- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 16
முல்லை கையில் குழந்தையை வைத்துக் கொண்டே ஓடவும்,
அவளை விடாமல் துரத்திக் கொண்டே பல தடியர்கள் அவள் பின்னால் வந்தனர்.
அவர்கள் விடாது துரத்துவதை கண்டு நெஞ்சி பதைக்க, "கடவுளே எப்படியாவது, இவனுங்க கைல சிக்காம, குழந்தையும் என்னையும் காப்பாத்து" கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டே நிற்காமல் மூச்சிறைக்க ஓடியவள்,
ஓரிடத்தில பள்ளம் இருப்பதை பார்க்காமல், அதில் காலை வைத்து விட, ஒரு கால் உள்வாங்கியதில் குப்பற அடித்து விழப்போன முல்லை அதிர்ந்து, குழந்தைக்கு அடிபட்டு விடுமோ என்ற பயத்தில், குழந்தையை நன்றாக பிடிக்கும் முன் தொப்பென்று சாலையில் விழுந்து,
குழந்தையை தவற விட்டு இருந்ததில் அவளுக்கு அருகிலேயே விழுந்த குழந்தை மேலும் வீறிட்டு கத்தியது. நல்லவேளை குழந்தைக்கு பாதுகாப்பாக துணிகளை சுற்றி வைத்து இருந்ததால் அடி எதுவும் படாமல் போனது..
முல்லை சுதாரித்து எழுந்து குழந்தையை தூக்கும் முன், குழந்தையை ஒரு தடியன் வேகமாக எடுத்துக் கொள்ள.. பதறி போனவள்.. "என் குழந்தைய என்கிட்ட கொடுத்துடுங்க ப்ளீஸ், பாவம் பயந்து போய் அழறான்..உங்களுக்கு நாங்க என்ன பாவம் செஞ்சோம், ஏன் இப்டி எங்கள விடாம துரத்துறீங்க, தயவு பன்னி எங்கள விட்டுடுங்க.". கண்ணீரோடு கைக்கூப்பி கெஞ்சும் போதே அவளின் பின்னால் இருந்து உதைத்து இருந்தான் அந்த கொடிய அரக்கன்..
அவன் உதைத்த வேகத்தில் சாலையில் உள்ள போஸ்ட் மரத்தில் முட்டி மோதி விழுந்த பாவைக்கு, தலையில் அடி பட்டு ரத்தம் வெளியேறி இடுப்பு வலியில் எழ முடியாமல் தவித்து போய், கண்ணீர் ஆறாக பெறுகியது. இருந்தும் குழந்தைக்காக தன் வலியை சற்று ஒதுக்கி, தட்டு தடுமாறி எழப் போனவளிடம், அதற்குள் நெருங்கி இருந்தவன்,
"இனிமே நீ என்ன பண்ணாலும் என்கிட்டருந்து தப்பிக்க முடியாது டி" என்ற கொடூரன் அவள் கழுத்தில் தொங்கிய தாலியியை கண்டதும் ," முதல்ல இந்த தாலிய அறுத்து எறியனும் டி..." கட்டை குரல் அதிர அவள் தாலியை பறிக்க வர்ற,
"ப்ளீஸ் வேண்டா அப்டி மட்டும் பண்ணாத, அதான் எனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சே, அப்புறமும் ஏன் இப்டி பண்ற,.. என்ன விட்டுடு, நானும் என் குழந்தையும் எங்கயாவது போய்டுறோம்.." பின்னால் அடி எடுத்து வைத்தபடியே கண்ணீரோடு கெஞ்சினாள்.
"என்னது கல்யாணம் முடிஞ்சிடுச்சா" என்றவன், அரக்கத்தமாக சப்தமாக சிரித்து,, "சரி கல்யாணம் முடிஞ்சிதே, அடுத்து உனக்கும் உன் புருசனுக்கு சாந்தி முகூர்த்தம் முடிஞ்சிதா.. முதல்ல உன் கழுத்துல தாலி கட்டினவன் பேரு தெரியுமா டி.. ஹான்... தெரியாதுல்ல, அப்பறம் என்ன இதுக்கு கல்யாணம் ஆச்சி அது இதுன்னு சீன போட்டுட்டு இருக்க..
தாலி கட்டிட்டா அது பேரு கல்யாணம் ஆகிடுமா" என்றவன் அவள் கழுத்தில் அரவிந்த் கட்டிய தாலியை பிடித்து அறுக்க போக.. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டவளாக,
"வேண்டா ப்ளீஸ் என்ன இருந்தாலும் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி, என்ன விற்று" என்று திமிரிக் கொண்டே அவனிடமிருந்து ஓடி குழந்தையை வாங்க பார்க்க..
மீண்டும் அவள் பின்னால் இருந்து விட்டான் உதை.
"ஏன் டி சொல்லிட்டே இருக்க என்கிட்ட ஆட்டமா காற்ற.. என்று அத்தனை வேகம் கொண்டு ஆவேசமாக அந்த அரக்கன் எட்டி உதைக்க.. அதில் ஆஆஆ.. அம்மாஆ..என்ற அலறளோடு ஐந்தடி தள்ளிப் போய் விழுந்தவளால் இம்முறை எழமுடியாமல், கதறியே விட்டாள்.
அவள் அழுவதை கண்டு இடுப்பில் கை வைத்து சிரித்தவன்.. "அன்னைக்கு உன்ன அந்த கார்காரன்(அரவிந்த்) காப்பாத்த வந்த மாறி இன்னைக்கு எவனும் உன்ன காப்பாத்த வரமாட்டானுங்க டி,, இன்னைக்கு நீ முழுசா, உன் மேல ஆசை பட்டு, உன்னால ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் எடுட்டுட்டு இருக்கானுங்க பாரு துருவன் சந்திரன் என் தம்பிங்க அவங்களுக்கு இறையாகி சாவப்போற டி.."
அவன் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி தூக்கிவாரி போட.. இனி தன்னால் தப்பவே முடியாதா, மனதால் அழுது, நிலை குத்திய விழிகளுடன் அவனை கண்டால்..
"டேய் அங்க என்னடா கருமம் அந்த சனியன் வாழ் வாழ்னு கத்திகிட்டே இருக்கு, சீக்கிரம் அது கதைய முடிங்கடா.." அரக்கன் கத்த...
"சரிண்ணே" என்ற அடியாள் ஒருவன், இரக்கமற்று குழந்தையின் இரு கால்களையும் தலைக் கீழாக பிடித்துக் கொண்டு, சாலையில் ஓங்கி அடிக்கப் போக.. அதை கண்ட முல்லை அதிர்ச்சியாகி "ஐயோ என் குழந்தை".. என கத்திக் கொண்டே மயங்கி சரிந்தால்..
அங்கு நடக்கும் அக்ரமங்களை தாங்காமல், வான்மேகங்கள் கருத்து மழையாக பூமியில் பொழிய ஆரமித்த நேரம்.. குழந்தையை ஓங்கியவனின் கைகள் அப்படியே அந்தரத்தில் நிற்க.. மற்றொரு வலிய கரம் அவன் கைகளை வெறி கொண்டு இறுக்கி முறுக்க,, அவனிடம் இருந்த குழந்தை இப்போது அரவிந்த் கையில் இருந்தது..
முல்லை வீட்டை விட்டு வெளியேறிய விடயம் அரவிந்துக்கு தெரிய வர.. முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன்.. ஏதோ மனம் நிம்மதியற்று தவித்து போனது..
என்ன இருந்தாலும் அவளை தான் அடித்து அப்படி பேசி இருக்க கூடாதென மனதால் வருந்தியவனாக, அவள் சென்ற நேரம் கணக்கிட்டு பார்த்தான். முல்லை நாட்டை விட்டு போக போவதாக பாட்டியிடம் சொல்லிவிட்டு போக, நிச்சயம் முல்லை ஏற்போர்ட் தான் சென்று இருப்பாள் என்ற எண்ணத்தில்,, அவளை தேடி அங்கு வந்தவன்
முல்லையை எங்கும் காணாமல் தேடி அலைந்து சோர்ந்து போனவனாக, தனக்கு சொந்தமான ஏதோ ஒன்று தொலைந்து போனதை போன்ற உணர்வில், தளர்ந்த நடையுடன் வந்து காரை திறக்கப் போக, அந்த பக்கமாக தான் முல்லை கையில் குழந்தையுடன் தலை தெறிக்க ஓடிக்கொண்டும் அவள் பின்னால் நிறைய பேர் துரத்தி கொண்டு இருப்பதை பார்த்தான்..
விபரீதம் உணர்ந்து தாமதிகிக்காமல், போனை எடுத்து காவல் துறைக்கு அழைத்து சுருக்கமாக விபரத்தை கூறியவன்,அவர்கள் இருக்கும் இடத்தையும் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு அவர்கள் பின்னால் ஓடி வந்தான். அந்நேரம் தான் முல்லை கத்திக் கொண்டே மயங்கி சரியவும், அந்த தடியனிடம் இருந்து குழந்தையை பத்திரமாக கைபற்றி இருந்தான் அரவிந்த்...
அதை கண்ட அந்த அரக்கன், "பாக்க பால்டப்பா மாறி இருக்க, நீதான் இந்த சிறுக்கிக்கு தாலி கட்டின அந்த ஹீரோவா டா" என்றான் நக்கலாக.
"ஆமா, என் பொண்டாட்டிக்கு ஹீரோ, உனக்கு வில்லன்டா" என்றவனின் திமிர் பேச்சிச்சில் ஆத்திரம் அடைந்த அரக்கன் என்று அனைவராலும் அழைக்க படும் அகரன்.. அரவிந்தை தாக்கப் போக..
மழை ஒரு பக்கம் வேகமாக பொழிய துவங்க, ஒரு கையில் வீரீட்டு கத்தும் குழந்தையை பிடித்துக்கொண்டு, மறு கையால் அகரனையும் அடி வெளுத்து வாங்க.. தடியர்கள் எல்லாம் ஒவ்வொருத்தராக வந்து வாங்கி கட்டிக் கொண்டு போக,
சரியாக சைரன் ஒலி எழுப்பியபடி போலீஸ் ஜீப் வந்தது,
காவலர்கள் தடியர்களை அடித்து போட்டு ஜீப்பில் ஏற்ற.. அவர்களுடன் வந்த பெண் காவலாலி ஒருத்தி, குழந்தை அதிகமாக கத்துவதை பார்த்து, அரவிந்த் கையில் இருந்த குழந்தையை வாங்கி, காரில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
அவளும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் பச்சிளம் குழந்தைக்கு தாய் என்பதால், குழந்தையின் அழுகைக்கு காரணம் பசி என்று புரிந்து, தாய்பால் புகட்டி தூங்க வைத்து, மழை அதிகமா வரவே, குழந்தையோடு காரிலே அமர்ந்து இருந்தால்..
பின் தடியர்கள் அனைவரையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவலர்கள் செல்ல.. அரவிந்த் முல்லையை காரில் ஏற்றியதும், முல்லை அடி பட்டு மயங்கி இருப்பதால், அந்த பெண் காவலர் மட்டும் குழந்தைக்காக, அவர்களுடன் மருத்துவமனைக்கு சென்றால்..
முல்லையின் காயத்திற்கு கட்டு போட்டு, அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான், பயப்பட வேண்டாம் என்று மருத்துவர் சொல்லி செல்ல.. மயக்கம் கலையாமல் முல்லை படுத்திருக்கவே.. மீண்டும் ஒரு முறை துயில் கலைந்து கத்திய குழந்தைக்கு, அந்த பெண் காவலர் பசியாற்றி விட்டு அவனிடம் குழந்தையை கொடுத்து சென்றாள்.
அந்த பெண்ணுக்கு நன்றி உரைத்த்து அனுப்பி வைத்த அரவிந்த் அந்த குழந்தையை பார்த்தான்... அது அப்படியே முல்லை ஜாடையில்.. சிறிதாக கண்களை திறந்து பொக்கை வாயை பிளந்தபடி கை காலை அசைத்துக் கொண்டு இருந்தது...
மழை...

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.