- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 12
இது என்ன டிசைன் படு கேவலமா இருக்கு இதுமாதிரி ஒரு கேவலமான டிசைன ரெடி பண்ணது யாரு. உடனடியா என் கேபின்க்கு வர சொல்லு. கோவத்தில் முக்குளித்து எரிந்து விழுந்தவன் முன்பு அதற்க்கு மேலும் நிற்க முடியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்க வெளியே ஓடிய மேனேஜர் கண்ணன், ஃபேப்ரிக் டிசைனரை மட்டும் ஆளையே விழுங்கக் காத்திருந்த சிங்கத்தின் குகைக்குள் அனுப்பி வைத்திருந்தான்.
கதவை திறந்து உள்ளே வந்ததும் அவர் வடிமைத்த மேட்டிரியல் அவர் முகத்தின் மீதே பட்டு தெறித்து அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி விழுந்ததில் திகைத்து போனவரின் செவிப்பறை அடைத்துப் போனது விஷ்வரூபனின் அதிர வைக்கும் கடுங்குரலில்.
இதெல்லாம் ஒரு டிசைன்னு எப்டி ரெடி பண்ண நீ. நெட்டல பிலோரல் டிசைன் பண்ணி வச்சிருக்க. சேட்டின்ல டிசைன் செஞ்சி மேல நெட்டட் வைக்கணும்ன்ற ஒரு சாதாரண சென்ஸ் கூட இல்லாம எந்த மை*துக்கு டிசைனிங் எக்ஸிக்யூட் பொசிஷன்ல இருக்க. இர்ரெஸ்பான்சிபுல் இடியட். கோவத்தில் காச்மூச்சென கத்தியதும் திருத்திருவென முழித்தவருக்கு அப்போதே தான் தவறுதலாக கவனக்குறைவில் செய்த தவறு விளங்கவே விஷ்வாவின் கோபத்தில் வாய் திறந்து விளக்கம் சொல்ல முடியாமல் மன்னிப்பு வேண்டி தலைகுனிந்து நின்றவரை, இன்னொரு முறை இதுமாதிரி தப்பு நடந்துச்சி சீட்ட கிழிச்சி துரத்தி விடவேண்டி வரும். மேலும் கண்டிப்பான குரலில் அவரை கடைந்து எடுத்து விட்டான்.
முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு எம்ப்ளாய்களை வறுத்துக் கொண்டிருக்கும் விஷ்வரூபனை கண்டு புரியாமல் விழித்தான் கண்ணன். இன்று நேற்றல்ல கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே இப்படி தான் தினமும் யாருக்காவது பலமான பூஜை நடந்தேருகிறது. எப்போதும் கடுமையான முகத் தோற்றதுடன் இருப்பான் தான் அதற்காக தொட்டதிற்க்கெல்லாம் கோவம் கொண்டு கத்துபவன் இல்லை. பார்வையிலும் குரலிலும் கடுமை தீட்டி செய்த தவறை புரியும்படி சுட்டிக்காட்டி விலக்கி அனுப்பி விடுவான். குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் இதமாக ஆட்டிவிடும் கதையாக. இப்போதோ கடுமையை மட்டும் வலுபடுத்தி வலிக்க வலிக்க சொற்களால் அடித்து அனுப்புகிறான்.
தொடர்ந்து அவனது அலைபேசி ஒளித்துக் கொண்டே இருப்பதை அவனிடம் முக்கிய கோப்புகளில் கையொப்பம் வாங்க வந்திருந்த கண்ணனின் யோசனையை கலைத்து கவனத்தை திசைத்திருப்பவே, "ச.சார்.. உங்க ஃபோன் ரொம்ப நேரமா ரிங்காயிட்டு இருக்கு" அவன் கவனிக்கவில்லை போலும் என நினைத்து வேளியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுகொண்டிருந்தான் பாதகமாக.
'அது கூட தெரியாத அளவுக்கு என்னை என்ன முட்டாள்னு நெனச்சிட்டியா. சைன் தானே வாங்க வந்த.. அந்த வேலைய மட்டும் பாத்துட்டு போயிட்டே இரு. தேவை இல்லாத வேலைல இன்டர்ஃபையர் ஆகாதே' கனல்விழி பார்வையால் துளைத்தெடுக்கவும், ஸ்.சாரி சார் என்று திக்கியவனோ துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடியே விட்டான் கண்ணன்.
அவன் சென்றதும் ஆழமூச்செடுத்து சுழல் இருக்கையில் கண்மூடி சாய்ந்து அமர்ந்தவன் முகத்தில் அப்பட்டமான எரிச்சல். மாதம் கடந்து விட்டது அவளை பார்த்து பேசி, அன்று அவளோடு கோவித்துக் கொண்டு வந்ததோடு சரி இப்போது வரை கோவத்தில் இருக்கிறான், அவள் மீது கோபமா அல்லது அவன் மீதே கோபமா என்று புரியாத பெருங்குழப்பத்தில்.
எந்த அளவிற்கு அவளை பழிதீர்க்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தானோ, ஒரே இரவில் மொத்தமாக புரட்டிப் போட்டு விட்டாளே அவனது இரண்டு வருட பழிவெறியை குலைக்கும் விதமாக. தடம் மாற காத்திருக்கும் அவன் மனதின் மேல் கொலைவெறியாது.
இப்போதும் அவள் தான் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறாள் அதை தெரிந்துக் கொண்டு ஏற்காமல் கற்சிலையாக இறுகி இருக்கிறான். இரண்டு நாள் அவளோடு நெருங்கி பழகிய குற்றத்திற்கே அவளின் தேனொழுகும் மெய்சிலிர்க்க வைக்கும் அன்பிற்கு கட்டுப்பட்டு இரும்பு மனம் கரைந்து தடம் புறளுகிறது என்றால் மேலும் மேலும் அவளோடு ஒட்டி உறவாடினால், அவன் நோக்கம் மறைந்து மொத்தமாக மோதித்தாவின் மெய்காதலில் கசிந்துருகி மோகப்பெண்ணின் அடிமையாகி விடுவோமோ என்று அஞ்சி நடுங்கும் மனதை திரையிட்டு மறைக்க கோவத்தை வெளிக்கொணர்ந்து வேலையில் அனைவரின் மீதும் கொட்டித் தீர்க்கிறான்.
இப்போதெல்லாம் அவளிடம் பொய் காதலை கொட்டி காதல் நாடகம் போட்டு ஏமாற்ற முடியவில்லை. அவன் எது சொன்னாலும் மாற்றுக்கருத்தின்றி அப்படியே நம்பி பால்சிரிப்போடு ரசனையாக அனைத்தையும் சுவாரிசியம் குறையாமல் கேட்டுக் கொள்ளும் அழகு பதுமையின் வெகுளிதனமான அன்பில் நாளுக்கு நாள் இதயத்தில் கனம்கூடிக் கொண்டே செல்ல செல்ல ரத்தம் அழுத்தம் அதிகரித்து எப்போது வேண்டுமானாலும் பாரம் தாங்காமல் சிதறி வெடிக்கும் உணர்வு.
பாறையான அவனது உணர்வுகள் துடைத்த இருதயத்தை உளி வைத்து தட்டி மோகப்பெண்ணின் மீது காதல் எனும் சிற்பமாக மாற்றி உயிர் கொடுக்க விருப்பம் இல்லை, விரும்பவும் இல்லை அவன். எங்கே அவளை மீண்டும் மீண்டும் பார்த்தால் குரூரம் மறைந்து அவளிடம் சரணாகதி அடைந்து விடுமோ என்ற அச்சம் பரவி ஆறடி ஆண்மகனை நிலைக்குலைய வைக்கிறது.
வன்மம் கொண்ட மனம் அத்துனை லேசில் இறங்கிவிடவில்லையே. அவளை விட்டு வந்த நாளில் இருந்தே எண்ணிலடங்காத அழைப்புகள் வந்து ஆயிரத்தை தாண்டி விட்டுருக்கும் மோகக்காரியின் தவறிய அழைப்புகள் லிஸ்டில். இன்னும் ஓயாமல் அழைப்புகளும் குறுந்செய்தியும் வந்த வண்ணமே இருக்க ஒருக்கட்டத்தில் எரிச்சலுற்று அலைபேசியை மொத்தமாக அணைத்திருந்தான் விஷ்வரூபன்.
அவளை மறக்க எண்ணி வேலையில் மூழ்க நினைத்து பசி தூக்கம் மறந்து போனான். அப்போதும் ஏதாவது ஒரு வகையில் அவள் நியாபகம் வந்து பைத்தியம் பிடித்தது. அதை விட அதிகமாக அவனது பிடிவாதம் அவளிடம் பேச தடுத்தது. அதற்கு மேலும் முடியாமல் அங்கிருந்து புறப்பட்டு இருந்தான் அவனது வீடு நோக்கி. வழக்கமாக இரவு நேரத்தில் அவனுக்கு சொந்தமான ஹோட்டல் அறையில் தான் தங்குவான் விதவிதமான காமகிளிகளோடு சல்லாப்பித்துக் கொண்டு. ஆனால் கடந்த சில தினங்களாக எதற்கும் மனம் லைக்காமல் இரவு அவனை தேடி வரும் பெண்களிடம் திருப்தி காணமுடியாமல் மோகியின் நினைவே அதிகரித்து அவன் கொண்ட அவஸ்தைக்கு ஆறுதலாக தாத்தாவின் அருகாமையை நாடுகிறான் புதிதாக.
இப்போதும் நேரத்தோடு வீடு வந்து சேர்ந்த பேரனை ஆச்சிரியம் குறையா பார்வையோடு பார்த்திருந்த தாத்தாவை ஓரக்கண்ணால் கவனித்தபடியே அவன் அறை நோக்கி சென்றவனை கண்டு அகம் மகிழ்ந்து போனார் ராமமூர்த்தி தாத்தா. வெகுநாட்கள் பிறகு நிம்மதியான உணர்வு.
செல்வம் என் பேரனுக்கு புடிச்ச சாப்பாட்ட எல்லாம் செஞ்சி வச்சிட்டியா? அவன் கீழ வந்ததும் சாப்பிடற மாதிரி எடுத்து வச்சிட்டியா? டைனிங் டேபிள் எல்லாம் சுத்தமா தானே இருக்கு? தூசி துரும்பு ஏதாவது இருந்தா பட்டுனு சாப்பிடாம எழுந்து போயிடுவான், எதுக்கும் இன்னொரு முறை துடைச்சி வச்சிடு. பேரன் வந்த சந்தோசத்தில் இடைவேளையின்றி பேசிக் கொண்டே போனதில் நெஞ்செல்லாம் அடைத்து இருமல் வந்து விட்டது.
தடிக் கொம்பால் தரையில் ஊன்றி இருமியபடி தள்ளாடியவரை சட்டென தாங்கி பிடித்தவர், அச்சோ.. ஐயா.. பாத்து பாத்து இந்தாங்க தண்ணி குடிங்க என்று தண்ணீரை புகட்டிய செல்வம். ஒன்னும் கவலை படாதீங்கய்யா தம்பி வருவார்னு தெரிஞ்சி எல்லாத்தையும் சரியா முடிச்சி வச்சிட்டேன். நீங்க கொஞ்சம் நிதானமா இருங்க, உங்கள இப்டி பாத்தா தம்பி எம்மேல கோவப்படும். பரிதாபமாக சொன்னவரை கண்டு மெலிதாக புன்னகைத்து. நீ சரியா செஞ்சிடுவேனு தெரியும் செல்வம் இருந்தாலும் என் பேரன பாத்ததும் எல்லாம் மறந்து போகுது இந்த கிழவனுக்கு என்றார் சிறுபிள்ளையின் குதூகலத்துடன்.
செல்வமும் நீண்டநாள் பிறகு அவரது மகிழ்ச்சியை கண்டு தனக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டவராக. அவரோடு அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தார் நேரம் போவது தெரியாமல்.
ஷவருக்கு அடியில் நீர் துளிகள் அவனது கட்டுடல் மேனியை ஊடுருவி டைல்ஸ் தரையில் வழுக்கி செல்ல, ஆடவன் மனமோ தேனை தேடி அலைமோதும் தேனியாக மோகப்பெண்ணை தேடி அவளின் அருகாமைக்கு ஏங்கி அலைவதை குளிர்நீரால் கூட கட்டுப்படுத்த முடியாமல் போனதில் உடலும் மனமும் சோர்ந்து உள்ளம் கொதித்துப் போனது.
ச்ச.. எல்லாம் என் தப்பு தான், சூட்டோட சூட்டா அவளை பாத்தோமா வெறிதீர அவளை அவமாப்படுத்திட்டு வந்தோமானு இல்லாம இந்த லவ் ட்ராமா அது இதுனு போட்டு இப்ப ரெண்டாங்கெட்டனா அலைஞ்சி துடிக்கிற இந்த சொரணைகெட்ட மனச ஒன்னும் பண்ண முடியாம தவிக்கக் காரணமா இருந்தவள இன்னும் ஏதாவது பண்ணி அவளை ஒன்னும் இல்லாம ஆக்கணும். மோகிஇஇ.. உன்ன விட மாட்டேன் டி.. பெருங்குரல் எடுத்து சீற்றம் கொண்டு டைல்ஸ் புதைத்த சுவற்றில் கையை மடக்கி ஓங்கி குத்தியதில் அவன் பாரம் தாங்காமல் சுவரோடு சுவராக நொறுங்கி விட்டிருந்ததே தவிர்த்து அவன் கரத்துக்கு எந்த பாதகமும் ஏற்பட்டு இருந்திருக்கவில்லை.
இனிமே இவ விருப்பத்தை எதிர்பாத்து ஒவ்வொரு நாளும் பொறுமையா காத்திருந்தா நாளுக்கு நாள் பலவீனமா ஆகி அவ காலடில கிடக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் விஷ்வா. அப்டி ஒரு நிலமை வரர்துகுள்ள சீக்கிரம் நினச்சத செஞ்சி முடி. தனக்கு தானே சூளுரைத்துக் கொண்டு குளித்து முடித்தவன் சாதாரண இரவு உடையில் வெளியே வந்து தாத்தாவோடு அமர்ந்துக் கொண்டவனின் முகம் ஒருவித தீவிரத்தில் இருப்பதை கண்டு நெற்றி சுருக்கினார் தாத்தா.
என்ன ரூபன் பாக்கவே ஏதோ டிஸ்டர்பா இருக்க மாதிரி தெரியிது. உடம்பு கிடம்பு எதுவும் சரி இல்லையா கண்ணா. அக்கறையாக அவன் நெற்றி கன்னம் கழுத்து என தொட்டுப் பார்த்த தாத்தாவை சலனமின்றி பார்த்தவன். நான் நல்லா தான் இருக்கேன் தாத்தா, இன்னும் ஏன் நீங்க சாப்பிடாம இருக்கீங்க நிதானமாக வினவியவாறே தாத்தாவுக்கும் தனக்கும் பரிமாறியவனை கூர்ந்து கவனிக்களானர் தாத்தா.
சாமார்த்தியமா பேச்ச மாத்த கத்து வச்சிருக்க ரூபன். இப்போல்லாம் நீ தினமும் வீட்டுக்கு வரர்து எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தாலும், ஏதோ ஒரு இடத்துல இடிக்குது. மனசுக்கு தப்பா படுது ரூபன் சரியாக கணித்து வாதிட்ட தாத்தாவை மெச்சுதலாக கண்டவன். உங்களுக்கு அப்டி தோணினா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது தாத்தா. சரியான நேரத்துக்கு சாப்ட்டு உங்க உடம்ப பாத்துக்கோங்க. என்றவனின் பேச்சில் என் விடயத்தில் தலையிடாமல் உங்களை மட்டும் சரியாக கவனித்துக் கொள்ளுங்கள் என்ற மறைமுக அர்த்தம் பொதிந்து இருப்பதை உணர முடியாத அளவிற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லையே.
சரி ரூபன் இனிமே என் உடம்ப பாத்துக்குறேன். அதே மாதிரி நீயும் உன்ன பாத்துகிட்டு தானே ஆகணும் அதுக்கு என்ன வழி பண்ண போறே? ஒரு முடிவோடு பேச்சை துவங்கி இருந்தார்.
அவர் சுற்றி வளைத்து எங்கு வந்து நிற்பார் என்று நன்கு அறிந்தவனாக. எனக்கு என்ன பாத்துக்க ரொம்ப நல்லாவே தெரியும், தனியா யாரும் வந்து பாத்துக்குற அளவுக்கு நான் ஒன்னும் பலவீனமானவன் இல்ல. இப்ப எதுக்கு அடிப்போட்டு பேச வரீங்கன்னு எனக்கு தெரியும் தாத்தா. இதுக்கு மேல என் கல்யாணம் விஷயத்தை பத்தி பேச்சை எடுத்தா நான் வெளிய போக வேண்டி இருக்கும். சற்றே கடுமை எட்டி பார்த்த இறுக்கமான குரலில் வருத்தமாக வாய் மூடிக் கொண்டார்.
அவரின் வருத்தம் தோய்ந்த முகம் அவனை வாட்டினாலும் எதுவும் பேசாது அமைதியாக உண்டு முடித்தவனாக தனதறைக்கு செல்லப் போனவன் என்ன நினைத்தானோ!! தாத்தா.. என்று யோசனையாக நெற்றியை நீவியபடி அவர் புறம் திரும்பிட அவரும் அலட்டலின்றி உம்மென்ற முகத்தோடு அவனை ஏறிட்டார்.
இந்த வயதிலும் அவனது தாத்தாவின் சிறுபிள்ளைதனமான கோவம் அவனுக்கு புன்னகையை தோற்றுவிக்க அவரிடம் அதை காட்டாமல் இதழுக்குள் மறைத்தவன் 'கூடிய சீக்கிரம் நீங்க ஆசைபடர விஷயம் நடக்கும். அதுக்காக முகத்தை இப்டி தூக்கி வச்சிக்காதீங்க' என்றவனோ தாத்தா அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்பே அங்கு நிற்காமல் அறைக்கு சென்று விட்டான்.
போன் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் இருந்து விடாது கண்ணீர் துளிகள் கன்னம் தாண்டி வழிந்துக் கொண்டே இருந்தவளுக்கு விஷ்வாவின் நிராகரிப்பு அத்தனை வேதனையை கொடுத்தது. மடியில் இருந்த குழந்தையை தொலைத்து விட்டு பரிதவிப்போடு தேடும் தாயை போல காதலனை காணாது உடல் மெலிந்து உள்ளம் கலங்கி தவித்தாள் பாவை.
அவனை காணாத இத்தனை நாட்களில் விஷ்வரூபனின் காதலுக்கு அடிமையாகி அவன் குரல் கேட்காது அவனை பார்க்காது பைத்தியம் பிடிக்காத குறை தான். கல்லூரிக்கு சரியாக செல்ல முடியவில்லை. உணவுண்ண முடியவில்லை. உறக்கம் கண்ணில் இல்லை. அவன் இருந்தால் மட்டும் போதும் என ஏங்கி தவித்து விஷ்வா மந்திரம் ஜெபித்துக் கொண்டு இருப்பவள் குறுகிய கால அவனது பொய்யான அன்பில் மொத்தமாக தன்னை தொலைத்திருந்தாள் மோகி.
இப்போதாவது தன் அழைப்பை ஏற்பானா என்று உயிர் வரை துடித்து சார்ஜர் வையரில் போனை சொருகியபடியே சுவற்றில் சாய்ந்தமர்ந்து மீண்டும் மீண்டும் பைத்தியக்காரி போல் அவன் எண்ணிற்கு தொடர்ந்து அழைத்து விரல்கள் யாவும் மறுத்து விடும் நிலையிலும் 'நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்சமயம் சவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு உள்ளது' சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்த கணினி கூட ஒரு கட்டத்தில் சோர்ந்து போயிருக்க கூடும், ஆனால் மோகி சற்று நேரம் எனக்கு ஓய்வு கொடு என பலமாக கெஞ்சிய இரு சிவந்த கண்களையும் நன்றாக விரித்து வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அழைத்து கண்ணீரை சொரிந்த வண்ணமே இருந்தது.
போனை சவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிற அளவுக்கு எம்மேல உனக்கு அவ்ளோ கோவமாக விஷ்வா. தனியாக புலம்பியவளுக்கு அத்தனை எளிதாக அவனை மறந்து விட்டு அடுத்த வேலையை தொடர முடியாதபடிக்கு, அவனது பொய்யன்பில் உருகி பைத்தியமாக காதலை வளர்த்துக் கொண்டு விட்டிருந்தாள். கடைசியாக செல்லும் போது அவன் காட்டிய கோவம் அவளின் அடிஆழம் வரை அச்சத்தில் நடுங்கி இருக்க நேரில் சென்று பார்க்க அத்துனை பயம் அவள் நெஞ்சினில். கோவத்தில் அடித்தால் கூட பரவாயில்ல வேறு ஏதாவது அசம்பாவிதம் நேர நடந்தால் தன் தந்தையின் முகத்தில் எப்படி முழிப்பது என்று காதலனின் பிரிவையும் தாலமுடியாமல் தந்தையின் மனதையும் புண்படுத்தி விடக் கூடாது என்று தவிக்கும் மனதை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறியவளை அதற்கு மேலும் சோதிக்க விடாமல் இறுகிய முகம் கணியாமல் அஜானுபகவான தோற்றத்துடன் உயர்ந்து நின்றவனை விஷ்வாஆஆ.. என்ற கதறலோடு தாவி அணைத்து தனது இத்தனை நாள் தவிப்பையும் கண்ணீரோடு அவன் முகத்தில் முத்தமிட்டு வெளிகாட்டி இருந்தாள்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.