Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 27

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 27

டேய் விஷ்வா.. எப்டி இருக்க கூலர்சை ஸ்டைலாக கழட்டியபடி பார்மல் உடையில் புன்னகை முகமாக வந்த விதுரனை உணர்ச்சி துடைத்த முகத்தில் உயிர்ப்பின்றி இறுக்கமான மனநிலையில் இருந்தவன் கணினி திரையில் இருந்து நிமிர்ந்து பார்த்தான்.

என்ன டா எப்டி இருக்கேனு கேட்டது ஒரு குத்தமா, என்னை அப்டி முறைக்கிற. வந்த நொடியே அவனது பார்வையின் மாற்றம் உணர்ந்து சகஜமாக்கும் பொருட்டு கேட்டிட. எந்த பிரதிபலிப்பும் இல்லை அவனிடத்தில்.

விஷ்வா நான் இங்க ஒருத்தன் நிக்கிறது உன் கண்ணுக்கு தெரியிதா இல்லையா. யோசனையாக அவன் முகத்தின் நேரே கையசைத்திட, ம்ச்.. தெரியிது மச்சா கொஞ்ச நேரம் என்னை பிரீயா விடு டிஸ்டர்ப் பண்ணாதே. சோர்வாக சொல்லி தலையை இரு கைகலாளும் பிடித்துக் கொண்டான் விஷ்வரூபன்.

என்னாச்சி விஷ்வா எனி ப்ராப்ளம். நிச்சயம் ஏதோ இருக்கு இல்லனா நான் வந்திருக்கேனு தெரிஞ்சும் நீ இவ்ளோ அமைதியா இருக்க மாட்டியே என்ற விதுரன் நண்பனை கூர்ந்து பார்த்தான்.

என் அண்ணன் சாவுக்கு காரணமா இருந்தவளை பழி வாங்கிட்டேன். இறுக்கம் தளராது தலை குனிந்து உரைத்தவனை சலனமற்று பார்த்தான் விதுரன்.

ஓஓ..பழி வாங்கியாச்சா குட் விஷ்வா. அநேகமா இப்ப அவ வாழ்க்கை போச்சேன்னு கதறி துடிச்சிட்டு இருப்பால்ல, நியாயமா பாத்தா அவ துடிச்சி அழுறத நினைச்சி நீ சந்தோஷமா தானே இருக்கனும், ஆனா சந்தோஷத்துக்கான எந்த சாயலும் உன் முகத்துல தெரியலயே மச்சான். பொய்யான வியப்போடு உதட்டை பிதுக்கி நக்கலாக விதுரன் மொழியவும் ஆத்திரத்தில் பற்களை கடித்தவனாக, 'அவளை நினச்ச மாதிரி கொடூரமா பழி வாங்காம விட்டுட்டேனேன்னு கவலை இருக்கேன் போதுமாஆஆ டா..' விகாரமாக கத்தியதை சரியாக அவனை பார்க்க வந்த மோகியின் செவியை அடைந்ததும் கால்கள் செயலிழந்ததை போல் அதே இடத்தில் அதிர்ந்து நின்று விட்டாள் அவள்.

அப்போதும் விதுரனின் முகத்தில் கேலிப்புன்னகை மறையாது இருப்பதை கண்டு எரிச்சலுற்றவன். என் தகுதிக்கு எல்லாம் அவளை மாதிரி ஒருத்திக்கிட்ட இறங்கி போய் பேசினதும் இல்லாம லவ் ட்ராமா அதுவும் தத்ரூபமா போட வேண்டிய நிலைமை வந்துடுச்சேனு நினைக்கும் போதே பத்தி எரியிது. அவளை எல்லாம் என்னைக்கோ வேலையை முடிச்சி காலுல போடற செருப்பு போல தூக்கி வீசிட்டு அடுத்தடுத்து ஆக வேண்டிய என்னோட வேலையை பாத்துட்டு போயிட்டே இருந்திருப்பேன். அவளோ ஏன் எனக்கு இருந்த வெறிக்கு கொலையே பண்ணிருப்பேன். ஆனா அவளை கொல்லக் கூடாதுனு என் தாத்தா என்கிட்ட வாங்கின சத்தியம் தான் இப்ப வரைக்கும் அவ உயிரோட இருக்க காரணம். அப்ப தான் ஒரு யோசனை தோணுச்சு, வாழ வேண்டிய வயசுல அநியாயமா என் அண்ணன் சாவுக்கு காரணமா இருந்தவளை வாழவும் முடியாம சாகவும் முடியாத அளவுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலைல நிறுத்தி அவளை கடைசி வரைக்கும் நரகத்துல நிறுத்தனும்னு. என் அண்ணனோட காதல் விஷயத்துல விளையாடினவளை அதே காதலால அழிக்கணும்ன்ற வெறி எனக்குள்ள வந்துச்சி.

அதுக்காக அவளோட பயோடேட்டாவ ஆராய்ஞ்சதுல அவ ஊர் பேர் குடும்பம் அவ படிக்கிற காலேஜ் அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு, பக்காவா பிளான் பண்ணி என்னை சாதாரணமான ஆளா காட்டிக்கிட்டு காதலிக்கிறேன்னு அவபின்னாடி நாயா பேயா சுத்தினேன். எனக்குள்ள இல்லாத காதலை அவளுக்கு உணர்த்த எப்படியெல்லாம் காதல் வசனத்தை பிரிப்பேர் பண்ணேன் தெரியுமா. கடைசில மனசு மாறினா காதலா இல்லாம பிரண்டா பழகினா. என்னோட பக்கா ஆக்டிங்ல ஒரு கட்டத்துக்கு மேல என் பக்கம் சாஞ்சிட்டா, காதல் நாடகம் போட்டு அவளை முழுசா நம்ப வச்சேன்.

ஆனாலும் நெருப்பா தள்ளி இருந்தவளை நெருங்கி என் பழியை தீர்த்துக்க முடியாம பயங்கர கடுப்புல ரம்யா கூட ரூம்ல இருந்தப்போ எதிர்பாராத விதமா அவளே போன் பண்ணா. வீட்டுக்கு கூட்டிட்டு போனா. இதுதான் சமையம்னு கொஞ்சம் கொஞ்சமா அவளை நெருங்கினேன் முதல்ல மறுத்தா சரி விட்டு பிடிக்கலாம்னு காத்திருந்த அப்பதான் அவ பிரண்ட் கண்மணி என் வேலை முடிக்கிற வரைக்கும் எனக்கு எந்த விதத்துலயும் தடையா வரக் கூடாதுனு அவளை மிரட்டி மோகியோட பிரண்ட்ஷிப்ப முற்றிலுமா கட் பண்ணிட்டு அவ தங்கி இருக்க வீட்டுக்கு பக்கம் வர கூடாதுனு சொன்னேன்.

அதுல அவ பயந்து கல்யாணம் அது இதுனு வாய்க்கு வந்ததை அடிச்சி விட்டு அவ வீட்டோட செட்டில் ஆகிட்டா. எனக்கும் நான் நினச்ச மாதிரியே மோகிய நெருங்க நிறைய வாய்ப்புகள் அமைஞ்சுது.

அவ சம்மதத்தோடே அவளோடு பழகி நானும் அவளும் கொஞ்சம் அப்டி இப்டினு நெருக்கமா இருக்க போட்டோஸ அவ ஃபேஸ மட்டும் ஹைலைட் பண்ணி சோசியல் மீடியாவுல விட்டு அவ கேரக்டரையே கேவல படுத்தி அவமானத்துல துடிச்சி சிறுக சிறுக சாகட்டும்னு நினச்சிட்டு இருந்தப்ப தான் அந்த சேது அவன் ஆட்களோட வீடு புகுந்தது. அன்னைக்கு அவ இருந்த நிலையை பாத்து என்னோட இந்த பிளான மாத்திக்கிட்டேன், அவளை கல்யாணம் பண்ணி கூடவே வச்சி சித்ரவதை செய்ய நினச்சேன் அதுக்கான அச்சாரமா என் கழுத்துல இருந்த செய்னை அவ கழுத்துல போட்டு நீதான் என் பொண்டாட்டினு காதல் வசனத்தை செண்டிமெண்ட்டா பேசி பக்கம் பக்காம அடிச்சி விட்டேன், பைத்தியக்காரி பொசுக்குன்னு கவுந்துட்டா என் பிளானும் சக்ஸஸ் ஆகிடுச்சு. ஏளனமான குரலில் வெறிப்பிடித்தவன் போல் கத்திக் கொண்டு இருப்பதை கேட்டு நெஞ்சம் திகிலடைந்து அவனது உண்மை ரூபத்தை கண்ணெதிரே முழுமையாக பார்த்து அவன் வாய் வழியாகவே அணைத்து உண்மைகளையும் அறிந்து கொண்டு அவனது ஒவ்வொரு சொல்லுக்கும் மரண வேதனையில் துடித்து உயிருடன் மரிந்தாள் மோகித்தா.

இப்பேர்ப்பட்ட ஒரு கேடு கெட்ட அரக்கனை நம்பியா மோசம் போனோம், என்று நினைக்கும் போதே இதயம் ரணமாக அடிப்பட்டு ரத்தம் கசிந்திட அவனது துரோகத்தின் சதியால் நெஞ்சத்தில் ஏற்பட்ட வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தம் போடாமல் முகத்தை மூடி தேகம் நடுங்க பரிதாபமாக குலுங்கி அழுதவள், இனி ஒருகாலம் இப்படி ஒரு துரோகக்காரனின் முகத்தை எவ்வித சூழ்நிலையிலும் பார்த்து விடவே கூடாது என்ற தீர்மானத்துடன் அவன் மீது ஏற்பட்ட தீராத வெறுப்போடு அவன் தாலியாக பாவித்து அவள் கழுத்தில் அணிந்த பொன்சங்கிலியை அறுத்து வீசி விட்டு உயிருள்ள ஜடமாக அங்கிருந்து சென்று விட்டாள்.

அதான் நீ நினச்ச மாறியே எல்லாம் கச்சிதமா முடிஞ்சிதே அப்புறம் ஏன் டா ஆவேசமா பேசும் போது கண்ணுல தண்ணி எட்டி பாக்குது. இமையோரம் வழிந்த கண்ணீர் துளியை சுண்டி விட்டான் விதுரன்.

இப்டிலாம் பழி வாங்கணும்னு நினைச்சிகிட்டேனே தவிர எதையும் என்னால அவகிட்ட செயல்படுத்த முடியலையே டா. என்னையும் அறியாம அவளோட மலையளவு காதல்ல தடம் புரண்டு விழுந்து அவளை உண்மையா லவ் பண்ணிட்டேனே மச்சான். வேதனையாக உரைத்த வார்த்தையில் இதுதான் எனக்கு ஆரம்பத்திலேயே தெரியுமே என்ற பாவனை விதுரனின் முகத்தில்.

விக்கியோட நினைவு நாள் அதுவும் பைத்தியம் ஆகிட்டேன் விதுரா. கிட்டதட்ட ஒரு பீஸ்ட்ட விட மோசமான நிலைல இருந்தேன். என் மோகி ரொம்ப ரொம்ப நல்லவ அவளால யாரும் சின்னதா கூட துன்பபட கூடாதுனு நினைக்கிற புனித உள்ளம் படைச்சவ டா. நிச்சயம் அவ தப்புனு தெரிஞ்சி எந்த செயலையும் செய்து இருக்க மாட்டா. ஆனா அவ தெரியாம செஞ்ச தப்பு, எனக்கு இருந்த ஒரே சொந்தமான என் உயிருக்கு உயிரான அண்ணனை காவு வாங்கிடுச்சே எப்டிடா அவளை சும்மா விட முடியும். கண்கள் சிவக்க கத்தியவனை சலனமற்று பார்த்தான் விதுரன்.

என்னால என் மோகிய நேருக்கு நேர் பாத்து எதையும் சொல்ல முடியாது. அவளை பழி வாங்க முடியாது. அவளோட அந்த அப்பாவித்தனமான சிரிச்ச முகத்துலயும் கண்ணுலயும் எனக்கான காதலை கடலளவு தேக்கி வச்சிருப்பா. அவ முகம் கொஞ்சம் வாடினாலும் என்னால என் அண்ணன் சாவுக்கு காரணமா இருந்தவளை பழி வாங்க முடியாம போய்டுமோன்ற எண்ணம் ஒரு ஓரத்துல இருந்து என்னை வாட்டி எடுக்காம இல்ல. விக்கியோட நினைவு நாள் அதுவுமா நான் இருந்த வெறிக்கு எங்கே அவளை ஏதாவது ஒருவகைல காய படுத்திட போறேனோ என்ற பயத்துல தான் நேத்து அவளை பாக்காம பேசாம தவிர்த்தேன்.

ஹேமா ரொம்ப நாள் பிறகு வந்தா அப்ரோச் பண்ணா ஆரம்பத்துல மோகிய லவ் பண்ற மாதிரி நடிச்சி அவமேல காதல் இல்லாத போது பல பொண்ணுங்க கூட இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்ட என்னால இப்பல்லாம் என் மோகி ஒருத்திய தவிர வேற ஒருத்திய நிமிர்ந்து பாக்க கூட பிடிக்கல டா. அந்த அளவுக்கு என்னையும் என் இறுகிய மனசையும் மாத்தி தொலைச்சிட்டா ராட்சசி. என்றவனின் இதழில் குறும்பு புன்னகை தவழ்ந்து மறைந்திட, ஹேமாகிட்ட விருப்பம் இல்ல கிளம்புனு கோவமா சொல்லிட்டு இருக்கும் போதே தொடர்ந்து அவகிட்ட இருந்து வந்த போன் கால்ஸ்ல அவளை ஹர்ட் பண்ண கூடாது என்ற எண்ணத்துல கோவத்தை அடக்கிக்கிட்டு கால் அட்டன் பண்ணாம இருந்தேன். ஆனாலும் என் அண்ணன் சாவுக்கு காரணமா இருந்தவளை ஏதாவது ஒரு வகைல காய படுத்தியே ஆகணும்னு வெறி, என்னையும் மீறி அ..அவளை உயிரோட கொன்னுட்டேன் டா விதுரா.. வேதனை படர்ந்த முகத்தை கைகளால் மூடியபடி அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனின் உடல் லேசாக குலுங்கியதை வைத்து அழுகிறான் என்று உணர்ந்து கொண்டான் விதுரன்.

அவன் கோவம் நியாயம் தான் எனினும் அவன் பழி வாங்குவதற்காக எடுத்த முடிவுகள் எதுவும் விதுரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவனும் காதல் தோல்வி அடைந்தவன் தான். ஐந்து வருடக் காதலில் ஏமாற்றம் அடைந்து விட்டான். காதலியால் பெரும் துரோகத்தை சந்தித்து விட்டான். தன்னோடு லிவ் இன்னில் வாழ்ந்துக் கொண்டே பலரோடு தொடர்பு வைத்துக் கொண்டதுமின்றி விதுரனின் உத்திரத்தை அவனுக்கு தெரியாமலே கருவருத்து விட்டாள் அவன் காதலி. வாழ்க்கையும் வெறுத்து காதல் கல்யாணம் எல்லாம் கசந்து போன நிலையில் அவனுக்கு துரோகம் செய்த காதலியை காலில் அணியும் செருப்பாக கூட மதிக்காமல் கொய்த்தை விட்டு இந்தியா வந்தவன் தான். யாரிடமும் தன் காதல் தோல்வியை பற்றி கூறி சங்கடம் கொள்ள வைக்க விரும்பாமல் துரோகத்தை மறந்து மீண்டும் ஒரு புது வாழ்க்கையை வாழ பழகிக் கொண்டு இருப்பவனுக்கு, நண்பனின் இத்தகைய செயல் கோவத்தை மட்டுமே கிளப்பி இருந்தன.

விக்கியின் இறப்பை பற்றி விதுரனுக்கு தெரியும், அவனுக்கு கூட அவனது இறப்பின் காரணமாக இருந்தவர்கள் மீது கோவம் வந்தது உண்மையே, ஆனால் விஷ்வா காதலியாக அறிமுகம் செய்த மோகி தான் அவன் பழி வாங்க துடிக்கும் அந்த பெண் என்று விதுரனும் நேற்று வரை அறிந்திருக்கவில்லை. தற்போது விஷ்வாவின் இறுக்க நிலை மனதை பிசையவே யூகமாக கேட்டதன் விளைவு, முகமூடி திரையந்து வெறியில் தொடங்கிய பேச்சி வார்த்தையில் கோவம் மறைந்து தன் மீதே கடுங்கோபம் கொண்டவன் நண்பனிடம் அணைத்து மனபாரங்களை இறக்கி வைத்து பொக்கிஷக் காதலை தொலைத்து துரோகம் இழைத்து விட்டு உயிர்வரை துடித்து இப்போது அழுது கொண்டு இருக்கிறான் விஷ்வரூபன்.

சரி அடுத்த பிளான் என்ன அவளை பழி வாங்க. இதோட அவ்ளோ தானா இல்ல வேற எதுவும் பாக்கி வச்சிருக்கியா விஷ்வா. இப்போது அவனது குரல் கடுமையில் ஒலிக்க சிவந்த விழிகளால் வெடுகென திரும்பி நண்பனை முறைதான் அவன்.

ஏன் டா நான் சரியா தானே கேக்குறேன். நீதானே தொடக்கத்துல சொன்ன நினைச்சபடி பழி வாங்க முடியலனு நக்கல் தொனியில் சொல்லி இருக்கையில் அமர்ந்தவனை கண்டவனாக 'ஒருத்திய ஒருமுறை தான் டா சாகடிக்க முடியும்' விரக்தியாக மொழிந்தவன் இதழில் ரணப் புன்னகை.

இவர்கள் பேசிக் கொண்ட அனைத்தையும் ஆரம்பம் முதல் இறுதி வரை மோகியை தவிர மற்றுமொரு உருவம் பதுங்கி நின்று ஒட்டு கேட்டு விட்டு குரூரமான யோசனையோடு அங்கிருந்து சென்றிருந்தது. யார் அந்த உருவம்?

*** *** ***

சிவப்பு நிற செம்மண் ஓடுகள் கூரை போல் அடுக்கிய சிறிய வீட்டின் வாயிலின் திண்ணையில் கையில் பையோடு முகம் கணியாமல் துரோகத்தின் வலி நெஞ்சை குத்திக் கிழிக்க அமர்ந்திருந்தாள் மோகி. சற்று நேரத்தில் எல்லாம் வெயிலுக்கு ஏகுவாக தலையில் கட்டி இருந்த துண்டை உதறி தோளில் போட்ட படி சோர்வாக நடந்து வந்த வெள்ளை சாமி மகளை கண்டதும் சோர்வுகள் நீங்கி முகம் பளிச்சிட்டவர், எப்ப கண்ணு ஊருல இருந்து வந்த என்றார் அவள் முன்பு வந்து.

இப்ப தான் ப்பா வந்தேன் என்றவளின் குரல் கம்மியது. தந்தையின் முகத்தை ஏரெடுத்தும் பார்க்கமுடியவில்லை காதலின் துரோகத்திலும் அவரின் சொல்லை மீறி ஒரு மோசக்காரனின் காதலை நம்பி தன் கற்பை இழந்து விட்டு வந்த குற்றக்குறுகுறுப்பிலும்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 27
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top