- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 20
அளவான மினி மாளிகை வீடு வசதிகளுக்கு குறைவின்றி பளிச்சிட்டு மின்னிக் கொண்டு இருப்பினும் ஏதோ ஒரு முழுமையடையாத குறை மறைமுகமாக எதிரொலித்தன அங்கு.
எப்பேர்ப்பட்ட மாளிகை வீடாக இருப்பினும் பெண்களின் பேச்சிக் குரல், சிரிப்பு சத்தம், மென்பாதம் தரையில் பட்டு சிணுங்கும் கொலுசொலி, வளையல் கொஞ்சும் ஓசையோடு சமைத்து வைப்பது சுவாமியை தரிசிப்பது என்று கண்ணை நிரப்பும் அவ்வழகான காட்சிகள் யாவும் வீட்டையே நிறைத்து வைக்கும். பெண்களின் ஒற்றை சிரிப்பொலியில் சகல கஷ்டங்களும் மறந்து போகும் பெண்கள் இல்லாவிட்டால் சொர்க்கமும் சலித்துப் போகும். வேலையாட்களும் ஆண்களே வளைய வந்த விஷ்வரூபனின் உயிர்ப்பில்லாத வீட்டினுள் வலது காலை அடியெடுத்து வைத்த அழகு மங்கையின் மிரலும் விழிதனில் சறுகி விழுந்தான் ஆடவன்.
'என்ன விஷ்வா இது வீடே வெறிச்சோடி இருக்கு. பொங்கலுக்கான எந்த வேலையும் ஆராமிக்கலையா இன்னும்' புரியாமல் இமைகளை சுழட்டியவளை தானும் புரியாமல் கண்டவனாக, 'இங்க என்னையும் தாத்தாவையும் தவிர வேற யாரும் இருக்கா? நீ வரேன்னு தான் செல்வத்தை வெஜ் ஐட்டம்ஸ் எல்லாத்தையும் சமைக்க சொல்லி இருக்கேன் இதுக்கு மேல வேற என்ன டி பண்ணனும்' என்றான் சாதாரணமாக.
குடும்பமாக கூடி நின்று மாந்தோரணை கட்டி கரும்பு சோலைகள் சலசலக்க வண்ண கோலத்தின் நடுவே நிற்க வைத்து மஞ்சள் கிழங்குகள் சுற்றிய மண்பானையில் பொங்கலிட்டு, அது பொங்கி வரும் வேலையிலே பொங்கலோ பொங்கல் என்றெல்லாம் கத்தி கூச்சலிட்டு சலிக்க சலிக்க கரும்பை உடைத்து மென்று சக்கையை துப்பி கொண்டாடியது இல்லையே அவன். முழுதாக விபரம் தெரியும் முன்பே குடும்பங்கள் கலைந்து சிறுவர்கள் இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில் கடினப்பட்டு முன்னேறியே துள்ளி மகிழ வேண்டிய வாலிப காலங்கள் சென்று விட்டதே.
சுத்தம் என தலையில் கை வைத்துக் கொண்டவளின் பளிங்கு முகம் ஆடவனை மேலும் மேலும் இம்சை செய்தன. 'என்ன மோகிமா நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா' அப்பாவியாய் கேட்டவனை அப்படியே அள்ளி எடுத்து மடியில் வைத்து முத்தமிட்டு கொஞ்ச ஆசை தான், ஆனால் அதன் பிறகு முரடன் கையில் மாட்டிக் கொண்ட முயலின் கதையாக மாறி விடுமே என்ற எண்ணத்தில் ஆசையை அடக்கிக் கொண்டு செல்லமான முறைப்போடு, உன் தப்பு கூட என்ன ரசிக்க வைக்குது விஷ்வா மனதில் மட்டுமே நினைத்தவளாக 'ஆமா உன் தாத்தா எங்கே அவருக்கு கூடவா இதெல்லாம் தெரியாது' வீடெங்கும் பார்வையை சுழல விட்டாள் மோகி.
அவருக்கு நான் வீட்டுக்கு வருவேன்னு தெரியாது மோகி தெரிஞ்சிருந்தா ஹால விட்டு நகர மாட்டாரு. ரூம்ல தான் டேப்லெட் சாப்ட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பாரு வா போலாம் என்றவாரு தாத்தாவின் அறைக்கு அழைத்து சென்றான் அவளை.
விசாலமான அறையில் கண்மூடி படுத்திருந்த தாத்தாவின் எண்ணமெல்லாம் பண்டிகை நாளில் கூட வீட்டில் இல்லாமல் பெண்களோடு கூத்தடிக்க சென்று விட்டானோ என்று பேரனை சுற்றியே இருக்க, உடலும் உள்ளமும் சோர்வாகி போனவரின் செவியில் தாத்தாஆ..என்ற உற்சாகக் குரல் கேட்டதில், ரூபன் வந்துட்டியா என புன்னகையோடு எழுந்தவரின் முகம் சுருங்கிப் போனது, அவன் கை பிடித்து நின்றிருந்த மோகியை கண்டதும்.
என்ன ரூபன் இது கூத்து இத்தனை நாளா வெளிய தான் இதெல்லாம் வச்சிக்கிட்டேனு பாத்தா இப்போ வீட்டுக்கே அழைச்சிட்டு வந்துட்டியா. அதுவும் விஷேச நாளுல. தாத்தாவின் கோபக் குரல் உயர்ந்து வந்ததில் மிரண்டு போனாள் மோகி.
விஷ்வா மீது உள்ள கோவத்தில், லட்சணமான சாந்த முகத்தை சரியாக கவனிக்காமல் தாத்தா கத்திவிட்டதில் மோகி யோசனையாக முழிப்பதை கண்டு ஜர்க்கானவன், ஐயோ தாத்தாகிட்ட முன்னாடியே இவ வரபோறத சொல்லாத விட்டது எவ்ளோ பெரிய தப்பாகி போச்சி. தேவை இல்லாதத சொல்லி காரியத்தை சொதப்பி விடறதுகுள்ள அவர அடக்கு டா விஷ்வா என கலவரத்தை முகத்தில் காட்டாமல். 'தாத்தா கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னா மட்டும் போதாது நான் கட்டிக்க போற பொண்ணு முன்னாடி இப்டி தான் கத்தி பயம்புருத்துவீங்களா' மிடுக்கான குரலில் பிடித்திருந்த அவள் கரத்தை விடுத்து அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டதில் மோகி சங்கட்டமாக நெளிய, தாத்தாவின் கண்கள் கூர்மையாகின.
எந்த விதத்திலும் அவளை பார்த்தால் தவறான பெண் என்று நினைக்கும் படி இல்லாமல் சர்வலட்சணமும் பொருந்திய தெய்வகலாச்சியமாக இருந்தவளை கண்டு வியந்து போன தாத்தா, இது உண்மை தானா அல்லது தனக்காக ஒருவேளை பேரன் ஏதாவது முட்டாள்தனம் செய்து இருக்கிறானோ என்ற எண்ணத்தில் ஆழ்ந்து விஷ்வாவை கூர்ந்து பார்க்க, மோகியோடு நெருங்கி அவன் அன்யோன்யமாக புன்னகைத்தபடி நின்றிருந்த காட்சி அவர் மனதை அமைதி படுத்தி மோகியை வாஞ்சையோடு கண்டார்.
இவ பேர் மோகித்தா. நானும் இவளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் தாத்தா. மோகிய தான் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறேன். உறுதியாக கூறுபவனிடத்தில் கிஞ்சித்தும் பொய்யின்றி உண்மையை தாண்டியும் அவள் மீதுள்ள நேசத்தை அப்பட்டமாக வெளிக்கொணர செய்ததில் உள்ளம் குளிர்ந்து நிம்மதியா கண்மூடி திறப்பதற்குள் "என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா" தன் காலில் விழுந்த பூமயிலை நல்லா இருமா நல்லா இரு என மனதார வாழ்த்தியவர், இவனை நீ எங்கம்மா புடிச்ச? நல்லா விசாரிச்சு தான் இந்த பயல விரும்ப தொடங்கினியா? உன்கிட்டயாவது பொறுமையா பேசுவானா இல்ல இப்டி தான் தொண்டை கிழிய கத்துவானா? அன்பா அக்கறையா நடந்துப்பானா? கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனதில் விஷ்வா ஆத்திரத்தில் பற்களை கடிக்க, முதலில் புரியாமல் விழித்த மோகி அடுத்தடுத்த கேள்வியில் காதலனின் முகம் போன போக்கைக் கண்டு பொங்கி வரும் சிரிப்பை கடினப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
தாத்தாஆஆ.. இப்ப இதெல்லாம் ரொம்ப முக்கியமா கேட்கணுமா. வெளிய ஹால்க்கு வாங்க ஏதோ பொங்கல் வைக்க அவளுக்கு செங்கல் வேணுமாம். அவசரமாக உரைத்து விட்டு அவளை கையோடு இழுத்து சென்றவனை கண்டு தலையை சொரிந்தவராக, பொங்கல் வைக்க எதுக்கு செங்கல்லு, என்ன இவன் உளறிட்டு போறான் காதல் மயக்கத்துல புத்திகித்தி குழம்பிடுச்சா. கடைசியில் அவரே குழம்பி போனவராக வெளியே சென்றார்.
இப்ப எதுக்கு மோகி வந்ததும் வராததுமா இதெல்லாம் பண்ணனும்னு சொல்ற, என்கூடயும் தாத்தா கூடயும் டைம் ஸ்பென்ட் பண்ணுவனு பாத்தா பொங்கல் வைக்கணும் கோலம் போடணும்னு அடம் பண்ணிட்டு இருக்க, சிடுசிடுப்பாக மொழிந்தவனுக்கு அவளோடு நேரம் செலவிட வேண்டாம் என்ற எண்ணத்தை தவிர வேறு எதிலும் நாட்டமின்றி போனது.
சும்மா இரு விஷ்வா. இதுவே உங்க வீட்ல பொம்பளைங்க யாராவது இருந்திருந்தா இதெல்லாம் அவங்களே பண்ணி இன்னைக்கு தடபுடலா கொண்டாடி இருப்பாங்க, நானும் முதல் முதலா நல்லநாள் அதுவும் வீட்டுக்கு வந்துட்டு எப்டி அப்டியே விட்டுட்டு போறது சொல்லு. இப்ப நான் சொன்னது எல்லாம் நீ வாங்கிட்டு வர சொல்றியா இல்ல நானே போயி வாங்கிட்டு வரட்டுமா. முந்தானையை இழத்து சொருகிக் கொண்டு எழுந்தவளை, ஏய்.. இரு டி கடுப்ப கிளப்பாத வாங்கிட்டு வர சொல்றேன் என்றவன் முகம் அஷ்டகோணலாக மாறி வீட்டு வேலையாள் ஒருவரிடம் லிஸ்டை கொடுத்து கடைக்கு அனுப்பி வைத்தான்.
எப்போதும் அடங்காமல் தாம் ஒன்று சொன்னால் எடக்கு மடக்காக அவன் ஒன்று செய்வானே தவிர யாரிடமும் அடங்கி போகாதவன் இப்போது சிறு பெண்ணின் சொல்லிற்கு அடங்கி அவளுக்கு அடிபணிந்து போகும் பேரனை புன்சிரிப்போடு பார்த்திந்தார் தாத்தா. மோகி வந்த சில நிமிடங்களில் இருவரது காதலை பற்றியும் முழுமையாக கேட்டு அறிந்துக் கொண்டவருக்கு மோகியை மிகவும் பிடித்துப் போக, அடுத்தடுத்து அவள் உரிமையாக இன்று பொங்கல் பண்டிகையை தடபுடலாக கொண்டாடி ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இப்போது விஷ்வாவிடம் மல்லுக்கு நின்று அதில் வெற்றியும் கண்டு விட்டவளை பெருமிதமாக கண்டார் தாத்தா.
முதல்ல இந்த பேண்ட் சட்டையை போய்ட்டு மாத்திட்டு வேஷ்டி சட்டை இருந்தா மாத்திட்டு வா விஷ்வா. தாத்தா நீங்களும் தான் என்வளின் சொல்லுக்கு மறுபேச்சி உண்டா என்ன. அடுத்த சில நிமிடங்களில் இருவரும் கலக்களாக தயாரி வந்திட, வெள்ளை வேஷ்டி சட்டையில் புதுமாப்பிளை போல் புடைத்த மார்பு மின்ன ஜம்முனு நின்ற கண்ணாளனை ரசனையாக கண்ணில் நிரப்பிக் கொண்டவளாக, வீட்டு வாயிலை பெருக்கி சுத்தம் செய்து பெரிய ரங்கோலி வரைந்து அதில் வண்ண வண்ண நிறங்களை கொண்டு வர்ணம் தீட்டி அழகு பார்த்தவள், கோலத்தின் நடுவே ஆறு செங்கல்லை மூன்று பக்கமும் அடுக்கி வைத்து, கோலத்தின் இரு பக்கமும் சோலை குலுங்கிய கரும்புகளை முக்கோணமாக கட்டி நிற்க வைத்து மஞ்சள் குங்குமம் வைத்து அடுப்பில் விறகுகளை வைத்து நெருப்பை மூட்டிவளாக பொங்கல் பானையில் பட்டை தீட்டி மாஇலையும் மஞ்சளையும் கட்டி சூரியபகவானை நோக்கி கையெடுத்து தரிசித்தவளாக கண்ணில் ஒற்றிய பானையை அடுப்பின் மீது வைத்தாள்.
அவள் சொல்ல சொல்ல சிறு சிறு வேலைகளை செய்தபடி தாத்தாவும் பேரனும் அவள் செய்யும் அனைத்தையும் சுவாரிசியமாக பார்த்தவர்களை புன்னகையோடு கண்டு, எங்க ஊர்ல எல்லாம் வீட்டுக்கு வீடு இப்டி தான் ஒவ்வொரு வருஷமும் பொங்கல் கொண்டாடுவாங்க. அம்மா போன பிறகு அப்பா தான் ஒவ்வொரு வருஷமும் இதெல்லாம் பண்ணுவாரு, கொஞ்சம் நான் வளந்த பிறகு நானும் அப்பாவும் இப்டி தான் ஜாலியா பொங்கல் வைப்போம் அப்டியே அக்கம் பக்கத்து பசங்க எல்லாம் சேந்து ஒரே அரட்டை தான். மாட்டு பொங்கள் அப்போ எல்லா மாட்டு கொம்புலயும் பெயிண்ட் அடிச்சி கலர் கலர் பலூன் கட்டி கரும்ப கடிச்சிக்கிட்டு மாட்டு வண்டில ஏறி ஆஆ.. ஊஊ.. னு கத்தி கூச்சலிட்டு குதிச்சி ஊரையே சுத்தி சுத்தி வருவோம், காணும் பொங்கல் அன்னைக்கு காலைலயே குளிச்சி புது ட்ரெஸ் போட்டு அழகா தயாராகிட்டு அக்கம் பக்கம் வீடு சொந்தக்காரங்க வீடுனு ஒருத்தர் வீடு விடாம பொங்ககாசு வாங்கி உண்டியல்ல சேத்து வைக்கிறேன்னு எல்லா காசுலயும் விதவிதமா மிட்டாயும் தின்பண்டமாவே வாங்கி தின்னுட்டு, அதை கடைக்காரன் வீட்ல சொல்லி அடி வாங்கி அழுத பொன்வசந்த காலமெல்லாம் இனிமே எப்பவும் திரும்ப வராது.
அப்போதைய நினைவில் சிலாகித்து கூறிவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது இருவருக்கும். இப்போல்லாம் எல்லாம் மாறிடுச்சு தாத்தா முன்னாடி மாதிரி இல்ல அதுவும் இந்த சிட்டி லைஃப்ல சுத்தமா இல்ல என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பெரிய கேட்டை திறந்துக் கொண்டு பலகுழந்தைகள் கத்தி கூச்சலிட்டபடி ஓடி வருவதை கண்டு வியந்தவளாக எழுந்து நின்றாள்.
குழந்தைகளுக்கு பின்னாலே விஷ்வரூபனுக்கு சற்றும் சலைக்காத தோற்றத்துடன் கூலிங் க்ளாஸ் விகிதம் கோர்ட் சூட்டில் நடந்து வந்தவனை தாத்தாவும் மோகியும் புரியாமல் பார்த்த நேரம், புதிய ஆடவனும் விஷ்வரூபனும் ஒருவரை ஒருவர் இருக்கமாக கட்டிக் கொண்டு இருந்தனர்.
ஹௌ ஆர் யூ விதுரா? இப்ப தான் இந்தியா வர வழி தெரிஞ்சிதா ஓங்கி அவன் வயிற்றில் குத்து விட, உடலை முன்னால் வளைத்து வயிற்றை பின்னால் இழுத்து அவன் குத்தில் இருந்து தப்பித்து, பாத்தா நல்லா இல்லாத மாதிரியா இருக்கு. ஐயம் குட் டா. இனிமே இந்தியாவுலே செட்டில் ஆகலாம்னு மொத்தமா கொய்த்த க்விட் பண்ணிட்டு வந்துட்டேன் என புன்னகைத்த விதுரன். வாட் அபௌட் யூ விஷ்வா? என்ன புதுசா ட்ரெடிஷ்னலா மாறிட்ட பாக்க மாஸா இருக்கியே டா. இருவரும் பேசிக் கொண்ட விதமே நீண்ட கால நண்பர்கள் போலும் என்று தான் எண்ண வைத்தது. அந்த எண்ணத்தை உண்மையாக்கும் விதமாக, தாத்தா இவன் என் பெஸ்ட் பிரண்ட் விதுரன் என அறிமுகப்படுத்தி இருந்தான் விஷ்வா.
ஓஹ்.. நல்லதுபா.. என விதுரனை வரவேற்றவராக, இன்னைக்கு எல்லாமே நல்லதாவே நடக்குது. எல்லாம் என் பேத்தி இந்த வீட்டுக்கு வந்த நேரம் என்றவரின் பார்வை போன திசையை பார்த்தவன் புன்னகை முகமாக நின்றிருந்த மோகியை கண்டு வாவ்.. வாட்ட பியூட்டி.. என வாய் பிளந்தவனாக 'இது யாரு விஷ்வா உன் சிஸ்டரா' என்றானே மோகியின் சிரித்தமுகம் இருண்டு போக விஷ்வாவின் பார்வையில் எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறியது விதுரன் மீது கோவம் கொப்பளிக்க.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 20
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.