- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 19
புதிதாக வந்திருந்த விஷ்வாவை கண்டு சற்று நேரத்தில் எல்லாம் பிபி எகிறி தடுமாறி போனவரை, பாத்து அங்கிள்.. என திடமான கரங்களால் தாங்கி பிடித்து ஒட்டுதல் இல்லாமல் லேசாக புன்னகைத்தவனை கண்கள் இடுங்க கண்டார் வெள்ளைச்சாமி.
அவனது மென்மையான குரலில் முகத்தில் உள்ள பயம் தெளிந்தவராக, யார் தம்பி நீங்க? என்றார் குழப்ப ரேகையோடு.
நான் யாருனு மெதுவா சொல்றேன் நீங்க இப்டி முதல்ல உக்காருங்க என்றவன் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து தண்ணீர் போத்திலை எடுத்து அவரிடம் கொடுத்து குடிக்க சொல்லி நெஞ்சை இதமாக நீவி விட சற்றே ஆசுவாசம் ஆனாலும், வெளியே நின்று பேசாமல் அடிக்கடி வீட்டுக்கு வந்து பழக்கப்பட்டவன் போல் அவன் பாட்டுக்கு நேரே உள்ளே வந்ததில் புரியாமல் பார்த்தார் அவனை.
இப்ப சொல்லுங்க தம்பி யார் நீங்க? எதுக்காக இங்க வந்து இருக்கீங்க? மீண்டும் அவர் கேள்வி எழுப்பியதில், உங்க பொண்ணோட காதலன்.. என்று சொல்ல வந்தவன் உள்ளிருந்து வந்த தேனிசை குரலில் சொல்ல வந்ததை நிறுத்தி குரல் வரும் திசையை பார்க்கலானான். அப்பா இன்னைக்கு நீங்க என்கூட காலேஜ் வர வேண்டாம் வீட்லயே நல்லா ரெஸ்ட் எடுங்க, பிராக்ட்டிக்கள் மட்டும் தான் இன்னைக்கு இருக்கு மதியத்தோட வந்திடுவேன். போர் அடிச்சா டிவி பாருங்க ராகி கஞ்சி இருக்கு ஒரு பதினோரு மணி போல குடிங்க, வெளிய எங்கேயும் போகாதீங்க அதிக வெயில்ல போனா தலை சுத்தும் நான் கிளம்புறேன் ப்பா.. தன் அறையில் இருந்தபடியே குரல் கொடுத்தவாறு கல்லூரி பையை தோளில் மாட்டிக் கொண்டு வெளியே வந்தவள் குறும்பு புன்னகை மிளிர வெள்ளைச்சாமியின் அருகில் கைகட்டி நின்றிருந்தவனை கண்டு இவனா? என்ற அதிர்ச்சியோடு எச்சிலை விழுங்கியபடி அதே வேகத்தில் தன் தந்தையை பதட்டமாக கண்டாள் மோகி.
ஏம்மா மோகி இந்த தம்பி யாருனு உனக்கு தெரியுமா? எடுத்ததும் கேட்ட கேள்விதனில் சொல்வதறியாது ம்ம்.. என்று லேசாக தலையாட்டியவளை யோசனையாக கண்டவர். யார் இது? அடுத்த கேள்வியை கேட்டிருக்க 'நானும் உங்க பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா விரும்புறோம் அங்கிள். அதை மோகி உங்ககிட்ட சொல்ல எம்பார்ராஸ்ஸிங்கா ஃபீல் பண்றா. அதான் நானே உங்ககிட்ட எங்க லவ்வபத்தி பேசி உங்களோட சம்மதத்தை தெரிஞ்சிக்க வந்தேன்' இவரிடம் போய் இப்படியெல்லாம் இறங்கி வந்து பேச வேண்டிய நிலை வந்து விட்டதே என்ற கடுப்பை உள்ளுக்குள் மறைத்து அவளுக்கு முன் முந்திக் கொண்டு உண்மையை உடைத்திருந்ததில் மோகி அதிர்ச்சியில் திகைத்து விழிக்க, வெள்ளைச்சாமியின் முகம் பலவித உணர்ச்சி பரிமாணத்தில் மாறி மாறி பிரதிபலித்துக் கொண்டிருந்தன.
ஏன்டா என்பது போல் விஷ்வாவை முறைத்து விட்டு தயக்கமாக அவள் தந்தையிடம் வந்தவள், 'அ.ப்பா.. அது.. நானே இதை பத்தி உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன். விஷ்வா ரொம்ப நல்ல பையன் ப்பா, எனக்காக நிறைய பண்ணிருக்கான், நான்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் அவனை பிடிக்கும் ப்பா.. இதுக்கு மேல உங்களுக்கு நான் எப்டி சொல்லி புரிய வைக்கிறது' திடுதிப்பென்று உண்மையை உரைத்ததில் என்ன சொல்லி அவருக்கு விஷ்வா நல்லவன் என்று விளங்க வைப்பது என தெரியாமல் தடுமாறும் மகளை புன்சிரிப்போடு கண்டார் வெள்ளைச்சாமி.
அப்பா.. அவரின் சிரிப்பின் அர்த்தம் புரியாது விழித்தவளின் தலை வருடி. உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு கண்ணு. என் பொண்ணு எப்பவும் தப்பான வழிய தேர்ந்தெடுக்க மாட்டா. நான் தான் உலகம் தெரியாமலே வாழ்ந்துட்டேன் படிக்காத பட்டிக்காட்டான். ஆனா நீ படிச்ச புள்ள காலேஜி எல்லாம் முடிக்க போற, என்ன விட நல்ல புத்தி கூர்மை உள்ள புள்ள உனக்கு தெரியாதா கண்ணு யார்யார் எப்டினு. இந்த தம்பிய நீயே மனசு வந்து தனக்கு இவன்தான் துணைனு உறுதியா தேர்ந்தெடுத்து இருக்கேன்னா கண்டிப்பா இந்த தம்பியும் உன்ன மாறியே நல்ல புள்ளையா தான் இருக்கும். இருவரையும் அர்த்தமாக கண்டு புன்னகைத்தவரை விஷ்வா ஆர்ப்பாட்டம் இல்லாமல் பார்க்க, அப்பாஆ.. என்ற சந்தோஷ கூச்சலோடு தாவி அவரை கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்க அவர் கன்னத்தில் முத்தம் வைத்திருந்தாள்.
உங்களுக்கு உண்மையாவே விஷ்வாவ பிடிச்சி இருக்கா ப்பா.. எம்மேல உங்களுக்கு கோவம் எதுவும் இல்லையே. என் மனசு கஷ்டபடக் கூடாதுனு எனக்காக எதுவும் சொல்லாதீங்க ப்பா உங்களோட விருப்பம் என்னவோ அதை மட்டும் சொல்லுங்க. தந்தையின் குணம் அறிந்தும் அவர் வாய் மொழியால் சம்மதம் கேட்க அத்துனை ஆவல்.
எனக்கு உன் சந்தோசம் மட்டும் தான் எல்லாமே. நானா ஒரு வரன் பாத்தாலும் உன் விருப்பம் இல்லாம சம்மந்தம் பேசி முடிக்க மாட்டேன் மோகிமா. ஆனாலும் காதலிக்கும் போது கண்ணியம் ரொம்ப முக்கியம் மோகி.. என்றதை கண்டிப்போடு மொழிந்து விஷ்வாவை ஒரு பார்வை பார்த்தவராக. என்ன தம்பி நான் சொல்றது சரிதானே என்றார் ஒழுக்கம் தவறாது இருக்க வேண்டும் என்ற ஏவலோடு.
அவர் கேட்டதும் சட்டென மோகியை பார்த்தவன். இப்டி ஒருத்திய பக்கத்துல வச்சிக்கிட்டு கண்ணியமா? என்ற எள்ளலோடு, கண்டிப்பா உங்க பேச்சை மீறி எதுவும் நடக்காது அங்கிள். அப்பாவிடம் கண்ணியமாக கூறி மகளிடம் கண்ணடித்து சேட்டை செய்தான் காதல் நாடகன். அரை நொடிதனில் அவன் செய்த சேட்டையில் வாய் பிளந்து கன்னம் சிவந்து கண்ணை உருட்டி மிரட்டல் விட்டாள் அவள்.
அவன் உறுதியாக சொன்ன கம்பீர தொனியில் தலையசைத்தவர், முதல்ல இந்த கடைசி வருச படிப்ப படிச்சி முடி கண்ணு. பிறகு இந்த தம்பியோட வீட்டுக்கு போயி பெரியவங்ககிட்ட பேசி அப்புறம் ஆக வேண்டிய வேலையப் பாக்கலாம் என்றவரோ என்ன தம்பி நான் சொல்றது என் பொண்ணு படிப்பு முடிஞ்சதும் உங்க வீட்டுக்கு வந்து கல்யாணத்த பத்தி பேசலாம் தானே என்றிட. சரி என சம்மதம் தெரிவித்தவனாக, வந்ததில் இருந்து நட்சத்திரம் போல் மின்னி அவன் கண்களுக்கு நடுவே ஜொலித்த அழகியை கண்டு ஏக்கபெருமூச்சு விட்டு நின்றவன் அவள் தந்தை அசந்த நேரம் பார்த்து அவளை தனியே இழத்து சென்று பூஇதழை பிச்சி தின்று அவள் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை அமோகமாக கண்ணியம் குறையாமல் நிலைநாட்டி விட்டு சென்றான் அவன்.
மகளின் விருப்பத்திற்காகவும் விஷ்வரூபனின் பணிவான குணத்தை வைத்தும் (அப்படி அவரிடம் பக்காவாக தன்னை காட்டிக் கொண்டான்) வெள்ளைச்சாமி இருவரின் காதலையும் மனபூர்வமாக ஏற்றுக் கொண்டு விட்டாலும் மனதினோரம் கலக்கம் தோன்றி தொண்டைக்குள் சிக்கிய மீன்முள்ளாக அறுவியதில் ஏதோ ஒரு பெரிய தவறு நடக்கப் போவது போல் பலவித உணர்வு அவருள்.
இருந்தும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மகளை விட்டு பிரிய மனமின்றி கணபாரம் நெஞ்சில் சுமந்துக் கொண்டு அடுத்த முறை வரும் பொழுது விஷ்வாவின் தாத்தாவை நேரில் பார்த்து திருமண விடயத்தை பற்றி பேசுவதாக முடிவு செய்தவர், அதுவரை இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டாம் என்றதை இருவரிடமும் அழுத்தமாக கூறி விடைபெற்று ஊர் நோக்கி புறப்பட்டு இருந்தார் தனது இறுதி வாழ்க்கை பயணத்தையும் எதிர் நோக்கியவராக.
தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு மோகி விஷ்வரூபனை பார்ப்பதை தவிர்க்க ஒவ்வொரு நாளும் பெரும்பாடு பட்டும் தூசிக்கும் பிரயோஜனம் இல்லாமல் போனது அவனிடத்தில். நாளுக்கு ஒருமுறையேனும் எனர்ஜி டானிக் போல் அவள் இதழை மட்டுமின்றி இன்னும் பற்பல பெண்தேக சுரங்கங்களில் புதையல் திருடி செல்லும் திருட்டுப் பையனை அடக்குவது என்பது அசாத்தியமான காரியம் ஆனது.
அவள் கராறாக இல்லை முடியாது என்றால் கோவம் கொண்டு முகத்தை தூக்கி வைத்து பேசாமல் வளைய வரும் மாயமுகனை கண்டு பெண்மனம் இளகி அரைமனதாக வெறும் முத்ததிற்கு மட்டுமே அனுமதி வழங்கினால் பெண்ணின் பூந்தேகத்தையே சக்கை பிழிந்து பதம் பார்த்து விடுவான். இன்னும் கணவன் மனைவி போல் ஈருயிர் ஓருடலாக பின்னி பிணைந்து அவளை மொத்தமாக சுருட்டி அவனது ஆண்மைக்கு இறையாக்கிக் கொள்ளாத குறை தான் அவனிடம்.
இரவு உணவு தினமும் அவள் வீட்டினில் தான். அவள் சமைக்க அவன் பின்னிருந்து அணைத்து அவளை சமைக்க விடாமல் சில்மிஷங்கள் செய்ய என்று ஒருக்காலத்தில் அவள் அவனுக்கென ஆசையாக செய்துக் கொடுக்கும் உணவை பிரித்துக் கூட பார்க்காமல் அத்துனை மிதப்பாக குப்பை தொட்டியில் போட்டு சென்றவன் இப்போது ஒருவேளையாவது அவளின் உணவுக்காக ஏங்கும் அளவிற்கு அவளையும் அவள் கைபக்குவத்தையும் அதிகஅளவில் விரும்பி விட்டான் போலும். அவள் ஊட்டி விடும் உணவை உண்டு முடித்து விட்டு சற்று நேரம் அவள் மடி தரும் இதமான கதகதப்பில் பாவையின் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டே சிறிது நேரம் கண்ணயரும் காதலனின் தலைகோதி ரசித்துப் காண்பாள். அவன் விழித்திருக்கும் போது கொடுக்க முடியாத ஆசை முத்தம் அவன் உறங்கும் போது குட்டிகுட்டியாய் இதழ் தீண்டா மென்முத்தம் பதித்து கூச்சத்தில் இதழ் கடித்து தனிமையில் புன்னகைத்துக் கொள்வாள்.
அன்று பொழுதும் அலுவல் வேலையை முடித்து விட்டு அவசரஅவசரமாக மோகநங்கையை பார்ப்பதற்க்காக தயாராகி கார் சாவியை விடுத்து பைக் சாவியை எடுத்துக் கொண்டு இருக்கையில் இருந்து எழப் போன நேரம், சார்.. என கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்திருந்தான் கண்ணன்.
என்ன கண்ணன் முக்கியமா ஏதாவது சொல்லனுமா? எரிச்சலோடு அவசரகதியில் கேட்டதும் பதட்டமாக ஆம் என்றவன். சார் நம்ம பிராண்ட் லோகோ டிஃப்ரென்ட் லுக்ல ரெடி பண்ண சொல்லி இருந்தீங்களே அது ரெடி பண்ணி உங்க மெயில்க்கு அனுப்பியாச்சு.
அவ்ளோ தானா சரி நாளைக்கு பாக்குறேன் என்று ஓட போனவனை தடுத்து, சார் அப்புறம் பிராண்ட் ஷூட்டிங்க்கு நியூ கேமரா வாங்கி தரேன்னு சொல்லி இருந்தீங்களே எப்ப வாங்குறதுனு சொன்னீங்கனா ஆர்டர் கொடுத்துடலாம், நெக்ஸ்ட் வீக் போல ஷூட்டும் தொடங்கிடலாம். இப்போது அவன் அவசரமாக உரைத்ததில், ஓகே ஃபைன் ஆர்டர் கொடுத்துடு கண்ணன். மத்தது எதுவா இருந்தாலும் மார்னிங் பேசிக்கலாம் அவ்வளவுதான் என்றதோடு மோகியின் தரிசனம் காணஓடோடி விட்டான்.
கதவு தட்டும் சத்தத்தில் வகுப்பு பாடத்தை படித்துக் கொண்டு இருந்தவளின் நெஞ்சிக் கூட்டில் சில்லென்ற இதம் வீச, சரியா வந்துட்டான் சிடுமூஞ்சி. கொஞ்ச நாள் அமைதியா பொறுடா ராஸ்கல்னு சொன்னா சொல் பேச்ச கேக்குறானா தடியன். செல்லமாக கடிந்தபடி கதவை திறந்தது தான் தாமதம் ஆடவன் கையில் துள்ளலிய மீனின் செப்பு இதழ்களை கவ்வி தேனமுது பறுகியவனுக்கு இப்போது தான் சீரான மூச்சி காற்று வெளி வந்த உணர்வு. ஏனோ இப்போதெல்லாம் ஒருமுறையேனும் அவன் தேவதையின் முகத்தை பார்க்கவில்லை என்றால் பைத்தியம் பிடிக்கும் உணர்வு.
அவனே அறியாமல் அவள் மீது காதல் கூடிப் போனதில் உண்டான பித்து என புரியாதவன், புரிந்தும் புரியாததை போல் கண்டு கொள்ளாதவன், இது தனது பொம்மை என இரவும் பகலும் தன்னோடு இறுக்கி வைத்துக் கொண்டு அலையும் குழந்தை போல், இருக்கும் வரையிலும் அவளின் உன்னதமான புனித அன்பினை வம்படியாக பெற்று அவள் மடிதனில் அடங்கி மயங்கிக் கிடக்க ஆசை. தென்னங்கல்லின் கிறங்கடிக்கும் போதையை அவள் இதழில் பெற்று கண்சொக்கி அவள் உயிரை உறிஞ்சி எடுத்து விடுவான்.
இப்போதும் மறுக்க மறுக்க இடைவிடாது நடத்திய முத்த குளியலில் இதழ் தாடை கன்னத்து என்புகள் யாவும் மறுத்து விட்ட நிலையில் சிவந்து ரத்தம் கன்றிப் போனது. மூச்சி வாங்க அவனை முறைத்த பண்ணீர் கட்டி கண்களுக்கு மாறி மாறி முத்ததாலே திணறடிக்கும் காதலனின் அதீத காதலில் மெய்யுருகி அவன் கை சிறையில் கட்டுப்பட்டுப் போனாள் காதல் காரிகை.
அவன் வந்துவிட்டால் இரவு உணவினை முடிக்க விடாமல் தொடர்ந்து செய்யும் சேட்டையால் கண்ட இடங்களில் கிச்சிகிச்சி மூட்டி இம்சை செய்தே ஒரு வழியாக்கி விடுவான் என்ற அச்சத்தில் கல்லூரி விட்டு வந்ததும் அவனுக்கு பிடித்த மாதிரி உணவை தயார் செய்து ஹாட் பாக்ஸில் அடைத்து வைத்து விட்டாள்.
என்ன விஷ்வா வர வர உன் சேட்டை அதிகமாகுது. அப்பா சொல்லிட்டு போன வார்த்தைக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்க வேணாமா. வார்த்தைகள் யாவும் விட்டு விட்டு அவஸ்தையாக வெளிவந்தது மடியில் படுத்திருந்தவனின் சூடாக தகிக்கும் மூச்சி காற்று அவளின் மென்வயிற்றில் பரவவிட்டு பட்டும் படாமலும் தடித்த பெரிய அதரம் கொண்டு இதழ் கிறுக்கல் வரைந்ததில்.
எனக்கு வார்த்தைய விட நீமட்டும் தான் முக்கியம் மோகி.. முன்னாடி மாதிரி எல்லாம் தூர இருந்து பாத்து உன்ன ரசிச்ச காலம் மாறி போச்சி. இப்ப உன்ன ஒரு நாள் பாக்காம இந்த உதட்டுல முத்தம் குடுக்காம என்னோட ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமா எனக்கு சொந்தமாக உன்கிட்ட காட்டாம மூச்சி முட்டுது டி. கண்ணியம் காக்குற அளவுகளை எல்லாம் என் காதல் உம்மேல எல்லை தாண்டி போயாச்சு. என்ன பொறுத்த வரைக்கும் நமக்கு கல்யாணம் ஆனாலும் ஆகலைனாலும் என் காதலி மனைவி எல்லாம் நீ மட்டும் தான்.
இதையே உன் அப்பாகிட்டயும் என்னால நேருக்கு நேர் பாத்து சொல்லிருக்க முடியும் ஆனா உன் அப்பா மனச கஸ்ட படுத்தி அனுப்பக் கூடாதேன்னு அவர் சொல்லுக்கு சம்மதம் சொன்னேனே தவிர, ஒருநாளும் உன்ன என்கிட்ட இருந்து தள்ளி நிறுத்த முடியாது டி. உன் கழுத்துல தாலி கட்டின பிறகு தான் உன்ன தொடணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. உணர்ச்சிமிகுதியும் தெனாவட்டும் கலந்து அவன் சொன்ன விதம் பெண்மனதில் தான் சூறாவளி சுழட்டிப் போட்டது.
'சரி நேரம் ஆச்சி விஷ்வா நீ வீட்டுக்கு கிளம்பு மீதிய நாளைக்கு பேசிக்கலாம்' அதிகரித்துக் கொண்டே போகும் அவனது தீண்டளின் காதல் வன்மையை ஓரளவுக்கு மேல் ரசிக்க முடியாமல் தந்தையின் வாக்கு நியாபத்தில் வந்து இம்சை செய்யவே, காதலனிடம் குழையும் மனதை கட்டுப்பாட்டில் வைப்பது கடினமாகிக் கொண்டே செல்கிறதே.
மச்.. போக தான் டி போறேன் சும்மா துரத்தி விடறதுலயே இருக்காத என்று எரிச்சல்ப்பட்டுக் கொண்டவனாக, ஏன் மோகி பொங்கல் வருதே நீ இங்க தனியா இருந்து என்ன பண்ண போறே அங்க நம்ம வீட்டுக்கு வரியா நீ நான் தாத்தா மூணு பேருமா சேந்து இந்த பொங்கல செலப்றேட் பண்ணலாம். உன்னையும் என் தாத்தாக்கு அறிமுகம் படுத்தி வச்ச மாதிரி இருக்கும். வீட்ல அவர் தொல்லை தாங்கல டி, எப்படா கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நச்சரிச்சிகிட்டே இருக்காரு. உன்ன பாத்தா என்னை கொஞ்சம் நிம்மதியா விடுவாரு என்ன டி சொல்ற வரியா அங்கே. கண்கள் மின்ன ஆசையோடு கேட்டவனுக்கு ஏன் இப்படி திடிரென கேட்டான் என்பது அவனுக்கே புரியவில்லை.
ஆனாலும் அடிமனதில் பிறந்த ஆசையை மறைக்காமல் கேட்டுவிட்டதில் யோசனையாக முகம் சுருக்கியவள், அவள் பதிலுக்காக காத்திருந்தவனின் வசீகரிக்கும் அப்பாவி முகம் கண்ட பின்னும் அவள் மறுப்பாளா என்ன. புன்னகையுடன் சம்மதம் சொல்லவும் மனம்நிறைந்து அங்கிருந்து சென்றான் அவன்.
இந்த பொங்கல் கொண்டாட்டம் பிறகு இருவரது வாழ்க்கையும் வெவ்வேறு திசையில் கொடுமையான புயல் காற்று வீசி சிதறடிக்க போவது அறியாமல், இருமனங்களும் இணைந்து தங்களது காதல் வலையில் விழுந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தது இன்பமாக.
இருவரும் எதிர்பார்த்த அந்த தைதிரு நன்நாளும் வந்து விட்ட நிலையில் தேவலோக மங்கையாக மாம்பழ பட்டில் மிதமான ஒப்பனையில் எழிலோவியமாக அவனோடு பைக்கில் வந்து இறங்கியவளின் கை பிடித்து அழைத்து வந்தவன் பார்வை அவளையே வட்டமிட்டு சுற்றம் மறந்து போனான் அவள் அழகில் மயங்கி.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 19
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.