- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 32
இன்னும் இன்னும் கொஞ்சம்.. ஹான்.. அவ்வளவு தான். இன்னும் ஒரு வாய் தங்கம்மா.. ஆஆ.. வாங்கிக்கோ பாக்கலாம், ஆறு வயதுடைய குட்டி சிறுமிக்கு உணவூட்ட படாதபாடு பட்டுக் கொண்ட மோகியை கண்டு புன்னகைத்தார் நேற்று இரவு பார்த்த எதிர் வீட்டு பெண்மணி கனகா.
என்ன மோகித்தா இன்னைக்கும் உன்கிட்ட வம்பு பண்றாளா சாப்பிட என்றவரை திரும்பி பார்த்தவள், இவ வம்பு பண்ணலைனாதான் ஆச்சிரியம். அதுவும் என்கிட்ட பண்ணலைனா அம்மணிக்கு தூக்கம் வருமா சொல்லுங்க. உணவு ஈஷிய குழந்தையின் வாயை சிறுடவல் வைத்து துடைத்து எடுக்க வெடுகென முகத்தை திருப்பிக் கொண்டது.
இன்னும் உம்மேல கோவம் போகலையா மோகி இந்த குட்டி பொண்ணுக்கு.
ஆமா ம்மா.. இன்னும் காய்ச்சல் முழுசா குணமாகல சரியானதும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னதுக்கு, ரெண்டு நாளா என் பிரண்ட்ஸ் யாரையுமே பாக்கல எனக்கு வீட்ல இருக்க போர் அடிக்குது நானும் உன்கூடவே வருவேன்னு அடம் பண்ணி என்கிட்ட பேசாம முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கா என்றாள் சலிப்போடு.
வேற என்ன பண்றதுமா, ஸ்கூல்ல நிறைய பசங்களோட பேசி சிரிச்சி ஜாலியா இருந்துட்டு, வீட்லே ஒரே இடத்துலே இருக்கணும்னா குழந்தைக்கு கஸ்ட்மா இருக்கா. அதுவும் நேத்து நீ இல்லாம என்கிட்ட என்னவோ எந்த அடமும் பண்ணாம சமத்து பொண்ணா தான் இருந்தா, ஆனாலும் பாவம் முகமே சரி இல்ல சாயங்காலம் உன்ன பாத்த பிறகு தான் முகம் தெளிஞ்சிது. பேசாம குழந்தைய உன்கூடயே கூட்டிட்டு போமா அங்க போயி குழந்தைகளோட குழந்தையா விளையாடினா இன்னும் வேகமா காய்ச்சல் குணமாகும் பரிவாக குழந்தையின் தலைவருடியவாறு அப்பெண்மணி சொல்லிட, சூப்பர் பாட்டி.. என கண்ணடித்து தம்ஸ்அப் காட்டி சிரித்த சிறுமியை மோகியின் புறம் கண்ணைக் காட்டி அடக்கினார் கனகா.
அப்போ ஸ்கூலுக்கு கூட்டிட்டு போலாம்னு சொல்றீங்களா ம்மா.. யோசனையாக கேட்டவளுக்கு மகளின் சேட்டைகளை பற்றி தெரியாதா என்ன. பெற்றவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் குழந்தைக்கு அதற்கான சாக்கு தான் அனைத்தும். எதிர்
வீட்டு பாட்டியை நேற்றே கூட்டு சேர்த்து பிளான் போட்டு வைத்து விட்டது.
ஆமா ம்மா.. பாட்டி சொல்றது தான் ரைட் நானும் உன்கூட ஸ்கூலுக்கு வரேன். அப்பதான் பாப்பாக்கு உடம்பு சரியாகும். துணைக்கு ஆள் வைத்துக் கொண்டு முடிவே செய்து விட்டாள் அவள் பெற்ற செல்ல சீமாட்டி.
செல்ல முறைப்போடு ஆழ்ந்த மூச்செடுத்தவள், சரிங்க மேடம் என்கூட நீங்க வரலாம் ஆனா ஒரு கண்டிஷன் என்றதும் குட்டிக்குட்டி கருவிழிகள் உருல கொழுகொழு கன்னம் உப்பி அன்னையை யோசனையாக ஏறிட்டது.
ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி இன்னைக்கு குட்டி பாப்பாக்கு டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு பாத்துட்டு போகலாமா என்றதும் குழந்தையின் முகம் போனப் போக்கை கண்டு தாய் மனம் கலங்கினாலும் வெளியே புன்னகை முகம் மாறவில்லை.
சரி என்னை நீ ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னதால ஹாஸ்பிடல் வரேன். பெரிய மனதுக்காரி முகத்தை அஷ்ட கோணலாக்கி அலுத்துக் கொண்டு சொன்னதும் அதுவரை இவர்களின் உரையாடலை இதயமே உறைந்து போன நிலையில் நாடி நரம்பெல்லாம் உள்ளுக்குள் வேகமாக ரத்தம் சீறிப் பாய்ந்து நடுங்கிட கண்ணீர் பெருக்கெடுக்க பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் இதழ்கள் மகளின் குறும்புத்தனத்தில் உள்ளம் சிலிர்த்து மெய்மறந்து விரிந்தன.
என் குழந்தை.. எனக்கு குழந்தை இருக்கா? நம்ப இயலாத இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் புதிதாக பூமியில் பிறந்தவன் போல் கைகால்கள் நிற்க முடியாத அளவுக்கு ஆறடி ஆண்மகனின் உடலில் உள்ள வலுக்கள் எல்லாம் வடிந்த நிலையில் இதயம் வீங்கி வீங்கி அதிர இன்பமான வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் சுவற்றில் முகம் புதைத்து சத்தம் வராமல் பாவமாக அழுதுக் கொண்டு இருந்தவன் தோளில் அழுத்தமான கரம் பதிய வெடுக்கென நிமிர்த்தவன் நண்பனை கண்டதும் பாய்ந்து கட்டிக்கொண்டான் புன்னகையும் அழுகையுமாக.
விது விது.. எனக்கு பாப்பா இருக்கு டா. பாத்தியா.. அப்டியே என்னை போலவே இல்ல. என் குழந்தையோட குரல கேட்டியா சோ ஸ்வீட்ல. என்னால நம்பவே முடியல மச்சா. என் மோகியும் கிடைசிட்டா கூடவே பிக் சர்ப்ரைஸா என் குட்டி மோகியும் கிடைச்சி இருக்கா. ஆனா என் குழந்தை பேரூ என்னனு தெரியலையே.. ஆனந்த கண்ணீரில் மூழிய கண்களில் ஏக்கம் குடிக்கொண்டு மகளை நெருங்க முடியாத கொடும்பாவியாக தத்தளித்த வேளையில்.
வேதிதா.. இந்தா தங்கோ இதுல மதியத்துக்கு உனக்கும் உன் பிரண்ட்ஸ்க்கும் இடியாப்பமும் சக்கரையும் இருக்கு எல்லார் கூடவும் ஷேர் பண்ணி சமத்து புள்ளையா சாப்ட்டுடனும் என்ன. கனகா சொல்லிட. சரி பாட்டி ஈவினிங் எனக்கு நெய் தோசை ரெடி பண்ணி வச்சிடுங்க நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன். நீங்க பத்திரமா இருங்க பெரிய மனுஷி ஆர்டர் போட சரி சரி என தலையாட்டிக் கொண்டார்.
கனகாவின் மகள் வெளிநாட்டில் குடும்பத்தோடு செட்டில் ஆகி விட, கணவரை இழந்து தனியாக இருப்பவருக்கு பச்சிளம் பிள்ளையோடு அறிமுகமான மோகியும் வேதிகாவும் தான் பொழுதுப் போக்கு. மகள் பேத்தி போல் இத்தனை வருடமும் அவர்களுக்கு பக்கபலமாக பேணிக்காத்து வருகிறார் கனகா.
வேதிதா.. நல்ல பேர் தான் டா என்ற விஷ்வரூபன் பலமுறை அப்பெயரை சொல்லி சொல்லி பார்த்து புன்னகைத்துக் கொள்ள, விதுரனுக்கும் பெரும் மகிழ்ச்சி தான். ஆனால் இத்தனை பெரிய மகிழ்ச்சியை கண்டபின்னும் இரு ஆண்களின் கண்களும் தங்களை மீறி வேதனையாக கலங்கிக் கொண்டே இருக்கிறதே எதனால்?
சரி ம்மா.. நாங்க கிளம்புறோம் நீங்க பத்திரமா இருங்க என்றவள் காலில் செருப்பை மாட்டப் போக அவசர அவசரமாக மூச்சி வாங்க ஓடி வந்தவளை கண்டு மோகி வெறுப்பாக முகத்தை திருப்பிக் கொள்ள, கண்மணி ஆண்டிஇ.. உற்சாகம் பொங்க கத்திய வேதிகாவை அள்ளி அனைத்து முத்துக்குளித்தாள் மோகித்தாவின் தோழி கண்மணி.
(கண்மணி யாருனு நியாபகம் வந்துச்சா டாலீஸ்?)
கண்மணியை கண்டதும் விஷ்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை இவள் எப்படி இங்கு என. அதிலும் வேதிதா அவளை கண்டு உற்சாகம் அடைந்த வேகமே தெளிவாக்கியது, கண்மணி மீண்டும் மோகியை பார்த்து நப்பு போற்றுகிறாள் என்று. ஆனால் மோகி அவளை திரும்ப தோழியாக ஏற்றுக் கொண்டாளா என்ற கேள்விக்கு அவளின் அந்த வெறுப்பான முகமே உணர்த்தியது கண்மணி மீது உள்ள கோவத்தை.
சகுனி இந்தா முன்னால வந்துட்டால்ல உதட்டுக்குள் முணுமுணுத்தவளாக, வேதிதா.. டாக்டர பாக்கணும் நேரம் ஆகுது போலாமா? கடுகடுத்த மோகியை இருவரும் கண்டு கொள்ளவே இல்லை.
ஆண்டி இந்த சாரில யூ ஆர் சோ பியூட்டிஃபுல்.
அப்டியா செல்லம். நீயும் தான் எப்பவும் போல செம்ம ப்ரிட்டி பேபியா இருக்கே.
எனக்காக என்ன வாங்கிட்டு வந்தீங்க. காரியத்தில் கண்ணாக இருந்தாள் விஷ்வரூபனின் நகல்.
உனக்காக ஒன்னும் வாங்காம வர முடியுமா, இந்தா உனக்கு பிடிச்ச சாக்லெட் பிரவுனி என்று குழந்தையிடம் நீட்ட, ஐ.. பிரவுனிஇ என மகிழ்ச்சியாக வாங்கப் போகும் நேரம் வெடுகென பிடுங்கிய மோகி கண்மணியை முறைத்துப் பார்க்க, ஆர்ப்பாட்டமின்றி எழுந்து நின்றாள் கண்மணி.
யாரு கேட்டா இந்த பிரவுனிய, எதுக்கு கண்டதையும் வாங்கிட்டு வந்து என் குழந்தைக்கு ஆசைகாட்டி அவ உடம்ப கெடுக்க பாக்குற. சரியா வெளிய கிளம்பும் போது எப்டிதான் மூக்குல வேற்க்குமோ தெரியல முன்னாடி வந்திடற. வருடங்கள் கடந்தும் அவள் மீது கோவம் குறையவில்லை. கடந்து வந்த கசப்பான முட்கள் நிறைந்த பாதைகளில் விழுந்து வாரி வதைப்பட்டு ரணப்பட்டு வந்த காயங்கள் ஆறாமல் இன்னும் அவள் நெஞ்சினில் பச்சை ரணமாக கொதித்துக் கொண்டு இருக்கிறதே.
நீ என்ன வேணாலும் சொல்லு அதையெல்லாம் நான் காதுலே வாங்கிக்க மாட்டேன். நீ நகரு நான் வேதிய தூக்கிக்கிறேன் நீ மத்த எல்லாத்தையும் எடுத்துக்கோ என்றவள் மோகி தடுக்கும் முன் குழந்தையை தூக்கிக் கொண்டு முன்னால் நடக்கலானாள்.
எனக்கு என் குழந்தைய பாத்துக்க தெரியாதா இவ எதுக்கு ஆஊன்னா.. ஊருக்கு முன்னாடி வந்து நிக்கிறா புலம்பலோடு பின்னால் செல்ல, உனக்கு தெரியாதுனு நான் சொல்லவே இல்லையே, ஆமா ஏன் ஒருமாதிரி நடக்குற காலுக்கு என்னாச்சி. குழந்தையோடு இருந்தாலும் மோகியை கவனிக்க தவரவில்லை கண்மணி.
அம்மா என்னை குளிக்க வச்சிட்டு டவல் எடுத்துட்டு வரும் போது வால் ஷார்ப் எட்ஜ்ல இடிச்சிக்கிட்டாங்க ஆண்டி. எப்படியும் அன்னை வாய் திறக்க மாட்டாள் என்று தெரியுமே குட்டி பெண்ணுக்கு.
எல்லாத்துலயும் அவசரம், ஏன் டி பாத்து நடக்க தெரியாதா உனக்கு மருந்து போட்டியா இல்லையா? அவள் காலை ஆராய்ச்சி செய்ய குனியப் போக சட்டென பதில் கூறாமல் நகர்ந்து விட்டாள் மோகி.
மருந்து பாட்டி போட்டு விட்டாங்க ஆண்டி அதற்கும் வேதிதாவே பதில் சொல்லிட சரி குட்டி என வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தி குழந்தையோடு ஏறி அமர்ந்துக் கொள்ள, கண்மணியை ஒட்டாமல் ஓரமாக அமர்ந்துக் கொண்டாள் மோகி.
ரொம்ப தான் உன் அம்மா பண்றா வேதி, ஏன் எங்கள ஒட்டி உக்காந்தா அஞ்சி கிலோ குறைஞ்சிடுவாளாக்கும் முகத்தை வெட்டி திருப்பிக் கொள்ள, மோகி அவள் பக்கம் திரும்பினாள் இல்லை.
டேய்.. அந்த பொண்ணு யாரு டா? எதுக்கு மோகி அவமேலயும் கோவமா இருக்கா? என்றபடி ஆட்டோவை பின்தொடர்ந்தான் விதுரன்.
அவ கண்மணி மோகியோட பிரண்ட். மோகி அவமேல கோவமா இருக்க நான்தான் காரணம் என்ற விஷ்வரூபனை ஸ்ட்டீரிங் வீலை சுற்றியபடியே முறைத்து வைத்தான்.
வாங்க மா உக்காருங்க மருத்துவர் இருக்கையைக் காட்ட, இரு பெண்களும் ஒருவித எதிர்பார்ப்போடே அமர்ந்திட வெளியே ஆண்கள் இருவரும் தவிப்பாக மறைந்திருந்தனர்.
டாக்டர் இன்னும் எத்தனை நாளைக்கு என் குழந்தை இப்டியே இருப்பா தாய்க்கே உண்டான கவலையும் துடிப்புமாக மருத்துவரை ஏறிட்டாள் மோகி.
நீயும் ஒவ்வொரு முறையும் வரும் போதெல்லாம் ஆர்வமாக கேக்குற, ஆனா என்னமா பண்றது மருத்துவத்தை தாண்டின சக்தி ஒண்ணு இருக்குன்னா அது கடவுள் மட்டும் தான், மனசுதளராம வேண்டிக்கோ உன் குழந்தை கூடிய சீக்கிரத்துல எழுந்து நடப்பா என்றதும் இம்முறையும் மோகியின் முகமும் மனமும் சோர்ந்து போனது.
அவள் இருந்த நிலையில் குழந்தையை சுமந்து கொண்டு அதிகமாக மருத்துவ சோதனைகள் எதுவும் செய்யாதக் காரணத்தினால், சத்து குறைபாட்டை தாண்டி குழந்தையை ஏதோ ஒன்று பாதித்து பிறந்ததில் இருந்தே கால்கள் செயலிழந்த குழந்தையாக தான் இன்றளவும் இருக்கிறது.
சாமி பூதம் என்றெல்லாம் நம்பிய காலம் மலையேறி விட்டது மோகியின் வாழ்க்கையில். தொடர்வண்டியாக தொடரும் பிரச்சனைகளுக்கும் வேதனைகளுக்கும் குறைவே இல்லாமல் அடுத்தடுத்த அடிகளை இறக்கிக் கொண்டே இருந்தால் எப்படி கடவுளை ஏரெடுத்து பார்க்க தோன்றும், கைக்கூப்பி வணங்கத் தோன்றும். கடவுள் நம்பிக்கை எவ்வளவு இருந்ததோ அதைவிட அதிகமாக கடவுள் மீது வெறுப்பு அண்டி போனதே அவள் மனதினில்.
பிறந்த முதலில் அவள் தாய் பிரிந்து, அடுத்து காதலனின் துரோகத்ல் அவள் மானம் பறந்து, அதனால் அவள் தந்தை இறந்து, குழந்தை ஒன்றே இனி அனைத்தும் தனக்கு என்று நம்பிக்கையாக வயிற்றை வருடி தினம் தினம் முத்தமிட்டு ஆசை ஆசையாக பிள்ளையின் வரவிற்காக காத்திருந்தவளுக்கு பிள்ளை வரமாவது நன்றாக கொடுத்திருக்கலாம் அந்த கடவுள். அதிலும் ஏமாற்றமே மிஞ்ச வாழ்க்கையையே வெறுத்த நிலையில் தன்னை நம்பி பூமியில் பிறந்த அழகுதேவதையின் பிஞ்சி முகத்திற்காக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாள் மோகித்தா.
வெளியே நின்று கேட்டிருந்த விஷ்வாவோ மகளின் இந்த நிலையை எண்ணி கலங்கி தவித்தவன், வேதனையாக மோகியின் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் அதற்கு மேல் நிரம்பி வழிந்தது வேதனை. இப்போது வந்த தந்தையானவனுக்கே இச்செய்தி பெருத்த இடி என்றால் வரிசையாக அவமானங்களை தாங்கி ஊர் விட்டு ஊர் ஓடி வந்து தன்னந்தனியாக பிள்ளையை பெற்றெடுத்த அன்னையவள். அவளின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தவனுக்கு குழந்தையின் கவலையை விட மிகஅதிகமாக குழந்தையை சுமந்து பெற்றவளின் கவலையே அதிகமாக மனதை ரணப்படுத்தியது.
கவலை படாத மோகி பாப்பாக்கு சீக்கிரம் கால் சரியாகும். எல்லார்க்கும் தைரியம் சொல்ற நீயே இப்டி கலங்கி போலாமா, உன் சோகமான முகத்தை பாத்தா வேதிதாவும் சோகமாகிடுவா, தைரியமா இரு டி. அவள் பேசவில்லை என்றால் என்ன தன்னுடைய ஆறுதல் தன் தோழிக்கு தேவை என்பதை கண்மணி நன்கு உணர்ந்து அணைத்துக் கொள்ள சில நிமிடங்கள் அவளை அனைத்தவாக்கில் கண்ணீர் விட்டு தன்னை நிதாணித்துக் கொண்டாள் மோகி.
மோகியை பள்ளியில் விட்டுவிட்டு வேதிதாவின் குட்டி நண்பர்களோடு கொஞ்ச நேரம் அரட்டையில் மூழ்கி வெளியே வந்த கண்மணி விஷ்வரூபனை கண்டு அதிர்ந்து போனாள்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 32
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.