Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 33

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 33

தன் முன்னனே நிற்கும் விஷ்வரூபனை கண்டு அதிர்ச்சியடைந்த கண்மணி உடனே தன்னை சுதாகரித்து அவ்விடம் விட்டு நகரப் போக 'உன்கிட்ட பேசணும் கண்மணி கொஞ்சம் நில்லு' தடுப்பாக கை நீட்டிட சுடர் விழியால் முறைத்தவளாக "என்ன பேசணும் மிஸ்டர். திரும்பவும் மோகிகிட்ட உனக்கு எந்த பேச்சி வார்த்தையும் இருக்கக் கூடாது, மீறி இருந்தா உன் குடும்பத்தையே உருதெரியாம அழிச்சிடுவேன்னு மிரட்டப் போறீங்களா? இல்ல உன் பிரண்ட் மோகிய கொன்னுடுவேன்னு சொல்ல போறீங்களா? உங்களால அவ பட்டது எல்லாம் போதாதா இப்பவும் அவ நிம்மதியா இல்ல. எதுக்காக திரும்பத் திரும்ப வந்து அவளை நோகடிக்க நினைக்கிறீங்க" அதீத கோபத்தில் கண்களும் கலங்கிட முகம் சிவந்து போனது கண்மணிக்கு.

இல்ல கண்மணி நீ நினைக்கிற மாதிரி நான் உன்ன மிரட்டவோ மோகிய கஸ்டபடுத்தவோ வரல. இனிமேலாவது என் மோகியையும் குழந்தையையும் எந்த ஒரு கஷ்டமும் நெருங்க விடாம சந்தோசமா பாத்துக்கணும்னு வந்திருக்கேன் என்றவனை கண்டு, யாரு நீயா என்பது போல் ஒரு கேலிப் புன்னகை உதிர்த்தாளே அவமானத்தில் துடித்து விட்டான் விஷ்வரூபன்.

இத்தனை வருஷமா யாரோட உதவியும் பாதுகாப்பும் இல்லாம தனியா இருந்து எல்லாத்தையும் சமாளிச்சு வந்தவளுக்கு இனிமேலும் அவளையும் அவ குழந்தையையும் நல்லாவே பாத்துக்க தெரியும். புதுசா யாரும் வந்து அவளை பாத்துக்கணும்னு அவ ஏங்கிட்டு இல்ல. ஏங்கவும் மாட்டா. அப்புறம் என்ன சொன்னீங்க சந்தோஷமா? அவ சந்தோஷத்தை எல்லாம் ஒட்டுமொத்தமா கெடுத்து அவ வாழ்க்கையையே சீரழிச்சிட்டு எப்டி நாக்கு கூசாம இப்டி பேச முடியிது உங்களால, கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா? கண்மணியின் சவுக்கடி வார்த்தைகள் செருப்பால் அடித்ததை போல் பளார் பளாரென நாலா பக்கத்தில் இருந்தும் அடித்த உணர்வு.

கூனிக் குறுகி அடுத்த வார்த்தை பேச முடியாத நிலையில் கால்கள் நிலை இல்லாது மண்ணோடு மண்ணாக இழுக்கும் உணர்வில் அப்படியே மண்ணோடு புதைந்து விட கூடாதா என்று குமுறியவனின் இதயம் ரத்த ஓட்டமின்றி மரிந்து போவது போல் மூச்சடைத்தது.

என்னதான் மன்னிக்க முடியாத தவறை ஒரு பெண்ணுக்கு இழைத்து இருந்தாலும், அதே அளவுக்கு அவளின்றி அவனும் தானே துன்பப்பட்டான். அவள் இல்லாமல் உயிரை கூட மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து இருக்கிறான். இருவருக்குமே போதாத காலம் சிந்தை இன்றிய கசப்பான நிகழ்வுகள் நடந்தாயிற்று, மீண்டும் இருவரது வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாக ஒன்று சேர வேண்டும் என்று நினைத்திருந்த விதுரன், கண்மணி கேட்ட கேள்வியில் குற்றவுணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்த நண்பனின் நிலை கண்டு வருத்தம் கொண்டவனாக,

ஏங்க.. முன்னாடி அவன் செஞ்சது எல்லாமே தப்பு தான், பழி வாங்கணும் முட்டாள்த்தனமா அவன் செஞ்ச எல்லாம் அவனுக்கே பாதகமா திரும்பிடுச்சி. திரும்ப எல்லாத்தையும் சரி செஞ்சிடுவான் ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா அவன் சொல்ல வரர்த கேளுங்க. தன்மையாக விதுரன் சொல்லவும் நண்பன் போலும் என்று புரிந்தவளாக, கை கடிகாரத்தை திருப்பி நேரம் பார்க்க மணி 12.30 தாண்டியதை கண்டு,
இப்ப எனக்கு பேச நேரம் இல்ல சார். நான் அர்ஜென்ட்டா போயாகனும் நாளைக்கு மார்னிங் நான் சொல்ற அட்ரெஸ் வந்து என்ன சொல்லணுமோ சொல்லுங்க. அப்புறம் இவர் சொல்ல போற காரணங்கள் எதுவா இருந்தாலும் பட்ட துன்பமெல்லாம் இல்லனு ஆகிடாது இல்லையா? என்னால கூட இவர் அன்னைக்கு என்னை மிரட்டினதை மறக்கவே முடியல இதுல மோகிய இவர் எப்படியெல்லாம் பேசி என்னென்ன செஞ்சிருப்பாருனு நினைக்கவே பயங்கரமா இருக்கு, ஆனாலும் ஏதோ இவர் நிக்கிற கோலம் கண்டு மனசு கேக்க மாட்டுது என்றவள் கண்களை மூடித்திறந்து பாவமாக நின்றிருந்த விஷ்வரூபனை கண்டவளாக அவசரமாக வந்த ஆட்டோவில் ஏறி சென்று விட, நடுவீதியில் தவித்து நின்ற நண்பனை அழைத்து சென்றான் விதுரன்.

அம்மா.. ஸ்கூல்ல என் பிரண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க, ஷியாம் சீக்கிரம் நடக்க போறான்னு உண்மையாவா. கண்கள் மின்ன ஆர்வமாக கேட்டாள் வேதிதா.

ஆமா வேதிமா..கூடிய சீக்கிரம் ஷியாம் நடக்க போறான். அப்புறம் பாரு உன்ன பாக்க ரெண்டு காலால குடுகுடுன்னு ஓடி வருவான் என்றாள் மடியில் படுத்திருந்த குட்டி தேவதையின் முதுகை இதமாக தட்டிக் கொண்டு.

சூப்பர்ல ம்மா.. ஷியாம் நடக்குற மாறி நானும் சீக்கிரம் நடக்க தொடங்கிட்டா ஜாலியா இருக்கும்ல. உனக்கும் என்னை எங்கேயாவது கூட்டிட்டு போனா கை வலிக்காது அதிகமா என்ன தூக்கி டையார்ட் ஆகாம கைய பிடிச்சிக்கிட்டு ஜாலியா ரெண்டு பேரும் நடக்கலாம் தானே ம்மா.. சிறு பிள்ளை இப்போதே அன்னையின் சிரமத்தை குறைக்க யோசனை செய்கிறது போலும்.

என் தங்க பொண்ணே.. நீ சீக்கிரம் நடக்கும்னு அம்மாக்கும் ஆசை தான் அதுக்காக உன்ன அம்மா சிரமமா பாப்பேனா சொல்லு. எல்லா குழந்தைகளும் கொஞ்சம் சீக்கிரம் நடக்கும் என் குழந்தை கொஞ்சம் லேட்டா நடக்க போறா அவ்வளவு தானே. அம்மாக்கு நீ எப்டி இருந்தாலும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் செல்லோ. இதை பத்தி எல்லாம் நெனச்சி நீ ஃபீல் பண்ணாம ஜாலியா இருக்கனும் சரியா.. குனிந்து குழந்தையின் கன்னத்தில் முத்து வைக்க புன்னகைத்து தாயிடம் கதையளந்த படியே உறங்கிப் போனது குழந்தை.

உறங்கிய குழந்தையின் முகத்தை இமைக்காமல் பார்த்தாள். யாரை ஜென்மத்திற்கும் பார்த்து விடக் கூடாது என்று மொத்தமாக வெறுத்து போய் ஊரை விட்டு ஓடி வந்தாளோ அப்படியே அவன் உருவத்தை செதுக்கி வைத்திருந்தாள் அவளின் சீமப்புத்திரி. அவன் உருவம் என்று தன் வயிற்றில் ஜெனித்த குட்டி மழலையை வெறுத்து விட முடியுமா அவளால். அவளுக்கென்று இருக்கும் கள்ளம்கபடமற்ற ஒரே சொந்தம். அதுவும் தொப்புள் கொடி பந்தம். எப்பாடு பட்டாலாவது குழந்தையின் கால்கள் சரியாக்கிவிட வேண்டும் மற்ற பிள்ளைகள் போல் தன் பிள்ளையும் ஆடி ஓடி விளையாடுவதை கண்குளிர காணவேண்டும் என்றே ஒவ்வொரு நாளும் பரிதவித்துக் கொண்டிருக்கிறாள் மோகித்தா.

தலையணையில் குழந்தையின் தலையை மெதுவாக மாற்றியவள் விளக்கை அணைத்து விட்டு மகளை அனைத்தவாறு படுத்து சிறிது நேரத்தில் உறங்கிட அதுவரை கபோர்டின் பின்னே ஒளிந்திருந்த விஷ்வரூபன் சத்தமின்றி வெளியே வந்தவன், இதமாக துயில் கொள்ளும் இரு குழந்தைகளையும் ரசித்து பார்த்து, அவன் நகலை கரம் நடுங்க தொட்டு பார்த்து கண்ணீரோடு புன்னகை பூத்தவன் உடலில் ஜிவ்வென்ற மின்சாரம் தாக்கி தந்தையானவன் மகளின் ஸ்பரிசத்தில் பூரித்து ஆசையாக முத்தமிட்டு கொண்டாடி தீர்த்தான்.

மனைவி குழந்தையை பார்த்த பிறகு அவன் கால்கள் ஓரிடத்தில் நிற்குமா என்ன, பைப் ஏறி குதித்து பால்கனி வழியே வந்து நைசாக திருடன் போல் பதுங்கி விட்டானே.

'ஏய்.. பாப்பா.. அப்பா வந்திருக்கேன்டா என்னை உனக்கு தெரியுமா. அம்மா என்னை பத்தி உன்கிட்ட சொல்லி இருக்காளா' உறங்கும் குழந்தையின் அருகே படுத்து மென்மையாக தன் கை வளைவில் வைத்துக் கொண்டவன் மோகியின் உறக்கம் எவ்வகையிலும் கலைந்து விடாத அளவுக்கு மெதுவாக பிள்ளையிடம் பேசலானான்.

அவ சொல்லி இருக்க மாட்டா, ஏன்னா உன் அம்மா அப்பாமேல பயங்கர கோவமா இருக்கா என்ன பாக்க கூட பிடிக்காத அளவுக்கு. அதான் நீ வந்திருக்க சந்தோசமான விஷயத்தை கூட என்கிட்ட சொல்லாம விட்டுட்டா. சோகமாக பிள்ளையிடம் கூறியவன் கொழுகொழு லட்டு கன்னத்தை மென்மையாக அழுத்திப் பார்த்து விளையாடி முருவலித்தான்.

விஷ்வரூபனும் குழந்தைகளை வெறுப்பவன் அல்லவே! சொல்லப் போனால் குழந்தைகள் என்றால் மிகவும் பிடித்தம் அவனுக்கு. ஆனபின்னும் அன்று மோகி குழந்தையை பற்றி பேசியதற்கு, முகத்தில் அடித்தார் போல் பேசியதற்கு காரணம், அவன் சிறுவயதில் தாய்தந்தை இருந்தும் ஆளுக்கு ஒவ்வொரு திசையில் பிரிந்து சென்றிட யாருமின்றி அண்ணன் கையை பிடித்துக் கொண்டு நிற்கதியற்ற அனாதையாய் நின்ற பாதிப்பு அவன் மனதை விட்டு அகலாது இருந்தன.

எங்கே தன் சுயரூபம் தெரிய வந்தால் குழந்தை வந்த பின்பு தன்னை வெறுக்கிறேன் என்ற பெயரில் குழந்தையையும் சேர்த்து மோகி விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்திலும் படபடப்பிலும் அன்று வார்த்தையை சிதற விட்டான் அவன். ஆனால் அதன் பாதிப்பே மோகியின் மனநிலையில் விபரீதமாகிப் போகும் என்பதை அறியாது போனானே. அப்போதே தெரிந்திருந்தால் அப்படி ஒரு சாபக்கேடான வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்க மாட்டான் அவன்.

குட்டி தங்கத்தை தன் நெஞ்சில் இருந்து பிரிக்கவே மனமில்லை அவனுக்கு. ஆனாலும் பெரிய தங்கத்தை உரசியாக வேண்டுமே! இரண்டு நாட்களாக தூர நின்று பார்த்து மனமும் உடலும் அவளின் ஒற்றை ஸ்பரிசத்திற்காக ஏங்கி தவித்துக் கொண்டு இருப்பதை உணர்வாளா அவள்.

மோகிமாஆஆ.. தாவி அணைத்து மென்முத்தம் நெற்றியில் பதித்து பட்டும் படாமலும் இதழை சங்கமித்த உதடுகள் துடிக்க சில கனகங்கள் கண்மூடி தன்னவளின் நெருக்கத்தை ஆழ்ந்து அனுபவித்தவன், திருட்டுத்தனமாக மனைவி குழந்தையை பார்க்க நேரிட்ட இந்நிலைமையை எண்ணி இயலாமையோடு அவள் இதழில் இருந்து இதழ் பிரிக்காமலே சிரித்துக் கொண்டான்.

எத்தனை நேரம் இதழ் ரேகையில் இதழ் தேய்த்து பெண்ணவளின் அழகிய வதனத்தை கூர்ந்து ரசித்தானோ! அவள் கழுத்தை பார்த்தான் எத்தனை வெறுத்திருந்தால் தான் அணிவித்த செய்னை தூக்கி வீசி இருப்பாள் என்று நினைக்கும் போதே தொண்டை அடைத்திட எச்சிலை விழுங்கிக் கொண்டவனாக.
'மோகிக்குட்டி என் முகத்தை பாக்க கூட பிடிக்காத அளவுக்கு எம்மேல அவ்ளோ கோவமா டி உனக்கு. நான் உனக்கு பண்ணதெல்லாம் பெரிய பாவம் தான் ஆனா நீ இல்லாம நானும் இல்லனு இத்தனை வருஷத்துல ஒருமுறை கூடவா உனக்குள்ள தோணல எனும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது. நம்ம பாப்பாக்கு எப்டி நீ தேவையோ எனக்கும் நீ தேவை மோகிமா. ப்ளீஸ் என்னையும் உன் குழந்தையா நினைச்சி மன்னிச்சி ஏத்துக்க கூடாதா' நெஞ்சோடு நெஞ்சி முட்டு அவன் உணர்வுகளை இதயத்தின் வழியாக பெண்ணவளின் இதயத்திற்கு கடத்திட, உறக்கத்திலேயே அவன் உணர்வை உணர்ந்தாளோ என்னவோ மூடிய இமைகள் சுருக்கி வித்தியாசமான உணர்வில் மெல்ல உடலை அசைத்து விழிக்க பார்க்கவும் சட்டென சுதாகரித்துக் கொண்டவன்,

'கவலை படாத மோகி.. இந்தனை நாளா நம்ம குழந்தைக்காக நீ தனியா போராடிட்டு இருந்ததெல்லாம் போதும். இனிமே உன்னையும் குழந்தையையும் நான் பத்திரமா என் கண்ணுக்குள்ள வச்சி பாத்துப்பேன் டி. நீ எம்மேல கோவமா இருந்தாலும் சரி வெறுத்து ஒதுக்கினாலும் சரி இன்னைக்கு ஒருநாள் டைம் நான் இல்லாம நிம்மதியா தூங்கு பேபி.. நாளைல இருந்து என்னோட லவ் டார்ச்சர சுகமா அனுபவிக்க காத்திரு' ஒட்டி இருந்த இதழில் அழுத்தமாக பச்சக் முத்தம் பதித்து எப்படி சத்தமில்லாமல் வந்தானோ அதன்போலவே சத்தமின்றி இடத்தை காலி செய்து விட்டான்.

இன்னும் எத்தனை வருஷத்துக்கு வர வரணை எல்லாம் தட்டிக்கழிக்க போறே கண்மணி. பழசையே நினைச்சி உன் வாழ்க்கைய கெடுத்துக்க முடிவு பண்ணிட்டியா நீ. காலை பொழுதில் இருந்தே சுப்ரபாரதம் தொடங்கி விட்டது அவள் வீட்டினில்.

நான் தான் தெளிவா சொல்லிட்டேனே எனக்கு கல்யாணமே வேண்டாம்னு மீறி உங்க இஷ்டத்துக்கு ஒவ்வொண்ணும் பண்ணா அதுக்கு நான் பொறுப்பில்லை. உடல்நலம் குன்றி படுக்கையில் கிடந்த அன்னைக்கு உணவை கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

நீ இப்டி எகத்தாளம் பேசிகிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு என் பாவத்தை கொட்டிக்கிட்டு இங்கேயே இருக்க போறே. அவன் சகோதரன் தினேஷ் காச்மூச்சென கத்திக் கொண்டு இருக்க எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை.

கண்மணியின் அப்பா தவறி நான்கு வருடங்கள் முடிந்தன. அவர் இருந்த வரை நன்றாக இருந்த தினேஷ், (அப்படி நம்ப வைத்தான்) அவர் இறக்கும் முன்பு சொத்துக்கள் அனைத்தும் தன் பெயரின் தந்தை எழுதி வைப்பார் என்று நினைத்திருக்க, அண்ணன் தங்கை இருவருக்கும் சரிசமமாக எழுதி வைப்பார் என்று கனவா கண்டான். அதிலும் கண்மணிக்கு திருமணம் முடிந்த பிறகு தான் சொத்துக்களை பிரிக்க முடியும் என்றால் இதுவரை போட்ட திட்டங்கள் அனைத்தும் வீணாய் போக, பணக்கார வீட்டு கிழவன் அங்கிளை எல்லாம் அவளுக்கு மணம் முடித்து வைத்து மீதி சொத்துக்களையாவது மீட்டெடுக்க நினைக்கிறான் கண்மணி பிடிக்கொடுக்க மறுக்கிறாள். ஏன்?

ஏய்.. எங்க அத்தைய எனக்கு பாத்துக்க தெரியாதா, ஆள் வச்சாலும் துரத்தி விட்டுடற என்ன தான் டி உன் பிரச்சனை. நீயும் வாழ மாட்டேன்னு சொல்ற எங்களையும் சொத்துபத்தோட நிம்மதியா வாழ விட மாட்டேங்குற. முடிவா என்ன தான் டி சொல்ற நாங்க பாக்குற மாப்பிளைய கல்யாணம் பண்ணிப்பியா மாட்டியா? அண்ணிக்காரி அவள் கையில் இருந்த உணவை தட்டி விட அது மொத்தமும் கண்மணியின் புடவை மீதே கொட்டியது.

நல்லவேளையா ஆறிய உணவு உடையை மட்டுமே பாழு படுத்தியது. கொசுவத்தை தட்டி விட்டபடியே அண்ணியை வெறியாக முறைத்து, நீங்க எங்க அம்மாவ பாத்துகிட்ட லட்சனம் எல்லாத்தையும் நானும் தானே பாத்து இருக்கேன். இதுவரைக்கும் அவங்களை நீ தொட்டு தூக்கி தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கொடுத்தது கிடையாது, ஆள் வச்சி என்ன புண்ணியம் பாத்ரூம் போனா அருவருப்பா மூக்க மூடிட்டு சுத்தம் செய்யாம ஓடுறாங்க. இவன் பெத்த அம்மா இப்டி ஒரு நிலைமைல இருக்காங்கலேன்னு எந்த ஒரு கஷ்டமும் இல்லாம எந்நேரமும் உன் மயக்கத்துல இருக்கான். நான் என் அம்மாவ கவனிச்சி பாத்துக்கிட்டாலும் இப்டி அவங்களுக்கு கொடுக்குற சாப்பாட்ட தட்டி விட்டு பிரச்சனை பண்றதே பொழப்பா போச்சி உங்க ரெண்டு பேருக்கும்.

உங்களுக்கு முடிவு தானே தெரியணும். என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. குறிப்பா நீங்க ரெண்டு பேர் காட்டுற எவனையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. தீர்க்கமாக அவள் உரைத்த விதம் கணவன் மனைவி இருவருக்கும் பத்திக் கொண்டு வந்தது.

கண்மணி.. நீ பழசை எல்லாம் மனசுல வச்சிக்கிட்டு எங்கள பழி வாங்க ஒவ்வொண்ணும் பண்றே. பிசினஸ்ல லாஸ் ஆகிடுச்சு என்னை நம்பி பணம் போட்டவன் எல்லாம் நெருக்கடி கொடுத்து கழுத்தை நெறிக்கிறான், உடனே நான் 50 லட்ச ரூபாய ரெடி பண்ணியாகனும் ஒழுங்கா நாங்க காட்ற மாப்பிளைக்கு கழுத்தை நீட்டிட்டு டாக்குமெண்ட்ல கையெழுத்தை போட்டுட்டு போயிட்டே இரு. அதுதான் உனக்கு நல்லது. மிரட்டிக் கொண்டிருந்த தினேஷை அருவருப்பாக பார்த்தாள் கண்மணி.

படுக்கையை விட்டு எழ முடியாத நிலையில் மகளை, மகன் மருமகள் படுத்தும் பாட்டை இயலாமையோடு பார்த்தார் கண்மணியின் அன்னை.

நல்ல முடிவா யோசிச்சி வை. மாப்பிளை டெல்லிலையே பெரிய ஆள், அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா வசதிவைப்போட வாழலாம் எங்களையும் அவர் அப்பப்ப கவனிப்பார். இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்னு நாங்க பேசி முடிவு பண்ணிட்டோம், எந்த ஒரு தில்லாங்கடி வேலையும் பண்ணாம ஒழுங்கா கல்யாணத்துக்கு தயாராகு, இல்லனா யாரை சாக்கு சொல்லி நீ நாள் கடத்துறியோ அவங்களையே போட்டு தள்ள ஒரு நிமிஷம் ஆகாது. அண்ணிக்காரி விகாரமாக முகத்தோற்றத்துடன் அவள் அன்னையை கண்ஜடைக் காட்டி சொல்லி விட்டு அறைக்கு செல்ல, அவ சொன்னது நியாபகம் இருக்கட்டும் அவளுக்கு சொம்பு தூக்கி எச்சரித்து சென்றான் தினேஷ்.

இருவரின் முதுகையும் வெறித்து நின்றவளின் கலங்கிய கண்களை துடைத்தபடி திரும்பிட விஷ்வரூபன் விதுரன் இருவரையும் கண்டு ஒரு நொடி திகைத்து மீண்டவள், உள்ள வாங்க என்றாள் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டு.

நடந்த பிரச்சனைகள் வீட்டை தாண்டி இருவரது செவிகளையும் தீண்டியதை அந்நேரம் காட்டிக் கொள்ளாமல், சிறு இதழ் விரிவோடு உள்ளே வந்தனர்.

வாங்க சார் ஒரு அஞ்சி நிமிஷம் வெயிட் பண்ணுங்க வந்திடறேன் என்றவள் தனதறைக்கு ஓடி சென்று வேறு உடையை மாற்றிக் கொண்டு கையில் இரண்டு கப் டீயோடு வெளியே வந்து நீட்டிட மறுப்பு சொல்ல முடியாமல் வாங்கிக் கொண்டனர் இருவரும்.

என்ன பேசணும் சார் நீண்ட அமைதிக்கு பின் அவளே வாய் திறந்தாள்.

மோகிய பத்தி தான் பேசணும், அப்புறம் நான் ஏன் அவளை பழி வாங்க நினைச்சி முட்டாள்தனத்தை பண்ணேன்னு உனக்கு புரிய வைக்கணும் அப்பதானே எனக்காக நீ அவகிட்ட பேச முடியும் என்ற விஷ்வரூபனை கண்டு முறைத்து வைத்தவளை விதுரன் குறுகுறுவென பார்த்தான்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 33
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
7
Reaction score
4
Points
3
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌 👌 👌 👌 👌 ❣️ ❣️ ❣️ ❣️ ❣️ ❣️ 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
 
Top