Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 15

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 15

தந்தையைக் கண்டதும் அன்பொழுகும் புன்னகையோடு வரவேற்ற மகளை அணைத்தவராக தட்டிக் கொடுத்து, என்ன கண்ணு போன தரம் பாத்தத விட இப்ப எளச்சு போன மாறி இருக்க. சரியா சாப்பிட்டிறியா இல்லையா அக்கறையாக விசாரித்தபடி அவள் கையில் சில பைகளை கொடுத்தார் அவர்.

ரொம்ப நாள் பிறகு பாக்கவே உங்க கண்ணுக்கு அப்டி தெரியிதுப்பா. நான் நல்லா தான் சாப்பிடுறேன். ஆமா எனக்காக என்ன வாங்கிட்டு வந்தீங்க. கேட்டதோடு இல்லாமல் தரையில் அமர்ந்து பைகளை பிரித்து மேய்ந்து மாங்காய், வெள்ளரிபிஞ்சி, அல்வா, சிப்ஸ், தேங்காய் பர்பி என்று அவளுக்கு பிடித்த பொருட்களை எல்லாம் கடை பரப்பி கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை இப்போதும் ஐந்து வயது பிள்ளையாகவே பாவித்து புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் வெள்ளைச்சாமி.

என்னதான் ஆள் வளர்ந்துவிட்டிருந்தாலும் தந்தை வாங்கிக் கொடுக்கும் ஒரு ருபாய் மிட்டாயை கூட நாவில் எச்சில் ஊர கண்களை உருட்டி புதிதாக பார்க்கும் சிறுமியை போல் கை தட்டி குஷியாக குதிக்கும் அத்தனை ஆர்வம் அவளிடத்தில். காதலன் வந்ததும் அவன் உண்டானா இல்லையா என அக்கறையோடு அவனுக்காக பார்த்து பார்த்து உபசரிக்கும் பெரிய மனுஷி மோகி அவள் தந்தை மதிய வெயிலின் தாக்கத்தில் வியர்க்க விருவிருக்க தொண்டை வறண்டு வந்திருப்பதை கூட கவனிக்க முடியாத படிக்கு சிறு பெண்ணாக மாறி போனதை அவள் அறியாமல் போனாளே!

அவர் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பிரித்து அதுஅதில் கொஞ்சம் கிள்ளி வாயில் போட்ட பின்பு தான் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள். அப்பா சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு கை கழுவிட்டு வந்து சாப்பிடுங்க, நேரத்துக்கு மாத்திரை போடனும் என்றவளோ வட்டசிலுவர் தட்டில் உணவை பரிமாறி அவர் உண்டு முடிக்கும் வரை காத்திருந்து தண்ணீர் கொடுத்து கை கழுவ முதற்கொண்டு உதவி புரிந்து மருந்துக் கொடுத்து உறங்கும் வரை பலகதைகள் பேசி சிரித்துக் கொண்டு இப்போது தந்தைக்கு தாயாகிப் போனாள்.

பொழுது போனது தெரியாமல் தந்தையோடு இருந்தவளின் எண்ணத்தில் இன்னிசையாக வந்த காதல் கண்ணாளனின் நினைவில் தனதறைக்கு ஓடி வந்தவள் போனை எடுத்து அவனுக்கு அழைக்கலாம் என்று அவனது எண்ணை அழுத்தப்போக அவனிடமிருந்தே அழைப்பு வந்ததில் முட்டைகண் பெரிதாகி கூடுதல் மகிழ்ச்சியோடு உடனே அழைப்பை ஏற்றவளாக, சொல்லு விஷ்வாஆ.. என்றிருந்தாள் எழில் கொஞ்சும் தேனிசை குரலால்.

பரவால்லயே உன் அப்பாவ கூட வச்சிட்டு என் பேரையெல்லாம் நியாபகம் வச்சிருக்கியே. அந்த பக்கம் இகழ்ச்சியாக ஒலித்த நக்கலை உணராதவளோ. உன் பேர மறக்குற அளவுக்கு நான் என்ன அம்னீஷியா பேஷட்டா. நீதான் மாசக்கணக்குல என்ன மறந்துட்டு இருந்த நான் ஒன்னும் உன்ன மறந்துட்டு இல்ல. அந்த விஷயம் சார்க்கு நியாபகம் இல்ல போல. சிலிப்பிக் கொண்டு உரைத்தவளின் கோவத்தை பார்க்க அந்த பக்கம் இருந்தவனுக்கு பேராவல்.

ஏய்.. மோகிஇ.. ஏய்.. கேக்குதா இல்லையாடி. சாதாரணமாக குரல் உயர்த்தியதற்கே காது ஜவ்வு விட்டுவிடும் உணர்வு. ஸ்ஸ்..கேக்குது விஷ்வா ஏன் இப்டி கத்துற சிணுங்கி கொஞ்சும் அழகை அள்ளிப்பருக ஆண்மை துடித்துப் போக, ஏதே கத்துறேனே அதுசரி என்ற சலிப்போடு 'மோகிமா வீடியோ கால் வாடி உன்ன பாக்கணும்' கிறங்கி ஒலித்த குரலில் சொக்கி விழுந்தாள் பாவை.

'வெளிய அப்பா இருக்காரு விஷ்வா. உள்ள பேசினாலும் வெளிய கேக்குமே என்ன பண்றது' அப்பாவியாக கேட்டிட.

'ஹெட்செட் எடுத்து போடு டி எல்லாத்தையும் ஒவ்வொன்னா உனக்கு விளக்கி கிளாஸ் எடுக்கணுமா' அவளை நினைத்ததும் பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சலில் கத்தியவனின் கோவம் அப்பட்டமாக அவன் வார்த்தையில் வெளிப்பட்டதில் முகம் சுருங்கியவளின் வாடிய வதனம் போன் திரை வழியாக இப்போது அவன் கண்களுக்கு அழகோவியமாக காட்சியளித்தது.

மோகிஇ.. மச்.. பாரு டி. ஹஸ்கியான குரலில் மெல்ல விழிகளை உயர்த்தி போன் திரையில் கண் பதித்தவள் வசீகரிக்கும் ஆடவனின் முகத்தைக் கண்டு இமைக்க மறந்தவளை கலைத்தது மீண்டும் அவன் குரல்.

'ஓய்.. இன்னும் எம்மேல கோவமா குட்டி' குழைந்து வந்த தேன்குரலில் தன்னிச்சையாக ஆம் என பாவமாக தலையாட்டிய பொம்மை பெண்ணை புதிதாக கையில் வைத்து கொஞ்ச ஆசை பிறந்தது.
'ஏன் இன்னும் கோவம் போகலயாம்' சிவந்திருந்த மூக்கும் லேசாக வீங்கி இருந்த செவ்விதழும் கழுத்து வளைவில் பற்கள் கொண்டு அச்சிட்ட பற்தடம் என்று ஒவ்வொன்றையும் அவன் லேசர் விழிகள் படமெடுத்துக் கொண்டிருப்பதை அறியாத பேதையோ 'பின்னே இப்போல்லாம் எம்மேல நீ அடிக்கடி கோவப்படரயே' பாவமாக பிதுக்கிய உதட்டை வரிக்கு வரி நாவல் தழுவி கண்ட மேனிக்கு கடித்து உண்ண கொல்லை ஆசை.

உதட்ட அப்டி வைக்காத டி மோகி இப்பவே கிளம்பி அங்கே வந்து பிதுக்குற உதட்ட கடிச்சி தின்னுடுவேன் பாத்துக்கோ, உணர்ச்சிகளின் பிடியில் கரகரத்து சொன்னதில் வெட்கம் பூசிய மௌன புன்னகையோடு கீழ் உதட்டை கடிக்க அங்கு ஒருவனுக்கு நிலைக்கொள்ளவில்லை.

எங்கே இருந்து போன் பண்ற ஆபிஸ்ல இருந்தா? திரை வழியே ஊடுருவும் காந்த கண்களை கன்னத்தில் கை வைத்து ரசித்துப் பார்த்தாள்.

'ஹ்ம்.. வேற எங்க இருக்குறது. உங்க அப்பா மட்டும் இல்லனா இந்நேரம் எவ்ளோ நல்லா இருந்திருக்கும், உன்கூடவே இருந்து முத்தம் மட்டும் இல்ல இன்னும் என்னென்னவோ பண்ணிருப்பேன் டி உன்ன. எல்லாம் உங்கப்பனால வந்துச்சி கரடிமூஞ்சன்' கரடிமூஞ்சன் என்றதை மட்டும் தனக்குள்ளே விழுங்கிக் கொண்டு சலிப்பாக முகம் சுழித்தவனை முறைத்தவளாக, டாய்.. அடிவாங்குவ ராஸ்கல். வர வர ரொம்ப வாய் கூடி போச்சி உனக்கு. லவ் சொல்லும் போது இருந்த குட் பாய் விஷ்வா நீ இல்ல. இப்போல்லாம் ரொம்ப கெட்ட பையனா மாறிட்ட டா. செல்லக் கோபத்தோடு உதட்டை சுழித்தவளை கீழ் கண்ணால் கண்டவன். லவ் சொல்லும் போதே கட்டிப்புடிச்சி முத்தம் வச்சா செருப்பால அடிப்பியே. ஆனா இப்ப அப்டி இல்ல, என்னை நல்லவனா காட்டிக்கவும் அவசியம் இல்ல. நான் கிஸ்ஸடிச்சா பதிலுக்கு என் மோகியும் கிஸ்ஸடிக்கிறாளே என்று கண்ணடிக்கவும் ச்சி.. போடா.. என வெட்கம் கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

அன்றில் இருந்து தினமும் நேரம் காலமின்றி தொடர்ந்தது வீடியோ கால் காதல். அதனோடே முத்த கொஞ்சல்களும் அந்தரங்க குறும்பு பேச்சுகளும் பேசி பெண்ணவளின் செவியை கூச வைப்பான். காலை மாலை கல்லூரிக்கு அவளின் தந்தையே அழைத்து சென்று வந்ததில் மோகியை நெருங்க முடியாத நிலை அவனுக்கு. சரி மதியமாவது பார்த்து விட்டு வரலாம் என்றால் வேலையே அவனை இறுக்கி பிடித்துக் கொள்ள போனில் மட்டும் பார்த்து அவளோடு பேசுவது கொஞ்சமும் திருப்தி இல்லாமல் போன கோவம் யாவும் தந்தை மகள் இருவரின் மீதும் பாரபட்சமின்றி கிளர்ந்தது.

அன்றிரவும் வீடியோ கால் செய்திருந்தான். எப்போ தான் டி உங்கப்பா ஊருக்கு போவாரு. வந்தோமா பொண்ண பாத்தோமா ஊர பாத்துட்டு போயிட்டே இருப்போமானு இல்லாம, வந்து ரெண்டு வாரமா இங்கேயே டேராப் போட்டதும் இல்லாம, லீவ் டேஸ்லயும் பாக்க முடில. நீ எங்கே போனாலும் எலிவாளாட்டம் உன் பின்னாடியே வந்துட்டு இருந்தா நான் எப்டி டி உன்ன பாக்குறது. சரி தெரியாம எங்கயாவது மீட் பண்ணலாம்னு பாத்தாலும் உன் நொப்பாவ உட்டு எங்கேயும் வந்து தொலையவும் மாட்ற. இப்டியே போய்ட்டு இருந்தா உங்கப்பன என்ன பண்ணுவேன்னே தெரியாது டி. எடுத்ததும் ஆத்திரமாக விழுந்த வார்த்தைகலில் பற்களை கடித்துக் கொண்டு பொறுமை காத்தவளுக்கு அவன் தவிப்பு புரிந்தாளும் தன் தந்தையை மதிக்காது பேசுவதில் கோவம் பொங்கியது அவளுள்.

பேசிட்டே இருக்கேன் அப்டியே கல்லு போல அமைதியா இருந்தா என்ன டி அர்த்தம், தன்னவள் என்ற உரிமை அவன் ஆழ்மனதில் வந்ததும் அதிகாரமும் தூள் பறந்தது அவளிடம்.

கொஞ்சம் அமைதியா பேசு விஷ்வா, எதுக்கு இவ்ளோ கோவம். அப்பாக்கு உடம்புக்கு முடியல டா. ஏற்கனவே ஒருமுறை நெஞ்சி வலி வந்து ஆஞ்சியோ பண்ண உடம்பு அங்க இருந்தா திரும்பவும் மூட்டை தூக்குற வேலைக்கு போய் உடம்ப வருத்திப்பாரேனு என்கூட இருக்க சொன்னேன். அவருக்கும் என்கூட இருக்க ஆசை அதான் இருக்காரு. இன்னும் ஒரு வாரம் பிறகு கிளம்பிடுவாரு. அதுக்கு நீ ஏன் இவ்ளோ கோவப்படர விஷ்வா. அப்பாவ மரியாதை இல்லாம வேற பேசுற இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்ல. எனக்கு எங்க அப்பாதான் எல்லாமே ப்ளீஸ் திரும்பவும் அவர ஒரு வார்த்தை மரியாதை குறைவா பேசாத விஷ்வா. எல்லா நேரமும் நீ பேசுறத சகிச்சிக்கிட்டு பொறுமையா போக மாட்டேன்.

கடைசி வரியை அழுத்தம் திருத்தமாக உறைந்த கண்ணீரோடு சொல்லியவளை அழுத்தமாக கண்டவன் எதுவும் பேசாது அத்தோடு அழைப்பை துண்டித்தவன் தான். அதன் பிறகு அவனும் அவளுக்கு அழைப்பு விடுக்கவில்லை அவள் அழைத்தாலும் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் ஒருமுறை அவனின் நிராகரிப்பில் மனதும் உடலும் சோர்ந்துப் போனாள் மோகி.

என்ன மோகிமா ரெண்டு நாளா ஆளே சரி இல்லாம இருக்க. உடம்புக்கு ஏதாவது முடியலயலயா கண்ணு பரிவாக கேட்ட தந்தைக்கு உடனடியாக இன்ஸ்டன்ட் புன்னகை வீசி. நான் நல்லா தான் இருக்கேன் ப்பா, நைட் கண் முழிச்சி எக்ஸாம்க்கு படிச்சதால ஒரு மாதிரி டல்லா இருக்கு வேற ஒன்னும் இல்ல. சமாளிப்பாக ஏதேதோ சொன்னாலும் தாய் ஸ்தானத்தில் இருந்து அவளை வளர்த்தவருக்கு பெற்ற பிள்ளையின் முகம் சிறிது வாடினாலும் மனம் தாங்காமல் தவித்து போகிறது.

இல்லாம நீ சரி இல்ல. என் பொண்ணு சந்தோசமா இருந்தா எப்டி இருப்பா கவலையா இருந்தா எப்டி இருப்பானு பெத்து வளத்த எனக்கு தெரியாதா. சரியா கூட சாப்பிடறது இல்ல என்ன பொண்ணுமா நீ. இப்டி தான் இங்க தனியா இருந்து உடம்ப பாத்துக்காம விட்டுறியா என்றவர் கையோடு தட்டில் உணவை போட்டு வந்து பிசைந்து ஊட்டியதில் காதலனின் புறக்கணிப்பில் உள்ளம் வெதும்பி இருந்தவளுக்கு தந்தையின் அன்புருகும் கரிசனத்தில் சற்றே தெளிந்தவளாக ஆ திறந்து தந்தையிடம் செல்லம் கொஞ்சி உணவுண்டு முடித்தவளை, விஷ்வா பைத்தியத்தில் இருந்து காப்பாற்றி இருந்தார் அவர். அவர் மட்டும் இந்நேரம் இங்கு இல்லையேல் தன்னதனியாக போனும் கையுமாக போன முறை போல் இந்த முறையும் பைத்தியம் பிடிக்காத குறையாக இருந்திருப்பாள்.

இன்னைக்கு ஒனக்கு காலேஜி லீவ் தானே மோகிமா..

ஆமா ப்பா. ஏன்?

பொங்கல் வர போகுது நான் இங்க இருக்கும் போதே கடைக்கு போயி ஒனக்கு புது துணி எடுக்கலாம்னு பாத்தேன். நம்மூட்டுல டிவில ஒரு கடையோட விளம்பரத்த பாத்தேன் இருக்குறதுலே பெரிய ஜவுளிக்கடையாமே அது. அவங்க கம்பனி தயாரிக்கிற துணிங்கள தான் உலகம் பூராவும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறாங்கலாம். நம்ம பழனிசாமி பையன் கூட அங்க தான் வேலை பாக்குறானு சொன்னான் துணி எல்லாம் அம்புட்டு தரமா இருக்குனு சொல்லிட்டு இருந்தான். அதான் அங்க உன்ன கூட்டிட்டு போயி நல்ல நல்ல துணிங்க எடுத்து குடுக்கணும்னே காசு சேத்து எடுத்துட்டு வந்தேன் கண்ணு என்றவறின் வெள்ளந்தியான பேச்சில் கண்கலங்கியது பெண்ணவளுக்கு.

அவள் பிறந்தது முதலே அவரை பற்றி என்றுமே யோசித்ததே இல்லை அவர். மகளை எப்படி எல்லாம் அவள் மனம் சங்கடப்படாதவாறு சந்தோசமாக வைத்துக் கொள்ளாமல் என்ற யோசனையை தவிர. ஓடி ஓடி உழைத்து உடல் ஓடாக தேய்ந்த பின்னும் மகளின் நினைவு ஒன்றே எனர்ஜி டானிக் அருந்தியதை போல் உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது. அவருக்கென்று சரியான உடைகள் இல்லாத போதும் மகள் நல்ல உடை உடுத்த வேண்டும் என்பது தான் தந்தையின் பெருந்தன்மையை பெரிதாக எடுத்துக் காட்டுகிறது.

குடிக்க பணம் இருந்தால் போதும் மற்றவர்கள் யார் எப்படி போனால் எனக்கென்ன என எந்த கவலையுமின்றி எந்நேரமும் குடியும் கையுமாக போதையின் அடியாகவே இருக்கும் தந்தைமார்களுக்கு இடையே இப்படி ஒரு சுயநலம் இல்லா தந்தை கிடைப்பது எல்லாம் வரம் அல்லவா. அப்படி கிடைத்த வரத்தை மோகி கடைசிவரை தன்னோடு தக்க வைத்துக் கொள்வாளா என்பதில் தானே பெருத்த கேள்விகுறியே அடங்கி இருக்கிறது.

'VV டெக்ஸ்டைல் கிங்டம்' என்று பிரத்தியேகமான லோகோ டிசைனில் ஆடம்பரமாக வரவேற்ற தங்கமளிகை போல் மின்னிய விஷ்வரூபனின் ஜவுளிக்கடைக்கு அவன் கடை என்று அறியாமலே வந்திருந்தனர் தந்தையும் மகளும் சிரித்துப் பேசிக் கொண்டு.

கடைக்கு ரவுண்ட்ஸ் வந்தவன் பார்வைதனில் இக்காட்சி விழுந்ததில், கேவலம் இந்த கிழத்திற்காகவா தன்னையே எதிர்த்து நின்றாள் என்ற பெருங்கோவத்தில் இருந்தவனுக்கு, தந்தை மகளின் பாசம் என்றால் என்ன என்பதை பற்றிய உன்னதமான அன்பை எதுவும் அறியாது போனான் விஷ்வரூபன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top