- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 31
"ஆத்வி இதுதான் புது ஸ்போர்ட்ஸ் கார் மாடல்ஸ்.." ஒருசில டிசைன்களை அசோக் நீட்ட, அதனை வாங்கிப் பார்த்த ஆத்வி,
"நைஸ் அசோக், இந்த மாடல் கண்பார்ம் தான் பட் சின்ன சின்ன திருத்தம் பண்ணா இன்னும் பாக்க கேரா இருக்கும்" மாடலை ரசித்த ஆத்வி, அதில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி முடித்தான்.
"ஓகே ஆத்வி, நீ சொன்னது போலவே செஞ்சிடலாம்.. அப்புறம் அடுத்த மாசம் இருவது தேதில ரெய்ட் இருக்கு"
"ஓஹ்.. எந்த ஊர், எத்தனை நாள்.." என்றான் புது பைக்கின் டிசைனை வடிவமைத்தபடி.
"சிக்ஸ் டேஸ், லடக் ரெய்டு.." என்றிட,
"ஹ்ம் சரி" என்றதோடு தன் வேலையை தொடர,
"டேய் ஆத்வி என்ன டா சரினு ஏதோ மாறி சொல்ற.. இந்நேரம் ரெய்டுனு பேர் கேட்டிருந்தாலே துள்ளி குதிப்பியே, அப்டிப்பட்டவன் இப்டி அமைதியா இருக்கேன்னா ஏதோ ஒன்னு இருக்கு... என்ன டா பிரச்சனை" என்றான் நண்பனின் முகம் பொலிவில்லாததை கண்டு.
ஆழ்ந்த மூச்செடுத்த ஆத்வியும் சில நிமிடங்கள் கழித்து லிங்கம் வந்து மாப்பிளை கேட்டதை சொல்ல,
"ஓ.. அப்போ சைலன்ட்டா அப்பாவாக நீ வேலையப் பாத்திருக்கேன்னு சொல்லு" கேலி செய்து அசோக் சிரிக்கவும்,
"எடு செருப்ப நாயே.." அவனை வெறியாக முறைத்த ஆத்வி,
"டேய் நான் அவ முகத்தை கூட சரியா பாத்ததில்ல டா, அப்புறம் எப்டி என் குழந்தை அவ வயித்துல.. அதுவும் அஞ்சி மாசம் முழுகாம இருக்காளாம், எந்த இளிச்சவாயனும் அவளுக்கு சிக்கல போல, ப்லெடி இடியட்" கோபம் பொங்க கையில் கிடைத்த கண்ணாடி குவளையை தூக்கி அடிக்க, அழகுக்காக சுவற்றில் மாட்டப்பட்டிருந்த போட்டோ பிரேமில் பட்டு இரண்டும் சிதறி உடைந்தது.
அதில் ரெண்டடி பின்னால் நகர்ந்துகொண்ட அசோக், "நாம யூஎஸ்ல இருக்கும் போது அந்த ஹரிதா பொண்ணு உன் பின்னாடியே சுத்துதுனு அடிக்கடி உன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன், அப்பவே அவளுக்கு நீ யாருனு காட்டிருந்தா, இன்னைக்கு எவன் புள்ளைக்கோ உன்ன அப்பன்னு சொல்லிட்டு வந்து நின்னுருப்பாளா டா.." ஆதங்கமாக கேட்டான் அசோக்.
"மச்.. நான் என்ன என் தலைல அவ இப்படி ஒரு குண்ட தூக்கி போடுவான்னு கனவா கண்டேன்.. எல்லா பொண்ணுங்க மாறியும் இவளும் என் பின்னாடி சுத்துறான்னு விட்டுட்டேன் டா.." கடுப்பாக முகத்தை சுளித்த ஆத்வி,
"சரி அந்த டாப்பிக்க இதோட விடு நான் பாத்துக்குறேன், நீ போய் நான் சொன்ன வேலைய முடி..' என்றவனாக வேலையில் கவனமாகி விட, அதனை ஆமோதித்த அசோக் கதவை உள்ளிருந்து திறக்கப் போகும் சமையம், வெளியில் இருந்து கதவு படாரென சத்தத்துடன் திறந்துக் கொண்டது.
இரு ஆண்களும் அந்த சத்தத்தில் யாரென பார்க்க, வந்தது என்னவோ ஹரிதா தான். சிறிதாக மேலெழும்பிய வையிற்றை ஒரு கையால் தாங்கிப் பிடித்தபடி,வெஸ்ட்டர்ன் உடையில் ஸ்டைலாக உள்ளே வந்தாள்.
அசோக் அவளை வெறியாக முறைக்க, ஆத்வியோ இரு கைகளையும் மேஜையில் ஊன்றி நிதானமாக அவளை கண்டவன் "வாங்க மிஸ்ஸ்..." என்று இழுக்க, 'ஹரிதா' என்றாள் விரைப்பாக.
நகைப்பாக தலையசைத்துக் கொண்ட ஆத்வியின் பார்வை, அவள் மீது அழுத்தமாக பதிந்தது.
"என்ன வேலையா என்ன பாக்க வந்துருக்க.." என்றான் தேன் தடவிய குரலில். அவன் மென்மை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட அசோக், முழுகாமல் இருக்கும் ஹரிதாவை சற்று இரக்கத்துடன் தான் பார்த்தான்.
"ஆத்விக் உன்கிட்ட நான் தனியா பேசணும்.." அசோக்கை பார்த்தபடி சொல்ல,
"ஓகே.." என்றவன் நண்பனுக்கு கண்ணைக் காட்டவும், அவனும் பதிலுக்கு கண்ணைக் காட்டிக் கெஞ்சினான், கோவத்தில் பொங்கிவிடாதே என்று.
அதனை உணர்ந்த ஆத்வி, அசோக்கை முறைக்க, "அடே யப்பா என்ன இருந்தாலும் பிள்ளதாச்சி பொண்ணு டா பாத்து" என முணுமுணுத்து விட்டு சென்றான்.
"என் வயித்துல வளர்ற குழந்தை உன்னோடது தான்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.." அசோக் சென்றதும் ஹரிதா சொல்ல, வெளிவரத் துடிக்கும் கோவத்தை அடக்க முயன்று கைமுஷ்டி இறுக்கிகய ஆத்வி,
"ம்.. தெரியும் அதுக்கென்ன.." என்றான் புருவம் உயர்த்தி.
"நமக்கு கல்யாணம் முடிவாகிடுச்சு, ஆனா எனக்கு உன்மேல நம்பிக்கை இல்ல.. எங்க என்னையும் என் பிள்ளையும் கை விட்ருவியோன்னு எனக்கு பயமா இருக்கு, சோ இந்த அக்ரிமெண்ட்ல எனக்கு சைன் போட்டுக் கொடு.." என்றாள் அதிகாரக் குரலில்.
"என்ன அக்ரிமெண்ட் இது.." என்றவன் அதனை கையில் வாங்கவில்லை. எங்கே கரம் தளர்த்தினால் அவள் ஒரு வழியாகி விடுவாளோ என்ற நல்லெண்ணெத்தில் தான்.
"அது ஒன்னும் இல்ல, இது உனக்கும் எனக்கு சட்டப்பூர்வமா கல்யாணம் ஆகிடுச்சுன்ற ரெஜிஸ்ட்ரேஷன் சர்டிஃபிகேட், அப்புறம் உன் சொத்துகளை பாதி என் பேர்ல நீயா உன் விருப்பத்தோட எழுதி தர டாக்குமெண்ட்ஸும் இருக்கு.." என்றிட, புயலுக்கு முன் அமைதி என்று தான் சொல்ல வேண்டும்.
"அதான் உன்ன நான் ஊரரிய இந்த உலகமரிய கல்யாணம் பண்ணிக்கப் போறேனே, அப்புறம் எதுக்கு இதெல்லாம்.." ஆத்வியின் குரல் இறுகி வருவதை ஹரிதா அப்போது கவனித்து இருக்கவில்லை.
"இது என்னோட பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கை முடிவு ஆத்விக்.. சப்போஸ் என் வயித்துல உள்ள குழந்தை உன்னோடது இல்லைனு, எனக்கெதிரா ஆதாரங்களை திரட்டி, எங்கள ஏதாவது செய்ய நினச்சா என்ன பண்றது, அதுக்கு தான் இந்த சேஃப்டி.." என்றதும் உதட்டுக்குள் சிரித்துக் கொண்ட ஆத்வி, பதிலேதும் பேசாமல் அவள் முன்னே கை நீட்ட, காகிதங்களை அவன் கையில் வைத்தாள்.
அதனை பிரித்து கூட படிக்காமல் சரசரவென கையெழுத்து போட்டு மீண்டும் அவள் கையில் கொடுத்தவனாக, "கூடிய சீக்கிரம் சந்திக்கலாம் தயாரா இரு" என்றவனின் அர்த்தம் பொதிந்த பேச்சை உணராமல்,
"நானும் அதுக்கு தான் காத்திருக்கேன் ஆத்விக், எனிவே இன்னைல இருந்து நீயும் நானும் சட்டப் பூர்வமா கணவன் மனைவி" உற்சாகம் பொங்க அவள் சொல்ல, அவன் முகம் பாறாங்கல்லை விழுங்கியதை போல இறுகியது.
ஹரிதா சென்று விட்டாள், ஆனால் அவனுக்கு தான் மண்டை சூடேறிப் போனது. காலை உணவை வேறு உண்ணாமல் வந்திருக்க, மதியம் ஆகி விடவே சரி வீட்டிற்க்கே சென்று உண்டு விட்டு வருவோம் என காரைக் கிளப்பப்போக அலைபேசி அலறியது.
"என்ன மாப்பி லடக் ரெய்டுல கலந்துப்பியா இல்ல எனக்கு பயந்துகிட்டு ஒதுங்கி ஓடப் போறியா.." அந்த பக்கம் தீபக் தான் நக்கலடித்தது.
அதில் கடுப்பான ஆத்வி "போனை வைடா ஃபூல்... ******" சில பல ஆங்கிலம் கலந்த கெட்ட வார்த்தைகளில் அர்ச்சித்து விட்டு அழைப்பை துண்டித்து காரை கிளப்ப, அந்த பக்கம் தீபக்கு காதில் இருந்து ரத்தம் வராதக் குறைதான்.
முகம் சிவந்த நிலையில் அடக்கி வைத்தக் கோபத்துடன் உள்ளே வந்தவன் "மாம்.. காபி கொண்டு வாங்க" என்றபடி நேராக அறைக்கு சென்று விட, மதிய உணவை பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்த மித்ரா,
"அச்சோ பிள்ள பசில வந்துட்டானே.." பதற்றமாக நினைத்து பாலை சூடு பண்ணி காபி கலந்து ஆத்வியின் அறைக்கு செல்லப் போன நேரம், விக்ரம்க்கு உணவு கொடுத்து விட்டு வெளியே வந்த கவி கண்ணில் பட்டுவிட்டாள்.
"கவி ஒரு உதவி செய்றியாமா, இந்த காபிய மட்டும் கொஞ்சம் மேல என் பையன் ரூம்ல கொண்டு போய் கொடுத்துட்டு வரியா.. வேலையாட்கள் எல்லாம் ரெஸ்ட் எடுக்க கோட்ற்றஸ்க்கு அனுப்பி வச்சிட்டேன், அங்க சமையல் வேற கருகுது சத்த புடிமா.." அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், கவி கையில் கொடுத்து விட்டு மித்ரா அவசரமாக சென்று விட. ஐயோயென்றானது கவிக்கு.
"கடவுளே என்ன இது கொடும, நான் யார் முகத்துல முழிக்க கூடாதுனு நினைக்கிறேனோ, அவன் முன்னாடியே போய் நிக்க வைக்கிறியே.. இது உனக்கே நியாயமா படுதா.." வருத்தமாக புலம்பியபடி, ஒவ்வொரு படியாக ஏறி அவன் அறை வாயில் வரை வந்தவளுக்கு அப்பட்டமான பயம் வந்து விட்டது.
'சும்மா மாட்டினாலே மூக்கை கடித்து சாரு குடித்து விடுவான். இப்போது தனியாக அதுவும் அவன் அறைக்குளே மாட்டினால் என்னென்ன செய்வானோ!' நினைத்துப் பார்க்கவே நெஞ்சி துடித்தது.
கதவுக்கு நோகாமல் மெதுவாக தட்ட,
"என்ன மாம் புதுசா கதவை எல்லாம் தட்டிக்கிட்டு உள்ள வாங்க.." என்றான் கனீரென.
அந்த சத்தத்தில் திடுக்கிட்ட கவி, "என்ன இவன் இப்டி கத்துறான், பயங்கர காரமா இருக்கான் போலயே.." பதட்டமாக எண்ணி அடிமேல் அடி வைத்து உள்ளே வந்தவளாக, தலையினை இரு கரத்தால் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தவன் முன்னால் காபியை நீட்ட,
காபியின் நறுமணத்தை கண் மூடி உள்வாங்கிய ஆத்தி, "மாம்.. உங்களோட இந்த காபிக்காகவே தினமும் மதியம் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வரணும்னு தோணுது.. செம்ம தலைவலி தெரியுமா குடுங்க.." நிமிர்ந்து கை நீட்டியவனுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது.
கண்ணாடி அணிந்த கண்ணில் கருவிழிகள் உருல, கீழ் உதடு கடித்த நிலையில், தலை நிமிறாமல் காப்பியினை நீட்டிநின்ற அழகியை காணுகையில், வேறு எதேதோ சமாச்சாரம் பற்றியெல்லாம் நினைக்கத் தோன்றியது.
"ச்ச.. ஏன் டா உன் புத்தி இப்டி தப்பு தப்பா யோசிக்கிது.." பின்னந்தலையை தடவி இதழ் கடித்து தட்டிக் கொண்டவன், கவி நீட்டிக்கொண்டிருந்த காபியை வாங்கிப் பருகாமல், அவளையே அங்குல அங்குலமாக பருகிக் கொண்டிருந்தான் கள்ளன்.
"காப்பிய வாங்காம இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருக்கான் இவன்.." என்ற யோசனையோடு மெதுவாக நிமிர்ந்துப் பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்த நிலையில், சட்டென திரும்பி நின்றுக் கொண்டாள் கவி.
துப்பட்டா நழுவிய பாகத்தை தான் திருட்டு பூனை கள்ளமாக விழிகளால் பருகிக் கொண்டு இருந்ததே! அதில் போதை தெளிந்தவன் போல தலையை உளுக்கிக் கொண்டு எழுந்த ஆத்வி, "என்ன மேடம் நீங்க எனக்கு காபி கொண்டு வந்து இருக்கீங்க, எங்க என் மாம்.." என்றான் அவள் பின்னோடு உரசி நின்று.
அதில் பதட்டமாக முன்னால் அடி எடுத்து வைத்த கவி, "அ.ஆண்டி தான் என்கிட்ட கொடுத்து உங்ககிட்ட கொடுக்க சொன்னது.. சீக்கிரம் பிடிங்க.." அவசரமாக உரைத்த கவி, திரும்பாமலே கரத்தை மட்டும் அவன் புறம் நீட்டி, அதை வாங்கிக் கொண்டால் தான் அவள் ஓடி விடுவாளே! அதனால் காபி ஆறினாலும் பரவாயில்லை என்று முடிவு கட்டி விட்டான் போலும்.
"இத்தனை தூரம் நெருங்கி வந்துட்ட, இன்னும் கொஞ்ச நாளுல முழுசா நெருங்கி வந்திடுவ.. அப்போவும் நீ இதே மாதிரி திரும்பி நிப்ப, வெட்கத்துல" அவள் காதில் கிசுகிசுக்க, உடல் சிலிர்த்தது பேதைக்கு,
அவன் உரிமை பேச்சிலே அதிர்ந்து போன கவி, மேலும் நெருங்கி சூடான மூச்சிக் காற்று கழுத்தில் பட்டதோடு, ஈர இதழ் தீண்டியதும், மின்சாரம் தாக்கிய உணர்வாகிப் போனது.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 31
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.