Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 18

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 18

வெகு நேரம் இருக்கையில் அமர்ந்து மகளுக்காக காத்திருந்த வெள்ளைச்சாமி, இத்தனை கூட்டத்தில் மகள் வேறு எங்காவது சென்று விட்டாளோ என்ற பதைப்போடு மோகி அமர்ந்திருக்க சொன்ன இடத்தில் இருந்து கூட்டத்தில் வழி மாறி வந்தவராக, தம்பி இங்க துணி மாத்துற எடம் எங்க இருக்கு, அவசரமாக படியேறிய இளம்வட்டம் ஒருவனை இடைநிறுத்திக் கேட்டார் வெள்ளைச்சாமி.

தெரியல தாத்தா நானே இந்த கடைக்கு இப்பதான் முதல் தடவை வந்திருக்கேன். வேற யார்கிட்டயாவது கேளுங்க என்றவனோ சுற்றிலும் பார்த்து, அதோ அங்க பாருங்க நீல சட்டை கருப்பு பேண்ட் போட்டு டக்கின் செஞ்ச ஒருத்தர் எல்லாரையும் வரிசை படுத்தி அனுப்பி விட்றாரே அவரு கிட்ட கேளுங்க, இங்க வேலை பாக்குறவர் போல தெரியிது. அவரின் அறியாமையின் வெளிப்பாடு அப்பட்டமாக அவர் முகத்தில் தென்பட்டதில் அப்படியே விட்டு செல்லாமல் அவனால் முடிந்த உதவியை செய்து விட்டு கூட்டத்தில் மறைத்து விட்டான் அவன்.

போகும் அவனை தலை தூக்கி எட்டி பார்த்து விட்டு அவன் சொன்ன அடையாளம் கொண்ட நபரை தேடியபடியே ஆட்டு மந்தை போல் மக்கள் அலைமோதும் கூட்டத்தின் நடுவே நுழைந்தவரை முட்டி மோதி தள்ளியதில் மூச்சிக்கு தவித்து கூட்டத்தில் மாட்டிக் கொண்டு தத்தளித்து போனவராக காலில் அணிந்திருந்த தேய்ந்து போன வார் செருப்பை தவற விட்டவர், தோளில் இருந்த துண்டு கூட்டத்தில் தொலைந்து போக அதை தேடி குனிந்தவரின் வேஷ்டி கூட்டத்தோடு கூட்டமாக போவோர் வருவோர் கையில் சிக்கி சென்றதில், 'அம்மா அம்மா கொஞ்சம் தள்ளுங்கம்மா.. ஐயா ஐயா கொஞ்சம் வழி உடுங்கய்யா என் வேட்டிய தேடி எடுத்துட்டு போய்டுறேன்' கெஞ்சல் குரலில் அன்றாயரோடு தடுமாறிப் போனவரை சிறிதும் கண்டுகொள்ளாமல் ஏறி மிதிக்காத குறையாக மக்கம் கூட்டம் நசுக்கி வயது முதிர்ந்தவரை குப்பையை போல் கசக்கி ஒரு மூலையில் தூக்கி போட்டு சென்றனர் ஜனக்கூட்டம்.

ஒரு பெரிய புகழ் பெற்ற கடையில் மக்கள் கூட்டமும் பணத்தில் ஜொலிக்கும் ஆட்களும் அதிகம் திறளும் இடத்தில் நூறு பேர் பார்த்து கேலி செய்து சிரிக்கும் அளவிற்கு, மரியாதையான மனிதரின் தோளில் இருந்த துண்டும் மானம் மறைத்த வேட்டியும் இல்லாமல் கூனிக் குறுகி நிற்கும் நிலை பரிதாபத்தின் உச்சம் அல்லவா.

அவரோ அதை எதையும் கவனிக்கும் நிலையில்லாது சீரான மூச்சி கிடைத்தால் போதும் என்ற வேதனையோடு கீழே மல்லாக்க விழுந்து ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானமாக்கிக் கொண்டு குழந்தை போல் உக்கி போட்டு தவழ்ந்து தடுமாறி எழ முடியாமல் தள்ளாடியவரின் செயல் புதிதாக பார்ப்போருக்கு குடித்து விட்டு போதையில் பிறளும் காட்சி போலவே தோன்றும். அவ்வழியாக சென்ற கண்ணனின் பார்வையில் இக்காட்சி படவே கோவமாக அவரிடம் வந்தவன், ஏய்.. யார் மேன் நீ. எதுக்காக குடிச்சிட்டு வந்து எங்க கடைல அசிங்கம் பண்ற. ஒழுங்கா எழுந்து வெளிய போய்டு இல்லனா கழுத்தை பிடிச்சி வெளிய தள்ள வேண்டிதா போகும். உக்கிரமாக கத்திக் கொண்டிருந்தான் அவன்.

தூணின் கம்பியை பிடித்தபடி மெதுவாக எழுந்து நின்றவரின் உடல் முழுக்க காற்றோட்டம் இல்லாமல் வியர்த்திருக்க, "ந்.நான் குடிகாரன் இல்ல தம்பி. இங்க பொண்ணுங்க துணி மாத்துற அறை எங்க இருக்குனு மட்டும் சொல்லுங்க போதும்" திக்கி திணறி சொல்லியவரை கண்டு ஏளனம் தான் வழிதோடியது.

"ஏய்யா.. குடிச்சவன் என்னைக்கு ஒத்துகிட்டு இருக்கான் நான் குடிச்சிட்டு தான் இருக்கேனு. இதுல பொண்ணுங்க துணி மாத்துற ரூம்க்கு போயி என்னய்யா பண்ண போற. சுடுகாட்டுக்கு போற வயசுலயும் ஆசை அடங்காமலா திரியிர நீ" மனைவி இறந்தது முதலே தனக்கென்று சந்தோஷத்தை யோசிக்காத ஆசைகள் அடங்கிப் போன ஜடமாக இதுநாள் வரையிலும் கண்ணியமாக வாழ்ந்துக் கொண்டு இருக்கும் தன்னலமற்ற அப்பாவி பெரிய மனிதரை சொல்லக் கூடாத வார்த்தையால் நோகடித்ததும் இல்லாமல் ஏற்கனவே அவமானத்தில் கனன்று கொண்டு இருப்பவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட பரிதாபமாக கீழே விழுந்தவரை அப்பாஆஆ.. என்ற உயிர் பிரியும் வேதனையின் கொடுமையை தாண்டிய அதிகபடியான வேதனையோடு மண்டியிட்டு அமர்ந்து அவரை தாங்கி இருந்தாள் மோகித்தா.

விஷ்வாவிடம் மல்லுக்கட்டி விட்டு வெளியே ஓடி வந்தவளின் கண்களில் கண்ணன் அவரை திட்டியபடி கை ஓங்கி அறைந்ததை கண்டு அதிர்ந்து போனாள்.
வலி வேதனையை விட அத்துனை பேர் பார்க்க கண்ணன் அடித்த அடியில் அவமானம் தாங்க முடியாமல், மோகிமா.. என மகளின் கை பிடித்து முகத்தை புதைத்து குலுங்கி அழுதவரின் நிலையை கண்டு இதயம் நொறுங்கி உயிர் துறந்து விடுவது போல் கண்ணீர் பெருக்கெடுக்க, நடந்ததை சொல்லி கடைசியாக கண்ணன் சொன்னதை சொல்ல முடியாமல் தவித்து, என் பொண்ணு நீ அங்க இருக்கனு சொல்றதுகுள்ள என்னென்னவோ சொல்லி அப்பாவ அடிச்சிட்டாங்கமா.. இந்த வயதில் கண்ணீர் விட்டு பாவமாக அழுதவரை கண்டு ஜீவன் மரித்துப் போனாள்.

அவள் பின்னோடு வந்த விஷ்வரூபனும் என்ன நடந்ததென புரியாமல் புருவம் இடுங்க நின்றிருந்த சமையம் பளாரென மோகித்தா அடித்த அடியில் சுயம் பெற்ற விஷ்வாவின் கண்கள் முகம் சிவந்து கோவத்தில் மூச்சி வாங்க நின்றிருந்த உக்கிரகாளி அவதாரம் எடுத்த மோகியை கண்டு வாய் பிளந்தான் என்றால் தனது தந்தையை அடித்த கண்ணணின் கன்னத்தில் மீண்டும் இடியாக அடியை இறக்கி இருந்தாள் கொஞ்சமும் அடங்காத கோபத்தோடு.

அத்தனை நேரமும் தந்தை மகளின் பாசப்பினைப்பையும் அவர்கள் பேசிக் கொண்டதை எல்லாம் அலட்சியமாக பார்த்து எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி தெனாவட்டாக நின்றுக் கொண்டிருந்தவன், மோகியின் அடுத்தடுத்த அடியில் விதிர்விதிர்த்து சுற்றிலும் தன்னை கண்டு கேலியாக சிரித்து பேசிய மக்கள் கூட்டத்தின் முன்பு அவமானத்தில் முகம் கன்றினான்.

எவ்ளோ தைரியம் இருந்திருந்தா இடம் தெரியாம வழி கேட்டவரை பெரியவர்னு கூட பாக்காம கேவலமான வார்த்தை சொல்லி தப்பா பேசினதும் இல்லாம என் அப்பாவ கை நீட்டி அடிச்சிருப்ப. நீ எல்லாம் மனுஷ பிறவியா தூ.. சீற்றமாக பொங்கி அவன் முகத்தில் கொத்தாக காரி உமிழ்ந்திருந்தாள் தன் தந்தைக்கு ஏற்பட்ட மானக்கேடை பொறுத்துக் கொள்ள மாட்டாமல்.

அவள் அப்படி செய்ததும் அவமானத்தில் கோவம் கொப்பளிக்க ஏய்ய்.. நீ யாரு மேல கைய வச்சிருக்க தெரியுமா.. அவன் தொடங்கியதும் ஏய்ய்ய்.. ஸ்ஷ்.. அவனுக்கு மேல் விரல் நீட்டி ஆட்டி கருமணிகள் உருள பெண் சிங்கமாக கர்ஜித்தவளாக. நீ எவ்ளோ பெரிய இவனா வேணா இருந்துக்கோ அதை பத்தியெல்லாம் எனக்கு கவலையே இல்ல, உன்னோட பெரிய இது எல்லாத்தையும் உன்னோட மட்டும் வச்சிக்கோ உனக்கு கீழ இருக்கவங்ககிட்ட அதை காட்ட நினைக்காத. நீ பெரிய மை*ருனா வயசானவர கை நீட்டி அடிப்பியா தொலைச்சிடுவேன் ராஸ்கல். அடங்கா கோபத்தோடு பற்களை கடித்தவள் அவனை அர்ப்பமாக ஒரு பார்வை பார்த்து விட்டு தன் கழுத்தில் இருந்த வெள்ளை துப்பட்டாவை அவருக்கு கட்டி விட்டு தந்தையின் கை பிடித்து மெதுவாக அவ்விடம் விட்டு அழைத்து சென்றவளின் முதுகை வன்மமாக வெறித்தவன் கன்னம் ஆசிட் பட்டதை போல் இம்முறை தீயாக எரிந்தது விஷ்வரூபனின் இரும்பு கரம் பதம் பார்த்து இருந்ததில்.

மோகித்தாவிடம் பாம்பு போல் சீறியவன் சார்ர்ர்.. என கண்கள் இருண்டு நடுநடுங்கி விட்டான் விஷ்வரூபனின் ருத்ரவிழி பார்வைதனில். டேய் இடியட்.. பப்ளிக் அதிகம் கூடி இருக்கும் போது அவங்களை டிஸ்டர்ப் பண்ற விதமா இப்டிதான் மூலைக் கெட்டத்தனமா நடத்துப்பாங்களா ஹ்ம்.. இடி முழங்கும் குரலால் அவன் இதயத்தை அதிர வைத்திருந்தான்.

ஒழுங்கா பப்ளிக் எல்லாம் கிளியர் பண்ணி அனுப்பிட்டு ஆபிஸ் வந்து சேரு உனக்கு இருக்கு. தீயாக முறைத்து விட்டு சென்று விட்டான் அவன். சும்மாவா சொல்வார்கள் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்று. மோகித்தாவின் அதிரடியான கோபத்தில் இமைக்க மறந்தவனாக வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தவன், அவளுக்கு அருகில் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த வெள்ளைச்சாமியின் பரிதாபத்திற்கு உண்டான தோற்றம் அவன் மனதை பிசைந்திருக்க வேண்டும். மோகியிடம் கண்ணன் குரல் உயர்த்திய போது அவள் மட்டும் சத்தம் போடாமல் இருந்திருந்தால் இந்நேரம் கண்ணனின் நிலை என்னவாக இருக்கும் என்பது யூகிக்க முடியாத ஒன்று.

இதுவரை கண்டிடாத புதிய கோணம் அவளின் இத்தகைய கோவம். அவன் என்ன கோவம் கொண்டாலும் மென்மையாக அவனிடம் உருகி கரையும் மோகியாக மட்டுமே பார்த்து தற்போது வரை பார்த்து பழகியவனுக்கு, தன் தந்தையின் சுயமரியாதைக்கு ஒரு இழப்பு என்று வந்ததும் கண்ணில் சீற்றம் கொண்டு அத்தனை ஜனங்கள் கூடி இருந்த இடத்தில் தைரியமாக அவள் பேசி அறை விட்ட நொடி திகைப்பில் விரிந்த கூரிய விழிகளோடு உடல் முழுக்க ஜிவ்வென்று ஏறியது பயங்கரமான ஆக்ஷன் கலந்த மாஸ் திருல்லர் படம் பார்த்த கூஸ்பம்ஸ் கிட்டியது போல்.

அடிக்கடி அவள் தந்தையை பற்றி பேசுகையில் அவள் முகம் சந்திரமுகி போல் மாறுவதை கவனித்து இருக்கிறான் தான் ஆனாலும் அப்படி என்ன புடலங்காய் பாச வெங்காயம். அவரை பற்றி பேசினால் தன்னை அவளால் என்ன செய்திட முடியும் என்ற எக்காளம் தட்டி அவளை சீண்டிப் பார்ப்பான். அவளும் முடிந்த அளவுக்கு பொறுமை கடைபிடித்து நிதானமாக எடுத்து சொல்லி புரியல வைக்க முயல்பவளை இதுநாள் வரையில் பெரிதாக கண்டு கொண்டான் இல்லை.

ஆனால் இப்போது நடந்த சம்பவத்தால் தெளிவாக புரியவைத்து விட்டாள், தன் தந்தைக்கு ஒரு இழுக்கென்றால் யாராக இருந்தாலும் ஒரே முடிவு தான் என்று. அதற்காக அவளை கண்டு அஞ்சி நடுங்கும் ஆள் விஷ்வா இல்லையே. காரியம் சாதிக்கும் வரையில் முன்பு போல் அவள் தந்தையை பற்றி மரியாதை குறைவாக எரிச்சல் பட்டு அவளிடம் பேச மாட்டான் அவ்வளவே.

என்ன கண்ணு நீ அம்புட்டு பேருக்கு முன்னால அந்தாள அடிச்சிட்ட. பாத்தா பெரிய எடத்து பையன் மாறி இருக்கு நீயும் இங்க தனியா இருக்க, நீ அடிச்சத மனசுல வச்சி உன்ன ஏதாவது பண்ண நெனச்சா என்ன பண்றது. நான் எப்டி உன்ன உட்டு நிம்மதியா இருப்பேன். தப்பு பண்ணிட்டேன் கண்ணு அளவுக்கு மீறி ஆசைபட்டு உன்ன அம்புட்டு பெரிய கடைக்கு கூட்டிட்டு போயிருக்கவே கூடாது. திரும்ப திரும்ப இவற்றையே ஆயிரம் முறையேனும் வருத்தமாக பேசி புலம்பியவரை முடிந்த அளவுக்கு சமாதானம் செய்து, நீங்க பயப்படற அளவுக்கு எல்லாம் அவனால ஒன்னும் பண்ண முடியாதுப்பா. அந்த ராஸ்கல் பண்ணது தப்பு இன்னும் நாலு அடி சேத்து கொடுத்துட்டு வந்திருந்தாலும் அவனுக்கு அதெல்லாம் பத்தவே பத்தாது, ஆத்திரம் கொண்டு மொழிந்தவளின் உள்ளம் கொதிக்கும் வேதனையை தொண்டைக் குழியில் எச்சில் விழிங்கி அவரிடம் மறைத்தவளாக, நைட் ரொம்ப நேரம் ஆகிடுச்சு எதை பத்தியும் நினைச்சி கவலை படாம நிம்மதியா தூங்குங்க ப்பா.. நான் உங்ககூடவே இருக்கேன்ல ஆறுதலாக சொல்லி கலங்கிய மனதை திடப்படுத்திக் கொண்டு அவர் உறங்கும் வரையில் அவரின் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

மறுநாள் விடியலில் ஒரு அந்நிய ஆடவனின் வருகையில் கண்ணனின் ஆட்கள் யாரோ வந்து விட்டனரோ தன் மகளுக்கு ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்று பல விதமான சிந்தனையில் அஞ்சி படபடப்பாக கால்கள் தள்ளாட தடுமாறியவரை, பாத்து அங்கிள்.. என தாங்கி பிடித்திருந்தான் விஷ்வரூபன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 18
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
62
Reaction score
53
Points
18
Ji today ud romba emotional ah irundhuchu ji .. padikum pothu semmmaya aludhuten.... Can't control my tears... Vishwa ethuku ivlo nadikaran ...mmm ulaga nadipu da Samy ithu.... Ji rendu ud vandhuduchu morn kotta ku ... Even kotta ku rendu ud ......enga?
 
Top