Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 25

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 25

வெள்ளியை தூவி விட்டது போல் புல்வெளி எங்கும் பனித்துளிகள் படர்ந்து ரம்மியமான காலை பொழுதை குளுகுளுவென வரவேற்று இதமான பனிக்காற்று முகத்தில் மோதி ஆடையற்ற தேகம் குளிரில் ஊசியாய் குத்தியதில் நித்திரை கலைந்தாள் பேதை.

நிம்மதியான உறக்கம் அவள் மீது செல்லமான முறைப்பும் கூச்சமும் போட்டி போட, உடலை நெளித்து எழ முயற்சிக்கும் போதே நறுக்கென கவ்வி பசிக் கொண்ட பச்சிளம் குழந்தையாய் அவளை விடாது இறுக்கிக் கொள்ளவும், தன்னவனின் செயலில் தேகம் சிலிர்க்க அவன் முகம் நோக்கினாள் மோகி.

விஷ்வா.. விஷ்வா.. எழுந்திரி டா. டைம் ஆச்சி குளிச்சிட்டு ரெடியாகனும். அவனது முதுகில் தட்டி பார்த்து பலன் இல்லாது போகவே தலை முடியை பற்றி உளுக்கி எழுப்பிட. மச்.. இன்னும் கொஞ்ச நேரம் பேபி.. இங்க படுத்தா நல்ல சுகமான தூக்கம் வருது, கண் திறவாமலே உறக்க கலகத்தில் பிதற்றி பச்சை பிள்ளையாய் சிணுங்கி முகத்தை பிரட்டி மீண்டும் அவள் நெஞ்சிக் கூட்டில் தலை வைத்து உறக்கத்தை தழுவ கண்களை அகல விரித்து தலை உயர்த்தியவளாக, வரும் வரும் என் தூக்கத்தை கெடுத்துட்டு உனக்கு நல்லா தூக்கம் கேக்குதா அதுவும் சுகமான தூக்கம். ஒழுங்கா எந்திரி விஷ்வா வீட்டுக்கு போயிட்டு புக்ஸ் எடுத்துகிட்டு காலேஜ் போகணும். ஸ்..ஆ.. கூசுது டா ப்ளீஸ் எந்திரிச்சிக்கோயேன் ரெஸ்ட்ரூம் போகணும். மிரட்டலில் தொடங்கி பாவமாக முடித்தவளை இப்போது அவன் தலை உயர்த்தி சீரான பார்வை பார்த்தான்.

சும்மா சிணுங்கி சிணுங்கி என்னை டெம்ட் பண்றதே நீதான் டி. அப்புறம் நான் ஏதாவது செஞ்சா மட்டும் என்ன குத்தம் சொல்ற. இந்த விஷயத்துல மட்டும் பொம்பளைங்கல புரிஞ்சிக்கவே முடியல டி. பெரியதாக அலுத்துக் கொண்டு மீண்டும் தலை கவிழ்க்க போனவன் தலை முடியை இறுக்கமாக பற்றி தன் முகத்தில் அவன் முகம் மோத நிறுத்தியவளாக, இந்த சமாளிக்கிற கதை எல்லாம் இங்க வேணாம் அங்க சுத்தி இங்க சுத்தி நீ எதுக்கு வருவேன்னு எனக்கு நல்லா தெரியும், இப்ப மட்டும் ஒழுங்கா தள்ளி போகல அப்புறம் உனக்கு தான் கஷ்டம் எப்டி வசதி. திமிர் கலந்த குறும்போடு புருவம் உயர்த்தி இறக்கியவளை சிறு முறைப்போடு கண்டு 'கைய எடு டி வலிக்குது. என்னை சொல்லிட்டு வரவர நீதான் பேபி மோசமாகுற. நெயில் கட் பண்ணு டினு நேத்து நைட்டே சொன்னேன்ல இப்ப பாரு எரிச்சல் கொடுக்குது' அவனது தலைமுடியில் இருந்து இடம் மாறி இடுப்பை தாண்டி எங்கோ அழுத்திப் பிடித்திருந்த கரத்தினை வளைத்துப் பிடித்து இதழில் ஒற்றி கண்கள் சொருக முத்துக் குளித்தவனை அவனுக்கடியில் நசுங்கிய பூனை குட்டியாய் விழிகள் படபடக்க நெளிந்தாள் மோகித்தா.

திரும்பவும் அவள் அலண்டு போகும் அளவிற்கு காதலும் மோகமும் போட்டி போட மென்மையும் வன்மையுமாக கலந்த அழகிய கூடலை முடித்து விட்டு, விதவிதமான சிறப்பு அடி உதைகளோடு குளியலறையை கதற விட்டு ஈரம் சொட்டும் பெண் பொம்மையை பூந்துவாலையில் சுற்றி கையில் அள்ளி வந்தவன், உடை மாற்ற விடாமல் செய்த சேட்டையில் மாத்துக்கட்டில் உதை வாங்கி விருப்பமின்றி அவளது பூமேனியில் ஆடைக்கு அனுமதி வழங்கினான்.

உன் சைஸ் 36 டி நீ என்ன எப்பவும் ஒரு சைஸ் எக்ஸ்ட்ராவா போடற, சரியான இன்னர்ஸ் யூஸ் பண்ணா தான் பிரஸ்ட் சைஸ் பிட்டிங்ல இருக்கும், இல்லனா சீக்கிரத்துல உனக்கே வயசான ஃபீல் கொடுக்குமே டி. சுடிதார் டாப்ஸ் கூட லூசுல தான் வியர் பண்ற, எதுக்கு இப்டி ட்ரெஸ் பண்ற மோகி இந்த வயசுல தானே நமக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸஸ எல்லாம் வியர் பண்ணி அழகு பாக்க முடியும். நீ மட்டும் ஏன் டி பழங்காலத்து லேடி போல பிஷேவ் பண்ற. உள்ளாடையை அவளுக்கு அணிவித்திபடி விடாது அவன் தொணத்தொணத்த கேள்விதனில் முகம் தொங்கியவளை புரியாமல் பார்த்தான்.

எங்க அம்மா ஒரு கேன்சர் பேஷன்ட் விஷ்வா. எப்டி எப்பனுலாம் அவங்களுக்கும் தெரியல அதை பத்தி அப்பாகிட்டயும் சொல்லல. நான் அவங்க வயித்துல உண்டாகுற வரைக்கும் எந்த தாக்கமும் உடம்புல தெரியல அதன் பிறகு கர்ப காலத்துல ஏற்படுற சாதாரண உடல் உபாதைகள்னு நினைச்சி பிரஸ்ட் கேன்சர் வந்து கவனிக்காம விட்டதுல அது வீரியம் அடைஞ்சி என்னையும் எப்டியோ பெத்து எடுத்துட்டு இறந்து போய்ட்டாங்க. எனிடைம் பாடிய இறுக்கிப் பிடிச்சி காத்து வசதி இல்லாமா இதுமாதிரி டைட் இன்னர்வியர்ஸ் யூஸ் பண்ணதால கூட அவங்களுக்கு கேன்சர் வந்ததுக்கு வாய்ப்பு இருக்கும்னு, சந்தேகத்தின் காரணமா டாக்டர்ஸ் சொன்னதுல பயந்து போன எங்க அப்பா, நான் வளர வளர இன்னும் பயந்து அவரு தான் எனக்கு இப்டி பழகி விட்டது. எனக்கும் பழகிடுச்சு.

நிறைய விஷயம் அவரா தெரிஞ்சிக்கிட்டு நிறைய சொல்லுவாரு. இறுக்கமாக உள்ளாடைகள் அணிவதால் பல உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டு ரத்தஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் போன்ற உபாதைகள் ஏற்பட்டு சீரான ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போகவும், திசுக்கள் இறந்து போகவும் கூடும். விரலுக்கேத்த வீக்கம் போல் மார்பின் அளவுக்கு ஏற்ற உள்ளாடைகளை சரியான முறையில் தேர்வு செய்து அணிவது மிகவும் முக்கிய பங்கை விதிக்கிறது.

இரவுவும் பகலும் பெண்கள் தொடர்ந்து இருக்கமான உள்ளாடைகள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் காற்றோட்டம் தடைப்பட்டு வியர்வை அதிகம் வெளிப்பட்டு அவ்விடத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. இறுக்கமான முறையில் உள்ளாடைகள் அணிவதை இரவு நேரத்திலாவது தவிர்த்து விடுவது நல்லது.

மோகியின் விளக்கத்தைக் கேட்டு பெரிதாக ஒன்றும் மனம் துடிக்கவில்லை என்றாலும் அவளின் கூற்றில் உள்ள நியாயத்தை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் ஆடை உற்பத்தி செய்பவன் ஆயிற்றே முழுமையாக அவள் கூற்றை ஏற்றுக் கொள்வானா என்ன.

நான் உன்ன மூச்சி முட்டுற அளவுக்கு ரொம்ப டைட்டா வியர் பண்ண சொல்லல மோகி, சரியான சைஸ் யூஸ் பண்ணு. அதுலேயே அட்ஜெஸ்டபில் ட்ராப்ஸ் இருக்கு தேவை படர நேரத்துல அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம், அதை விட்டு உனக்கு சம்மந்தம் இல்லாத சைஸ் யூஸ் பண்ணா சீக்கிரத்துல ஜஸ்ட் தளர்ந்து 25 வயசுக்கு எல்லாம் ஏஜ்டு ஆன மாதிரி ஆகிடும் டி. அதுனால கூட உடம்புல பல மாற்றங்கள் நடந்து தேவை இல்லாத பிரச்சனைகளை உண்டு பண்ணும். இனிமே சரியான சைஸ் வியர் பண்ணி பழகு என்றவனோ அவளுக்கு தலை வழியாக மேலாடையை அணிவித்து சரி செய்து விட்டான்.

அவன் சொன்னதுக்கு எல்லாம் சரி சரி என மண்டையை ஆட்டிக் கொண்டவளுக்கு இருவரும் கணவன் மனைவியாக வாழத் தொடங்கிய பின்பு, வீட்டையும் அவனையும் விட்டு செல்லவே மனமில்லை. ஆனாலும் என்ன செய்ய தற்போது விட்டு செல்ல வேண்டிய நிலையில் மனமும் உள்ளமும் வாடி, ஏக்கமாக விஷ்வரூபனை கண்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டு விலகாமல் நின்றவளை குறுஞ்சிரிப்போடு பார்த்தான் அவன்.

மோகிஇ என்ன டி இவ்ளோ நேரம் போகணும் போகணும் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இப்ப இறுக்கி கட்டிக்கிட்டு நிக்கிற, காலேஜ் போற எண்ணம் இல்லையா என்ன, அப்போ இன்னொரு ரவுண்டு போலாமா செல்லோ. குறும்போடு அவள் தாடை நிமிர்த்தி கண் சிமிட்டியவனை இதழ் சுளித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஏற்கனவே பல ரவுண்டு போயி என்னால சரியா கூட நிக்க முடியல. இதுல இன்னொரு ரவுண்டு வேறையா. போடா உன்னால தான் நல்லா இருந்த எம்மனசும் கெட்டு போச்சி. உன்ன விட்டு போறத நினைச்சாலே மனசுக்கு ஏதோ மாறி இருக்கு விஷ்வா. சோர்வாக அவன் கழுத்தினில் முகத்தை தேய்த்தவளின் தலையை இதமாக வருடி இடையோடு அவளை தூக்கி அணைத்துக் கொண்டவனாக 'ரொம்ப உன்ன கஸ்ட படுத்திட்டேனா மோகிமா, முடியலைன்னா இன்னைக்கு ஒன்டே லீவ் போட்டுடு டி. புக்ஸ் எடுத்துட்டு வந்து தரேன் இங்கேயே ஸ்டடி பண்ணு. ஈவினிங் ஆபிஸ் விட்டு வந்து உன்ன அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். அங்க போக விருப்பம் இல்லாம நீ இங்கேயே என்கூட இருந்தாலும் எனக்கு டபுள் ஓகே தான்' அப்போதும் அவளை சீண்டி செல்ல முறைப்பினை பரிசாக பெற்றான் விஷ்வா.

செய்றதை எல்லாம் செஞ்சிட்டு இந்த பச்சை பிள்ளை முகத்தை வச்சிக்காத விஷ்வா. இந்த பால் வடியிற முகத்தை ஒவ்வொரு முறையும் பாத்து பாத்து தான் நான் உம்மேல மயங்கி பைத்தியமானதுக்கு முதல் காரணமே. ஈவினிங் ஆபிஸ் விட்டு வந்தா நைட்டும் ஸ்டே பண்ண சொல்லுவ, அப்புறம் திரும்ப மார்னிங் இப்போ நடக்குற கான்வர்ஷேஷன் தான் முதல்ல இருந்து போகும் நமக்குள்ள. நான் எப்படியாவது அட்ஜெஸ்ட் பண்ணி காலேஜ் போய்டுறேன் கூட்டிட்டு போயிட்டு விடு புருஷா. படபடவென மொழிந்தவள் இன்னும் அவனை விட்டு விலகாமல் அவன் கழுத்தை தான் பிடிமானமாக கட்டி நின்றாள்.

அவளது புருஷாவில் ஒருவித கிக்கேறி இதழ் விரித்தவன், உத்தரவு பொண்டாட்டி. கொஞ்சம் தெம்பா தனியா என்ன விட்டு நடந்து வந்தா நம்ம போகலாம். இல்லனா காலேஜ் கிளாஸ் ரூம் வரைக்கும் தூக்கிட்டு தான் போகணும். தாமரை கன்னம் வருடிய கட்டை விரல் இதழை ஒரு மார்க்கமாக நசுக்கி பிடிக்கவும் சட்டென அவனை விட்டு விலகி நாணம் கொண்டவளாக, தாத்தா முன்னாடி மானம் போனது பத்தாதுனு காலேஜ் வரை என் மானத்தை வாங்காம விட மாட்ட போல. இனிமே என்ன நீ டச் பண்ணவே கூடாது டூ ஸ்டெப் டிஸ்ட்டன்ஸ் இருக்கனும் சொல்லிட்ட விரல் நீட்டி எச்சரித்தவளை அவன் எக்கிப் பிடிக்க பார்க்க கலகலவென சிரித்து அவன் கையில் சிக்காமல் அவ்விடம் விட்டு வெளியே ஓடி இருந்தாள் மோகி.

அடுத்து வந்த நாட்களில், விஷ்வா ஒரு புறம் வேலை வேலை என்று ஓடினாலும் தினம் தினம் இரவுகளில் அழகான காதலும் தாம்பத்தியமும் அளவுக்கு அதிகமாக பெருகி போனது. மோகியும் ஒவ்வொரு நாளும் அவனிடம் தன்னை தொலைத்து காதலில் கசிந்துருகினாலும் அவனையும் நன்முறையில் பார்த்துக் கொண்டு படிப்பிலும் கவனத்தை செலுத்தி கடைசி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

கோப்புகளை பிரட்டிக் கொண்டு இருந்தவன் முகம் ஒருமாதிரி கடுமையில் சிவந்து பார்க்கவே படுபயங்கரமான கோலத்தில் இருக்கவே கால்கள் விடவிடக்க, சார் ஆட் ஷூட் வீடியோ ரெடியாகிடுச்சி நீங்க ஒருமுறை பாத்துடீங்கன்னா டிவி சேனல்ஸ், தியேட்டர்ஸ்ல எல்லாம் டெலிகாஸ்ட் பண்ண சொல்லி அனுப்பிடலாம் என்றபடி வந்து நின்றான் கண்ணன்.

கோப்பை திருப்பிய கரம் சட்டென்று நின்று அழுத்தமாக கண்களை மூடி திறந்தவனாக, சீக்கிரம் போட்டு காட்டிட்டு இடத்தை காலி பண்ணு என்றுமில்லாத அளவுக்கு காரணமின்றி எரிந்து விழுந்தவனை புரியாமல் பார்த்தபடி பாக்கெட்டில் இருந்த பென்டிரைவை எடுத்து கணினியில் கரம் நடுங்க பொறுத்திட, உள்ளாடைகள், முகூர்த்த பட்டு புடவை வேஷ்டி சட்டை, ட்ரெடிஷனல், வெஸ்டர்ன், கிட்ஸ் ட்ரெஸ் என்று இதர ஆடைகளுக்கும் தனிதனி மாடல்களை வைத்து ஒவ்வொரு விளம்பர படத்தையும் மக்களின் கண்களை பறிக்கும் படியாக உடனே சென்று அந்த கலெக்ஷன்ஸ்களை அள்ளி வந்து விட வேண்டும் என்று ஆசை தோன்றும் அளவிற்கு தனிதனி விளம்பரமாக எடுக்கப்பட்டு இருந்ததை கண்டு திருப்தியாக உணர்ந்தவன். ஓகே ஃபைன் கண்ணா டெலிகாஸ்ட் பண்ண சொல்லிடு, அண்ட் ஒன் மோர் திங்க் நாளைக்கு யாரும் என்னை டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்கோ, நாளைக்கு உள்ள மீட்டிங்ஸ் எல்லாத்தையும் போஸ்ட்போண்ட் பண்ணிடு. இறுக்கமாக மொழிந்து வேலையை கவனித்தவனிடம் சரி என்று புரியாமல் மண்டையை ஆட்டி விட்டு அங்கிருந்து சென்றான் கண்ணன்.

விஷ்வரூபன் அறையில் இருந்த அதே கேமராவில் தான் அத்தனை விளம்பரப் படத்தையும் எடுத்தது. அப்போது மோகித்தாவோடு விஷ்வரூபன் இணைந்த காணொளி எங்கே? அதன் மூலம் எப்போது பூகம்பம் கிளம்பி எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்த காத்திருக்கிறதோ!!

அவளிடமிருந்து தொடர்ந்து வந்த அழைப்புகளை ஏற்காது சிவப்பேறிய கோர விழிகளால் வெறிகொண்டு அலைபேசி திரையை பார்த்திருந்தவன் இரண்டு போத்தில் மதுவை முழுதாக முடித்து விட்டு மூன்றாவது பாதி போத்திலை கையில் வைத்து அமர்ந்திருந்தவனின் மற்றொரு பக்கத்தில் ஆடை கலைந்த அரையும் குறையுமான யுவதி ஒருத்தி அவன் மேனியை தடவி உணர்ச்சிகளை கிளப்ப பெரும்பாடு பட்டுக் கொண்டு அவனது காது மடலை இதழால் கவ்வி காமத்தில் அவள் திளைத்து இருக்க. அதை எதையும் கண்டு கொள்ளாதவன் மதுவை வாயில் சரித்தபடியே மூச்சி வாங்க சினத்து போய் அமர்ந்திருந்தான் விஷ்வரூபன்.

இத்தனை போன் பண்றேன் எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்கான் இவன். நைட்டாச்சி அவனுக்காக சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு எவ்ளோ நேரம் காத்திருக்குறது. வர லேட்டாகும்னா ஒரு போன் பண்ணி சொல்ல தெரியாதா. இன்னையோட எக்ஸாமும் முசிஞ்சி போச்சி நாளைக்கு மறுநாள் ஊருக்கு கிளம்பனும், சரி கிளம்புற வரைக்கும் அவனோட ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு போகலாம்னு பாத்தா என் போனை கூட எடுக்க மாட்றானே. மனைவிக்கே உண்டான கவலையோடு, அவன் இருக்கும் கோலம் தெரியாமல் கணவனை தேடியது அப்பாவி பேதையின் உள்ளம்.

ஹேய் விஷ்வா.. யாரு தொடர்ந்து உனக்கு போன் பண்றது. ஒண்ணு அட்டன் பண்ணு இல்லையா சைலன்ட்ல போடு அதை விட்டு எதுக்கு நம்ம சந்தோஷமான நேரத்துல இந்த போனை கைல வச்சிட்டு இருக்க. அவளும் மது அருந்தி இருப்பதற்கு சான்றாக குரல் குளறி அவன் கழுத்தில் இருந்து முகத்தை எடுத்து போன் திரையை கண்டு குழப்பமாக கண்ணை கசக்கினாள் அந்த யுவதி.

வைஃப்பி மை எவ்ரிதிங் (Wify my Everything) என்று ஆங்கிலத்தில் சேவ் செய்திருந்ததையும், நெற்றி வகுட்டில் குங்குமமிட்டு பட்டு புடவையின் முந்தானை காற்றில் பறக்க கோவிலின் தூணில் கைகோர்த்து முத்துப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த அவளது புகைப்படம் வட்டமான ப்ரொஃபைலில் மின்னியதை கண்டு தான் குழப்பமும் சந்தேகமும் அவளுக்கு. விஷ்வா ஹாவ் யூ காட் மேரிட் ? வியப்பு மேலிட கேட்டிருந்தாள் அந்த பெண்.

உனக்கு ஏன் நான் பதில் கூற வேண்டும் என்ற மிதப்பான பார்வை ஒன்று அவள் புறம் வீசி விட்டு கண்களை அழுத்தமாக மூடித் திறந்தவன், அடுத்த நொடியே போனை அட்டன் செய்திருந்தான். ஹெலோ விஷ்வா.. என்ன டா போன் பண்ணா எடுக்க மாட்டியா. லேட் ஆகும்னா ஒரு போன் பண்ணி சொல்ல தெரியாது. ரெண்டு நாளுல நான் ஊருக்கு போகணும்னு உனக்கு தெரியும் தானே அப்புறமும் இப்டி பண்ணா எப்டி. சரி டைம் என்னாச்சினு பாத்தியா நேரத்துக்கு சாப்ட்டியா இல்லையா. உனக்கு பிடிக்குமேனு சப்பாத்தியும் ஆட்டு தலை பிரட்டலும் பண்ணேன் நீதான் இன்னும் வீட்டுக்கு வரலையே, எப்ப வருவ விஷ்வா? இன்னும் ஆபிஸ்ல தான் இருக்கியா வீட்டுக்கு வர லேட்டாகுமா? நீ இல்லாம ஒருமாதிரி இருக்கு விஷ்வா சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்துடேன். அந்த பக்கம் உரிமையாக படபடத்துக் கொண்டே சென்றவளின் பேச்சி, ஏய்.. ச்சீ.. நிறுத்து டி.. என்றவனின் காட்டமான குரலில் அதிர்ந்து விழித்தாள் மோகி.

அவனோடு இருந்த யுவதியோ போனை தாண்டி கேட்ட மோகியின் அக்கறை கொஞ்சும் குரலில், விஷ்வாவிற்கு திருமணம் முடிந்து விட்டது போலும் என அவளாகவே எண்ணி, இதற்கு மேல் தான் இவனோடு இருப்பது சரியில்லை என்று ஆடைகளை எடுத்து அணிந்துக் கொண்டிருந்தவள் அவன் கத்திய அதிர்வில் போதையில் தள்ளாடி, ஆஆ.. என்ற சிறு முனுகள் சத்தத்தோடு மெத்தையில் விழுந்தது மோகியின் செவிகள் கூர்ந்து உள்வாங்கினாலும் புருவம் நெளிந்ததே தவிர சந்தேகம் தோன்றவில்லை.

என்னாச்சு விஷ்வா.. வேலை டென்ஷன்ல இருக்கியா, அதான் எம்மேல கோவப்படறியா? அப்பாவியாக கேட்டவளின் வார்த்தை அவன் இதயத்தை மிகவும் காயமாக்கியது. அந்த கோவம் வேறு ஏற்கனவே மிருகமாக இருந்தவனை மேலும் மேலும் மிருகமாக்கிக் கொண்டே செல்ல. 'வேலை அதிகமா தான் இருக்கும் விஷ்வா, அதுக்காக டென்ஷன் ஆகி உடம்ப கெடுத்துக்காத வீட்டுக்கு வா தலைக்கு ஆயில் மசாஜ் பண்ணி விடுறேன் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்' அமைதியான குரலில் கள்ளம்கபடமற்று அவள் சொல்லிக் கொண்டே போக, கோவம் குற்றவுணர்ச்சி பழிவெறி என்று மாறி மாறி அவனது மூளையை ஆக்கிரமிப்பு செய்து, அன்றைய தினம் வேறு விக்னேஷ்வரனின் இறந்த நாள் என்பதால் பழைய நினைவுகள் ஒவொன்றும் கண் படமெடுத்து ஆடி தீராத பழிவெறி அதிகப்படியான மது போதையில் கண்ணை மறைத்து விட்டது அவனுக்கு.

விஷ்வா.. எப்ப வீட்டுக்கு வருவ. இன்னும் நீ சாப்ட்டு இருக்க மாட்டியே உனக்காக நான் பாத்து பாத்து செஞ்சி வச்சது எல்லாம் வீணா போய்டும் போல. அவன் உண்ணவில்லையே என்ற கவலையில் சொல்லிட. 'வீணா போனா தூக்கி குப்பைல கொட்டு டி. ஏன் ஏமாத்தி பொழைக்க என்னை தவிர வேற எவனும் சிக்கலையா உனக்கு' கடுமையாக வெளிவந்த வார்த்தைதனில் லைனில் இருந்த மோகியின் இதயம் கூர் வாள் கொண்டு இறக்கியதை போன்ற வலியில் நெஞ்சம் வின்வின்னென்று தெறிக்க, வ்.வி.விஷ்வா.. என்ன பேசுற யார்கிட்ட டா பேசுற. அப்போதும் தன்னை சொல்லி இருக்க மாட்டான் என்றே அவனை நம்பிய நங்கையின் மனதை சம்மட்டியால் அடித்து உணர்த்துவதை போன்று அவளை உயிருடன் வெட்டி கூரு போடுவது போல் இருந்தது அவனது அடுத்தடுத்த செயல்கள்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 25
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top