- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 37
வேதிமா இந்த பிராக் ஓகேவா பாரு. ஓரளவு பிரபலமான துணிக்கடையில் நின்று முட்டிவரை உள்ள சிறிய கவுனை மோகி விரித்து காட்டினாள்
இது நோ ம்மா.. வேற காட்டு.
சரி அப்போ இது? மாம்பழ நிறத்தில் இருந்த மற்றொரு கவுனை காட்ட,
இதுவும் புடிக்கல ம்மா..
இதுவும் புடிக்கலயா, இந்த கடைல உள்ள எல்லா டிசைன் ட்ரெஸையும் பாத்தாச்சு இனிமே வேற கடைக்கு தான் போகணும் வேதி, இந்த சாரியும் இங்கே வச்சிட்டு போலாம் வா என எழ முற்ப்பட்டவளை கை பிடித்து தடுத்து நிறுத்தியது பாப்பா.
இல்ல ம்மா.. இந்த சாரி உனக்கு கட்டினா ரொம்ப நல்லா இருக்கும். எனக்கும் இது ரொம்ப பிடிச்சி இருக்கு. நீ இதுக்கு முதல்ல பில் போடு எனக்கு ட்ரெஸ் அப்புறமா பாக்கலாம். குழந்தையின் உறுதியில் தயக்கமாக பர்ஸை கண்டாள் மோகி.
திடிரென வந்து எனக்கு கவுன் வேணும் ம்மா வாங்கிக் குடு பாவமாக கேட்ட குழந்தைக்கு வாங்கி தர முடியாது என்று சொல்லிட முடியுமா அவளால்? மாதம் பதினைந்து ஆயிரம் சம்பாதனை, அபார்ட்மெண்ட் ரெண்ட், குழந்தையின் மருந்து செலவு, சாப்பாடு மற்றும் இதர செலவுகள் போக சொற்ப பணம் தான் எடுத்து வைக்க இயலும். தாயின் கஷ்டம் அறிந்து அறிவாக வளரும் குழந்தை தான் வேதிதா எனினும் அவ்வப்போது குழந்தைக்கே உரிய ஆசைகள் எட்டிப் பார்த்து தாயின் கையை சுரண்டுவதை மாற்ற இயலாதே!
கையில் சிறு தொகையை மட்டுமே குழந்தை கேட்ட உடையினை எடுத்துக் கொடுக்கலாம் என்று அவள் கொண்டு வந்திருக்க, வந்த இடத்தில் அடம் செய்து கிட்ஸ் செக்ஷ்ன் செல்லாமல் புடவை செக்ஷ்னுக்கு அழைத்து சென்று வேதிதாவே தேடி செலக்ட் செய்த, தேன் நிறத்தில் தங்க ஜரிகையும் வெள்ளை கற்கலும் பதித்த அழகிய புடவையை தேர்ந்தெடுத்து அவள் கொண்டு வந்த பணத்திற்கு ஆப்பு வைத்து விட்டு தனக்கு வேண்டா வெறுப்பாக உடைகளை கண்டு விட்டு கடைசியில் தனக்கு உடை வேண்டாம் என்கிறாள்.
மகள் ஆசைக்கு அவள் மனம் நோகக் கூடாது என்றெண்ணி, அவளுக்கு உடை எடுத்த பின்பு சமாதானம் செய்து வைத்து விடலாம் என்று இத்தனை நேரமும் அந்த புடவையை கைகணக்க வைத்து சுற்றிய மோகி, இப்போது அந்த புடவையை வாங்க சொல்லி உறுதி பேசும் வேதியை செல்லமாக முறைத்து வைத்தாள்.
எனக்கு எடுக்கவா இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்த, என்கிட்ட இருக்க புடவை போதும் டி, வா உனக்கு போய்ட்டு நீ கேட்ட மாதிரி புது ட்ரெஸ் வாங்கிட்டு வீட்டுக்கு போகலாம் தங்கம் அம்மாக்கு டயர்டா இருக்கு பாரு. மாலை வேலை முடித்து இன்னும் வீட்டுக்கு கூட செல்லவில்லை இப்போதே இருட்டி இருக்க இரவு உணவு வேறு வீட்டிற்கு சென்று தயார் செய்ய வேண்டுமே என்ற சோர்வும் உடன் சேர்ந்து விட்டது.
பரவால்ல ம்மா.. எனக்கு மெதுவா எடுத்துக்கலாம் நீ பில் போட்டு வா வீட்டுக்கு போகலாம் எனக்கும் டயர்டா இருக்கு, பசிக்க வேற செய்து. பிஞ்சி கைகளால் வயிற்றை தடவி சோர்ந்ததை போல் நடித்து காட்ட யோசிக்காமல் நம்பி விடுவது தானே தாயின் குணம். மோகியை மடக்கும் வழிகளை கைவசம் நிறைய வைத்திருந்தாள் விஷ்வாவின் நகல்.
கடைசியில் நினைத்ததை போலவே புடவையை பார்சல் கட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாயிற்று. இரவுவேளைக்கு இட்லி அவித்து பருப்பு சாம்பார் தயார் செய்தவள், இரண்டு இட்லியை எப்படியோ தாஜா செய்து ஊட்டி விட்டவளுக்கு ஏனோ காரணம் அறியாமல் மனம் தவியாய் தவித்து சொல்ல முடியாத பயம் நெஞ்சை கவ்வி படபடப்பை உண்டாக்கும் உணர்வு.
வேண்டாம் என தலையை சுற்றி வீசி எரிந்த பொருள் மீண்டும் பின்தொடர்ந்து கையில் சேறும் தருணமா! அப்படி ஒரு தருணம் வந்து விடவே கூடாது என்று எண்ணினாலே தவிர கடவுளை மனதால் கூட நினைக்கவில்லை அவள். ஏதேதோ சிந்தனையில் பசி மறந்து போனவளாக மடியில் துயில் கொண்ட பிள்ளையின் தலையை வருடிவிட்டவாறு எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ, கட்டிலின் கைபிடியில் தலையை முட்டுக் கொடுத்து களைப்பில் கண்ணயர்ந்து போனாள் மோகி.
வழக்கம் போல் மறைந்திருந்த மாயக்கண்ணன் வெளியே வந்தான், குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு சரியாக படுத்து வைத்தவன், சோர்வும் குழப்பமும் ஒருசேர உறக்கத்திலும் வேதனையை பிரதிபலித்த தன்னவளின் மதி முகத்தை கலங்கி போய் பார்த்தான் விஷ்வரூபன்.
ஒரு நாளைக்கு என்ன, நீயும் நம்ம பாப்பாவும் ஒரு நிமிஷத்துக்கு ஒண்ணுனு விதவிதமா போடுற அளவுக்கு துணி கடலே என்கிட்ட இருக்கு டி. ஆனா ஒரு துணி எடுக்க நீ பர்ஸை பாத்து தயங்கின பாரு உடைஞ்சி போய்ட்டேன் மோகி. சீக்கிரம் உன் மனசு மாறி என்னை நீ ஏத்துக்கனும் இதுக்கு மேலயாவது உன்ன கஷ்டபட விடாம சந்தோசமா பாத்துக்கணும் இப்போதைக்கு இதை தவிர வேற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்ல மோகிமா மனதார நினைத்து லேசாக பிளந்திருந்த மொட்டு இதழினில் இச் வைத்தான்.
ஏன் அதை நெத்தில கொடுக்குறது உதட்டுல கொடுத்தாதான் முத்தமோ! இதுக்கு பேர் தான் எதிர்ப்பார்ப்பு இல்லையாம் நம்புற மாதிரியா இருக்கு? நம்மக்கூடாது.
அவள் உண்ணாமல் வைத்திருக்கும் இட்லியை எடுத்து வந்து உறக்கம் கலையா வண்ணம் சிறிது சிறிதாக பிட்டு ஊட்டி விட்டு படுக்க வைத்தவன், நீண்ட நாட்கள் கழித்து தன்னவள் செய்த உணவை தானும் திருப்தியாக உண்டு மகளையும் மனைவியையும் ஒருசேர கட்டி அணைத்து படுத்துப் பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.
மோகி கடைசியாக ஊருக்கு சென்ற பிறகு அவள் தங்கி இருந்த வீட்டிற்கு வந்த விஷ்வா, அரைகுறையாக அவள் பொருட்களை சிதற விட்டு கையில் கிடைத்தவையை மட்டும் எடுத்து சென்றதை தான். கபோர்டில் இருந்த துணியை கூட முழுதாக எடுத்துக் கொள்ளவில்லை அதிலும் குறிப்பாக முதன் முறையாக அவள் கட்டி தரிசனம் தந்த தக்காளி நிற பிளைன் புடவை அவனை கண்டு அழகாக கண்சிமிட்ட உடனே உருவி நெஞ்சில் அணைத்துக் கொண்டு ஆழ சுவாசித்தவன் கண்ணில் தென்பட்டது சிறிய டைரி.
மோகியின் முத்துமுத்தான கையெழுத்து முத்தமிட தூண்டும் அளவுக்கு ஓவியம் போல் உள்ளதை கண்டு இதழில் மெல்லிய புன்னகை அவனுக்கு. டைரி எழுதும் பழக்கமெல்லாம் இல்லை அவளுக்கு ஆனால் மனதில் ஆழகமாக குறித்து வைத்திருக்கும் யாரிடமும் யாரை நம்பியும் சொல்ல முடியாத ரகசியங்களை கொட்டித்தீர்க்கும் வகையில் முக்கிய பாய்ண்ட் எடுத்து எழுதி வைக்கும் பழக்கம் உண்டு.
ஆரம்பத்தில் துண்டு சீட்டில் எழுதி வைப்பாள் அது எங்காவது தொலைந்து போகும் அவளும் அதை பற்றி மறந்து போவாள். கல்லூரி சேர்ந்த சில மாதங்களுக்கு பிறகு புது வருட பிறப்பிற்கு ஒரு கல்லூரி தோழி அவளுக்கு கொடுத்த அழகான டைரி அது. துண்டு சீட்டில் எழுதுவதை மாற்றி அதில் எழுதி வைத்தாள் அவ்வளவே.
அதில் தான் மோனிகாவைப் பற்றியும் அவள் காதலைப் பற்றியும் சற்றே விரிவாக எழுதி இருந்தாள் கடைசியாக அவள் வருத்தப்பட்டு பேசியது வரை. அதன்பிறகு மற்றொரு முக்கியவிடயமும் இருந்தது விக்னேஷ்வரன் அவளுக்கு போன் செய்து பேசி இருந்தது.
ஆம் மோனியின் மறைவுக்கு முன்பு, மோகிக்கு அழைப்பு விடுக்க புது எண்ணை கண்டதும் யோசனையாக அழைப்பை ஏற்றாள்.
ஹெலோ யாரு?
நான் விக்னேஷ்வரன்மா மோனி லவ்வர்.
ஓஹ்.. சொல்லுங்க சார். என்ன விஷயமா எனக்கு கூப்ட்டு இருக்கீங்க? பதட்டமானாள் அவள். காரணம் மோனி மூலம் விக்கியின் பின்புலன் அறிந்திருந்தாள்.
நல்லவேளை அண்ணன்னு சொல்லாம சார்னு சொன்னாளே அதுவரை சந்தோஷம் மனதில் நிம்மதி பெருமூச்சு விட்டவனுக்கு தம்பிக்கு முடிக்க போகும் பெண்ணுக்கு தானும் அத்தானோ மாமாவோ ஆனால் அண்ணன் என்றால் அர்த்தம் மாறிவிடுமே அந்த பயம் தான்.
மோகித்தா நீ பிரீயா இருக்கியாமா. நலமான பேச்சி வார்த்தைகளுக்கு பிறகு, ஏம்மா எனக்கு ஒரு தம்பி இருக்கான் உன் படிப்பு முடிஞ்சதும் நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிறியா, உனக்கு விருப்பம்னா மட்டும் சொல்லு இல்லாட்டி வேணாம். தயக்கமாக நிறுத்திட பதட்டத்தில் குழப்பமானாள் மோகி.
என்னமா யோசிக்கிற திடுதிப்புனு கேட்டதும் பயந்துட்டியா. பயப்படாத மோகித்தா, நீ பயப்படற அளவுக்கு நானோ என் தம்பியோ கெட்டவங்க இல்ல. தாய் தகப்பன் இல்லாம கஷ்டபட்டு முன்னேறி வந்து என் தம்பிய வளர்த்து இருக்கேன். எனக்கு எல்லாமே என் தப்பி மட்டும் தான். ஏன்னா என் தம்பி எனக்கு வெறும் தம்பி மட்டுமில்ல எனக்கு மகனும் கூட. மோனியும் நீயும் நல்ல தோழிங்க உங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல புரிதலும் ஒற்றுமையும் இருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து குடும்பத்தை நல்ல மாதிரி அனுசரணையா கொண்டு போற பக்குவம் இருக்கும். உன்ன பத்தி அடிக்கடி அவ சொல்லும் போது நேர்ல உன்ன பாக்கலைனாலும் இவ்ளோ நல்ல பொண்ண ஏன் நம்ம இழக்கணும்னு தோணுச்சு. படிக்கிற பொண்ணுகிட்ட இப்டி கேக்க கூடாது தான் ஆனாலும் என் தம்பிக்கு ஒரு அண்ணனா அவனுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு ஆர்வம் ஆவல்.
வெளிய இருந்து தேடி கண்டு பிடிச்சாலும் உன்ன மாதிரி ஒரு அடக்கமான பொண்ணு என் தம்பிக்கு கிடைக்குமானு தெரியல. மோனிக்கும் உன்ன அவ கொழுந்தனுக்கு கட்டிவைக்க ஆசை, நீ என்னமா சொல்ற. ஆளுமை இல்லாத மென்மையான பேச்சில் யார் தான் கரைய மாட்டார்கள்.
இதுல எப்டி சார் நான் என் முடிவ சொல்ல முடியும். இப்போ தான் காலேஜ் படிக்கிறேன், நீங்க அப்பாகிட்ட பேசுறீங்களா. திடிரென கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் சிறுபெண்.
சிரித்துக் கொண்டான் அவன். சரிம்மா நான் நேரம் கிடைக்கும் போது உன் அப்பாகிட்ட பேசுறேன், உன்னையும் மீட் பண்றேன் என்றவன் வார்த்தைக்கு வார்த்தை தம்பி தம்பி என 1008 தம்பியை சொல்லி அவனது அருமை பெருமைகளை நீண்ட நேரம் புகழ்ந்தானே தவிர்த்து விஷ்வரூபன் அவன் பெயர் என சொல்ல மறந்து போனான். அவளும் கேட்க தைரியம் இல்லாது விட்டுவிட்டாள்.
அதன் பிறகு வந்த நாட்களில் வினேஷ்வரனின் இறப்பு செய்தி ஊடகம் வழியே பரவியது தெரிந்ததும் வருத்தமாகிப் போனது. விக்கி சொன்ன தம்பியையும் அவள் அப்போது மறந்து போனாள். அதிலும் மோனிகா இறந்த விடயம் தெரியாது மர்மமான முறையில் இப்போது வரையில் அவள் காணாமல் போனாள் என்று மட்டுமே அறிவாள் மோகித்தா.
அதன் பிறகு விஷ்வாவின் வீட்டுக்கு வந்த போது தாத்தா மூலம் உண்மை அறிந்து இவன் தான் விக்னேஷ்வரனின் தப்பியா? என முதலில் அதிர்ச்சியானாலும் தன்னிடம் கூட அவ்விடயத்தை சொல்லாமல் விட்டுவிட்டானே என்ற வருத்தம் இருந்தபோதும் தன் தோழியின் ஆசையும் விக்கியின் ஆசையும் ஜெயித்து விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள். அதை அவனிடம் சொல்ல வந்தவள் விக்கி விடயத்தை முதலில் பேசாமல் ஏன் பணக்காரன் என்பதை முதலில் சொல்லவில்லை என்று சண்டை பிடித்தவளை அவள் வழியிலேயே மடக்கி குழப்பி அவன் அடுத்தடுத்து அவள் பொன்மேனியில் செய்த சேட்டையில் சகலமும் மறந்தவள் அடுத்து வந்த நாட்களில் அவனது காதலில் உருகி சொல்ல மறந்து விட்டாள்.
இந்த டைரியை படித்த விஷ்வரூபன் தனக்காக தன் அண்ணன் பார்த்ததாக சொன்ன பெண் இவள் தானா என்ற மகிழ்ச்சி ஒருபுறம் மோகியை தவறாக புரிந்து அவளை பலவாறு துன்பப்படுத்தி விட்டோமே என எண்ணி இதயம் ரணப்பட்டு போனாலும், மோனியின் எழுத்து சொன்ன குறிப்புகளை துருப்பு சீட்டாக வைத்து மோனிகாவின் கொடூர இறப்பிற்கான ரகசியங்களை அலசி ஆராய்ந்து கண்டு பிடித்தது விட்டான். அப்போது அவர்கள் ஐவருக்கும் தண்டனை?
தன்னவளின் காணொளியை வெளிவிட்டவனையே சும்மா விடவில்லை. தன் உயிரான அண்ணன் நேசித்த உயிரை சிதைத்து கொன்றவர்களை சும்மாவா விட்டிருப்பான். கூண்டோடு தூக்கி பல நாட்கள் கூட்டில் வைத்து ஆத்திரம் தீர அவர்களின் அலறல் சத்தம் வானை பிளக்க பற்பல சித்ரவதைகளை செய்தான்.
சுற்றிலும் ஸ்பீக்கர்கள் பொறுத்திய அறையில் பூட்டி வைத்து, தனி தனியாக அவர்கள் விஷ்வாவிடம் கத்திக்கதறிய ஐவரின் குரலையே ரெக்கார்ட் செய்து ஐந்து ஸ்பீகர் காதை பிளக்க திரும்ப திரும்ப ஓடவிட்டிட, அவர்களின் கதறலை தொடர்ந்து கேட்டே நாளுக்கு நாள் பைத்தியம் பிடித்து கதறி காது ஜவ்வருந்து அலறி ஒருக்கட்டதில் பைத்தியம் பிடித்து ஒருவரை ஒருவர் அவர்களுக்குளே காயப்படுத்திக் கொண்டதும், ஐவரையும் ஐந்து வெவ்வேறு கண்டத்தில் தூக்கி சென்று பைத்தியமாக அலைய விட்டான். இந்நேரம் சோறு தண்ணி இல்லாது இறந்திருந்தாலும் ஆச்சிரியம் இல்லை, அல்லது மனித மிருங்களே பிச்சிக்குதறி தின்று தீர்த்து ஏப்பம் விட்டதுவோ யாருக்கு தெரியும். அப்படியே உயிர் இருந்தாலும் நிம்மதியற்ற கொடுமையான வாழ்க்கையை காட்டிக் கொடுத்து விட்டான் விஷ்வரூபன்.
** ** **
சூரிய கதிர் வீச்சி பனித்துளிகள் மெல்ல மெல்ல உருகிக் கொண்டிருக்கும் அழகிய காலைப் பொழிதில் மெல்ல துயில் கலைந்தாள் மோகித்தா.
எப்போதும் விடிந்தால் தோன்றும் வெறுமை அல்லாது ஏதோ புத்துணர்ச்சி தோன்ற இதுழில் குடிகொண்ட புன்னகையோடு காப்பிப் போட கிட்சன் நோக்கி சென்றவளின் புருவம் இடுங்கியது 'என்ன இது நைட்டு போட்ட பாத்திரமெல்லாம் கழுவி சுத்தமா இருக்கு. மீதி வச்ச இட்லியும் காணல, நம்மளும் சாப்பிடலயே' குழப்பமாக பாத்திரத்தை உருட்ட 'அம்மா.. எங்கே போன' தூங்கி எழுந்த வேதியின் குரலில் 'இங்க தான் இருக்கேன் அம்மு' என்றவள் நல்லவேளையாக இட்லி திருட்டை மறந்து விட்டாள்.
ஆனால் இட்லி திருடன் அங்கேயே தானே இருந்தான். குளித்து முடித்து விட்டு தலை முடியில் ஈரம் சொட்ட பட்டுரோஜாவாக பாவாடை மார்பு வரை கட்டி பாதஈரம் தரையில் பதிய கெண்டைக்கால் வழுவழுக்க மோகப்பெண் நடந்து வந்த அழகினை எச்சில் விழுங்க பார்வையால் அள்ளிப் பருகினான் விஷ்வரூபன்.
ப்பா.. கொல்றாளே ராட்சசி. இவகிட்ட பேசி மன்னிப்பு கேட்டு மனசு எப்ப மாறுறது நான் எப்ப என் பொண்டாட்டிய கைக்குள்ள வச்சி ரசிச்சி முத்தம் கொடுத்து கொஞ்சுறது. எல்லாம் உன்னால தான் டா உன் அவசரக் கொடுக்க புத்திய வச்சிக்கிட்டு எல்லாத்தையும் சொதப்பி அவளையும் கஸ்டப்படுத்தி நீயும் வேதனைபட்டு நிக்கிறியே டா பாவி தன்னை தானே சாடிக் கொண்டான்.
அம்மா..
என்ன வேதிமா.. தலை துவட்டிய துண்டை கட்டிலின் விலும்பில் போட்டபடி திரும்பினாள்.
அம்மா.. இந்தா இன்னைக்கு இதை கட்டிக்கோ. நேற்று அடம் செய்து எடுத்த புது புடவையை மோகியிடம் நீட்டியது குட்டிப்பெண்.
இதுவா, இன்னொரு நாள் கட்டிக்கிறேன் வேதி என்றது தான் குழந்தை முகம் தொங்கி விட்டது.
சரி சரி உடனே முகத்தை தூக்கி வச்சிக்காத கட்டிக்கிறேன். வரவர ரொம்ப வீம்பு பிடிக்கிற டி நீ. மகளை சாடினாலும் கைகள் புடவை கட்டுவதில் முனைப்பாக இருக்க அங்கு ஒருவனுக்கு மனைவியின் பற்பல வர்ணனையான பரிமாணங்களை கண்டு உடல் முழுக்க வியர்வையில் நனைந்தன.
வாவ்.. சூப்பர் அம்மா இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு. தான் செலக்ட் செய்த புடவை அன்னைக்கு கட்சிதமாக பொருந்திப் போனதில் மகிழ்ச்சியில் கை தட்டி துள்ளியது என்றால் தந்தையின் நிலையோ மிகவும் மோசம். அதிசத்தை கண்டது போல் பெண்ணவளின் அழகினில் தரிகெட்டு போனது மூளையும் மனமும்.
ம்ஹ்ம்.. என் பட்டுபொண்ணு செலக்ஷ்ன் ஆச்சே நல்லா இல்லாம போகுமா. ஆமா என்ன இன்னைக்கு என் குட்டி பொண்ணு ரொம்ப ஹாப்பியா இருக்கா என்ன காரணம்னு அம்மாக்கு சொன்னா நானும் சந்தோஷப் படுவேன்ல பார்பிடாலாக கிளம்பி இருந்த மகளை தூக்கி இடையில் வைத்துக் கொண்டாள்.
ஏன்னா இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் அம்மா. கண்மணி ஆண்டி சொன்னாங்க அதான் நானும் ஹாப்பியா இருக்கேன். தலையை ஆட்டி குழந்தை சொல்லிட முகம் சுணங்கி மீண்டது அவளுக்கு. இதுக்கு தான் என்கிட்ட புது சேலை எதுவும் இல்லனு தெரிஞ்சி என் குழந்தை எனக்காக இந்த புடவையை எடுக்க வச்சி இருக்காளா என்று நினைக்கும் போது குழந்தையின் அன்பில் தாயுள்ளம் இனிப்பு பாகாய் உருகியது.
ஓஹோ.. சரி டா தங்கம் ஸ்கூலுக்கு போலாமா என்றவளுக்கு பிறந்தநாளை கொண்டாடி பழக்கம் இல்லையே. இப்போது தான் விபரம் புரிந்து அவளுக்காக அவள் மழலைமகள் பிறந்தநாள் கொண்டாட தொடங்கி இருக்கிறது.
நோ ம்மா.. இன்னைக்கு நம்ம கோவிலுக்கு போகலாம், என் பிரண்ட்ஸ் எல்லாரும் பர்த்டே வந்தா முதல்ல கோவில்க்கு போயிட்டு சாமி கும்பிட்டு தான் எல்லாருக்கும் சாக்லேட் தருவாங்கலாம் உற்சாகம் பொங்க சொல்லிட மோகிக்கு சலிப்பாகிப் போனது.
குழந்தைகள் வளரவளர கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் வைத்தே மூளையில் பதித்து தானாக ஒவொன்றையும் கற்க தொடங்கி விடும் என்பதை தன் பிள்ளையின் மூலமாகவே நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்களை உணரத் தொடங்கி இருந்தாள் மோகி.
பிள்ளையிடம் எதையும் மறுத்து பேசி தெளிவு படுத்த முடியாதவள் அரைமனதாக சரி என தலையாட்டி பல வருடங்கள் கழித்து கோவிலுக்கு செல்ல ஆயுத்தமானாள்.
சுவாமியின் சன்னிதானத்தில் அடியெடுத்து வைக்கப் போகும் மங்கையின் வாழ்வில் இனியாவது மகிழ்ச்சியை கொடுப்பாரா கடவுள்?
கொடுத்து தான் ஆகணும் க்ளைமாக்ஸ் வந்தாச்சு வேற வழி இல்ல ஆத்தா.
ஆனாலும் விட மாட்டேன் ஒரு கொலை கன்ஃபார்ம் இருக்கு யாருனு முடிவு பண்ணி வைங்க பட்டூஸ்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 37
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.