Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 39

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 39

பூக்கள் பூத்து சிரிக்கும் அழகிய மாலை வேளை. பள்ளி விட்டு வரும் வழியில் இருந்த குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவில் உள்ள கல்பெஞ்சில் அமர்ந்திருந்த மோகி, குழந்தைகள் சிலரோடு சேர்ந்து மண்ணில் அமர்ந்து மண் வீடு கட்டி உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்த வேதிதாவை ரசித்து பார்த்திருந்தவளின் அருகில் தயக்கமாக வந்து அமர்ந்தான் விஷ்வரூபன்.

அவன் தான் என்று தெரிந்ததும் அதுவரை இருந்த இளகிய முகம் இறுகி விட்டது அவளுக்கு. இரண்டு நாட்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்து இன்று தான் வெளியே வந்தாள். காலையில் பள்ளிக்கு குழந்தையோடு ஆட்டோவில் செல்லும் போதும் பின்தொடந்தான் ஆத்திரம் வந்தாலும் எதுவும் பேசவில்லை அவள். மதியம் உணவு வேளையில் அவள் வகுப்பை முடித்து விட்டு வரும் போது, மரத்தடியில் அமர்ந்து வேதியை மடியில் அமர்த்திக் கொண்டு கண்கள் கொஞ்சி சிரிக்க மகளுக்கு ஊட்டி விட்ட அறிய காட்சியை கண்டு ரத்தம் கொதித்து போனாள்.

அதிலும் முதல் நாள் பார்த்த போதே குழந்தையிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி, "நான் தான் டா தங்கோ உன் அப்பா" தந்தையின் ஸ்கோரை அடித்து விட்டானே அவன். முதலில் குழந்தை அவனை கண்டு மிரண்டாலும் தந்தையானவனின் அன்பில் கண்மணியின் ஊக்கத்தோடு அப்பா என்ற மழலையின் குரல் மாறாது அணைத்துக் கொண்ட குழந்தையை கட்டிக் கொண்டு உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் பொங்கியது. மோகியின் கோவம் ஒருபுறம் இருப்பினும் மகளின் வாய் நிறைந்த அப்பா.. என்ற அழைப்பில் கர்வத்தை நிலைநாட்டியது மனம்.

அம்மா ஏன் உங்க மேல கோவமா இருக்காங்க? எதுக்காக அழறாங்க அப்பா.. முதலில் பேச தயங்கிய பிள்ளை அதன் பிறகு உரிமையாக வாதம் பண்ணியது அவனது மீசைமுடியில் விளையாடியபடி.

அப்பா ஒரு சின்ன தப்பு செஞ்சிட்டேன் குட்டி அதான் அம்மா எம்மேல பயங்கர கோவத்துல இருக்கா. அம்மா கோவம் சரியானதும் நீ நான் அம்மானு மூணு பேரும் ஜாலியா இருக்கலாம் சரியா. அதுவரைக்கும் அம்மாகிட்ட எந்த கேள்வியும் கேட்டு சங்கடப்படுத்தாம குட்கேர்ளா இருக்கனும் என்றவன் குழந்தையை பார்த்ததும் கையோடு வாங்கி வைத்து கொடுமால் இருந்த விலைஉயர்ந்த விளையாட்டு பொருட்கள், சாக்லேட், பிரவுனி என அனைத்தும் அதன் கையில் கொடுத்து விட்டான்.

இரண்டு நாட்களாக மோகியை மீறி பிள்ளையை பார்க்க முடியாமல் திண்டாடி போனான். இரவில் பைப் ஏறி குதித்து சாளரம் வழியாக வருவதை கண்டு கொண்டாள் அந்த இட்லி மேட்டரில் பூட்டி விட்டாள் அன்றோடு. மதியம் பள்ளியில் சென்று அவனவளுக்கு முன் குழந்தையை கடத்திவிட்டான். வேதியும் அவனோடு சகஜமாக ஒட்டிக் கொண்டதை கண்டு தாயின் மனம் புழுங்கியது மகளும் தன் கையை விட்டு சென்று விடுவாளோ என்ற அச்சத்தில்.

இதுவரை அப்பா யார் என்று அவளும் சொல்லியது இல்லை வேதிதாவும் அவளிடம் கேட்டது இல்லை. அந்த அளவிற்கு மோகியின் அன்பு மட்டுமே குழந்தையின் கண்ணை கட்டி இருந்தது. ஆனால் இந்த இரண்டு நாட்கள், லட்சம் முறைக்கு மேல் அப்பா எங்கே? அப்பா எப்போ வருவார்? என்று வாய் ஓயாமல் கேட்டு விட்டாள் பதில் சொல்ல முடியாமல் மோகியும் திண்டாடி விட்டாள். நெஞ்சம் கலங்கியது இனி குழந்தைக்கு எப்படி என்ன சொல்லி புரியவைப்பாள் அவன் தந்தையல்ல உன் அன்னைக்கு பெரும் துரோகம் இழைத்த மோசக்காரன் என்று.

ஒருக்கட்டத்தில் கோவம் வந்து குழந்தையிடம் அதை காட்டிவிட்டாள். தாய் மனம் தாங்கவில்லை. அழுது கோவித்துக் கொண்ட குழந்தையை சமாதானம் செய்யவே தன் பயத்தையும் கோவத்தையும் தற்சமயம் ஒதுக்கி வைத்து வெளியே அழைத்து வந்தாள்.
தற்போதும் அவன் வந்து அமர்ந்தது தான் தாமதம், அப்பாஆ.. அப்பாஆஆ.. என்று கரத்தை ஆட்டிக் கத்தி உற்சாகம் பொங்க சிரிக்கும் குழந்தையை கண்டு என்ன செய்ய முடியும் அவளால். கொண்டவன் மீதே அக்கோபமும் திரும்பியது, மகள் தன்னை விட்டு தூரம் செல்கிறாளோ நெஞ்சம் பதைத்து கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

குழந்தை மனம் குரங்கு என்று யார் அவளுக்கு சொல்லி புரிய வைப்பது. அம்மா கோவத்தில் அடித்தால் அப்பாஆ.. என்று ஓடுவதும், தவறு செய்து அப்பா சிடுசிடுத்தால் அம்மா, அப்பா ரொம்ப மோசம் என்று அம்மாவிடம் ஓடுவதும் தானே குழந்தைகளின் இயல்பு. அப்படி ஒரு அழகிய தருணங்களையே தன் வாழ்க்கையில் அனுபவிக்காத மோகி தன் குழந்தையின் இயல்பை எப்போது சகஜமாக ஏற்பாளோ.

குழந்தைக்கு பிளைன் கிஸ்ஸை அள்ளி வீசியபடி கோவத்தில் முகம் சிவக்க மூச்சி வாங்கியபடி அமர்ந்திருந்த மோகியை ஓரக்கண்ணால் கண்டவனுக்கு சிரிப்பு வந்தது. 'நீ இல்லாம நம்ம பாப்பாவா டி' அள்ளி முத்தமிட்டு கொஞ்ச தோன்றியது ஆனால் முதலாளியம்மாவின் உத்தரவு இல்லாம தொட முடியுமா அவனால்.

அவனது துளைக்கும் பார்வையில் உடல் கூசிப் போனவளாக கைகடிகாரத்தை திருப்பி நேரம் கண்டு குழந்தையிடம் செல்லப் போனவளின் கரத்தை இறுக்கமாக பற்றி தோளோடு தோள் சேர்த்து அமர்த்திக் கொண்டவனை கங்கு விழிகளால் பொசுக்கியவளை 'என்ன டி செல்லம்' என புருவம் ஏற்றி இறக்கி மந்தகாச புன்னகையை வீச ரசிக்க முடியவில்லையே அத்தனை கோவம் அவன் மீது.

"ஹௌ டேர்ர்.. இப்ப கைய எடுக்க போறியா இல்ல கத்தி கூட்டம் கூட்டி அசிங்கப்படுத்தவா" தோளில் அழுத்தமான பதிந்திருந்த அவனது கரத்தை எடுக்கப் போராடி பற்களை கடித்தவளை மேலும் நெருங்கி அமர்ந்தவனாக 'ஒருதடவை மன்னிக்க மாட்டியா மோகி' வேதனையாக ஒலித்தது குரல்.

"ஹ்ம் மன்னிப்பா.. தெரியாம தப்பு செய்றவங்களுக்கு தான் மன்னிப்பு. உன்ன மாதிரி திட்டம் போட்டு பழி வாங்கி துரோகம் பண்றவனுக்கு இல்ல" பட்டென வந்த பதிலை எதிர்ப்பார்த்தது தான்.

மோகிஇ.. மன்னிக்க முடியாத தப்ப செஞ்சிட்டேன் டி. அதுக்காக தான் செத்து போய்ட்டதா பொய் சொல்லி இத்தனை வருஷம் என்னை உயிரோட கொன்னுட்டியே இதுக்கு மேலயும் கொல்லணுமா மோகிமா கரகறத்த குரலை செருமிக் கொண்டான்.

இந்தமுறை யாருக்காக இந்த அப்பொலஜி ட்ராமா? என் குழந்தைய என்கிட்ட இருந்து பிரிச்சி தூக்கிட்டு போய் பழி தீர்க்கவா? சலனமற்று வார்த்தையால் கூரு போட முகம் இறுகிப் போனான்.

மோகி ஏன் டி வார்த்தையால சாகடிக்கிற. அம்மா அப்பா இல்லாம வளர்ர கஸ்டம் என்னனு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும் அப்டி இருக்க என் குழந்தைக்கு அந்த நிலைமைய நானே வர வைப்பேனே. நம்ம பாப்பாக்கு நான் முக்கியமோ இல்லையோ நீ ரொம்ப முக்கியம் மோகிமா. நான் இப்ப வந்தவன் திடிர்னு செத்து போனா கூட எனக்காக நீயோ என் குழந்தையோ கண்ணீர் விடுவீங்களானு தெரியாது. ஆனா நீ இல்லனா ஒரு அணுவும் அசையாது. நீதான் டி எங்க ரெண்டு பேருக்கும் உயிரு என்றான் உளமார உணர்ந்து உணர்ச்சிபூர்வமாக.

"வசனமெல்லாம் நல்லா இருக்கே. எத்தனை நாளா ஒத்திகை பாத்தது" அவனது உண்மை மனம் ஓரளவு அறிய முற்பட்டாலும் ரணப்பட்டவள் கொடுத்த காயங்களை எல்லாம் வட்டியோடு வார்த்தைகளில் வீரியம் கூட்டி திரும்ப அடிக்க நினைத்து விட்டாள் அவள். வலிக்கும் என தெரிந்தும் அடி வாங்கியே தீரவேண்டிய கட்டாயத்தில் அவன்.

நீ நம்பினாலும் நம்பாட்டியும் நான் என் மனசுல இருந்து உண்மைய மட்டும் தான் டி பேசுறேன். அன்னைக்கு உன்கிட்ட பொய்யா நடிச்சவன் என்னைக்கோ செத்து மடிஞ்சி போய்ட்டான். இதுக்கு மேல நீ வார்த்தையால காயப்படுத்தனும்னா படுத்து ஆனா கூடவே இருந்து காயப்படுத்து டி. சந்தோசமா ஏத்துக்குறேன் அவள் கன்னம் தாங்கி கண்ணோடு கண் கலந்தான்.

மௌனமான பார்வை வீசியவள் அப்படியே அவனை விட்டுவிடுவாளா என்ன. இதற்கு மேல் விஷ்வரூபனின் சோதனைக்காலம் அமோகமாக தொடங்க உள்ளதை பறைசாற்றுவதாய் இந்த மௌனப் பார்வை.

குடும்பமாக மோகியின் அபார்ட்மெண்ட் வந்தாயிற்று. அவனை வா என்றும் அழைக்கவில்லை வராதே என்றும் தடுக்கவில்லை. வந்தவனை ஒரு பொருட்டாக கூட அவள் மதிக்கவில்லை ஆனால் மகள் அப்பா.. அப்பா.. அப்பா.. என்று வாய் ஓயாமல் அழைத்து மடியில் தவழ்ந்து முத்தமிட்டே மூர்ச்சையாக்கி விட்டாளே.

குழந்தைக்கும் அவளுக்கும் மட்டும் இரவு உணவினை சமைத்தாள், ஊட்டினாள் உண்டாள் பாத்திரதை சுத்தமாக கழுவி கவிழ்த்து விட்டு குழந்தையோடு கட்டில் மேல் படுத்து விட்டாள். வயிற்று பசி உயிரை கவ்வ, 'என்ன படுத்துட்டா இவ கையாள சாப்பிடலாம்னு ஆசை ஆசையா இருந்தா ராட்சசி சோறு போடாம கொடுமை படுத்துறாளே' பாவமாக வயிற்றை தடவிப்பார்த்துக் கொண்டவனுக்கு பசியைக்காட்டிலும் தன்னவளின் அருகாமை தந்த சுகமே பெரிய வரமாக தோன்றியது.

சிறிய கட்டில் மோகிக்கும் பாப்பாக்கும் மட்டுமே கட்சிதமாய் அடங்கிப் போக படுக்க பாய் கூட இல்லாமல் டைல்ஸ் தரையில் சட்டையோடு படுத்துக் கொண்டு அவள் முகம் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு தலை தூக்கிப் பார்க்க, நன்றாக போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு முதுகுக்காட்டி படுத்திருந்தவளை ஏக்கமாக தழுவியன விழிகள். ஒரு இரவே நரக கொடுமையை அனுபவித்த உணர்வு.

இங்கு பால்கனி கம்பியைப் பற்றிக் கொண்டு யோசனையில் நின்றிருந்தான் விதுரன். விஷ்வா மாலையே அழைத்து மனைவி குழந்தையோடு அவள் இருப்பதாக தகவல் கூறிட, எப்படியும் நண்பன் வாழ்க்கை இனி சீரமைந்து விடும் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது. அவனது யோசனையெல்லாம் வீட்டில் திருமணம் செய்யக் கூறி அவன் தாய் படுத்தும் பாட்டில் இருந்தது.

வீட்டின் மூத்த மகன் அவன் இருக்கும் போதே இளைய மகனுக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை அதுவும் விதுரனின் உறுதி முடிவால். இப்போது தம்பி குழந்தை மனைவி குடும்பம் என்று நன்றாக இருக்கிறான் ஆனால் மூத்தமகன் ஒண்டிக்கட்டையாக இருக்கிறானே என்ற தாயின் தவிப்பு. அதை அவன் உணர்ந்தாலும் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது அவனை.

பழைய காதலை அடியோடு மறந்து விட்டான் அந்த பெண்ணும் அவனை இதுவரை தேடியது போல் இல்லை மொத்தமாக வழி மாறி சென்று விட்டாள் என்று கேள்வி பட்டான் வேதனை இல்லை தான் ஆனாலும் ஏதோஒரு பழைய தாக்கம் மனதினோரம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த தாக்கம் மறையவேண்டுமெனில் அவனது நம்பிக்கையை பெரும் ஒருத்தியாள் தானே அது சாத்தியமாகும். அப்படி ஒருத்தி இதுவரைக்கும் இருப்பதாக கண்ணில் தோன்றியதில் கண்மணியை சந்திக்கும் வரையில்.

ஏனோ அவளின் அடக்கமான பெண்மையின் மென்மை குணம் அவன் மனதை அவனை அறியாமல் ஈர்த்து விட்டதோ என்னவோ!! அவளின் முறைக்கும் விழிகள் கூட இதமளிப்பதாய், எண்ணம் மாறுகிறதோ!! அவனின் நம்பிக்கையின் சாத்தியவாதி அவளாக இருக்குமோ என்ற ஆராய்ச்சியை கூட நடத்தத் துவங்கி விட்டான்.

ஆனால் கண்மணி அவனது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவள் என்று யார் உரைப்பது? காதலில் ஏமாந்த அனுபவம் உண்டு. எப்படி எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஏமாற்றி ஏமாற்றம் அடைக்கிறார்கள் என்று நண்பனின் வாழ்க்கையை கண்கூடாக கண்டதுண்டு. உண்மை காதல் என்றால் எப்பேர்ப்பட்ட நிலையிலும் அவர்கள் காதல் கை கூடி விடும். வெறும் பணத்திற்காகவும் உடல் இச்சைக்காவும் காதலிப்பவர்கள் கிடைத்த வரையில் லாபம் என்று கடந்து போவர். இதில் கண்மணியின் நிலை மிகவும் மோசம் அணைத்தும் கடந்து வந்ததை போல் தாய் ஒருத்திக்காக உயிர் வாழும் ஜடம்.

அவளின் அலைபேசி எண்ணை எடுத்துப்பார்த்தான். ஏனோ அவளுக்கு அழைக்க வேண்டும் போல் இருந்தது பச்சைப் பொத்தானை தொடப் போவதும் பின் எடுப்பதுமாக பத்து முறைக்கு மேல் கட்டைவிரல் போன்திரையில் அலைமோத பின் என்ன நினைத்தானோ, வாட்சப் சென்று அவளது dp பார்த்தான். மொட்டை மாடியில் நின்று கருப்பு டிசைனர் சேலையில் கருப்பு நிற பெரிய தோடு காதோடு ஒட்டி லேசான ஒப்பனையில் கார்க்கூந்தல் பறக்க அதை கருப்பு நிற வளையல் சிணுங்க அழகாக ஒதுக்கி விடுவதை போல் வைத்திருந்தாள். பார்த்ததும் தெரியும் இருபது வயதில் எடுத்த புகைப்படம் என்று.

இப்போது சற்றே ஒரு சற்று உடல் பூசி இருந்தது முகத்தில் ஒரு தெளிவு தென்படுகிறது. அப்போது சீரோ சைஸ் முகமும் சிரித்த குழந்தைதனம் மாறாமல் இருந்தது.
'ஏன் இப்ப எடுத்த போட்டோ எதுவும் வைக்க மாட்டாளா?' நினைத்ததும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம். 'என்ன இது புதுமாதிரியான உணர்வு' திடுகிட்டான் விதுரன்.

'டேய் தடிமாட்டுப்பயலே அந்த பொண்ணுக்கும் உனக்கும் பத்து வயசு வித்தியாசம். நல்லா தானே டா இருந்த ஏன் திடிர்னு அந்த சின்ன பொண்ண பாத்து மனச அலைமோத விட்ற' மனசாட்சி எடுத்துறைக்க. 'யாரு அவளா சின்ன பொண்ணு சைஸ பாத்தா தெரியலயே' விவகாரமாக யோசித்தான்.

ச்சீ.. பொறுக்கி நாயே புத்திய மாத்து.

அட நான் வாய சொன்னேன் பா.

நீ எதையும் சொல்ல வேணாம் மூடிட்டு போய் படு. விஷ்வா சொல்ற மாதிரி உன் புத்தி துணை தேடுது போல ஒழுங்கா வீட்ல அம்மா சொல்ற பொண்ண கட்டிக்கிட்டு மனச மாத்தி வாழப்பாரு.

எல்லாம் சரிதான். கண்மணிக்கும் வீட்ல அலைன்ஸ் பாக்குறாங்கல்ல.

ஏன் பாத்தா உனக்கு என்ன டா வந்துச்சி?

இல்ல வெறும் பத்து வயசு தானே வித்தியாசம்.

அதுக்கு?

எப்படியும் அவ அண்ணங்காரன் பணம் இருக்குனு தெரிஞ்சா சொட்டையனுக்கோ குட்டையனுக்கோ நெட்டையனுக்கோ அவளை கட்டிக் கொடுக்க தானே போறான். அதுல அந்த நெட்டையனா நானே ஏன் இருக்கக் கூடாது?

யோசனை எல்லாம் நல்லா தான் இருக்கு. இதுக்கு கண்மணி ஒத்துவரணுமே!!

ஆமால்ல

என்ன ஓமால்ல

மச்.. சரி மொதல்ல இந்த விஷ்வா மோகி சச்சரவு ஓரளவுக்கு முடிஞ்சி சகஜமாகட்டும் அதன்பிறகு என்ன ஏதுனு நிதானமா யோசிச்சி அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கிட்டு ஒரு நல்ல முடிவெடுப்போம். அப்போதைக்கு அந்நினைவுக்கு டாட் வைத்தவன் உறங்க சென்றான்.

மறுநாள் காலையும் தனக்கும் தன் மகளுக்கும் மட்டும் சமைத்து உண்டு முடித்து பார்சல்க்கட்டிக் கொண்டு ஒரு ஜீவன் அவளை ஏக்காம பார்ப்பதை எல்லாம் எதையும் கண்டுகொள்ளாமல் பள்ளிக்கு சென்று விட்டாள். சலைக்காமல் பின் தொடர்ந்து பள்ளியை அடைந்ததும் நண்பனை காண சென்று விட்டான்.

மாலை நேரம், மழையில் மாட்டிய சீப்கெஸ்ட் வந்து விடவும் அவரை இவனே நேரில் சென்று அழைக்க வேண்டிய அன்பு கட்டாயத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் போக மோகியும் அவனை தேடவோ எதிர்பார்க்கவோ இல்லை.

ஆட்டோவில் குழந்தையை ஏற்றி விட்டு தானும் அதில் ஏறப் போன நேரம் சல்லென ஆட்டோ அவளை இடித்து விட்டு குழந்தையை மட்டும் கடத்தி சென்று விட்டது.

நடு வீதியில் கத்திக்கதறிய மோகியின் கோவமும் சந்தேகமும் விஷ்வரூபனின் மீது மேலும் அதிகரித்துப் போக, அதீத ஆத்திரம் தாலாமல் நேராக விஷ்வரூபன் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு சென்று அங்கிருந்த சீப்கெஸ்டின் முன்பே கண்ணீரோடு அவனை கன்னம் கன்னமாக அறைய ஒன்றும் புரியாமல் திகைத்தவன், அனைவரின் முன்பும் அவமானம் பிடிங்கினாலும் நிதானம் இழக்காமல் அவளை மற்றொரு அறைக்கு தூக்கி சென்றான்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 39
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top