- Messages
- 229
- Reaction score
- 212
- Points
- 63
அத்தியாயம் -23
அழகான காலை விடியல்,
நேரத்தோடு எழுந்த ஆத்வி ஹோம் தியேட்டரை அதிர விட்டு அதில் ஓடிய,
"ஹே.. கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டிகலக்குவேன்.. திட்டம் தீட்டிகலக்குவேன் பாரு.. கிளப்புவேன் கிளப்புவேன் பட்டயதான் கிளப்புவேன்.. பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு.."
சிம்பு பாடலுக்கு குத்தாட்டம் போட்டபடி தனது உடற்பயிற்சிகளை தொடர்ந்துக் கொண்டிருக்க, காது கிழியும் சத்தத்தில் உரக்கம் கலைந்து எழுந்த தன்யாவும் மாமனோடு சேர்ந்து நடனமாடிக் கொண்டு அவன் முதுகில் ஏறி சம்மனமிட்டு அமர்ந்துக் கொள்ள, அவன் புஷ்ஷப் எடுக்க என்று அமோகமாக காலை விடியல் இருவரையும் தழுவியது.
"மாம்ஸ்.. என்ன இன்னைக்கு நீ ஹாப்பி மூட்ல இருக்க. எனி ஸ்பெஷல்" குட்டி மூக்கை சுருக்கி கன்னத்தில் கை வைத்து தெளிவான குரலில் வினவினாள் தன்யா.
வியர்வை வடிய அவளை முதுகில் வைத்து புஷ்ஷப் எடுத்தவனோ, "எஸ் தன்யா குட்டி அப்டியும் வச்சிக்கலாம், ஆனா ஹாப்பி மூட்க்கு காரணம் தெரியலயே.. அதுவா ஒரு வைப்ல வருது" என்று மூச்சி வாங்கிய ஆத்வி, முதுகில் இருந்த குழந்தையை அலுங்காமல் கை வளைத்து தூக்கி தரையில் அமர்த்தி விட்டு, விட்டதை பார்த்து மல்லாக்கப் படுத்துக் கொண்டான்.
"ஓஹ்.. அப்டியா.." என குட்டி தாடையை தேய்த்து அவனை யோசனையாக பார்த்த தன்யா, "ஆமா, நீயும் நர்ஸ் ஆன்டியும் எங்க அப்பா அம்மா மாதிரியா மாம்ஸ்.." தலையும் புரியாமல் வாலும் புரியாமல், குட்டி வாண்டு அவன் மூளையை குழப்ப முடிவெடுத்து விட்டது போலும்.
"என்ன பாப்ஸ் சொல்ற, உங்க அம்மா அப்பா மாதிரி மீன்ஸ்" என்றான் புருவம் சுருக்கி.
"ஹையோ மாம்ஸ், அன்னைக்கு நைட் நீ கீழ கார்டன்ல நர்ஸ் ஆன்டிக்கு முத்தா குடுத்தியே, அப்ப நீயும் அந்த ஆன்டியும் எங்க அம்மா அப்பா மாதிரி தானே.. ஏன்னா அப்பாவும் அம்மாக்கு அடிக்கடி முத்தா குடுப்பாங்க தெரியுமா.." பால் பற்களை காட்டி சிணுங்கி சிரித்துக் கொண்டே தெளிவாக உரைத்து, அவன் கொடுத்த முத்ததையும் சத்தமாக போட்டுடைத்தாள் தன்யா.
கண்களை அகல விரித்த ஆத்வி, "இந்த குட்டி பிசாசு எப்ப, அந்த சிவந்த மூக்கிக்கு நான் கிஸ் பண்ணப்போ வந்துச்சு" என்ற யோசனையில் முழ்கி, அதனிடமே தன் சந்தேகத்தை கேட்க,
"அதுவா, யது மாமா தான் நர்ஸ் ஆன்டிய உள்ள கூப்ட்டு வானு என்கிட்ட சொல்லிட்டு மேல போனாங்க, சரினு நானும் ஆன்டிய கூப்பிட கார்டன் வந்தேனா, அப்பதா நீ அவங்களுக்கு முத்தா குடுத்த" என்றதும் பட்டென அதன் வாயை மூடியவன்,
"ஏய்.. குட்டி பிசாசே நைட் நேரத்துல தூங்காம அங்கஇங்க உலா வர்றதே வேலையா போச்சி உனக்கு.. இனிமே இப்டிலாம் சொல்ல கூடாது புரிஞ்சிதா" செல்லமாக அதன் கன்னத்தை வலிக்காமல் கடித்து வைத்து, தூக்கி சுற்றியவன் கீழே வந்து குழந்தையை மித்ராவிடம் கொடுத்து விட்டு அலுவலகம் செல்ல தயாரானான்.
குளித்து முடித்து கோர்ட் சூட் விகிதம் கண்ணாடியை பார்த்து தலை வாரியவன் நினைவில், தன்யா சொன்ன விடயமே ஓடிக் கொண்டு இருந்தது.
நீயும் அந்த ஆன்டியும் அம்மா அப்பா மாதிரியான்னா, கணவன் மனைவி என்று தானே அர்த்தம் வருகிறது என நினைத்துப் பார்த்தவனுக்கு உடல் மொத்தமும் ஜிவ்வென்று ஏதோ ஏறிய உணர்வு.
உதடு கடித்து தனிமையில் தலைகோதி சிரித்துக் கொண்டவன் முகம், அடுத்த நொடி பாறையாக இறுகிக் போனது.
"ச்சி.. இவ எனக்கு வைஃபா சான்ஸே இல்ல, கூடிய சீக்கிரம் என்கிட்ட நீ மோதினதுக்கு எல்லாம் சேத்து வச்சி உன்ன கதற விடுறேன் டி.. இந்த ஆத்விக்கு வைஃபா வரனும்னா அதுக்குனு ஒரு தகுதி வேணும் பேபி, அந்த தகுதி எல்லாம் உன்கிட்ட துளி கூட இல்ல" இதழ் வளைத்து சொல்லிக் கொண்டவன் கைபேசி அலறியது.
திரையில் வந்த எண்ணை பார்க்காமல், "ஆத்வி ஹியர்" என்க,
"எனக்கு பயந்து ரேஸ் விட்டு போய், புதுசா பிசினஸ் எல்லாம் தொடங்கிட்டேன்னு கேள்வி பட்டேன், உண்மையா ஆத்வி" அந்த பக்கம் நக்கல் குரல் ஒளிக்க யாரென கண்டுகொண்டவன்,
ஹாஹாஹா.. என வாய் விட்டு சிரித்து, "நல்ல ஜோக் பண்ற மேன் நீ.. உனக்கு பயந்து ரேஸ விடுற அளவுக்கு எல்லாம் நீ வர்த்தும் இல்ல, நான் ரேஸ விடவும் இல்ல காட் இட்.. அப்புறம் எனக்குனு ஒரு அடையாளத்த ஏற்படுத்தி லைஃப்ல செட்டில் ஆக வேண்டாமா தீபக்.. எல்லாரும் உன்ன மாதிரி ஊதாரியா ஊர் சுத்துவாங்களா என்ன.." இவன் நக்கலில் கடுப்பான தீபக்,
"டேய்.. ஆத்வி.. என்னைக்கும் உன்ன முன்னேற விட மாட்டேன் டா.. எப்பவும் நான் உனக்கு போட்டிதான்.. ரேஸ்லயும் சரி லைஃப்லையும் சரி, கூடிய சீக்கிரம் களத்துல சந்திக்கலாம்" என்றவன் அழைப்பை துண்டித்து இந்தியா செல்லும் விமானத்தில் ஏறி இருந்தான். ஆத்விக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே.
காதை குடைந்தபடி போனை பேண்ட் பாக்கெட்டில் போட்ட ஆத்வி, "ப்ளடி டோமேட்டோ.. கை கால் எல்லாம் நல்லா தேறிடுச்சு போல அதான் உடம்பு ஊரி தானா வந்து வாங்கி கட்டிக்க பாக்குறான்" இதழ் கோணி நகைத்துக் கொண்டு கீழே வந்தான்.
கவி காலை 6 மணி அளவில் எல்லாம் வேலைக்கு வந்து விட்டாள், படுத்த படுக்கையில் கிடக்கும் விக்ரம்க்காக. ஆத்வியின் செயலில் அவன் வீட்டிற்கு வேலைக்கு செல்லக் கூடாது என்று தான் நினைத்தாள்.
ஆனால் விக்ரம்க்காகவும், ஆதி மித்ரா ஆரு அஜய், முக்கியமாக "என் அப்பாவ பத்திரமா பாத்துக்கோ கவி" என கடைசியாக யாதவ் சொல்லி சென்றது எல்லாம் யோசித்து, ஆத்வி ஒருவனுக்காக இத்தனை பேரின் அக்கறையான அன்பை இழக்க விருப்பம் கொள்ளாமல், மனம் கேளாமல் வந்து விட்டாள் தான்.
ஆனால் விக்ரம் அறை விட்டு வெளிவரவே இல்லை. எங்கே எந்த மூலையில் இருந்தாவது குரங்கு போல் குதித்து வந்து, தன்னிடம் அவன் வம்பு செய்வானோ என்ற அச்சத்தில்.
அவள் அச்சம் மெய்யாகும் பொருட்டு அலைபேசி அழைக்கவும், புது எண்ணில் இருந்து வரவே யோசனையாக அழைப்பை ஏற்றாள் கவி.
அந்த பக்கம் ஒரு ஆணின் மென்மையானக் குரல், 'பார்கவி' என்றது.
"எஸ் சொல்லுங்க" என்றாள் யாராக இருக்கும் என நினைத்தபடி.
"என்ன நான் யாருனு தெரியலையா, சரி நானே சொல்லிட்றேன்" என சிரித்தவன் "நான் விஷால் கவி" என்றதும் எந்த விஷால் என யோசனையாக நெற்றி சுருக்கி பின் நியாபகம் வந்தவளாக,
"ஓஹ்.. விஷால் நீயா எப்டி இருக்க" உற்சாகத்தில் இவள் கத்தி பேசியது அந்த அறையினை தாண்டி செல்லவிருந்த ஆத்வியின் காதில், சரியாக விழுந்து விட்டது.
"ஃபைன் கவி, நீ ஸ்வாதி ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்களா.."
"அதெல்லாம் சூப்பர் டா, நீ என்ன புது நம்பர்ல இருந்து கூப்ட்ருக்க.."
"என் மொபைல் மிஸ்ஸாகிடுச்சு கவி, நியூ மொபைல்ல நியூ சிம் போட்டு, நோட் பண்ணி வச்ச கான்ட்டாட்ஸ சேவ் செஞ்சிட்டு இருந்தேன், அப்டியே உனக்கு போன் பண்ணேன்.."
"ஓஹ்.. சரி டா, நீயும் ஆண்டியும் எப்போ இங்க வரீங்க, பாத்து ரொம்ப நாளாச்சு.."
"அப்போ ஈவினிங் எங்கள மீட் பண்ண நீயும் ஸ்வாதியும் ரெடியா இருங்க, நானும் மம்மியும் ஆன் தி வே" என்றதும் கவிக்கு மகிழ்ச்சி தாலவில்லை.
"ஹேய்.. சூப்பர் டா, கண்டிப்பா வரேன், ஆமா எங்க வரனும்.."
"உன் ஹாஸ்டல் பக்கத்துல இருக்க பார்க் ஓகேவா.."
"டபுள் ஓகே டா, சரி ஆண்டிய பாத்து கூட்டிட்டு வா. " என அழைப்பை துண்டித்து திரும்பியவளின் பின்னால் கை நின்றிருந்தான் ஆத்வி.
எச்சிலை விழுங்கிக் கொண்டு அவனை கண்டவளின் இதயம் அதிவேகத்தில் துடிக்க, அவனை கண்டு கொள்ளாது கடக்க நினைத்தவளின் கரம் பிடித்து அழுத்திய ஆத்வி,
"வேலை செய்ற நேரத்துல வேலைய மட்டும் தான் பாக்கணும், அத விட்டுட்டு கண்டவனோடவும் போன்ல சிரிச்சி பேசி அரட்டை அடிச்சிட்டு இருக்க.. தினமும் இப்டி தான் வேலை பாக்காம ஓப்பி அடிச்சிட்டு தரைய தேச்சிட்டு போறியா" பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்ப,
அவன் வலியக் கரத்தில் இருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்றபடியே, ஆத்வியை மூக்கு சிவக்க முறைத்த கவி,
"நான் வேலை செய்றேனா இல்லையானு உங்க அம்மா அக்காகிட்ட போய் கேட்டு பாருங்க, அவங்க நான் தரைய தான் தேச்சிட்டு போறேன்னு சொன்னா, அப்ப வந்து ஏன் வேலை பாக்கலைனு கேளுங்க பதில் சொல்றேன்..
அதோட நான் யார் கூட வேணும்னா போன் பேசுவேன், அதை பத்தி எல்லாம் உங்களுக்கு கேக்க ரைட்ஸ் கிடையாது" என்றாள் நேருக்கு நேர் அவன் கண்களை கண்டு தீர்க்கமாக.
ஓஹ்.. என உதடு குவித்து தலையாட்டிய ஆத்வி, "ஹ்ம்.. மேடத்தை கேள்வி கேக்கணும்னா உம்மேல ரைட்ஸ் உள்ளவனா இருக்கனும் அப்டிதானே" என்றான் ஆழ்பார்வையோடு.
"அப்படியும் வச்சிக்கலாம்.." தலை சிலுப்பி சொன்னவளை,
"இண்டெர்ஸ்ட்டிங்.." என முணுமுணுத்து, அவள் கையை முதுகு பின்னால் திருப்பிய ஆத்வி, பெண்ணின் பின்தேகம் தனது திண்ணிய தேகத்தில் மோதி நிற்க்குபடி செய்தவன், அவள் செவியை மறைத்த கருங்கூந்தலை மறு கரத்தால் ஒதுக்கி விட, பெண் தேகம் ஒரு வித சிலிர்ப்பில் நடுக்கமாக ஆட்கொண்டது.
அவள் காதில் இருந்து சரியவிருந்த இயர்பாட்ஸை விழாதபடி அழுத்தி விட்டு, "சீக்கிரமே உன்னோட மொத்த ரைட்ஸ்க்கும் சொந்தக்காரனா வந்து உன்ன கேள்வி கேக்குறேன், அப்போ நான் என்ன கேட்டாலும் நீ பதில் சொல்லி தான் ஆகணும்..
இப்ப கழுத்தை சிலுப்பின மாதிரி அப்ப சிலுப்பின, அடுத்து சிலுப்ப இந்த கழுத்து இருக்காது பேபி.." என்றவன் அவள் கழுத்து வளைவில் இதழ் பதித்து, விரல் கொண்டு இதமாக வருடி சொல்லும் வார்த்தைகளை புரிந்துக் கொள்ள முடியாமல், தொண்டைக் குழி அடைத்த உணர்வோடு, ஆடவனின் தீண்டலில் பேச்சின்றி தேகம் நடுங்கியது.
அவள் அமைதி அவனுக்கு இதம் கூட்ட மேலும் முன்னேறி, பின்னோடு அவளை அணைத்துக் கொண்டவனாக, அவள் வயிற்றில் அழுத்தமாக கரம் பதிக்கவும், மோன நிலை அறுபட்டு வேகமாமாக அவனை விட்டு பிரிந்து நின்று மூச்சி வாங்க முறைத்தவளை சுவாரசியம் பொங்க கண்ட ஆத்வி,
"என்ன தவிர வேற யார் தொட்டாலும் இப்டி தான் அமைதியா நிப்பியா" என்றவனின் நக்கலான கேள்வியில், ஆமா என்று வாய் தவறி சொல்ல வந்து, பின் கேள்வியின் அர்த்தம் புரிந்தவளாக, பாதியில் வாய் மூடிக் கொண்ட கவி,
"இங்க பாருங்க நீங்க தேவை இல்லாம என்கிட்ட வம்பு பண்ற மாதிரி தோணுது, இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல.. நான் இங்க என்னோட வேலைய பாக்க தான் வரேனே தவிர, உங்களோட அனாவசியமான குப்பை கேள்விகளுக்கு பதில் சொல்ல இல்ல..
உங்க பேமிலி மேல உள்ள மரியாதையால தான் உங்கள பத்தின எதையும் உங்க வீட்ல சொல்லாம இருக்கேன், சும்மா என்ன சீண்டணும்னு நெனச்சீங்க, எப்பவும் நான் அமைதியா இருக்க மாட்ட சொல்லிட்டேன்.." வார்த்தைகள் காரசார பட்டாசுகளாய் வெடித்து தள்ள, அசராது நின்று அவளை ஏறிட்டு பார்த்தான் ஆத்வி.
"கூடிய சீக்கிரம் உன்ன அடக்கிக் காட்றேன் டி, அது வரைக்கும் எவ்ளோ துள்ளணுமோ துள்ளு.. அப்புறம் குப்பைனு சொன்ன என் வார்த்தைகளுக்காக ஏங்கி தவிப்ப" அழுத்தம் திருத்தமாக சொன்னவனின் பார்வையோ, பாவையின் நுனி மூக்கில் நிலைக் குத்தி, அங்கு சிவந்து இருக்கும் இடத்தில் இருந்து சாரு குடிக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்து கிடந்தது.
அவன் சொன்ன பதிலில் சலிப்பாக முகம் சுளித்து வெளியேறப் போன கவியை மீண்டும் கை பிடித்து இழுத்து, சிவந்த மூக்கியின் செந்நிற சாரு பருகிய பின்னே விடுவித்த ஆத்வி, அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.
கவியின் நிலையோ பரிதாபமாக இருந்தது. சிவந்த தக்காளியாக மூக்கு வீங்கி.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 23
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.