- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 64
ஆஆ.. என்ற கணவனின் அலறலில் பதட்டமான கவி, "என்னாச்சி மாமா.. ஏன் கத்துனீங்க, நான் அவ்ளோ ஒன்னும் வேகமா அடிக்கலயே.." என்றவளின் கரம் ஒரு வித மென்மையை உணர்ந்துவிட்டதில், சந்தேகமாக அவன் மார்பை பார்த்தாள்.
எப்போதும் இல்லாமல் இரவில் சட்டை அணிந்திருந்தான், போதா குறைக்கு சற்று பெரிதாக புடைத்து வெளிவந்திருந்த மார்பு பகுதி குழப்பத்தை உண்டு செய்ய, உடனே சட்டை பொத்தானை கழட்ட முனையவும்,
"ஏய்.. கவிஇ.. என்ன டி பண்ற, கைய எடு.." சட்டென நகர முட்பட்டவனை தடுத்து,
"இப்ப சட்டைய கழட்ட போறீங்களா இல்லையா.." அக்மார்க் மனைவியாக விழிகளை உருட்டி மிரட்டவும்,
"என்ன டி மிரட்டலாம் செய்ற, சட்டை போட்டது தப்பாஆ..." அப்பா... அப்படி ஒரு அப்பாவி நடிப்பு அத்தனை வலியிளும்.
"நீங்க கோவப்பட்டு கத்தினா கூட அதுல ஒரு நியாயம் இருக்கும், ஆனா இந்த அப்பாவி முகத்தை வச்சிருந்தா நிச்சயம் அதுல கேடித்தனம் தான் இருக்கும்.. ஒழுங்கா சட்டைய கழட்டுங்க இல்ல எனக்கு கெட்ட கோவம் வரும்.." படுத்திருந்தவள் வெடுக்கென எழுந்து அமர, ஆத்விக்கோ மனைவியின் அதட்டலில், புதிதாக தோன்றிய படபடப்பில் இதயமெல்லாம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.
இதற்காக இந்த ஒரு சூழ்நிலை வரக் கூடாதென்பதற்காக தானே அவளிடம் கோவத்தை காட்டியது. ஆனால் அவளை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் அன்னை மடி தேடும் சேயை போல், அவள் ஸ்பரிசம் பட்டால் ரணவலியும் சுகமாகிவிடும் என்றெண்ணத்தில், அவனே வாண்டடாக வந்து மாட்டிக் கொண்டானே!
"ஏய்.. சொன்னா கேளு நருமா, சும்மா இந்த சட்டைய போட்டு இருக்கேன் டி.. நீ அமைதியா படு எனக்கு தூக்கம் வருது.." உண்மையில் காயத்தின் வலியை அவளிடமிருந்து மறைக்க மிகவும் சிரமம் கொண்டவனுக்கு, மருந்தின் வீரியத்தில் உறக்கம் சொக்கியது.
அப்பட்டமான சோர்வு அவன் முகத்திலும் உடல் மொழியிலும் கண்டு கொண்ட கவி, "இன்னைக்கு நம்ம லவ்மேக் பண்ணலையே மாமா, மறந்துடீங்களா உங்க டீல.." ஒரு மார்க்கமாக புருவம் உயர்த்தியவள் அணிந்திருந்த நைட்டியின் முன்பக்க சிப்பை கழட்டி, ஒற்றை தோள் பக்கம் அதை வழிய விடவும் எச்சிலை விழுங்கியவனுக்கு, வலியை தாண்டிய மோகம் சுர்ரென கிளம்பியது ஆசைமனைவியின் தளதளக்கும் முன்னழகில்.
'ஐயோ.. சோதிக்கிறாளேடா.. இப்டினு தெரிஞ்சிருந்தா சண்டை சண்டையாவே இருக்கட்டும்னு சமாதானம் செய்யவே வந்திருக்க மாட்டேனே.. ராட்சசி காட்டு காட்டுனு சொல்லும் போதெல்லாம் மூடி மறைச்சி அழகா வெட்கப்பட்டே கொல்லுவா..
இன்னைக்கு அவளா காட்றா, குழைஞ்சி குழைஞ்சி வேற பேசுறாளே.. அடுத்தடுத்து என்ன பண்ணுவான்னு தெரியலயே.. " மனதில் புலம்பியவன், தனக்கு முன்னால் வேகமாக பொங்கி எழுந்த ஆண்மையை தலை உயர்த்தி பார்த்து,
"இதுக்கு தான் யார்கிட்ட கோவப்பட்டாலும் வீட்ல உள்ள பொண்டாட்டிகிட்ட மட்டும் கோவப்பட கூடாதுனு சொல்லுவாங்க போல.. அப்போ புரியல இப்போ புரியிது.." தேவதையாக தாலிகட்டிய அழகு மனைவி இத்தனை நெருக்கத்தில் இருந்தும், அவளை நெருங்கி சொந்தம் கொள்ள முடியாத தன் நிலையை எண்ணி நொந்துக் கொண்டவனாக, மனைவியை பாவமாக பார்த்தான் ஆத்வி.
"அன்னம் தண்ணீர் ஆகாரம் இல்லை என்றாலும் பரவாயில்லை,
அடி தித்திக்கும் கரும்பே தினமும் இரவில் உன்னை உணவாக கொடுத்து விடடி, இனிப்பை உண்டு வாழும் எறும்பாக, உன்னை கடித்து தின்றே மோட்சம் பெற்றுக் கொள்கிறேன்.." கூடலின் போது கவிதை பேசி அவளை கூஸ வைத்து, "தினம் நீ வேணும் டி என் தங்கக்குட்டி.." என கொஞ்சிக் கொஞ்சி கிறங்கியே அவளையும் கிறங்க வைப்பான்.
"இத்தனை நாளா நீங்க தானே விதவிதமா வித்தை செஞ்சி என்ன அசத்துனீங்க, இன்னைக்கு நான் உங்கள அசத்துறேன் கண்ண மூடுங்க மாமாஆ.." ரசகசியக் குரலில் கிசுகிசுத்து அவனை நெருங்கிய கவி, மூச்சிவாங்க கிடந்தவன் இதழில் இதழ் உரசி நாவால் இதழ் துடைக்க, கண்மூடி மிம்சார தாக்கத்தை இன்பமாக பெற்றுக் கொண்டவன்,
"கவிஇஇ.. ப்ளீஸ் டிஇ.. இப்ப வேணாம் மார்னிங் ஊருக்கு கிளம்பனும் பேபிஇ.." உணர்ச்சி குவியலாக அவன் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் இணையாக, அவனது ஒவ்வொரு சட்டை பொத்தான் கழண்டு கொண்டே வந்ததை, மனைவி கொடுத்த முத்த மயக்கத்தில் பாவம் அறியவில்லையே ஆத்வி.
மிருதுவான தாமரை இதழ்கள் ஆடவனின் வன்இதழை மெல்ல வருடி சிறை பிடிக்க, மகுடிக்கு மயங்கிய பாம்பாக இடக்கரத்தை அவள் இடையில் விட்டு இறுக்கிக் கொண்டவனுக்கு, அடக்கமுடியா மோகம் கிளர்ந்து விட்டு எழுந்த நேரத்தில், கவியின் அழுகை சத்தம் நெஞ்சை பிளந்தது.
மோகம் மொத்தமும் வடிந்து மிரலும் சிறுவனாக திடுக்கென கண் விழித்த ஆத்வி, தன் நெஞ்சில் இருந்த பெரிய கட்டை கண்டு வாய் பொத்தி அழுது கொண்டிருந்த கவிக்கு, என்ன பதில் சொல்லி சமாளிப்பது என புரியாமல் அவளையே வெறித்து பார்த்தவன்,
"கவிஇ.. ஒன்னும் இல்ல டி, ஜஸ்ட் ஒரு சின்ன காயம் அவ்ளோ தான்.. இதுக்கு ஏன் அழுது நல்ல மூட ஸ்பாயில் பண்ற, நீ வா பேபிஇ.. நம்ம லவ்மேக் பண்ணலாம்.. இன்னைக்கு உன் ஸ்டைல்ல நீ என்ன பண்ணாலும் ஓகே பேபிஇ.. நான் என்ஜாய் பண்றேன்.."
குறும்பாக அவன் கண்ணடிக்கவும் பார்வையாலே அக்னியை கக்கியவள், அவனிடம் எதுவும் பேசாமல் நைட்டியை சரி செய்துக் கொண்டு, திரும்பிப் படுத்துக் கொண்டவளின் கண்கள் மட்டும் விடாமல் கண்ணீரை சொறிந்தது.
இந்த காயம் எப்படி வந்தது? எங்கே சென்றதால் வந்தது? யார் காரணம்? என்று இப்படி ஏதாவது கேட்டிருந்தால் கூட மனது லேசாகி இருக்குமோ என்னவோ!
ஒன்றும் பேசாமல் முதுகு காட்டிப் படுத்து, அழுகையில் தேம்பும் மனைவியை கண்டு மனபாரம் தான் கூடிது.
"கவிஇஇ.." அவள் தோளில் கை வைக்க எந்த எதிர்ப்பும் இல்லை. உடல் மட்டும் குலுங்கியதில் அழுகிறாள் என உணர்ந்துக் கொண்டவன்,
"மச்.. கவிமா.. ஒரு சின்ன ஆக்சிடென்ட் டி, உனக்கு தெரிஞ்சா நீ ஃபீல் பண்ணுவேன்னு தான் சொல்லாம விட்டேன்.. இப்ப நான் நெனச்ச மாதிரி தான் அழுதுட்டு இருக்க, இங்கே பாரு நான் நல்லா இருக்கேன் டி எனக்கு ஒன்னும் இல்ல..
என் பக்கம் திரும்பு பாப்புகுட்டி.." அவள் பின்னங்கழுத்தில் சிறுசிறு முத்தங்களை பதித்து தன் புறம் திருப்ப முயல, முரண்டு பிடிக்காமல் தான் இழுத்த இழுப்பிற்கு வந்த மனையாலின் மூடிய இமைகளில் முத்தமிட்டவன்,
"ஏதாவது பேசு டி.. கண்ண மூடிட்டு இருந்தா என்ன அர்த்தம்.." என்றவன் குரல் அழுத்தமாக வெளிவந்ததில் வெடுக்கென கண் திறந்த கவி,
"என்ன அர்த்தம்னா என்ன சொல்ல சொல்றீங்க, நான் ஏதாவது கேட்டாலும் குத்தம் கேக்கலனாலும் குத்தம்.. உங்களுக்கு தான் நான் உங்க பர்சனல் பத்தி பேசினா பிடிக்காதே, அப்புறம் எப்டி நான் கேக்குறது.." விழிகளில் தேங்கிய கண்ணீரோடு உரைத்தவளின் பார்வை எல்லாம், அவன் நெஞ்சில் தான் வேதனையாக படிந்திருந்தது.
"என்மேல கோவமா இருக்கேன்னு உன் ரெட்சாஸ் மூக்க பாத்தாலே தெரியிது டி, நான் ரேஸ் பத்தி பேசாதேன்னு சொன்னத நீ எப்டி புரிஞ்சி வச்சிருக்க என் மக்கு பொண்டாட்டி.. என்கிட்ட உனக்கு இல்லாத உரிமையா கவிஇ.. ப்ளீஸ் ரேஸ் விஷயத்தை மட்டும் என் விருப்படி விட்ரு டி..
மத்த எல்லா விஷயத்திலும் உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் உண்டு, உனக்கு மட்டும் தான் உண்டு.." என்றதை அழுத்தமாக கூறி, "உன் உரிமையான அன்பு கலந்த காதல்ல, வாழ்க்கை முழுக்க அடிபணிஞ்சி உன் நெஞ்சிலே நான் உருகிக் கிடைக்கணும்.. இப்ப எதை நினைச்சும் குழம்பி ஃபீல் பண்ணாம தூங்கு டி.. காலைல ஊருக்கு போகணும்..
உன் பிரண்ட் கல்யாணத்தப்ப இப்டி தான் மூஞ்சிய தூக்கி வச்சிட்டு நிப்பியா.." அவள் செர்ரிமூக்கை கடித்து முத்தம் வைக்க, கணவனின் மெய்யுருக்கும் காதல் பேச்சில் மனம் நெகிழ்ச்சி அடைந்தாளும், ஏதோ ஒருவித நெருடல் அவள் நெஞ்சை அழுத்தியது.
அழகான விடியல் பொழுதில் கணவன் மனைவி இருவரும் ஊருக்கு புறப்பட தயாராகி இருந்தனர். கவியின் மனதில் பல குழப்பங்கள் சிலது தீராமல் இருக்க, யாதவ் ஸ்வாதியின் திருமணம் முடிந்ததும் அனைத்தையும் கணவனிடம் மனம் விட்டு பேசி, குழப்பங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள்.
** ** **
"இன்னும் எத்தனை நாளைக்கு என் பையன் இப்டி கால் முடங்கி வீல் சேர்லே இருப்பான்.. சொல்லுங்க டாக்டர் என் பையன் எழுந்து நடப்பானா மாட்டானா.." அன்னத்தின் குரல் அடக்கப்பட்ட கோபத்துடன் வெளி வந்து, தனக்கு எதிரே இருந்த மருத்துவரை பார்வையால் துளைத்து எடுத்தது.
அன்னத்தை பற்றி எதுவும் தெரியாத மருத்துவரோ அவள் பார்வையை அலட்சியம் செய்து, "இங்கே பாருங்க மேடம், சும்மா சும்மா எங்கள இப்டி கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணிட்டு இருந்தா நாங்க எப்டி எங்க வேலைய பாக்குறது..
சும்மா கடைமைக்கேன்னு எல்லாம் என்னால உங்களுக்கு நம்பிக்கை கொடுக்க முடியாது, எனக்கு தெரிஞ்சி உங்க பையன் எழுந்து நடக்குறது எல்லாம் நடக்காத காரியம்.. நீங்க என்ன தான் என்ன தினமும் கூப்ட்டு அவரை செக் பண்ண சொன்னாலும், ஒரு புண்ணியமு இல்ல.. அதனால இனி அடிக்கடி என்ன கூப்ட்டு டிஸ்டர்ப் பண்ணாதீங்க.." என்ற மருத்துவருக்கு அத்தனை கடுப்பு.
தீபக் நடக்க முடியாது என்று சொல்லியும் கேளாமல் தினமும் இரண்டு வேளைக்கு அவரை அழைத்து, வேலை செய்யாத காலை பாரு பாரு என்று தொந்தரவு செய்யவும், இத்தனை நாளும் அமைதி காத்த மருத்துவருக்கு, சலிப்பு தட்டி எரிச்சல் கொண்டு கத்தி விட்டார்.
அமைதியாக அவரையே பார்த்த அன்னம், "அப்போ என் புள்ள எழுந்து நடக்க மாட்டான்னு சொல்ற அப்டிதானே.." அவள் கேட்ட தினுசிலே வில்லங்கம் மறைந்து இருப்பதை உணறாதவர்,
"ஏம்மா.. இதை தானே நானும் வந்த நாளுல இருந்து சொல்லிட்டு இருக்கேன், சும்மா சும்மா அதையே கேக்குறீங்க.." தன் பெட்டியில் மருத்துவ பொருட்களை எடுத்து வைத்தபடி, டென்ஷனில் கத்திக் கொண்டு இருந்தவரின் மூச்சும் பேச்சும் அதோடு நின்று இருந்தது, அவர் நெற்றிப் பொட்டில் இறங்கிய புள்ளட்டினால்.
"ம்மா.. ஏன் அந்தாள போட்டு தள்ளின.." என்ற தீபக்கின் புறம், துப்பாக்கியை தோளில் வைத்துக் கொண்டு நிதானமாக திரும்பிய அன்னம்,
"அவனால தான் உன்ன நடக்க வைக்க முடியாதுனு சொல்லிட்டானே, அதான் போட்டேன். போதாகுறைக்கு ஓவரா பேசுறான் பாடு, போய் சேரட்டும்.. வேற நல்ல நியூராலஜி ஸ்பெஷலிஸ்ட்டா பாத்து உன் கால சரி பண்றேன்.." என்ற அன்னம்,
நேத்தும் அந்த ஆத்வி மிஸ்ஸாகிட்டான், இனிமே அவனை ஒன்னும் பண்ண வேண்டாம்.. இதுவரைக்கும் பண்ணதெல்லாம் நீதான்னு எப்பவோ கண்டு பிடிச்சி இருப்பான்.. அப்டி இருந்தும் அமைதியா இருக்கான்னா, ஏதோ காரணமா தான் இருக்கும்.. திரும்பத் திரும்ப அவனை சீண்டி விட்டா சரி வாராது, அதுக்குனு ஒரு நேரம் அமையும் அப்ப பாத்துக்கலாம்..
அந்த ஹரிதா அங்கே இருந்து கிழிச்சதெல்லாம் போதும், அவளை அங்கிருந்து கிளம்பி அவ வீட்டுக்கு போக சொல்லு, அவ எதுக்கும் சரிபட்டு வர மாட்டா போல.. " துப்பாக்கியை முந்தானையால் துடைத்த அன்னம், அங்கு ஓரமாக கைகட்டி நின்றிருக்கும் வேலையட்களுக்கு கண்ணை காட்ட, இறந்து போன மருத்துவரை அப்புறப்படுத்தும் வேலையில் மூழ்கினர்.
"ஆமா ம்மா.. நீ சொல்றது சரிதான், அந்த ஹரிதா ஒரு வேஸ்ட் பீஸ், பணமும் அழகும் எவன்கிட்ட இருக்கோ அவன்கிட்ட மயங்கிக் கிடப்பா.. இந்த ஆத்வி மேல இருக்க காதல் மயக்கம் எத்தனை நாளைக்கோ..
நம்ம அவனையும் அவன் குடும்பத்தை போட்டு தள்ள தான் அவளை வேவு பாக்க வச்சிருக்கோம்ன்ற உண்மை அவளுக்கு தெரியிறதுக்கு முன்னாடியே, அவளை துரத்தி விட்டா நல்லது..
இல்லனா இந்த செத்த டாக்டர் கதை தான் அவளுக்கும்.." தீபக் சொல்ல, அன்னம் வில்லங்கமாக தலையாட்டி வைத்தாள்.
** ** **
காரில் இருந்து இறங்கி வரும் மகனையும் மருமகளையும் இன்முகத்தோடு ஆரத்தி எடுத்து மித்ரா அழைக்க, நீண்ட நாட்கள் கழித்து அனைத்து உறவுகளையும் கண்ட மகிழ்ச்சியில் கண் கலங்கிப் போனாள் கவி.
தன்முன்பு எந்த ஒரு கலங்கமுமின்றி புன்னகை முகத்தோடு நிற்கும் ஸ்வாதியை கண்ட கவி, ஓடி போய் அவளை அணைத்துக் கொண்டதும், "கவிஇ.. எப்டி இருக்க.." உணர்ச்சி பெருக்கில் கேட்ட ஸ்வாதிக்கும், தோழியை கண்ட பூரிப்பில் கண் கலங்கியது.
"நான் நல்லா இருக்கேன் ஸ்வாதி, மாமா என்ன ரொம்ப நல்லா பாத்துகிட்டாரு, ஆனா உன்ன பிரிஞ்சி இருக்குறது தான் வருத்தமா இருக்கு.." சோகமாக கவி சொல்லும் போதே இடை புகுந்த ஆரு,
"அப்போ எங்களை எல்லாம் பிரிஞ்சி இருக்குறது வருத்தம் இல்லைனு சொல்ல வரியா கவி.."
"அச்சோ அண்ணி நான் எப்போ அப்டி சொன்னேன், உங்க எல்லாரையும் பிரிஞ்சி இருக்குறதும் எனக்கு வருத்தம் தான், இருந்தாலும்.." என தோழியை ஓரக்கண்ணால் பார்க்கவும், ஆரு செல்லமாக முறைக்க,
"போதும் போதும்.. அப்புறம் உங்க சண்டைய வச்சிக்கலாம் முதல்ல எல்லாரும் உள்ள வாங்க.." அடுத்த வாக்குவாதம் தொடரும் முன், அனைவரையும் உள்ளே அழைத்து சென்றாள் மித்ரா.
அனைவரையும் நலம் விசாரித்த பின்னே தன்யாவோடு விக்ரம் அறைக்கு வந்த கவி, அவனருகில் அமர்ந்து விக்ரமின் கரம் பற்றியவளாக, "பழைய நினைவுகள் எனக்கு எதுவும் இல்லனாலும், உங்கள பாக்கும் போதெல்லாம் என் மனசுல இனம்புரியாத சந்தோஷம் வந்து போகுது மாமா.. அதுக்கான அர்த்தம் என்னனு இப்போ தான் என்னால புரிஞ்சிக்க முடியிது..
என்மேல நீங்க தான் ரொம்ப அன்பா இருப்பீங்கனு அத்தை சொன்னாங்க, கேக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி மாமா.. ஆனா அந்த சந்தோஷம் முழுமையா கிடைக்கணும்னா நீங்க மறுபடியும் எழுந்து வந்து உங்க அன்பை எனக்கு திருப்பிக் கொடுக்கனும்.." எனும் போதே தொண்டை கரகரத்தது.
"நான் இப்ப உயிரோட இருக்குறதும் உங்களால தான், தொலைஞ்ச உறவுகள மீண்டும் எனக்கு திருப்பிக் கிடைக்க காரணமா அமைஞ்சதும் உங்களால தான்.. கண்மூடி படுத்திருந்தாலும் உங்க அன்பை நீங்க எனக்கு இப்பவும் கொடுத்துட்டு தான் இருக்கீங்க மாமா, ஆனா இது போதாதே..
யாதவ் அத்தானுக்கு ஒரு நல்லது நடக்கும் போது, கண்டிப்பா நீங்க கண் விழிச்சி இருக்கணும்.. இது என் ஆசை மட்டும் இல்ல, நம்ம ஒட்டு மொத்த குடும்பத்தோட ஆசையும் இதுதான்.." அவன் கேசம் வருடி மனதில் இருப்பதை உணர்வுபூர்வமாக வெளிபடுத்தி கவி, சற்று நேரத்தில் வெளியேறிவிட, விக்ரமின் மூடி இருந்த இமைக்குடையில் இருந்து சிறிதாக கண்ணீர் துளி வெளிவந்தது.
ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில், சிறகு முளைத்த பட்டாம் பூச்சியாக தன் குடும்பத்தையே சுற்றி வந்த கவியோ கணவனை வேண்டுமென்றே தவிக்க விட்டாள். இரவிலும் தன்யாவை உடன் அழைத்து வந்து, உறங்காமல் கதைபேசிக் கொண்டு படுத்திருப்பவளை, பார்வையாலே எரித்து தள்ளுவான் ஆத்வி.
"குட்டி பிசாசே தூங்கி தான் தொலையேன், மணி என்னகுது தூங்குதா பாரு.. இதுக்கு தான் அஜய் மாமா உன்னைய எப்பவும் திருட்டுத்தனமா என்கிட்ட தள்ளிட்டு போவாரு போல.."
பாவமாக நொந்து ஆத்வி, நள்ளிரவு தாண்டியும் தூக்கத்திற்கான சுவடின்றி, அவன் சிவந்த மூக்கியின் கைவளைவில் படுத்துக் கொண்டு, சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருக்கும் தன்யாவை பாவமாக கண்டு, தன்னை கண்டுகொள்ளாமல் சிரித்துக் கொண்டிருக்கும் மனைவியை வெறியாக முறைத்து வைத்தான்.
"உங்களுக்கு ஒன்னு தெரியுமா அத்த, நான் இப்போல்லாம் ஸ்வாதி அத்தை கூட தான் தூங்குறேன்.. அவங்களும் உங்கள மாறி தான் நிறைய நிறைய கதை சொல்லி ஜாலியா பேசிட்டு இருப்பாங்க.." உற்சாகமாக தன்யா சொல்லவும்,
"அப்டியா.." என்றாள் ஆச்சிரியமாக.
"ஆமா அத்த, ஆனா அடிக்கடி வாசலை எட்டிப்பாத்துட்டே இருப்பாங்க,
நானும் ஏன் அத்த அங்க பாக்குறீங்கனு கேப்பேன்,
அதுக்கு அவங்க திருட்டு பிக்ரேட் ஒன்னு எட்டி எட்டி பாத்துட்டு போகுதுனு சொல்லுவாங்க.." என்றதும் புரிந்தும் புரியாமலும் திருதிருவென முழித்து வைத்தாள் கவி.
"ஆனா நம்ம வீட்ல தான் ரேட்டே இருக்காதே, ஸ்வாதி அத்த மட்டும் எப்டி ரேட்ட பாத்தாங்க.." குட்டி மூளையை கசக்கி தன் சந்தேகத்தை கவியிடம் கேட்க,
"ஆக மொத்தம் இந்த குட்டி பிசாசு யாதவையும் நிம்மதியா விடல போல, இப்டியே விட்டா நம்ம நிலைமை ரொம்ப மோசமாகிடுமே, அமுக்கு டா இந்த குட்டி எலிய.." என பாய்ந்து வந்து தன்யாவை தூக்கிக் கொண்ட ஆத்வி,
"அந்த ரேட் எங்க இருக்குனு எனக்கு நல்லா தெரியும் பாப்ஸ், மாமா உனக்கு அந்த பிக்ரேட்ட காட்டட்டுமா.." என்றதும்,
"ஓஹ்..சூப்பர் மாம்ஸ்.. சீக்கிரம் காட்டு நான் அந்த பிக்ரேட்ட பாக்கணும்.." குழந்தை துள்ள,
"ஏய்.. ரேட்லாம் எதுவும் இல்ல தன்யா நம்பாதே, உன் மாமா பொய் சொல்லறார்.." கவி கத்த கத்த காதில் வாங்காமல் இருவரும் வெளியே ஓடி இருந்தனர்.
"எங்க மாம்ஸ் இருக்கு அந்த பிக்ரேட்.. எப்ப வெளிய வரும்.. நான் பாக்குறதுக்குள்ள ஓடிட்டா என்ன பண்றது.." கேள்வி மேல் கேள்வி கேட்டபடி அவன் தோளில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு வரவும்,
ஆத்வி இருக்கும் அவஸ்தையில் நொந்து போனவன்,
"என்ன விட அந்த பிக்ரேட் பத்தி உன் யாது மாமாக்கு தான் நல்லா தெரியும், பேசாம அவன்கிட்ட கேக்கலாமா குட்டி.." என்றான் வில்லங்கமாக.
"ஓஹ்.. கேக்கலாமே, அப்போ சீக்கிரம் போ அந்த பிக்ரேட் ஓடிட போகுது.." அவனை அவசரப்படுத்த,
"அந்த பிக்ரேட்டே அந்த பன்னாடை தான்.. மவனே நானே என் கவிகூட கல்யாணத்துக்கு முன்னாடி குஜால்ஸ் பண்ணல டா.. உனக்கு அடிச்சி இருக்கு பாரு லக்கு, உன்ன சும்மா விடுவேனா.." வன்மத்தோடு யாதவின் அறை கதவை தட்டப் போனவன், அது திறந்து இருப்பதை கண்டு காண்டாகி ஸ்வாதியின் அறைக்கு சென்று கதவை தட்டப் போக,
"அச்சோ.. விடுங்க, எதுக்கு இங்க வந்தீங்க, வெளிய போங்க முதல்ல..
"முடியாது போடி, இத்தனை நாளா என்ன அலைய விட்டல்ல எல்லாத்துக்கும் சேத்து வச்சி குடு, அப்பதான் போவேன்.." அடம் செய்த பெருச்சாளியோ,
"ப்ளீஸ்ங்க.. உங்க ரூம்க்கு போங்க யாராவது வந்தா எனக்கும் தான் வெக்கமா போகும்.." கெஞ்சலாக பின்னால் பதுங்கி நகர்ந்து சென்ற முயலை, ஒரே எட்டில் இறுக்கி அணைத்து, இதழ் உறுஞ்சும் சத்தத்தில் அதிர்ந்து நின்றான் ஆத்வி.
"அடப்பாவி.. இவன் என்ன இவ்ளோ மோசமா இருக்கான்.. அவன் கிஸ்ஸடிக்கிற ஸ்பீடுக்கு இன்னைக்கு வெளிய வர மாட்டான் போலயே.. இவனை போய் இன்னசென்ட் பாய்னு நெனச்சது தப்பா போச்சி, எல்லாம் என் தலையெழுத்து இதை எல்லாம் பாக்கணும்னு.." பெரிதாக சலித்துக் கொண்ட ஆத்வி, மீண்டும் தன்யாவை தன் அறைக்கே தூக்கிச் செல்ல நினைக்க,
"மாம்ஸ் ரேட்ட காட்டாம ரூம்க்கு போற. நான் பிக்ரேட்ட பாக்கணும்..." தன்யா வேறு அடம் செய்யவும்.
"பிக்ரேட்டு ரொம்ப பிஸியா இருக்கு, நாளைக்கு காட்றேன் அமைதியா வா பாப்ஸ்.." முறைப்போடு சொல்லி அறைக்கு செல்லப் போக, அவன் தோளைப் பற்றியது வலிய கரம்.
"என்ன டா தூங்காம குழந்தைய தூக்கிட்டு நைட் நேரத்துல ஜாலியா சுத்திட்டு இருக்க.." என்ற ஆதியின் குரலில் பின்னால் திரும்பியவன்,
"என்ன பாத்தா ஜாலியா சுத்துற மாறியா இருக்கு, அதுவும் இந்த நைட் நேரத்துல.. ஏன் டாட் நீங்க வேற நேரம் காலம் புரியாம டென்ஷன் பண்றீங்க.." சலிப்போடு கேட்ட மகனை குதூகலமாக கண்ட ஆதி,
"ஒருநாளைக்கே இவ்ளோ சலிப்புனா, முப்பது வருஷமா நீ எனக்கு பண்ண அளம்பலுக்கு, நான் என் மித்துபேபிய தூக்கிட்டு கண்டம் விட்டு கண்டம் ஓடி இருக்கனும்.. இப்ப அனுபவை ராசா" என மனதில் நினைத்து,
"சரி சரி நான் போறேன் நீ டென்ஷன் ஆகம சுத்து.." என்றவன் நமட்டு சிரிப்போடு செல்லவும், தந்தையை வெறியாக முறைத்து வைத்தான் ஆத்வி.
"மாம்ஸ்.. பிக்ரேட்டு.." உதட்டை பிதுக்கி அழ தயாராக இருக்கும் தன்யாவை மூச்சிவாங்க கண்டவன்,
"நாளைக்கு அந்த பிக்ரேட்டுக்கு வாயே இருக்காது, ஒழுங்கா இப்ப தூங்கு இல்ல உன்ன கோஸ்ட்கிட்ட பிடிச்சி கொடுத்துடுவேன்.." கண்களை உருட்டி குழந்தையை மிரட்டிக் கொண்டு இருக்கும் போதே,
"என்னடா நைட்ல போய் குழந்தைய மிரட்டிட்டு இருக்க, பிள்ள பயந்தா வருமா.." வெடுக்கென குழந்தையை பிடிங்கிய மித்ரா, அழுது கொண்டிருந்த குட்டிக் கண்களை துடைத்துவிட்டள்,
"இவ என்கூடவே தூங்கட்டும் நீ போய் படு.." சிறு முறைப்பாக சொல்லி அங்கிருந்து சென்ற அன்னையை புரியாமல் பார்த்து, பின் தனியாக சிரித்துக் கொண்டவன்,
"என்ன விட மோசமான கேடி டாட் நீங்க, என்கிட்ட வம்பு செஞ்சிட்டு பின்னாடியே மாம அனுப்பி விட்டு, திட்டும் வாங்க வச்சிடீங்கல்ல, பாத்துக்குறேன்... அதுக்கு முன்னாடி இவளை இன்னைக்கு ஒரு வழி பண்றேன்.." விரைப்பாக உள்ளே சென்றவன், மனைவியிடம் மொத்தமாக அடங்கி விட்டானே!
** ** **
யாதவ் வெட்ஸ் ஸ்வாதி
என கொட்டை எழுத்தோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கிக் கொள்ளும் டிஜிட்டல் புகைப்படங்கள், மண்டபத்தின் வாயிலில் ஆங்காங்கே அழகழகாக வைக்கப்பட்டதோடு, மண்டபமே கோளாகலமாக நிறைந்து பலத்த பாதுகாப்போடு இருந்தது.
ஆதி மித்ரா ஜோடி எப்போதும் போல் எவர்கிறீன் கப்புலாக, தங்களின் மகனின் திருமணத்திற்கு பம்பரமாக சுழண்டு வேலை பார்த்தபடி கண்களால் காதல் வளர்த்துக் கொண்டிருக்க,
ஆத்வியோ அவன் சிவந்த மூக்கியின் தரிசனம் கிட்டாமல் முகம் கனியாமல் வேலையை தொடர,
ஆரு தனது மூன்று மாத கருவோடு அஜயின் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தாள் என்றால், அவர்கள் அருகில் உள்ள வசதியான இருக்கையில், தன் மடியில் இருந்த தன்யாவை கொஞ்சியபடி, வெள்ளை வேஷ்டி சட்டையில் புன்னகை முகமாக அமர்ந்திருந்தான் விக்ரம்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 64
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.