Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 13

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 13

நீண்ட நேரம் தொடர்ந்த அவளது கண்ணீர் கலந்த ஏக்கமுத்த மழையில் தடுமாறி திகைத்தவன் உடனே தன்னை சமாளித்துக் கொண்டு, விடாது அழுது அவன் நீண்ட கழுத்தை எக்கி கட்டி கேவலோடு தொங்கிக் கொண்டிருந்தவளை அவனையும் மீறி இறுக்கமாக தன்னுள் புதைத்திருந்தான்.

அவ்ளோதானா விஷ்வா உன் காதல். என்ன தவிக்க விட்டு திரும்பிக் கூட பாக்காம கோவமா போய்ட்டேள்ள. என் போனை கூட எடுக்க பிடிக்காத அளவுக்கு எம்மேல அவ்ளோ கோவமா. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகி செத்துகித்து தொலைஞ்சி இருந்தாலும் உன்னோட கோவத்தை மட்டுமே முன்னிறுத்தி இப்டியே கல்நெஞ்சக்காரனா இருந்திருப்பேள்ள. போடா இப்ப மட்டும் எதுக்கு என்னை பாக்க வந்த உன் கோவத்தையே கட்டிக்கிட்டு இருக்க வேண்டியது தானே. இத்தனை நாள் தவிப்பிற்கும் கண்ணீர் உடைபெடுத்து அவனது இரும்பு நெஞ்சத்தை அடித்து பதம் பார்த்த குட்டி கைகளை பிடித்து சூடான அதரம் கொண்டு அழுத்தமாக முத்தமிட்டிருந்தான் விஷ்வரூபன்.

'மச்.. விடு விஷ்வா. இனிமே நானும் உன்னோட பேசுறதா இல்ல' கோவம் கொண்டு கண்ணீரோடு நரக முற்பட்டவளின் தாடையை அழுத்தமாக பற்றி தன்னைக் காண செய்து 'எதுக்கு ஒரு வாரமா காலேஜ் போகல' வந்ததும் வராததுமாக கேட்ட கேள்விதனில் மூக்கு விடைக்க முறைத்து மீண்டும் நகரப் போனவளின் இடைவளைத்துப் பிடித்து தன்னோடு தேகம் மோத நிற்க வைத்ததில் இருதேகமும் மின்சாரம் தாக்கிய உணர்வில் அதிர்ந்து நின்றது.

கேட்ட கேள்விக்கு எனக்கு உடனுக்குடனே பதில் வரணும் மோகி. இல்லனா எனக்கு கெட்ட கோவம் வரும். தன் அலுவலகத்தில் காட்டும் அதிகாரத்தை பெண்மயிலின் மீதும் குரல் உயர்த்திக் காட்டியதில் பயம் கொள்ள அவள் ஒன்றும் அவன் எம்பிளாயி இல்லையே! தானும் அவனை முறைத்தவளாக. அதான் நான் காலேஜ் போகாத வரைக்கும் நல்லா நோட்டம் விட்டு தெரிஞ்சி வச்சிருக்கியே. எதுக்காக போகலனும் உனக்கு காரணம் தெரிஞ்சி இருக்காதா என்ன? சிலுப்பிக் கொண்டு முகத்தை திருப்பியவளின் இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் இந்நேரம் பேசிய நபரின் குரவலை நசுங்கி வேறு மாதிரியான விபரீதம் நடந்திருக்க கூடும்.

மோகிஇஇ.. டென்ஷன் பண்ணாம ஒழுங்கா என்ன பாத்து பேசு. இந்த கழுத்த திருப்புற வேலையெல்லாம் வச்சிக்காத டி அப்புறம் நான் பொல்லாதவனா மாறிடுவேன் கடினக்குரலில் மொழிந்தவனை கண்டு சிறிதும் பயம் இல்லை அவள் கண்களில். "இப்ப மட்டும் என்ன ரொம்ப ரொம்ப நல்லவனாவா இருக்க. ஒரு நாள் ரெண்டு நாள் கோவமா இருந்திருந்தா பரவால்ல. மாசக் கணக்குல என்ன தனியா தவிக்க விட்டு என்கிட்ட ஒரு வார்த்தை பேசாம உன்னால இருக்க முடிஞ்சிதுல்ல. குரல் உடைந்துப் போனவள் அதே மாதிரி இப்பவும் இருக்க வேண்டியது தானே. 'வந்ததும் என்னை பத்தி ஒரு வார்த்தை கேக்க தோணல. இப்ப நான் காலேஜ் போகாதது தான் ஐயாக்கு பெரிய குறைபாரு' கடைசி வரியை அவன் செவியில் விழும்படியே முணுமுணுத்து அவன் கரத்தை தட்டி விட்டு மூலையில் சென்று அமர்ந்துக் கொண்டவளை கண்டு ஆடவனின் கண்கள் ரசனையில் மிலிர்ந்து பாவையின் கோவம் கொஞ்சும் சிவந்த முகத்தை கற்பாறையான கல்வெட்டு நெஞ்சினில் கலையப்படாத ஓவியமாக சேமித்து வைத்துக் கொண்டான்.

இத்தனை நாள் பிறகு வந்தவங்கிட்ட கோவப்பட்டு ரொம்ப பண்ற டி மோகி. இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரல, என்றவனின் விழிகள் கலைந்த ஓவியமாக இருந்தவளின் தோற்றத்தை வந்ததும் ஸ்கேன் செய்து இருப்பினும் திரும்பவும் அவள் உச்சி முதல் பாதம் வரை ஆயிராய்ச்சி செய்தது அவளை நெருங்கி.

உன்ன பாக்காம உன்கிட்ட பேசாம பைத்தியம் ஆகிட்டேன் விஷ்வா. இதுல எப்டி என்னால காலேஜ் போக முடியும். போனாலும் படிப்புல கவனம் செலுத்த முடியாம ப்ரொபசர்கிட்ட திட்டு வாங்கி கிளாஸ்மேட்ஸ் கேலியா சிரிக்க வெளிய நின்னது தான் மிச்சம். ஏன் டா இவ்ளோ கொடுமையான கோவத்தை எம்மேல காட்டிட்டு போன, விசும்பலாக அவன் சட்டையைப் பற்றி உளுக்கி. எப்பவும் மோகிமா மோகிமா என்னையே நீ சுத்தி சுத்தி வந்த போதும், உன்ன பாத்து உன்கிட்ட பேசிட்டு இருந்த வரைக்கும் என்னால உணர முடியாத ஆழமான காதலை நீ இல்லாத இருந்த இத்தனை நாளுல தான் புரிஞ்சிது உம்மேல நான் எந்த அளவுக்கு பைத்தியக்காரதனமான காதலை வளர்ந்து வச்சிருக்கேன்னு. ப்ளீஸ் விஷ்வா இனிமே என்ன ஒருபோதும் இப்டி ஒரு நிலைமைல தனியா தவிக்க போயிடாதே டா. துயரத்தில் அவன் கழுத்தோடு புதைந்து அவனது நிராகரிப்பை எண்ணி வாயில் இருந்து நூலாக எச்சில் வடிய தேம்பி அழுதவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கொண்ட அவன் மீதான அன்பும் நேசத்தையும் அப்பட்டமாக பறைசாற்றிதில் ஆடவன் இதயத்தை தாக்கி நசுக்கிப் பிழிந்து ரத்த நாளங்களை வெடித்து சிதறடிக்கும் உணர்வு.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் குற்றவுணர்வுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிப்பவனுக்கு மோகியின் உன்னதமான அன்பில் கரைந்து அணைத்து வன்மத்தையும் தூக்கிப்போட்டு பெண்ணவள் மடிதனில் காலம் முழுக்க விழுந்து கிடக்கக் கோரிய மனதை கடினப்பட்டு மாற்றி மீண்டும் மீண்டும் தான் கொண்ட வன்மத்தை தூக்கி தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொள்கிறான்.

மோகி.. மோகிஇஇ.. டோன்ட் க்ரை பேபி. சாரி டி.. அழாத ப்ளீஸ். நீ இந்த அளவுக்கு என்ன நினைச்சி ஃபீல் பண்ணுவேன்னு நிஜமா எனக்கு தெரியாது பேபி. எம்மேல இவ்ளோ அன்பை வைக்க அப்டி நான் உனக்கு என்ன டி பண்ணிட்டேன். உன் காதலை நினைக்கும் போது மூச்சு முட்டுது டி. ப்ளீஸ் இவ்ளோ காதலை எம்மேல வைக்காத டி. அதுக்கு நான் தகுதியானவனானு அடிக்கடி என்ன யோசிக்க வைக்கிது. வேதனை வார்த்தையை சொல்லி முடிக்கவில்லை பாவையின் பொன்கரத்தால் அவன் வாயை மூடி இருந்தமையால்.

ஏன்.. ஏன்.. விஷ்வா இப்டிலாம் சொல்ற. எனக்கு என் காதல் மேல கூட சந்தேகம் வரும் ஆனா உன்னோட காதல்மேல ஒரு துளி கூட சந்தேகம் வராது விஷ்வா. ஒவ்வொரு முறையும் உன்னோட காதல்ல நான் உணர்ர பலவிதமான உணர்வுகள வார்த்தைகளால சொல்ல முடியாது விஷ்வா. பிறந்தது முதல்லே பாக்காத உருவமான எங்க அம்மாவோட தாய் பாசத்தை உன் ரூபத்துல உணர்ந்து எத்தனை முறை மனசலவுல சந்தோஷப் பட்டிருப்பேன் தெரியுமா. எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு, இந்நேரம் உங்க அம்மா மட்டும் உயிரோட இருந்திருந்தா அவ பாசத்துக்கு இணையா வேற யாரும் உன்கிட்ட கூட நெருங்க முடியாது மோகினு. ஆனா அவர் சொன்னதை மீறி நீ எம்மேல காட்டின பாசம் இருக்கே அது என் அம்மாவால கூட கொடுக்க முடியாத கலங்கமில்லாத அன்பு விஷ்வா. கண்ணீரோடு அவன் காதலை தாய்க்கும் மேலாக உயர்த்தி புகழாரத்தோடு சொல்லியவளை இழுத்து அணைத்தவன் கண்கள் குளம் கட்டி இருதயம் படுவேகமாக அடித்துக் கொண்டதில் இப்போதே அவள் மடியில் புதைந்து செத்து விடலாம் போல் இருந்தது.

என்னாச்சு விஷ்வா? அவள் கழுத்தில் புதைந்திருந்த ஆடவனின் தலையை மெல்ல வருடி விட்டாள்.

ப்ளீஸ் டி. இவ்ளோ காதலை எம்மேல நீ வைக்கிறது எனக்கு என்னவோ சரியா படல. நார்மல் கபில்ஸ் மாதிரி நாமும் இருந்திடலாம் மோகிமா. உன் காதலை மட்டும் குறைச்சிக்கோ டி, உன்னோட இவ்ளோ அன்பையும் தாங்கிசுமக்க கொஞ்சமும் என் இதயத்துல இடமில்ல. அவனை மீறி வெளிவந்த ஒரு சொட்டு கண்ணீரை அவள் தோள்சட்டையின் மீது அழுத்தமாக துடைத்திருந்தான்.

மச்.. சும்மா எதையாவது பேசிட்டு இருக்காதே விஷ்வா. நானே உன்ன பாத்த பிறகு தான் நிம்மதியா மூச்சி விடுறேன். சரி நீ எப்டி இருக்க. என்ன பாக்காம சந்தோசமா இருந்திருப்ப தானே? பேச்சை மாற்ற வேண்டி கேட்டாலும் தன்னை பார்க்காது அவன் எப்படி இருந்திருப்பான் என்று தெரிந்துக்கொள்ள பேராவல் அவளிடம்.

அதை தெள்ளத் தெளிவாக உணர்ந்தவனாக அவன் அடைந்த மொத்த தவிப்பையும் அவள் இதழை சிறை பிடித்து இதழ் வழியே கிடத்தியவன் பெண்ணவளின் ஜீவனை மொத்தமும் தன்னுள் உறிஞ்சியபடி தாரகை கண்மணியை கைகளில் ஏந்தி அவள் அறைக்குக் கொண்டு செல்ல எதையும் உணரமுடியாத படிக்கு தன்னவனின் இதழ் முத்தத்தில் மூச்சி முட்டியவளின் முதுகு புறம் இருந்த சுடிதார் சிப் கழட்டும் சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் பனிக்கட்டி கண்களில் தன்னை தொலைக்கவிருந்த மனதை பெரும்பாடு பட்டு அடக்கி வைத்தான்.

விஷ்வா.. என்ன இறக்கி விடு அவன் கையில் துள்ளிய புள்ளிமானை விடாது அவளை கூர்ந்தவன். அமைதியா இருக்கியா இல்ல வந்த வழிய பாத்து போயிட்டே இருக்கவா? அதட்டலோடு வந்த வார்த்தைதனில் எங்கே மீண்டும் கோவம் கொண்டு சென்று விடுவானோ என்ற பயத்தில் பதட்டமாக அவனை கண்டவளை குளியலறையில் இறக்கி விட்டான்.

ஒன்றும் புரியாமல் விழித்து தள்ளாட்டமாக நின்றவளின் ஒரு பக்க தோளில் வழிந்த ஆடையை அவசரமாக இழுத்து விட்டபடி படபடக்கும் இமைகளை தாழ்த்தி, விஷ்வா இங்க எதுக்கு என்ன தூக்கிட்டு வந்த உள்ளடங்கிய குரலில் கிறக்கம் கொண்டான் விஷ்வரூபன்.

காதலன் பார்வைதனில் மாற்றம் கண்டு தேகம் சிலிர்த்து திகைத்தவள், எ.எ.ன்ன வ்.விஷ்வா அப்டி ப்.பாக்குற. காற்றாக வந்த வார்த்தையோடு பின்னால் அடி வைத்தாள் உள்ளூர தோன்றிய குறுகுறுப்போடு.

ஏன். மோகி, உன்ன நான் பாக்க கூடாதா. எப்போதும் பழி வாங்க வேண்டி உதிர்க்கும் வார்த்தை அல்லாமல் அவன் மனதில் இருந்து முதல் முறையாக தன்னவள் என்ற உரிமையோடு வந்த வார்த்தை அது.

ஹான்.. அ.தூ.. என ராகம் இழுத்து என்ன சொல்வதென யோசிக்கும் போதே. எ.தூ.. என்றான் அவளைப் போலவே ராகம் இழுத்து.

அச்சோ விஷ்வா.. வெளிய போ. ந்.நீ ஆளே சரியில்ல. பூபந்தாக தொண்டைகுள் ஏதோ உருல ஆடவனின் சொக்க வைக்கும் தாபப் பார்வையில் உடல் முழுக்க ஒரு இடம் விடாமல் கூசி அவஸ்தையாகி போனது.

சட்டென தன் மீது ஜில்லென்று பூந்தூரலாக இறைத்த தண்ணீரியில் மொத்தமாக நனைந்துப் போனதில் திடுகிட்ட மோகபெண்ணின் மோகம்கொள்ள வைக்கும் செழுமை கொஞ்சும் நீரில் நனைந்த பிஞ்சான மோகமேனியை கண்டு எச்சில் விழுங்கிய விஷ்வரூபன், நீரில் பளபளத்து தவிப்பாக மின்னி நடுங்கிய ஈர இதழ்களை பட்டென சிறை செய்து, திறந்திருந்த சிப்பின் வழியாக பாவையின் வெண்முதுகை கரங்கள் கொண்டு தூறுவாரி மோகக்கன்னியின் மீதுள்ள ஒட்டுமொத்த ஏக்கத்தை தணிந்துக் கொள்ள நினைத்தான் போலும்.

ம்..ம்..ம்ம்.. வ்.வி..விஷ்வா.. விடு.. அவளை வாய் திறக்க விடாது தேன்மதுரம் சிந்தும் இதழை பூட்டி தேன் எடுக்கும் ஆண் வண்டின் அடாவடி கலந்த அன்பு முத்தத்தில் மிரண்டு எல்லை மீறும் கரங்களை தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவளின் இடையின் கீழ் இறங்கிய முரட்டு கரத்தை இறுகப்பற்றி மறுகரத்தால் அவனது தலை முடியை இழுத்து தன்னிடமிருந்து பிரித்து தள்ளி ஆடையை சரி செய்துக் கொண்டு தேகம் நடுங்க எதையும் பேச முடியாது அவள் நிற்கும் கோலம் ஆடவனின் தாபத்தை அதிகரிக்க வைத்ததில் தன்னை கட்டுப்படுத்த முடியாதவனாக. 'குளிக்காம கொள்ளாம கலைச்சி போய் இருந்தியேனு முதல்ல உன்ன குளிக்க சொல்லலாம்னு இங்க தூக்கிட்டு வந்தேன். பட் கண்ட்ரோல் மிஸ்ஸாகி நானே இப்ப என் கண்ட்ரோல்ல இல்ல டி உன்ன என்னென்னவோ பண்ணனும்னு தோணுது. இதுக்கு மேல நான் இங்க இருந்தா அப்புறம் என்னாலையே என்னை கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம் குளிச்சிட்டு பிரெஷா வாடி மோகிஇ.. உன்ன விதவிதமா' என சொல்லும் போதே என்னஆ.. என்று பெண்ணவளின் குரல் அதிர்ந்து வரவும் 'விதவிதமா லவ் பண்ணனும்னு சொல்ல வந்தேன் டி' குறும்பாக கண்ணடித்து நெற்றி முட்டியதில் இதழ் கடித்து வெட்கம் கொண்ட மோககன்னிகையை கண்டபடியே அவஸ்தையாக குளியலறையில் இருந்து வெளியேறியிருந்தான்.

தன்னவனின் குறும்புகளை எண்ணி சிரித்தபடியே அவன் விரல் தொட்ட இடங்கள் குறுகுறுக்க குளித்து முடித்து மாற்றுடை தேடியபோதே தான் மட்டுமே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல் நேரடியாக தன்னவன் கைகலில் மிதந்து வந்தது நியாபகம் வந்திட, அச்சோ.. இந்த நிலமைல நான் எப்டி வெளிய போவேன். விட்டா ஆளையே உருக்கி குடிச்சிடுவானே இந்த விஷ்வா ராஸ்கல். திருத்திருவென முழித்து யோசனையில் நிற்கும் போதே கதவு தட்டும் ஓசையில் தடுமாறி நின்றாள்.

ஏய்.. மோகி.. கதவ தொற. அவன் தான் அழைத்தபடி தட்டிக் கொண்டு இருப்பது.

ஏ..ஏன்.. உள்ளிருந்தவள் குரல் அநியாயத்துக்கும் நடுங்கி இருந்தது அவள் நிற்கும் கோலத்தை உணர்ந்து.

ஏன்னா? மாத்திக்க ட்ரெஸ் வேணாமா? அப்டியே உள்ள எவ்ளோ நேரம் நிக்க போற? பெண்ணவள் உள்ளே எப்படி நின்றுக் கொண்டிருப்பாள் என்ற கற்பனையை கண்ணில் நிறுத்தி தலையில் அடித்துக் கொண்டான் வெட்கப்புன்னகையோடு.

அ. அதுக்கு..

ம்.. கதவை திறந்து விட்டா நானே வந்து ட்ரெஸ் மாத்தி விடுவேன். குறும்பு சிரிப்போடு உரைத்திருக்க, உள்ளே இருந்தவளோ உள்ளம் திடுகிட்டுப் போனாள்.

ஒன்னும் வேணாம். ஒழுங்கா வெளிய ஹால்க்கு போ விஷ்வா நானே ட்ரெஸ் மாத்திக்கிட்டு வரேன். இப்போல்லாம் நீ கொஞ்சம் கூட சரி இல்ல. அவளின் உரிமையான கண்டிப்புக் குரலில் வெட்கமின்றி பல்லிளித்துக் கொண்டான் அவன்.

ரொம்பத்தான்டி ஓவரா பண்ற. எனக்கு சொந்தமானத எப்டி பாக்கணும் ரசிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும் அப்போ இருக்கு உனக்கு. கட்டில் மேல உனக்கு ட்ரெஸ் வச்சிருக்கேன் மாத்திக்கோ நான் ஹால்ல வெயிட் பண்றேன் என்றவனோ மீண்டும் மீண்டும் அவளை சீண்டாமல் வெளியே சென்றிட. அவன் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு வெளியே வந்தவள் அவன் எடுத்து வைத்த உடையை கண்டு விழி விரித்தவளாக ஆசையோடு அதையே மாற்றிக் கொண்டு அறைகதவை திறந்துக் கொண்டு வெளியே வந்த மோகப்பெண்ணை கண்டு அசந்துப் போனான் விஷ்வரூபன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top