ஷ்வாஆ.. என்ன பண்ற.. கண்களை அகல விரித்து மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்க மிரண்டு விழித்தவளை, தனக்குள் நேர்ந்துக் கொண்டிருக்கும் வித்தியாசமான உணர்வுகளை மறைத்தவனாக தலைத் தூக்கிப் பார்த்தவன் சொன்ன வார்த்தைதனில் உள்ளம் நெகிழ்ந்து போனாலும் ஆடவனின் திடிர் செயலிலும் சொல்லிலும் மூச்சைடைத்துப் போனாள்.

'எ.என்ன விஷ்வா சொல்ற' மலங்கமலங்க படபடப்பாக விழித்த முட்டை கண்களை ரசனையோடு பார்த்தவன் "நம்ம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம் என்கூட என் வீட்டுக்கு வந்திடுனு சொன்னேன்" மீண்டும் அழுத்தம் திருத்தமாக உரைத்தவனது குரலில் இருந்த உறுதியைக் கண்டு 'எ.ன்.ன விஷ்வா பேசுற உடனே எப்டி' என்றாள் திகைத்தவளாக.

கல்யாணம் பண்ணாம ஒன்னா ஒரே வீட்ல இருக்கவும் நீ ஒத்துக்க மாட்ட, இதுக்கு மேல உன்ன இப்படி ஒரு சூழ்நிலைல தனியா விட்டு என்னால நிம்மதியா இருக்க முடியும்னு எனக்கு தோணல மோகி. ஒருத்தரை ஒருத்தர் நெனச்சிகிட்டு நீ இங்க நான் அங்கனு தனி தனியா ஃபீல் பண்ணிட்டு இருக்குறதுக்கு பதிலா அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணி ரெண்டு பேரும் ஒரே வீட்லயாவது இருக்கலாம். என்னைக்கா இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்றது உறுதி தானே அதை ஏன் டி இப்பவே பண்ணிக்க கூடாது. இத்தனை தூரம் சொல்லியும் இன்னும் அவளின் தெளியாத முகம் கண்டு எரிச்சலுற்றான் கோவமாக.

அதுக்கில்ல விஷ்வா. அ.அப்பா.. அப்பாவோட சம்மதம் இல்லாம எப்டி கல்யாணமெல்லாம். அதுவும் நான் இன்னும் படிப்ப முடிக்கல. நான் படிச்சி முடிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கு போயி சின்ன வயசுல இருந்து என்ன ஒரே ஆளா கஸ்ட்ப்பட்டு வளத்த எங்க அப்பாவ என் சம்பாதனைல அவருக்கு வேண்டியதை எல்லாம் செய்யணும். இதுதான் என்னோட மிகப்பெரிய லட்சியம். உன்கிட்ட கூட இதை பத்தி நிறைய முறை சொல்லி இருக்கேனே விஷ்வா. தவிப்பாக திணறினாள் நிறம் மாறிய அவன் முகம் பார்த்தபடி.

'அதுனால உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா என் லட்சியதுக்கு நீ பெரிய தடையா இருப்ப விஷ்வா. உன்ன விடவும் எனக்கு எங்க அப்பா தான் முக்கியம் சோ நம்ம மெதுவா கல்யாணம் பண்ணிக்கலாம்' இதையும் சேத்து உன் மனசுல உள்ளத தெளிவா சொல்ல வேண்டியது தானே ஏன் இதை மட்டும் சொல்லாம முழுங்கின. கோவம் தீராது பட்டென அவள் மீதிருந்து எழவும் தானும் அடித்துப் பிடித்து எழுந்தவளுக்கு அவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று ஒன்றும் புரியாமல் அவனையே தான் பார்த்திருந்தாள்.

நேற்று வரையிலும் அவள் மீது பழிவெறியில் அவளை எப்படி எல்லாம் அவமானம் செய்து தன் வன்மத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று கடும் வெறியில் சுற்றிக் கொண்டு இருந்தவன் தான், இப்போதும் அவள் மீதுள்ள பழி வெறி தீரவில்லை. இருப்பினும் ஆரம்பத்துல இருந்து அவளை எப்படியெல்லாம் பழி வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு திட்டத்தையும் வகுத்து வைத்திருந்தானோ, இரவு நடந்த சம்பவங்களினால் நன்கு யோசனை செய்தவனாக அத்திட்டங்களை மட்டும் வேறு விதமாக மாற்றிக் கொண்டான் அவ்வளவே. திருமண வாழ்க்கையையே அடியோடு வெறுப்பவன் அந்த திட்டத்தின் முதல் அடியாக தனக்குப் பிடிக்காத இந்த திருமணப் பேச்சை எடுத்திருந்தான்.

"இப்ப நீ முடிவா என்ன சொல்ல வர மோகி" என்றவனின் கடுங்குரலில் பொங்கி வரும் கோபத்தை உணர்ந்தவளுக்கு விஷ்வரூபன் சொன்னது போலவே முதலில் தந்தை முக்கியமா காதலன் முக்கியமா என்று வரும் போது தனக்காகவே இத்தனை வருடமும் தன்னை வருத்திக் கொண்டு வாழ்ந்த தந்தையே முதலில் மனதிலும் மூளையிலும் வந்து போனதில் கலக்கமாக அவன் முகம் ஏறிட்டவளை கோவம் குறையாதுக் கண்டவனோ நமட்டைக் கடித்து தலையை அழுந்தக் கோதிக் கொண்டான் ஒன்றும் பேசாமல்.

விஷ்வா நீ சொல்ற விஷயம் எனக்கு புரியாம இல்ல. ஆனா இப்ப நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது எனக்கு சரியா தோணல. என்னவோ மனசுக்கு ஒருமாதிரியா இருக்கு. அதை எப்டி சொல்றதுனு சரியா தெரியல.. தடுமாற்றமாக அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே இடைநிறுத்தியவன். வெல் இப்ப நீ என்ன கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு தெளிவா இருக்க ரைட். தாடை இறுக பற்களை கடித்தவனை நீர் நிரம்பக் கண்டவள்.

அதில்ல விஷ்..

"ஸ்..போதும் மோகி.. உன்னோட இந்த மௌனமே சொல்லிடுச்சி எம்மேல நீ வச்சிருக்க நம்பிக்கையான காதலோட ஆழத்த" நக்கலாக நம்பிக்கையை அழுத்திக் கூறி 'இதுக்கு மேல உன்கிட்ட பேச ஒன்னும் இல்ல'.

'என்ன விஷ்வா இப்டிலாம் பேசுற. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு' மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க குரலுடைந்து பேசியவளை சட்டை செய்யாது, நான் போறேன். உனக்கா எப்ப என் நியாபகம் வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு முழு மனசோட நினைக்கிறியோ அப்ப என்ன தேடி நீயா வா. அதுவரைக்கும் உனக்கான காதல் இங்க எப்பவும் அழியாம அப்டியே தான் இருக்கும் தனது மார்பை தட்டி சொன்னவன். அதவிட்டு கல்யாணப் பேச்சை தவிர்த்து வேற விதமா என்கிட்ட பேசி என்ன சமாதானம் படுத்தலாம் அப்டின்ற நினைப்போட மட்டும் என்ன பாக்க வந்த. அன்னைக்கு இந்த விஸ்வரூபனோட முழு சுயரூபத்தையும் நீ பாக்க வேண்டி வரும். அவள் முகத்துக்கு நேரே விரல் நீட்டி அவன் உறுதியாக எச்சரித்த விதத்தில் தெறித்த விழிகளில் இருந்து நீர் வழிய தவிப்பாக கண்டவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் வீட்டை விட்டு கோவமாக வெளியேறி இருந்தான் விஷ்வரூபன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 11
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Messages
20
Reaction score
20
Points
18
Appo seekaram kalyanam tha 🥳🥳. Sis morning and evening two epi poduga sis stry intersting ka poguthu ☺️ 😊
 
Top