- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 35
ஏங்க கண்மணி.. எனக்கு ஒரு டவுட்டு.
என்ன?
ஆமா நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க? விதுரன் அதிமுக்கிய சந்தேகத்தை கேட்டிட இது எதுக்கு உனக்கு எனும் விதமாக முறைத்து வைத்தாள்.
இட்ஸ் ஓகே.. சொல்ல விருப்பம் இல்லனா நோ ப்ராப்ளம். திரும்ப நார்மல் மோடுக்கு வந்துடு ஆத்தா நான் வாய் திறக்கல. இருகால்கள் சேர்த்து கைக்கட்டி வாய் பொத்திக் கொண்ட விதத்தை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் கண்மணி.
சொல்ல கூடாத அளவுக்கு பெரிய ரகசியம் இல்ல. ஆனாலும் சம்மந்தம் இல்லாத உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு தோணல முகம் இருண்டு விதுரனிடம் சொன்னவள் 'நீங்க சொல்லுங்க சார் எதுக்காக மோகிய இப்டி ஒரு நிலைல கொண்டு வந்து நிறுத்தினீங்க' விஷ்வரூபனிடம் வந்து நின்றாள்.
அடிக்கடி லீவ் விட்டா உங்ககூட இன்னொரு காலேஜ்மேட் ஒருத்தி தங்கி இருந்துட்டு போவாளே நியாபகம் இருக்கா. அதுவரை சாந்தமாக இருந்தவன் முகம் கடுமையில் மாறியது.
ஆமா அவ பேர் கூட.. கண்மணி சொல்லி முடிக்கும் முன் மோனிகாஆ.. இறுகிய குரலில் விஷ்வா சொல்லி இருந்தான்.
எஸ் எஸ்.. மோனிகா.. நான் வரர்துக்கு முன்ன இருந்தே மோகியும் மோனியும் திக் பிரண்ட்ஸ். லீவ் விட்டா போதும் ஹாஸ்டல் விட்டு மோகிய பாக்க வந்திடுவா. இத்தனைக்கும் அவங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து ஊர் ஒரே ஸ்கூல்தான் பட் காலேஜ் வேற வேற, எனக்கும் மோனிகூட பெருசா பழக்கம் இல்ல ஆனாலும் அவ வந்துட்டா போதும் அந்த இடமே கலகலப்பா இருக்கும். என்னால தான் அவகூட அதிக நேரம் ஸ்பென்ட் பண்ண முடியாம லீவ் விட்டா ஊருக்கு போற மாதிரி ஆகிடும். அப்புறம் என்ன காரணமோ காலேஜ் செகண்ட் இயர் கடைசில திடிர்னு காணாம போய்ட்டானு கேள்வி பட்டேன். மோகி அவ காணாம போனதுல இருந்து அவ அவளாவே இல்ல. ஏதோ பித்து பிடிச்ச மாதிரி இருந்தா. அப்புறம் அவளே கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு திரும்பிட்டா. அதை பத்தி எல்லாம் விபரமா கேட்டுக்கல அண்ட் அவ போனதுல இருந்து நானும் மோகியும் அவளை பாக்கலையே, திடிர்னு ஏன் அவளை அவளை பத்தி பேசுறீங்க. புரியாமல் கேட்டாள் கண்மணி.
ஏன்னா அவள தான் என் அண்ணன் காதலிச்சான், என் அண்ணனோட உயிர் போனதுக்கு காரணம் மோகியும் உடந்தை என்றதும் அதிர்ச்சியில் குழப்பம் மேலிடக் கண்டாள்.
விக்னேஷ்வரன் இறப்பதற்கு முன்பு:
விஷ்வரூபனுக்கும் விக்னேஷுக்கும் இடையே 7 வயது வித்தியாசம். விக்கி இறக்கும் போது கிட்டத்தட்ட 36 நெருங்கி விட்டது. முப்பதை தாண்டியும் தாத்தா தம்பி தொழில் என்றே காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்த விக்னேஷ் வாழ்க்கையில் காதல் பெண்கள் என்றெல்லாம் இடம் கொடுக்கவே நேரமில்லை அவனுக்கு.
தொழிலில் அத்தனை புத்தி கூர்மையோடு இருக்கும் அண்ணன் தம்பிகள் இருவருக்குமே காதல் நோய் தாக்கியதும் புத்தி கூர்மை எல்லாம் மங்கிப் போய்விடும் போலும். காதலுக்கு கண் இல்லை வயதும் இல்லை. எத்தனை வயதில் வந்தால் என்ன யார் மீது வந்தால் என்ன காதல் காதல் தான் மருத்துவிட முடியுமா என்ன. அதனால் தான் தன்னை விட 17 வயதுடைய சிறு பெண்ணை கண்டதும் காதலில் விழுந்து விட்டான் போலும்.
முப்பதை தாண்டியும் இருபத்தி ஏழு, இருபத்தி எட்டு வயதை கொண்ட வாலிபன் போல் பார்க்க அத்தனை வசீகரமாக இருப்பான் விக்னேஷ்வரன். உடலமைப்பும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பான். தற்போது உயிருடன் இருந்தாலும் தம்பிக்கே டஃப் கொடுத்தாலும் ஆச்சிரியம் இல்லை. (ஓவரா பில்டப் போகுதோ? போவோம் யார் கேப்பா)
மோகியின் பக்கத்து ஊர், அதாவது மோனிகாவின் ஊர் அது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பக்குவமான பருத்திகள் விவசாயம் செய்வதை அறிந்துக் கொண்டு தொழில் விடயமாக அவ்வூருக்கு சென்ற விக்னேஷ்வரன் எதிர்பாராத விதமாக மோனிகாவை சந்திக்க நேரிட பார்த்ததும் காதல் தான். (முடிஞ்சி போன காதலுக்கு சாஸ்திரத்துக்கு ஒரு நாலு வரி பிளாஷ் பேக் போதும் பட்டூஸ். போதும் தானே?)
முதலாம் ஆண்டு கல்லூரியை முடித்து விட்டு ஊர் பக்கம் வந்தாள் மோனிகா 19 வயதான அழகிய பருவ மங்கை. பார்க்க குட்டிக் குஷ்பு போல் மொலுக்கொலுக்கென்று கன்னம் இரண்டையும் பார்த்தவுடன் ஆப்பிள் போல் கடித்து தின்றும் அளவிற்கு இருபதை தாண்டிய அழகு பெண்ணாக பருத்தி குடவுனில் பெரியப்பாவின் வாள் பிடித்து சுற்றித் திரிந்த குழந்தை மனம் உள்ளவளை வயதை மீறிய காதல் வயப்பட்டு அப்பெண் மீது பரிதவித்துப் போனான் விக்னேஷ்வரன்.
எந்த பெண்ணிடமும் மயங்காத ஆடவனின் மனம் அந்த குட்டி ஆப்பிள்ப் பெண் வசம் சுண்டி இழுத்த மாயம் என்னவோ! நிரந்தரமாக அவனை மாயமாக்கியதே!
மோனி என ஆசையாய் அவள் பின்னால் போக முதலில் மிரண்டால் பிறகு வயது வித்தியாசம் இல்லாமல் காதல் வளையில் விழுந்து விட்டாள் மோனிகா.
வயதை பற்றிய யோசனை எல்லாம் பக்குவமில்லாத சிறுபெண்ணுக்கு எப்படி தோன்றும். தன்னையும் காதலிக்க ஒரு ஜீவன் உண்டோ என்ற வியப்பில் குழந்தையாய் அவன் கை பிடித்து சுற்றி வந்த கொழுகொழு பப்ளி பெண்ணை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு பக்குவ வயதுடையவன் காதலனை தாண்டிய தந்தையாகிப் போனான்.
என் தங்கத்துக்கு என்ன ஆச்சி? சோகமாய் முகத்தை வைத்திருக்கும் ஆப்பில் சிலையை அவன் மடிமீது அமர வைத்து இருக்கால்களையும் அவனது இடுப்பில் எடுத்து சுற்றிக் கொண்டான்.
போ விக்கி நான் ரொம்ப ஜோகத்துல இருக்கேன். பூனையாக அவள் கழுத்தில் தொங்கி.
அதான் ஏன்னு கேக்குறேன் நீதான் பதில் சொல்ல மாட்டேங்குறீயே. என்ன டா மோனி ஜோகம்.
எல்லாரும் என்ன கிண்டல் பண்றங்க விக்கி. மூக்கை உறிஞ்சினாள்
என்னனு?
நான் ரொம்ப குண்டா இருக்கேனாம். பாக்க வெள்ளை பன்னி மாதிரி தரைல உருளுறேனாம். இப்பவே பாக்க குந்தாணி மாதிரி இருக்கியே உன்ன எல்லாம் யாரு கட்டிப்பா அப்டியே கட்டிக்கிட்டாலும் கொஞ்ச நாளைக்கு பஞ்சிமெத்தை மேல பாஞ்சிட்டு கிளம்பி போயிட்டே இருப்பானுங்க அப்டி இப்டினு என் காலேஜ் சீனியர் ரேவதி கூட சேர்ந்து பசங்க எல்லாம் ஓவரா கிண்டல் பண்றாங்க விக்கி. நான் என்ன அவளோ குண்டாவா இருக்கேன் எனக்கு அழுக அழுகையா வருது தெரியுமா.
அட இவ்ளோ தானா. நான் கூட வேற ஏதோ சீரியஸ் மேட்ருனு நினைச்சி பயந்துட்டேன். இங்க பாரு மோனி யார் எது சொன்னாலும் கவலை படாதே உனக்காக நான் இருக்கேன் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது என்ன தெரியுமா. மொட்டு வாய் பிடித்து நிமிர்த்தி ஆசையோடு அவள் முகம் பார்த்தான்.
என்ன விக்கி ஆவலாக முகம் மலர்ந்தாள் லட்டுப்பெண். உன்னோட இந்த கொழுகொழு குட்டி உடம்பு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ துள்ளி துள்ளி நடந்து வரும் போது பார்பி டால் மாதிரி அவ்ளோ அழகா இருப்ப அப்டியே இன்ச் விடாம ரசிச்சிகிட்டே அங்கஅங்க கடிச்சி வைக்கலாம் போல இருக்கும் எனக்கு. இதுலயும் இந்த புசுபுசுகன்னம் நாள் முழுக்க அமுக்கிப் பாத்து விளையாடினாலுக்கு ஆசை தீராது. என் லட்டுக்குட்டி அவ்ளோ அழகு. அவள் மனதை மாற்ற ஒப்புக்குக் கூறவில்லை அவன் மனகண்ணுக்கு மட்டுமல்ல அவனுக்கும் ராணி அவள் உண்மையை தான் கூறினான் சிவந்த ரோஜாவாக அவன் மடியில் மலர்ந்து போனாள்.
நிஜமாவா விக்கி நான் அழகா இருக்கேனா. விழிகள் பளிச்சிட்டாள் பாவை.
நான் உன்கிட்ட பொய் சொல்லுவேனா குட்டிப்பாப்பா. மூக்கோடு மூக்குரசி இதழ் கவ்விக் கொள்ள நாணத்துடன் முத்தத்தில் மூழ்கினாள் விக்கியின் லட்டுபாப்பா.
காதல் கொண்ட மனங்கள் ஒன்றோடு ஒன்றாக மனபூர்வமாக இணைந்து விட்ட வேளையில் அங்கு வயதுக்கு முக்கியத்துவம் ஏது? வயதை மீறிய அற்புதக்காதல் இருவருடைய காதலும். அப்படி இருக்க யார் யாரை ஏமாற்றி சதி செய்தது?
வேற யாரு இந்த ரைட்டர் புள்ள தான்
ஹிஹி..
மோனிகாவின் அனைத்தும் அவனே. தாய் தந்தை இல்லை பெரியப்பா வீட்டிலும் அவளை வேற்றுமையாக எண்ணியதில்லை. முதலில் விக்னேஷின் வயதை எண்ணி கவலை கொண்டர், மகளின் மகிழ்ச்சியே முக்கியம் என கருதி இருவரது காதலுக்கும் பச்சைக் கொடி காட்டி விட்டார்.
அனைத்தும் நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால் நடுவில் நடந்த சில குழப்பங்கள் இருவரது வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டதே!
இரண்டாம் ஆண்டு கல்லூரியின் இரண்டாம் சமஸ்டர் தேர்வு. மோனி தனி காலேஜ் என்பதால் மோகி அவள் காதலிக்கும் விக்னேஷை சந்திக்க இயலாமல் போனது. மோகியிடம் தன் காதலைப் பற்றி கூற. வீட்டுல ஓகேவா அப்பசரி இதுதான் மோகியின் பதில்.
விக்கியிடமும் மோகித்தா தன் தோழி என்றும் இந்த கல்லூரியில் தான் படிக்கிறாள் என்றும் நிறைய அவளை பற்றி பேசி இருக்கிறாள். மோனிகாவை சுற்றிலும் யார் யார் உள்ளனர் நல்லவர்களா தீயவர்களா என்று அவளை பாதுகாக்கும் பொருட்டு விக்கி அனைவரின் விபரங்களையும் சேகரித்து வைத்தவன் மோகியையும் பார்த்து அவளை பற்றியும் விசாரித்து வைத்தான் கூடவே ஒரு யோசனையோடு. (நோட் திஸ் பாய்ண்ட் மக்களே)
அப்போது தான் அந்த கொடிய சம்பவம் நடந்தேறியது. விக்னேஷ்வரன் அவன் அறையில் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர் துடிக்க விழுந்துக் கிடக்க, அண்ணாஆ.. என கதறி ஓடி வந்த விஷ்வரூபன் தமயனை மடியில் போட்டுக் கொண்டு ஏன் இந்த திடிர் முடிவு என தெரியாமல் கலங்கி விட்டான்.
அண்ணா எதுக்கு ண்ணா இப்டி பண்ண. வாண்ணா ஹாஸ்பிடல் போகலாம் படபடப்பாக தூக்க. எ.ன்.னை ஏ.மா.த்திட்டு ப்.போய்ட்டா டா.. அ.அவ உன் அண்ணன நம்ப வச்சி ஏமாத்திட்டா.. பேசவே முடிவில்லை அவனால். ரத்தம் கொதுக் கொதுக்கென கழுத்தில் இருந்து வெளியேறி விஷ்வாவின் பேண்ட் மொத்தமும் நனைத்து தரையில் வழிந்தன.
ஐயோ அண்ணா என்ன சொல்ல வர.. மோனிகாவும் நீயும் லவ் பண்றீங்கனு தானே சொன்ன அப்புறம் ஏன் அவ உன்ன ஏமாத்தனும். கண்ணீர் கட்டுப்பாடின்றி கொட்ட விக்கியின் முகத்தில் தெறித்தது.
நான்.. பிழைக்க மாட்டேன் விஷ்வா.. மீறி பிழைச்சாலும் மனசளவுல பிணமா தான் இருப்பேன். என்ன ஒன்னு உன்ன தனியா விட்டு போறது தான் வருத்தம். என்னைக்கும் என் முதல் பிள்ளை நீதான் கண்ணா என கண்ணீரோடு ரத்தம் தோய்ந்த கரத்தை அவன் கன்னத்தில் பதித்து, ஆனா கவலை படாதே டா உனக்காக அண்ணன் நல்ல வாழ்க்கைய கொடுத்துட்டு தான் போறேன் நீ எப்பவும் சந்தோசமா இருக்கனும் விஷ்வா. என்னை மாதிரி ஏமாந்து போயிடாத. என் மோனி என்னை விட்டு போய்ட்டா என் காதல் தோத்து போச்சி டா வாழ்க்கைல கேவலமா தோத்து போய் சாகப் போறேன் என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது விஷ்வா..
தரையில் விழுந்துக் கிடந்த படத்தை ஒன்று காட்டி. "எ.எக்காரணம் கொண்டும் இவளை வ்.விட்டுடாத டா" மூச்சை நிறுத்தும் முன் கடைசியாக சொன்ன வார்த்தை அது.
ஆக தமயனின் காதல் தோல்விக்கும் இறப்புக்கும் மோகிக்கும் ஏதோ சம்மந்தம் உண்டு என்று முடிவு செய்தவன். காதல் பெண்கள் கல்யாணம் என்றாலே வெறுக்கத் தொடங்கி மோகி மீது தீராத பழிக் கொண்டான். தனிமையை மறக்க இயல்பை தொலைத்து விட்டு குடித்து விட்டு பாரில் மட்டையாகிக் கிடந்தவன் மீது மோகம் கொண்டு ஒருத்தி நெருங்கிட கண்மண் தெரியாத போதையில் முதல்முறை எல்லை மீறியவன் அதன் பிறகு வந்த நாட்களில் தெரிந்தே அனைத்தும் செய்ய துணிந்து விட்டான். அடக்க தமையன் இல்லை அடங்கிப் போக அவன் பழைய விஷ்வரூபனும் இல்லையே.
அப்போது இருந்த நிலைமையில் அண்ணன் சொன்ன வார்த்தைகளை தாண்டி அவன் பல உண்மைகளை அறிய விரும்பாது விட்டது தான் அவனுக்கே அவன் குழித்தோண்டிக் கொள்ள காரணமாக அமைந்தது.
ஒரு இரவில் அவளை கசக்கி பிச்சி நாராக கிழித்து எறிய தெரியாமல் இல்லை. தன் அண்ணன் ஏமாந்து அவமானத்தில் செத்ததை விட மிக மோசமாக மோகியும் அதே காதலில் விழுந்து அதை விட மோசமாக ஏமாந்து சிறுக சிறுக சித்திரவதையை அனுபவித்து சாக வேண்டும் என்ற வெறியோடு வேட்டையாடும் மிருகமாக மாறி மோகியைப் பற்றிய விபரங்களை சேகரித்தான்.
ஹான்சம் பாயாக கல்லூரியை சுற்றி வட்டமடித்து சிறுக சிறுக அவள் மனதில் இடம் பிடித்து கடைசியில் நினைத்தது போலவே அணைத்தும் செய்து முடித்து விட்டான். அவன் மனதை இழந்து அவள் மனதை கொன்று.
விஷ்வா சொல்லி முடிக்க சிறிது நேரம் அங்கு அமைதி மட்டுமே நிலவியது.
"ஏன் சார் இவ்ளோ நடந்து இருக்கு இதுல மோகி எந்த இடத்துல உங்க அண்ணன் காதலுக்கு இடைஞ்சலா வந்தா? அப்டி அவங்க காதலை பிரிக்கிறதால அவளுக்கு என்ன சார் கிடைக்கப் போகுது அதை கொஞ்சம் கூட யோசிக்கலையா நீங்க" கண்மணி கேட்டதை அவன் யோசிக்காமல் இருப்பானா ஆனா என்ன காலம் தாழ்ந்து யோசித்து விட்டான். பதில் கிடைத்ததும் மொத்தமாக நொறுங்கி விட்டான். கூட்டை விட்டு உயிர் பிரிந்து வாழ்கிறான் கிடைத்த பதிலில் குற்றவாளி யார் என அறிந்து.
அன்னைக்கு மோனிகா சோகத்துல இருக்கும் போது அவளுக்காக ஆறுதல் சொன்ன விக்கி, மோனிகாவ கிண்டல் செய்த பெண்ணையும் அவ கூட பசங்களையும் நேரில் கண்டு 'இனிமே என் மோனிகாவ ஒரு வார்த்தை சொல்லி காயப் படுத்த நினைத்தாலும் அவ்வளவு தான்' என கண்டித்து வந்தான். அந்த குண்டுக்காக யார் யாரை வந்து சாடுவது என்ற மிகுந்த கோவம் அந்த மாணவர்களுக்கு. மாணவர்கள் என்பதை விட பணத்திமிர் அகம்பாவம் பிடித்த பெயர் சூட்டாத கொடிய மிருகங்கள்.
தினமும் விதவிதமான காரில் பிக்கப் ட்ராப் விக்கியோடு சகல மரியாதையோடு நடத்தப்படும் அச்சிறுப் பெண்ணின் மீது அப்படி என்ன வெறுப்போ. வெள்ளையா குண்டு பன்னி போல இருக்கா இவளுக்கு இப்படி வாழ்வா என்ற பொறாமையே அக்கூட்டத்தில் உள்ள ஐவருக்கும் புகைச்சலைக் கிளப்பியது. அதிலும் விக்னேஷ் அவளுக்காக பரிந்து வந்து சீற்றமாக பொங்கி சென்றதை ஒருவர் மறந்தாலும் மற்றவர்கள் நியாபக்ப்படுத்தி அணையும் நெருப்புக்கு தூபம் போட்டு போட்டு கடைசியில் அது அணைக்க முடியாத காட்டுத்தீயாக பரவி விட்டது.
விக்கிஇஇ.. எனக்கு ஐஸ்க்கிரீம் வேணும். மாலை கல்லூரியில் இருந்து அழைக்க வந்தவனை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள்.
வேற எதாவது கேளு டி தினமும் சாப்டா உடம்புக்கு ஒத்துக்காது. தம்பியின் உடல் நலத்தில் காட்டும் அதே அக்கறை கண்டிப்பு தான் ஆனால் சிறிது வித்தியாசம். இவளை எந்நேரமும் கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும்.
நேத்து கேட்டபோதும் இதேதானே சொன்ன.
நாளைக்கு கேட்டாலும் இதையே தான் சொல்லுவேன். உடம்புக்கு எது நல்லதோ அது மட்டும் தான் சாப்பிடணும். ஐஸ்க்கிரீம் எல்லாம் எப்பாவது ஆசைக்கு தான் சரியா. காதலியின் சந்தோஷத்திற்காக அவள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் சாதாரண காதலன் அல்லவே அவன். குழந்தை காதலியை வைத்திருக்கும் தந்தையுமானவன். அவள் உடல் நலத்தில் அவளை விடவும் அக்கறை கொண்டவன்.
சரி விக்கி நீ சொன்னா சரியா தான் இருக்கும். ஆனாலும் ஸ்ஸ்.. நாக்கு டேஸ்டுக்கு கேக்குதே.. பாவமாக எச்சிலை சப்புக் கொட்டி கண்களை மூடி ருசி பாவனை செய்தவளை ஆசையோடு கண்டு முத்தருசியை பழக்கவைத்தான். போகும் வழியில் அவித்த கொண்டைக்கடலை வேர்க்கடலையை வாங்கி கொடுக்கவும் தவறவில்லை.
மறைந்திருந்து பார்த்த மிருக கும்பலுக்கு மோனி மீது அத்துனை பொறாமை நிரம்பி வழிய. எப்படியாவது இவர்களின் தெய்வீகக் காதலை பிரித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி சென்றது அந்த இரண்டு பெண் உருவில் இருக்கும் மிருகமும் மூன்று ஆண் உருவில் இருக்கும் மிருகமும்.
இரண்டு நாட்கள் பிசினஸ் விடயமாக வெளியூர் சென்று விட்டான் அவன் லட்டுப்பெண்ணிடம் கூறி விட்டு. தினமும் அவனோடு சென்றே பழப்பட்டவள் அன்று பேருந்துக்காக காத்திருந்தவளின் அருகில் சூழ்ந்தனர் ஐவரும்.
கல்லூரியையே ஆட்டிப்படைக்கும் கும்பல் என்பதால் அவர்களை கண்டதும் அச்சம் கொண்டு விலகப் போனவளை தந்திரமாக பேசி நிறுத்தினர்.
சாரி மோனிகா.. உன்ன நாங்க ஓவரா கிண்டல் பண்ணிட்டோம். அதை நாங்க ரியலைஸும் பண்ணிட்டோம். ப்ளீஸ் எங்கள மன்னிச்சிடு.. ஒருத்தி இழுக்க.
ஆமா மோனி தெரியாம கிண்டல் பண்ணிட்டோம் எங்கள மன்னிச்சுடு. மற்றவர்களும் கோரஸ் பாடிட வெளுத்ததை எல்லாம் பால் என்று நம்பும் சிறு பெண்ணும் வரிசை பற்கள் தெரிய புன்னகைத்தாள்.
ஆமா மோனிகா இன்னைக்கு உன் ஆள் வரலையா உன்ன பிக்கப் பண்ண ஒருத்தி விளையாட்டாக தோள் இடித்து கேட்டிட, இல்ல சீனியர் அவரு பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்காரு. அநேகமா நாளைக்கு நைட் வந்திடுவாரு. வந்ததும் என்னை பாக்க ஓடி வந்திடுவாரு என்றாள் உள்ளதை உள்ளபடி.
ஓஹ் சூப்பர் மோனி.. உம்மேல உன் ஆளுக்கு செம்ம லவ் போல. வயிறு எரிந்தாள் ஒருத்தி.
இல்லாமயா. அவர் எப்பவும் சொல்லுவாரு நானும் அவங்க தம்பியும் எப்பவும் ஒன்னுதான்னு. ரெண்டு பேரும் அவருக்கு குழந்தைகளாம் கள்ளம்கபடம் அறியாதவள் அனைவரும் மோகி என நினைத்து, காதலன் கூறிய கூறும் அனைத்தையும் ஒளிவு மறைவு இல்லாது சொல்லி விட்டாள்.
அப்பப்பா எப்பேர்ப்பட்ட காவியக்காதல் சலித்தனர் அனைவரும்.
எல்லாம் சரிதான் ஆனா உனக்கும் உன் ஆளுக்குன் வயசு ஓவரா இடிக்குதே ஒருவன் நுனி திரியை கொளுத்த, அவளது புருவ இடுங்களை கண்டு, அதானே என்னதான் இப்போ காதல் சக்கரக்கட்டியா இனிச்சாலும் உன்ன விட 17 வயசு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டா பாவக்காயா கசக்கும் மோனி.
மிஞ்சி மிஞ்சி அவரால ஒரு நாலு இல்ல அஞ்சி வருசம் கூட உன்கூட வாழ்ந்து தாக்குப்பிடிக்க முடியாது சீக்கிரம் அவருக்கு வயசாகிடும். உம்மேல ஆசை மோகமெல்லாம் வடிய தொடங்கிடும் உனக்கு சின்ன வயசா இருக்கும் அவரு கிழவன் ஆகிடுவாரு. பாக்குறவங்க பேசுறவங்க என்ன சொல்லுவாங்க அவரு பணத்துக்கு பகட்டுக்கும் ஆசைப்பட்டு நீதான் வயசு கூட இருக்கவனை மடக்கி கட்டிக்கிட்டு வந்துட்டேனு பேசிப்பாங்க.
உன் நல்லதுக்காக தான் நாங்க எப்பவும் சொல்லுவோம் மோனிகா. அவர் என்னதான் நல்லவரா இருந்தாலும் பெரிய தொழில் செஞ்சாலும் அவரு உன்ன விட ரொம்ப பெரியவர். உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு சீக்கிரம் மேல போய்ட்டாருன்னா தனி மரமா பணத்தை மட்டும் வச்சிக்கிட்டு என்ன பண்ணுவ சொல்லு. நேக்காக காய் நகர்த்தி குழப்பி விட்டனர் அவளை.
உணர்ச்சி துடைக்கப்பட்ட முகமாக ஹாஸ்டல் வந்தவள் தொடர்ந்து வரும் விக்னேஷ்வரனின் அழைப்பை எடுக்காமல் துண்டித்தாள். அங்கு அவன் என்னவோ ஏதோ என பதறிப் போனான்.
மோனி நல்லவளா கெட்டவளா?
தெரியலயேப்பு
ஹி..ஹி..
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 35
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.