Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 26

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 26

வ்.விஷ்வா ந்.. நீ..நீயா பேசுறது.. அவன் கேட்ட வார்த்தையை ஜீரணிக்க முடியாமல் மீண்டும் கேட்டாள் குரல் நடுங்க.

ஏன் வேற எவனாவது போனை எடுப்பான்னு எதிர்பாத்தியா என்ன. நக்கலாக விழுந்த வார்த்தையில் இதயம் கொதித்து விஷ்வாஆஆ.. என கோவத்தில் கத்தியவள் கண்களை இறுக்கமாக மூடி, போதும் விஷ்வா.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக் கூடாது. ஒழுங்கா எங்க இருந்தாலும் வீட்டுக்கு வா முதல்ல. மிகவும் பொறுமையாக பேசி விட்டு அழைப்பை துண்டிக்கப் போனவளின் செவிகளை மீண்டும் தீண்டியது ஒரு பெண்ணின் வித்தியாசமான முனுகள் சத்தமும், கூடவே அவனது ஆணவக் குரலும் ஒன்றாக ஒலிக்க இதயம் நொறுங்கி சிந்தை கலங்கிய நிலையில் போனை காதோடு அழுத்திக் கொண்டாள்.

எப்பவும் ஒருத்திய ஒன் ஆர் டூ டைம்ஸ்க்கு மேல யூஸ் பண்ண மாட்டேன், உன்ன மட்டும் தான் கணக்கே இல்லாம யூஸ் பண்ணிக்கிட்டேன் பேபி அதுவும் பழி தீர்க்க. கர்ஜனை குரலில் முழங்கி அருகில் இருந்த பெண்ணின் தொடையில் அழுத்தமாக கரத்தை ஓங்கிப் பதித்து தனது கோவத்தை அதில் காட்டிட, ஸ்..ஆ.. விஷ்வா மெதுவா அழுத்து வலிக்குது. அப்பெண் வேறு வலியில் முணுகிட இரண்டு சத்தமும் கலந்து வேறு மாதிரியான தாக்கம் மோகியின் மனதில் பதிந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு உயிர் போகும் ரணம் அவளது நெஞ்சினில்.

விஷ்வா நீ இப்ப எங்க இருக்க. உன்கூட யார் இருக்குறது? சந்தேகம் கொள்ளாதே உன் விஷ்வா அப்படிப் பட்டவன் அல்ல என்று மனதை தேற்றிக் கொண்டு திக்கித் திணறி கேட்டவளின் இதயத்தில் இடியை இறக்கி இருந்தான் அவன்.

இங்க பார் அன்னைக்கு சூப்பர் மார்க்கெட்ல ரெண்டு பேர் பேசிகிட்டதா சொன்னியே. அவனுங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. இத்தனை நாளா உன்ன லவ் பண்ற மாதிரி நடிச்சி உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்து உன் மனச மாத்தி உன் விருப்பத்தோடே உன்னை அடையனும்னு நல்லவன் வேஷம் போட்டு என்னோட இயல்பையே நான் இழந்துட்டு நிக்கிறேன் டி. அரக்கத்தனமாக மனசாட்சியின்றி கத்திட நிலத்தில் ஊன்றி நிற்க முடியாத அளவிற்கு கால்கள் நடுங்கி மடிந்து பொத்தென தரையில் விழுந்திருந்தாள் மோகி.

ஒரு வருஷமா உன் நம்பிக்கைய பெற உன் பின்னாடி சுத்தி என் டைம் தான் வேஸ்ட். ஆனாலும் வீணா போன நேரத்தை எல்லாம் சேத்து வச்சி இத்தனை நாளா நல்லா கம்பனி கொடுத்த டி நீ. இதுவரைக்கும் லட்சக் கணக்குல கொட்டிக் கொடுத்தும் எவளும் உன் அளவுக்கு சுகம் கொடுத்து என்னை போதை ஏத்தி திருப்தி படுதல தெரியுமா, அத்தனை சுகம் உன் ஒருத்திக்கிட்ட மட்டும். இப்ப கூட ஒருத்திக் கூட இருக்கேன் பட் உன் அளவுக்கு இல்ல பேபி. அவன் நக்கலும் குரூதமும் மேலிட சொன்னதும் உயிருடன் செத்து மடிந்த உணர்வில் இதயம் மறுத்து தன்னால் கலங்கிய கண்களில் இருந்து இடைவிடாது கண்ணீர் வழிந்தன.

விஷ்வா ப்ளீஸ்.. விளையாடாத டா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ரொம்ப வலிக்குது டா. ந்..நீயா இப்டிலாம் பேசுற. பொய்.. பொய்.. எல்லாமே பொய் தான் என் விஷ்வா ரொம்ப நல்லவன் நிச்சயம் என்னை அவன் எந்த சூழ்நிலைலயும் ஏமாத்த மாட்டான். ந்..நீ.. நீ எங்க இருந்தாலும் முதல்ல வீட்டுக்கு வா எதுவா இருந்தாலும் நம்ம பொறுமையா உக்காந்து பேசிக்கலாம். அப்போதும் அவன் சொல்வதை நம்பாமல் பைத்தியக்காரி போல் சொன்னதையே சொல்லி பரிதாபமாக ஒலித்துக் கொண்டிருந்தக் குரலில், விஷ்வாவின் அருகில் இருந்த பெண்ணுக்கே மனம் கலங்கி எவ்வித உணர்வும் வெளிக்காட்டாது முகம் சிவந்து அமர்ந்திருந்தவனை கண்டு ஆத்திரம் மூண்டது. கோவம் வந்தால் மட்டும் அவளால் என்ன செய்திட முடியும் முழு சைக்கோ போல் கத்திக் கொண்டு இருப்பவனைக் கண்டு பீதியோடு அமர்ந்திருந்தாள்.

"ஏய்.. நிறுத்து. நீ நம்பினா என்ன நம்பாட்டி எனக்கு என்ன டி வந்துச்சி. அதான் உன்ன கூடவே வச்சி வேலைய முடிச்சிட்டேனே. இதுக்கு மேல அனுபவிக்க உன்கிட்ட என்ன டி இருக்கு. இப்ப நீ அழுது கதறி வாழ்க்கை போச்சேன்னு ஃபீல் பண்ணி என்கிட்ட பரிதாபமா கெஞ்சி என்னை முழுசா நம்பிகிட்டு இருக்க பாத்தியா இதுதான் என்னோட வெற்றி. இதை விட மோசமா உன்ன பழி தீர்க்க நினைச்சேன் ஆனா என்ன செய்ய ஏதோ ஒன்னு என்னை தடுக்குது டி அதான் போனா போகட்டும்னு இதோட விடுறேன். இனிமே எனக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ற வேலை எல்லாம் வச்சிக்காத, வேணும்னா இத்தனை நாளா நீ எனக்கு உன்ன கொடுத்து சந்தோஷப் படுத்தினதுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தரேன் அதை வச்சி உன் விளங்காத அப்பனும் நீயும் பிழைச்சிக்கோங்க" நெஞ்சில் கொஞ்சமும் ஈரமின்றி வந்த வார்த்தையில் ஆஆஆ.. என கத்தி அலைபேசியை சுவற்றில் தூக்கி எரிந்து பெருங்குரல் எடுத்து கதறி அழுதவளுக்கு இன்னும் அவ்வார்த்தைகள் அவள் செவிகளை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்க பைத்தியம் பிடிக்காத குறையாக அப்போதும் காதல் கொண்ட மனம் அவனை முழுதாக நம்பிக் கொண்டு தான் இருந்தது.

விடிந்ததை கூட உணராமல் முட்டிக் கால்களை இறுக கட்டிக் கொண்டு தரையை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்த மோகியின் கண்களில் கொஞ்சமும் நீர் வற்றவில்லை. தன்னிடம் அமில கரைசலாக வார்த்தையை கொட்டியது நிஜமாகவே என்னுடைய விஷ்வா தானா? இன்னுமும் பேதை மனம் அவனது வெறியான கூற்றை நம்பாமல், இல்லை என் விஷ்வா எனக்கு ஒருக்காலமும் துரோகம் நினைக்க மாட்டான் இவை அனைத்தும் தன்னுடைய பிரம்மை என்றே மனதை மீண்டும் மீண்டும் நம்ப வைத்துக் கொண்டாலும் அவனது வீரியம் வாய்ந்த பேச்சிலும் செயலிலும் உண்மையாகவே தன்னை ஏமாற்றி விட்டானா என்ற பயத்தினில் உள்ளம் அப்பட்டமாக நடுங்கிக் கொண்டிருந்தது.

இரவு செய்த வைத்த உணவில் இருந்து ஊசிய வாடை வெளிவர தொடங்கி நாசியை தீண்டியதும் உணர்வு பெற்றவளாக மெல்ல நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தாள் அழுது சிவந்து வீங்கிய கண்களை துடைத்துக் கொண்டு. ஒன்பதை தாண்டி இருப்பதை கண்டு அவ்விடத்தை விட்டு எழுந்து சென்று குளித்து முடித்து வந்தவளாக கையில் பர்சை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு நேராக அவள் வந்து நின்ற இடமோ VV கார்மெண்ட்ஸுக்கு தான்.

விஷ்வாவின் வீட்டில் தங்கி இருந்த போதே அவனது தொழிலை பற்றிய விபரங்களை மெல்ல எடுத்து சொல்லி இருந்தார் தாத்தா. முதலில் விஷ்வா இத்தனை பெரிய பணக்காரனா என்று திகைத்தாலும் அதன் பிறகு விக்னேஷ் எப்படி எல்லாம் விஷ்வாவை உடன் வைத்துக் கொண்டு உழைத்தான் என்று தாத்தா புரியும்படி விளக்கி சொல்லவும் அவர் சொல்வதை புரிந்துக் கொண்டாலும், தன்னிடம் ஏன் அவன் உயர்ந்த பதவியில் தனி பெரும் ஆடைகடலை எடுத்து நடத்தும் விடயத்தை சொல்லவில்லை என்ற ஆதங்கம் கொண்டு அவனிடமும் கேட்டு விட்டாள்.

நான் பெரிய பணக்காரன் உன்ன எனக்கு பிடிச்சி இருக்கு பெண்ணேனு நான் உன் முன்னாடி வந்து நின்னு இருந்தா நீ பண்ணி இருப்ப? அவள் கேட்ட கேள்வியை உல்ட்டா செய்து அவன் திரும்ப கேட்டதும் புரியாமல் விழித்தவளாக, இத்தனை பெரிய பணக்காரனான நீ ஒன்னும் இல்லாத நம்மள எதுக்கு தேடி வந்து விரும்புறேன்னு சொல்லணும் இதுல ஏதோ வில்லங்கம் இருக்கும்னு நினைச்சி திரும்ப திரும்ப நீ லவ் சொல்லிட்டு வந்திருந்தா பயந்து விலகி போயிருப்பேன். அப்பாவியாக விழி உருட்டி சொன்ன அழகு எப்போதும் அவன் நெஞ்சை விட்டு அகலாது.

அர்த்தமான மென்புன்னகை சிந்தி புருவம் உயர்த்தி அவளையே பார்த்திருந்தவனை கண்டு ஸ்.. என நாக்கை கடித்து தலை குனிந்துக் கொண்டவளின் தாடையை பிடித்து நிமிர்த்தி, இப்ப தெரியிதா மேடம்கிட்ட ஏன் உண்மைய சொல்லலைனு. அப்பவே உண்மைய சொன்னா இப்பவரை என்னை நீ சுத்தல்ல விட்டிருப்ப. அப்புறம் உன்ன நான் விடாம துரத்தி வந்து உன் விருப்பம் இல்லாம கழுத்துல தாலிய கட்டி, உன்ன கடத்தி வந்து வச்சி ரேப் பண்ணி பயங்கரமான ஆன்ட்டி ஹீரோவா மாறி மிரட்டி மிரட்டியே லவ் பண்ண வைக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும் தெரியுமா. நாக்கை கன்னக்கதுப்பில் சுழட்டிக் கொண்டு தலை கோதி சொல்லியவனை கண்கள் சுருக்கி முறைத்து, நீ என்ன இந்துவோட "தேனிசை தென்றலும் புயலும்" நாவலை படிச்சியா இப்டி கதை விட்ற என்ற அலுப்போடு மேலும் முறைத்தாள்.

ம்ம்.. நான் படிச்சிட்டேன், என்னை திட்டிட்டு இருக்கவங்கள்ள யாராவது படிக்காதவங்க இருந்தா அமேசான்ல இருக்கு ஒரு எட்டு போயிட்டு படிச்சிட்டு வந்துடுங்க. அப்ப தான் தெரியும் அந்த ஆதிய விட இந்த விஷ்வா எவ்வளவோ தேவலாம்னு. பெரிதாக அலுத்துக் கொள்ள சிரித்து விட்டாள் மோகி.

(நம்ம கதைக்கு நம்ம ஆளுங்கள விட்டே ப்ரொமோட் பண்ணிக்கிட்டா தான் உண்டு)

இங்க பாரு மோகி.. நான் பணக்காரனு உன்கிட்ட சொல்ல ஒரு செகண்ட் ஆகி இருக்குமா. ஆனா அப்டி சொல்லி இருந்தா என்னை பாக்கும் போதெல்லாம் காதல் நிறைஞ்சி வழியிர இந்த கண்கள்ல பயம் மட்டும் தான் நிறைஞ்சி இருந்திருக்கும். எனக்கு தேவை உன் காதல் தானே தவிர, இதோ இப்ப உன் கண்ணுல தெரியிர இந்த மிரட்சியும் பயமும் இல்ல. எந்த ஒரு சூழ்நிலைலயும் உன்ன நான் விட்டு கொடுக்க மாட்டேன் மோகி. பிகாஸ் யூ ஆர் மை எவ்ரிதிங் பேபி.. இமைக்காமல் அவனது முகத்தை ஏறிட்டவளின் கன்னம் ஏந்தி இதழை ஆழமாக கவ்வி அவனது காதலை உணர்த்திவனின் வார்த்தையிலும் கண்களிலும் அத்தனை உறுதி.

அன்று பேசிய நினைவில் இருந்து வெளிவந்தவளாக உயர்ந்து நின்ற பதினைந்து அடுக்கு கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து விட்டு உள்ளுக்குள் பரவிய நடுக்கத்தோடு விவி கார்மெண்ட்ஸில் அடியெடுத்து வைத்த மோகித்தா, விஷ்வாவின் அறையை ரிசப்ஷனில் கேட்டு தெரிந்துக் கொண்டு ஐந்தாம் தளத்தில் இருந்த அறையை கண்டு பிடித்து வந்தவள் சரி உள்ளே போகலாம் என்று கதவில் கை வைக்கப் போக, உள்ளே விதுரனிடம் விஷ்வா பேசிக் கொண்டிருந்த அனைத்தையும் நேரில் நின்று கேட்டவள் மொத்தமாக இடிந்து போனாள்.

கண்ணீர் அருவியாக பெருக்கெடுக்க அவனது ஏமாற்றம் தாங்க முடியாமல் சத்தம் போட்டு கதறி அழ துடித்த மனதை அடக்க வழியறியாமல் விஷ்வரூபனின் உண்மை ரூபம் கண்டு இப்படி தான் அநியாயமாக ஏமாற்றப் பட்டு விட்டோமே, அதுவும் காதல் நம்பிக்கை துரோகத்தால். ஐயோ.. என தாங்க முடியாத துயரத்தில் தலையில் அடித்துக் கொண்டு உடல் நடுங்க வாய் பொத்தி குலுங்கி அழுதவளின் விரல் அவளின் கழுத்தில் இருந்த சங்கிலியில் மாட்டி இழுத்ததில் குனிந்து அதை கையில் எடுத்துப் பார்த்து கண்ணில் ஒற்றிக் கொண்டு சிறிது நேரம் அழுதவள், பின் என்ன நினைத்தாளோ படக்கென அவன் அணிவித்த கழுத்து சங்கிலியை அறுத்து நின்ற இடத்திலேயே விட்டெரிந்து வாழ்க்கையையே பறிகொடுத்தவளாக அவன் மீதிருந்த நம்பிக்கை எனும் விலைமதிப்பில்லாத பெரிய கோபுரம் சரிந்த நிலையில் அவனது கார்மெண்ட்ஸை விட்டு வெளியேறி இருந்தவள், அன்றோடு விஷ்வரூபனின் வாழ்க்கையை விட்டும் மொத்தமாக வெறுத்து ஒதுக்கி சென்று விட்டிருந்தாள்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 26
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top